Showing posts with label jothika. Show all posts
Showing posts with label jothika. Show all posts

Monday, December 23, 2019

தம்பி - சினிமா விமர்சனம்

thambi movie के लिए इमेज परिणाम

த்ரிஷ்யம் படம் கேரளா சினி  இண்டஸ்ட்ரியையே புரட்டிப்போட்ட பிரமாதமான  படம், லோ பட்ஜெட் ல எடுக்கப்பட்டு ஹை கலெக்சன் பார்த்த மலையாள க்ரைம் த்ரில்லர் . அதே இயக்குநர் ஜீத்து  ஜோசப் அதை தமிழில் பாபநாசம் என எடுத்தார் . அதுவும் ஹிட் அவர் இப்போ  த பாடி என ஒரு ஹிந்திப்படம் ரிலீஸ் பண்ணார் , இது 2016ல வந்த ஒரு மெல்லிய கோடு எனும் தமிழ் படத்தின் அதிகார பூர்வ ரீமேக்  ( அதிகாராப்பூர்வ ரீமேக்னா அட்லீ, முருகதாஸ் மாதிரி ஆட்டையைப்போடாம காசு கொடுத்து உரிமையை விலைக்கு வாங்கி பண்றது )


 இப்போ தமிழில் தம்பி எடுத்திருக்கார் . இது  சீமான் இயக்கத்தில் மாதவன் நடிச்ச தம்பி கதை அல்ல ., வேற புதுக்கதை 

மேட்டுப்பாளையத்தில்  ஒரு அரசியல் தலைவர்  ( சத்யராஜ்) தன் மனைவி (சீதா) ,  மகள் ( ஜோதிகா) வுடன் வசித்து வருகிறார். அவரோட மகன் 15 வருசத்துக்கு முன்னாடி  காணாம போய்ட்டான்., காணாமப்போன  மகன் இப்போ கோவாவில் இருப்பதா தகவல் வருது , கோவா போய் மகனை அழைச்ட்டு வர்றார். ஆனா அவன் நிஜமான வாரிசு இல்லை , ஃபிராடு


 அவன்  ஊருக்கு வந்ததும்,  அந்தக்குடும்பத்துல என்ன மாற்றம் நிகழுது ? அவனை கொலை செய்ய யார் திட்டம் போடறா.? காணாமப்போன நிஜ மகன் கதி என்ன? என அடுக்கடுக்காக ச்ஸ்பென்ஸ் முடிச்சுகள் .


முதல் பாதி  கலகலப்பா போகுது.  ஃபிராடு பார்ட்டியா கார்த்தி விக் வெச்ட்டு வர்ற காட்சிகள் சகிக்கலை ,. அவருக்கு விக்கும் பொருந்தலை ,  வீட்ல ஒவ்வொரு கேரக்டர் கூடவும் ஹீரோ எப்படி மிங்கிள் ஆகறார். அல்லது ஆகலை என்ற கோணத்தில் முதல் பாதி பெரிய அளவில் சுவராஸ்யமா இல்லாட்டியும்  பரவால்லாம போகுது. 


 நிஜ வாழ்வில்  அண்ணியான ஜோதிகா சினிமாவில் அக்கா ரோல் . கார்த்தி அளவுக்கு இல்லைன்னாலும் நல்லாவே பண்ணி இருக்கார் ஜோ. இவருக்கான ஸ்கோப் கம்மி , ஆனா இவருக்கு காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கலக்கல் 


 குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு கேரக்டர்  இளவரசு , இவர் குணசித்திர வேடமாகட்டும்  வில்லன்  ரோல் ஆகட்டும் அடிச்சு தூக்கறார்

சத்யராஜின் அனுபவம் மிக்க நடிப்பு அங்கங்கே படத்தை தொய்வில் இருந்து காப்பாத்துது 


சவுகார் ஜானகிக்கு ஒரு ரோல் , ஓவர் மேக்கப் , க்ளோசப் காட்சிகள்ல படுத்துது ..


நாயகியாக  நிகிலா விமல் ,  வந்தவரை குட் 


க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  பிரமாதம் இல்லை என்றாலும்  ரசிக்க வைக்கிறது 

 96 பட இசை அமைப்பாளர்  கோவிந்த் வசந்தா தான் இதுக்கும் இசை , பிரமாதம் என சொல்ல முடியலை


thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम

நச் வசனங்கள்

1   மீனுக்கு இரையைக்குடுத்து தரைல விட்ட மாதிரி.... #thambi2  பசியைக்கூட சமாளிச்சுடலாம், ஆனா தனிமையை.....3   எங்கே வெளீல போனாலும் வீட்டுக்கு வர்றப்ப சாப்பிட்டாச்சா?னு கேட்க 2 ஜீவன் இருக்கனும்

4  அன்பு எல்லாத்தையும் மாத்தும்


5  வாழ்க்கை பூரா இரண்டாவது இடத்துலயே இருக்கறது ரொம்ப சிரமம் , கஷ்டம் 

6   ஒரு குடும்பம் உடஞ்சு போகாம இருக்க எத்தனை பேர் எத்தனை தியாகங்களை செய்ய வேண்டியதா இருக்கு ?


7  ஒரு அக்காங்கறது 2 அம்மாவுக்கு சமம்தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1   சபாஷ் டைரக்டர் − ரியல் லைப்ல கார்த்தி யின் அண்ணியான ஜோதிகா வை படத்தில் அக்காவாக நடிக்க வைத்தது நல்ல ஐடியா,ஆடியன்ஸ் நல்லா ரசிக்கறாங்க,குறிப்பா ஜோதிகா வின் டிரஸ்சிங்சென்ஸ் அழகு,கார்த்தியின் குறும்புத்தன நடிப்பு படத்தின் +,இடைவேளை வரை ok #thambi


2  ஒரு கேரக்டருக்கான பில்டப்பை மத்தவங்க குடுக்கனும்,அவரு அப்டியாக்கும் ,இப்டியாக்கும்னு ,அதான் கெத்து,அந்த கேரக்டரே தற்குறிப்பு ஏற்ற அணியில் விளக்கீட்டு இருக்கக்கூடாது,சத்யராஜ்கேரக்டர் #thambi

3  விக் வெச்ச கெட்டப் கார்த்தி க்கு எடுபடலை,இப்ப எல்லாம் யார் சார் விக் வைக்கறாங்க? #thambiசபாஷ் டைரக்டர்

 1  முதல் பாதியை ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் வகையில் காமெடியாக கொண்டு போனது


2 இளவரசு , சத்யராஜ்  கேரக்டர் வடிவமைப்பு


3   பின் பாதி முழுக்க த்ரில்லராக திரைக்கதையை நகர்த்திய விதம் thambi movie nikhila vimal के लिए इमेज परिणाम
 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1  லாஜிக் மிஸ்டேக் 1− ஆள்மாறாட்ட பிளானில் இளவரசும்,கார்த்தியும் ஈடுபடுவதற்கு பொய்யான DNA டெஸ்ட் ரெடி பண்றாங்க,ஆனா வாரிசு இவர்தானா?என சந்தேகப்படும் போலீஸ் கேரக்டர் தனியா வேற ஒரு ஹாஸ்பிடல்ல அவர் மேற்பார்வை ல நடத்த ஏன் முயற்சிக்கல? #thambi


2  தம்பி படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப் (த்ரிஷ்யம் ,பாபநாசம்) கே.பாக்யராஜ் சாரோட ரசிகர் போல.8/5/1981 ல ரிலீஸ் ஆன விடியும் வரை காத்திரு மாதிரி கொஞ்சம்

14/4/1991 ல ரிலீஸ் ஆன பவுனு பவுனு தான் பட கதைக்கரு னு ட்ரை பண்றாரு போல.பத்தாததுக்கு முந்தானை முடிச்சு ல வந்த தவக்களை கேரக்டர் மாதிரி பிரமாதமான சுட்டிப்பையன் கேரக்டர் வேற #thambi4 படத்துல போலீஸ் ஆஃபீசர் முதல் ஹீரோ வரை யாருமே டூ வீலர்ல போறப்போ ஹெல்மெட் போடறதில்லை , கார்ல போறப்ப சீட் பெல்ட் போடறதில்லை


5 நட்ட நடு ராத்திரில திருடனுங்க வீட்ல மெயின் ஸ்விட்சை ஆஃப் பண்ணி கரண்ட் கட் பண்றாங்க , அப்போ ஃபேன் எல்லாம் ஆஃப் ஆகி வியர்த்து எல்லாரும் எழுந்திருக்கனு மே? 6 பேரும் நல்லா தூங்கிட்டு இருக்காங்க


6 ஒரு சீன்ல சவுகார் ஜானகி வெணும்னே கீழே விழற மாதிரி ஆக்ட் பண்றாரு அப்போ ஃபேமில இருக்கும் எல்லாரும் அவர் பக்கம் வர்றாங்க எல்லாரும் அவரையே பார்த்துட்டு இருக்கும்போது ஹீரோ க்கு மட்டும் சிக்னல் கொடுத்து அந்த ரூம்ல இருக்கற லெட்டரை எடுனு கண் அடிக்கறார். கிது க்ளோசப் ஷாட் ல , ஆனா லாங் ஷாட்ல எல்லாரும் அவர் முகத்தையே பார்த்துட்டு இருக்காங்க


7   கொலை செய்யப்பட்ட டெட் பாடியை  வீட்லயோ , அருகாமை இடத்துலயோ புதைப்பது பாதுகாப்பா ? கார்ல டிக்கில வெச்சு அதை போர்த்தியோ , மறைச்சோ கொண்டு போகாம  பெப்பரப்பேனு பப்ளிகா ஊரெல்லாம்   ரவுண்ட் அடிச்சு கொண்டு போறது பாதுகாப்பா? 


8  டெட்பாடியை புதைச்சு பல வருடங்கள் ஆன நிலைல அது எலும்புக்கூடாகி மண்ணோட மண்ணா கலந்திருக்கும், ஆனா 15 வருசம் கழிச்சு அந்த இடத்துல ரியல் எஸ்டேட் வர்றதால தோண்டுனா தன் குட்டு  வெளிப்பட்டுடும்னு கொலைகாரன் பயப்படுவது எந்த வகையில் ?


nikhila vimal hot के लिए इमेज परिणाम விகடன் மார்க் ( யூகம்)   43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3.5  / 5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் 3 /5  ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-  தம்பி −(2019) முதல்பாதி நமக்குப்பழக்கமான குடும்ப வாரிசு ஆள்மாறாட்டக்காமெடி "பேமிலி டிராமா".பின் பாதி ஜீத்து ஜோசப்பின் ஸ்பெஷல் பிராண்ட் க்ரைம் த்ரில்லர், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் ஓரளவு எதிர்பார்த்ததே,லேடீஸ் ஆடியன்சைக்கவரும் ஜோதிகா,கார்த்தி நடிப்பு குட் . க்ரைம் த்ரில்லரில் சென்ட்டிமென்ட்ஸ் ஒர்க் அவுட் ஆவது அபூர்வமே,விகடன் 43 ,ரேட்டிங் 3 /5 ,ஏ,பி சென்ட்டர்களில் ஹிட் அடிச்சிடும் ,சி.கா வின் ஹீரோ படத்துக்கு இந்தப்படத்தின் வெற்றி மேலும் ஒரு பின்னடைவு #thambi


Friday, August 02, 2019

ஜாக்பாட் - சினிமா விமர்சனம்

jackpat  tamil film എന്നതിനുള്ള ചിത്രംபிரபுதேவா நடிச்ச குலேபகாவலி படக்கதையை இயக்கிய அதே இயக்குநர் அதே கதையை பட்டி டிங்கரிங் பண்ணி இன்னொரு காமெடி ஹிட்டைக்கொடுத்திருக்கிறார்


புராணக்கதையான மகா பாரதத்துல  பாஞ்சாலி கைலயும் 
மணி மேகலை கிட்டேயும் அள்ள அள்ளக்குறையாத அட்சய பாத்திரம் இருந்ததாகவும் அதன் மூலம் ஏழை மக்களின் பசியைத்தீர்த்து வைத்ததாகவும் ஒரு நம்பிக்கை உண்டு


 அந்த அட்சய பாத்திரம் நவ நாகரிக உலகில் இருந்தா என்ன ஆகும்? என்பதன் கற்பனைக்கதைதான் இது


 ஜோதிகா வும் , ரேவதியும் இதுல திருடிகளா வர்றாங்க அவங்க அட்சய ;பாத்திரம் புதைக்கப்பட்ட இடத்தை தெரிஞ்சுக்கிட்டு அதை  அபேஸ் பண்ண போடும் மொக்கை திட்டங்கள் தான் திரைக்கதை 


ஜோதிகா வழக்கம் போல்  தனது அக்மார்க் ஓவர் ஆக்டிங் , காமெடி முக பாவனைகள் கூட புதுசா ஆக்சன் சீக்வன்சும் பண்ணி இருக்காங்க , சொந்தபடம் வேற இது கூட செய்யலைன்னா எப்படி? குட்


ரேவதி  சுமார் ரகம் தான்.   ஜோ பக்கத்தில் அவரை விட இளமையா தெரியனும்கற அவர் ஆர்வம் புரியுது , ஆனா 11 வருச வித்தியாசம் , முடியுமா?


 இந்தப்படத்தின் மெயின் ஹீரோ ஆனந்தராஜ் தான் , புலன் விசாரணை , மாநகரக்காவல் படங்களில் வில்லனாக மிரட்டியவர் இதில்  காமெடி கலக்கல் நாயகனாக உலா வருகிறார், இது போக இவருக்கு இன்னொரு பெண் ரோல் வேற , அசால்ட்டா ;போட்டுத்தாக்கறார்

 படத்தின்   மெயின் வெற்றிக்கு இவ்ருதான் முதல் காரணம்


 அடுத்தது மொட்டை ராஜேந்திரன் , இவர் ரேவதிக்கு ப்ரப்போஸ் பண்ற்து பழைய காமெடி என்றாலும் ஜனங்க ரசிக்கறாங்க 


 யோகிபாபு இவர் பெரிசா எந்த காமெடியும் பண்ணல, பாதி நேரம் தன் முகம் அகோரமா இருக்கு அப்டினு சுய இரக்க வசனமாவே பேசறார் , போர் , இதெல்லாம் நாசர் நாயகனா நடிச்ச முகம் படத்துலயே சொல்லியாச்

 ஆனா ஒரே ஆறுதல் வழக்கமா இவரு பண்ற அடேய் அந்த  மண்டையா இந்தத்தலையா டைப் காமெடி இதுல இல்ல 


பாடல்கள் பரவால்ல , க்ளைமாக்ஸ் வர்ற டைம்ல ஒரு பாட்டு தேவை இல்லாம 

 ஒளிப்பதிவு  இசை  ஓக்கே ரகம்நச் வசனங்கள்


1  கோடில ஒருத்தர்தான் சிரிக்கற உணர்வே இல்லாம இருப்பாங்க

பொண்ணுக்கு அழகே சிரிப்புதான் #JackpotFDFS


2 உங்க பையனுக்கு சின்னதா பேரு வெச்ட்டு சோறு ஜாஸ்தியா வெச்ட்டீங்களா? இவ்ளோ பெருசா வளர்ந்திருக்கான் ? ( யோகி பாபு இன்ட்ரோ) #JackpotFromToday


3 நமக்கு 3 ராசி இல்லையெ,இப்படி 3 பேரா கார்ல போறோமே ,போற காரியம் உருப்படுமா?
நிலா வுக்கே 3 பேராதானே போனாங்க?
அது moon (மூன்) அதுனால மூணு பேரா போனாங்க,சக்சஸ் ஆகிடுச்சு ,கிரேசி மோகன் டைப் வசனங்கள் ,வசனகர்த்தா ராக்ஸ் #JackpotFromToday


4 சுவாமி!அவங்களை நியூ வா பாக்க ஆசைப்படறேன்
புரியல அதான் டிரஸ் இல்லாம....
ஓ,நியூடா? விளங்கிடும் #JackPotReview


5 நீ நிர்வாணமா இருக்கற போட்டோ என்கிட்ட இருக்கு
ஆ.ராஜ் =எவ்ளோ பணம் கேட்டாலும் தந்துடறேன்
என் போட்டோக்கு அவ்ளோதான் வேல்யூவா? #JackPotReview
2000 ரூ
6 இந்த வீட்டை சர்ச் பண்ணப்போறோம்
அய்யய்யோ ,கோயில் மாதிரி இருக்கற வீட்டை சர்ச் ஆக்கப்போறாங்களே?
யோவ் ,சர்ச்னா தேடறது...சோதனை போடறது #JackPotReview


7 சார்,நீங்க பாக்க ஐஜி மாதிரியே இருக்கீங்க
மொட்டை ராஜே = தேங்க்ஸ்பா
யோவ் ,அது சாக்பீஸ்
கைல வெச்சிருக்கற தம் குடுத்தா.... பரவால்ல,வாய் நமநமங்குது
நம்மை விடப்பெரிய பிக்காலியா இருப்பான் போல #JackPotReview


8 அவசரப்பட்டு ஸ்லோவா வந்துட்டீங்கண்ணே
என்ன லேங்க்வேஜ்டா இது? #JackPotReview


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

18/10/1977 ல பிறந்த ஜோதிகா (42)தலைமுடியைவிட
20/7/1966ல பிறந்த ரேவதி((53) தலைமுடி அவ்ளோ கறுப்பா இருக்கே எப்டி? பாம்பே "டை"யிங்க்கா? #JackPotReview


2 அட்சயப்பாத்திரம் என்பது உணவுப்பொருள் மட்டுமே அள்ள அள்ளக்குறையாம வரும்னு ஒரு கற்பனைக்கதை உண்டு.அதை பணம் ,வைரம்,தங்கம் ,பால் எதா இருந்தாலும் அள்ள அள்ள சுரக்கும்னு கற்பனை.அது தான் கதையின் மையம் #JackPotReview

3  மொட்டை ராஜேந்திரன்,ஆனந்தராஜ் & கோ வின் கலக்கலான காமெடியுடன் எதிர்பாராத காமெடி டிராக்கில் ,பி,சி சென்ட்டர் ரசிகர்களுக்கான காமெடி கலாட்டா @இடைவேளை #JackPotReview


4 நல்ல மனம் கொண்ட விஜயகாந்த் ,அகரம் சூர்யா மாதிரி ஆட்களின் படங்கள்வெற்றி பெறுவது சமூகத்துக்கு நல்லது #JackPotReviewசபாஷ் டைரக்டர்

1   மொக்கை தாதா வாக வரும்  ஆனந்த ராஜ்  அவரது அடியாட்களாலேயே கலாய்க்கப்படுவதும் அதை அவர் காமெடியாக எடுத்துக்கொள்வதும் அருமை


2  பின் பாதியில் ஆந்திரா பார்டரில் தமிழ்க்கொலை செய்யும் போர்டுகளுக்கு அவர் தரும் நையாண்டி சமாளிப்புகள் அதகளம்


3  மொட்டை ராஜேந்திரனின் பாத்திரப்படைப்பு அ வர் நடிப்பு 4  ஓப்பனிங்கில் வரும் அட்சய பாத்திர ஃபிளாஸ்பேக் காட்சி 


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  லாஜிக் மிஸ்டேக் 1− 5 லிட்டர் கொள்ளளவு உள்ள ஒரு பித்தளைப்பாத்திரம் ஆற்று வெள்ளத்துல ஒரு கிமீ தூரம் அடிச்ட்டு (மிதந்து)போகுது.ஒரு மீட்டர் தூரத்துலயே தண்ணீர் முகண்டு உள்ளே போகாது ? #JackPotReview ( அட்சய பாத்திரம் தண்ணீரில் மூழ்காதுனு யாராவது சால்ஜாப் சொன்னா அவருக்கு பதில் ரெடியா இருக்கு , க்ளைமாக்ஸ்ல எப்படி மூழ்கிடுது?


லாஜிக் மிஸ்டேக் 2- 5 ரூபா ரயில் டிக்கெட் எடுக்காததுக்காக டிக்கெட் பரிசோதகர் 5000 ரூபா அபராதம்கறார்,அந்தப்பையன் 2000 ரு தான் இருக்குங்கறான்.சட்டப்படி 20 மடங்கு கட்டணம் அல்லது ரூ 500 இரண்டில் எது அதிகமோ அதுதானே அபராதம்? #JackpotFromToday


3   அட்சய பாத்திரம் என்பது தெய்வீகத்தன்மை கொண்டது , அதை க்ளைமாக்ஸில் ஜோதிகா   காலில் பாதத்தில் மாட்டி தூக்கிக்காட்டுவது என்ன செயல்? ( விஸ்வரூபம் 1ல் இப்படித்தான் கமல் பணத்தை தூக்கி விசிறி  பல இன்னல்களை சந்தித்தார் . பணம் லட்சுமி அல்லவா? )


4  க்ளைமாக்ஸ் ல ஜோ கண் முன் ரேவதி தண்டவாளத்தை கிராஸ் பண்ணிடறாரு , ரயில் அதுக்குப்பின் தான் கிராஸ் ஆகுது , அதுக்குள்ள அவர் செத்துட்டாரா? என ஓவரா சலம்புவது தேவை அற்ற செண்ட்டிமெண்ட் விகடன் மார்க் ( யூகம்)    43

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)  3.5 ? 5


சி,பி கமெண்ட் -ஜாக்பாட் − அட்சய பாத்திரத்தை கைப்பற்றப்போராடும் திருடிகளின் காமெடி கலாட்டா.ஆனந்த்ராஜின் டூயல் ரோல்,மொட்டை ராஜேந்திரனின் ரோல் கலக்கல் காமெடி,யோகிபாபு காமெடி சுமார் ரகம்,பி,சி ல கலெக்சன் அள்ளிடும் ,முதலீடு போல 2 மடங்கு சம்பாதிக்கும் .விகடன் 43 ,ரேட்டிங் 3/5 #JackPotReview

அட்ராசக்க பொதுக்குழு ரேங்க் ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


3/5