Showing posts with label Vadala(2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label Vadala(2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, September 16, 2026

Vadala(2026)-தெலுங்கு/தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்காலஜிக்கல் திரில்லர்)@ஜியோ ஹாட் ஸ்டார்

 



நம்ம ஊரில் பிரபு-குஷ்பூ ஜோடி போல விஜய்காந்த் - ராதிகா  ஜோடி போல தெலுங்கில் புகழ் பெற்ற ஜோடி ஜெகபதி பாபு -லயா ஜோடி.இவர்கள் ஜோடியாக நடித்த ஆக்சன் டிராமாவான மனோகரம் (2000), ரொமாண்டிக் டிராமாவான நாள் உன்ன பிரேமா(2001),காமெடி டிராமாவான ஹனுமான்  ஜங்க்‌ஷன் (2001),கமர்ஷியல் மசாலாவான சிவராமராஜூ  போன்ற நான்கு படங்களும் ஹிட். லேட்டஸ்ட்டாக இவர்கள் ஜோடி சேர்ந்திருக்கும் படம் தான்  வடலா.


ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு டாக்டர்.தன்னுடைய அப்பா, மனைவி ,ஒரு மகன் ,ஒரு மகள் என சந்தோஷமான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.19 வருட இல்லற வாழ்க்கை மிக இனிமையாகப்போய்க்கொண்டிருக்கிறது மகனும்,மகளும் டீன் ஏஜில் இருக்கின்றனர்.


நாயகன் காரில் போய்க்கொண்டிருக்கும்போது வழியில் விபத்துக்குள்ளான  ஒரு காரைப்பார்க்கிறான்.அதில் டிரைவர் சீட்டில் நாயகி மயக்க நிலையில் கிடக்கிறாள்.அவளைத்தன் காரில் ஏற்றித்தன் ஹாஸ்பிடலிலேயே சேர்க்கிறான்.

நாயகிக்கு காலில் அடிபட்டு பிராக்சர் ஆகியிருக்கிறது.ஒரு வாரம் ட்ரீட்மெண்ட் தந்தால் குணமாகி விடுவாள்.நாயகன் நாயகிக்கு சுய நினைவு வந்ததும் அவளுக்கு ஆறுதல் கூறி செல்கிறான்.

இந்த ஒரு வாரத்தில் தினசரி நாயகன் வந்து நாயகியை சந்தித்து கேரிங்காக இருப்பது நாயகிக்குப்பிடித்து விடுகிறது.வேண்டுமென்றே கட்டிலில் காலை இடித்துக்கொண்டு மீண்டும் அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட்டை மேலும் 15 நாட்கள் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கொள்கிறாள்.

நாயகி ஹாஸ்டலில் தங்கி காலேஜில்  படிக்கும் மாணவி .இதை அறிந்ததும் நாயகன்  எங்க அபார்ட்மெண்ட்லயே ஒரு வீடு இருக்கு அங்கே வேணா தங்கிக்கொள் குறைவான வாடகை  தான் என்கிறான்.நாயகியும் சம்மதிக்கிறாள்.

இதற்குப்பின் நாயகனின் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் ,சம்பவங்கள் தான் மீதிக்கதை.


மேலே சொன்ன கதை ஒரு டிராக்.இன்னொரு டிராக்கில் ஒரு வீட்டில் ஒரு விபத்து நடந்து இருவர் இறந்து கிடக்கிறார்கள் .அது பற்றி போலீஸ் விசாரிக்கிறது
இந்த கேஸ் இன்வெஸ்டிகேசனில்  ஒரு பெண்ணின் அப்பாவுக்கு முதல் மனைவி விபத்தில் இறந்து விட்டதால் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்து கொள்கிறார்.ஆனால் மகளுக்கு அப்பாவின் இந்த செயல் பிடிக்கவில்லை.மகள் தான் திட்டமிட்டு இந்த விபத்தை நிகழ்த்தி இருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த கேஸ் இன்னொரு டிராக்.

நாயகன் ,நாயகி டிராக்கிற்கும் ,இந்த டிராக்கிற்கும் என்ன தொடர்பு?என்பது சஸ்பென்ஸ்.

நாயகனாக   ஜெகபதிபாபு குணச்சித்திரக்கதாப்பாத்திரத்தில் மிளிர்கிறார்.தமிழ் ஆடியன்ஸ் பெரும்பாலும் வில்லன்  ரோலில் பார்த்திருப்போம்.இதில் நடுத்தர வயது நாயகனாக மிளிர்கிறார்.

நாயகனின் மனைவியாக லயா குடும்பப்பாங்கான பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகியாக ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் வில்லித்தனமான நெகடிவ் ரோலில் மிரட்டி இருக்கிறார்.படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை ஆக்ரமிப்பது இவர்தான்.படையப்பா நீலாம்பரி போல வில்லி ரோல்.

கேஸ் இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீசராக ஸ்ரீனிவாஸ் அவசரலா நடித்திருக்கிறார் 

நாயகனின் மகன்,மகள் கேரக்டரில் நடித்தவர்கள்,மற்றும் மற்றக்கதாப்பாத்திரங்களில் நடித்த அனைவருமே அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

படத்தின் பெரிய பிளஸ் பாய்ண்ட் அதன் ரன்னிங் டைம். 109 நிமிடங்கள் தான்.குயிக் வாட்ச் ஆகவே பார்த்து முடித்து விடலாம்.


ஒளிப்பதிவு ,எடிட்டிங், இசை போன்ற டெக்னிகல் அம்சங்கள் சராசரி தரம்.


கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர்   வம்சி கிருஷ்ணா அகெல்லா என்கிற  அகெல்லா வி.கிருஷ்ணா


சபாஷ் டைரக்டர்

1. முதல் பாதி படம் வரை இது கலாபக்காதலன் ,உயிர்  ஆகிய  படங்களை ப்போல  வில்லி நாயகனை விரும்பும் கதையோ என எண்ண வைத்துப்பின் ட்விஸ்ட் கொடுத்தது.


2 இன்னொரு டிராக்கில் வரும் போலீஸ் விசாரணைக்கதையை மெயின் கதையோடு கனெக்ட் பண்ணியது.

3 நாயகனின் அப்பாவை நாயகி கொலை செய்யப்போவதாக மிரட்டுவது,  சைக்கோத்தனம் பிரமாதம்.

4.  நாயகனுக்கும் ,நர்சுக்கும் கள்ளக்காதல் இருப்பதாக நாயகி நாயகனின் மனைவியை நம்ப வைக்கும் காட்சி திரில்லிங்க்.

5 தெலுங்குப்படங்கள் என்றாலே அடிதடி ,வெட்டு,குத்து என்று பார்த்து சலித்த நமக்கு வன்முறை இல்லாத திரில்லர் கதை புதிய அனுபவம்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 காரில் வெளியே சென்ற நாயகனை மீண்டும் வீட்டுக்கு வர வைக்க நாயகி போடும் திட்டம் ஏற்கனவே  அஜித் நடித்த ஆசை படத்தில் பிரகாஷ் ராஜ் போடும் திட்டம் போலத்தான்.

2 நாயகன் தன் மனைவியுடன் நெருக்கமாக இருப்பதைப்பார்த்துப்பொறாமைப்படும் நாயகி க்ளைமாக்சில் நாயகனை அப்பா ஸ்தானத்தில் தான் பார்த்தேன் என பல்டி அடிப்பது காதில் பூ.

3 இன்னொரு டிராக்கில். வரும் விபத்துக்கேஸ் மர்மம் விலகும்போது சப்பென்று போய் விடுகிறது.அதில் க்ரைம் சம்பவம் எதிர்பார்க்க வைத்து விட்டு ஏமாற்றி விட்டார்கள்.


அடல்ட் கண்ட்டெண்ட்.  வார்னிங். 16+


CPS கமெண்ட் -  பரபரப்பான எதிர்பார்க்க வைத்த முதல் பாதி.மர்ம முடிச்சுகள் அவிழ்ந்த பின் சுவராஸ்யம் குறைந்த பின் பாதி  என ஒரு சராசரி படம் தான். ரேட்டிங். 2.5/5