Showing posts with label TRICHY. Show all posts
Showing posts with label TRICHY. Show all posts

Sunday, May 01, 2011

திருச்சி சாப்பாட்டுக்கடை


''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

சங்கரன் போட்ட தப்புக் கணக்கு!
சங்கரன் முடிவு செய்து விட்டார். 'இனிமேல் சமையல் கான்ட்ராக்ட் எடுப்பதில்லை'' என்று.  கடந்த ஒரு வருடமாக அவருக்கு கடுமையான டயாபட்டீஸ். சமையற்கட்டில் நிற்க முடியாத அளவுக்கு உடல் சோர்வு. இனி உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடி எந்த வேலையும் செய்ய அவர் தயார். அதனால்தான் இந்த முடிவு.



திருச்சி ஏரியாவில் முப்பது ஆண்டுகளாக சங்கரன் ஃபேமஸ். 1980-களில் திருச்சி பக்கம் பொடி தோசையும், பொடி மசாலாவும் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நிறைவு பெறாது. லிச்சி பாசந்தி, பிஸ்தா கேக், அனார்கலி ஸ்வீட் ஆகிய படைப்புகள் சங்கரனுக்கு ரசிகர் படையையே தேடித் தந்திருந்தன. சங்கரன் போடும் காப்பிக்கு முன்னால் ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காப்பியே தோற்றுப் போகும்.


சமையலில் மட்டுமல்ல, யாராருக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து ஐட்டங்கள் போடுவதிலும், உபசாரம் செய்வதிலும் சங்கரன் கில்லாடி. கேரளக்காரர்களா? காளன், ஓலன், எரிசேரி என்று அசத்துவார். மணவாடுகளா?  ஹைதராபாத்தை இலைக்குக் கொண்டு வருவார். வங்காள ரசகுல்லாவும், சந்தேஷ§ம் அவர் சொன்னபடி கேட்கும். செலவைக் கட்டுப்படுத்துவதிலும் சங்கரன் கில்லாடி.

 என்ன ரேட் சொல்கிறாரோ, அதற்குமேல் ஒரு பைசா அதிகம் கேட்க மாட்டார். சங்கரனின் சமையல் கான்ட்ராக்ட் கல்யாணத்தில் யாரும் அரை வயிறோடு திரும்பியதில்லை. கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்டால் போதும், எல்லோரும் வெளுத்துக் கட்டுமளவுக்கு சாப்பாடு ரெடி பண்ணிவிடுவார்.

சங்கரனுக்கு வயது ஐம்பத்து மூன்று. முதல் பையன் கண்ணன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான். அடுத்து அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க ஆசை. இரண்டாம் மகன் குமார் பிளஸ் டூ. அவனுக்கு டாக்டராகும் கனவு. வாரிசுகளின் இந்த கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

 அத்தோடு தன் சமையல், நிர்வாகத் திறமை களை வீணாக்கவும் அவர் விரும்பவில்லை. ஹோட்டல் தொடங்க முடிவு செய்தார். எதையும் பக்காவாகத் திட்டமிட்டுத்தான் அவர் செய்வார். அதுவும் ஹோட்டல் தொடங்குவது என்றால் சின்ன விஷயமா?

திருவெறும்பூர் பகுதியில் ஹோட்டல் திறக்க முடிவு செய்தார். கையில் பணம் புரளும் பி.எச்.இ.எல் ஊழியர்கள், பாரதிதாசன் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் வருவார்கள் என்பது அவருடைய கணிப்பு.



தான் தேர்ந்தெடுத்த பகுதியில் எந்த மாதிரியான உணவு விடுதிகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட கஸ்டமர்கள் வருகிறார்கள் போன்ற விவரங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். எந்த பிஸினஸ் தொடங்கும் முன்னாலும், முதல் நடவடிக்கையாக வாடிக்கையாளர்களையும் போட்டியாளர்களையும் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது மேனேஜ்மென்ட் கொள்கையின் பாலபாடம். இதை மார்க்கெட் சர்வே என்று சொல்வார்கள்.  


எம்.பி.ஏ படிப்பில் மழைக்குக் கூட ஒதுங்காத, மார்க்கெட்டிங் என்பதையே கேள்விப்பட்டிராத சங்கரனுக்கு இந்த சூட்சுமம் எப்படித் தெரிந்திருந்தது? சரவண பவன் அண்ணாச்சி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மகாதேவ ஐயர், அடையாறு ஆனந்த பவன் திருப்பதி ராஜா, 'அறுசுவை அரசு’ நடராஜன் ஆகியோர் எம்.பி.ஏ படித்தா வெற்றி சாம்ராஜ்ஜியம் அமைத்தார்கள்? பல படிக்காத மேதைகளுக்கு பிஸினஸ் நிர்வாகத் திறமை ஒரு உள்ளுணர்வு, ரத்தத்தில் ஊறிய குணம்!

சங்கரன் தன் நண்பர்களோடு ஹோட்டல் தொடங்கப் போகும் தெருவுக்கு அடிக்கடி போனார். அங்கே முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் என்ற இரண்டு ஹோட்டல்கள் இருந்தன. காலை, மதியம், மாலை, இரவு என வேறுபட்ட நேரங்களில் இரண்டு ஹோட்டல்களுக்கும் போனார். என்ன மெனு கொடுக்கிறார்கள், விலை விவரங்கள், எப்படிப்பட்ட மக்கள் வருகிறார்கள், என்ன மாதிரியான ஐட்டங்கள் ஆர்டர் செய்கிறார்கள் என்று உன்னிப் பாகக் கவனித்து மூளையில் பதிவு செய்துகொண்டார்.   
     
சங்கரன் பதிவு செய்துகொண்ட உண்மைகள்:

முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகிய இரண்டு ஹோட்டல் களிலும் 25 மேசைகளும் 100 நாற்காலிகளும் இருந்தன.

 இரண்டு ஹோட்டல்களும் தரமானவை. இவர்களுடைய மெனு: காலையில் இட்லி, வடை, பொங்கல், தோசை, கேசரி. மதியம் சப்பாத்தி அல்லது பூரி, குருமா, சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், சிப்ஸ், குலோப் ஜாமூன். மாலையில் பஜ்ஜி அல்லது போண்டா, இட்லி, தோசை, பாதாம் அல்வா. இரவில் மாலையின் டிபன் ஐட்டங்களோடு மீல்ஸ், விரும்புபவர்களுக்காக சப்பாத்தி அல்லது பூரி, குருமா, சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், சிப்ஸ், பாதாம் அல்வா அல்லது குலோப் ஜாமூன் அல்லது ஐஸ்க்ரீம்.

காலை உணவுக்கு ஏழு மணி முதல் பத்து மணிவரை ஆட்கள் வருகிறார்கள். மதியம் 12.30 முதல் 3 வரை ஆட்கள் வருகை. மாலை 4 முதல் 8 வரை ஆட்கள் வருகிறார்கள். அதற்குப் பின் ஆட்கள் வரத்து மிகக் குறைவு.

காலை, மதியத்தைவிட மாலை, இரவு வேளைகளில்தான் அதிகக் கூட்டம் வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளிலும் இரவுகளிலும்தான் மிக அதிகமான கூட்டம். இந்த வேளைகளில் குடும்பமாக வந்தார்கள். குடும்பம் என்றால் பெரும்பாலும் கணவன், மனைவி ஒரு குழந்தை. பிற நேரங்களில் தனியாக அல்லது இருவராக வந்தார்கள்.

பீக் நேரங்களில்கூட எல்லா நாற்காலிகளும் நிரம்பவில்லை. அதிகபட்சம் 80 பேரே இருந்தார்கள். சில மேசைகளில் இருவர், ஏன் ஒருவர்கூட உட்கார்ந்திருந்தார்கள். உபசரிப்பு சரியாக இல்லை. முதலாளி கல்லாவிலேயே உட்கார்ந் திருந்தார். கஸ்டமர்களிடம் ஏதும் விசாரிக்கவேயில்லை.  

ஒரு நல்ல நாளில் சங்கர விலாஸ் தொடங்கியது. முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகிய இரண்டு ஹோட்டல்களிலும் அதிகபட்சம் 80 பேர்தானே இருந்தார்கள்? எதற்காக 25 மேசைகளும் 100 நாற்காலிகளும் போட வேண்டும்? சங்கரன் புத்திசாலித்தனமாக 20 மேசைகளும் 80 நாற்காலிகளும் மட்டுமே போட்டார். ''இப்படி வீண் செலவுகளைத் தவிர்த்தால்தானே அதிக லாபம் வரும்!''

முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகியோரின் மெனுவோடு தன் ஸ்பெஷல் ஐட்டங்களையும் சேர்த்தார் சங்கரன். டிபன், சாப்பாட்டுக்கு அவர்கள் போட்ட அதே விலை. ஸ்பெஷல் ஸ்வீட்ஸுக்கு அதிக விலை. கல்யாண வீட்டு விருந்தாளி கள்போல் எல்லோரையும் அன்போடு உபசரித்தார்.

டிகிரி காப்பிக்கும், வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளில் தயாரித்த ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் லிச்சி பாசந்தி, பிஸ்தா கேக், அனார்கலி, ரசகுல்லா, சந்தேஷ் ஆகியவற்றுக்கும் அமோக மக்கள் ஆதரவு.

நான்கு வாரங்கள் ஓடின. சங்கரன் கணக்குப் போட்டுப் பார்த்தார். எதிர்பார்த்த லாபம் வரவில்லை. என்ன காரணம் என்று மனத்தில் ஃபிளாஷ்பேக் ஓட்டினார். ஒரேஒரு விஷயம் அவருக்கு நெருடியது. சங்கர விலாஸிலும் பீக் நேரங்களில் 12 மேசைகளில் நான்கில் மட்டுமே நான்குபேர் உட்கார்ந்திருந்தார்கள். பாக்கி 8 மேசைகளில் இருவர், ஏன், ஒருவர்கூட உட்கார்ந்திருந்தார்கள்.

 அதேசமயம் ஹோட்டல் வாசலில் சுமார் 20, 25 பேர் காத்திருந்தார்கள். பதினைந்து நிமிடங்கள்வரை காத்திருந்த பலர் முணுமுணுத்தபடி பக்கத்து ஹோட்டல்களுக்குப் போனார்கள்.

சங்கரன் தன் ஆடிட்டர் ரெங்கராஜனிடம் இந்தப் பிரச்னையை விவாதித்தார். அவர் உடனேயே ஒரு கணக்குப் போட்டார். 20 பேர் திரும்பிப் போகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், நபருக்கு 50 ரூபாய் பில் வீதம் 20 பேருக்கு ஒரு நாள் பிஸினஸ் இழப்பு 1,000 ரூபாய். ஒரு வாரத்துக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்) இழப்பு 3,000 ரூபாய். ஒரு மாதத்துக்கு பிஸினஸ் இழப்பு 12,000 ரூபாய். அடுத்து ரெங்கராஜன் சொன்ன பதில் நெத்தியடி!

''சங்கரன், பிரமாதமா பிளான் பண்ணி பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கீங்க. உங்க கணக்குலே ஒரே ஒரு சின்னத் தப்பு. ஹோட்டல்லே குடும்பமாச் சாப்பிட வர்றவங்கதான் அதிகம். இவங்க ரெண்டு பேரோ, மூணு பேரோ, தனி டேபிள்லேதான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அவங்களுக்கு சாப்பாடு நல்லா இருக்கோ இல்லையோ, 'பிரைவசி’ ரொம்ப முக்கியம். அவங்க குடும்ப சகிதமாக உக்கார்ந்து சாப்பிட இடம் கிடைச்சா மட்டுமே காத்திருப்பாங்க. இல்லாட்டி, அடுத்த ஹோட்டல்ல டேஸ்ட் கம்மியா இருந்தாலும் அங்கே போயிடுவாங்க!''  

சங்கரன் தன் மொபைலை எடுத்தார்.

'அமுதா ஃபர்னிச்சர் கடையா? சங்கர விலாஸிலிருந்து பேசறேன். ஜனவரி மாசம் சப்ளை பண்ணின மாதிரியே 5 மேசையும் 20 நாற்காலியும் தேவைப்படுது. அர்ஜென்ட். இன்னிக்கே டெலிவரி பண்ணிடுங்க.


 தொடரும்

நன்றி - நாணயம் விகடன்

Saturday, March 26, 2011

திருச்சியில் கலைஞரின் அத்து மீறிய பேச்சும், தேர்தல் கமிஷனை வம்புக்கு இழுத்த ஏச்சும் - காமெடி கும்மி


திருச்சியில்  25. 3.2011 நேற்று ( வெள்ளிக்கிழமை )இரவு நடைபெற்ற திமுக கூட்டணி பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதும்  அதற்கான என் கேள்விகளும்...


 தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் .  "எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது,


ஆளும் கட்சியாக இருப்பவர்கள் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவது மட்டும் சரியா தலைவரே..?


"நான் 80 வருடத்துக்கு முன்பு திருக்குவளையில் ஒரு சாதாரண, சாமான்ய குடும்பத்தில் பிறந்தேன். அங்கு சாதி, மத, பண ஆதிக்கம் இருந்தது. அப்போது தந்தை பெரியாரின் கருத்துக்களை காதால் கேட்டும், அண்ணாவின் அரிச்சுவடிகளை கண்ணால் பார்த்தும், இரண்டு பேரின் அறிவுரைகளை கேட்டும் இந்த இயக்கத்தை நடத்தும் வலிமையை பெற்றேன்.


தலைவரே ... அம்மா மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணாம கமுக்கமாவும், விஞ்ஞானப்பூர்வமாவும் ஊழல் பண்ணும் வித்தையை யார் கிட்டே கத்துக்கிட்டீங்க..? ஒரு வேளை சுயம்புவா..?
 

இப்படி திரட்டப்பட்ட வலிமையை மக்களுக்காக செலவழிக்க வேண்டும் என்று எண்ணி உழைக்கின்றேன். அந்த காலத்தில் நான், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒரு கருத்தை அன்பிலாரிடம் கேட்டால் அவர் அண்ணாவிடம் கேட்போம் என்று சொல்வார்.


அன்று முதல் இன்று வரை உங்க கூடவே இருக்கும் விசுவாசி ஆன அன்பழகனை ஏன் துணை முதல்வர் ஆக்காம ஸ்டாலினை துணை முதல்வர்ஆக்கினீங்க தலைவரே..? 

உடனே நாங்கள் அண்ணாவிடம் கேட்டால் நமது காதர் மொய்தீனிடம் அந்த கருத்தை கேட்டு என்னிடம் சொல்லுங்கள், அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்வார். அப்படிப்பட்ட காதர் மொய்தீன் இங்கு பேசும்போது அவற்றை சற்று எண்ணிப் பார்த்தேன்.


எல்லாத்தையும் எண்ணிப்பாருங்க.. ஆனா இலங்கைத்தமிழர் நிலையையும்,இங்கே இருக்கற தமிழர் நிலையையும், மீனவர் வாழ்வையும் நினைச்சுப்பார்த்துடாதீங்க.... 

எனது அரசியல் ஏற்றத்துக்கு, சமுதாய பணிக்கு வித்திட்டது திருச்சி மாவட்டம் தான். இந்த கருணாநிதியை அரசியலில் முதலில் வளர்த்தது திருச்சி மாவட்டம் தான். ஆரம்பத்தில் கல்லக்குடி போராட்டம் ஒரு மிகப் பெரிய எழுச்சியைத் தந்து வெற்றி பெற்றது. அதற்கு திருச்சி மாவட்டத்தின் தீரர்கள், உடன் பிறப்புகள் முக்கிய காரணம்.


அடடா... திருச்சி செண்ட்டரான ஊருன்னு நினைச்சேன்.. இப்படி டெண்ட்டர்ரான ஊரா?பாவம்.. அந்த ஊரு பண்ணுன பாவத்துக்கு பரிகாரத்தை எப்படி செய்யப்போகுதோ.. பார்ப்போம் ஸ்ரீரங்கத்துல நிக்கற அம்மாவை ஜெயிக்க வைக்குதான்னு... 

 

நான் இங்கு பார்த்து பழகிய நண்பர்களை எண்ணிப்பார்க்கிறேன். அன்பில் தர்மலிங்கம் எப்போதும் எனக்கு முழு ஆதரவு தருபவராக இருந்து வந்துள்ளார். அழகுமுத்து யாதவ சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் என்னிடம் துணிச்சலாக பேசக் கூடியவர். ஒரு சமயம் அவர் என்னிடம் பேசும்போது யாதவ சமுதாயத்திற்கு மந்திரி பதவி இல்லையா என்று கேட்டார். அதற்கு நான் யாதவர் என்றாலே மந்திரிதான் என்று சொன்னேன்.


நல்லா வெறும் வாயிலயே முழம் போடறதுல தமிழ் இனத்தலைவரை அடிச்சுக்க ஆள் இல்ல..  

எம்.எஸ்.மணி எங்களுக்கு மாவட்ட கணக்கு பிள்ளையாக இருந்தார். காலையிலும், மாலையிலும் அவர் அயராது உழைத்தார். நாகசுந்தரம், முத்துகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, எம்.எஸ்.வெங்கடாசலம், இளமுருகு பொற்செல்வி, குளித்தலை முத்துகிருஷ்ணன், வெற்றிகொண்டான், காமாட்சி இப்படி எத்தனையோ பேரை மறக்க முடியாது. வெற்றிகொண்டானின் இடி முழக்க பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.


அவங்களுக்கெல்லாம் ஊழல்ல பங்கு குடுக்க மாட்டீங்க.. கேட்டா என் இதயத்துல இடம் உண்டுன்னு சொல்வீங்க.. எல்லாத்துக்கும் பிரிச்சுக்குடுங்க தலைவரே....
இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் 6-வது முறையாக முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவிப்போட்டிக்காக இறங்கி இருக்கிறேன். எனக்கு போட்டி யார்? எதிரி யார்? எதிர்ப்பாளர் யார்? யாருக்கும் அந்த தகுதி இல்லை என்று தம்பி திருமாவளவன் பேசினார். எனக்கு எதிரி, எதிர்ப்பாளர் என்று யாரையும் நான் கருதவில்லை.

அதான் பிரம்மாஸ்திரமான மிக்ஸி,கிரண்டர் இலவசம்கற  துருப்புச்சீட்டு இருக்கே.. உங்களுக்கு சி எம் சீட் கன்ஃபர்ம் தலைவரே...


என்னை பிடிக்காதவர் என்று மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் எழுதிய கதைகளை படித்து பார்த்த அண்ணா தம்பி இன்னும் நீ நன்றாக படித்து விட்டு வா என்றார். அண்ணா சொல்லி நான் செய்யாத ஒரு காரியம் அது ஒன்று தான். அப்படி படித்து விட்டு வந்து இருந்தால் இன்று கருணாநிதி எம்ஏ, பி.ஏ என்று பெயருக்கு பின்னால் போட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட தந்தை பெரியாரின், அண்ணாவின் தம்பி என்ற ஒரே பெருமை போதும் என்று நினைப்பவன் நான். அந்த பெருமையின் காரணமாக தான் 6-வது முறையாக என்னை முதல்மைச்சராக ஆக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள்.


அண்ணா சொல்லி நீங்க செய்யாத காரியம் வேணா ஒண்ணா இருக்கலாம் தலைவரே.. ஆனா அண்ணா சொல்லாமல் நீங்க செஞ்ச காரியம்தான் எத்தனை எத்தனை....அதன் மூலம் கிடைச்ச வருமானம் தான் எத்தனை..? 

நான் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது அந்த தொகுதி மக்கள் முசிறிக்கும், குளித்தலைக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி தருவேன் என வாக்குறுதி அளித்த நான் முதலமைச்சர் ஆனதும் பாலம் கட்டி கொடுத்ததோடு அதனை திறந்தும் வைத்தேன்.

 அந்த பாலம் கட்டுன மேட்டர்ல எத்தனை தலைவரே தேறுச்சு..? மன்னிச்சுக்குங்க.. அது உங்க குடும்ப மேட்டரு... 


இப்படி மக்கள் பிரச்சினைகளை தெரிந்து அறிந்து அதற்கு பரிகாரம் காணவும், சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் தான் எனது பொது வாழ்வில் பெரும்பகுதியை செலவழித்து இருக்கிறேன்.

ஆமாம் தலைவரே.. அடிக்கடி உங்களை சினிமா ஃபங்க்‌ஷன்லயும், பாராட்டு விழாக்கள்லயும் பார்க்க முடியுது.. உலக அளவில இந்த அளவு ஒரு சி எம்  கேளிக்கை விழாக்களில் பங்கெடுத்ததே இல்லையாம் தலைவரே..
நான் செய்த சமுதாய பணிகளை எல்லாம் பட்டியல் இட்டு பேச நேரம் இல்லை. தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிற நேரம் தாண்டிவிடும். அதுவும் இப்போது இருக்கிற தேர்தல் ஆணையம் ரொம்ப கண்டிப்பான தேர்தல் கமிஷன், எதிர்க்கட்சியாக இருக்கிறவர்களை ஆளும் கட்சியாக கொண்டு வரவேண்டும் என்கிற அளவில் இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. தேர்தல் கமிஷனில் இருக்கிற சில அதிகாரிகளின் போக்கு அப்படிப்பட்டது என்பதை சென்னை உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்த பின்னரும் உள்ளபடியே வருத்தமாக இருக்கிறது.


 விடுங்க தலைவரே.. 1000 கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை.. ஓட்டுப்போட பணம் கொடுத்து விடலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை நமக்கு தோல்வி பயம் இல்லை..

தேர்தல் கமிஷன் எந்த கட்சிக்கும் வக்காலத்து வாங்காமல் நடுநிலையோடு நடந்து கொள்ளவேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகாவது இந்திய தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 நடுநிலைமைன்னா தி மு க கட்சிக்காரங்க கள்ள ஓட்டுப்போடறப்ப கண்டுக்கக்கூடாது ...அதானே தலைவரே..?



நடுநிலையோடு பெறும் வெற்றி தான் நிலையானது.
இதற்கு நான் அடிக்கடி சொல்லக்கூடிய கேரளத்து புராணக்கதை ஒன்றை சொல்ல விரும்புகிறேன். அங்கு நல்லாட்சி நடத்தி வந்த மாவலி மன்னனை தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு பெருமான் அழித்தது போல் தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் தி.மு.க. ஆட்சியையும் அழிக்க சிலர் திட்டமிடுகிறார்கள். கேரளத்து மக்களை போல் தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள். ஏனென்றால் தமிழக மக்கள் பெரியாரால் தயார் படுத்தப்பட்டவர்கள். தமிழ் இனம், தமிழ் மொழி வாழவேண்டுமானால் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என கேட்டு விடைபெறுகிறேன்," 


தலைவரே.. கேரளாவுல படிச்சவங்க அதிகம்.. சிந்திச்சு ஓட்டுப்போடுவாங்க.. இங்கே இருக்கற பசங்க எல்லாம் படிக்காத பசங்க... எவனும் சிந்திக்க மாட்டான்..ஓட்டுக்கு பணம் வருதா ஓக்கேம்பான்.. மிக்சி கிடைக்குது, கிரைண்டர் கிடைக்குதுன்னு அவனவன் குதிக்கறான்...  கண்டிப்பா நம்ம ஆட்சி தான் தலைவரே,, ஒண்ணும் கவலைப்படாதீங்க. தமிழனுக்கு விடிவு காலமே வராது... நீங்க தான் தமிழினத்தை காக்கும் தலைவர்...