500 கோடி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 200 கோடி கூட வசூல் செய்யாத டப்பாப்படங்களை எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.வெறும் 5 கோடி பட்ஜெட்டில் 100 கோடி வசூலிக்கும் படங்களை எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.சின்னக்கல்லு பெத்த லாபம் தான் கேரளாவின் கான்செப்ட்.
பிரேமலு,பெத்லேகம் குடும்ப யூனிட் ஆகிய லோ பட்ஜெட் படங்கள் வரிசையில் களம் இறங்கிக்கேரளாவில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் தான் இது.
ஜீத்து ஜோசப்பின் திரிஷ்யம் பாணியில் திரைக்கதை அமைந்திருக்கும் இந்த லோ பட்ஜெட் படம் 11/9/2026 முதல் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருகிறது.தமிழகத் திலும் முக்கிய நகரங்களில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி இருக்கிறது.
பார்வதி திருவோத்து போலீஸ் கேரக்டரில் நடித்திருக்கும் முதல் படம்.
டைட்டிலுக்கு "முதல் பார்வையில் குற்றம் சாட்டப்பட்டவராக இருப்பவர். ". என்று அர்த்தம்.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் இடம் கேரளா கோட்டயம் மாவட்டம் நட்டோகம் என்ற இடம்.
நாயகியின் கணவன் போலீஸ் டியூட்டியில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மரணம் அடைய நாயகிக்கும் போலீஸ் வேலை கிடைக்கிறது.க்ளெரிக்கல் போஸ்ட் போட டிபார்ட்மெண்ட் முயற்சிக்கும்போது நாயகி அதை மறுத்து கணவன் போலவே போலீஸ் ஆக நினைக்கிறேன் என்கிறார்.
போலீஸ் ட்ரெய்னிங்க் எல்லாம் முடிந்து இப்போது போலீஸ் ஸ்டேஷனில் டியூட்டி பார்க்கிறார்.நாயகியுடன் கூடவே வேலை பார்க்கும் ஒரு லேடி போலீஸ் ,இரண்டு ஆண் போலீஸ் இவர்கள் நால்வரும் ஒரு செட்.
வில்லன் ஒரு கொள்ளைக்காரன்.ஆளில்லா வீட்டில் நுழைந்து ஆட்டையைப்போடுவது இவனது பழக்கம்.இவன் தன் காதலியுடன் ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டைக்கண்காணித்து அங்கே திருடுபவன்.
வில்லன் காரில் வரும்போது காரின் வேகத்தைப்பார்த்து சந்தேகம் கொண்டு நாயகி வில்லனின் காரை மறிக்கிறார்.காரின் டிக்கியை செக் செய்யப்போகும்போது பதட்டம் அடைந்த வில்லன் துப்பாக்கியால் நாயகியையும் ,மற்ற மூன்று போலீஸ்காரர்களையும் சுட முயற்சிக்கிறான்.இந்த தள்ளுமுள்ளுவில் அந்த லேடி கான்ஸ்டபிள் தவறுதலாக வில்லனை சுட்டு விடுகிறாள்.
வில்லனின் கார் டிக்கியில் அவனுடைய காதலி பிணமாக இருப்பதும் ,வில்லன் ஒரு திருடன் என்பதும் நாயகிக்குத்தெரியாது.
இந்த ஷூட் அவுட் விஷயம் வெளியே தெரிந்தால் போலீஸ் வேலையும் போச்சு.ஜெயில் தான் என்ற நிலைமையில் நாயகி இந்தக்கொலையை மறைக்க நினைக்கிறார்.
வில்லன் இறக்கும் முன் ஒரு ஆர்மி ஆபீசர் வீட்டை ஆக்ரமித்த சம்பவத்தில் அந்த ஆர்மி ஆபீசரைக்கொலை செய்திருப்பான்.அந்த கொலைக்கேசை விசாரிக்க ஒரு போலீஸ் உயர் அதிகாரி வருகிறார். அவருக்கு நாயகி அண்ட் டீம் மீது சந்தேகம்.
அவர் உண்மையைக்கண்டுபிடித்தாரா?நாயகி அண்ட் டீம் எஸ்கேப் ஆனார்களா?என்பது மீதித்திரைக்கதை.
நாயகியாக சிவில் போலீஸ் ஆபீசராக பார்வதி திருவோத்து பிரமாதமாக நடித்திருக்கிறார்.குற்ற உணர்ச்சியில் தவித்தல் ,எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்ற தைரியம் மாறி மாறி கண்களில் தெரிவது அருமை.
லேடி கான்ஸ்டபிளாக உன்னி மாயா பிரசாத், பயந்த சுபாவம் உள்ளவராகக்காட்டியது புத்திசாலித்தனம்.நடிப்பும் அருமை.அசட்டுத்துணிச்சல் காரராக வரும்
டிரைவராக மேத்யூ தாமஸ் ,நடிப்பு. குட். அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டராக சித்தார்த் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
வினய் போர்ட்டின் நடிப்பும் அருமை.கேசை இன்வெஸ்டிகேட் செய்யும் ஹையர் ஆபீசராக விஜயராகவன் காட்டும் கம்பீரம் அருமை.அஜிஸ் நெடுமங்காடு கவனிக்க வைக்கிறார்.
மிலிட்ரி ஆபீசராக கெஸ்ட் ரோலில் நம்ம ஊர் ஆர் பார்த்திபன் நடித்திருக்கிறார்.
முஜிப் மஜிதின் பின்னணி இசை கலக்கல் ரகம்.படத்தின் விறுவிறுப்பில்,டெம்ப்போ ஏற்றுவதில் பிஜி எம் மேற்கு முக்கியப்பங்கு உண்டு.ஒளிப்பதிவு ராபி வர்கீஸ் ராஜ்.பெரும்பாலான காட்சிகள் இருட்டில் இருப்பதால் சவாலான வேலைதான்.நன்றாக செய்திருக்கிறார்.
படத்தின் ரன்னிங்க் டைம் 161 நிமிடங்கள்.
பிரகாஷன் பறக்கட்டே (2022) என்ற மெலோ டிராமா கொடுத்த
ஷஹாத் நிலம்பூர் தான் இயக்கம்.திரைக்கதை எழுதியவர்கள் பி எஸ் சுப்ரமணியம் + விஜேஷ் தோட்டிங்கல்.
சபாஷ் டைரக்டர்
1 ஒரு போலீஸ் உயர் அதிகாரி எழுதிய க்ரைம் சம்பந்தப்பட்ட புத்தகத்தைப்படித்துப்பார்த்து எப்படி எல்லாம் ஒரு கேசை போலீஸ் அணுகும் என்பதைத்தெரிந்து கொண்டு செஸ் கேம் போல நாயகி திட்டம் போட்டு மூவ் செய்யும் ஐடியாக்கள் பிரமாதம்.
2 அந்தப்புத்தகத்தை எழுதிய ஆபீசர் தான் கேசை விசாரிப்பவர் என்பதால் விடாக்கண்டன் கொடாக்கண்டன் பாணியில் போட்டி போட்டுக்கொண்டு நாயகியும் ,போலீஸ் ஹையர் ஆபீசரும் வகுக்கும் வியூகங்கள் வாவ்...
3 நாயகி அண்ட் டீம் ஆகிய நான்கு பேரின் பர்சனல் லைபிலும் பிரச்சனை இருப்பதாகக்காட்டப்படுவதால் இந்தப்பிரச்சனையில் அவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்ற தவிப்பும் ,எமோஷனல் கனெக்ட்டும் ஆடியன்சுக்குக்கிடைக்கிறது.
4 சிசிடிவி கேமரா க்ளிப்ஸ் 14 நாட்கள் மட்டுமே இருக்கும் என்பதால் 14 நாட்கள் கடந்து விட்டால் தப்பித்து விடலாம் என்ற நிலையில் 12 வது நாள் ஹையர் ஆபீசரிடம் மாட்டிக்கொள்வது திக் திக்...
5 எடிட்டர் சமன் சாக்கோவின் எடிட்டிங்க் கட்ஸ் உத்தி அபாரம்.வில்லன் சிசிடிவி கேமரா மேல் டேப் ஒட்டும் காட்சியைக்காட்டி விட்டு டக்கென அடுத்த சீன இன்வெஸ்டிகேசனைக்காட்டும்போது திரையரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
6 எந்த வீட்டில் எல்லாம் லைட் எரியாமல் இருக்கோ அதை வைத்துத்தான் திருடர்கள் ஏரியா பிரிக்கிறார்கள் என்ற வசனம் வரும்போது டக்கென வரும் மேட்ச் கட் சீன் அபாரம்.
7 ஒருவர் பொய் சொல்கிறாரா?உண்மை சொல்கிறாரா?என்பதைக்கண்டுபிடிக் க ஒரு டெக்னிக் இருக்கு என்று ஹையர் ஆபீசர் புத்தகத்தில் எழுதி இருப்பார்.அதை ஆல்ரெடி படித்திருந்த நாயகி அதே டெக்னிக்கை அந்த ஹையர் ஆபீசர் நாயகி மீது பிரயோகிக்கும்போது நாயகி அதை எதிர்கொள்வது அட்டகாசம்.
8 உண்மை கண்டறியும் சோதனை நாயகிக்கு வைக்கும்போது அதை முன் கூட்டியே யூகித்து நாயகி செய்யும் சம்பவம் செம.
9 பதைபதைப்புடன் மொத்தத்திரைக்கதையும் சீரியசாக நடக்கும்போது நம்மை ரிலாக்ஸ் செய்ய கதையுடன் ஒட்டிய காமெடி குட்.
10 சீட் எட்ஜ் திரில்லர் என்பதற்கு உதாரணமாய் ஒவ்வொரு சீனும் பரபரப்பாய் நகர்வது...
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1. யாரும் திட்டமிட்டு வில்லனைக்கொல்லவில்லை.அது ஒது ஆக்சிடெண்ட்டல் டெத்.அது போக அவன் ஒரு கொலைகாரன் ,திருடன் என்பதால் ஹையர் ஆபீசர். போலீசுக்கு சப்போர்ட் செய்யாமல் பிடிவாதமாக ,ஈகோ கொண்டவராக இருப்பது ஏன் ?
2 போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் எத்தனையோ கஸ்டோடியல் டெத்களில் போலீஸ் ஈசியாகத்தப்பி இருப்பதால் இதிலும் தப்பித்து விடுவார்கள் என்ற என்ணம் தோன்றுவது மைனஸ்
3 க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டில் துப்பாக்கிக்குண்டை நாயகி தாராளமாக அழித்திருக்கலாம்.அதை ஏன் மோதிரமாக செய்து கை விரலில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும் ? அதைப்பார்க்கும்போதெல்லாம் உறுத்தாதா?
4 வினய் போர்ட்டின் கேரக்டர் டிசைன் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டுக்கடைசியில் டம்மியாக , முடித்து விட்டிருப்பது ஏனோ ?
5 வில்லனின் செல்போனிலிருந்து அவரது வாய்ஸ் மெசேஜை போலீசின் செல்போனுக்கு அனுப்பி பின் அதை கரண்ட் டேட்டில் மீண்டும் புதிதாக அனுப்புவது போல் வில்லனின் மனைவிக்கு அனுப்பும்போது பார்வார்டு மெசேஜ் எனக்காட்டுமே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+ ( வன்முறைக்காக)
CPS கமெண்ட் - விறுவிறுப்பான திரைக்கதை , அட்டகாசமான இயக்கம் ,இடைவேளை ட்விஸ்ட் ,க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் அனைத்தும் செம. குடும்பத்துடன் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3/5
