Showing posts with label Patni Air Wo Do-பதி. Show all posts
Showing posts with label Patni Air Wo Do-பதி. Show all posts

Monday, August 24, 2026

Pati ,Patni Air Wo Do-பதி,பத்னி அவுர் வோ தோ - Husband,Wife and the two - கணவன்,மனைவி மேலும் இருவர் (2026)- ஹிந்தி- சினிமா விமர்சனம் (காமெடி டிராமா)@நெட் பிளிக்ஸ்

 இந்தப்படத்தின் முதல் பாகம் 2019ல் வெளிவந்து ஹிட் அடித்தது.இது இரண்டாம் பாகம்.முதல் பாகம் இரண்டாம் பாகம் இரண்டும் வெவ்வேறு கதைகள்.அதனால் முதல் பாகம் பார்க்காதவர்களும் இரண்டாம் பாகம் பார்க்கலாம்.


ஆயுஷ்மான் குரானா,வாமிகா கப்பி,சாரா அலி கான்,ரகுல் ப்ரீத்தி சிங்  ஒரு நாயகன் - 3 நாயகிகள் நடித்த காமெடிப்படம் இது.



ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு பாரஸ்ட் ஆபீசர்.நாயகனின் மனைவி நாயகி ஒரு ஜர்னலிஸ்ட்.இவர்களது குடும்ப வாழ்க்கை சுமூகமாகப்போய்க்கொண்டிருக்கிறது.

வில்லன் ஒரு ஆளும் கட்சி மந்திரி.வில்லனின் மகன் ஒரு பர்தா அணிந்த முஸ்லீம் பெண்ணுடன் ஜோடியாக இருப்பது மாதிரி ஒரு போட்டோ வில்லனுக்குக்கிடைக்கிறது.வில்லன் உடனே தன் அடியாட்களை அனுப்பி அவள் விபரங்களை சேகரிக்க ஆணையிடுகிறான்.

அந்த பர்தா அணிந்த பெண் வேறு யாருமல்ல.நாயகனின் பள்ளித்தோழி,கல்லூரித்தோழி.தோழி நாயகனை சந்தித்துத்தன் பிரச்சனையை சொல்கிறாள்.வில்லன் தன்னை வலை வீசித்தேடிக்கொண்டிருப்பதாகவும் அவனிடம் சிக்கினால் அவ்ளோ தான் எனவும் சொல்கிறாள்.


தோழியின் காதலன் இங்கே இருந்தால் நம்மை வாழ விட மாட்டார்கள்.வெளிநாடு தப்பிச்சென்று விடலாம்.பாஸ்போர்ட் ,விசா எடுக்கக்கால அவகாசம் தேவை.அதுவரை எங்காவது மறைந்து இரு என சொல்கிறான்.


இதைக்கேட்ட நாயகன் தன் தோழிக்கு ஒரு ஐடியா சொல்கிறான்.உன்னை வில்லனின் ஆட்கள் கண்காணிக்கிறார்கள்.நாம் இருவரும் காதலர்கள் போல் நடிக்கலாம்.அதைப்பார்த்து வில்லனின் ஆட்கள் போட்டோ எடுத்து வில்லனுக்கு அனுப்புவார்கள்.வில்லனுக்கு உன் மேல் சந்தேகம் வராது. என்கிறான்.


பப்ளிக் ப்ளேசில் இவர்கள் காதலர்களாக நடிக்க இப்போது இரண்டு பிரச்சனைகள் எழுகின்றன.நாயகனின் மனைவி நாயகி நாயகனின் நடத்தையை சந்தேகிக்கிறாள்.தோழியின் காதலன் தோழியை சந்தேகிக்கிறான்.

இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை 


நாயகனாக ஆயுஷ்மான் குரானா பிரமாதமாக நடித்திருக்கிறார்.அவருக்கு காமெடி சென்ஸ் ,டைமிங் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகிறது.மனைவியிடம் மாட்டிக்கொண்டு விழிப்பது,தோழியை விலகிப்போ என சொல்ல முடியாமல் கஷ்டப்படுவது என நவ ரசங்களையும் காட்டி நடிக்க நல்ல வாய்ப்பு.நன்கு பயன்படுத்தி இருக்கிறார் .


நாயகியாக ,நாயகனின் மனைவி ஆக  வாமிகா கப்பி நடித்திருக்கிறார்.வெண்ணெய் சிலை போல் அழகு.நடிப்பும் கச்சிதம்.தமிழ் நடிகை அமோகா சாயலில் இருக்கிறார்.

நாயகனின் தோழியாக சாரா அலிகான் கிளாமராக நடித்திருக்கிறார்.நாயகியை விட அதிகக்காட்சிகளில் வருகிறார்.


நாயகன் ,நாயகி இருவருக்கும் பொதுவான தோழியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்திருக்கிறார்.

முக்கியமான இந்த நான்கு கேரக்டர்கள் தவிர படத்தில் நடித்த அனைத்துத்துணைக்கதாப்பாத்திரங்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.


பாடல்களுக்கான இசையை ஏழு பேர் கொண்ட குழு கவனித்திருக்கிறது.பின்னணி இசை கேதான் சோதா.

ஒரு ரொமாண்டிக் காமெடிப்படத்துக்குப்பாடல்கள் ரொம்ப முக்கியம்.உணர்ந்து ஹிட் ஆக்கி இருக்கிறார்கள்.பின்னணி இசையும் காமெடியை நன்கு எலிவேட் செய்கிறது .

ஒளிப்பதிவு  ஜிஷ்னு பட்டாச்சார்யா.மூன்று நாயகிககளையும்  க்ளோசப்பில் அழகாகக்காட்டி இருக்கிறார்.

நிர்மல் கானொகர் தாம் எடிட்டிங்க்.படத்தின் ரன்னிங் டைம். 117 நிமிடங்கள்.க்ரிஸ்ப்பாக ட்ரிம் பண்ணி இருக்கிறார்.

ரவிக்குமாருடன் இணைந்து திரைக்கதை எழுதி தான் மட்டும் தனியே இயக்கி இருக்கிறார்  முடாசர் அஜிஸ்.


சபாஷ் டைரக்டர்


1 நாயகனின் தோழியைக்காதலனுடன் இணைத்து போட்டோ  எடுத்து வில்லனிடம் மாட்டி விட்டதே நாயகி தான் என்பதை அறிந்து திகைக்கும் இடம்.

2 பிஸ்னெஸ் விஷயமாக கான்பூர் போகிறேன் என்று நாயகியிடம் பொய் சொல்லி விட்டு  பனாரஸ் வந்த நாயகன் தன் தோழியுடன் ரூம் எடுத்துத்தங்க அந்த லாட்ஜ் ஒரு மார்க்கமான லாட்ஜ் என அறியாமல் போலீஸ் ரெய்டில் சிக்கிக்கொள்ளும் காட்சி காமெடி கலாட்டா.

3.  நாயகன் ,நாயகி இருவருக்கும் பொதுவான தோழியுடன் நாயகனுக்குத்தொடர்பு இருக்குமோ?என நாயகி சந்தேகப்பட ஒரு கட்டத்தில் நாயகன் இரு பெண்களுடன். சுற்றுவதாகத்தவறாக எண்ணி திகைப்பது மெகாக்காமெடி சீக்வன்ஸ்.

4  நாயகனின் தோழியின் காதலன் முதலில் நாயகனைத்தவறாக நினைத்துப்பின் மனம் திருந்தி நாயகனிடம் மன்னிப்புக்கேட்டு தனக்கு உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாயகனுடன் இணைந்து ஒரு போட்டோ எடுக்க வில்லனின் அடியாட்கள் அதை போட்டோ எடுத்து வில்லனிடம் கொடுத்து உங்க மகன் ஒரு ஹோமோவோ?எனக்கேட்பது அரங்கம் அதிரும் சிரிப்பு.


5 நாயகனின் மாமியார் ஒரு குடும்ப நல கோர்ட்டில் ஜட்ஜ் என்பதும் தன் மகளுக்கு.  சில ஐடியாக்கள் கொடுத்து மாப்பிள்ளையைக்கையும் களவுனாகப்பிடிக்க நினைப்பது நல்ல காமெடி சீக்வென்ஸ்.

6 க்ளைமாக்சில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் நாயகன் செய்யும் சேஷ்டைகள் கலக்கல் காமெடி.

7 க்ளைமாக்ஸ் முடிந்த பின் 3 நாயகிகளுடன் நாயகன் ஆடும் கும்மாளப்பாட்டு ,டான்ஸ் அசத்தல். ரகம்.

8  ஓப்பனிங்க் சீனில் சிறுத்தையைப்பிடிக்கும் நாயகனின் சாகசம் அருமை.

லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பாரஸ்ட் ஆபீசராக வரும் நாயகன் நாயகியிடம் பிஸ்னெஸ் விஷயமாக கான்பூர் போகிறேன் என பொய் சொல்லி பனாரஸ் போகும்போது போன் லொக்கேஷன் காட்டிக்கொடுக்காதா?


2. நாயகனுடன் தோழி நெருக்கமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டால் வில்லனின் சந்தேகம் எப்படித்தீரும்?தன் மகனுடனும் காதல்,இன்னொரு ஆளுடனும் காதல் என நினைக்க மாட்டானா?


,3  பொதுவாக குடும்ப நலக்கோர்ட்டில் ஜட்ஜ் ஆக இருப்பவர் விவாகரத்துக்கோரி வரும் தம்பதிகளை கவுன்சிலிங்க் அனுப்பி அறிவுரை கூறி திருத்துவார்கள்.ஆனால் நாயகனின் மாமியார் ஜட்ஜூக்கான எந்த நல்ல குணமும் இல்லாமல் வில்லி போல் செயல்படுவது எப்படி ?

4  1978 ல் இதே டைப் கதை ,2019ல் இதே டைப் கதை. ஒரே டைட்டிலில் ,நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்திருப்பது இந்தப்பொரி இன்னமுமா நமுத்துப்போகாமல் இருக்கிறது?எனக்கேட்க வைக்கிறது.


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+



CPS கமெண்ட்- பல படங்களில் பார்த்த  ஒரு நாயகன் - இரு நாயகிகள் கான்செப்ட் கதையில் இரு நாயகிகளுக்குப்பதில் மூவர்.மற்றபடி காமெடிக்காகப்பார்க்கலாம்.ரேட்டிங்க் 2.5/5

60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம்  64 கோடி ரூபாய் வசூலித்து முதலுக்கு மோசமில்லாமல் ஓடிய படம் என்ற பெருமையைப்பெறுகிறது


Husband, wife and the two
File:Pati Patni Aur Woh Do poster.jpg
Theatrical release publicity
directorMudassar Aziz
AuthorMudassar Aziz
ScreenplayRavi Kumar
Mudassar Aziz
Manufacturer
actor
cinematographerJishnu Bhattacharya
EditorNinad Khanolkar
Musician
  • Song  :
  • Rajesh Roshan
  • Rochak Kohli
  • Tanishk Bagchi
  • Neelkamal Singh
  • Tony Kakkar
  • King
  • Devva Sadana
  • Background music  :
  • Ketan Sodha
construction
companies
  • T-Series Films
  • B.R. Studios
distributorZee Studios
Performance Dates
  • May 15, 2026
length
117 minutes
CountryIndia
LanguageHindi
CostEstimated ₹60 crore
total turnover₹64.06 crore