Showing posts with label Nothing To Lose(2026)-பிரஞ்ச்/தமிழ்- சினிமா விமர்சனம்@நெட் பிளிக்ஸ். Show all posts
Showing posts with label Nothing To Lose(2026)-பிரஞ்ச்/தமிழ்- சினிமா விமர்சனம்@நெட் பிளிக்ஸ். Show all posts

Tuesday, August 18, 2026

Nothing To Lose(2026)-பிரஞ்ச்/தமிழ்- சினிமா விமர்சனம் ( எமோஷனல் டிராமா)@நெட் பிளிக்ஸ்


 1997ம் ஆண்டு இதே டைட்டிலில் வெளிவந்த  ஹாலிவுட் படத்தின் கதைக்கும் ,இந்தப்படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை.


8/7/2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தப்படம் 10/7/2026  முதல் நெட் பிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது.


நோய்வாய்ப்பட்ட மகனைக்காப்பாற்றப்போராடும் பெண்ணின் உணர்ச்சிப்பூர்வமான கதை என்பதால் ஆண்களை விட பெண்களுக்கு நன்றாகக்கனெக்ட் ஆகும்
A

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகி முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை.இந்நாள் குத்துச்சண்டை பயிற்சியாளர். .திருமணமாகிக்கணவனுடன் இனிமையான இல்லறம் நடத்தி வரும் நாயகிக்கு ஒரு பெரிய மனக்குறை.குழந்தை பாக்கியம் இல்லை.

ஹாஸ்பிடல் போய் இருவரும் செக்கப் செய்து கொள்கிறார்கள்.இருவரிடமும் உடல் ரீதியாக ,மருத்துவரீதியாக எந்தக்குறையும் இல்லை.ஆனாலும் குழந்தை உருவாகவில்லை.

டாக்டரின் ஆலோசனைப்படி வேறு ஒரு பெண்ணின் கருமுட்டையை தானமாகப்பெற்று குழந்தை பிறக்கிறது.

10 வருடங்கள் கழித்து.....


இப்போது நாயகி தன் மகனுடன் தனிமையில் வாழ்கிறாள்.கணவனுடன் பிரேக்கப் ஆகி விட்டது.காரணம் சொல்லப்படவில்லை.

அவ்வப்போது கணவன் வந்து குழந்தையைப்பார்த்து விட்டு செல்கிறான்.

நாயகி தன் 10 வயது மகனைத்தன்னைப்போலவே ஒரு பாக்சர் ஆக்க வேண்டும் எனதீவிரமாகப்பயிற்சி அளித்துக்கொண்டிருக்கிறார்.

ஒரு பாக்சிங் போட்டி முடிவில் மகன் மயங்கி விழ ஹாஸ்பிடல் போகிறார்கள்.அங்கே டாக்டர் ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.மகனுக்கு லூக்குமியா என்னும் ரத்தப்புற்று நோய் இருக்கிறது.அவனது உடல் உறுப்புக்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும்.இதற்காக உடல் தானம் வேண்டி பதிவு செய்கிறாள் நாயகி.

நாயகியின் மகன் அட்மிட் ஆன ஹாஸ்பிடலில் பல சிறுவர் ,சிறுமிகள் இதே போல் அட்மிட் ஆகி இருக்கிறார்கள்.அதில் ஒரு சிறுவன் உடல் தானம் கிடைக்காமல் இறந்து விடுகிறான்.

இதனால் டென்ஷன் ஆன நாயகி வரிசைப்படி எல்லாம் காத்திருக்க முடியாது.எனக்கு என் மகன் வேண்டும் என துப்பாக்கியைக்கையில் எடுக்கிறாள்.அந்த ஹாஸ்பிடலை கன் பாய்ண்ட்டில் தன் கண்ட்ரோலுக்குக்கொண்டு வருகிறாள்.நாயகியிடமிருந்து ஹாஸ்பிடலை மீட்க போலீசும் ,ராணுவமும் களம் இறங்குகிறது.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

நாயகியாகப்பிரமாதமாக நடித்திருக்கிறார் நவல் மதனி.இது உண்மை சம்பவமோ?என விக்கிப்பீடியாவில் தேடிப்பார்க்கும் அளவு நாயகியின் உயிரோட்டமான நடிப்பும்,கலக்கலான பர்பார்மென்சும் படத்தை உயர்த்திப்பிடிக்கிறது.

இவர் நிஜமாவே ஒரு பாக்சர்தானோ?என எண்ணும்படி உடற்கட்டை பக்காவாய் மெயிண்ட்டெயின் செய்திருக்கிறார்.முக பாவனைகளில்  ஆயிரம் ஜோதிகாக்கள் நிரம்பி வழிகிறார்கள்.

நாயகனாக  குல்லாம் கோக்ஸ்.இவருக்கு அதிக வேலை இல்லை.முதல் 20 நிமிடங்கள் மட்டுமே அதிகம் வருகிறார்.வந்தவரை நடிப்பு ஓக்கே.

மகனாக நடித்த சிறுவன் அமைதியாக வந்து போகிறான்.ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறும் மற்ற குழந்தைகள் கவனம் ஈர்க்கின்றன.

முதல் பாதி திரைக்கதையை உணர்ச்சிப்பூர்வமான எமோஷனல் டிராமாவாக எடுத்தவர்கள் பின் பாதி திரைக்கதையை 2016ல் வெளிவந்த அருவி படத்தின் டெம்ப்ளேட்டில் க்ரைம் டிராமாவாக மாற்றி விட்டார்கள்.நம்பகத்தன்மை குறைவு.

ஒளிப்பதிவு ,பின்னணி இசை ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் தரம்

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் லுடோவிக் கோல்பு ஜஸ்டின்

சபாஷ் டைரக்டர்

1.  நாயகி பாக்சராகக்கோச்சிங் கொடுக்கும்  ஓப்பனிங்க் சீன உயிரோட்டம்.

2 ஹாஸ்பிடலில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் காட்சி உயிரோட்டமானது.
3 ஹாஸ்பிடலில் மகனை சந்திக்க வரும் அப்பாவை மகன் கண்டுகொள்ளாதது,அப்பா வருத்தப்படுவது நல்ல செண்ட்டிமெண்ட் சீன்.

4 எப்படியாவது அந்தப்பையன் பிழைத்து விட வேண்டும் என்ற எமோஷனல் கனெக்ட்டை நமக்குத்தந்து விடுகிறது.காரணம் நாயகியின் பிரமாதமான ,நுட்பமான நடிப்பும் ,அவரது கேரக்டர் டிசைனும்.

5 ஹாஸ்பிடலில் மகனுக்கு தலை முடி உதிர்வதைக்கண்டு அவன் கேள்வி கேட்பது ,நாயகி ஏதோ பதில் சொல்லி சமாளிப்பது ,பின் அவனுக்கு உண்மை சுடுவது எல்லாமே பெர்பெக்ட் சீன்ஸ்




லாஜிக் மிஸ்டேக்ஸ்


1 நாயகி துப்பாக்கியைக்கையில் எடுத்து திரைக்கதை ஹோஸ்டேஜ் டிராமா மோடுக்குள் போகும்போதே  நம்பகத்தன்மை  நட்டாற்றில் விடப்படுகிறது.

2 ஒரே ஒரு சாதாரண பெண்ணை சமாளிக்க போலீஸ்,ராணுவம் எல்லாம் படாத பாடு படுவதாகக்காட்டுவது ஓவரோ ஓவர்.

3 முதல் பாதி திரைக்கதையில் எப்படியாவது அந்த சிறுவன் பிழைத்து விட வேண்டுமே ?என்று ஆடியன்ஸ் நினைப்பது போல் பின் பாதியில் நாயகி துப்பாக்கியைக்கையில் எடுத்ததும் சீக்கிரம் படம் முடிந்தால் தேவலை என எண்ணத்தோன்றுகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+



CPS கமெண்ட்-  பெண்களுக்கும்,பெற்றோருக்கும் மிகவும் பிடிக்கும்.போஸ்டர் டிசைனைப்பார்த்து ,ட்ரெய்லர் பார்த்து இது ஒரு க்ரைம் ஆக்சன் திரில்லர் என்று ஏமாந்து படம் பார்ப்பவர்கள் ஏமாற்றம் அடைவார்கள். ரேட்டிங் 2.5 /5