Showing posts with label Maternal Instinct (2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் )@நெட் பிளிக்ஸ். Show all posts
Showing posts with label Maternal Instinct (2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் )@நெட் பிளிக்ஸ். Show all posts

Tuesday, July 14, 2026

Maternal Instinct (2026)-ஆங்கிலம்/தமிழ் - சினிமா விமர்சனம் (க்ரைம் டிராமா டாகுமெண்ட்ரி)@நெட் பிளிக்ஸ்

 

எத்தனையோ க்ரைம் சம்பவங்களைப்பற்றிப்படித்திருப்போம்,பார்த்திருப்போம்.ஆனால் இப்படி எல்லாம் ஒரு க்ரைம் நடக்குமா?என்று திகைக்க வைத்த ஒரு உண்மை சம்பவம் தான் இது.பெண்களுக்கான விழிப்புணர்வாகவும் எடுத்துக்கொள்ளலாம்.பெண்ணுக்குப்பெண் தான் எதிரி  என்ற பழமொழியை மெய்ப்பிக்க வந்திருக்கும் படம் இது                              


ஸ்பாய்லர்  அலெர்ட்


ஓப்பனிங்க் ஷாட்டிலேயே நாயகி போலீஸ் கண்ட்ரோல் ரூம்க்கு போன் பண்ணி ஒரு தகவலை சொல்கிறாள்.நான் சாலையில் காரில் போய்க்கொண்டிருக்கும்போதே எனக்கு டெலிவரி ஆகி விட்டது.உடனடியாக வந்து என்னைக்காப்பாற்றுங்கள் என்கிறாள்.


போலீஸ் விரைந்து வந்து நாயகியை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்கிறார்கள்.நாயகியிடம் ஒரு கைக்குழந்தை இருக்கிறது.ஆனால் நாயகியை செக் பண்ணின டாக்டர் நாயகிக்கு இந்தக்குழந்தை பிறக்கவில்லை என்கிறார்கள்.


நாயகி  ஏன் பொய் சொன்னாள்?இதற்குப்பின் நிகழ்ந்த க்ரைம் என்ன? என்பதை விளக்குவது தான் இந்த டாக்குமெண்ட்ரியின் மீதி திரைக்கதை.


நாயகி ஒரு  டுபாக்கூர் பார்ட்டி .வாயைத்திறந்தாலே பொய் தான்.தன் அம்மா ,அப்பா பெரிய ஜமீன் தார் குடும்பம்,ராஜ வம்சம் என்றெல்லாம் ரீல் விடுகிறாள்.ஒரு நடுத்தரக்குடும்பத்து ஆளை மாப்பிள்ளையாகத்தேர்ந்தெடுத்து அவனுடன் லிவ்விங்க் டுகெதர் வாழ்க்கை வாழ்கிறாள்.

நாயகியால் கர்ப்பம் தரிக்க முடியாது.அவளுக்கு ஏகப்பட்ட மெடிக்கல் பிராப்ளம்ஸ் இருக்கிறது.கர்ப்பப்பையை ஆல்ரெடி அகற்றி விட்டார்கள்.

இந்த விஷயங்கள் எதுவும் நாயகியின் கணவனுக்குத்தெரியாது.

ஒரு கட்டத்தில் நாயகி கர்ப்பமாக இருப்பதாகப்பொய் சொல்கிறாள்.கணவனும் நம்பி விடுகிறான்.இந்த சமயத்தில்  கணவனை அருகில் விட்டால் தன் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என உணர்ந்து தனி அறையில் இரவில் உறங்குகிறாள்.கணவனைத்தன் அறையில் அனுமதிப்பது இல்லை.


கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தனது பிரெக்னென்சி டெவலப்மெண்ட்டை போட்டோசெஷன் எடுக்க ஆசைப்பட்டு விளம்பரம் தருகிறாள்.நாயகி அதற்கு விண்ணப்பித்துத்தேர்வாகிறாள்.


அந்தப்பெண்ணுடன் நாயகி அதிக நேரம் செலவிடுகிறாள்.அந்தப்பெண்ணுக்குத்தரப்பட்ட டாக்டர் ரிப்போர்ட்ஸ் ,மருந்து ,மாத்திரைகளை எல்லாம் வைத்து தனது கர்ப்பவதிக்கதையைக்கணவனையும் ,சமூகத்தையும் நம்ப வைக்கிறாள் 


நாயகியின் நெருங்கிய தோழிகளுக்கு ,அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நாயகியின் பொய்மை  தாய்மை பற்றி யூகிக்க முடிகிறது.


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளுக்கு என்ற பழமொழிக்கு ஏற்ப நாயகி எப்படியும் ஒரு நாள் தன் கர்ப்பம் கலைந்து விட்டது என டிராமா போடப்போகிறாள் என்று எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர்.


ஆனால் நாயகி கர்ப்பம் ஆகி 10 மாதங்கள் கழிந்த பின்னும் பெரிதான வயிறுடன் அவரது நாடகம்  தொடர்கிறது.


ஹாஸ்பிடலில் டாக்டர் செக்கப் போகும்போதெல்லாம் நாயகி சாமார்த்தியமாகத்தன் கணவனை த்தவிர்த்து தனியே தான் போகிறாள்.

ஒரு கட்டத்தில் தான் கொடூரமான முடிவு எடுக்கிறாள்.பிரெக்னென்சி போட்டோசெசன் எடுக்க அப்பாய்ண்ட் ஆன இடத்தில் அந்த கர்ப்பவதிப்பெண்ணின் வயிற்றைக்கிழித்துக்குழந்தையை எடுத்துத்தப்பி விடுகிறாள்.


அந்தப்பெண்ணும் இறந்து விட்டாள்.குழந்தையும் இறந்து விடுகிறது.போலீஸ் நாயகியைக்கைது செய்கிறது.

ஆனால் நாயகி எந்த உண்மையையும் ஒத்துக்கொள்ளவில்லை.தன் டிராமாவைத்தொடர்கிறாள்.

போலீஸ் எப்படி எப் ஐ ஆர் பதிவு செய்தது?கோர்ட்டில் நாயகிக்கு எதிரான ஆதாரங்களை எப்படி சப்மிட் செய்து தண்டனை  வாங்கித்தந்தது ?என்பது மீதித்திரைக்கதை


இதில் யாரும் நடிகர் நடிகையர் இல்லை.அந்தந்தக்கதாப்பாத்திரங்களே நிஜ மனிதர்கள்.


சபாஷ்  டைரக்டர்


1. அடல்ட் கண்டெண்ட் எதுவும் கலக்காமல் குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த டாக்குமெண்ட்ரியாக உருவாக்கியது

2 போலீஸ் விசாரணைக்காட்சிகள்,கோர்ட் ரூமில் நடந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றுக்கும் ஒரிஜினல் புட்டேஜை யூஸ் செய்த விதம்.


3 ஒரு சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் படத்தைப்பிரசண்ட் செய்வது போலவே இந்த ட்ரூ க்ரைம் டிராமா டாக்குமெண்ட் ரியை உருவாக்கிய விதம் 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. நாயகி வம்சாவழியே ஜமீந்தார் குடும்பம் என ரீல் விட்டதை கணவன் ஏன் விசாரிக்கவில்லை?

2 பத்து மாதங்களாக த்தொடர்ந்து ஒரு கணவனை ஒரு மனைவி கர்ப்பம் எனப்பொய் சொல்லி ஏமாற்ற முடியுமா?

3  நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணை ஒரு நர்சின் பாதுகாப்பில் வைக்காமல் கொலையாக விட்டது எதனால் ?

4 நாயகிக்கு போலீசும் டாக்டரும் தன் பித்தலாட்டத்தைக்கண்டுபிடித்து விடுவார்கள் என்பது தெரியாதா? எந்த தைரியத்தில் கொலை செய்தாள் ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். -13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான ,அதிர்ச்சிகரமான க்ரைம் டிராமா டாக்குமெண்ட்ரி பார்க்க விரும்புபவர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 3./5