Jab we met ஜப் வீ மெட் (2007),Love Aaj kal லவ் ஆஜ்கல் (2009),my Melbourne(2024) மை மெல்பர்ன் உட்பட பல வெற்றிப்படஙகளைக்கொடுத்த இயக்குநர் இம்தியாஸ் அலியின் லேட்டஸ்ட் படம் இது.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி வசூலித்தது.
ஏ ஆர் ரஹ்மான் தான் இசை என்பதால் இந்தியா முழுக்க கவனம் பெற்ற இந்தப்படம் நம்ம ஊர் பாரதிராஜாவின் முதல் மரியாதை போல ஒரு Feel குட் மூவி.
டைட்டிலுக்கான அர்த்தம் நான் திரும்ப வருவேன்.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனுக்கு இப்போது 95 வயது.ஸ்ட்ரோக் வந்ததால் ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள்.அவருக்கு டெமன்சியாவும் இருப்பதால் எல்லா விஷயங்களை யும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுகிறார்.இவரைக்காப்பாற்ற வழியே இல்லை என டாக்டர்கள் சொல்லி விடுகிறார்கள்.நாயகனின் வாரிசுகள் இனி வேறு வழியில்லை என அவரது மரணத்துக்குக்காத்திருக்கிறார் கள்.
பாகிஸ்தானில் இருக்கும் தன் பூர்வீக வீட்டுக்குப்போக வேண்டும் என நாயகன் வலியுறுத்துகிறார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் பஞ்சாபில் நாயகன் குடி இருந்தார்.இத்தனை வருடங்கள் ஆனபின்பும் தன் பழைய காதலியை அவர் இன்னும் மறக்கவில்லை என அவரது வாரிசுகள் உணர்கிறார்கள்.20 வயதிலிருந்து 95 வயது வரை நிகழ்ந்த சம்பவங்கள் எதுவும் அவருக்கு நினைவில்லை.17 வயதில் நடந்த காதல் மட்டுமே நினைவிருக்கிறது.இதற்குப்பின் நிகழ்ந்த சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.
பம்பாய் படத்தில் மணிரத்னம் எப்படி இந்து முஸ்லீம் கலவரத்துக்கு நடுவே ஒரு காதல் கதையை சொன்னாரோ ,டைட்டானிக் படத்தில் மூழ்கிப்போன கப்பலின் கதையில் மூழ்காத காதலைப்பற்றி சொன்னாரோ அந்த மாதிரி இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
நாயகனாக நஸ்ருதின் ஷா உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார்.இளவயது நாயகன் தோற்றத்தில் வேதாங்க் ரெய்னா நடித்திருக்கிறார்.இளமை ,துள்ளல் மிக்க நடிப்பு.
நாயகனின் பேரனாக தில்சித் தோஷன் பிரமாதமான நடிப்பு.
நாயகியாக ஷர்வாரி நடித்திருக்கிறார்.நாயகனின் பேரனின் கேர்ள் பிரண்டாக பனிட்டா சந்து அழகாக வந்து போகிறார்.
மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
படத்துக்குப்பெரிய பலம் இசையும் ,ஒளிப்பதிவும்.ஒரு ரொமாண்டிக் டிராமா காலம் கடந்தும் மனதில் நிற்க பாடல்கள் ஹிட் ஆக வேண்டும்.காட்சிகள் மனதில் பதிய வேண்டும்.இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ஆர்த்தி பஜாஜின் எடிட்டிங்கில் படம் 167 நிமிடங்கள் ஓடுகிறது.சில்வெஸ்டர் போன்செசா தான் ஒளிப்பதிவு.காட்சிகள் கவிதை தான்.
பாடல்களுக்கான இசை ,பின்னணி இசை இரண்டையும் ஏ ஆர் ரஹ்மான் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.
நயானிகா மஹ்தானி யுடன் இணைந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் இம்தியாஸ் அலி
சபாஷ் டைரக்டர்
1 சீரியசான பிரச்சனையான இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஸ்டேண்ட் அப் காமெடி மூலம் எளிமையாகபுரிய வைத்த லாவகம் அருமை.
2 ஹார்ட் சர்ஜன் - டெய்லர் இருவரையும் ஒப்புமைப்படுத்தி சொன்ன காமெடி
3 ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டு 3 நாட்கள் கழித்து 17ம் தேதிதான் பிரிவினை பற்றிய விபரங்கள் வழங்கப்பட்டது,அந்த 3 நாட்களில். எவ்வளவு குழப்பங்களும் ,வன்முறைகளும் நடந்தேறின என்பதை காமெடியாக சொன்ன விதம்.
,4 பிரிவினையின் போது குடும்பத்துப்பெண்களுக்கு ஏற்பட்ட நிலை குறித்து விவரித்த விதம்.
5 எட்டு பாடல்களில் ஏ ஆர் ரஹ்மானின் மயக்கும் இசை அனைத்தையும் ஹிட் ஆக்கியவிதம்.
6 ஒளிப்பதிவு மிகப்பெரிய பங்களிப்பைத்தந்திருக்கிறது.அட் டகாசமான லொக்கேஷன்ஸ்
ரசித்த வசனங்கள்
1 நாம் கிறிஸ்டியன் ஆகிட்டா சர்ச் ல கல்யாணம் பண்ணிக்கலாம்.
இதை இப்போ யோசிச்சியா?
2 நான் ஒரு வருசம் கழிச்சுத்தான் உன் காதலுக்கு சம்மதம் சொல்லலாம்னு இருந்தேன்.இப்பவே ஓக்கே சொல்லிட்டதால் என்னைக்குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்.
3 அவர் இதயமே இல்லாதவர்னு பலரும் சொல்வாங்க,ஆனா அவர் தன் இதயத்தை இங்கே யே விட்டுட்டுப்போய்ட்டார்.
இல்லை.இரண்டு வருசம் முன்பே யோசிச்சேன்.
4 உன்னால முடியாதுன்னா யாராலயும் முடியாது.
5 என்னை என்ன?னு நினைச்சே? ஒருபோதும் அது மாதிரி செய்ய மாட்டேன்.
மேரெஜ் ஆனாக்கூடவா?
6 இந்தக்காதல் தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது? மரணத்தருவாயில் இருக்கும் ஒருவனை சாகக்கூட விட மாட்டேங்குது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 படத்தின் நீளம் பெரிய மைனஸ்.3 மணி நேரத்துக்கு நெருக்கி ஓடுகிறது.இது ஒரு ஸ்லோ ட்ராமா என்பதை விட டெட் ஸ்லோ ட்ராமா என சொல்லலாம்.
2 இதே இயக்குநர் இயக்கிய ஜப் வி மெட் , பாரதிராஜாவின் முதல் மரியாதை ,கமலின் ஹே ராம் , ஆகிய படங்களை நினைவுபடுத்தும் பல காட்சிகள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 16+
CPS கமெண்ட் - பொறுமைசாலிகளும் ,பெண்களும் ,காதலர்களும் இந்தப்படத்தைக்கொண்டாடுவார்கள். ரேட்டிங் 3.5/5
