Showing posts with label Isai. Show all posts
Showing posts with label Isai. Show all posts

Thursday, January 03, 2013

இசை - 'படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல் கதையா? - எஸ் ஜே சூர்யா சூசக பேட்டி

http://www.mirchi9.com/movienews/wp-content/uploads/2012/06/Puli-in-tamil2.jpg 


அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை!"


எஸ். கலீல்ராஜா


எம் ஆடியோ கீ போர்டு, ஆப்பிள் லேப்டாப், போஸ் ஸ்பீக்கர் மூன்றையும் இணைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. கறுப்பு வெள்ளைக் கட்டைகளில் விரல்கள் விளையாட, டியூன் போடுகிறார். முன் நெற்றி மறைத்து விழும் முடியை ஒதுக்கி, கண்கள் சொருகி லயித்து பாடலை ஹம் செய்கிறார். லயம் தப்பும்போது. 'ஒன் மோர் போலாமா?’ என்கிறார் 'இசை’ பட இசையமைப்பாளர் எஸ்.ஜே.சூர்யா. கண்கள் விரிய, 'இருக்கு... ஆனா இல்லை’ என்று ப்ளேபாய் டயலாக் சொன்ன எஸ்.ஜே.சூர்யாவா இது?


http://www.cinegoer.com/navigation/actress/savitri/savithri-hot-pics-in-isai-tamil-movie-1-15.jpg


'உங்க தன்னம்பிக்கை தெரிஞ்ச விஷயம்தான். அதுக்காக உங்க படத்துக்கு நீங்களே இசை அமைக்கிறீங்களே?''   




 ''படம் இசை சம்பந்தப்பட்டது. ரஹ்மான் சார்கிட்ட கதை சொன்னேன். 'இசையமைக்கிறது கஷ்டமான விஷயம் இல்லை. ஆர்வம் இருந்தா, இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைக் கலாம்’னு சொன்னார். முயற்சிக்கலாம்னு முறைப்படி இசை கத்துக்கிட்டேன்.



 ரஹ்மான் சார்கிட்டே என்னைப் பத்தி கேட்டப்ப, 'நடுக்கடல்ல பிடிச்சு சூர்யாவைத் தள்ளிவிட்டாலும் நீந்தி வந்திருவார். அந்தத் தைரியத்துல மியூஸிக் பண்ணச் சொன்னேன்’னு சொல்லியிருக்கார். அவரோட நம்பிக்கையைக் காப்பாத் தணும். மியூஸிக் பண்ண முன்னே மாதிரி கீ போர்டு, வயலின், தபேலா, கிடார்னு தனித் தனி வாத்தியங்கள் இப்போ தேவையில்லை. அட! நோட்ஸ்கூட எழுத வேண்டியது இல்லை. எல்லாத்தையும் இந்த ஒரு லேப்டாப் பார்த்துக்கும். உலகம் எங்கயோ போய்ட்டு இருக்குங்க!''

 http://tamilko.com/wp-content/gallery/isai-savithri/savithri-isai-hot-2.jpg

''படத்தோட சப்ஜெக்ட் இளையராஜா - ரஹ்மான் இடையிலான மோதல்னு சொல்றாங் களே... உண்மையா?''



''இரண்டு இசை மேதைகளைப் பற்றிய கதை. அவ்வளவுதான். ஆண்டு அனுபவிச்ச ஒரு இசையமைப்பாளருக்கும் திறமையோடு வர்ற ஒரு  இளைய இசையமைப்பாளருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் கதை. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான்... பல தலைமுறை இசையமைப்பாளர்களைத் தமிழ்நாடு பார்த்திருக்கு. இந்தத் தலைமுறைக்கு இளையராஜா சார், ரஹ்மான் சார்தான் பரிச்சயம். அதனால அப்படித் தோணலாம். 



ஐடியாக்கள் எப்பவும் எல்லார்கிட்டயும் இருக்கும். அதைக் கொடுக்கும் விதம்தான் ஆளாளுக்கு மாறும். கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம அப்டேட் டடா இருக்கோமா இல்லையாங் கிறதைப் பொறுத்து நம்ம வெற்றி, தோல்வி அமையும். அதைத்தான் 'இசை’யில் சொல்லியிருக்கேன். நான் இரண்டு இசையமைப்பாளர்கள் பத்திச் சொல்லியிருக்கேன். இதில் நீங்க இரண்டு பிசினஸ் புள்ளிகள், இரண்டு விளையாட்டு வீரர்களைக்கூடப் பொருத்திப் பார்த்துக்கலாம்!''


http://haihoi.com/Channels/cine_gallery/Isai%20Heroine%20Savitri%20Latest_004_S_657.jpg



''இசை மேதை, ஈகோ மோதல் கதைனு சொல்றீங்க... ஆனா, சம்பந்தமே இல்லாம ஹீரோயின் கிளிவேஜ் போட்டோதான் காட்டுறீங்க?''



''ஹா...ஹா...ஹா... அது ஒரு சின்ன போர்ஷன். ஏங்க, ஒரு இளம் இசையமைப்பாளர் காதலிக்கக் கூடாதா? முன்னே மாதிரி என் படத்துல ஹார்ஸ் ரொமான்ஸ் இருக்காது. ஷேக்ஸ்பியர் நாவல்களில் பெண்களை வர்ணிப்பாரே... அழகா, கவிதையா... அப்படி நான் படத்துல வர்ணிக்கிறேன். அவ்வளவுதான்!''



http://tamilko.com/wp-content/gallery/isai-savithri/savithri-isai-hot-9.jpg



''அஜித், விஜய்க்குப் பெரிய பிரேக் கொடுத்தவர் நீங்க. இப்போ அவங்களை வெச்சுப் படம் இயக்கும் எண்ணம் இல்லையா?''



''அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேருடனும் எனக்கு நல்ல நட்பு எப்பவும் உண்டு. ஆனா, எனக்கு ஒரு சவால் இருக்கு. நான் ஆறு படங்கள் ஹீரோவா நடிச்சிருக்கேன். ஆனா, நல்ல நடிகன்னு மக்கள்கிட்டேயும், இயக்குநர் களிடமும் நான் பேர் வாங்கலை. ஒரு இயக்குநரா மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த நான், ஒரு நடிகனா ஜெயிக்கலை. அந்த வருத்தம் எனக்கு உண்டு. ஒரு பயிற்சியாளருக்கும், ஒரு பிளேய ருக்குமான வித்தியாசம் அது. அதை இப்போதான் புரிஞ்சுக்கிட்டேன். இந்தப் படம் ஜெயிக்கணும். நல்ல நடிகன்னு பேர் எடுக்கணும். மத்ததை... அமையும்போது பார்ப்போம்!''



நன்றி - விகடன் 



http://reviews.in.88db.com/images/Isai-heroine-Savithri/Savithri-hot-navel-pics.jpg