Showing posts with label GURRAM PAAPI REDDY (2025)- தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label GURRAM PAAPI REDDY (2025)- தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, February 12, 2026

GURRAM PAAPI REDDY (2025)- குர்ராம் பாப்பி ரெட்டி -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி ட்ராமா ) @ஜீ 5

                           

  GURRAM PAAPI  REDDY (2025)- குர்ராம் பாப்பி ரெட்டி -தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் காமெடி ட்ராமா ) @ஜீ 5 

19/12/2025  முதல்  திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் இப்போது  16/1/2026  முதல் ஜீ 5  ஓடி டி  தளத்தில் காணக்கிடைக்கிறது . வன்முறை , ரத்தம்  இல்லாத ,குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த காமெடிப்படம் இது . ஆந்திரப்பட உலகின் வடிவேலு எனக்கொண்டாடப்படும் பிரம்மானந்தம் காமெடி , யோகி பாபு காமெடி, மொட்டை ராஜேந்திரன் காமெடி  இருப்பது படத்துக்கு கூடுதல்   பிளஸ் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  மேல்  படிப்புப்படிக்க ஆசைப்படறாங்க . சித்தப்பாவிடம் இருக்கும்  கொஞ்சப்பணத்தையும் அந்த ஊரில் புதுசா  வந்திருக்கும் ஃபைனான்ஸ் கம்ப்பெனியில்  டெப்பாசிட்  பண்றாங்க . அந்த ஃபைனான்ஸ்காரன் ஓடிப்போயிடறான் .


 அந்த  ஃபைனான்ஸ் கம்ப்பெனி மேனேஜர் தான்  நாயகன் . அவன் ஒரு அப்பாவி . ஊரை ஏமாத்துன ஓனர் ஓடிட்டான் . மேனேஜர் சிக்கிக்கறான் / இப்போ  நாயகி நாயகனிடம் என் பணத்தைக்கொடுக்க வழி பாருன்னு சொல்ல நாயகன்  வில்லனான  ஓனரிடம் பணம் பறிக்க திட்டம் போடறான் .


வில்லனுக்கு சொந்தமாக ஒரு பெரிய நகைக்கடை இருக்கு . டுபாக்கூர் திருடர்கள் 3 பேரை கூட்டு சேர்த்து அங்கே கொள்ளை அடிக்க முயற்சி செஞ்சு மாட்டி ஜெயிலுக்குப்போறாங்க . நான்கு வருடங்கள் ஜெயில்  தண்டனை  அனுபவித்து  வெளியே வர்றாங்க  .


 இப்போ  நாயகன்  ஒரு சுடுகாட்டில் ஒரு பிணத்தைத்தோண்டி எடுத்து  அந்த  இடத்தில் இன்னொரு பிணத்தை  மாற்றி வைத்து  ஆள்  மாறாட்டம்  மாதிரி  பிண  மாறாட்டம்  செய்யறான். ஏன் ? எதற்கு ? என்பதையும் இதனால் ஏற்படும் காமெடி கலாட்டாக்களையும்   சொல்லும் கதை தான்  இது 


நாயகன்  ஆக நரேஷ்  அகஷ்த்யா காமெடி கலந்த நடிப்பை வழங்கி இருக்கிறார் .நாயகி ஆக  ஃபரியா  அப்துல்லா    சும்மா  வந்து  போகிறார். அதிக  வாய்ப்பில்லை 


 முட்டாள் தனமாக திருடி  மாட்டிக்கொள்ளும் திருடர்களுக்கு அவர்களது முட்டாள்த்தனத்துக்காகவே  தண்டனை கொடுக்கும் காமெடி ஜட்ஜ் ஆக   பிரம்மானந்தம் கலகலப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் 


 பல   சின்ன வீடுகள் , பல வாரிசுகள்  கொண்டவராக மொட்டை ராஜேந்திரன்   சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் 

ஏடாகூடமான ஊசி போடப்பட்டதால்  தடுமாறும் மிலிட்ரி  கேரக்டரில்  நகைக்க வைக்கிறார் ராஜ்குமார் காசி ரெட்டி 


கலிங்க  வாரிசாக  ,டுபாக்கூர்  வாரிசாக  அந்த  மொட்டை  கேரக்டர்  பரவாயில்லை ரகம் . யோகி பாபு சும்மா கெஸ்ட் ரோல் தான் . ஜான் விஜயின் வில்லத்தனம் எடுபடவில்லை 


இசை  கிருஷ்ணா சவுரப் . 3 பாடல்கள்  சுமார் ரகம் . பின்னணி இசை பரவாயில்லை ரகம் . கார்த்திகா சீனிவாசின்  எடிட்டிங்கில்   படம்  160 நிமிடங்கள் ஓடுகிறது . அர்ஜூன்  ராஜாவின்   ஒளிப்பதிவு  பரவாயில்லை ரகம்  


பூமா  பிரஜாவின்  கதைக்கு  திரைக்கதை எழுதி  இயக்கி இருக்கிறார்  முரளி  மனோகர் 



சபாஷ்  டைரக்டர்


1   முதல்  30 நிமிடங்கள்  என்ன , ஏது  என கதை புரியாமலேயே சிரிக்க வைத்த விதம் 


2   கோர்ட்  சீன்களில்  ஜட்ஜ் ஆக பிரம்மானந்தம்  செய்யும் காமெடிகள் 


3   பின் பாதியில்   வரும்  மொட்டை ராஜெந்திரன்  வழங்கும் இயல்பான காமெடி டிராக் 



  ரசித்த  வசனங்கள் 


1    இந்த உலகத்தில் இரண்டு விதமான  ஆட்கள்  இருக்காங்க  1 புத்திசாலிகள்  2 முட்டாள்கள் . முட்டாள்கள் புத்திசாலித்தனமா நடந்தாலோ , புத்திசாலி முட்டாள் தனமா நடந்தாலோ இந்த உலகம் தாங்காது 


2   நகைக்கடைல   திருட நடு  ராத்திரியில் வரனுமா? நல்லா  தூங்கிட்டு   விடிகாலைல 6  மணிக்கு வரவா? 


 6  மணிக்கு வந்து பால் பாக்கெட்டா போடப்போறே? 


3   நீ  போடும் மொக்கைப்பிளான்க்கு  எத்தனை இடம்  மாத்துவே?   சீக்கிரம் பிளானை சொல்லு 


4   இந்த வேலைக்கு எதுக்காக எங்களைத்தேர்ந்தெடுத்தீங்க ?


 ரொம்ப புத்திசாலியாவும் இருக்கக்கூடாது , சொல்றபேச்சையும் கேட்கனும் , அதுக்கு நீங்க தான் சரியான ஆளுங்க 


5  சுடுகாட்டு வெட்டியானுக்கு பிறந்த  வீடு , புகுந்த வீடு எல்லாமே  அந்தக்குழி தான் 


6  இந்த   சீரியல் ஆண்ட்டியை எங்கே இருந்துடா பிடிச்சுட்டு வந்தீங்க ? ஓவரா அழறா? 


7   நம்பிக்கையைக்காப்பாத்துவது எவ்ளோ சிரமமோ , அதே மாதிரி நம்பிக்கையைக்கெடுப்பது ரொம்ப சுலபம் 


8  எல்லாரும் ஒரே நேரத்தில் வராம ஒவ்வொருத்தரா  வாங்கடா பார்ப்போம் 


 ஒவ்வொருத்தரா வந்து உன் கழுத்துல மாலையா போடப்போறோம் ?


9 கேசுவலா இருக்க வேண்டியவன்   கேசுவாலிட்டி  வார்டுல இருக்கானே? 


10  நைட்   பிரியாணி சாப்பிடவே வழி இல்லாம  இருக்கோம், எங்க தலைக்கு 50 லட்சம் ரூபாய்  விலை பேசி இருக்காங்களா? 


11 கீப் க்குப்பணம்  தருவாங்களா? பிடுங்குவாங்களா? 


என்ன   பண்ண? பெட்ரோல் போடக்காசு இல்லை 


12  சார் , நீங்க இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட் என நாங்க எப்படி நம்புவது , ஐ டி கார்டு காட்டுங்க 


 ஓ , நீ எது வரை படிச்சிருக்கே? 


 2 வது   வரை 

 அப்போக்காட்டிடலாம், புரியவா போகுது ? 


13  நாங்க  லஞ்சம் வாங்க மாட்டோம் , ஆபீசர்ஸ். வேணும்னா பெட்ரோல்  டேங்க்  ஃபில்   பண்ணீடுங்க 

14   யுவர் ஆனர் , எனக்கும் டி என் ஏ டெஸ்ட் எடுங்க 

  யுவர் ஆனர் , எனக்கும் டிஎன் ஏ டெஸ் ட்   எடுங்க 


 சைலன்ஸ் , இங்கே  என்ன டிஎன் ஏ டெஸ் ட்  மேளாவா நடக்குது ? 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பல ஆண்டுகளூக்கு முன்  புதைத்த மன்னர் வம்சப்பிணத்தை டி என் ஏ டெஸ்ட்க்காக தோண்டி  எடுக்கும்போது வெறும் எலும்புகள் தான் கிடைக்கும் என்பது கூடவா வில்லன் க்ரூப்க்குத்தெரியாது ? 


2  என்ன தான் காமெடிப்படம் என்றாலும்  கோர்ட்டில்   ஜட்ஜ் , வக்கீல்  தவிர ஆளாளுக்கு டயலாக் பேசுவது ஓவர் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 13+  குடும்பத்துடன் பார்க்கலாம் 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி  டிராமா பார்ப்பவர்கள் சுந்தர் சி யின் ஆள் மாறாட்டக்காமெடி  டைப்  படங்களை  ரசிப்பவர்கள் பார்க்கலாம் . ரேட்டிங்க் 2. 5 / 5 


Gurram Paapi Reddy
Theatrical release poster
Directed byMurali Manohar
Screenplay byMurali Manohar
Story byPoorna Prajna
Produced by
  • Venu Saddi
  • Amar Bura
  • Jayakanth
Starring
Soumya Bollapragada
CinematographyArjun Raja
Edited byKarthika Srinivas
Music byKrishna Saurabh Surampalli
Production
companies
  • MJM Motion Pictures
  • Bura and Saddi Creative Arts LLP
Release date
  • 19 December 2025
Running time
160 minutes
CountryIndia
LanguageTelugu