Showing posts with label Evil Dead Burn(2026)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label Evil Dead Burn(2026)- சினிமா விமர்சனம். Show all posts

Saturday, August 15, 2026

Evil Dead Burn(2026)- சினிமா விமர்சனம் (சூப்பர் நேச்சுரல் ஹாரர் திரில்லர்

 


1981ம் ஆண்டில் The Evil Dead என்ற படம் வந்து மெகா ஹிட் ஆனது.The Evil Dead 2 1987 ல் வந்து ரசிகர்களை மிரட்டியது. மூன்றாம் பாகம் Army of darkness (1992)  பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.நான்காம் பாகம்  Evil Dead (2013) சக்கை போடு போட்டது.ஐந்தாம் பாகம் Evil dead rise (2023)மாங்கு மாங்கு என ஓடியது.இப்போது வந்திருப்பது ஆறாம் பாகம்.


ஆறு பாகங்களையும் தனித்தனியாகப்பார்த்தாலும் கதை புரியும்.ஒவ்வொரு பாகமும் தனிக்கதை தான்.கடந்த ஐந்து பாகங்களைப்பார்க்காதவர்கள் கூட ஆறாம் பாகமான இந்தப்படத்தைப்பார்க்கலாம்


முதல் ஐந்து பாகங்களில் திகிலுடன் காமெடியும் கலந்து இருக்கும்.இந்த ஆறாம் பாகத்தில் காமெடி இல்லை.முழுக்க முழுக்க திகில் தான்.

20 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தின் ரன்னிங் டைம் 109 நிமிடங்கள் தான்.ஒரு குயிக் வாட்ச் ஆகவே பார்த்து விடலாம்.



ஸ்பாய்லர் அலெர்ட

நாயகிக்கும்,அவளது கணவனுக்கும் ஒரு சண்டை.எந்த நாடா இருந்தாலும் புருசன் பொண்டாட்டிக்குள்ளே சண்டை இருக்கும் போல. சண்டையில். சம்சாரத்தை. ஜெயிக்க முடியாத கோபத்தில் கணவன் காரை எடுத்துட்டு வேகமாகப்போக வழி மறித்துக்கொண்டு ஒரு பெண் நிற்கிறாள்.ஆல்ரெடி இருவரைக்கொலை செய்து விட்டுத்தான் அவள் நிற்கிறாள்.இவள் சாபம் பிடித்தவள்.அவளுக்குக்கிடைத்த சாபத்தைக்கை மாற்றி விடத்தான் அங்கே நிற்கிறாள் .இது தெரியாத கணவன் அவளுடன் வாக்குவாதம் செய்ய  கணவன் இறக்கிறான்.

இறந்த கணவன் கல்லறையிலிருந்து எழுந்து வந்து தன் குடும்பத்துக்கு சாபம் கொடுக்கிறான்.

இறந்து விட்ட தன் கணவனுக்கு ஈமச்சடங்கு செய்ய நாயகி தன் குடும்பத்துடன் கூடி இருக்கிறாள்.ஆனால் நாயகியின் குடும்பமே கும்மி அடிக்கப்போகுது என்பது நாயகிக்கு அப்போது தெரியாது.

நாயகியின் மாமனார் கடைசியாக ஒரு முறை தன் மகனின் முகத்தைப்பார்க்கலாம் என்று அருகில் செல்லும்போது ஆவி அவரது உடம்புக்குள் புகுந்து விடுகிறது.நாயகி ஈமக்கிரியைகளை முடித்து விட்டு மாமியார் வீட்டுக்கே போகிறாள்.

நாயகியின் குடும்பத்தில் யார் எல்லாம் பலி ஆனார்கள்?நாயகியாவது தப்பித்தாரா?என்பது மீதி திரைக்கதை.

ப்ளோரண்ட் பெனார்ட் &  செபாஸ்டியன் வெனிசெக் இருவரும் இணைந்து திரைக்கதை எழுத  செபாஸ்டியன் வெனிசெக் மட்டும் தனியாக இயக்கி இருக்கிறார் 

Infested (2023) என்ற பிரமாதமான ஹாரர் திரில்லர் படத்தை இயக்கியவர் தான் இந்த செபாஸ்டியன் வெனிசக்.

இதுவரை வந்த இதன் ஆறு  பாகங்களில் முதல் பாகம் தான் டாப்.அடுத்தது இந்த ஆறாம் பாகம் தான்.

நாயகியாக சவுகீலா யாகூப் மிரட்டி இருக்கிறார்.




ஒளிப்பதிவாளர் பிலிப் லோசனோ தான் படத்தின் உண்மையான கதாநாயகன்.நம்ம ஊர் பி சி ஸ்ரீராம்,மது அம்பாட் மாதிரி ஒளிப்பதிவு ஷாட்ஸ்க்காகவே கை தட்டல் வாங்கும் ஒரு விற்பன்னர் பின்னிப்பெடல் எடுத்திருக்கிறார் கேமரா கோணங்களில்.

பின்னணி இசை தன் பங்குக்கு திகிலூட்டுகிறது


சபாஷ் டைரக்டர்

1 அப்பாவுக்கும் ,மகனுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை,,மாமியாருக்கும்,மருமகளுக்கும் இடையே நடக்கும் ஒரு சண்டை ,மீன் பிடிக்கப்போகும்போது நடக்கும் ஒரு சம்பவம் மூன்றுமே டைரக்டரின் டச் பிரமாதம் என சிலாகிக்கத்தகுந்த காட்சிகள்

2 டைனிங்க் டேபிள் சீக்வன்ஸ் ஒன்று மிரர் ஷாட்டாக  முடியும்.கலக்கலான ஒளிப்பதிவு,எடிட்டிங்

3. ஒவ்வொரு திகில் சீன்சும் சீட்டின் நுனியில் நம்மை இருக்க வைக்கும் பர பர காட்சிகள் தான்.

4 பைனல் டெஸ்டினேஷன், மிட் நைட் மீட் ட்ரெய்ன்  ,டெக்சாஸ் செயின்சா மசாக்கிர், ,ஹாஸ்டல்,ஷா, ஆகிய படங்களில் வருவதைப்போல் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் குலை நடுங்க வைக்கிறது.

5 மேக்கப் பிரமாதம்.எது ஒரிஜினல் மேக்கப்?எது சி ஜி ஒர்க் என்பதைக்கண்டு பிடிக்க முடியாதபடி இருப்பது பெரிய பலம்.
6 முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமை.

7 மூதாதையர்கள் சாத்தானுக்காக வழிபடும் காட்சிகள்

8 படத்தில் மொத்தமே 5 கேரக்டர்கள் தான்,ஆனால் ஐவரும் நடிப்பில் மிரட்டி விட்டார்கள்.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 முதல் 20 நிமிடங்கள் மிகவும் டெட் ஸ்லோ திரைக்கதை

2 கொடூரமான காட்சிகள் ,ரத்தக்களறி கொண்ட  பாடி ஹாரர் படம் என்பதால் எல்லோராலும் பார்க்க முடியாது.

3 முதல் பாகத்தில் வந்த அதே டெம்ப்ளேட் தான்.பெரிய மாற்றம் இல்லை.



அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் 18+. வயலன்ஸ்

cps கமெண்ட் -  திகில் பிரியர்கள் ,பாடி ஹாரர் பட விரும்பிகள் தக்க துணையுடன்   பார்க்கலாம்.ரேட்டிங்  2.5/5