Showing posts with label Aassha (2026)-மலையாளம். - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர்). Show all posts
Showing posts with label Aassha (2026)-மலையாளம். - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர்). Show all posts

Thursday, October 08, 2026

Aassha (2026)-மலையாளம். - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி திரில்லர்)@zee 5 (16/10/2026)

 


இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் ஈகோ க்ளாஷ். என்ற காண்செப்ட்டில். டிரைவிங்க் லைசென்ஸ் (2019)அய்யப்பனும் கோஷியும் (2020) ஆகிய இரு மலையாளப்படங்கள் மெகா ஹிட்டடித்தன.தமிழில் "பார்க்கிங்"(2023) கூட அதே டைப் கதைதான்.



காமெடி நடிப்பில் ,குணச்சித்திரத்தில் கலக்கி வரும் ஊர்வசி வித்தியாசமான வில்லி ரோலில் கலக்கி இருக்கும் இந்தப்படம் கேரளாவில் ரிலீஸ் ஆகி ஹிட்டானதோடு மட்டுமில்லாமல் தமிழகத்திலும் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியாகி இருக்கிறது.


ஸ்பாய்லர் அலெர்ட்


வில்லியின் கணவன் இறந்து விட்டதால் சிங்கிள் மதராகத் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் படிக்க வைத்து ஆளாக்குகிறாள்.மூத்த மகளுக்கு வெளிநாட்டில் வரன் அமைந்து  திருமணம் ஆகி  அங்கேயே செட்டில் ஆகி விட்டாள்.இளைய மகளுக்கு வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.


வில்லியின் கேரக்டர் டிசைன் மிக வித்தியாசமானது.தான் நினைப்பதுதான் சரி ,தான் சொல்வதைத்தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

வில்லியின் இந்த க்கேரக்டரால் வில்லியின் இரண்டாவது மகள் ஒருவனைக்காதலிப்பதை மறைக்கிறாள்.வெளியே சொல்லவில்லை.

ஒரு நாள் வில்லியும்,,மகளும் காரில் பயணிக்கிறார்கள்.சினிமாவுக்குபோகும்போது போகும் வழியில் பேசிக்கொண்டே கார் ஓட்டி வந்ததில் வில்லி கவனக்குறைவாக ஒரு வண்டியில் மோதி ஒரு விபத்தை உண்டாக்கி விடுகிறார்.


தப்பு வில்லியின் மீது தான் என்பது வில்லிக்கும் தெரியும்.ஆனால் விபத்துக்கு ஆளான நபர் குடித்து போதையில் இருப்பதால் பிளேட்டைத்திருப்பிப்போடுகிறார்.

விபத்துக்குள்ளான வண்டியை ஓட்டி வந்தவன் தான் நாயகன்.இவன் ஒரு பிளம்ப்பர்.தன்னையும் ,தன் வாகனத்தையும் சேதப்படுத்திய வில்லியின் மீது கடும் கோபம் கொள்கிறான்.கார் சாவியைப்பிடுங்கிக்கொள்கிறான்.நட்ட ஈடு கொடுத்து விட்டுக்கிளம்பு என்கிறான்.


ஆனால் வில்லி சத்தம் போட்டு ஊரைக்கூட்டி நாயகனுக்கு எதிராகக்கேசை திசை திருப்புகிறாள்.போலீஸ் வருகிறது.கேஸ் பைல் ஆகிறது.


சில நாட்கள் கழித்து வில்லியின் மகள் டூ வீலரில் போகும்போது விபத்து நடக்கிறது.நாயகன் தான் அவளைக்காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்கிறான்.

வில்லி ஹாஸ்பிடலுக்கு வந்து சிசிடிவி புட்டேஜ்களைப்பார்த்து நாயகன் தான் தன் மகளைப்பழி வாங்க வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தி இருக்க வேண்டும் எனத்தவறாக நினைக்கிறாள். தனது மகளின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் அவள் கர்ப்பம் என்பதை அறிந்து மேலும் அதிர்ச்சி அடைகிறார்.தன்னைப்பழி வாங்கத்தான் நாயகன் தன் மகளை இவ்வாறு செய்திருக்க வேண்டும் என நினைக்கிறார்.

வில்லி நாயகனையும் ,அவனது கொலீக்கையும் வீட்டில் அடைத்து  வைக்கிறாள்.இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள்  தான் மீதித்திரைக்கதை.


வில்லியாக ஊர்வசி மாறுபட்ட விதத்தில் கலக்கி இருக்கிறார்.நாயகனை அடைத்து வைத்த பின் குற்ற உணர்வில் தவிப்பது பிரமாதம்.


நாயகனாக ஜோஜூ ஜார்ஜ் அருமையாக நடித்திருக்கிறார்.படத்தின் தயாரிப்பாளர் என்பதால் இவருக்குத்தேவையில்லாத முக்கியத்துவம் கொடுக்கவில்லை.ஊர்வசிக்குத்தான் நடிக்க அதிக வாய்ப்பு.

வில்லியின் இளைய மகளாக  ஐஸ்வர்யா நடிப்பு  கனகச்சிதம்.
விஜயராகவன் கேரக்டரை இன்னமும் வலுவாக எழுதி இருக்கலாம்.

ஜோஜூ ஜார்ஜ் உடன் இணை ந்து திரைக்கதை எழுதித்தனியாக இயக்கி இருக்கிறார் சபார் சனார்.

கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் ,மது நீலகண்டனின் ஒளிப்பதிவு வும் கனகச்சிதம்.



சபாஷ் டைரக்டர்


1 வில்லியின் கேரக்டர் டிசைன் தென்னிந்திய சினிமாவுக்கு நிச்சயம் புதிதுதான்.முழுக்க முழுக்கக்கெட்டவர் அல்ல.இரக்க குணம் கொண்ட ஈகோயிஸ்ட்..இந்தக்கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கும் ஊர்வசியின் நடிப்புக்கு விருது நிச்சயம்.

2 படத்தின் தயாரிப்பாளர் + திரைக்கதை உதவி ஆகிய பொறுப்பேற்றிருக்கும் நாயகன் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பும் ,வில்லிக்கு வழி விட்டு அதிகக்காட்சிகள் வில்லிக்கு ஒதுக்கிய பெருந்தன்மை பாராட்டத்தக்கது.



லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 வில்லியின் மகளுக்கு ஒரு காதலன் உண்டு என்று தெரியும்போதே கர்ப்பத்துக்குக்காரணம் அவராகத்தான் இருப்பார் என்பது நமக்குப்புரிந்து விடுகிறது.இதனால் நாயகன் தான் கர்ப்பத்துக்குக்காரணமோ என்ற வில்லியின் சந்தேகம் எடுபடவில்லை.படம் பார்க்கும் ஆடியன்சுக்கும் அந்த சந்தேகம் இருக்க வேண்டும்.அல்லது தோன்ற வேண்டும்.


2 படத்தின் முதல் பாதியில் 80% கதை சொல்லப்பட்டு விட்டது.வில்லி இனி நாயகனை என்ன செய்யப்போகிறார் என்பதை ரொம்பவே இழுத்து இழுத்துத்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

3 ஒரு கொலை செய்த வில்லிக்கு சட்டப்படி தண்டனை கிடைக்கவில்லை.வாழ்நாள் முழுக்க அந்தக்குற்ற உணர்ச்சியோடு வாழ்வதுதான் அவருக்குத்தரப்படும் தண்டனை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை


அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


CPS கமெண்ட் - வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை ரசிப்பவர்கள் ,ஊர்வசி ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்.ரேட்டிங் 3/5