Showing posts with label 19 (1) (A) ( மலையாளம்) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label 19 (1) (A) ( மலையாளம்) - சினிமா விமர்சனம். Show all posts

Monday, August 01, 2022

19 (1) (A) ( மலையாளம்) - சினிமா விமர்சனம் ( வெரி வெரி ஸ்லோ ஆர்ட் ஃபிலிம்)@ டிஸ்னி ஹாட் ஸ்டார்

 நாமெல்லாம்  எட்டாங்கிளாஸ்  படிக்கறப்போ  20 வரிகளில்  விடை  அளிக்கவும்  அப்டினு  எஸ்சே  டைப்  கேள்வி  வந்ததுன்னா  நமக்கு  4  வரிதான்  தெரியும் . நாம  என்ன  பண்ணுவோம், அதே  4  லைனை  5  தடவை  திருப்பி  திருப்பி  எழுதுவோம்  அப்போ அஞ்சு  இண்ட்  நாலு  = 20  லைன்  ஆகிடும

அந்த  மாதிரி தான் இந்தப்பட  டைரக்டர்  இந்துவும் . 20  நிமிசத்துல  முடிக்க  வேண்டிய  ஷார்ட்  ஃபிலிமை  ஒண்னே  முக்கால்  மணி  நேரம்  போட்டு  இழுத்து  வெச்சிருக்கு 


ஸ்பாய்லர்  அலெர்ட் 


1  ஸ்க்ரிப்ட்டில்  உள்ளபடி =  ஹிரோயின் வீட்டிலிருந்து  கிளம்பி  தான்  நடத்தும்  ஜெராக்ஸ்  கடையை  திறக்கிறார்


படமாக்கம் =  ஹீரோயின்  ஸ்கூட்டி எடுக்கறார்  ஸ்டார்ட்  பண்றார்  5  கிமீ  தூரம்  வர்றதை  20  நிமிசம்  காட்றாங்க   வழில  எவனெவனோ  ஹாய்  சொல்றான்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாதவங்க படத்துல  தலையைக்காட்ட  சான்ஸ்  கேட்டவங்க  வெட்டி  ஆஃபிசருங்க  எல்லாம்  ஆஜர் 


2  ஸ்க்ரிப்ட்டில்  உள்ளபடி = oரு  கஸ்ட,மர்  ஜெராக்ஸ்  எடுக்க  ஹீரோயின்  கிட்டே  வர்றார். அதை  வாங்கிட்டுப்போறார்


படமாக்கம் =  எவனோ  ஒரு  வீணாப்போனவன்  வர்றான்  எதையோ  தர்றான்  ஹீரோயின்  ஃபேனைப்போடுது  ஜெராக்ஸ்  எடுக்குது  சிரிக்குது    தருது  இதுக்கு  அரை  மணி  நேரம்


 3 ஸ்க்ரிப்ட்டில்  உள்ளபடி =   ஹீரோ   ஒரு  ரைட்டர்  தான்  எழுதுன  நாவல்  பக்கங்களை  ஹீரோயின்  கிட்டே  குடுத்து  ஜெராக்ஸ்  எடுத்து  வைங்க  நைட்  வந்து  வாங்கிக்கறேனு  சொல்லிட்டு  கிளம்பனும் 


படமாக்கம் = ஹீரோ  தம்  பத்த  வைக்கிறார்  மேலே  பாக்கறார்  சைடுல  பார்த்து  சிரிக்கிறார்  பேப்பரசை  தர்றார். டயலாக்  பேசறார்  பஸ்  ஸ்டாப்க்கு 10  நிமிசம்  நடந்து  போறார்  அதை  15  நிமிசம்  காட்றாங்க  பஸ்ல  ஏறி  உக்காந்து  ஜன்னல்  கதவை  ஓப்பன்  பண்றார் பஸ்  நகருது  20  நிமிசம்  பஸ்  நகர்ந்துட்டே  இருக்கு 


வெயிட்  வெயிட்  படிக்கற  உங்களுக்கே  இவ்ளோ  கடுப்பாகுதே  பார்த்த  எங்களுக்கு  எவ்ளோ  கடுப்பாகும்?

 ஒரு  வேளை  இது  ஏ செண்ட்டர்  ஆடியன்ஸ்க்கான  படமோ  என்னவோ?  நான்    வேற  தர  லோக்கல்  டிக்கெட்


படத்தோட  கதை  என்ன?னு  எனக்கு  சரியாப்புரியாததால டைரக்டர்கிட்டேயே  ஃபோன்  பண்ணிக்கேட்டேன். அவர்  சொன்னதை  வெச்சு  விமர்சனம்  பண்றேன்


 ஹீரோ  ஒரு  நாவல்  ரைட்டர். புரட்சிகரமான  கருத்துக்களை  சொல்பவர்  அரசியல்வாதிகளை  தோல்  உரிப்பவர் 


கருப்பு  இனத்தவர்களுக்கு நடந்த  கொடுமைகள்  கொலைகள்  பற்றி  ஒரு  நாவல்  எழுதறார். அது  வெளில  வந்தா  நமக்கு  ஆபத்துனு  சிலர்  நினைக்கறாங்க . அந்த  நாவலை தான்  ஜெராக்ஸ்  எடுக்க  கடைக்கு  வர்றார் 


 ஹீரொயின்  கிட்டே  அதைக்குடுத்துட்டுப்போறார்  ஆனா  வாங்க  வரவே  இல்லை  அவரை  போட்டுத்தள்ளிடறாங்க


 ஹீரோயின் அந்த  நாவலைப்படிக்கிறார்  ஹீரோ  வீட்டுக்குப்போறார். அந்த  நாவலை  பல  ஜெராக்ஸ்  எடுத்து  முக்கிய  புள்ளிகளுக்கு  அனுப்பறார் 


 க்ளைமாக்ஸ்  ல  என்ன  ஆச்சு  என்பது  சஸ்பென்ஸ் 

ஹீரோவா  விஜய் சேதுபதி  கதை  கேட்காம  படம்  ஒத்துக்கொள்ளும் ஒரே  ஹீரோ . . இயல்பா  வந்துட்டுப்போறார்  அதிக  வாய்ப்பில்லை  மொத்தமே  இவர்  வரும்  காட்சிகள் 20  நிமிசம்தான் 


 ஹீரோயினா  நித்யா  மேனன் .  களையான  முகம்   நடிக்க  அதிக  வாய்ப்பில்லை

இசை  ஒளிப்பதிவு  குட் 


சபாஷ்  டைரக்டர் 


 1 இதை  எல்லாம்  ஒரு கதைனு  புரொடியூசரை  நம்ப  வெச்சு   ஓக்கே  வாங்குன  சாமார்த்தியம்


2  ஹீரோ  விஜய்  சேதுபதியை பட  ஹீரோனு   அவரையே நம்ப  வெச்சது  , கால்ஷீட்  வாங்குனது 


ரசித்த  வசனங்கள் 


 மொத்தமாவே  படத்துல  10  வசனங்கள்  தான்  அதுல  பெரும்பாலானவை  10 காபி  ஜெராக்ஸ்  எடுங்க   கரண்ட்  இல்லை  சேட்டா  சுகம் தன்னே? எந்தா  கேட்டோ  இவ்ளோ  தான் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1  தன்  கடைக்கு  ஜெராக்ஸ்  எடுக்க  வந்த  ரைட்டர்  அடுத்த  நாள்  காலை  ஆள்  அவுட்  முறைப்படி  ஹீரோயின்  போலீஸ்ல  தகவல்  சொல்லி  இருக்கனுமே?   ஏன்  சொல்லலை ?


 2  ஆளும்  கட்சியின்  அராஜகத்தைத்தான்  ரைட்டர்  எதிர்க்கிறார்  அப்போ  அவங்க  பிரஷர்  போட்டு  ரைட்டர்  கடைசியா  எந்த  லொக்கேஷன்ல  இருந்தார்  கதையை  எங்கே  கொடுத்தார்  என  விசாரித்து  கதையை  தூக்கி   இருக்க  மாட்டாங்களா? 


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -  பால்கனி  ரசிகர்கள்  மட்டும்  படம்  பார்க்கவும் . பார்த்து  ஏதாவது  டவுட்னா  இயக்குநர்  இந்து வுக்கு 09486313441 க்கு  கால்  பண்ணி  டவுட்  கேட்டுக்கொள்ளவும் , ஆளை  உடுங்கடா  சாமி / ரேட்டிங் = ரொம்ப  முக்கியம்  அட  போங்கப்பா 


டிஸ்கி - டைட்டில  ஏ  இருக்குனு  காலைக்காட்சி  ரசிகர்கள்  வாய்  பிளக்க  வேணாம் . அது  தனி மனித  உரிமை சட்டம்  பிரிவுதான்