30/1/2026 முதல் திரை அரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் இது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு தனியார் பள்ளியில் பி டி மாஸ்டர் ஆகப்பணி புரிகிறார்.மனைவி, மகன்,மகள் என்று அழகான ,அளவான குடும்பம் அவருடையது.நாயகன் சின்ன வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் மிக்கவன்.ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அப்போது பாட முடியவில்லை.இப்போது பாடுகிறான்.
தனியார் டி வி நடத்தும் சூப்பர் சிங்கர் புரோகிராம்களில் அடிக்கடி கலந்து கொள்கிறான்.வெற்றி பெறுகிறான்.பலரது பாராட்டுக்களும் கிடைக்கின்றன. இதனால் பள்ளிக்கு அடிக்கடி லீவ் போடுகிறான்.
பள்ளி ஹெச் எம் க்கு இது பிடிக்கவில்லை.அவனை வேலையை விட்டு நீக்குகிறார்.இந்த மன உளைச்சலில் நாயகனால் டி வி ஷோவில் மனம் லயித்துப்பாட முடியவில்லை.போட்டியில் தோற்கிறான்.
நாயகனின் மகனுக்குப்படித்துக்கொண்டிருக்கும்போதே ஐ டி யில் பணி புரிய வாய்ப்புக்கிடைக்கிறது.ஆனால் நாயகனுக்குத்தன் மகனை சின்ன வயதில் வேலைக்கு அனுப்ப மனம் வரவில்லை.தன்னைப்போல் அவன் கஷ்டப்படக்கூடாது என நினைக்கிறான்.ஆனால் நாயகிக்கு மகனை வேலைக்கு அனுப்ப இஷ்டம்.
நாயகனின் பாடகர் ஆசை நிறைவேறியதா? மகன் வேலைக்குப்போனானா? என்ற வினாக்களுக்கு விடை சொல்வது தான் மீதி திரைக்கதை.
நாயகன் ஆக வெண்ணிலா கபாடிக்குழு,பொல்லாதவன் புகழ் கிஷோர்.வில்லன் ஆக ,குணச்சித்திர நடிகராகபரிமளித்தவருக்கு கதையின் நாயகன் ஆக ஒரு வாய்ப்பு.
மனைவியிடம் செல்லம் கொஞ்சுவது,மகளிடம் பாசம் வைப்பது ,மகனுடனான தருணங்கள் எல்லாவற்றிலும் கலக்கியவர் டி வி ஷோக்களில் பாடுவது போல் வரும் காட்சியில் மட்டும் ஒரு மாற்றுக்குறைவாகவே பிரகாசிக்கிறார்.
பாடகர் ஆக நடிப்பதில் விற்பன்னர் ஆன மைக் மோகன் படங்களை ப்பார்த்து பாவனை களை வெளிப்படுத்தி இருக்கலாம்.
நாயகியாக ,டீச்சர் ஆக வரும் சுபத்ரா ராபர்ட் கண்ணியமான உடை ,கருத்தைக்கவரும் நடிப்பு என மிளிர்கிறார்.ஒரு இடத்தில் கூட ஓவர் ஆக்டிங இல்லை.
மகள் ஆக வரும் தனன்யா,மகன் ஆக வரும் ஜஸ்வந்த் இருவருமே தங்கள் கேரக்டரை உணர்ந்து மெருகு ஏற்றி இருக்கிறார்கள்.
வில்லன் ஆக ஹரீஷ உத்தமன் வருகிறார்.மெயின் கதையுடன் வில்லன் கேரக்டர் பொருந்தவில்லை.
தான் யா,ஜார்ஜ் மரியான் உட்பட படத்தில் வரும் மற்ற கேரக்டர்களும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இசை சங்கர் ரங்கராஜன்.பாடகர் சம்பந்தப்பட்ட கதையில் செம ஹிட் பாட்டு ஒன்றாவது இருக்க வேண்டாமா?சராசரி தரம் தான் பாடல்கள்.பின்னணி இசை ஓக்கே லெவல்.
ஒளிப்பதிவு தேவராஜ் புகழேந்தி.ஒரே வீட்டில் ,ஸ்கூலில் பெரும்பாலான காட்சிகள் இருப்பதால் சவாலான வேலை.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் திரவ்.தயாரிப்பாளரும் அவரே!
சபாஷ் டைரக்டர்
1 நாயகன் பி டி மாஸ்டர் ஆக ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் ,டீச்சர்ஸ் உடன் மிங்கிள் ஆவது யதார்த்தம்
2 நாயகன் வீட்டில் மனைவி, மகன்,மகளுடன் காட்டும் பாசப்பிணைப்புகள் எமோஷனல் கனெக்ட்டைக்கொடுக்கிறது
3 கருத்தைக்கவரும் மோட்டிவேசனல் டயலாக்ஸ்
4 அடமானத்தில் இருக்கும் வீட்டை மீட்கும் காட்சிகள் யதார்த்தம்
5 நாயகனுக்கி சக பாடகி அனுப்பும் மெசேஜ்களைப்படித்து நாயகி ஊடல் கொள்வது ரசிக்க வைக்கிறது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 அருமையான குடும்பக்கதையில் நாயகன் சோகத்தில் குடித்து விட்டு வரும் அந்த ஒரே ஒரு காட்சி திருஷ்டிப்பரிகாரம்
2 நாயகனின் மகன் ,மகள் இவர்கள் பார்வையில் தான் மொத்தக்கதையும் மாறி மாறி சொல்லப்படுகிறது.அப்படி இருக்கும்போது மகனோ ,மகளோ இல்லாத காட்சி வரக்கூடாது.நாயகன்,நாயகி இருவரும் தனிமையில் பேசும் காட்சிகள் எல்லாம் வருகிறது
3 மொத்தக்கதையும் பாசிட்டிவ் வைப்ரேஷனில் செல்லும் போது க்ளைமாக்ஸில் வரும் சோகம் வலியத்திணிக்கப்பட்டதே
4. கதைக்கு முக்கியமான அந்த ஆட்டோ விபத்துக்காட்சி ஏனோ தானோ எனப்படமாக்கப்பட்டு உள்ளது.ஆடியன்சுக்க்ய்ப்போதிய இம்ப்பேக்ட் கொடுக்கவில்லை
5 நாயகன் பாடகர் ஆக டி வி ஷோக்களில் தோன்றும் காட்சி கள் ரொம்ப சாதாரணமாக இருக்கின்றன.கூஸ்பம்ப் மொமெண்ட்சே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+ க்ளீன் யு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த மோட்டிவேசனல் மெலோ ட்ராமா .ரேட்டிங்க் 3/5
| Mellisai | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Dhirav |
| Written by | Dhirav |
| Produced by | Dhirav |
| Starring |
|
| Cinematography | Devaraj Pugazhendi |
| Edited by | Dhirav |
| Music by | Shankar Rangarajan |
Production company | Hashtag FDFS Productions |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
.jpg)