Showing posts with label ப்ரியங்கா உபேந்திரா. Show all posts
Showing posts with label ப்ரியங்கா உபேந்திரா. Show all posts

Wednesday, July 03, 2013

ENEMMY - சினிமா விமர்சனம்

 

தலையைச் சுற்றி மூக்கை தொடும் கதை. புரிந்து கொள்வதற்குள் ‘போதும் ‌போதும்’ என்றாகி விடுகிறது. நேர்கோட்டில் சொல்லப்பட்டிருந்தால், ஒரு மணி நேரத்தை தாண்டியிருக்காது இந்த 140 நிமிட படம்.

ஆர்.ஜி.என்கிற ராம் கோவர்தன் (அக்ஷய் கபூர்) ஒரு கட்சித் தலைவர். கட்சியின் பணம் ஐநூறு கோடியை, மும்பைக்கு கொண்டுவரும் பொறுப்பு முக்தரிடம் (ஜாகிர் உசேன்) ஒப்படைக்கப்படுகிறது. வழியில்... நான்கு முகமூடி கில்லாடிகள் அதை களவாடி விடுகிறார்கள். களவாடியது, போட்டி தாதா கும்பல் என சந்தேகப்படுகிறான் முக்தர்.



 வெடிக்கிறது இரு தரப்பிற்கும் துப்பாக்கி சண்டை. ‘கேங் வார்’ என சொல்லப்படும் படுகொலைகளை தடுக்க ஏவப்படுகிறார்கள் ‘யூனிட் 9’ காவல் அதிகாரிகள். ஏக்லவ்யா கர்மார்கர் (சுனில் ஷெட்டி), நசீம் ஷேக் (கே கே மேனன்), எரிக் கொலாக்கோ (ஜானி லீவர்), மாதவ் சின்கா (மகாக்‌ஷே சக்ரவர்த்தி) என்னும் அந்த நான்கு பேரும், அதிரடியாக நுழைந்து ரவுடிகளை பந்தாடி, முக்தரை கைதுசெய்து சிறையில் அடைக்கிறார்கள். 



பணம் போன இடம் தெரியாமல், சிபிஐ அதிகாரி யுகந்தர் ஷர்மாவை (மிதுன் சக்ரவர்த்தி), கோவர்தன் வரவழைக்கிறார். தடயங்களை வைத்து, ‘யூனிட் 9’ஐ நெருங்குகிறார் யுகந்தர். விரிகிறது க்ளைமாக்ஸ். வலிக்கிறது நம் மனது!

கே.கே.மேனன், ‘உதயம்’ படத்தில் அசத்திய அதே போலீஸ் வேடம். பின்னுகிறார்! சுனில் ஷெட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிரடி அவதாரம் எடுத்திருக்கிறார். மகாக்ஷேவுக்கு, நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். பாராட்டுக்கள். மிதுன் சக்ரவர்த்தி, புத்திசாலி போலீசாகக் காட்டிக்கொள்ள முயற்சிகள் எடுத்திருக்கிறார். பாவம்... முயற்சி எதுவும் பலிக்கவில்லை!

‘இன்றைய சினிமா ரசிகர்கள் புத்திசாலிகள்’ என்பதை நினைவில் கொண்டு, இயக்குனர் அஷு டிரிக்கா அடுத்த படம் இயக்கினால் நல்லது!


ரசிகன் குரல்: முமைத்கான் ‘டான்ஸ்’ மட்டும் இல்லாம இருந்திருந்தா, செத்திருப்பேன் மச்சான்!

மொத்தத்தில்  சொதப்பல்

  • நடிகர் : மிதுன் சக்ரவர்த்தி, சுனில் ஷெட்டி
  • நடிகை : ..ப்ரியங்கா உபேந்திரா
  • இயக்குனர் :அஷு டிரிக்கா



நன்றி - தினமலர்