Showing posts with label பூர்விகா. Show all posts
Showing posts with label பூர்விகா. Show all posts

Monday, April 01, 2019

புது மொபைல் எடுக்கனும்,பூர்விகா,சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?

1   தலைவரே!நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திருப்பூர்ல துறைமுகம் கட்டுவோம்னு அடிச்சு விட்டீங்களா?


ஆமா
கடலே இல்லாத ஊர்ல துறைமுகம் எதுக்கு?எப்படி சாத்தியம்?
ஓ,அப்படி ஒண்ணு இருக்கோ?சரி ,விமான நிலையம் னு மாத்தி ஒப்பிச்சுட்டாப்போச்சு

===================


2 ஹீரோ சார் ,உங்க ஆசைப்படி பால் ஊத்திட்டாங்க


என் கட் அவுட்டுக்கா?
படத்துக்கே============

3 தலைவரே!நேத்து பட்ஜெட் தாக்கல் பண்ணதும் இது தேர்தலுக்காக போடப்பட்ட பட்ஜெட்னு பிரமாதமா பேசுனீங்களாமே?


ஆமா,துண்டுசீட்டு பாத்து சொன்னேன்
நாம கிராமசபை கூட்டுனது எப்போ?
ஏன் இத்தனை வருசமா பண்ணலை?
இப்போதான்
லூசாய்யா நீ?எலெக்சன் வர்றப்பதானே இதெல்லாம்"பண்ணனும்?
=================


4 ஸ்கூட்டி ஓட்டும் பெண்களை விட, பைக் ஓட்டும் பெண்களை தைரியசாலிகளாகத் தான் பார்க்கிறோம்.னு சிலர் சொல்றாங்களே?அது நிஜமா?


அதாவது ஸ்கூட்டி ப்யூட்டின்னா கிளுகிளுப்பா பாப்போம்,புல்லட் பார்ட்டின்னா பயத்தோட பார்ப்போம்
=================


5 இன்ஸ்பெக்டர்,சின்னத்தம்பி யானை ரயில்வே ஸ்டேஷன்ல புகுந்து கலவரம் பண்ணுச்சாமே?விசாரிச்சீங்களா?


விசாரிச்சேன் சார்,தவறான தகவல்,சின்னத்தம்பி படத்துல யானை கேரக்டரே கிடையாதாம்,எவனோ கத விட்டிருக்கான்
==================6 தலைவரே!சட்டசபைக்கு ஏன் வர்ல?


வந்தா முதல்வராத்தான் வருவேன்
=================


7 குருவே!கணவன் மனைவிக்குள் சண்டை வரும்போது...அதிகம் விட்டுக்கொடுப்பது யார்??


சிஷ்யா!அதிகம் என்பது வார்த்தை விரயம்.பொண்டாட்டிங்க எந்தக்காலத்துல எதை விட்டுக்குடுத்திருக்காங்க?எப்பவும் ஆண்கள்தான் விட்டுத்தருவாங்க
=================


8 குருவே!உலகத்துலயே இந்தியால தான் டைவர்ஸ் % கம்மியாமே?வெறும் 1% தானாமே?


ஆமா,டைவர்ஸ் பண்ணா தண்டமா ஜீவனாம்சம் தரனுமேனு பிரிஞ்சு வாழறவங்க 10% இருக்கும்
================


9 ஆண் பெண் காதல்தான் கெமிஸ்ட்ரி என்றால், ஓர் ஆண் பல பெண், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பது என்ன கெமிஸ்ட்ரி.?


Body chemistry
ஹாலிவுட் படம் 4 பாகங்களையும் பார்க்கவும் ( 4 பாகங்களும் ஒரே கதை,திரைக்கதை,சீன்கள்தான்,நடிகர்கள் மட்டும் வேற வேற)
=================10 விடுமுறை அன்னிக்கும் பஸ்ஸே இல்லாத ஊரில் உள்ள என் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு ஸ்பெஷல் க்ளாஸ் எடுக்க கிளம்பிட்டு இருக்கிறேன்.அரசுப்பள்ளி ஆசிரியர்னா எவ்ளோ சிரமம்


அப்டியா?ஸ்ட்ரைக் பண்ணுன 8 நாட்கள் சம்பளம் வாங்கப்போறீங்க இல்ல?அந்த 8 நாட்கள் பாடம் யார் நடத்துவாங்க?நீங்கதோனே நடத்தனும்?
===============


11 குருவே! ஆசைப் பட்டால் நஞ்சு லயும்

நாலு வாய் திங்கனும் என்பது உண்மையா?
ஆமா,அப்படி ஆசைப்படறது கடைசி ஆசையா இருந்தா....
==============


12 மாப்ளே!கவலையே படாதீங்க,பொண்ணு மஹாலட்சுமி மாதிரி இருப்பா


அய்யய்யோ,அப்போ"என்"டோக்கன் நெம்பர் 17 ழா?
===============


13 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஜோக் பால்ஸ்ல குளிச்சா ஏகப்பட்ட ஜோக்குகள் மூளைல தோன்றும்னு நினைச்சு குளிச்சேன்,இன்னைக்கு வரை ஒரு ஜோக் கூட தோணவே இல்லை================


14 தலைவரே! குஷ்பூ வை வரச்சொல்லி "நீ எங்கே என் அன்பே! பாட்டு பாடச்சொல்வோமா?


எதுக்கு?
சின்னத்தம்பி படத்துல அந்த க்ளைமாக்ஸ் பாட்டு பாடுனதும் சின்னத்தம்பி ஓடி வந்துடுவாப்டி,நம்ம சின்னத்தம்பி யானையையும் இதே பார்முலால பிடிச்ட்டா?
===================


15 டியர் ,பொண்ணுங்கள்ட்ட பேசவே மாட்டேன்னு சொன்னீங்க,ஆனா டெய்லி 5 வெவ்வேற பொண்ணுங்க கூட சேட்டிங் பண்றீங்களே?நேர்ல பார்க்கறப்ப வெறும் ஜாடைதான்,பேசமாட்டேன்.ட்விட்டர்,பேஸ்புக்ல சேட் பண்றது டைப்பிங் கேட்டகிரிலதானே வரும்?=====================


16 குருவே!இனம் இனத்தோடுதான் சேரும் என்ற கூற்று தப்பு னு சொல்றீங்களா?எப்டி?


இப்ப நாம ஆண் இனம்.பெண் இனத்தைத்தானே சேர்றோம்?அப்போ"அந்த ஸ்டேட்மெண்ட் தப்புதானே?=================


17 சார்,புது மொபைல் எடுக்கனும்,பூர்விகா,சரவணா ஸ்டோர்ஸ் எங்கே சீப்பா கிடைக்கும்?


சிவகுமார் வீட்டுக்குப்போனா இலவசமாவே கிடைக்கும்=================18 டைரக்டர் சார்,அர்ஜூன்ரெட்டி படத்தை ரீமேக் பண்ணனுமாம்,செய்யறீங்களா?


முறைப்படி அனுமதி வாங்கி ரீமேக்கறதுல என்னய்யா கிக் இருக்கு?.நாம எப்பவும் கமுக்கமா திருடிதானே பழக்கம்?

==============


19 சார்,பாக்கெட் சைஸ் டைம்பாம் வேணும்


ஓஹோ,எந்த மாதிரி மாடல் வேணும்?
தட்டி விட்டா அந்தக்கைலயே வெடிக்கற மாதிரி மாடல் வேணும்=================

20
Feel bad movie எதுனா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்.
எதுக்கு?
எல்லாருமே ..Feel good movie எதுனா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ்.னே கேட்டுட்டு இருந்தா மத்த படத்தை எல்லாம் யாருதான் பாக்கறது?


===================