Showing posts with label ஜூலை 17 தியேட்டரிக்கல் ரிலீஸ் படங்கள் முன்னோட்டம். Show all posts
Showing posts with label ஜூலை 17 தியேட்டரிக்கல் ரிலீஸ் படங்கள் முன்னோட்டம். Show all posts

Friday, July 17, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி-ஜூலை 17 தியேட்டரிக்கல் ரிலீஸ் படங்கள் முன்னோட்டம்

 இந்த வாரம்  8 தமிழ்ப்படங்கள்,2 மலையாள டப்பிங் படங்கள் ,ஒரு  ஹாலிவுட் படம் என ஆக மொத்தம் 11 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.


1. அருள்வான்
2 ஜிடி நாயுடு
3அன்பே டயானா
4 அர்ஜூனன் பேர் பத்து
5 ஓ சுகுமாரி
6 நாடோடிக்கூட்டம்
7 கண் இமைக்கும் நேரத்தில்
8  த. டார்க் ஹெவன்



9 அச்சுத அவதாரம்
10.  வரவு- Game Of Survival

11  The Odyssey




















1 அருள்வான்

அருள்நிதி- ரம்யா பாண்டியன் ஜோடியாக நடிக்க ஆரவ் வில்லனாக நடிக்க,காளிவெங்கட்,விடிவி கணேஷ், ஜான் விஜய் ஆகியோர் காமெடியன்களாக நடிக்க ஜி வி பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கும் படம் இது.

கணேஷ் வினாயகன் கதை,திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

கதைப்படி நாயகன் ஒரு மாவட்டக்கலெக்டர்.பழமையான கிராமம் ஒன்றை நல்ல கல்வி பெற்ற ஊராக மாற்றப்போராடுகிறார்.பழங்குடி மக்கள் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்க அவர் முயலும் செயல்களுக்கு வில்லன் தடையாக இருக்கிறான், அதை நாயகன் எப்படி முறியடிக்கிறான்?என்பதே கதை.

இது உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது ஒளிப்பதிவு பிரமாதம் ,லொக்கேஷன்ஸ் கலக்கல் எனத்தோன்றுகிறது

ரசித்த வசனங்கள்

1 உங்களுக்கும் ,எனக்கும் கிடைச்ச கல்வி அவங்களுக்கும் கிடைக்கனும்.

2  இந்த மண்ணை விட்டு. அவங்க எங்கே போவாங்க?

3 இது உங்க காடு.உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் நான் வந்து  நிற்பேன்.



2 GDN (ஜி டி நாய்டு)

ராக்கெட்ரி என்ற சொந்தப்படம் எடுத்த மாதவனின் அடுத்த சொந்தப்படம் இது.இந்தியாவின் எடிசன் என்று போற்றப்படும் ஜி டி நாய்டு வின் வாழ்க்கை வரலாறைத்தான் படமாக எடுத்திருக்கிறார்.

1947 க்கு முன் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பல புகழ் பெற்ற கண்டுபிடிபுகளின் தந்தை ஜி டி நாய்டு.சில காரணங்களால் ஆங்கிலேய அரசாங்கம்  அவரை எதிர்த்தது.அவற்றை மீறி அவர் எப்படித்தன் சாதனைகளை நிறைவேற்றினார் என்பது தான் மொத்த திரைக்கதையும்.


இதில் மாதவன் தான் நாயகன்.இயக்கம் கிருஷ்ணகுமார்  ராம்குமார்.தயாரிப்பு மாதவன்+ மாதவன் மனைவி சரிதா மாதவன்.இசை 96 புகழ் கோவிந்த் வசந்தா .


ட்ரெய்லர் பார்க்கும்போது பிரம்மாண்டமாக இருக்கிறது.சத்யராஜ்,ஜெயராம்,மாதவன் மூவரின் கெட்டப்பும் ,நடிப்பும் வித்தியாசமாக இருக்கிறது.

பிரியாமணி ,துஷாரா  ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.



ரசித்த.  வசனங்கள்


1 அந்த ஆள் ஒரு பைத்தியம்.வயசான காலத்துல தன் சொந்த பில்டிங்கையே தீ வைத்துக்கொளுத்தியவர்.

2 சட்டத்துக்கு எதிர் கள்ள நோட்டு அடிச்சதாகவும் ,சொத்துக்களைப்பதுக்கியதாகவும் நாயுடு  மீது குற்றச்சாட்டு இருக்கு.

3.  நீங்க அநியாயமா அதிக வரி போட ஆரம்பிச்ச பின் தான் நாயுடு எதிர்த்தார்.அதுவரை வரியை ஒழுங்கா கட்டிட்டு தான் இருந்தார்.

 4 வெள்ளைக்காரன் தான் நம்ம எதிரி ,அவனை எதிர்த்து சண்டை  போடனும்னு பார்த்தா நம்ம ஊர்க்காரனே நமக்கு எதிரி போலயே?

5 ஆங்கிலேயென் - எங்கே வந்து யார் கிட்டே பேசிட்டு இருக்கீஙகன்னு புரியுதா?

ஜி டி நாயுடு - எந்த நாட்டில் வந்து யார் கிட்டே என்ன பேசிட்டு இருக்கீங்க? என்பதை கூடிய சீக்கிரம் புரிய வைக்கிறேன்.

6 இப்போது  ஜி டி நாயுடு இதுவரை தான் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்புகளையும் தீயிட்டுக்கொளுத்தப்போகிறார்.

7 மனசு சுத்தமானவன் சொல்றது பலிக்கும்.

8 வேட்டையாடும்போது வேட்டைக்காரன் இல்லாம ஒரு சிங்கம் அழுதுச்சுன்னா வீரத்தோட இலக்கணமும் மாறிடும்


ட்ரெய்லரைப்பார்க்கும்போது கமர்ஷியலாகவும் ஹிட் ஆகும்,விருதுகளையும் குவிக்கும் எனத்தெரிகிறது.





3. அன்பே டயானா

ஜமா என்ற வித்தியாசமான படத்தை இயக்கிய பாரி இளவழகன் இயக்கி நாயகனாகவும் நடித்துள்ள படம் இது.ரம்யா ரங்கநாதன் ,ரோஜா செல்வமணி ஆர் கே 


,யூ ட்யூப் பிரபலம் பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நாயகன் சென்னை பெரம்பூரில் வாழும் ஒரு தெலுங்குப்பையன்.நாயகி  ஆங்கிலோ இண்டியன்.இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள். கலாச்சார வேறுபாடுகள் ,குழப்பஙகளை வைத்து எழுதப்பட்ட திரைக்கதை.

ஜமாவில் சோகமான அழுத்தமான கதையை சொன்னவல் இதில் காமெடி ,காதல் என ஜாலியாக எடுத்திருக்கிறார் ஏனெனில் ஜமா விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக்குவித்தாலும்  கமர்சியலாக ஓடவில்லை.


ரசித்த வசனங்கள்

1 உன்னைப்பிடிக்காமதாண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

அப்புறம் எப்படி முதல்  மாசமே என்ன கர்ப்பம் ஆக்கினே?

2 பொட்டு வெச்சுப்புடவை கடொனா மேரியம்மா மாரியம்மா ஆகுமா?

3 ஏன் அங்கிள் எங்க காதலுக்கு ஓக்கே சொன்னீங்க?நான் ரொம்ப நல்லவன்னா?

ச்செ ச்சே அதெல்லாம் ஒண்ணுமில்ல.


குட் நைட் ,லவ்வர் ,டூரிஸ்ட் பேமிலி ஆகிய சூப்பர் ஹிட் படங்களை எடுத்த  தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் இது.



4. அர்ஜூனன் பேர் பத்து


யோகிபாபுவின் 300 வது படம் இது.அனாமிகா மஹி ,காளி வெங்கட் ஆகியோர் நடிக்க. அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கி இருக்கிறார்.

ட்ரெய்லரைப்பார்க்கும்போது யூகிக்கும் கதை.

நாயகன் சிரமப்பட்டு உழைத்து சேமித்து ஒரு மினி டோர் பிக்கப் வண்டி வாங்குகிறான்.அது காணாமல் போகிறது.போலீசில் புகார் அளிக்கிறான்.அதே வண்டி காணாமல் போனதாக பலரும் புகார் அளித்திருப்பது தெரிய வருகிறது.

இதிலிருந்து யாரோ ஒரு நபர் ஒரே வண்டியைப்பலருக்கு விற்று மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது.இதற்குப்பின் நடக்கும் கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.






ரசித்த வசனங்கள்


1 ஆளும்,மூஞ்சியும் கோமாளி மாதிரி இருக்கறதால்தானே அப்படி செஞ்சீங்க?நான் யார்னு காட்றேன்.

2. என் உயிரே போனாலும் சரி ,என் வண்டி இல்லாம இங்கிருந்து போக மாட்டேன்.என் வண்டி எனக்கு வேணும்

3 ஒரு வண்டிக்கு எத்தனை பேர்தான் உரிமை கொண்டாடுவீங்க?


டி இமானின் இசையில் பாடல்கள் ஹிட் ஆகி இருக்கின்றன.



5. ஓ சுகுமாரி

திருவீர் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்க பரத் தர்ஷன் இயக்கி இருக்கும் படம் இது.தெலுங்கு,தமிழ்,மலையாளம் என 3 மொழிகளில் உருவாகியுள்ளது.( ஏதோ ஒரு மொழியில் எடுத்து டப் பண்ணி இருக்கிறார்கள்) 

ட்ரெய்லரைப்பார்த்தால். ரூரல் ரொமாண்டிக் காமெடிண்டிராமா போல் தோன்றுகிறது.

நாயகன் அரசியல்வாதி ஆக ஆசைப்படுகிறான்.நாயகி அதே கிராமத்தில் இருக்கிறாள்.இவளுக்கு  ஒரு பிரச்சனை இருக்கிறது.யாராவது ஆண் தொட்டால் ஷாக் அடிக்கும்.இதை மறைத்து மேரேஜ் நடத்துகிறார் நாயகியின் அப்பா.

மண மேடையில் அருகே அமரும்போதே நாயகனுக்கு ஷாக் அடிக்கிறது.மகதீரா (மாவீரன்)  படம் போல் முன் ஜென்ம பந்தம் என சமாளித்து தாலி கட்ட வைக்கிறார்கள்.இதற்குப்பின் நிகழும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


ரசித்த வசனங்கள்

1 கடவுள் நம்ம கிட்டே இருந்து எதையாவது எடுத்துக்கிட்டார்னா நமக்கு அதுக்குப்பதிலா எதையோ கொடுக்கப்போறார்னு அர்த்தம்.

2 நூறு பொய் சொல்லி ஒரு கல்யாணத்தைப்பண்ணலை.ஒரே ஒரு உண்மையை மறைக்கிறோம்.

3 அந்த நிலா கூட உன்னை மாதிரி தான்.யாரும் தொட முடியாது,அணைக்கவும் முடியாது.

4 என்னைப்பத்தி எல்லாமே தெரிஞ்சுக்கிட்டுத்தான் வந்திருக்கீங்களா?

5 ஏம்ப்பா தம்பி ?கரண்ட் இருக்கா?

ட்ரான்ஸ்பார்மே இருக்கு.வா.


6. நாடோடிக்கூட்டம்

இது ஒரு லோ பட்ஜெட் படம்.புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார்.ட்ரெய்லர் கூட வரவில்லை.படத்தைப்பற்றி எந்த விபரங்களும் இல்லை




7 கண் இமைக்கும் நேரத்தில்


இது ஒரு ஹாரர் திரில்லர் படம்.சீனிவாசா சினி ஆர்ட்ஸ் தயாரிக்கிறது.புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குநர் இயக்கி இருக்கிறார்.


8  த டார்க் ஹெவன்

இது ஒரு க்ரைம் திரில்லர் மூவி.சித்து சித் ,தர்ஷிகா ஜோடி நிழல்கள் ரவி ,வேல ராமமூர்த்தி  ஆகியோர்  நடித்துள்ளனர்.இயக்கம் பாலாஜி.இசை சக்தி பாலாஜி.


மலை  மற்றும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பின்னணியில் கதை நடக்கிற.பாரம்பரிய நாட்டார் கதைகளில் சொல்லப்படும் அமானுஷ்ய சம்பவங்களை வைத்து  திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரி பேட்டர்னில் 5 கொலைகள் நடக்கின்றன்..ஒரு ரேப் அட்டெம்ப்ட் நடக்கிறது.இதன் பின்னணி பற்றி ஆராய்வது தான் கதை.



9 அச்சுத அவதாரம் ( மலையாளம் /தமிழ்) Achyuta avataaram

கேரளாவில் காசர் கோடு என்ற ஊரில் நடக்கும் சைபர் க்ரைம் கதை இது.

மாளவிகா நந்தன் ,சீமாஜி,அவினாஷ் ,நாயர் ,அபிஜித் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.


இசை பிரசன்ன குமார்.இயக்கம் புனித்




10 வரவு (மலையாளம்/தமிழ்)


ஜோஜூ ஜார்ஜ்  அர்ஜூன் அசோகன் நடிக்கும்  ஆக்சன் மசாலா இது.கேப்டன் விஜய்காந்த் நடித்த வாஞ்சிநாதன் படத்தை இயக்கி ய ஷாஜி கைலாஷ் இயக்கிய படம் இது. சாம் சி எஸ் தான் இசை

போலாச்சன் என்னும் செல்வந்தனான நாயகன்  மலைகிராமத்திலிருந்து   த்ச்ன் சொந்த ஊருக்கு வருகிறான்.அவன் நிகழ்த்தும் சாகசம்  தான் கதை.




11  The Odyssey.   எபிக் பேண்ட்டசி ஆக்சன்  டிராமா

கிறிஸ்டோபர் நோலன் இயக்கி இருக்கும் படம்.250 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்டிருக்கும் பிரம்மாண்டமான படம்.

நம்ம ஊர் அசோக மகாராஜா போல கிரேக்க நாட்டின் மாமன்னன் ஒடிசியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப்படம்.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இதன் திரைக்கதையை 2024 ல் இருந்து எழுதுகிறார்.

ட்ரெய்லரைப்பார்த்தால் பிரம்மாண்டமாக இருக்கிறது.போர்க்களம்.கடல் காட்சிகள்,கப்பல்கள் எல்லாம் அருமை.

மாட் டாமன் ,அன்னே ஹதாவே ,டாம் ஹாலந்த்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.படத்தின் ரன்னிங் டைம்  172 நிமிடங்கள்