
இணையத்தில் வெளியான சந்தானம் புகைப்படம் | ட்விட்டர் தளத்திலிருந்து
இன்று (அக்டோபர் 4) காலையில் முதல் திருமணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் வதந்திகளுக்கு சந்தானம் தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது.
'இனிமே இப்படித்தான்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் சந்தானம் தயாரிக்கிறார். 'லொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா இப்படத்தின் மூலம் வெள்ளித்திரை இயக்குநராக அறிமுகமாகிறார்.
இன்று (நவம்பர் 4) காலை முதலே வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தன்னுடன் நடித்த ஆஷ்னா சாவேரியை சந்தானம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது. திருப்பதியில் சந்தானம், ஆஷ்னா இருக்கும் புகைப்படமும் வெளியானது.
இதுகுறித்து சந்தானம் தரப்பில் விசாரித்த போது, "நவம்பர் 15ம் தேதி முதல் சந்தானம் சார் நாயகனாக நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. எப்போதுமே நாயகனாக ஒரு படம் ஆரம்பிக்கும் முன்பு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்வது சந்தானம் சாரின் வழக்கம்.
புதிய படம் ஆரம்பிக்க இருப்பதால், இன்று படக்குழுவினரோடு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். இதனை இப்படி தவறான செய்தியாக பரப்பிவிட்டார்கள். ஆஷ்னா சாவேரி அப்படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
மேலும், சந்தானம் நாயகனாக நடித்த 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்', 'இனிமே இப்படித்தான்' ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் ஆஷ்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-தஹிந்து
- Subbu from Indiaலொள்ளு சபா' இயக்குநர் ராம்பாலா -- எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் எனது பலநாள் எதிர்பார்ப்பு... சந்தனத்தின் நக்கல் நையண்டிஎல்லாதுக்கும் அவர் தன பிள்ளையார் சுழி போட்டது ...about 16 hours ago885(1) · (0)reply (0)
- PKPradeep Kumar from Indiaகாத்திருப்போம். கத்திரிக் காய் முளைத்தால் கடைத் தெருவிற்கு வந்து தானே ஆகனும்.