Showing posts with label ஆண்ட்ரியா. Show all posts
Showing posts with label ஆண்ட்ரியா. Show all posts

Friday, May 27, 2016

இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்


நயன் தாரா கூட ஊடல், நிஜ வாழ்வில் தாலி கட்ட வாய்ப்பிலை, பார்த்தாரு சிம்பு, சொந்தப்படம் எடுப்போம் , படத்துலயாவது தாலி கட்டுவோம்னு முடிவு பண்ணாரு. அதான் இது நம்ம ஆளு


ஹீரோ ஹீரோயினை பொண்ணுப்பார்க்கப்போறாரு. பார்த்ததும் ஓக்கே ஆகிடுது.பொதுவா பொண்ணுங்க நம்ம வாயைப்பிடுங்கி எதுனா போட்டு வாங்குவாங்க,    அந்த ஃபார்முலா படி  மாப்ளை கிட்டே பொண்ணு உங்க பழைய லவ் எதுனா இருக்கா?னு கேட்குது.

 ஹீரோ ஒரு லவ் பற்றி சொல்றாரு, ஃபிளாஸ்பேக்.

ஹீரோயின் பற்றி விசாரிக்க ஹீரோ ஃபிரண்ட் ஒரு டிடக்டிவ் வைக்கறாரு. அது தெரிஞ்சு ஹீரோயின் கடுப்பாகிடுது. இவங்க ஊடல் என்னாச்சு? ஹீரோ யாரைக்கல்யாணம் பண்ணாரு என்பதுதான் மிச்ச மீதி கதை


 படத்தின் முதல்  ஹீரோ வசன கர்த்தா தான் . பிரமாதமான கவுண்ட்டர் டயலாக்ஸ், ஷார்ப்பான் கவுண்ட்டர்ஸ், 10 பேர் கொண்ட குழு தான் இப்டி எழுதி இருக்க முடியும்.


ஹீரோவா சிம்பு. 3 விதமான கெட்டப் , 3 ஜோடி . இப்பவெல்லாம் ஒரு ஜோடியோட நடிச்சா யாரும் ஹீரோவை மதிப்பதே இல்லை. டிரஸ்ஸிங் சென்ஸ்  பக்கா . வழக்கமா அவர் செய்யும் விரல் சேட்டைகள் எல்லாம் இல்ல. பக்கா ஜெண்ட்டில்மேன் லுக்,  ஐ டி கம்பெனி ஒர்க்கர் போலவே தோற்றம் டீசண்ட், டான்ஸ் ஸ்டெப்பில் இன்னும் கலக்கி இருக்கலாம்.ஹீரோயினா மேல் உதட்டு மச்ச அழகி , அஞ்சே முக்கால் அடி உச்ச அழகி நயன் தாரா, காதலிக்க இவருக்கு சொல்லியா தரனும் . அதுவும் ஆல்ரெடி காதலிச்சவரை காதலிப்பது போல் நடிக்க 2 கோடி சம்பளம். இதுவல்லவா வாழ்க்கை? பட்டாசைக்கிளப்பி இருக்கார் .


2 வது  ஹீரோயினா ஆண்ட்ரியா. சிம்பு அருகே க்ளோசப்  காட்சிகளில் இன்னும் யூத்தா காட்டிக்க மெனக்கெட்டிருக்கலாம். ஆண்ட்டி போல் இருக்கார் .

சூரிதான் காமெடி , நீண்ட இடைவெளிக்குப்பின் செம ஒர்க் அவுட். இவர்து ஒன் லைனர்களுக்கு சந்தானம் காமெடிக்கு இணையான்  கைதட்டல்கள்


 சந்தானம் கெஸ்ட்  ரோல்.  பெரிதாக  எடுபடவில்லை. இன்னும்  போர்சன் கொடுத்திருக்கலாம்.

ஹீரோ ஹீரோயின் அப்பா கேரக்டர்கள்  நல்ல குணச்சித்திர நடிப்பு . வெல்டன்.


இசை  டி ஆர் குறளரசன். 2 பாட்டு செம ஹிட்டு . பிஜிஎம்  நீட்.


பாண்டிராஜ்  திரைக்கதை வசனம் இயக்கம்.  குட்.

க்ளைமேக்சில் உங்க 2 பேரையும் வெச்சு படம் எடுத்து முடிப்பதற்குள்  ஷப்பா என புத்திசாலித்தனமான ரியலிஸ்டிக் டயலாக்


நச் டயலாக்ஸ்

GOD மேல நம்பிக்கை இருக்கோ இல்லையோ CARD மேல CREDIT CARD மேல நம்பிக்கை இருக்கு # இ ந ஆ

2 ஏன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க?பார்க்கற மாதிரி இருக்கறதால # இ ந ஆ


3 கவுச்சி பிடிக்கும்னு சொன்னேன்.ஆனா கவர்ச்சி பிடிக்கும்னு சொல்லலையே?# இந ஆ

4 மடியற பிகருங்களை கடவுள் உனக்காக படைச்சதா நினைச்சுக்கோ.மடியாத பிக்ரை மத்தவங்களுக்காக படைச்சதா நினை


5 நயன் = தம் அடிப்பீங்களா?
சிம்பு.= எனக்கு வேணாம்.நீங்க வேணா அடிங்க

6 நம்ம கிட்டே இருந்து வாந்தியும் நம்மைப்பத்தி வதந்தியும் எப்பவும் வரவே கூடாது # இ ந ஆ


7 சிம்பு டூ சூரி = எவன் எவனோ நடிக்கறான்.நீ நடிச்சா என்ன குத்து

8 லவ் பண்ணப்போறேன்


எத்தனை நாளுக்கு?
பார்ட் டைமா?புல் டைமா?


வாட்?

லைப் டைம் # இ ந ஆ

9 லவ் பண்றது கஷ்டம் இல்லை.கஷ்டம் இல்லைன்னா லவ்வே இல்லை # இ ந ஆ

10 வாழ்றான்யா.1 போனா 1 வருது .1 வந்தா 1 போகுது # இ ந ஆ


11 இம்மீடியட்டா இம்ப்ரெஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறீங்களா?

12 சில குடும்ப குத்து விளக்குங்க புது நெம்பர் வந்தா எடுக்க மாட்டாங்க

13 பொண்ணோட ஜடையை வெச்சே அவ ஜாதகத்தையே சொல்றவன் நான்.எங்கப்பா பொண்ணோட நடையை வெச்சே # இந ஆ


14 இவ தான்னு ஹார்ட்ல ஃபிக்ஸ் பண்ணிட்டா எவ வந்தாலும் கேட்டுக்கு வெளியே தான்


நாங்கெல்லாம் பூட்றதே இல்ல
யார் வேணாலும் வரலாம் போலாம்,ஓப்பன் #இந ஆ--

15 நீங்க அழகா இருக்கீங்கன்னு என் ஃபிரண்ட்ஸ் எல்லாரும் சொல்றாங்க , பட் உங்கள நான் அழகு -னு சொல்ல மாட்டேன்

ஆனா அவங்க சொல்றது accept பண்றேன் #இந ஆ

16 நாம யாருக்காச்சும் கொடுத்தோம்னு தான் இருக்கனும்.
நாம யாரையும் கெடுத்தோம்ன்னு
இருக்க கூடாது.#இந ஆ

17 காம்பினேசன் நல்லா இருக்கும்ன்னு பார்த்தா . இவ

டாமினேசன் அதிகமா இருக்கும் போலயே # இ ந ஆ


18 நீங்க ரொம்ப நல்லவங்க தான் ப்ரதர்.எல்லாரும் 2 ,3 லவ் பண்றாங்க
ஆனா நீங்க எதையும் மறைக்கிறதில்ல
உங்க கட்ஸ் எனக்கு புடிக்கும் # இ ந ஆ

19 டியர், நமக்குக் கல்யாணம் ஆன பிறகு என்னை எங்கே கூட்டி போகப் போற?
பெட்ரூம்க்கு தான்..# இ ந ஆ


20 உன் பக்கத்துல நான் இருந்தா என்ன பண்ணுவ.?அப்படியே கட்டிப்புடிச்சு.....
டேய்,இது யு சர்ட்டிஃபிகேட் படம் ஏ சர்டிஃபிகேட் ஆக்கிடாதீங்கடா # இ ந ஆ


21 என்னப்பா, இவ எஸ் ஜே சூர்யா பட ஹீரோயின் மாதிரி இருக்கா? # இ ந ஆ22 பாத்ததுக்கே ஒரு புல் அடிச்சது போல் இருக்கே?

கல்யாணத்துக்குப்பின் பாரு.பேய் அடிச்சது போல் இருக்கும் # இந ஆ


23 நயன் = எத்தனை பேரைடா லவ் பண்ணுவே?


சிம்பு = முதல்ல நீங்க நிறுத்துங்க # அப்ளாஸ் டயலாக்


24 நானும் எத்தனை நாள் தான் வெர்ஜினாவே சுத்திட்டு இருக்க?# இ.ந ஆ25 டேய்.நானே கடுப்புல இருக்கேன்
அதைக்கொஞ்சம் விடுப்புல அனுப்பு


26 கில்மா பிகருக்கு இவ்ளோ பில்டப்பா? # இந ஆ27 ஏண்டி உன் பக்கத்துல ஏதோ ஸ்வீட் வாய்ஸ் கேட்குதே யாரு?
அடேய்.அது எங்க அம்மா டா
FRONT டை கவர் பண்ணச்சொன்னா பேக்கை கவர் பண்றான் # இ ந ஆ


28 ஓல்டு லேடின்னு நினைச்சேன்.கோல்டு லேடியா இருக்கு # இந ஆ


29 மாப்ளை வெட்கப்படறாரு போல
பார்யா.வந்துட்டாரு ஆர்யா # இந ஆ
30 எப்டியாவது கோல் போடனும்
உணர்ச்சிவசப்படாத.கூல் # இந ஆ


31 நீ இவளை லவ் பண்ண 2 காரணம். 1 உன் பருவம் 2 அவ புருவம்.அவளோட புருவம் உன் முதல் காதலி புருவம் போலவே # இ ந ஆ32 நீ ஏன் விளம்பரத்துக்கு அலையறே?
ஈசியா ரீச் ஆகிடலாம் இல்ல ?# உள் குத்து வசனம்

33 சொன்னா கேளுங்க.எனக்கு நடிப்பு வராது.அதுக்குன்னு நிறையப்பேரு இருக்காங்க

34 ஓசி ல வாழ்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?35 தேடி வர்ற பிகரை விடறதும் தப்பு.
விட்டுட்டுப்போன பிகரை தேடிப்போறதும் தப்பு # இ ந ஆ பென்ச் மார்க் டயலாக்36 ஏன் போன் கட் பன்றே?
என்னை ஹர்ட் பன்ற மாதிரி பேசினா? # இந.ஆ37 என்ன நினைச்சே இப்போ?
நான் என்ன சொல்லனும்னு நினைச்சியோ உன் மனசில அதையே தான் என் மனசில் நினைச்சேன் # இந ஆ


38 இதுக்கெல்லாம் நான் FEEL பண்றதா இருந்தா நான் எப்பவோ செத்திருக்கனும் - சூரி # இந ஆ


39 பொதுவா பசங்க எப்போ பிகரை கழட்டி விடலாம்னு தான் யோசிப்பாங்க # இ ந ஆ40 உனக்கு ஏற்கனவே ஒரு ப்ரியா
அவளுக்கு ஒரு ஆர்யா.அவ்ளோதாண்டா # இந ஆ41 ஆடி மாசம் கோடி பாசம்
புதுசு புதுசா பழமொழியை உருவாக்காதீங்கடா # இந ஆ


42 ஒரு பொண்ணை மட்டும் லவ் பண்ணிட்டோம்னு வை என்ன பொழப்புடா இது ன்னு புலம்ப.விட்டுடுவாளுக # இந ஆ43 என்னை நல்லா வெச்சு பார்த்துக்குவியா?
வெச்சுப்பேன்
டேய் # இந ஆ


44 நம்ம குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?சுருதி ,ஐஸ்வர்யா ,ப்ரியாம்ஹூம் சிம்பு ,பிரபு ,தனுஷ் ,ஆர்யா
அடேய் 2 பேரும் அவங்கவங்க லவ்வர்ஸ் லிஸ்ட்


45 இவ என் கிட்டேதான் இப்டி பண்றாளா? இல்ல எல்லார்ட்டயும் இப்டித்தானா?# இந ஆ


46 பரதேசி கூட வேணா வாழ்ந்துடலாம்.ஆனா பிரைவசி இல்லாம வாழ முடியாது


47 எல்லாரும் என் லவ்வை வெச்சு காமெடி பண்றீங்க.இப்போ நீ சொன்ன மாதிரி நான் சொல்லி இருந்தா எப்டி நீ feel பண்ணுவே ?# இந ஆ

48
டேய்.என் கிட்டே நீ ரொம்ப உண்மையா இருக்கே.நான் அப்டி இல்லையோன்னு FEEL பண்ண வைக்கறே # இந ஆ49 பொண்ணுங்க சாமி மாதிரி.சாமியை கும்பிடத்தான் முடியும்.பின்னே வீட்டுக்கு கூட்டிட்டு வந்து கும்மியா அடிக்க முடியும் ?# இந ஆ


50 வண்டியை தூசு படாம பார்த்துக்கோ


அப்போ ஷோ ரூம்ல தான் வைச்சிருக்கனும் # இந ஆ


51 எல்லாருக்கும் லவ் பண்ற பொண்ணைக்கட்டிக்கும் பாக்யம் கிடைப்பதில்லை # இந ஆ52 சம்பந்தி.உங்க சம்சாரம் தான் நீங்க லவ் பண்ணின முத பொண்ணுனு இப்போதானே சொன்னீங்க?
அது தண்ணி அடிக்கும் முன் சொன்னது #,இந ஆ53 அடேய்.எமன் கைல லெமன் கிடைச்ச மாதிரி உன் கைல பொண்ணு கிடைச்சது # இந ஆ54 கிஸ் அடிக்கறதுல நீ பிஹெச்டி முடிச்சவன் ஆச்சே.உனக்கு எதுக்கு கமல் பட ரெப்ரன்ஸ் ?# இந ஆ55 ஜில்லுனு காத்து
நீ கொஞ்சம் ஜன்னலை சாத்து # இந ஆ56 உன்னைப்பிரிஞ்சு என்னால இருக்கவே முடியாது
எல்லாப்பொண்ணுங்க கிட்டேயும் இதே டயலாக் தாண்டா சொல்றீங்க? # இந ஆ


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பயாலஜி மிஸ் பவித்ரா = DNA ரிப்போர்ட் என்ன சொல்லுது?சினிமா ரசிகன்.=ஊரே INA ரிப்போர்ட் பாசிட்டிவ்னு சொல்லிட்டிருக்கு


2 இது நம்ம ஆளு =137 நிமிடம் # இன்னும் 6 நிமிசம் சேத்துனா 143 ,மேட்ச்க்கு மேட்ச் லவ் சப்ஜெக்ட்

3 குறளரசன் இன்ட்ரோ.அமைதி அடக்கம்.அடடே #,இ ந ஆ

4 சிம்பு டீசன்ட் லுக் நயன் சிம்ப்பிள் கிக் கேக்

5 முடியலையே பாட்டு சீனில் சிம்பு நயன் காஸ்ட்யூம் டிஸைன் பக்கா


6 ஆன்ட்ரியா இன்ட்ரோ அழகு


7 ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்ட போன்லெஸ் ராக்கெட் ஆன்ட்ரியா

8 பாண்டிராஜ் வசனம் எழுத ரொம்பவே மெனக்கெட்டு இருக்கார்.இடைவேளை வரை 70 நிமிடப்படத்தில் 38 ஷார்ப் டயலாக்ஸ் # இ ந ஆ


9 இது நம்ம ஆளு.இடை வேளை வரை ஓக்கே. முக்கோணக்காதல் கதை.போர் அடிக்காமல் சுவராஸ்யமாகப்போகும் திரைக்கதை.ஒன் லைனர்.வசனங்கள்.+

10 அஜித் ரசிகர் படத்தில் விஜய் ரெப்ரன்ஸ் - தெறி ஸ்டெப் போட வெய்ட்டிங்

11 இது நம்ம ஆளு ரொமான்டிக் காமெடி பிலிம்.ஹிட் என தகவல்.சிம்பு & ரசிகர்களுக்கு வாழ்த்து
சபாஷ் டைரக்டர்


1  திரைக்கதைக்கு  அதிகம் மெனக்கெடாமல்   சிம்பு வின் டைரியிலிருந்து சில பக்கங்கள் எடுத்துக்கிட்டது


2  சிம்பு - நயன் 2 பேரையும் எதுனா பேசுங்க என சொல்லி விட்டு அதையே ஷூட் பண்ணி 6 ரீல் எடுத்துக்கொண்டது


3   சிம்பு  நயன் தாரா வுக்கு தாலி கட்டும் சீன் வெச்சு சிம்புவையும்  அவர்  ரசிகர்களையும் விசில் அடிக்க வெச்சது

4  ஷார்ப்பான வசனங்கள் சமீபத்திய ஹிட்ஸ்
1 ஒரு கல் ஒரு கண்ணாடி ( 117)
2 பில்லா-2 ( 28)
3 இதுநம்ம ஆளு (63)லாஜிக் மிஸ்டேக்ஸ்  & திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1   ஆண்ட்ரியா அவ்ளவ் சின்சியரா லவ் பண்ணிட்டு அப்பா சொன்னதும் அசால்ட்டா விட்டு விடுவது நம்பும்படி இல்லை


2 பின் பாதி திரைக்கதையில்  நயன்  சிம்பு சம்பந்தப்பட்ட ஃபோன் உரையாடல்கள்  , எஸ் எம் எஸ்  அனுப்பும் காட்சிகள்   போர் அடிக்குது. இழுவை


3   க்ளைமாக்சில்  நயன் கை மணிக்கட்டில் கட் பண்ணி தற்கொலைக்கு முயல்வதாய் மிரட்டல் விடும் காட்சி அமெச்சூர்த்தனம்.இதெல்லாம் 1980 லயே பார்த்தாச்சு பாஸ்


4 சம்ப்ந்திகள்  இருவரும்  சரக்கு அடித்து விட்டு பேசும் காட்சியில்  பழைய காதல் பற்றி பகிர்வது செயற்கை. அருகில் கிச்சன்  ரூமில் மனைவியை வைத்து பேசுவது நம்ப முடியாதது.  அதை அப்போதே அவுட் செய்வதும் டிட்டோ ரகம். செயற்கை


5  திரைக்கதையில்  போடாபோடி,  சிவா மனசுல சக்தி  சாயல் இருப்பதை தவிர்த்திருக்கலாம்சி.பி கமெண்ட் -இது நம்ம ஆளு - முன் பாதி காதல் காமெடி பின் பாதி கொஞ்சம் ஸ்லோ.வசனம் செம.இசை பக்கா. விகடன் =42 ,ரேட்டிங் = 3/5


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு)= 42


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்)= okMonday, March 02, 2015

உத்தம வில்லன் - அப்டேட்ஸ்

கமல் நடிப்பில் வெளியாக இருக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பார்த்திபனின் நகைச்சுவையான பேச்சு, கே.பியைப் பற்றி கமல் உருக்கம், ஊர்வசியின் எதார்த்தமான பேச்சு என பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.
அவற்றின் சிறு தொகுப்பு இதோ:
* 'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவினை நடிகர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். அப்போது கமல் என்ற மூன்று எழுத்துக்கு என்ன அர்த்தம் என்று தெரிவித்தார். க - கலைகளில், ம-மரணமே, ல் - இல்லாதவன் என்று பார்த்திபன் கூறினார்.
* மறைந்த இயக்குநர் பாலசந்தர் எழுதிய கடிதம் ஒலி வடிவில் திரையில் கமல் - கே.பி படங்களோடு ஒளிபரப்பப்பட்டது. அதன் இறுதியில் 'I'm Proud of you my Son', ’டேய் கமல்.. ரொம்ப பெருமையா இருக்குடா’ என்ற வரிகள் முடியும் போது மேடையில் தோன்றினார் கமல்.
* கே.பாலசந்தரைப் பற்றி கமல் பேசும் போது, அவரின் பேச்சுக்கு இடையே சில மெளனமான தருணங்கள் இடம் பெற்றன. மிகவும் நெகிழ்ச்சியான பேச்சைத் தொடர்ந்து கே.பாலசந்தருக்கு கமல் எழுதிய கவிதை ஒன்று ஒளிபரப்பட்டது. இக்கவிதையை இங்கே வாசித்தால் அழுதுவிடுவேன் என்பதால் திரையில் காணுங்கள் என்று கூறிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார் கமல்.
* கே.பி. சாரின் பாதி தான் கமல் ஆகையால் நான் அவருக்கு செய்ய நினைத்ததை கமலுக்கு செய்கிறேன் என்று கமல் காலில் விழுந்து வணங்கினார் நடிகர் பார்த்திபன்.
* நாசர், தனது மகன் கார் விபத்தின் போது ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்று விளக்கம் அளித்த போது கண் கலங்கியபடி அதைக் கேட்டுக் கொண்டிருந்தார் நடிகை கவுதமி. "கமல் கொடுத்த அறிவுரையின்படி நான் வாட்ஸ்-அப்பில் வந்த எனது மகனின் விபத்து படங்களைப் இன்று வரை பார்க்கவில்லை" என்று நாசர் தெரிவித்தபோது கமல் கையை உயர்த்தி 'சூப்பர்' என்று தெரிவித்தார்.
* இசை நிகழ்ச்சியின் நடுவே அவ்வப்போது கே.பாலசந்தர் 'உத்தம வில்லன்' படத்தைப் பற்றி பேசியது மற்றும் படம் உருவான விதம் ஆகியவற்றை திரையிட்டார்கள்.
* "எனது பாத்திரத்தின் பெயர் மார்க்கதரிசி. யார் எந்த மார்க்கதரிசி என்றால் என்னுடைய உண்மையான பாத்திரம் தான்" என்று கே.பாலசந்தர் தனது வீடியோ உரையில் கூறினார்.
* கமல் நடிப்பில் வெளியான படங்களில் வரவேற்பு பெற்ற பாடல்களுக்கு பார்வதி நாயர் மற்றும் பூர்ணா ஆகியோர் நடனமாடினார்கள்.
* ஊர்வசி, பார்வதி, பூஜா, ஆண்ட்ரியா ஆகியோர் மேடையில் படத்தைப் பற்றி சில தகவல்களை கூறினார்கள். ஆனால், அவர்களை கிண்டல் செய்து சிரிப்பலைகளை அள்ளியது என்னவோ பார்த்திபன் தான்.
* ஊர்வசி பேசும்போது "நான் கர்ப்பமாக இருந்ததை கமலிடம் கூறவில்லை. படப்பிடிப்பிற்கு வந்த 2வது நாளே, 'என்ன கர்ப்பமா?’ என்று கமல் என்னிடம் கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். சில மாதங்கள் கழித்து, நான் டப்பிங் பேசும் போது கூட 3 நாட்களில் சீக்கிரம் முடிந்து விடுங்கள் என்று கூறினார். அவர் கூறியது போல எனக்கு மூன்று நாள் கழித்து பிரசவம் ஏற்பட்டது" என்றார்.
* "கண்மணி அன்போடு காதலன்" என்ற பாடலை மேடையில் பாடினார் பார்வதி மேனன். அவரோடு தனது இருக்கையில் இருந்தவாறே "லாலா லாலா" என்று இணைந்தார் கமல்ஹாசன்.
* பார்த்திபன், நான் ஆண்ட்ரியாவிடம் இசையமைப்பாளரைப் பற்றி கேட்கப் போகிறேன் என்று கூறிய போது அரங்கில் பயங்கர சிரிப்பலை. உடனே நான் இசையமைப்பாளர் ஜிப்ரானை சொன்னேன்பா, இப்படி ஏன் என்னை மாட்டி விடுகிறீர்கள் என்று தப்பித்தார்.
* லிங்குசாமி பேசும்போது, இதுவரை நிறைய படங்களைத் தயாரித்திருக்கிறோம். ஆனால், எங்களது நிறுவனம் லோகோவில் நான்கு பேர் இருப்பார்கள். இந்த விழாவிற்கு முதன் முறையாக எனது பெரியண்ணன், சின்ன அண்ணன் வந்திருக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைக்கிறேன் என்று அழைத்தார். அவர்கள் இருவருமே கமலிடம் போய் அவரும் மேடைக்கு வர வேண்டும் என்று கூற, அவர்களோடு மேடை ஏறினார் கமல்.


* Single Kisske என்ற பாடலை மேடையில் பாடப்பட, திரையில் அப்பாடல் உருவான விதம் திரையிடப்பட்டது, இப்பாடலில் உங்களுக்கு ஆச்சர்யம் காத்திருக்கிறது என்று கூறினார் பார்த்திபன். அந்த ஆச்சர்யம் என்னவென்றால், அப்பாடலில் இடையே வரும் இசைக்கு கமல் ஆடிய நடனம் திரையில் காட்டப்பட்டது. அப்போது ரசிகர்கள் விசில் சத்தம் அரங்கை அதிரவைத்தது.
* இவ்வளவு பெரிய படத்திற்கு நான் இசையமைக்க காரணம் கமல் சார். அவரின் இசை ஞானம் என்னை வியக்க வைத்தது என்று தனது பேச்சில் குறிப்பிட்ட்டார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.
* இளையராஜாவோடு 100 படங்களுக்கும் மேலாக பணியாற்றி இருக்கிறேன். இந்த இசை ஞானம் கூட இல்லாவிட்டால் நான் மடையன் என்று தனது உரையில் ஜிப்ரானுக்கு பதிலளித்தார் கமல்
* பாடல்களைப் பற்றி மதன் கார்க்கி, லிங்குசாமி, ஞான சம்பந்தம், சுப்பு ஆறுமுகம், விவேகா, பார்த்திபன் ஆகியோருடன் கமலும் அமர்ந்து பாடல் வரிகளைப் பற்றி கலந்துரையாடினார்கள்.
* இறுதியாக இசை வெளியீட்டின் போது குறுந்தகட்டை எடுத்து வந்தார்கள். அப்போது கமல், "இந்த தகட்டை இப்போது யார் வாங்குகிறார்கள். இதைச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அனைவருமே இப்போது இணையத்தில் தானே பதிவிறக்கம் செய்கிறார்கள்" என்று கமல் கூறினார்.
* உடனடியாக கமல், மும்பையில் இருக்கும் ஸ்ருதியைத் தொடர்பு கொண்டு FACETIME மூலமாக கமல் வெளியிட ஸ்ருதி பெற்றுக் கொண்டார்.
* "யாருமே மொபையில் ஷுட் செய்தாதீர்கள். உங்களுக்காகவே இணையத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு விட்டோம். உட்கார்ந்து கண்டு களியுங்கள்" என்று ட்ரெய்லர் திரையிடும் முன்பு கூறினார் கமல்ஹாசன்.

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'உத்தம வில்லன்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், பூஜா குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'உத்தம வில்லன்'. ஜிப்ரான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. லிங்குசாமி தயாரித்திருக்கும் இப்படத்தை ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. கமல்ஹாசன் படத்தின் பாடல்களை பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் FACETIME தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றினார்.
அதனைத் தொடர்ந்து கமல் பேசியது:
இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை.
எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன். என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு.
'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன். பார்த்திபன் பேசும் போது, கே.பி.சாரின் பாதிதான் கமல் என்றார். அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன்.
ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள். ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன்.
இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


நன்றி - த  இந்து