ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு மனவியல் மருத்துவர்.நடுத்தரக்குடும்பம்.
மூன்று வருடங்கள் ஆகிறது.நாயகி சினிமா டைரக்சனில் ரொம்ப பிசி.நாயகனை கவனிக்கவே நேரம் இல்லை.பேசுவதற்குக்கூட நேரம் இல்லை.இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட நாயகன் ஒரு நர்சைக்காதலிக்கிறார்.நாயகியி
கோபம் அடைந்த நாயகி நாயகனை ஒரு சேரில் கட்டிப்போட்டு பாத்ரூமில் அடைக்கிறாள்.
அப்போது அவர்கள் வீட்டுக்கு நாயகனின் வக்கீல் ,நாயகியின் அப்பா ,நாயகியின் தயாரிப்பாளர் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக வருகிறார்கள்.அவர்கள் வீட்டுக்குத்திருடனும் வருகிறான்.நாயகனின் காதலியும் வருகிறாள்.இவர்கள் அனைவரையும் நாயகி எப்படி சமாளிக்கிறாள் என்பதே மீதித்திரைக்கதை.
நாயகி ஆக லாவண்யா திரிபாதி கோனிடேலா நடித்திருக்கிறார்.இயக்குநர் ஆக அவர் செய்யும் பில்டப்கள் ஓக்கே.நாயகனைக்கட்டிப்போட்ட பின்பு தான் நாயகிக்கு நடிக்க ஸ்கோப் கிடைக்கிறது.
நாயகன் ஆக தேவ் மோகன் நடித்திருக்கிறார்.பரவாயில்லை ரகம்.
நாயகனின் வக்கீல் ஆக விடிவி கணேஷ் காமெடி செய்கிறார்.சிரிக்கலாம்.
நாயகனின் காதலி ஆக மடோனா செபாஸ்டின் அழகாக வந்து போகிறார்.ஆனால் நடிக்க வாய்ப்பு இல்லை.மற்ற கேரக்டர்கள் பேசும்போது வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்.
நரேஷ், சப்தகிரி,ஜாபர்,ஜபர்தஸ்த் என மற்ற சின்னச்சின்னக்கேரக்டர்கள் நடிப்பு ஓக்கே ரகம்.
இசை மிக்கி ஐ மேயர் இசையில் பாடல்கள் சுமார் ரகம்,பின்னணி இசை பரவாயில்லை ரகம் ,ஒளிப்பதிவு ,வசனம் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம்.
படத்தின் ரன்னிங்க் டைம் 130 நிமிடங்கள்.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர். தாதினேனி சத்யா
சபாஷ் டைரக்டர்
1 தயாரிப்பாளர் மொட்டை ராஜேந்திரன் நாயகியைக்கடத்திப்போகும் காமெடி டிராக் உள்ளத்தை அள்ளித்தா படத்தை நினைவுபடுத்தினாலும் சிரிக்க வைக்கிறது.
2 மொட்டை ராஜேந்திரனின் கேரக்டர் டிசைன்படி அவரிடம் எந்தக்கேள்வியைக்கேட்டாலும் 5 நொடிகள் கழித்துத்தான் பதில் சொல்வார்.இதை வைத்து அமைக்கப்பட்ட காமெடி டிராக் அருமை.
3 வி டி வி கணேஷ் காமெடி டிராக் சிரிக்க வைக்கிறது
4 நாயகியின் முறை மாப்பிள்ளை செய்யும் அச்சுப்பிச்சுக்காமெடி பரவாயில்லை ரகம்
5 திருடன் திடீர் என நுழைந்து வீட்டில் செய்யும் அலப்பறைகள் அருமை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகன் ,நாயகி இருவர் தரப்பிலும் எந்த நியாயமும் இல்லை. அதனால் எனோஷனல் கனெக்ட். இல்லை.
2 நாயகனின் காதலி கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை.ஏனோ தானோ என வந்து போகிறார்.
3 இரண்டு மணி நேரம் ஓடும் அளவிற்குக்கதையில் கண்ட்டெண்ட் இல்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -13+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சுமாரான காமெடி ,மொட்டை ராஜேந்திரன் ,விடிவி கணேஷ் காமெடி ரசிகர்கள் பார்க்கலாம்.ரேட்டிங்க் 2/5
