புஷ்பா தெலுங்குப்படம் என்ற புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதை இது.50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம் 4 கோடி வசூல் செய்திருக்கிறது.27/5/2026 முதல் கேரளாவில் திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் தமிழ் டப்பிங்கில் காணிக்கை
ஸ்பாய்லர் அலெர்ட்
ஒரு கிராமத்தில் யானைகளின் வருகை அதீத தொந்தரவாக மக்களுக்கு இருக்கிறது.கிராமத்து மக்களை யானையின் பிடியில் இருந்து காப்பாற்றுகிறேன் என ஆபத்பாந்தவனாய் வருகிறான் வில்லன்.
வில்லன் ஒரு கடத்தல் காரன்.கானகத்தில் இருக்கும் யானைகளைக்கொன்று யானைத்தந்தத்தை இலங்கைக்கு சட்ட விரோதமாகக்கடத்துபவர். தன்னை எதிர்ப்பவர்களையும் ,கூட இருந்தே லாபத்தில் அதிக பங்கு கேட்பவர்களையும் கொலை செய்து வருபவர்
வில்லனுக்குக்கீழ் 40 வேட்டையாளர்கள் வேலை செய்கிறார்கள்.அவர்களை வில்லன் அடிமையாக ,மரியாதை இல்லாமல் நடத்துவதால் அந்த நாற்பதில் சிலர் வில்லனை வீழ்த்தத் தக்க தருணம் பார்த்துக்காத்திருக்கின்றனர்.
வில்லன் கேங்கிற்கு எதிராக இன்னொரு கேங்க் செயல்படுகிறது.இரு கேங்க் ஆட்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பவர்கள்.
இப்போது தான் நாயகன் எண்ட் ரி.இப்போது வில்லன் நாயகனின் உதவியுடன் கடத்தல் தொழிலைத்தொடர்கிறான்.வில்லனின் எதிர் கேங் வில்லனை வீழ்த்த நாயகனிடம் உதவி கேட்க இதற்குப்பின் நிகழும் திருப்பங்கள் தான் மீதித்திரைக்கதை.
வில்லன் ஆக காமெடி நடிகர் சுனில் கொடூரமான குணம் கொண்டவர் ஆக நடித்திருக்கிறார்.ஜெயிலர் உள்பட பல படஙகளில் இவரைக்காமெடியன் ஆகவே பார்த்து நம் மைண்ட் செட் ஆகி விட்டது.
நாயகன் ஆக அங்கமாலி டைரீஸ் புகழ் ஆண்ட்டனி வர்கிஸ் நடிப்பு கன கச்சிதம். புஷ்பா படத்தின் வில்லனும் இவர் தான்.உடல் மொழி,பார்வை இவருக்கு நன்றாக செட் ஆகி இருக்கிறது
தமிழ் நடிகையான துஷாரா விஜயன் மலையாளத்தில் நடித்திருக்கும் முதல் படம் இது.ஓக்கே ரகம்
நாயகன்,நாயகி,வில்லன் போக சித்திக் ,சந்தீப்,கபீர்சிங்க், ஆன்சன் பால் எனப்பலரும் படத்தில் வந்து போகிறார்கள்.ஜெகதீஷ் கவனிக்க வைக்கும் நடிப்பு.
கே ஜி எப் புகழ் ரவி பஸ்ரூர் இசையில் 6 பாடல்கள்,எதுவும் தேறவில்லை.பின்னணி இசையும் எடுபடவில்லை.காது வலி வேற
ஒளிப்பதிவு ரினாதேவ்.ரன்னிங் டைம் 120 நிமிடங்கள்.
உன்னி ஆர் தான் வசனம்.சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை.
ஜோபி வர்கீஸ்,ஜெரோ ஜேக்கப் ஆகியோருடன் இணைந்து திரைக்கதை எழுதி தனியாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் பால்ராஜ்.
சபாஷ் டைரக்டர்
1 ஆரம்பத்தில் வரும் யானைகளின் அணி வகுப்பு பிரம்மாண்டம்
2 சிங்கிள் ஷாட்டாகக்காட்டப்படும் ஒரு காட்சி பேட்ச் ஒர்க் தான் என்றாலும் ரசிக்க வைக்கிறது.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆக்சன் சீக்வன்சிற்கு அளித்த முக்கியத்துவத்தை எமோஷனல் பாண்ட் சீன்களில் தரவில்லை.அதனால் திரைக்கதை பின் பாதியில் மிக பலவீனம்
2 நாயகன் ,வில்லன் ,இன்னொரு கேங் என மூன்று தரப்பினருமே கெட்டவர்கள் என்பதால் யார் ஜெயித்தால் நமக்கு என்ன?என்ற சலிப்பு தான் ஏற்படுகிறது.நாயகன் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமே நமக்குத்தோன்றவில்லை.இது பெரிய பின்னடைவு.
3 படத்தில் புதிய காட்சிகள் ,புதிய ஐடியா என எதுவுமே இல்லை.எல்லாம் பார்த்துப்பார்த்து சலித்த பழைய காட்சிகள் தான்
4 பின்னணி இசையில் புதுமை இல்லை.பழைய ட்ராக் தான்.
5 இயக்குநர் லோகேஸ் கனகராஜின் கேமியோ ரோல் எடுபடவில்லை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - போஸ்டர் டிசைன்,டிரெய்லர் நன்றாக இருந்த அளவுக்குபடம் இல்லை.அட்டைப்படம் நல்லாருக்கு,புத்தகத்தில் கண்ட்டெண்ட் இல்லை மொமெண்ட்.ரேட்டிங் 2/5
| Kattalan | |
|---|---|
Theatrical Release Poster | |
| Directed by | Paul George |
| Written by | Paul George Joby Varghese Jero Jacob |
| Dialogues by | Unni R. |
| Produced by | Shareef Muhammed |
| Starring | Antony Varghese Sunil Jagadish Kabir Duhan Singh Dushara Vijayan Anson Paul Hanan Shah |
| Cinematography | Renadive Additional Cinematography: Chandru Selvaraj Sudeep Elamon |
| Music by | Songs: B. Ajaneesh Loknath Ravi Basrur Nihal Sadiq Score: Ravi Basrur |
Production company | Cubes Entertainments |
| Distributed by | Cubes Entertainments (India) Phars Films (Overseas) |
Release date |
|
Running time | 120 minutes [1] |
| Country | India |
| Language | Malayalam |
| Budget | ₹50 crore[2] |
| Box office | ₹3.91 crore |
