Showing posts with label அறிவான்(2026)-தமிழ்-க்ரைம் திரில்லர் -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அறிவான்(2026)-தமிழ்-க்ரைம் திரில்லர் -சினிமா விமர்சனம். Show all posts

Friday, May 22, 2026

அறிவான்(2026)-தமிழ்-க்ரைம் திரில்லர் -சினிமா விமர்சனம் @YOU TUBE


 7/11/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் மீண்டும் 20/2/2026      அன்று ரிலீஸ் ஆனது.இப்போது யூ ட்யூப் தளத்தில் காணக்கிடைக்கிறது. 


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகன் நேர்மையான போலீஸ் ஆபீசர்.என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்ட்.அடிக்கடி ட்ரான்ஸ்பர் ஆகிறவர்.இப்போது நெய்வேலி க்கு ட்ரான்ஸ்பர் ஆகி வந்திருக்கிறார்.


நாயகி ஒரு யூ ட்யூப் சேனல் நடத்துகிறார்.அதன் மூலம் ஏதாவது கேஸ் டீல் செய்து ஹிட்ஸ் அடிக்க வேண்டும் என நினைக்கிறார்.


நாயகி நாயகனுக்கு அத்தை பெண் தான்.நாயகியின் அப்பா  ரிட்டையர்டு போலீஸ்.


நாயகன் நெய்வேலிக்கு வந்த இரண்டு நாட்களில் விபத்தா?கொலையா?என சந்தேகிக்க வைக்கும் ஒரு ஆணின் மரணம் நடக்கிறது.

அதை நாயகன் விசாரிக்கும்போது அதே ஏரியாவில் இன்னொரு கொலை நடக்கிறது.இதுவும் ஆண் தான்.

இந்த இரு கொலைகளையும் விசாரிக்கும் நாயகன் இந்தக்கொலைகளோடு தொடர்புடைய ஒரு பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் விசாரித்துக்கொண்டிருக்கும்போது  ஆன் த ஸ்பாட். கொலை காரன் அந்தப்பெண்ணைக்கொலை செய்து விடுகிறான்.பின் தப்பி விடுகிறான்.

நாயகன் அந்தக்கொலைகாரனை எப்படிக்கண்டு பிடித்தான்?கொலைகளுக்கான காரணம் என்ன?என்பது மீதித்திரைக்கதை.

நாயகன் ஆக ஆனந்த் நாக் உடல் மொழி ,ஜிம் பாடி என ஆள் பிட்டாக (Fit)இருக்கிறார்.ஆனால் மீசை இல்லாத நாயகன் கமக் கெட்டப்பில் இருப்பதால்  போலீஸ்க்கான கம்பீரம் மிஸ்சிங்க்.


நாயகி ஆக ஜனனி குணசீலன் குடும்பப்பாங்கான அழகு.கச்சிதமான நடிப்பு.

இவர்களுடன்  பிர்லா போஸ் ,பாய்ஸ் ராஜன் ,குருமூர்த்தி ,கவுரி சங்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.


கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் எஸ் அருண் பிரசாத்.

ஒளிப்பதிவு ,எடிட்டிங் ,இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்



சபாஷ்  டைரக்டர்

1 பர பரப்பான ,விறுவிறுப்பான கடைசி 30 நிமிடக்காட்சிகள் அருமை.

2 ட்ரோன் ஷாட்களில் ஒளிப்பதிவாளரின் திறமை பளிச்சிடுகிறது.

3 பிளாஸ்பேக் சீனில் அக்கா,தம்பி கதை ,அப்பா செய்யும் கொடுமைகள் எதிர் பாராத திருப்பம்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி யூ ட்யூப் சேனல் நடத்துபவர் என சொல்கிறார்கள்,ஆனால் க்ரைம் ஸ்பாட்டுக்கு மீடியாக்கள் உடன் எப்படி வந்தார் ?எனத்தெரியவில்லை.

2 க்ளைமாக்சில் கொலைகாரன் நாயகியைக்கொல்ல முயல்வது ,கான்ஸ்டபிளைக்கொல்வது தேவையே இல்லை.சும்மா பரபரப்பான காட்சிக்காக அதை செய்திருக்கிறார்கள்

3 கொலையாளிக்கான பிளாஸ்பேக் கதை மனதைத்தொட்டாலும் காட்சிப்படுத்திய விதம் ,நடிகர்கள் பங்களிப்பு நாடகம் பார்ப்பது போல் இருக்கிறது


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  சராசரி க்ரைம் திரில்லர் தான் ,ஆனால் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் நல்ல படமாக வந்திருக்கும்.ரேட்டிங் 2/5