Monday, January 08, 2024

சபாநாயகன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா)


  அசோக்  செல்வன்  கேரியரில்  முதல்  பிளாக்  பஸ்டர்  படம்  போர்  தொழில்  என்றாலும்  முதல்   சோலோ  ஹீரோ கமர்ஷியல் ஹிட்   ஃபிலிம்  என  சபாநாயகன்  படத்தை  சொல்லலாம், ஆல்ரெடி  செம  ஹிட்  ஆன  ஆட்டோ  கிராஃப் , அட்ட  கத்தி , 96 ,  ஆகிய  தமிழ்ப்படங்கள் ,  பிரேமம் , ஹ்ருதயம் , ஜூன்  ஆகிய  மலையாளப்படங்கள்  சாயலில்  வந்திருக்கும்  ஒரு  ரொமாண்டிக்  காமெடி  டிராமா  இது .


 எல்லோர்  வாழ்க்கையிலும்  பள்ளி , கல்லூரி  வாழ்க்கை  இருக்கும் என்பதால்  பள்ளிக்காதல் , கல்லூரிக்காதல்  வாழ்க்கையைப்படம்  பிடிப்பதில்  இயக்குநர்கள்  ஆர்வம்  காட்டுகிறார்கள் ., இயக்குநர்  சி எஸ்  கார்த்திகேயன்  ஒரு  கலகலப்பான  காதல்  கதையை  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் உடன்  தந்து  வெற்றி  பெற்று  இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நண்பர்களுடன்  சரக்கு  அடித்துக்கொண்டிருக்கும்போது   நள்ளிரவில்  நடு  ரோட்டில்  போலீஸ்  கைது  செய்கிறது. அவரை  ஜிப்பில்  ஏற்றி  போலீஸ்  ஸ்டேஷன்  கொண்டு  போகும்போது  அவர்  தன்  முன்னாள் காதல்  கதைகளை  அவிழ்த்து  விடுகிறார்


நாயகன்  +2  படிக்கும்போது  ஒரு  பெண்  மீது  காதல்  வசப்படுகிறான். ஆனால்  ஒரு  முறை  கூட  அவளிடம் பேசவும்  இல்லை . காதலை  சொல்லவும்  இல்லை .  வெறும்  லாங்க்  ஷாட்  பார்வைகளிலேயே  முதல்  44  நிமிடங்கள்  பள்ளி  வாழ்க்கைக்காதல்  போகிறது 


 பள்ளி  வாழ்க்கை  முடிந்ததும்  கல்லூரி  வாழ்க்கை  .காலேஜ்  படிக்கும்போது  வகுப்புத்தோழி  ஒருத்தியைக்காதலிக்கிறான். அவளும்  காதலிக்கிறாள் . இருவரும்  அடிக்கடி  சந்திக்க  தகவல்  பரிமாற  ஒரு  காதல்  தூத்வனை  ரெடி  செய்கிறான்  நாயகன். ஆனால்  கடைசியில்   தூதுவனே  காதலின்  எமன்  ஆகிறான். காலேஜ்  லவ்  ஸ்டோரி  எபிசோட் 30  நிமிடங்கள்


காலேஜ்  காதல்  அல்வா  கொடுத்த  பின்  நாயகன்  தன்  முன்னாள்  முதல்  ஸ்கூல்  கிரஷ்  ஷை  சந்திக்கிறான்.  தன்  காதலை  அவன்  வெளிப்படுத்திய  போது  ஸ்கூலில்  படிக்கும்போதே  சொல்லி  இருக்கலாமே? முதலில்  வருபவருக்கே  முன்னுரிமை  எனக்கு  ஆல்ரெடி  ஒரு பாய்  ஃபிரண்ட்  இருக்கிறான்  என  சொல்லி  விடுகிறாள் . இதற்குப்பின்  நாயகன்  எப்படி  தன்  ஸ்கூல்  கிரஷை  அடைகிறான்  என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன் ஆக  அசோக்  செல்வன்  டான்ஸ் , காமெடி , காதல்  என  கலந்து  கட்டி  கலக்கி  இருக்கிறார். ஆனால்  ஸ்கூல்  ஸ்டூடண்ட்  ஆக  அவரே  தனுஷ்  போல  மீசையை  எடுத்து  விட்டு  நடித்ததெல்ல்லாம்  ஓவரோ  ஓவர் . ஆனால்  அந்த  கேரக்டருக்காக  உடலை  இளைக்க  வைத்து  மெனக்கெட்டு  இருக்கிறார். அவருக்கும்  கஷ்டம், பார்க்கும்  நமக்கும்  கஷ்டம் 


ஸ்கூல்  கிரஷ்  ஆக  கார்த்திகா  முரளி  தரன்  முன்  பாதியில்  அவருக்கு  டயலாக்சே  இல்லை . சும்மா  தலைக்குக்குளித்து  லூஸ்  ஹேரை  அப்படி  இப்படி  ஒதுக்கினால்  போதும்  என  இயக்குநர்  சொல்லி  விட்டார்  போல .  ஆள்  நல்ல  ஹைட் . ஒல்லி  கில்லி  ஆக  மனம்  கவர்கிறார்.


 காலேஜ்  காதலி  ஆக   சாந்தினி  சவுத்ரி  குட் .  முக  பாவனைகளில் ஆங்காங்கே  ஜோதிகாத்தனம்  எட்டிப்பார்க்கிறது. ஓவர்  ஆக்டிங்கை  குறைத்திருக்கலாம்


கதைக்குள்  கதையாக  வரும்   வாலி  ஜோதிகா  டைப்  காதலி  ஆக  மேகா  ஆகாஷ்  போர்ஷன்  ரசிக்க  வைக்கிறது . 


போலீஸ்  கான்ஸ்டபிள்ஸ்  ஆக  வரும்  மயில் சாமி ,  உடுமலை ரவி  இருவர்  கொடுக்கும்  ரீ  ஆக்சன்கள்  சிரிப்புப்பட்டாசு 


இன்ஸ்பெக்டர்  ஆக  வரும்  மைக்கேல்  தங்கதுரை   கேரக்டரில்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   இருக்கிறது .


நாயகனின்  அக்காவாக  வரும்   விவியாசந்த்  மற்ற  மூன்று  நாயகிகளை  விட  க்யூட்டாக  இருக்கிறார். நடிப்பும்  குட் ., நண்பர்  ஆக  வரும்  அருண்  குமார்  நடிப்பும்  கல கல 


லியோன்  ஜேம்சின்  இசையில்  மூன்று  பாடல்கள்  ஹிட்  ஆகி  இருக்கின்றன. பிஜிஎம்மும் கொண்டாட்டமாக  இருக்கிறது . 


மூன்று  வெவ்வேறு  கால  கட்ட  கதைகளுக்கு  ஏற்ப  மூன்று  ஒளிப்பதிவாளர்கள் .  அனைவருமே  திறம்பட   கேமராவைக்கையாண்டு  இருக்கிறார்கள் . மூன்று  நாயகிகள் , நாயகனின்  அக்கா  என  நான்கு  பெண் கதா  பாத்திரங்களின்  க்ளோசப்  ஷாட்களும்  அழகு  . 


கணேஷ்  சிவாவின்  எடிட்டிங்கில்  ரெண்டரை  மணி  நேரம்  டைம்  ட்யூரெஷனில்  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார். அளவு  எடுத்தது  போல  ஸ்கூல்  லைஃப்  லவ் , காலேஜ்  லைஃப்  லவ்  தலா  30  நிமிடங்கள் , கதைக்குள்  காதல்  கதைக்கு  30  நிமிடங்கள்  என  ஒதுக்கி பேலன்ஸ்  பண்ணி  இருப்பது  சிறப்பு 


திரைக்கதை  எழுதி  இயக்கி இருப்பவர் சி எஸ்  கார்த்திகேயன்.


சபாஷ்  டைரக்டர் (சி எஸ்  கார்த்திகேயன்)

1  மூன்று  நாயகிகள்  மற்றும்  நாயகியின்  அக்கா  என  நான்கு  பெண் கதாபாத்திரங்களுக்கு  ஆடை  வடிவமைப்பு  அழகு  + கண்ணியம் 

2  நாயகன்  குள்ள  அப்பு  கமல்  கெட்டப்பில்  வரும்  சோக  சீன்  கலகலப்பு 

3  சச்சின்  200  ரன்  அடித்தால்  லவ்க்கு ஓக்கே  என  தோழி  சொன்னதும்   பரபரப்பாக  நகரும்  காட்சிகள்  அபாரம் 

4    நண்பன்  டாக்டர்  என  பொய்  சொல்லி  சமாளிப்பதும் , நண்பனின்  தோழி  அதை  ஃபாலோ  செய்து  காதலிக்க  முயல்வதும்  செம  எண்ட்டர்ட்டெய்ன்மெண்ட் 

5  மேகா  ஆகாஷ்  ஸ்லீவ்லெஸ்  டிரசில்  இருக்கும்போது  அதை  ரசித்து  விட்டு  அதே சமயம்  அங்கே  நண்பர்கள்  வர  இருக்கிறார்கள்  என்பதை  அறிந்து  கோட்  கொடுத்து  குளிரும், இதை  போட்டுக்கோ  என்பதும்  இது  எல்லாம்  என்  மீது  இருக்கும் காதலால்  தானே  என  கேட்கும்  காட்சிகள்  காதல்  ரசம்  சொட்டும்  காட்சிகள் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1   பேபிமா 

2  சீமக்காரியே

3  சிக்கிக்கிட்டா 


  ரசித்த  வசனங்கள் 


1    ஏட்டய்யா , நான்  ஒரு   காலேஜ்  ஸ்டூடண்ட்

அப்டீங்களா? இப்போ  என்ன  சல்யூட் அடிக்கனுமா?

2   இந்த  பாட்டிலில்  இருக்கும்  சரக்கு  முக்கியமான  எவிடென்ஸ். டேஸ்ட்  பண்ணனும், சாரி ,  டெஸ்ட்  பண்ணனும்,

3  படிக்கக்காலேஜ்  வந்தாலு,ம்  கத்துக்கறது  காதல்  தானே ?

4   மச்சி , அதோ  அவளை  நீ  எடுத்துக்கோ , இவளை  நான்  எடுத்துக்கறேன்

எடுக்கும்போது  யாராவது  தட்டி  விட்டுட்டா? 

5   இப்போதாண்டா  தெரியுது , கூட  ஆடுனவங்க  எல்லாம்  க்ரூப்  டான்ஸர்ஸ்  இல்லை . ஒவ்வொருத்தனும்  மனசுக்குள்ளே  ஹீரோவா  கற்பனை  பண்ணி  இருக்கானுங்க 

6   இந்தப்பழம்  புளிக்கும்னு  சொல்லும்  முன்னால்  நாலஞ்சு  தடவையாவது  ட்ரை  பண்ணிப்பார்த்திருக்கனுமில்லை?

7   ஏண்டா  எதுக்குடா  ஹேண்ட்ஸ்  அப் போஸ்ல வெளில  வர்றே? அவரு  என்ன  கைல  துப்பாக்கியா  வெச்சிருக்காரு ?

8  அய்யோ  ஹய்யோ இந்தப்பொண்ணுங்களை  எல்லாம்  பார்க்கும்போது யார்  டீச்சர் ? யார் ஸ்டூடண்ட்ஸ்னே  தெரியலையே? 

9   டேய் , பாட்டு  எல்லாம்  வேண்டாம், ஸ்ட்ரைட்டா  கதைக்கு  வா 

10   எக்ஸ்க்யூஸ்  மீ . லீக்  ஆகுது 

என்னது ?  ஓ  பியூரெட்டா?

11   நீங்க  மிஸ்டர்  அர்விந்த்  தானே?

ஆமா ,   எப்படித்தெரியும்?

உங்க  புகழ்  தான்  டிபார்ட்மெண்ட்  பூரா  “ லீக்  “  ஆகி  இருக்கே? 

12  பார்க்கறாங்கனு  தெரிஞ்சும்  போஸ்  கொடுத்து  நின்னுட்டு   கோவிச்சுட்டுப்போற  மாதிரி  இந்தப்பொண்ணுங்க  பண்ற   அலம்பல்  இருக்கே? 

13   நான்  ஐ டி... அவ  வேற  சப்ஜெக்ட்

அதனால  என்ன ? வீட்டுக்கு  ஒரு  ஆள்  ஐ டி  ல  இருந்தா  போதும் 

14   ஏன்  காமெடி  பண்றீங்க ?

நானா?  காமெடியா?  எப்போ ?


15   லவ்  பண்ணி   ஏமாத்தறவன்  மாதிரி  அலைய  விட  மாட்டேன்

 அப்படி  ஒரு  எண்ணம்  வேற  இருக்கா ?

 ஏமாத்தும்  எண்ணம்  இல்லை , ஆனா  லவ்  பண்ணும்  எண்ணம்  இருக்கு 


16 லவ்  பண்றதுக்கு  முன்னாடி  யோசிக்கனும், லவ்  பண்ணிட்டா  அப்றம்  யோசிக்கக்கூடாது 


17   நீ  அடிச்சதும்  அவன்  அவ்ளோ  தூரமாவா  தள்ளி  விழுந்தான் ?


கதை  சொல்லும்போது  10  கிமீ  தள்ளி  விழுந்தமாதிரி  சொன்னாதான்  எஃபக்ட்  ஆக  இருக்கும் 


18 காதலிக்கறவனை விட  தூது  போகிறவன்  தான்  அதிகம்  லவ்  பன்றான் 


19   ஃபர்ஸ்ட்   யார் டேட்  போட்டாங்கனு  முக்கியம்  இல்லை ,  யார்  சோல்  மேட்  ஆனாங்க  அதான்  முக்கியம் 


20   அவன்  டாக்டரா?  என்  கூட  +2  படிச்சப்ப  கம்ப்யூட்டர்  சயின்ஸ்  தானே  படிச்சான் ?


 அப்றம்  இம்ப்ரூவ்மெண்ட் ல  எம் பி பிஎஸ்  படிச்சு  டாக்டர்  ஆகிட்டான் 


21   அவளைப்பார்றா , என்  கிட்டேயே  வந்து  நீ  ஊதாரி , வெத்து  வேட்டுனு  உன்னைப்பற்ற்ய  உண்மைகளை  எல்லாம் சொல்றா


22   டேய் , நீ  ரொம்ப  நாளா  டாக்டர்  ஆகனும்னு  ஆசைப்பட்டியே? அதான்  அவ கிட்டே  சொல்லும்போது    உன்னை  டாக்டர்  ஆக்கிட்டேன் 


23   உன்  கிட்டே  பேசும்போது  அவ  உதட்டைக்கடிக்கறாளா?


  எங்கே? இப்போதான்  கையைப்பிடிக்கற  அளவு  வந்திருக்கோம், அவ  எங்கே  என்  உதட்டைக்கடிக்கறா?


 அடேய் . அவ  உன்  கிட்டேப்பேசும்போது  அவ  உதட்டைக்கடிக்கறாளா?னு  கேட்டேன்


24  அவளைப்பாருடா , சாஃப்ட்  ஆன  மான்  புல்  சாப்பிடற  மாதிரி  இருக்கா . நீ  புலி  மாதிரி  இருக்கே 


25  பொண்ணுங்க  இல்லாத  லைஃப்  எவ்ளோ  ஸ்மூத்தா  போகுது  பாரு 


26  வேஸ்ட்டிங்  டைம்  ஈஸ்  எ  க்ரைம் 


27   ஃபிரண்ட்ஷிப்க்காக  ஃபிகரைக்கழட்டி  விட்ட  முதல்  ஆள்  நீ  தான் 


  ஒரு  நிமிசம்  இரு , அவ  கால்  பண்றா


28    எங்கடா  பசங்க  ஃபிகருங்களை  விட்டு  வைக்கறானுக , எல்  கே ஜி ல  அப்ளை  பண்ணாக்கூட  ஆர்  ஏ சி  (  ரிசர்வேசன்  எகெய்ன்ஸ்ட்  கேன்சலேசன் )  தான்  கிடைக்குது 


29   நம்ம  தகுதிக்கு  மீறுனதோ  இது ?

 நம்மைதான்  யாருமே  பார்க்கலையேடா 


30  நீ  ஒவ்வொரு  டைம்  லவ்  ஃபெய்லியர் ஆகறப்ப உனக்கு  ஏற்படும்  சேதம்  எங்களைத்தாக்குது 


31  ஃபிரண்ட்னா  யார்  தெரியுமா? தன்  கூட  இருக்கறவன்  தப்பான  டெசிஷன்  எடுக்கறான்னா  அவன்  செஞ்சது  தப்புனு  சொல்லனும்


32   வாழ்வது  ஒரு  டைம், இஷ்டப்பட்டவளோட  வாழாம  கஷ்டப்படுவது  ஏன் ? 


33  நீ  உண்மையா  ஒரு  பொருள்  மேல  அல்லது  ஒரு  ஆள்  மேல  இஷ்டப்பட்டா  இந்த  உலகமே  உனக்கு  உறுதுணையா  நிற்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   காலேஜ்  காதலி  நாயகனைக்காதலிப்பதாக  விஷூவலாகக்காட்டுகிறார்கள் . ஆனால்  தூது  போனவனை  காதலிப்பதாக  வசனமாகத்தான்  வருகிறது . அது  விஷூவலாக  இல்லை . மேலும்  என்ன  காரணத்தால்  நாயகனை  விட்டு  அந்த  தகர  டப்பா  தாடிக்காரனை  லவ்  பண்றா  என்ற  காரணமும்  சொல்லப்படவில்லை . நம்பகத்தன்மை  இல்லை 


2    ஸ்கூல்  கிரஷ்க்கு  நாயகன்  முகம்  ஞாபகமே  இல்லை  என்பதும்  நம்ப  முடியவில்லை 


3  ஸ்கூல்  கிரஷ்க்கு  ஆல்ரெடி  ஒரு  ஆள் இருக்கிறான்  என்பதும்  வசனமாகத்தான்  வருகிறது , விஷூவலாகக்காட்சி  வைக்கவில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   டீன்  ஏஜ்  இளைஞர்கள் , இளைஞிகள்  அவசியம்  பார்க்கலாம், ஆளே  கிடைக்காத  முரட்டு  சிங்கிள்கள்  தவிர்க்கவும்,  ரேட்டிங்  3 / 5 


Saba Nayagan
Theatrical release poster
Directed byC. S. Karthikeyan
Written byC. S. Karthikeyan
Produced byAravind Jayabalan
Iyyappan Gnanavel
Captain Megavanan Isaivanan
StarringAshok Selvan
Megha Akash
Karthika Muralidharan
Chandini Chowdary
CinematographyBalasubramaniem
Dinesh Purushothaman
Prabhu Rhagav
Edited byGanesh Siva
Music byLeon James
Production
companies
Clear Water Films INC.
I Cinema
Captain Mega Entertainment
Distributed byClear Water Films INC.
Captain Mega Entertainment
Release date
22 December 2023
CountryIndia
LanguageTamil

0 comments: