Monday, January 15, 2024

curry & cyanide: the jolly joseph case (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா டாகுமெண்ட்ரி ) @ நெட் ஃபிளிக்ஸ்

 


கேரளா - கோழிக்கோடு  மாவட்டம்  - கூடத்தாய்  கிராமம்  ஜோலி  ஜோசப்   என்பவர்  தனது கணவர்  மாமனார் , மாமியார்  உட்பட  ஆறு  பேரைக்கொலை  செய்த  விஷயம்  பல  வருடங்களுக்குப்பின்  தான்  போலீசால்  கண்டுபிடிக்கப்பட்டது . அந்த  உண்மை  சம்பவம்  பற்றிய  கிரைம்  டாக்குமெண்டிரி  டிராமா  தான்  இந்தப்படம். 


கேரளா  போலீஸ்  வரலாற்றிலேயே  முதன்  முறையாக  ஆறு  சடலங்கள்  ஒரே  நேரத்தில்  தோண்டி  எடுக்கப்பட்டது இதுவே  முதல்  முறை 


ஸ்பாய்லர்  அலெர்ட்

1995-1996  காலகட்டத்தில் ஜோலி  ஜோசஃப்  என்ற  பெண்ணுக்கும்  ரோய்  தாமஸ்  என்பவருக்கும்  கடிதம்  மூலமாகப்பழக்கம்  ஏற்படுகிறது . இருவரும்  உறவினர்கள்  தான். நட்பு  பின்னர்  காதலாக  மாறுகிறது. இதில் ஜோலி  ஜோசஃப்   குடும்பம்  சாதாரண  விவசாயக்குடும்பம். அதிக  வசதி  இல்லை . ஆனால்  ரோய்  தாமஸ்  குடும்பம்  பாரம்பரியம்  மிக்க  குடும்பம், சொந்த  வீடு , நிலம்  என  சொத்துக்கள்  உண்டு 


ரோய்  தாமஸ்க்கு  ஒரு  சகோதரியும்  , ஒரு  சகோதரனும்  உண்டு . இவரின்  அம்மா, அப்பா  இருவருமே  நன்கு  படித்து  அரசுப்பணியில்  இருந்து  ரிட்டையர்  ஆனவர்கள் . அந்த  ஊரில்  இவர்க்ள்  குடும்பத்துக்கு நல்ல  மரியாதை  உண்டு 

1997 ல்  திருமணம்  நடக்கிறது . இதில்  ரோய்  தாம்சின்  அம்மா, அப்பாவிற்குப்பெரிய  அளவில்  விருப்பம் இல்லை . 


ஜோலி  ஜோசஃப் காலேஜ்  முதல்  வருசம் கூட  முடிக்காதவர் , ஆனால்  அனைவரிடமும்  தான்  எம் காம்  முடித்த  போஸ்ட்  கிராஜூவேட்  என  பொய்  சொல்லி  பில்டப்  கொடுத்திருக்கிறார்


நல்லாப்படிச்சிருக்கே, பேசாம  வேலைக்குப்போலாம்  இல்ல? கவுரமா  இருக்கும்  என  மாமியார்  சொல்லி  இருக்கிறார். ஆனால்  ஜோலி  ஜோசஃப்க்கு  அதில்  இஷ்டம்  இல்லை 


1999 ல்  பிரமோத் (ரெமோ) என்ற  ஆண்  குழந்தை , 2008 ல்  ரெனோல்டு (ஒச்சு) என்ற  ஆண்  குழந்தை  இந்த  தம்பதிக்குப்பிறந்தன


2002ல்  ஜோலி  ஜோசஃபின்  மாமியார்  அன்னம்மா  வலிப்பு  வந்து  மரணம் . மாமியார்  தொடர்ந்து  வேலைக்குப்போக  வற்புறுத்தியதால்  ஜோலி  ஜோசஃப்  விஷம்  வைத்து  கொன்று  விடுகிறார் .  18  வருடங்கள்  கழித்து  2020ல்  தான்  அது  கொலை  என  தெரிய  வந்தது 


என்  ஐ  டி  யில்  கெஸ்ட் லெக்சரர்  ஆக  வேலை  கிடைத்ததாக  ஜோலி  ஜோசஃப்  சொல்லி  இருக்கிறார். சம்பளம்  ரூ 40,000   எனவும்  சொல்லி  இருக்கிறார்.


 ஆனால்  உண்மை  அல்ல . தினமும்  காலை  ரெடி  ஆகி  வெளியே  போவது . மாலை  வீடு  திரும்புவது  என  டகால்டி  வேலை  செய்திருக்கிறார்


2005ல் ஜோலிசோடஃபின் கணவரின்  தங்கைக்கு  திருமணம்  ஆகி  வெளி  நாடு  சென்று  விட்டார்


ஜோலி  ஜோசஃபின்  சொந்தக்காரப்பையன்  மேத்யூ  என்பவன்  நகைக்கடையில்  வேலை  பார்ப்பவன்  , அவனுக்கும்  ஜோலி  ஜோசfக்க்ம்  பழக்கம்  ஏற்பட்டது , அவன்  ஏன்  அடிக்கடி  நம் வீட்டுக்கு  வருகிறான்? என  தம்பதிக்குள்  அடிக்கடி  சண்டை 

2008  ல்  மாமனார்  மறைவு, ஹார்ட்  அட்டாக்  என்று  சொல்லப்பட்டது . ஆனால்  மருமகளின்  நடவடிக்கை  சரி  இல்லை  என  அவளைக்கேள்வி  கேடடதால்  தன்  இமேஜைக்காப்பாற்றிக்கொள்ள  போட்டுத்தள்ளி  விட்டதாகக்கூறப்படுகிறது 


பிறகு  கணவர்  குடிப்பழக்கத்துக்கு  அடிமை  ஆகி  விட்டார்  சரியாக  தொழிலில்  கவனம்  செலுத்தவில்லை  என  ஜோலி  ஜோசஃப்  தரப்பில்  கூறப்படுகிறது 

2011 ல்  கணவர்  மரணம். சாப்பாட்டில்  விஷம்  கலக்கப்பட்டு  கொலை .ஆனால் தொழிலில்  ஏற்பட்ட  நட்டம் காரணமாக  பலரிடம்  கடன்  வாங்கி  இருந்ததால்   ச்யனைடு  சாப்பிட்டு  தற்கொலை  செய்து  கொண்டார்  என  சொல்லப்பட்டது


சயனைடு  சாப்பிடதால்  மரணம்  என்றாலே அது  முதலில்  கொலை  என்ற  கோணத்தில்  தான்  பார்க்கப்பட  வேண்டும் , ஆனால்  போலீஸ்  அந்த  கோணத்தில்  ஏன்  ஆராயவில்லை  என்பது  தெரியவில்லை 


சயனைடு  அவ்வளவு  எளிதில்  கிடைக்காது . லைசென்ஸ்  வாங்க  வேண்டும், தங்க  நகை  செய்பவர்கள்  மெட்டலைக்கிளீன்  செய்ய  சயனைடு  யூஸ்  செய்வார்கள் . நகைக்கடையில்  வேலை  செய்த     மேத்யூ  அதை  ரெடி  செய்து  இருக்கலாம்


 ஜோலி   ஜோசஃபின்  கணவர்  இறந்த  போது  போஸ்ட் மார்ட்டம்  பண்ண  வேண்டும்  என்பதில் உறுதியாக  இருந்தவர்  மேத்யூ வின்  அப்பா . அவர்  அடிக்கடி  சொந்தக்காரர்  என்ற  முறையில்  ஜோலி  ஜோசஃப்  வீட்டுக்கு  வந்து  போய்க்கொண்டு  இருந்தார் 


2011 ல் மேத்யூ வின்  அப்பா அதாவது  ஜோலி ஜோசஃபின்  தாய் மாமா  இறந்தார் 


சாஜூ  சச் ரியா  என்பவரை  இரண்டாம்  கல்யாணம்  செய்து  கொள்ள  நினைத்தார் அவருக்கு  ஆல்ரெடி  இரண்டு  குழந்தைகள் 

2014 ல்  2  வயதே  ஆன  சாஜூவின்  குழந்தை  கொல்லப்பட்டார் 

2016 ல்  கடைசிக்கொலையாக  சாஜூ  சச் ரியா   வின்  மனைவி  கொல்லப்பட்டார். குழ்ந்தை  இறந்து  போனதால்   மன  அழுத்தத்தில் இருந்த  அவரை  ஜோலி  ஜோசஃப்  என்  மாமனார் சாப்பிட்ட மஸ்ரூம்  டேப்லெட்  சாப்பிட்டால்  மெண்ட்டல் டிப்ரஷன்  குறையும்  எனக்கூறி  சில  டேப்லெட்ஸ்  தருகிறார்.


2017ல்  திட்டமிட்டபடி சாஜூ  சச் ரியா   வை ஜோலி  ஜோசஃப்   இரண்டாவது  மணம்  செய்து  கொண்டார் 


2018ல்  தன்  கணவருக்கு , மாமனார் , மாமியாருக்கு  சொந்தமான  வீட்டை  ஆட்டையைப்போட  நடவடிக்கை  எடுக்கிறார்  ஜோலி  ஜோசஃப். போலியான  ஆவணங்களை  தயார்  செய்கிறார்


 ஜோலி  ஜோசப்பின்  முதல்  கணவர்  ராய்  தாமசின்  சகோதரி  தான்  போலீசில்  புகார்  கொடுத்து  அனைத்து  உண்மைகளையும்  வெளிக்கொணர்ந்தார் 


இப்படம்  முழுக்க  முழுக்க  சகோதரியின்  பார்வையில்  சொல்லப்படுகிறது .


  கேஸ்  இன்னும்  நடந்து  கொண்டிருக்கிறது . குற்றவாளி  ஆன  ஜோலி  தாமஸ்  மற்றும்  சயனைடு  சப்ளை  செய்த  மேத்யூ , அவர்  நண்பர்  மூவரும்  கைது  செய்யப்பட்டு  சிறையில்  இருக்கிறார்கள் 


ஸ்ருதி  சுகுமாறன் , ப்ரவீன்  பிரபாகர்  இருவரும்  எடிட்  செய்து  இருக்கிறார்கள் . கச்சிதமாக  90  நிமிடங்களில்  ஷார்ப்  ஆக  ட்ரிம்  செய்து  இருக்கிறார்கள் . வழ வழா  கொள  கொளா  காட்சிகள்  ஏதும்  இல்லை 

ஷாலினி உஷா  தேவி  தான்  திரைக்கதை  அமைத்திருக்கிறார்


கிறிஸ்டோ  டோமி  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர் (கிறிஸ்டோ  டோமி ) 


1   நிஜ  சம்பவங்களின்  க்ளிப்பிங்க்ஸ் , சம்பந்தப்பட்ட  இடம், ஃபோட்டோக்கள்  சரியாக  , முறைப்படி  வரிசையாகக்காட்டி , சித்தரிப்புக்காட்சிகளை  கச்சிதமாக  அட்டாச்  செய்த  விதம்  குட் 


2  போலீஸ்  தரப்பு  வாக்கு  மூலம், பத்திரிக்கையாளர்  கருத்து , பக்கத்து  வீட்டுக்காரர்  பேட்டி ,   ஜோலி  ஜோசஃபின்  முதல்  க்ணவரின்  சகோதரி     வாக்குமூலம்  எல்லாவற்றையும்  சுவராஸ்யமாக  தொகுத்த  விதம் குட் 


ரசித்த  வசனங்கள் 


1  இரண்டு  கொலைகளுக்கு  மேல்  செய்பவர்களை  சீரியல்  கில்லர்கள்  என்று  சொல்வார்கள் 


2  சீரியல்  கில்லர்கள்  செய்யும்  கொலைகளில்  ஒரு  சிக்னேச்சர் , அல்லது  ஒரே  மாதிரி  பேட்டர்ன்  இருப்பதைப்பார்க்க  முடியும் 


3   இரண்டு  கொலைகளுக்கு  இடையே ஆன  கால  வித்தியாசம்  அதிகம்  ஆக  இருந்ததால் குற்றவாளி  மீது  எங்களுக்கு  சந்தேக,ம்  வரவில்லை 


4  எவ்வள்வு  பெரிய  குற்றவாளியா  இருந்தாலும்  , எத்தனை  திறமையா  செயல்பட்டு  இருந்தாலும்  ஏதோ ஒரு  சறுக்கலில் அவன்  மாட்டிக்குவான்


5  இறந்தவங்களுக்காக  குரல்  கொடுக்க  யாராவது  இருக்கனும் 


6  எனக்கு  ஒரு  கிரிமினல் குணம்  இருக்கு , ஆனா  எனக்கு  எதையும்  மறைக்கத்தெரியாது


7  எல்லா  பாவங்களையும்  ஏசு  மன்னிக்கும்போது  நான்  செய்த  இந்த  த்வறுகளையும்  மன்னிக்க  மாட்டாரா? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் , சில  சந்தேகங்கள் 


1 ஜோலி  ஜோசஃப்  சயனைடு  வாங்க  மட்டும்  நகைக்கடையில்  வேலை  செய்த  சொந்தக்காரப்பையனான  மேத்யூவை  உபயோகித்துக்கொண்டாரா? அல்லது  அவன்  கள்ளக்காதலனாகவும் இருந்தானா?   ஏன்  இந்த  சந்தேகம்  எனில் சகோதரியின்  வாக்கு  மூலத்தில்  ராய்  தாமஸ் க்கு  மேத்யூ -  ஜோலி  ஜோசஃப்  பழக்கத்தில்  டவுட்  இருந்தது  என்கிறார். ஜோலி  ஜோசஃப்  பார்வையில்  என்ன  நடந்தது ? என்ற  தெளிவான  விளக்கம்  இல்லை 


2   முதல்  கணவரின்  கசின்  பிரதரைத்தான் இரண்டாம்  திருமணம்  செய்ய  திட்டம்  போடுகிறார்  ஜோலி  ஜோசஃப். அதற்குத்தடையாக  இருக்கும்  முதல்  கணவரின்  கசின்  பிரதரின்  மனைவியை  மட்டும்  கொன்றால்  போதுமே?  குழந்தையை  ஏன்  கொல்ல  வேண்டும் ?  மனைவிக்கு  வைத்த  விஷ  உணவை  தவறுதகலாக  மனைவி  சாப்பிட்டு  விட்டாரா? 


3  ஒவ்வொரு மரணமும்  நடந்ததும்  ஹாஸ்பிடல்  போய்  இருக்கிறார்கள் . டாக்டருக்கு  சந்தேகம் வரவில்லையா? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  ஒரு  பரபரப்பான   க்ரைம் டிராமா. அவசியம்  பார்க்கலாம் ,  ரேட்டிங்  3 / 5 


Curry & Cyanide: The Jolly Joseph Case
Poster of Curry and Cyanide
Directed byChristo Tomy
Screenplay byShalini Ushadevi
Produced byIndia Today Originals
Edited bySruthy Sukumaran
Praveen Prabhakar
Release date
  • 22 December 2023 (India)
CountryIndia
LanguageMalayalam

0 comments: