Saturday, January 20, 2024

விக்கிரமாதித்தன் (1962) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ யூ ட்யூப்

 


மாலை  முரசு  நாளிதழில்  காதல்  மன்னன்  விக்கிரமாதித்தன்  என்ற  தொடர்  தினத்தந்தி  சிந்து பாத்  படக்கதை  போல  தொடர்  கதையாய்ப்படித்த  நினைவு  உண்டு . அதில்  இருந்து  ஒரு  சின்ன  போர்சனை  மட்டும்  படம்  ஆக்கி  இருக்கிறார்கள் 


1957 ல்  தொடங்கிய  படம்  என்றாலும்  ஐந்து  வருடங்கள்  கழித்துத்தான்  படம்  முடிந்து  ரிலீஸ்  ஆனது. ஒரே  ஒரு  சண்டைக்காட்சி  வாஹினி ஸ்டூடியோவில்  மூன்று  நாட்கள்  படமாக்கப்பட்டது  அப்போது  பரபரப்பாகப்பேசப்பட்டது 


1962 ஆம்  ஆண்டு  இந்தியா  - சீனா  போர்  நடந்துன் கொண்டிருந்த  பதட்டமான  சூழ்நிலையில்  தீபாவளி  ரிலீஸ்  ஆக  மூன்று  படங்கள்  வெளி  வந்தன.  எம் ஜி ஆரின் விக்கிரமாதித்தன் , சிவாஜியின்  பந்த  பாசம் , எஸ்  எஸ்  ஆர்  இன்  முத்து  மண்டபம்  என  மூன்று  படங்களுமே  ரசிகர்களின்  ஆதரவைப்பெற்றது .இந்த  சமயத்தில்  இந்தியப்பிரதமர்  நேரு  போர் நிவாரணம்  வழங்க  பொது  மக்களுக்கு  வேண்டு கோள்  விடுத்தபோது  எம் ஜி ஆர்  அந்தக்கால  மதிப்பில்  ரூ 75,000  வழங்கியதாகவும், அதன்  இன்றைய  மதிப்பு  பல  கோடிக்கு  சமம்  என்றும்  தகவல் 


நாட்டிய பேரொளி  பத்மினி -  ராகினி  இருவரின்  போட்டி  நடனம்  அந்தக்காலத்தில்  பரபரப்பாகப்பேசப்பட்டது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


உஜ்ஜயினிப்பேரரசின்  சக்கரவர்த்தி  விக்கிரமாதித்தன்  தான்  நாயகன். காடாறு  மாதம், நாடாறு  மாதம்  வசிக்க  வேண்டும்  என்று ஒரு  சாபம்  அவருக்கு  உண்டு . அதனால்  சக்கரவர்த்தியாக  ஆறு  மாதங்கள்  நாட்டை  ஆண்டு  விட்டு  மாறு  வேடங்களில்  சாதா  ஆளாக காடுகளில்  சுற்றித்திரிந்து  வாழ்வதை  வழக்கமாக்கிக்கொண்டிருந்தார்


நாயகன்  மாறு  வேடத்தில்  சித்தன்  ஆக  சுற்றும்போது  நாயகி  ஆன அமர  நாட்டு  இளவரசி  ரத்தின  மாலைக்கும்,  இளவரசி வைர  மாலைக்கும்  நடனப்போட்டி  நடக்கிறது . அந்தப்போட்டியில்  யார்  சிறந்த  நடனம்  ஆடுகிறார்கள்  என  சரியாகச்சொல்பவர்களுக்கு  அரசின்  பரிசு  உண்டு .


நாயகன்  ஒரு  தந்திரத்தை  உபயோகித்து  சிறந்த  நடன  தாரகை  யார்  என்பதை  அறிவிக்கிறார். உடனே  மன்னர்  உனக்கு  என்ன  வேண்டுமானாலும்  கேள் , பரிசாகத்தருகிறேன்  என  சொல்ல   நாயகன்  நாயகியையே  பரிசாகக்கேட்கிறார். இதனால்  அதிர்ச்சி  அடைந்த  மன்னர்  வேறு  வழி  இல்லாமல்  நாயகனுக்கு  மணம்  முடித்து  வைக்கிறார். நாயகன்  தான்  இந்த  நாட்டின்  சக்கரவர்த்தி  என  அறியாமல்  மன்னர்  தன்  மகளின்  பாதுகாப்புக்காக  இருவரை  கூடவே  அனுப்புகிறார்


 நாயகி  வயது  வந்த  காலத்தில்  இருந்தே  மணந்தால்  சக்கரவர்த்தி  விக்ரமாதித்தனையே  மணக்க  வேண்டும்  என்று  ஆவல்  கொண்டவள் , இப்போது  வேறு  வழி  இல்லாமல்  சித்தனை  கணவன்  ஆக  ஏற்றுக்கொள்கிறாள் . பின் ஒரு  நாளில்  சித்தன்  தான்  தன்  ஆசைக்காதலன்  விக்கிரமாதித்தன்  என்பதை  உணர்ந்து  மகிழ்கிறாள் 


தொடர்ந்து  இருவரும்  காடுகளில்  பயணிக்கும்போது   மதுரபுரி  மன்னர்  ஆன  வில்லன்  அவனது  எதிரிகளிடம்  மாட்டிக்கொண்டிருக்கும்போது  நாயகன்  வில்லனைக்காப்பாற்றுகிறான். நாயகனின்  வீரத்தில்  மகிழ்ந்த  வில்லன் நாயகன்  தான்  சக்கரவர்த்தி  என்பதை  அறியாமல்  தன்  ராஜ்ஜியத்தில்  தனக்குக்கீழ்  தளபதி  ஆக  பணியாற்ற  உத்தரவு    இடுகிறான், அதன் படி  நாயகன்  சேனாபதி  ஆகிறார்


 வில்லனுக்கு  நாயகன்  மனைவி  அழகு  பற்றி  தெரிய  வருகிறது ., அதனால்  அவளை  அடைய  நைசாக  நாயகனுக்கு  ஒரு  வேலை  கொடுத்து  வெளியூர்  அனுப்பி  விட்டு  நாயகியைக்கடத்தி  வருகிறான்


இதற்குப்பின்  நிகழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர்  அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார். மன்னர்  வேடம்  எப்போதும்  இவருக்கு  நன்கு  பொருத்தம். வாள்  சண்டை  இவரது  பிளஸ்  பாயிண்ட் . அந்தக்காலத்தில்  அட்டைக்கத்தி  வீரர்  என்ற  அடைமொழியில்  இவரைக்கிண்டல்  செய்தவர்கள் பலர் 


நாயகி  ஆக  பத்மினி  சிறப்பான  நடிப்பு, பிரமாதமான  நடனம். 


வில்லன்  ஆக  பி எஸ்  வீரப்பா ,  நாயகனை  விட  கட்டுமஸ்தான  உடம்புடன்  பார்ப்பவர்களை  வசீகரிக்கும்  சிரிப்புடன்  கலக்கி  இருப்பார் 


காமெடியன்  ஆக   கே  ஏ  தங்கவேலு  படம்  முழுக்க  வருகிறார். இவர்  அடிக்கடி  பேசும் ஒரு  பஞ்ச்  டயலாக்  இதில்  ரொம்பப்பிரசித்தம் 


162  நிமிடங்கள்  படம் ஓடும்படி  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர் கள்  ஜம்புலிங்கம்  அண்ட்  முருகேஷ்


எஸ்  ராஜேஸ்வரராவ்  இசையில்  மொத்தம்  10  பாடல்கள் . பாடல்களை  எழுதியவர்கள்  மருத  காசி , பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம், கண்ணதாசன்ம் ஆத்மநாதன் , புரட்சிதாசன் உட்பட  பலர் 


ஆர்  சம்பத் , ராஜாமணி  இருவரின்  ஒளிப்பதிவில்  நடனக்காட்சிகளும் , வாள் சண்டைகளும்   அருமையாகப்படம்  ஆக்கப்பட்டு  இருக்கின்றன 


திரைக்கதை  அமைத்தவர்  என்  தங்கை  புகழ்  நடராஜன்


இயக்கம்  டி ஆர்  ரகுநாத் ,  என்  எஸ்  ராமதாஸ் 
சபாஷ்  டைரக்டர்


1  பொழுதுபோக்கு  அம்சங்கள்  உடன்  கமர்சியல்  ஆக  படம் போர்  அடிக்காமல்  பாட்டு , டான்ஸ் , ஃபைட்  என  ஜாலியாகப்போகும்படி  இயக்கியது 


2    பத்மினி , ராகினி நடனப்போட்டியைப்படம்  ஆக்கிய  விதம் 


3  காமெடி  ட்ராக்கை  தனியாக  அமைக்காமல்  நாயகன்  கூடவே  காமெடியன்  படம்  முழுக்க  வருமாறு  செய்த  விதம் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  போட்டி  நடனம் - நிலையான  கலை  வாழ்கவே


2  ஹனிமூன்  சாங்  - மங்கிலி மங்கா   ஜிங்கிலி ஜிங்கா 


3  டூயட்  சாங்  -  வண்ணம்  பாடுதே


4  கன்னிப்பெண்ணின்  ரோஜா  தங்கம்  கண்ட  ராஜா 

5  தீர்மானம்  சரியாக  ஆடாவிட்டால்  


6   சொக்கும்  மொழியாலே  சுழலும்  விழியாலே  உலகில்  சிக்காத 

  ரசித்த  வசனங்கள் 


1  பதவி  ஆசை  மனிதனை  என்ன  வேண்டுமானாலும்  செய்யச்சொல்லும்


2  அரச குமாரியாக  இருந்தாலும், ஆண்டவன்  குமாரியாக  இருந்தாலும்  நான் உங்கள்  மனைவி 


3   பட்டா  சுந்தரி  கும்மா , எங்கேடி  உங்கம்மா 


4    மன்னா , ஆண்டவன்  போயும்  போயும்  உங்களுக்கெல்லாம்  உதவி  செய்கிறானே?


 வில்லன் =  ஆண்டவன்  எனக்கு  மட்டும்  தான்  உதவி  செய்வான்


5  உத்தமன்  ஒருவன்  பிறந்து  விட்டால்  அவனை  நினைத்து  நித்தமும்  பெண்கள் அடைய  நினைப்பார்கள் 


6  பத்தரை  மாற்றுத்தங்கமே , உத்தமரை  நீ  மணப்பாய்


7  நான்  இந்த  வீட்டுக்கணக்குப்பொண்ணு 


 அப்போ  மச்சான், நீ  அவளைக்கணக்கு  பண்ணு 


 யோவ், கணக்கு  எழுதும்  பெண்


8  அய்யய்யோ இதுவரை  எந்த  ஆடவனும் என்னைத்தொட்டதில்லை 


 காமெடியன் , ஆடவனா?ஆடறவனா?


9  அக்கிரமத்தை  எந்த  உருவத்திலும்  நடமாட  விடமாட்டான்  இந்த விக்கிரமாதித்தன்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  வீட்டில்  இருக்கும்போது  விக்கல்  எடுக்கிறது , நாயகியிடம்  தண்ணீர்  கேட்கிறார். வீட்டில்  ஒரு  சொம்பு  தண்ணீர்  கூட  இருக்காதா? வெளில  போய்  ஓடையில்  இருந்து  தண்ணீர்  முகண்டு  கொண்டு  வருகிறார்  நாயகி 


2  நாட்டின்  மன்னராக  இருந்தாலும்  சரி , கட்சியின்  தலைவராக  இருந்தாலும்  சரி , அடுத்தவங்க சம்சாரத்தை  ஆட்டையைப்போடவே  திட்டம்  போடுவது  ஏன் ? கன்னிபெண்களுக்கா  நாட்டில்  பஞ்சம் ?


3  ஒரு  சிற்றரசரின்  இளவரசியை  ஒரு  டுபாக்கூர்  சாமியார்  உடன்  அனுப்பும்போது  கூட  துணைக்கு  ஒரு  தோழி  கூட  இல்லாமல்  தனியாகவா  அனுப்புவார்கள் ? 


4  மரத்தால்  செய்யபப்ட்ட  டூப்ளிகெட்  பழங்களுக்கு  நடுவே  ஒரிஜினல்  பழத்தைக்கண்டு  பிடித்து  சாப்பிடவேண்டும், இதுதான்  போட்டி . போட்டி  நடத்துபவர்  லூஸ்  மாதிரி  கிளி  வளர்த்துவாராம்,அந்தக்கிளி  பழத்தைக்கொத்தப்போகும்போது  நாயகன்  அசால்ட்டா  அதை  எடுத்து  சாப்பிடுவாராம், பழத்தின்  வாசத்தை  வைத்து  அவராக  கண்டு  பிடித்தால்  தானே  அது  கெத்து ? 


5   எம் ஜி  ஆரை  சின்னவர் , வாத்தியார்  என  அழைப்பது  வழக்கமாக  இருக்கலாம், ஆனா  சக்கரவர்த்தி  கேரக்டரில்  நடிப்பவரை  அந்தகக்தையில்  வரும்  கேரக்டர்  மன்னா  என  அழைக்காமல்  வாத்தியாரே  என  அழைப்பது  பொருத்தமாக  இல்லையே? 


6  சில  இடங்களில் ஒரு  ஒட்டு  மீசை  வைத்த  மாறு  வேடம் , பல  இடங்களில்  நிஜத்தோற்றத்திலேயே  நாட்டின்  சக்கரவர்த்தி  உலா  வருகிறார், யாருக்குமே  அடையாளம்  தெரியவில்லை . ஒருவருமே  அவர்  உருவத்தைக்கண்டார்  இல்லயா?


7  சொந்த  சம்சாரத்துக்கு  தாலி  கட்டின  புருசனை அ டையாளம்  தெரியாதா? ஒட்டுத்தாடி  வைத்திருந்தாலும்  உயரம், உடல்  வாசனை  காட்டிக்கொடுக்காதா?

8  வில்லன்  ஒரு  பொம்பளைப்பொறுக்கி , நாயகனின்  மனைவியையே  அடைய  நினைத்தவன், அவனுக்குப்போய்  தான் காப்பாற்றிய  பெண்னை  மணமுடித்து  வைத்து  அப்பெண்ணின்  வாழ்க்கையையே  வீணாக்கி  விட்டாரே  நாயகன் ?


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   எம் ஜி ஆர்  ரசிகர்கள் ,  பத்மினி  ரசிகர்கள் , கமர்ஷியல்  ஃபிலிம்  ஆர்வலர்கள்  பார்க்கலாம் , ரேட்டிங் 2.5 / 5 


Vikramaadhithan
Theatrical release poster
Directed byT. R. Raghunath
N. S. Ramadas
Screenplay by'En Thangai' Natarajan
Produced byM. A. Ethirajulu Naidu
S. V. Namasivayam
StarringM. G. Ramachandran
Padmini
Sriranjini
CinematographyR. Sampath
V. Rajamani
Edited byC. P. Jambulingam
S. Murugesh
Music byS. Rajeswara Rao
Production
company
Jaya Bharat Productions
Release date
  • 27 October 1962
Running time
162 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: