Tuesday, January 30, 2024

கண்ணகி (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

   


 டைட்டிலைப்பார்த்ததும்  மதுரையை  எரித்த கற்புக்கரசியின்  கதையோ  என  பயந்து  ஓடி  விட  வேண்டாம் . நம்  மனதுக்கு  நெருக்கமான  இரண்டு  அழகிய  காதல்  கதைகள் , திருஷ்டிப்பொட்டு  வைத்த  மாதிரி  சுமாரான  இரு  கதைகளின்  தொகுப்பு  தான்  இந்தப்படம் .நான்கு  தனித்தனி  கதைகளை  அடுத்தடுத்த  காட்சிகளாக  கலந்து  கட்டி  எந்த  வித  குழப்பமும்  இல்லாமல்  திரைக்கதை  அமைத்தது  அபாரம் . 2023  டிசம்பர்  15  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம் இப்போது  அமேசான்   பிரைம்  ஓடிடியில்  ரிலீஸ்  ஆகி  உள்ளது

ஸ்பாய்லர்  அலெர்ட்


 தர  வரிசைப்படி  நான்கு  கதைகளையும்  வரிசைப்படுத்திப்பார்ப்போம் 


சிறுகதை  1 -  நாயகிக்கு  திருமணம்  ஆகி  விட்டது . ஆனால் கணவன் ஆண்மை  இல்லாதவன். அவன்  மேல்  உள்ள  தவறை  மறைக்க  நாயகி  மீது  பழி  போட்டு  டைவர்ஸ்  கேட்கிறான். நாயகி  எக்காரணம்  கொண்டும்  டைவர்ஸ்  தர  மாட்டேன்  என  அடம்  பிடிக்கிறாள் . நாயகியின்  சார்பாக  வாதாட  வரும்  வக்கீல்  ஒரு  கட்டத்தில்  நாயகியை  விரும்புகிறான்.  நாயகிக்கும்  வக்கீலைப்பிடித்திருக்கிறது . இதனால்  கணவனுக்கு  டைவர்ஸ்  கொடுத்து  விடுகிறாள் . ஆனால்  வக்கீலுக்கு  ஒரு  தங்கை  இருக்கிறாள் . இதனால்  என்ன  பிரச்சனை  ஏற்படுகிறது? இருவரும்  இணைந்தார்களா? இல்லையா?  என்பது  க்ளைமாக்ஸ் 


நாயகி  ஆக  வித்யா  பிரதீப்  அழகாக  நடித்திருக்கிறார். பெயருக்கு  ஏற்றாற்போல  அவருக்கு  ஸ்ரீவித்யா  போல் அகன்ற  கண்கள் . வக்கீலாக  வெற்றி  நடித்திருக்கிறார். சிறப்பு 

ஒரு  விவாக  ரத்து  ஆன  பெண்ணை  இந்த  சமூகம்  எப்படிப்பார்க்கிறது  என்று  சொன்ன  விதத்தில்  இது  நான்கில்  முதலிடம்  பெறுகிறது 


சிறுகதை  2  - நாயகியின்  அம்மா , அப்பா  நாயகிக்கு  வரன்  பார்க்கிறார்கள் , வரும்  வரன்கள்  எல்லாரையும்   நாயகியின்  அம்மா  எதோ  காரணம்  சொல்லி  தட்டிக்கழிக்கிறாள் . புருசனை  மதிப்பதே  இல்லை . மனம்  வெறுத்த  புருசன் ஒரு  கட்டத்தில்  இறந்தே  விடுகிறான்


பிறகு  ஒரு  பெரிய  இடத்தில்  மாப்பிள்ளை  அமைகிறது , ஆனால்  அவன்  ஒரு  பொம்பளைப்பொறுக்கி. நாயகியின்  தாய்  மாமன்  மகன்  கூட நாயகியைப்பெண்  கேட்டு  வருகிறார் இறுதியில்  நாயகியின்  அம்மா  எடுத்த  முடிவு  என்ன ? என்பதுதான்  க்ளைமாக்ஸ் \


 மொத்தம்  உள்ள  நான்கு கதைகளில்  இந்தக்கதைக்குதான் இயக்குநர்  அதிக  முக்கியத்துவம்  கொடுத்திருக்கிறார். அதிக  காட்சிகளும்  இதற்கே .


 பல  விமர்சனங்கள்  இக்கதையைப்பாராட்டி  வந்தாலும்  ஒரு  சாதா  கதையை  ஜவ்வாக  இழுத்து  விட்டார்கள்  என்பதுதான்  என்  கருத்து 


 நாயகியாக  அம்மு  அபிராமி  பாங்குடன்  நடித்திருக்கிறார்/. நாயகியின்  அம்மாவாக  மவுனிகா  அனைவர்  வெறுப்பையும்  சம்பாதிக்கும்படியும், அப்பாவாக  மயில் சாமி  அனைவர்  மனதையும்  கவரும்படியும்  நடித்திருக்கிறார்


  சிறுகதை  3

நாயகன்  வாய்ப்புத்தேடும்  ஒரு  புதுமுக  இயக்குநர். ஒருவர்  தன்  காதலியுடன்  லிவ்விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்ந்து  வருகிறார். எதிர்பாராத  விதமாக  நாயகி  கர்ப்பம்,  நான்கு  மாதமாக  கவனிக்காமல்  விட்டு  விடுகிறார்கள் , கருவைக்கலைத்தே  ஆக  வேண்டும்  என  கங்கணம்  கட்டி  அலைகிறார்கள் , பல  டாக்டர்கள்  கை  விரித்த  நிலையில்  அவர்கள்  என்ன  முடிவு  எடுத்தார்கள்  என்பது  க்ளைமாக்ஸ் 


 இக்கதையின்  ஒரே பிளஸ்  நாயகியாக  நடித்த  கீர்த்தி  பாண்டியன் முக  அழகு  மட்டுமே 

சிறுகதை  4 

நாயகி  பாரதியாருக்கே  ஹார்ட்  அட்டாக்  வர  வைக்கும்  புதுமைப்பெண். தண்ணி  அடிப்பது  , கஞ்சா  அடிப்பது  என  எல்லாம்  உண்டு .பாய்  ஃபிரண்டுடன் லிவ் விங்  டுகெதர்  வாழ்க்கை  வாழ்கிறார்.  எல்லாவற்றுக்கும்  ஓக்கே  சொல்லும்  இவர்  மேரேஜ்க்கு  மட்டும் ஓக்கே  சொல்லவில்லை . ஆனால்  நாயகன்  தொடர்ந்து  மேரேஜூக்கு  வற்புறுத்த   கடைசி  வரை  நாயகி  சம்மதிக்கவே இல்லை . 


 புரட்சிகரமான  இந்தக்கேவலமான  கதையில்  நாயகியாக  நடித்த ஷாலின் சோயா  நடிப்பு  மிரட்டல்  ரகம் 


ஷான்  ரஹ்மான்  இசையில் இரண்டு  பாடல்கள்  சுமார்  ரகம்,  பிஜிஎம்  குட்  ராம்ஜியின்  ஒளிப்பதிவில்  ஐந்து  நாயகிகளையும்  க்ளோசப்  ஷாட்  , லாங்க்  ஷாட்களில்  அழகாகப்பார்க்க  முடிகிறது 


 கே சரத்குமாரின்  எடிட்டிங்கில்  காட்சிகள்  குழப்பம்  தராமல்  நகர்வதே  பாராட்டு  பெறுகிறது . 157  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  யஷ்வந்த் கிஷோர் 




சபாஷ்  டைரக்டர்


1  தற்கொலைக்கு  முயன்ற  பாட்டி  தன்  பேத்தியிடம்  அதற்கான  காரணத்தைக்கூறுவது  அட்டகாசம். மெயின்  கதைக்கும் சம்பந்தம்  இல்லையென்றாலும்  அருமையான  தாட்  பிராசஸ் 


2    வக்கீல்  -  டைவர்ஸ்  கேட்டு  வரும் பெண்  கதையில்  இருவருக்குமான  காம்போ  காட்சிகள்  ரொமாண்டிக்


3 மயில்சாமி ,அம்மு  அபிராமி , வித்யா  பிரதீப் ,  மவுனிகா , கீர்த்தி  பாண்டியன்  நடிப்பு  அருமை


  ரசித்த  வசனங்கள் 


1  நீங்க  தான்  என்னைப்பார்க்கும்  முதல்  மாப்பிள்ளை 


 நீங்க  தான்  நான்  பார்க்கும்  கடைசிப்பொண்ணு


2  லவ்  மேரேஜ்  பிடிக்குமா? அரேஞ்ஜ்டு   மேரேஜ்  பிடிக்குமா? 


 அய்ய்யே, ரெண்டுமே  சுத்தமாப்பிடிக்காது , டீக்குடிக்க  யாராவது  டீக்க்டையையே  வாங்குவாங்களா? 


3   ஒரு  பூ  உனக்குப்பிடிச்சிருக்குன்னா  அந்த  பூச்செடி  இருக்கும்  இடத்துக்கே  போய்  அதுக்குத்தண்ணி  ஊத்தி  வளர்த்து  வாசம்  பார்க்கறதுதான்   நல்லது , அதை  விட்டுட்டு  பூ  வை  பறிச்சு  எடுத்துட்டுப்போகனும்னு  நினைக்கக்கூடாது 


4  போன  வாரம்  நீ  உங்கம்மா  வீட்டுக்குப்போய்  இருந்தியா? 


 ஆமா, உனக்கு  எப்படி  தெரியும் ?


  உன்  புருசன்  எனக்கு  மெசேஜ்  பண்ணி  இருந்தான் 


5  ஆயில்ய  நட்சத்திரம்னா  பொண்ணோட  அம்மாவுக்கு  ஆகாது , மூல  நட்சத்திரம்னாக்கூட  பரவாயில்லை , பொண்ணோட  அப்பாவுக்குத்தான்  ஆபத்து 



6   எனக்கு  அன்பு  வெண்டாம், அங்கீகாரம்  மட்டும்  போதும் 


7  உங்க  கிட்டே  ஏதாவது  ஆதாரம்  இருக்கா? 


 யுவர்  ஆனர் , இல்லற  வாழ்க்கைக்கு  சிசிடி வி  வைக்க  முடியாது 



8  தீர்ப்புதான்  உங்களால  குடுக்க  முடியும், தீர்வு  கொடுக்க  முடியாது 


9  சட்டம்  பெண்களுக்கு  சாதகமானதுதான், ஆனால்  இந்த  சமுதாயம் பெண்களுக்குப்பாதகமானது 


10   எனக்குக்கடவுள்  நம்பிக்கை  இல்லை , ஆனா  மனுச  நம்பிக்கை   உண்டு 


11   புத்தர்  நாட்டைத்துறந்து  ஞானி  ஆகி  விட்டார்னு  ஈசியாச்சொல்லிடறோம், ஆனா  அவர்  போன்  பின்  எவ்ளோ   வலி, எத்தனை  கஷ்டம்னு  அவர்  பொண்டாட்டிக்குத்தான்  தெரியும் 


12   என்  நம்பிக்கை  தப்பில்லை , நம்பின  ஆள்  தான்    தப்பு 


13    டோனி  கூட  முதல்  மேட்ச்ல  தோத்துத்தான்  போனார் 


14    லவ்  , மேரேஜ்  எல்லாம்  லைஃப் ல  வந்தா  லைஃபே  போர்  அடிச்சுப்போயிடும்டா


 அப்போ  உலகம்  பூரா  பைத்தியக்காரங்க, நீ  மட்டும் தான்  புத்திசாலி ? 


15    எனக்கே  தோணாத  எங்கம்மாவோட  வலி  உனக்கு  எபப்டி  தோணுச்சு?


 ஒரு  சபிக்கப்பட்ட  ஆத்மாவோட  வலி  இன்னொரு  சபிக்கப்பட்ட  ஆத்மாவுக்குத்தான்  தெரியும்


16  நீ  பிறக்கும்போது  என்னை அழ  வெச்சே , இன்னும்  அழ  வெச்சுட்டுதான்  இருக்கே 


17  உன்  சின்னச்சின்ன  சந்தோஷங்களை  எல்லாம்  உன்  பேராசையால்  இழக்கறே


18  உன்னை  என்  அம்மா  மாதிரி  பார்த்துக்கிட்டேன் 

 ஏன்  யாரும்  உன்னை  உன்  அப்பா  மாதிரி  பார்த்துக்குவேன்னு  சொல்றதில்லை ?


19  கல்யாணம்  தான்  நமக்கு  மிகப்பெரிய  பாதுகாப்பு . அந்த  அங்கீகாரம்  கிடைச்சாத்தான்  நம்  வாழ்க்கைல  பூ  பூக்கும் 


20  எழுதப்படாத    வார்த்தைகள்  1000 அர்த்தங்கள்  தரும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  பொதுவாக  இந்துப்பெண்களின்  மென்சஸ்  தேதி  என்ன  என்பதை  அறிந்து  அது  முடிந்த  12  வது  நாள்  தான்  திரு்மண  முகூர்த்த  நாளாகக்குறிப்பார்கள் . லவ்  மேரேஜ் ,  ஓடிப்போய்  அவசரமா  கல்யாணம்  பண்ணிக்கறது  போன்றவற்றில்  இதை  ஃபாலோ  பண்ண  முடியாது ,  ஆனால்  அரேஞ்ச்டு  மேரேஜில்  நிச்சய்ம்  இதை  ஃபாலோ  செய்வார்கள் .  திருமண  நாள்  அன்று  நாயகிக்கு  மென்சஸ்  ஆகி  விட்டது  என்ற  ஒரு  விஷயத்தை  வைத்து   காட்சிகள்  நகர்வது  மனதைத்தொடவில்லை 


2   நான்கு  வெவ்வேறு  சிறுகதைகளாக்காட்டி  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  வைக்கிறேன்  பேர்வழி  என  நான்கு  கதைகளுக்கும்  ஒரு  கனெக்சன்  கொடுப்பதாக    இயக்குநர்  எடுத்த  முடிவு  மகா  சொதப்பல். ஓப்பனிங்  எல்லாம்  நல்லாதான்  இருக்கு , ஃபினிசிங்  சரி  இல்லை  என்பதாய்  ஆகி  விட்டது 


3   முற்போக்கு  மாடர்ன்  கேர்ள்  ஆக  வரும் பெண்  தன்னை  ப்ரப்போஸ்  செய்யும்  காதலனை  அனைவர்  முன்னிலையிலும்  உதைப்பது ,  ஆஃபீசில்  டேபிளில்  காலைத்துக்கி  மேலே  போடுவது , கஸ்டமரை  அவமானப்படுத்துவது  என    பெண்களை  ஓவராக  மட்டம்  தட்டி  இருக்கிறார்  இயக்குநர் 


4  மாடர்ன்  கேர்ள்  என்றால்  தண்ணி  அடிப்பார் , தம்  அடிப்பார் , மேரேஜ்  பண்ணிக்க  விரும்பாமல்  மற்றதுக்கு  எல்லாம் ஓக்கே  சொல்வார்  என  சித்தரித்தது  கொடூரம் 


5   லிவ்விங்  ரிலேசன் ஷிப்பில்  வாழும்  ஜோடி  நான்கு  மாத  கர்ப்பம்  என  ஆன  பின்  கருவைக்கலைக்க  நினைப்பது  சுத்தமாக  நம்பும்படி  இல்லை . மீதி  3 மாதங்கள்  என்ன  செய்து  கொண்டிருந்தார்கள் ? 


6  க்ளைமாக்சில்  வரும்  லேடி  ரைட்டர்  ஐந்து  ஆண்களுடன்  வாழ்ந்தவர்  என்பதால்  டைட்டிலாக  பாஞ்சாலி  என்று  வைக்காமல்  விட்டது  ஏனோ? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - யூ //ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பொறுமைசாலிகள்   மட்டும்  பார்க்கலாம். பெண்களுக்குப்பிடிக்கும்  ரேட்டிங் 2.25 / 5 


Kannagi
Theatrical release poster
Directed byYashwanth Kishore
Written byYashwanth Kishore
Produced byM Ganesh
J Dhanush
StarringKeerthi Pandian
Ammu Abhirami
Vidya Pradeep
Shaalin Zoya
CinematographyRamji
Edited byK.Sarath Kumar
Music byShaan Rahman
Production
companies
Sky Moon Entertainment and E5 Entertainment
Distributed bySakthi Film Factory
Release date
15 December 2023
CountryIndia
LanguageTamil

0 comments: