Saturday, January 06, 2024

பணத்தோட்டம் (1963) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா ) @ யூ ட்யூப்

 


1963  ஆம்  ஆண்டு  பொங்கல் ரிலீஸ்  ஆக  ஜனவரி 11  அன்று  வெளியான  பட,ம். பல  ஊர்களில்  70  நாட்கள் ஓடின. சில  ஊர்களில்  50  நாட்கள்  ஓடி  வசூலை  வாரிக்குவித்த  படம்.. சென்னை  பிளாசாவில்  84  நாட்கள், சென்னை  கிரவுன்  மேகலாவில்  70  நாட்களும்  ஓடின . . 


சி என்  அண்ணாதுரை  எழுதிய  ஒரு  புத்தகத்தின்  பெயர்  தான் பணத்தோட்டம் . அதையே  படத்தின்  டைட்டில்  ஆக்கி  விட்டார்  எம் ஜி ஆர் . ஆனால்  அந்தக்கதைக்கும் , இந்தக்கதைக்கும்  சம்பந்தம்  இல்லை . எம் ஜி ஆர்  நடிப்பில்  பொங்கலுக்கு  ரிலீஸ்  ஆன  முதல்  படம்  இது 


கே   சங்கர்  இயக்கத்தில்  எம்  ஜி ஆர்  நடித்த  இந்தப்படத்தின்  ஷூட்டிங்  மாலையில்  நடந்தது. அதே  சமயத்தில்  சிவாஜி  நடித்த  ஆலயமணி  படத்தின்  ஷூட்டிங்  காலையில்  நடந்தது. இயக்குநர்  பல  காட்சிகளில்   நான்கு  டேக்  , ஐந்து  டேக்  என   எம் ஜி ஆரை ட்ரில்  வாங்கினார். ஒரு  கட்டத்தில்  எம் ஜி ஆர்  எனக்கு  என்ன  நடிப்பு  வருதோ  அதை  எடுத்துக்குங்க . என்னிடம்  ஓவர்  ஆக்டிங்கை  எதிர்பார்க்க  வேண்டாம், அதை  எல்லாம்  காலை  அங்கே நடக்கும்  ஷூட்டிங்கில்   வைத்துக்கொள்ளுங்கள்  என்றாராம். இப்படத்தின்  க்ளைமாக்ஸ்  காட்சி  முதல்  நாள்  காலை  முதல்  அடுத்த  நாள்  இரவு   வரை  தொடர்ச்சியாக  எடுக்கப்பட்டது 


ஆலயமணி ,பணத்தோட்டம்   இரண்டு  படங்களுக்கும்  நாயகி  சரோஜாதேவி தான். இயக்குநர்  கே சங்கர்  தான். இருவரும்  பமபரம்  போல்  வேலை  செய்தார்கள்   என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே  பாடலில்   ஒரு  தலைவன்  இருக்கிறான்  மயங்காதே  என்ற  வரி  வரும், அது  தன்னைத்தான்  குறிக்கிறது  என  கலைஞர் சட்டசபையில்  சொன்னதாகவும்  எம் ஜி ஆர்  அதை  மறுத்து  அறிஞர்  அண்ணாவைக்குறிக்கிறது  என  கலைஞருக்கு  நோஸ்கட்  கொடுத்ததாகவும்  சொல்கிறார்கள்


இந்தப்படத்தைத்தொடர்ந்து  1963ல் எம் ஜி ஆர்  நடிப்பில்  வந்த  கொடுத்து  வைத்தவள் , தர்மம்  தலை  காக்கும் ,பெரிய  இடத்துப்பெண் ,நீதிக்குப்பின்  பாசம் , பரிசு  என   அனைத்தும்  வெற்றிப்படங்களே!


பாடல்  வரிகளில்  பேசுவது  கிளியா? இல்லை  பெண்ணரசி  மொழியா? பாடலில்  வரும்  சேரனுக்கு  உறவா? இல்லை  செந்தமிழர்  நிலவா? என்ற  வரி  மூலம்  எம் ஜி ஆர் ப் கேரளாவைச்சேர்ந்தவர்  என்ற  குறியீடு  இருக்கும்


எடிட்டர்  ஆக  இருந்த  கே  சங்கர்  இயக்குநர்  ஆன பின்  வந்த  முதல் எம் ஜி ஆர்  பட  வாய்ப்பு  அது . முதலில்  அவர்  அந்த  வாய்ப்பை  மறுத்தார்.  படத்தின்  வெற்றி  விழாவில்  எம் ஜி ஆர்  அதை  சுட்டிக்காட்டி  இப்போது  என்ன  சொல்கிறீர்கள்  எனக்கேட்டாராம். அதற்குபின்  இருவரது  காம்ப்போவில்  கலங்கரை  விளக்கம் , சந்திரோதயம், குமரிக்கோட்டம்   உடபட  பல  படங்கள்  வந்தன . 


கண்ணதாசன்  கதை , திரைக்கதையில்   சிவகங்கை  சீமையிலே  என்ற  படத்துக்கு  முதலில்  வைக்கப்பட்ட  டைட்டில்  ஊமையன்  கோட்டை . அதில்  எம் ஜி ஆர்  தான்  முதலில்  ஹீரோ வாக  நடித்தார். ஏதோ  சில  காரணங்களால்  அதில்  இருந்து  எம் ஜி ஆர்  விலகிக்கொள்ள  பின் ஜெமினி கணேசனை  ஹீரோ  ஆக்கி  படத்தை  முடித்தனர். அதனால்  தான்  இயக்குநர்  கே  சங்கருக்கு  எம்  ஜி ஆர்  மீது  மனத்தாங்கல்  இருந்தது



ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  தன்  அம்மாவுடன்  வீட்டில் வசித்து  வருபவர். பட்டதாரி. தன்  சேமிப்புக்கணக்கில்  பணம்  செலுத்த  வங்கிக்குப்போகிறார். அப்போது  வில்லன்  நாயகனிடம்  சேஞ்ச்  இருந்தால்  கொடுங்கள்  எனக்கேட்டு  நைசாக  கள்ள  நோட்டைக்கை  மாற்றி  விடுகிறான். நாயகனைப்போலீசில்  பிடித்துக்கொடுக்கிறார்  பேங்க்  மேனேஜர் 


லாக்கப்பில்  இருந்த  நாயகன்  ஒரு  கட்டத்தில்  தப்பி  ஓடுகிறான். போலீஸ்  துரத்துகிறது . நாயகியின்  வீட்டுக்குள்  புகுந்து  அடைக்கலம்  கேட்கிறான்  நாயகன்.நாயகனுக்கும், நாயகிக்கும்  இதன்  மூலம்  பழக்கம்  ஏற்படுகிறது 


 கள்ள  நோட்டு  கும்பலைப்பிடிக்க  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்  ஸ்பெஷலாக  நியமிக்கப்படுகிறார். நாயகியின்  அப்பாவிடம்  மேனேஜராக  வேலை  பார்ப்பவன்  தான்  சைடு  வில்லன்.  கள்ள  நோட்டுக்கும்பல்  தலைவன்  தான்  மெயின்  வில்லன்.   மெயின்  வில்லன்  யார்  என்பது  க்ளைமாக்ஸ்   ட்விஸ்ட்டில்  தான்  தெரியும் 


 போலீஸ்  ஆஃபீசர்  நாயகியைப்பெண்  பார்க்க  வருகிறார்., இருவருக்கும்  திரும்ணம்  நிச்சயம்  ஆகிறது சைடு  வில்லன்  நாயகன் - நாயகி  இருவரும்  பார்க்கில்  டூயட்  பாடுவதை  நாயகியின்  அப்பாவான  தன்  முதலாளியிடம்  போட்டுக்கொடுத்து  விடுகிறான்


 மெயின்  வில்லனுக்கு  கையில்  ஆறூ  விரல்கள்  உண்டு . இந்த  தடயத்தை  வைத்து  நாயகன்  மெயின்  வில்லன்  யார் ? என்பதைக்கண்டறிய  முயற்சிக்கிறான்.  நாயகன்  அவன்  முயற்சியில்  எப்படி  வெற்றி  அடைகிறான்  என்பது  தான்  மீதிக்கதை 


நாயகன்  ஆக  எம் ஜி ஆர். அசால்ட்  ஆக  நடித்திருக்கிறார்/. அவரது  ஃபேவரைட்  ஆன  அம்மா  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  உண்டு .   வழக்கம்  போல்  மாறு  வேடம்  போட்டு  பாடும்  காட்சிகளும்  உண்டு .


 நாயகி  ஆக  கன்னடத்துப்பைங்கிளி  சரோஜா  தேவி. இவரது  தாய்  மொழி  கன்னடம்  என்பதால்  இவரது  தமிழ்  உச்சரிப்பு  ஒரு  மார்க்கமாக  இருக்கும், ஆனால்  அதையும்  கொஞ்சல்  மொழி  என  ரசிகர்கள்  கொண்டாடினார்கள் 


சைடு  வில்லன்  ஆக  நம்பியார்  அசத்தி  இருக்கிறார். இரு  சண்டைக்காட்சிகளும் இவருக்கு  உண்டு .  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  அசோகன்  கச்சிதமான  நடிப்பு 


மெயின்  வில்லன்  பற்றி  சொன்னால்  சஸ்பென்ஸ்  போய்  விடும் 


  நாகேஷின்  காமெடி  டிராக் உண்டு . மெயின்  கதைக்கும்,  காமெடி  டிராக்கிற்கும்  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  காமெடி  குட் . 

இர்ண்டரை  மணி  நேரத்திற்கும்  குறைவாக  ட்யூரெஷன்  அமையும்  படி  டிரிம்  பண்ணி  இருந்தார்  எடிட்டர் 


விஸ்வநாதன்  ராமமூர்த்தி  இசையில்  6  பாடல்கள் . நான்கு  பாடல்கள்  செம  ஹிட் 


பி எஸ்  ராமய்யாவின்  கதைக்கு திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  கே  சங்கர் 


சபாஷ்  டைரக்டர்


1   ஹீரோவுக்கு  ஓப்பனிங்  சாங்  , ஓப்பனிங்  ஃபைட்  சீன்  எல்லாம்  வைக்காமல்  முதல்  காட்சியிலேயே  கதைக்கு  நேரடியாக  சென்ற  விதம் 


2  அம்மா  செண்ட்டிமெண்ட்  சீன் , ரொமாண்டிக்  போர்சன்  இரண்டையும்  சரியாக  மிக்ஸ்  செய்து  கமர்சியலாக  படத்தை  தந்த  விதம் 

3    வில்லனின்  ஆறு  விரல் மேட்டரில்  வரும்  ட்விஸ்ட் 


4  மெயின்  வில்லன்  யார்  என  அறிய  வரும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ஒரு  நாள்  இரவு கண்  உறக்கம் பிடிக்கவில்லை  ( நாயகி  சோலோ  சாங் ) 


2  ஒருவர்  ஒருவராய்  வந்தோம் , இருவர்  இருவராய்  இணைந்தோம்


3  என்னதான்  நடக்கும்  நடக்கட்டுமே? இருட்டினில்  நீதி  மறையட்டுமே? 


4  பேசுவது  கிளியா? இல்லை , பெண்ணரசி மொழியா? ஹோய்

5  ஜவ்வாது  மேடை இட்டு 

  குரங்கு  வரும்  தோட்டமடி  பழத்தோட்டம்

மனத்தோட்டம்  போதும்  என  மாயவனார் 


  ரசித்த  வசனங்கள் 


1  உன்  காலில்  ஒட்டுன  சேற்றை  ஏன்  என்  வீட்டில்  கொண்டு  வந்து  விடறே? 


2  நம்ம  முதலாளி  பார்க்க  யானை  மாதிரி  இருக்காரு , ஆனா  பொண்டாட்டியைப்பார்த்தா  பூனை  மாதிரி  ஆகிடறாரே? அது  ஏன் ? 


3  உங்களுக்கு என்ன  வேலை  தெரியும் ?


  எல்லா  வேலையும்  தெரியும்.  ஆனா  எந்த  வேலை  கொடுத்தாலும்  ஒரு  தடவை  சொல்லிக்கொடுக்கனும்


4  உங்களுக்கெல்லாம்  எந்த  மடையன்  வேலை கொடுப்பான்னு  சொன்னாங்க . இப்போ  உங்க  பேரை  சொல்லனும்  அவங்க  கிட்டே 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  படித்தவர் , பேங்க்கில்  தன்  சேமிப்புப்பணத்தை  டெபாசிட்  செய்யும்போது  யாரோ  ஒரு ஆள்  சேஞ்ச்  கேட்க  கொடுத்து  விடுகிறார்.  பேங்க்கில்  கூட்டமே  இல்லை , கவுண்ட்டரிலே  வாங்கிக்கொள்ளுங்கள்  என  சொல்லி  இருக்கலாமே?கள்ள  நோட்டு  அது 


2  நாம்  கட்ட  இருக்கும்  பணத்தில்  இரு  கள்ள  நோட்டுக்கள்  இருந்தால்  அதை  எரித்து  விடுவார்கள்  அல்லது  அழித்து  விடுவார்கள் . போலீசில்  பிடித்துக்கொடுப்பார்களா? 


3  கள்ள  நோட்டுக்கும்பலைப்பிடிக்க  ஸ்பெஷல்  ஆஃபீசர்  ஆகப்பொறுபேற்கும் அசோகன்  இன்ஸ்பெக்டரிடம்  “ நேத்து  ஒருத்தனை  கைது  பண்ணீங்களே? அவன்  மூலம்  ஏதாவது  தகவல்  தெரிந்ததா? என   கேட்கிறார். இல்லை  என  பதில்  வருது . அப்போது  சில  போலீஸ்  ஓடி  வந்து  செல்வம்  தப்பிச்சுட்டான்  என  சொன்னதும்  அசோகன்  வேகமாக  ஓடுகிறார். கள்ள்  நோட்டு  வழக்கி;ல்  கைதானவர் தான் செல்வம்  என  அவருக்குத்தெரியாதே?


4  லாக்கப்பிலிருந்து  தப்பிய  நாயகனை  போலீஸ்  ஊரெல்லாம்  தேடுது . நாயகனின்  வீட்டுக்கு  போலீஸ்  கண்காணிப்பு  போட மாட்டாங்களா? தப்பிய  நாயகன்  நேரா  தன்  வீட்டுக்குத்தான்  வர்றார்


5  ஆஃபீசர்  அசோகன்  நாயகி  வீட்டுக்கு  வந்த  போது  அங்கே  ஒளிந்த  நாயகன்  போர்வையால்  உருவத்தை  மூடி  காய்ச்சல்  வந்தவர்  போல்  படுத்து  இருக்கிறார் அவர்  முகத்தையே அசோகன்  பார்த்ததில்லை, ஆனால்  பெண்  பார்க்க  நாயகி  வீட்டுக்கு  அசோகன்  வந்தபோது   அன்னைக்கு அந்த  திருடன்க்கு  அடைக்கலம்  கொடுத்தாயே? என்கிறார்


6  வில்லன்  நாயகனின்  அம்மாவைக்கழுத்தில்  சுடுகிறான் அடுத்த  காட்சியில்  அம்மா  கையில்  முழங்கையில்  கட்டுப்போட்டு  இருக்கிறார். இட  மாறு  தோற்றப்பிழை?


7  கள்ள நோட்டு  கும்பலை  நாயகன்  கண்டுபிடிக்க  எந்த  முயற்சியும்  செய்ததாகத்தெரியவில்லை .    தானாத்தேடி  வந்து  ஒரு  ஆள்  க்ளூ  கொடுக்கிறான். இவரு  நாயகி  கூட  டூயட்  தான்  பாடிட்டு இருக்காரு   


8  நாயகி  வீட்டில்  மேனேஜராக  இருக்கு  வில்லனைக்கண்காணிக்க   வேண்டும்  என  நாயகன்  நாயகியிடம்  உதவி  கேட்கிறார். அப்போது  எதற்கு  நாயகி தோள்களை  அந்த  தடவு தடவுகிறார் ? 


9  இன்ஸ்பெக்டர்  ஆன  அசோகன்  ஒரு  சீனில்  புல்லட்டில் வர்றார் , இன்னொரு  சீனில்  சைக்கிளில்  வருகிறார். ஏன் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பெரிய  பிரமாதமான    கதை  எல்லாம்  இல்லை , சராசரி  மசா;லாப்படம்  தான்  பாடல்களுக்காகவும் , எம் ஜி ஆர் 0 சரோஜாதேவி  ஜோடிக்காகவும்  பார்க்கலாம் . ரேட்டிங்  2.5 / 5 


பனத்தோட்டம்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கே. சங்கர்
மூலம் திரைக்கதைபசுமணி
மூலம் கதைபிஎஸ் ராமையா
உற்பத்திஜி.என்.வேலுமணி
நடித்துள்ளார்எம்.ஜி.ராமச்சந்திரன்
பி.சரோஜாதேவி
ஒளிப்பதிவுதம்பு
திருத்தியவர்கே.நாராயணன்
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
தயாரிப்பு
நிறுவனம்
சரவணா பிலிம்ஸ்
வெளிவரும் தேதி
  • 11 ஜனவரி 1963
நேரம் இயங்கும்
135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: