Thursday, January 11, 2024

MANGALAVAARAM (2023) - தெலுங்கு - செவ்வாய்க்கிழமை - தமிழ் - சினிமா விமர்சனம் (சைக்காலஜிக்கல் மிஸ்ட்ரி க்ரைம் த்ரில்லர்) @ டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்


 15 கோடி  ரூபாய்  செலவில்  எடுக்கப்பட்டு தெலுங்கில்  வெற்றி  பெற்ற  இப்படம்  கன்னடம், மலையாளம், தமிழ்  , ஹிந்தி  ஆகிய  மொழிகளில்  டப்  செய்யப்பட்டு  வெளியானது.2023  நவம்பர்  17  அன்று  தியேட்டர்களில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  இப்போது டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார்   ஓடிடி  யில்  காணக்கிடைக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  சின்ன  வயதில்  இருந்தே  பாட்டியிடம்  தான்  வளர்ந்து  வருகிறாள். அந்தப்பாட்டியும் இறந்து  விட  நாயகி  தனிமையில்  தான்  இருக்கிறாள் . அவள்  கல்லூரியில்  படிக்கும்போது  ஒரு    லெக்சரர்  ஆசை  வார்த்தை  கூறி  நாயகியை  மயக்கி  அனுபவித்து  விடுகிறார். பின்  அவளை  அம்போ  என  விட்டு  விட்டு  ட்ரான்ஸ்ஃபர்  வாங்கிப்போய்  விடுகிறார்


அவனை  மறக்க  முடியாமல்  நாயகி  தவிக்கிறார்.  வில்லி  மிகப்பெரும்  பணக்காரி . அவள்  கள்ளக்காதலனுடன்  நெருக்கமாக  இருப்பதை  நாயகி  பார்த்து  விடுகிறாள்.  இதனால்  நாயகியைக்கொலை  செய்ய  வில்லி  திட்டம்  போடுகிறாள் 


அந்த  ஊரில்  வாரா  வாரம்  திங்கட்கிழமை இரவு  கிராமத்தில்  சுவரில்  ஒரு  கள்ளக்காதல்  ஜோடி  பற்றி  கிசு  கிசு  எழுதப்படுகிறது. அடுத்த  நாள்  அந்த  கள்ளக்காதல்  ஜோடி  தற்கொலை  செய்து  கொள்கிறது . இது போல்  இரண்டு  வாரங்கள்  நடக்க  போலீஸ்  களத்தில்  இறங்குகிறது . அந்த  இரண்டு  ஜோடிகள்  தற்கொலை செய்ய  வில்லை ., கொலை  தான்  செய்யப்பட்டிருக்கிறார்கள்  என்பதை  போஸ்ட் மார்ட்டம்  ரிப்போர்ட்  சொல்கிறது 


 நாயகி, வில்லி   இருவருக்கும்  கிராமத்தில்  நடக்கும்  கொலைகளுக்கும்  என்ன  சம்பந்தம்  ? என்பது தான்  மீதி  திரைக்கதை 


 நாயகி  ஆக பாயல்  ராஜ்பத்  என்ற  நடிகை  கச்சிதமாக  நடித்திருக்கிறார். இந்திய  சினிமாவில்  நிம்போமேனியாக்  அல்லது   ஹைப்பர்  செக்சுவல்  டிஸ்  ஆர்டர்  உள்ள  பெண்  ரோலை  இதுவரை யாரும்  செய்ததாகத்தெரியவில்லை . துணிச்சல் தான் 


வில்லி  ஆக  திவ்யா  பிள்ளை  கலக்கி  இருக்கிறார். ஆனால்  அவருக்கான  போர்சன்  குறைவு ; அழகிய  லவ்லி  வில்லி 

கேசை  துப்பறியும்  போலீஸ்  ஆஃபீசராக நந்திதா  ஸ்வேதா. அவராக  எதையும்  கண்டுபிடித்த  மாதிரி  தெரியவில்லை . சும்மா  வந்து  போகிறார் 


டாக்டர்  ஆக  ரவீந்திர  விஜய்  குணச்சித்திர  நடிப்பு  குட்  நாயகியை ஏமாற்றும்  காலேஜ்  லெக்சரர் ஆக அஜ்மல்  அமீர்  நடித்திருக்கிறார்


பி  அஜனீஷ் , லோக்நாத்  இசையில்  பாடல்கள் , பின்னணி இசை  அனைத்தும்

காந்தாரா  பாணியிலேயே  வேண்டும்  என்றே  அமைத்திருக்கிறார்கள் ஒளிப்பதிவு  தாசரதி  சிவேந்திரன் இரவுக்காட்சிகளில்  சைன்  செய்கிறார்


 கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி தயாரித்து  இருப்பவர்  அஜய்  பூபதி 




சபாஷ்  டைரக்டர் (அஜய்  பூபதி ) 


1  ஒரு  சாதாரணக்கள்ளக்காதல்  கதையை காந்தாரா  பாணியில்  சொன்ன  சாமார்த்தியம்


2 நாயகியின்  கேரக்டர்  டிசைன்  ஒரு  மார்க்கமாக  இருந்தாலும்  காட்சி  அமைப்பில்  கண்ணியமாக  அவரை  சித்தரித்த  விதம்  குட் 


3  படத்தில்  வரும் ஒரு  சஸ்பென்ஸ்  கேரக்டருக்கு  காந்தாரா  பாணியில்  மாஸ்க்  அணிவித்து   எதிர்பார்ப்பை  ஏற்றிய  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  நீ  கண்ல  மை  வெச்சுக்கிட்டா  வானத்துல  கருமேகங்கள் சூழந்த  மாதிரி  அழகா  இருக்கும்


2  பெண்ணாப்பிறந்த  எல்லாருமே  இந்த  வலியை  அனுபவிச்சுதான்  ஆகனும். கடவுள்  கொடுத்த  இந்த  வலி  வரமா? சாபமா? தெரியல


3  உன்  கண்களுக்கு  டெய்லி  ஒரு  குவாட்டர்  ஊத்தறியா? இவ்ளோ  போதை  தருது ?


4  இதெல்லாம்  கல்யாணத்துக்கு  அப்புறம்   வெச்சுக்கக்கூடாதா?


 படிக்காம  பரீட்சை  எழுதப்போக  முடியுமா?


5  சுவற்றில்  அடுத்து  உங்க  பேரு  வரும்னு  நினைக்கறேன், ஏன்னா ஊர்ல உங்களை விடப்பெரிய  மைனர்  யாரும்  இல்லை 


6   ஷைலு , நீ  ஷேக்ஸ்பியர்  ரொமாண்டிக்  நாவல்ல வர்ற  லவ் போர்சன்  மாதிரி , தினமும்  படிச்சா  போர்  அடிச்சிடும், அப்பப்ப  படிக்கனும், இண்ட்ரஸ்ட்டா  இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  சுவரில்  எழுதி  வைத்த  ஆள்  இவன்  தான்  என  சிலரும், போலீசும்  அடிக்கடி  சந்தேகப்பட்டுக்கொண்டே  இருக்கிறார்கள் . ஒரு  முறை  அவனை  சுவரில்  எல்லோர் கண்  முன்னும்  எழுதச்சொல்லி  விட்டால் மேட்டர் ஓவர் , உண்மை  தெரிந்து  விடுமே? 


2  கொலை  நடப்பது  ஒரு  சின்ன  கிராமம். சுவரில்  கிசு  கிசு  எழுதுபவன்  தான்  கொலை  காரன்  எனில் ஊர்  மக்கள்  எல்லோரையும்  வரிசையாக  நிற்க  வைத்து  எழுதச்சொல்லி  விட்டால்  கையெழுத்து  காட்டிக்கொடுக்குமே? 

3   கல்லூரியில்  இருக்கும்  ஆங்கில  லெக்சரர்  தன்  திருமணத்திற்கு  யாரையும்  அழைக்காதது  ஏன் ?  மேரேஜ்  முடிந்த  சூட்டோடு  மனைவியுடன்  தன்  முன்னாள்  காதலி முன்  ஏன்  வருகிறான் ? லூசா? 


4  காரில்  தன்  புது  மனைவியை  உட்கார  வைத்து  விட்டு  அவள்  கண்  முன்னே  கள்ளக்காதலியிடம்  பேசிட்டு  இருக்காரே? டவுட்  வராதா? 


5  குடிசை  வீட்டுக்கு  தீ வைத்து  தன்  அப்பாவின்  டெட்  பாடியோடு  எரிக்க  நினைக்கும்  சிறுவன்  குடிசைக்குள்ளே  இருந்து  கொண்டு  மண்ணெண்னெய்  ஊற்றி  பற்ற  வைக்கிறான். தானும்  மாட்டிக்குவோம்னு  தெரியாதா?  குடிசைக்கு  வெளியே  வந்துதானே  எரிக்கனும் ?


6  அப்பா  செஞ்ச  தப்புக்காக  ஊர்ல  யார்  முகத்துலயும் முழிக்க  முடியலைனு  ஒரு  டயலாக்  வருது . ஆக்சுவலா  அது  நாயகி , நாயகியின்  க்ளாஸ் மேட் , அவன்  அப்பா  இந்த  மூன்று  பேருக்கு  மட்டும்  தானே  தெரியும் ? ஊர்  மக்களுக்கு  எப்படித்தெரியும் ? 


7  வில்லி  கள்ளக்காதலனுடன்   நெருக்கமாக  இருப்பதை  நாயகி பார்த்து  விடுவதால்  நாயகியைக்கொலை  செய்ய  வேண்டும்  எனில்  காதும்  காதும்  வைத்த  மாதிரி  வில்லியே  செய்திருக்கலாம்   , பேக்கு  மாதிரி  தன்  அடியாட்கள்  நான்கு பேரை  வரவைத்க்து  மேட்டரை  சொல்கிறாள். இப்போது  அவர்களுக்கும்தானே  வில்லியின்  ரகசிய  விஷயம்  தெரிந்து  விட்டது ?


8  நாயகியைக்கிணற்றில்  போட்டாலே  அவள்  மூழ்கி  இறந்து  விடுவாள் , ஆனால்  கொலை  செய்து  ஏன்  கிணற்றில்  போட  வேண்டும் ? போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  தெரிந்து விடுமே? 

9  ஒருவரை  மண்ணெண்ணெய்  ஊற்றி  தீ  வைத்துக்கொலை  செய்யும்  ஆள்  அருகில்  இருக்கக்கூடாது , ஏன்  எனில்  தீப்பற்றி  எரியும் போது  அவரையும்  அறியாமல்  அருகில் இருப்பவரைக்கட்டிப்பிடிப்பார். அது  ஆபத்து. இது  தெரியாமல்  க்ளைமாக்ஸில்  வில்லியை  சீமெண்ணெய்/ பெட்ரோல்  ஊற்றிக்கொளுத்துகிறார்  ஒருவர் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - மைனர்கள்  இப்படத்தைப்பார்க்கத்தேவை  இல்லை . காட்சிகள் கண்ணியமாக  இருந்தாலும்  கண்ட்டெண்ட்  வைஸ்  18+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இது  தெலுங்கில்  ஹிட்  ஆன  படம்  என்ற  அளவில்  பார்க்கலாம். மற்றபடி பிரமாதமான  கதை  என்றெல்லாம்  சொல்லி  விட  முடியாது . ரேட்டிங் 2.5 / 5 


Tuesday
DirectionAjay Bhupathi
ProducerSwati - Suresh Verma
castPayal Rajput ,
Nandita Swetha ,
Ajay Ghosh ,
Divya Pillai
PhotographyDasharathi Shivendra
compositionMadhav Kumar Gullapally
MusicB. Ajanish Loknath
Construction
companies
A Creative Works,
Mudramedia Works
Release Date
17 November 2023 [1]
The length of the movie
145 minutes
the countryIndia
languageTelugu

0 comments: