Tuesday, January 23, 2024

பெர்லின் (2023) - தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் ( ஹெய்ஸ்ட் த்ரில்லர்) @ நெட் ஃபிளிக்ஸ்

 


20`17ல்  ரிலீஸ் ஆகி உலகிலேயே  அதிக  பார்வையாளர்களைப்பெற்ற  இரண்டாவது  வெப்  சீரிஸ்  என்ற  பெருமையைப்பெற்ற ம்ணிஹெய்ஸ்ட்  வெப்  சீரிசின்   அடுத்த   படைப்பு ., அந்த  படைப்பில்  அதிக  வரவேற்பைப்பெற்ற  கேரக்டர்  புரொஃபசர் , டோக்கியோ  இருவரும்  தான், ஆனால்  அந்த  படைப்பில்  இறந்து  விடுவதாகக்காட்டபடும்  பெர்லின்  கேரக்டர்  தான்  இந்த  வெப்  சீரிசின்  வெயின்  ஹீரோ. அந்த  கொள்ளை  சம்பவத்துக்கு  முந்தின  கதையாக  சொல்லப்ப்டுகிறது ( உலகிலேயே  அதிக  பார்வையாளர்களைப்பெற்ற முதலாவது  வெப்  சீரிஸ் கேம்  ஆஃப்  த்ரோன்ஸ்)


மொத்தம்  எட்டு  எபிசோடுகள் .ஒவ்வொன்றும் 50  நிமிடங்கள் .  ஆறரை   மணி  நேரம்  ஒதுக்கினால்  ஒரே  சிட்டிங்கில்  பார்த்து  விடலாம், முதல் பாகம்  ஆன  மணிஹெய்ஸ்ட் அளவுக்கு  ஆக்சன்  காட்சிகள் , ட்விஸ்ட்  அண்ட்  டர்ன்ஸ்  அதிகம்   இருக்காது , கொள்ளைக்கான  திட்டமிடல் , எக்ஸ்க்யூசன், தப்பித்தல்  இவை  மட்டும்  3  எபிசோடுகளிலேயே  முடித்து  இருக்கலாம்.,  ஆனால்  ரொமாண்டிக்  போர்ஷன்ஸ்   நான்கு  ஜோடிகளுக்கு  உண்டு .  எமோஷனல்  காட்சிகளும்  உண்டு 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு  கொள்ளைக்காரன். ஏலத்துக்கு  வர  இருக்கும்  நகைகளை  கொள்ளை  அடிக்க  திட்டம்  இடுகிறான். கூட  அனுபவ்ம்  வாய்ந்த  ஒரு  வயதான  நபர் , அனுபவம்  அதிகம் இல்லாத  2ஆண்கள்  , 2  பெண்கள்  உடன்  களம்  இறங்குகிறான்


நகைகளுக்கு  சொந்தக்காரன்  வீட்டுக்கு  எதிரே  இருக்கும்  ஹோட்டலில்  ரூம்  புக்  ப்ண்ணி  தங்கும்  நாயகன்  அவனைக்கண்காணிக்கும்போது  அவனது  மனைவியின்  மீது  பார்வை  படுகிறது . காதலிக்கிறான். அவளும்  தான்


திட்டமிட்டபடி  கொள்ளை  சம்பவம்  முடிகிறது . நாயகனின்  கள்ளக்காதலியின்  கணவன்  மீது  பழி  விழுகிறது ஒரு  கட்டத்தில்  கள்ளக்காதலிக்கு  தன்  கணவன்  நிரபராதி , காதலன்  தான்  குற்றவாளி    என  தெரிய  வருகிறது . இதற்குப்பின்  நிக்ழும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 

நாயகன்  ஆக  பெட்ரோ  அலோன் சோ  நடித்திருக்கிறார். பேருல தான் அலோன். இவர்  எப்போதும்  ஏதாவது ஒரு  பெண்ணுடன்  தான்  இருக்கிறார். மூன்றாவது  மனைவி  டைவர்ஸ்  கேட்ட  பின்  அடுத்த  நாளே  ஒரு  காதலியைப்பிடித்து  விடுகிறார்.நம்ம  ஊர்  ஜெமினி  கணேசன்,  கமல்  ஹாசன் , கார்த்திக், சிம்பு  இவர்களுக்கெல்லாம்  முன்னோடி  போல 


இவரது  கள்ளக்காதலியாக  வ்ருபவர்  அழகான  சிகை  அலங்காரம்,  பிரமாதமான  உடை  அலங்காரம்  என  கலக்குகிறார்


கண்னாடி  அணிந்த  கூச்ச  சுபாவம்  உள்ள  பெண்ணாக  வருபவர் சிஸ்டம்  ஹேக்  செய்வதில்  நிபுணி . இவரது  ரொமாண்டிக்  போர்சன்  செம, 


நீ  அவளுக்கு  கார்டியன், அப்பா  மாதிரி  இருந்து  பார்த்துக்கோ  என்று  சொல்லப்படும்  ஆள் , அவரது  கேர்ள்  ஃபிரண்ட்  இருவருக்குமான  கெமிஸ்ட்ரி  குட் 


கொள்ளைக்கூட்டத்தில்  வயதான  நபர்  ஆக  வருபவர்  மனைவி  பிரேக்க்ப்  சொன்னதும்  எதேச்சையாக  அவருக்கு  ஒரு புது  ஜோடி  கிடைப்பது  கலகலப்பு 


கேசை  துப்ப்றியும்  மூன்று  பெண்  போலீஸ்களும்  செம. . ஆனால்  பெரிதாக  எதுவும்  சாதிக்க வில்லை 


அலெக்ஸ்  பினா , எஸ்தர்  மார்ட்டினஸ்    இருவரும்  இணைந்து  திரைக்கதை  எழுதி  இருக்கிறார்கள் 


ஒளிப்பதிவு, பின்னணி  இசை,, ஆர்ட் டைரக்சன்  போன்ற  டெக்னிக்கள்  அம்சஙகள்  சிறப்பு 

 

சபாஷ்  டைரக்டர்


1  கண்காணிப்புக்கேமரா  பொருத்தப்போன  இடத்தில்  நாய்  ஒன்று  குலைக்க  ஒரு  பந்தை  எடுத்து  வீசி  அதை  பிடித்து  வர  ட்ரெய்னிங்  கொடுப்பது  போல  நாயை  டைவர்ட்  பண்ணும்  காட்சி 


2  செக்யூரிட்டி  தன்  மூன்று  நாய்களுடன்  கொள்ளையர்கள்  இருக்கும்  அறைக்கு  வர  ஒரே  வினாடியில்  அனைவரும்  வெவ்வேறு  இடத்தில்  ஒளிந்து  கொள்வதும் , அவன்  வந்த  வேலையை  முடித்துச்செல்லும்  வரை  டெம்ப்போ  ஏற்றும்  காட்சிகள் 


3 கண்காணிப்புக்கேமரா பதித்து  வரும்  ஆட்கள்  தங்கி  இருக்கும்  அறையில்  அவர்களுக்குத்தெரியாமல்  ஒரு  கண்காணிப்புக்கேமரா வை  வைத்து  நாயகன்  அவர்களையே உளவு  பார்ப்பது  எதிர்பாராத  ட்விஸ்ட் 


4 இவங்களே  பாம்  வைப்பாங்களாம், இவங்களே  எடுப்பாங்க;ளாம்  என்பது  போல  நாயகன் அண்ட்  டீம்  சுரங்கப்பாதை  தோண்டும்  முன்  அந்த  இடத்தில் இவர்களே  ஒரு  தங்கக்கப்பை  புதைத்து  விட்டு  ஃபாதர்  கண்  முன்  அதைத்தோண்டி  எடுத்து  சிலாகிப்பது  செம  சீன்

5  ஃபாதரிடம்  இருந்து  அந்த  தங்கக்கோப்பையை  கவர்ந்து  செல்ல  பைக்கில்  நடக்கும்  சேஸ்  சீன்  அதகளம் 


6 கார்  பார்க்கிங்  ஏரியாவில்   ஃபாதரின்  அடியாட்கள்  கவனத்தை  திசை  திருப்ப  பார்க்கிங்கில்  இருக்கும்  பல  கார்களை  தட்டி  விட்டு  சைரன் ஒலி  எழுப்பச்செய்து  தப்பிக்கும்  காட்சி  நல்ல  ஐடியா


7 [போலீசை  திசை  திருப்பி  சுரங்கப்பாதை  வழியே  தப்பிக்க  ஸ்பீக்கர்  செட் பண்ணும்  ஐடியா  சூப்பர் 


8  கார்  திருடும்  காட்சி  கலக்கல் 


9  போலீசின்  கவனத்த  திசை  திருப்ப  அஸ்தி  ஜாடி  ஐடியா  குட்  ஒன் 


  ரசித்த  வசனங்கள் 


1   உலகத்துல   இரண்டே  விஷயங்கள்  தான்  ஒரு  மோசமான  நாளை  அற்புதமான  நாளா  மாற்ற  முடியும்  1  காதல் 


2   காதலின்  முக்கியமான  உபயோகம்  என்னான்னா  நம்ம  கிட்டே  இருக்கும்  அற்புதமான  ஆற்றலை  வெளியே  கொண்டு  வரும் 


3  ஒருத்தன்  கூட  பழகும்போதே   அவன்  எக்ஸ்பயரி  டேட்  என்ன?னு  தான்  பார்ப்பேன், அது  அவன்  நெற்றியில்  எழுதி  ஒட்டி இருக்கும் 


4  நம்ம  ஆசை  எல்லாம்  முடிஞ்ச  பிறகும்  தொடர்ந்து  அதே  அன்பு  இருக்கறதுதான்  லவ் 


5  ஒரு  பெண்ணை  நமக்குப்பிடிச்சுப்போச்சுன்னா  அவளைப்பற்றி  எல்லாமே  தெரிஞ்சுக்க  நினைப்போம். ஒரு  க்யூரியாசிட்டி 


6  இந்த  உலகத்தில் 4000  மில்லியன்  பெண்கள்  இருக்காங்க . ஒருத்திக்காக  அந்த  ரிஸ்க்கை  எடுக்கத்தேவை  இல்லை 


7  வாழ்க்கையின்  போக்கையே  மாற்றி  அமைக்கக்கூடிய  இரண்டு  விஷயங்களில்  ஏதோ  ஒன்றைத்தான்  நான்  தேர்ந்தெடுக்கனும்  1  பணம்  2  காதல் 

8  காதல்  ஜெயிக்குதா? தோற்குதா? அதைப்பற்றி  யாருக்கும்  கவலை  இல்லை ,ஆனா  நாம  வாழ  அது   மட்டும்தான்  காரணம் 


9இந்த  உலகத்தில் 4000  மில்லியன்  பெண்கள்  இருக்காங்க  அவங்களில் நமக்குப்பிடிச்ச ஒரு  ஆளைத்தேர்ந்தெடுப்பது  எவ்ளோ  பெரிய  ரிஸ்க் 

10தூக்கம்  வராம  புரண்டு  புரண்டு  படுத்துட்டு  தவிப்பவர்கள்  இந்த  உலகத்துல  நிறைய  பேர்  இருக்காங்க 


11 நேரம்   ரொம்பக்கம்மி , ஆனா  ரிஸ்க்  அதிகம்

 ரிஸ்க்  அதிகம்  இருக்கும்போதுதான்  ஒரு  வேலையைக்கச்சிதமா  முடிக்க  முடியும்


12 ஒரு  ரிலேஷன்ஷிப்  நல்ல  மொமெண்ட்ல போய்க்கிட்டு  இருக்கும்போது  அதில்  தோல்வியும்  வரும் 


13 ஒருவர்  வாழ்க்கையில்  காதல்  புயல்  போல  வரும்போது  வேற  எதுவும்  குறுக்கே  வர  முடியாது 


14  ஒரு  போட்டியில் எதிராளியே  இல்லாமல்  ஜெயிப்பதில்  எனக்கு  உடன்பாடு இல்லை 


15  ஆம்பளையா இருக்கறவன்  சென்சிட்டிவா  இருப்பது  கடினம் 


16    வந்து  வந்து  போக அது  என்ன  காதல் ? உண்மையான  காதல்  எப்பவும்  இருக்கனும் 


17   உன்   வேலையையும், காதலையும்  எப்பவும்  மிக்ஸ்  பண்ணாதே


18  செல்ஃப்  கண்ட்ரோல்  என்பது  அமைதியாக  இருப்பது . யாருடனும்  ஆர்க்யூ  பண்ணாமல் இருப்பது 


19   என்னை  மாதிரி   ஒருவனுக்கு  உன்னை  மாதிரி  ஒருத்தி  கிடைப்பது  கோடியில்  ஒருவனுக்குத்தான்  கிடைக்கும்


20  காதலுக்காக  வாழ்வது  மட்டும்  தான்  உண்மையாக  இருக்கும் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  தன்  ரூமைக்காலி  பண்ணும்  வரை அ ந்த  கண்காணீப்பு  டெலஸ்கோப்பை  அகற்றாமல்  வைத்திருப்பது  ஏன்?  ரொம்ப  டேஞ்சர் . ரூம்  டூப்ளிகேட்  கீ  ஹோட்ட்ல்   மேனேஜரிடம்  இருக்கும்,  வந்து  ஓப்பன்  செய்து  பார்த்தால்  ஆபத்து 

2   கானகத்தில்  கூடாரம்  அடித்து  தங்கும்  போது  கண்னாடிக்காரப்பெண் இருட்டில்  ஒதுங்குவதும், பாம்பு  கடிப்பதும்,  அவளைக்காதலன்  காப்பாற்றுவதும்  காதில்  பூச்சுற்றல்

3   ரேஸ்  கார்  போர்சன்  ஜவ்வு  இழுப்பு  , மெயின்  கதைக்குத்தேவை  இல்லாதது


4  டிரக்கின்  மேலே  தார்பாய்க்கு  அடியே  ஒளிந்து  போலீசின்  கண்ணில்  மண்  தூவுவது  சுவராஸ்யமாக  இருந்தாலும்  நம்பகத்தன்மை  இல்லை 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 18+ காட்சிகள் , வசனங்கள்  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மணி ஹெய்ஸ்ட்  ரசிகர்கள்  பார்க்கலாம், அந்த  அலவு  கலக்கல்  இல்லை  என்றாலும்  ஓக்கே  ரகம்  , ரேட்டிங்  3/ 5 


Berlin
SpanishLa casa de papel: Berlín
Created byÁlex Pina
Esther Martínez Lobato
Starring
Opening theme"Bullets and Flowers"[1] by Francis White (ft. Nikki Garcia)
Country of originSpain
Original languageSpanish
No. of seasons1
No. of episodes8[1]
Production
Executive producersÁlex Pina
Esther Martínez Lobato
Albert Pintó
Cristina López Ferraz
Production locations
Spain[1]
France[1]
Camera setupSingle-camera
Running time58-61 minutes
Production companyVancouver Media[1]
Original release
NetworkNetflix
Release29 December 2023
Related

0 comments: