Friday, January 12, 2024

ரங்கோலி (2023) _ தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா ) @ அமேசான் பிரைம்


கேளடி  கண்மணி  பட  புகழ்  இயக்குநர்  வசந்த் திடம்  அசிஸ்டெண்ட்  டைரக்டர்  ஆக  இருந்த வாலி  மோகன்  தாஸ்  அறிமுக  இயக்குநர்  ஆக களம்  காணும்  படம்  இது . தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில்  ஒரே  சமயத்தில்  உருவான  படம். இதன்  ஷூட்டிங்  கேரளா  வில்  நடந்தது.தயாரிப்பாளர்   அழகப்பன்   அவர்களின்  பேரன்   மாநகரம், தெய்வத்திருமகள்  ஆகிய  படங்களில்  குழந்தை  நட்சத்திரமாக  நடித்து  முதன்  முதலாக  நாயகன்  ஆக  நடித்த  படம்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனின்  அப்பா  ஒரு  சலவைத்தொழிலாளி.  அம்மா , அக்கா  என  அழகிய  குடும்பம். அக்காவுக்கு  படிப்பு  ஏறவில்லை . வேலைக்குப்போகிறார். நாயகன்  பள்ளியில்  11 வது  படிக்கிறான். ஸ்கூலில்  சக  மாணவர்களுடன்  ஒரு  தகறாரு


  தனது  மகனை  அரசுப்பள்ளியில்  படிக்க  வைப்பதை  விட  தனியார்  பள்ளியில்  ஆங்கில மீடியத்தில்  படிக்க  வைத்தால்  கவுரவம்  என  அப்பா  நினைக்கிறார். அதன்படியே  மகனை  அதிக  டொனேஷன்  வாங்கும்  தனியார் பள்ளியில்  சேர்க்கிறார்

ஆரம்பத்தில்  நாயகனால் சரியாகப்படிக்க  முடியவில்லை. இங்க்லீஷ்  மீடியம்  செட்  ஆகவில்லை 


நாயகி  அதே  ஸ்கூலில்  அதே  க்ளாசில்  சக  மாணவி. இருவரும்  விரும்புகிறார்கள் . நாயகியை  ஒரு  தலையாகக்காதலிக்கும்  இன்னொரு  தறுதலை  இவர்கள்  காதலை  சகிக்க  முடியாமல்  பாத்ரூமில் கிசு  கிசு   எழுதுகிறான். அதை  எழுதியது  நாயகன்  தான்  என  நாயகியும், மற்றவர்களூம்  நினைக்க  இருவருக்கும்  பிரிவு  ஏற்படுகிறது


 இதற்குப்பின்  நாயகனின்  படிப்பு , காதல்  இரண்டும்  வெற்றி  பெற்றதா? என்பது  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக ஹமாரேஷ்  பெயர் தான்  வாயில்  நுழைய  முடியாததாக  இருக்கிறது , ஆனால்  நடிப்பு  நம்  மனதில்  புகுந்து  விடுகிறது . கச்சிதமான  நடிப்பு 


 நாயகி  ஆக  பிரார்த்தனா  சந்தீப். வட்ட  வடிவம்  ஆன  சின்ன  முகம். ஸ்கூல்  யூனிஃபார்மில்  பார்க்கும்போது  சுமாராகத்தான்  இருக்கிறார். ஆனால்  சேலையில்  அழகாக  இருக்கிறார்.  சக  மாணவிகள் , தோழிகள்  நாயகியை  விட  அழகாகத்தெரிவது போல்  இருப்பது  பிரமையா? நிஜமா? தெரியவில்லை 


 நாயகனின்  அப்பாவாக  ஆடுகளம்  முருகதாஸ்  அட்டகாசமாக  நடித்திருக்கிறார். அம்மாவாக  சாய்  ஸ்ரீ பிரபாகரன்  யதார்த்த  நடிப்பு . அம்மா , அப்பா  இருவருக்குமான  பாண்டிங் , கெமிஸ்ட்ரி , இரண்டும் அ ருமை . அக்காவாக  நடித்த  அக்சயா  ஹரிஹரன்  வெரிகுட்  ஆக்டிங் 


 தமிழ்  வாத்தியாராக  வரும்  அமித்  பார்கவ்  நல்ல  குணச்சித்திர  நடிப்பு  


கே  எஸ்  சுந்தர  மூர்த்தியின்  இசையில்  10  பாடல்கள் , 3  ஹிட்  ஆகி  உள்ளன .ஆர்  சத்திய  நாராயணன்  எடிட்டிங்கில்  டைம்  ட்யூரேஷன்  128  நிமிடங்கள்  மட்டும்  வரும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்

 ஐ  மருத  நாயகம்  ஒளிப்பதிவு . இளமைக்கொண்டாட்டம்  ஆக  படம்  பிடித்து  இருக்கிறார் 


திரைக்கதை  எழுதி இயக்கி  இருக்கும் வாலி  மோகன்  தாஸ்   படத்தில்  நான்கு  பாடல்களையும்  எழுதி  இருக்கிறார்
சபாஷ்  டைரக்டர் (வாலி  மோகன்  தாஸ் ) 


1  நாயகனின்  அப்பா  தன்  மனைவியிடம்  ஏற்பட்ட  வாக்குவாதத்தின்போது  சமாதானப்படுத்த  , வாயை  அடைக்க  அவள்  கன்னத்தில்  முததமிட்டு விட்டு  ஓடும்  காட்சி கவிதை 

2  நாயகனின்  அப்பாவுக்கும் , அவர்க்கு  வட்டிக்கு  பணம்  கொடுத்த  நபருக்கும்  அவ்வப்போது நிகழும்  உரையாடல்கள்  டச்சிங்


3  பள்ளிக்காட்சிகள்  டீன்  ஏஜ்  தரப்பிற்குப்பிடிக்கும்  விதமாகவும், ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  காட்சிகள்  பெண்களுக்குப்பிடிக்கும்படியாகவும்  மேனேஜ்  பண்ணி  கொண்டு  போய்  இருப்பது  சிறப்பு 


  ரசித்த  வசனங்கள் 


1  என்னை  ஓட  விட்டாங்கனு  சொன்னியே? திரும்பி  நின்னு  அடிக்கனும்


2  உழைக்கிறவனுக்கு  இந்தத்திமிர்  கூட இல்லைன்னா  எப்டி ?


3  கொஞ்சமா  கோபப்படுடா, எனக்கே  பொறாமையா  இருக்கு 


4  நீங்க  படிச்சவரு , அதனால  எல்லாத்தையும்  அழகாப்பார்க்கறீங்க

 அதுக்கு  படிக்கனும்னு  அவசியம்  இல்லை , புரிதல்  இருந்தாப்போதும் 


5  கடல்ல  திரியும்  மீன்  அவன், அவனைப்போய் கிணற்றில்  போட்டுட்டு...லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  அரசுப்பள்ளியில்  படிப்பதை  விட  தனியார்  பள்ளியில்  டொனேசன்  கொடுத்துப்படிப்பதுதான்  ஸ்டேட்டஸ் என்னும்  தவறான  எண்ணத்தை  விதைக்கும்  கதைப்போக்கு  பெரிய  மைனஸ்


2  ஓப்பனிங்  சீன்ல  இருந்தே  நாயகன்  தாடியுடன்  தான்  இருக்கிறார். ஆனால்  ஒரு  பாடலில்  தாடி  வளர்க்கத்தோணுதே  என்ற  வரி  வருவது  மிஸ்மேட்சிங்


3  ஐ  ல யூ  பார்வது  என  யாரோ எழுதி  வைத்ததை நாயகன்  தான்  எழுதினான்  என  ஆளாளுக்கு  சொல்றாங்க , ஒரு  தடவை  எழுதிக்காட்டச்சொன்னால்  மேட்டர்  ஓவர்

4  க்ளாஸ்  ரூமில்  நான்கு  மாணவர்கள்  நாயகனைப்பிடித்து  அடிக்கிறார்கள் . அப்போது  உள்ளே  வந்த  டீச்சர்  நாயகனைப்பார்த்து  மறுபடி  தகறாரா? எனக்கேட்கிறார். அடித்தவர்களைக்கண்டு  கொள்ளவே  இல்லை .படம்  முழுக்கவேஎப்போது  ரகளை  நடந்தாலும்  நாயகன்  மட்டுமே  டார்கெட் செய்யப்படுவது  செயற்கை .  அனுதாபம்  உண்டாக்க  வலியத்திணித்த  காட்சிகள் 


5  க்ளைமாக்ஸ்  சீனும் , அதற்கு  முன்பான  சில காட்சிகளும்  மனதில்  ஒட்டவில்லை . திருப்தியாக  இல்லை  அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  போர்  அடிக்காமல்  படம்  போகிறது. ஆனாலும்  ஏனோ  முழு  திருப்தியைத்தரவில்லை . ரேட்டிங்  2.25 / 5 


ரங்கோலி
இயக்கம்வாலி மோகன் தாஸ்
எழுதியவர்வாலி மோகன் தாஸ்
உற்பத்திகே. பாபு ரெட்டி
ஜி. சதீஷ் குமார்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஐ.மருதநாயகம்
திருத்தியவர்ஆர்.சத்தியநாராயணன்
இசைசுந்தரமூர்த்தி கே.எஸ்
தயாரிப்பு
நிறுவனம்
கோபுரம் ஸ்டுடியோஸ்
வெளிவரும் தேதி
  • 1 செப்டம்பர் 2023
விவரங்கள் தேவை ]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: