Tuesday, January 16, 2024

SWATHI MUTTHINA MALE HANIYE ( 2023) - கன்னடம் - சினிமா விமர்சனம் (ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்


நடிகை  திவ்யா  ஸ்பந்தனா  என்னும் ரம்யாவின்  சொந்தப்படம்  இது . ஆனால்  அவர்  இதில் நடிக்கவில்லை . இது  ஒரு  ஃபீல்  குட்  மூவி , தியேட்டர்களில்   ரிலீஸ்  ஆனபோது  அன்பே   சிவம் படம்  போல  பெரிதாக  வெற்றி  பெற  வில்லை , ஆனால்  ஓ டி டி  ரிலீசுக்குப்பின்  பலரும்  கொண்டாடி  வருகிறார்கள் . டீன்  ஏஜ் நபர்களுக்குப்படம் பிடிப்பது  சிரமம், ஸ்லோ  மூவி , ஆனால்  குட்  மூவி 

 இது  தொடங்கும்போது  திவ்யா  ஸ்பந்தனா  வின் கம்  பேக்  படமாக  இருக்கும்  என்று  பேசப்பட்டது . படத்தின்  டைட்டிலுக்கு  கோர்ட்டில் கேஸ்  நடந்தது . இயக்குநர்  ராஜேந்திர  சிங்க்  பாபு 1990  ல்  இயக்கிய   BANNAADA  GEJJE    படத்தில்  வரும்  ஆரம்ப  வரிகளைக்கொண்டு  இருப்பதாகவும்  அதே  டைட்டிலில்  தான்  ஒரு  படம்  எடுக்க  இருப்பதாகவும்  கேஸ்  போட்டார் , ஆனால்  தீர்ப்பு  திவ்யா  ஸ்பந்தனாவுக்கு  சாதகம்  ஆக  வந்தது , ஆனால்  என்ன  காரணத்தினாலோ  அவரால்  நாயகி  ஆக நடிக்க முடியாமல்  போனது . ரேடியோ  ஜாக்கி  ஆக  இருந்த  ஸ்ரீ    நாயகி  ஆக  நடித்தார்   


நடிகரும், இயக்குநரும், எழுத்தாளரும்  ஆன   ராஜ்  பி  செட்டி  நாயகனாக  நடித்து  படத்தை  இயக்கி  இருக்கிறார். இவரது  படங்களில்  பெஸ்ட் இதுதான்  என  கன்னடப்பட  உலக  மீடியாக்களால்  கொண்டாடப்பட்டார் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு   மெடிக்கல்  கவுன்சிலர் ,  கேன்சர்   பேஷண்ட்ஸ்  இருக்கும் ஹாஸ்பிடலில்  அவர்  நோயாளிகளுக்கு  ஆலோசனை  வழங்குபவர்  ஆக  இருக்கிறார். 


 நாயகி  வசதியானவர் , கணவர்  எப்போதும்    அவர்  வேலையில்  பிசியாகவெ  இருப்பார் , இருவருக்கு  இடையே  அன்னியோன்யம்  எதுவும்  இல்லை .  தினசரி  சமைத்து  வைத்து  விட்டு  வேலைக்கு  செல்வதே  நாயகியின்  அன்றாட  வாழ்க்கை ஆக  இருந்தது 


நாயகி  தன்  கணவன்  இன்னொரு  பெண்ணுடன்  கள்ளக்காதலில்  இருப்பதை  உணர்ந்து  அதிர்கிறார். ஆனால்   கணவனைக்கேள்வி  எதுவும்  கேட்கவில்லை 


 நாயகி  ஹாஸ்பிடலில்  இருக்கும்  ஒரு  பேஷண்ட்டை  விரும்புகிறார்.  அவர்  விரைவில்  இறக்க  இருப்பவர் . இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதி  திரைக்கதை

 நாயகி  ஆக ஸ்ரீ  ரவிக்குமார்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். மொத்தபடத்தையும்  அவர்  தான்  தாங்கி  செல்கிறார். அவரது  நிர்மலமான  முகம், எளிமை ,  கண்ணிய  உடை  பெரிய  பிளஸ் .  படம்  முழுக்க  அவர்  அமைதியகவே   வருவது  அழகு ,  ஆர்ப்பாட்டம் , கோபம் , அழுகை  எதுவும்  காட்டாத  நாயகியைக்காண  வியப்பாக  இருக்கிறது


  நாயகன்  அக  , பேஷண்ட்   அனிகேத் ஆக    ராஜ்  பி  செட்டி நடித்திருக்கிறார். குட்  ஆக்டிங் , அனிகேத்  என்றால்  வீடு  இல்லாதவன்  என்று  பொருள். 


நாயகியின்  அம்மாவாக ரேகா  குட்லக்கி  கலக்கி  இருக்கிறார். சில  காட்சிகளே  வந்தாலும்  அருமையான  நடிப்பு .


இந்தப்படத்தில்  மவுனமான  தருணங்களே  பெரும்பாலும்  பின்னணி  இசையாக   இருக்கிறது மிதுன்  முக்ந்தாவின்  இசை  சிறப்பு 


 ஒளிப்பதிவு , எடிட்டிங்  இரண்டும்  ஒருவரே . பிரவீன்  ஸ்ரீயன். ஃபிரேம்  வைத்தது  போல  சில  ஷாட்கள்  கலக்கலாக  இருக்கின்றன 100  நிமிடங்கள்  ஓடும்படி  ஷார்ப் ஆக  கட்  செய்து  இருக்கிறார். பசவண்ணாவின்  வசனம்  தத்துவங்களை  அள்ளித்தெளிக்கிறது 


கதை , திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ராஜ் ;பி  செட்டி 



சபாஷ்  டைரக்டர்

1  கதையில்  சில  இடங்களில்  கள்ளக்காதல்  ச்ந்திப்புகள்  நடக்கின்றன. ஆனால்  ஒரு  காட்சி  கூட  நேரடியாக இல்லை , கண்ணியமாக , பூடகமாகத்தான்  காட்சிகள்  படமாக்கப்பட்டிருக்கின்றன


2  நாயகியும் அவர்  அம்மாவும்  சந்தித்து  தனிமையில்  பேசும்  அந்த  இடம்  உலகப்படத்துக்கு  நிகரான  காட்சி 


3   நாயகி  தன்  மேலிட  டாக்டரை  சந்திக்கும்போது  அவர்  கேட்கும்  சந்தேக  கேள்விகளுக்கு  தில்லாக  பதில்  அளிக்கும்  காட்சிகள்  நேர்மையான  பெண்  எதுக்கும் பயப்படாதவளாக  இருப்பாள்  என்பதை  பறை  சாற்றுகிறது 



  ரசித்த  வசனங்கள் 


1  வாழ்க்கைல  சில  விஷயங்கள்  ஏன் நடக்குது? எதுக்காக  நடக்குது? யாருக்கும்  தெரியாது .தெரிஞ்சுக்காமயே நாம  அதைக்கடந்து  போக  வேண்டி இருக்கு 


2  நோயாளிகள்ன்  வலி , அழுகை , துக்கம் , மரணம்  இவை  எல்லாம்  ஆரம்பத்துல  என்னை  ரொம்ப   பாதிச்சுது , ஆனா  இப்போ  பழகிடுச்சு 


3 நம்  அன்புக்கு  பாத்திரம்  ஆனவர்கள்  தடம்  மாறினால், நமக்கு  துரோகம்  இழைத்தால்  எந்த  ரீ  ஆக்சனும்  காட்டாமல்  இருப்பதும்  ஒரு  மெச்சூரிட்டி தான் 


4  விளையாட்டுத்தனத்தை  மூட்டை  கட்டி  வெச்சுட்டு  கொஞ்சம்  சீரியசா  பேச  முடியுமா?


 சாகப்போகும்  பேஷண்ட்  கிட்டே  சீரியசா  பேசச்சொல்றீங்களே? நீங்க  நிஜமாவே  கவுன்சிலர்  தானா?


5  எத்தனையோ  பூச்செடி  இருக்கும்போது  ஏன்  நந்தியா  வட்டைப்பூ  செடியை  செலக்ட்   பண்ணுனீங்க?


 ஏன்னா  ரோஜா, தாமரை  மாதிரி  மலர்கள்  ஆண்டவனுக்கு ப்படைக்கப்படுது. மற்ற  மலர்கள்  பெண்கள்  கூந்தலில்  சூடிக்கொள்கிறார்கள்< ஆனால்  நந்தியா  வட்டைப்பூக்களை  யாரும்  உபயோகிப்பதே இல்லை , கண்டு  கொள்வதும்  இல்லை, ஆனாலும்  தினமும்  ஏராளமான  மலர்களை அச்செடி  அளித்துக்கொண்டு  தான்  இருக்கிறது .அங்கீகாரம்  கிடைக்கவில்லை  என்றாலும்  நாமும்  அதே  போல்  நம்  கடமையை  செய்து  கொண்டே  இருக்க  வேண்டும் 


6   ஏன்  என்  கிட்டே  பேச  மாட்டேங்கறீங்க?


 நாளை  சாகப்போற  ஆள்  கிட்டே  பேச  என்ன  இருக்கு ?


 நாளை  சாகப்போறேன்  என்ற  ஒரு  காரணமே  போதுமே? பேசலாமே?


7  அம்மா , ஐ  லைக்  ஹிம்


 லைக்  மீன்ஸ்  , இன்  வாட் வே?


  ஏம்மா? அப்படிக்கேட்கறிங்க? நான்  ஒருத்தனை விரும்பறது  தப்பா?

 ஒரு கல்யாணம்  ஆன  பொண்ணு  தன்  அம்மா  கிட்டே  வேற  ஒருத்தனை  விருபுவதா  சொல்வது  தப்பு , ஆனா  ஒரு  பெண்னா  யோசிக்கும்போது  தப்பில்லைன்னு  தோணுது பெண்கள்  அவங்க  வாழ்க்கை  முழுவதும்  பாத்திரம்  கழுவுவது , சமைப்பது   என  முழு  வாழ்க்கையும்  வேலை  செஞ்சே  முடிஞ்சிடுது . அன்பு , காதல்  தவிர  அவங்களூக்கு  எல்லாம்  கிடைக்குது 


8  பெண்கள்  நாம்  நாமா  வாயைத்திறந்து  கணவன் கிட்டே  அன்பு  தேவைனு  கேட்பதும்  இல்லை , அவங்க  அன்பைத்தருவதும்  இல்லை 


9  வாழ்க்கை  முழுவதும்  ஐ  மீன்  சமாதிக்குப்போகும் வரை  நாம்  அன்பைத்தேடிக்கொண்டு  தான்  இருக்கிறோம்


10  நான்  ரொம்ப  வலிமையானவன்னு  நினைச்சுட்டு  இருந்தேன் , ஆனா  ஒரே  ஒர்  இரவு வந்த  வலி  அதை  பொய்  ஆக்கிடுச்சு 


11  ஒவ்வொரு  பேஷண்ட்டும் வலியால  துடிக்கும்போதும், யாராவது  இறக்கும்போதும்  எனக்கு  என்  அம்மா  நினைவு  வந்துடும்,, அம்மா  நோய்வாய்ப்பட்டு  இருந்தப்போ  என்னால  காப்பாத்த  முடியலை . 


12  இறப்பின்  விளிம்பில்  இருக்கும்  ஆளைக்காப்பாற்ற  நாம்  பெரிய  ஆட்கள்  இல்லை , சாமான்யர்கள் .நம்மலால  முடிந்தது  எல்லாம்  சந்தோஷமா  அவங்களை   அனுப்பி  வைப்பதுதான்


13   எவ்ளோ செடி இருக்கும்போது எதுக்காக இந்த செடிய எனக்கு கொடுத்தீங்க?"

"ஏன்னா இந்த செடியிலதான் டெய்லியும் நிறைய பூ பூக்கும்..."
"ஆமா எங்க வீட்டிலேயும் டெய்லி நிறைய பூ பூக்குற ஒரு செடி இருக்கு.. ஆனா பூ பூத்து.. பூக்களா கொட்டி.. மறுநாள் அந்த இடமே குப்பையா ஆகிடும்..."
"உங்க இடத்தை குப்பையாக்க அந்த பூக்கள், பூக்குறது இல்ல'ங்க.. அந்த பூக்கள், தங்களுடைய வாழ்க்கைய சந்தோஷமா சிரிச்சு கொண்டாடுறதுக்காக பூக்குது.. அதை ரசிச்சி பார்க்குறதும், கீழே விழுந்த உடனே குப்பையா நினைக்கிறதும் நம்மளோட மனசுலதான் இருக்கு.. அடுத்தவங்க என்ன நினைப்பாங்க அப்படிங்கிறதப்பத்தி எதையும் யோசிக்காம, நாம நம்ம வாழ்க்கையை சந்தோஷமா, இந்த பூக்கள் மாதிரி பூத்துகிட்டே இருக்கணும் அப்படிங்கறதுக்காகதான் இந்த செடிய உங்களுக்கு கொடுத்தேன்.. நான் அப்படித்தான் வாழ நினைக்கிறேன்.."



லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி  தன்  கணவன் , நண்பர்கள்  இருவர்  உடன்  ஒரு  பார்ட்டியில்  இருக்கிறார். பார்ட்டின்னா  இவங்க  நால்வர்  மட்டுமே, அப்போ  நாயகிக்கு  ஒரு  கால்  வருது . அது  பர்சனல்  கால்  அல்ல, அஃபிஷியல்  கால். பேஷண்ட்  பற்றிய  அப்டேட். 2  நிமிடத்தில்  கால்  பேசி  முடிச்சுடறார். அந்த  ஃபோன்  காலை  அங்கேயே  உட்கார்ந்து  பேசி  இருக்கலாமே? எதுக்கு  ஒரு [பர்லாங்  தூரம் நட்ந்து  வந்து  தனிமையில்  பேசனும் ?  


2  கணவனின்  கள்ளக்காதலி    நைட்  டைமில்  குட்  நைட்  என  மெசேஜ்  அனுப்புகிறாள்.கணவ்ன்  அப்போது  தன்  மனைவியுடன்  பெட்ரூமில்  இருக்கிறார்.  அன்  டைமில்  இப்டி  மெசேஜ்  அனுப்பாதே  என க. கா  விடம்  எச்சரித்து  இருக்க  மாட்டாரா?


3  கணவ்ன்  - நாயகி  இருவரும்  தம்பதியாக  இருந்தபோதிலும்  அவர்களுக்கு  நடுவே நெருக்கம் இல்லை . இரவில்  கூடல்  இல்லை .கணவனுக்கு கள்ளக்காதல்  இருக்கிறது . இப்படிப்பட்ட நிலையில்  அடுத்த  நாள்  காலை  கள்ளக்காதலியுடன்  அவுட்டிங்  போக  அட்வான்ஸ்  அரேஞ்ச்மெண்ட்ஸ்  ஆக  கணவன்   காண்டம்  பாக்கெட்  வாங்கி  நாயகி  கண்  முன்  டிராயரில்  வைக்கிறான். எந்த  மாங்கா  மடையனாவது  இப்படி  அப்பட்டமா  மாட்டிக்குவானா?  அதென்ன  கிடைக்காத  சீமைச்சர்க்கரையா? போறப்ப  மெடிக்கல்  ஷாப்ல  வாங்கிக்கக்கூடாதா?


4  நாயகி ,கணவன்  இருவரும்  பெரிய  பங்களாவில்  வசிக்கின்றனர் , கார்  இருக்கு . இருவரும்  நல்ல  சம்பாதிக்கும்  பணியில். ஆனால்  தின்சரி  நாயகி  தானே  வீடு .,  வாசல் , எல்லாம்  கூட்டி  சுத்தம்  செய்வது  போல்  காட்சி . டிது  எதற்காக? நாயகி  மேல்  அனுதாபம்  வரவா? சமையல்  செய்ய ., வீடு  கூட்டிப்பெருக்க , பாத்திரங்கள்  துலக்க  என  எதற்குமே  பணியாள்  இல்லை .( இந்தக்காலத்தில்  மிடில்  கிளாஸ்  ஃபேமிலிலயே  எல்லாத்துக்கும்  தனித்தனி  ஆட்கள்  வைத்துக்கொள்கிறார்கள் .)


5  நாயகி  ட்யூட்டில  இருக்கும்போது  மனசு  சரி  இல்லாம  ஆஃப்  டே  லீவ்  போட்டுட்டு  காரை  எடுத்துட்டு  வீட்டுக்கு  வர்றா. அங்கே  வீட்டு  வாசலில்  ஒரு லேடீஸ்  செப்பல்  இருக்கு , வீடு உள்  பக்கமா  தாழ்  போட்டிருக்கு . காமன்சென்ஸ்  உள்ள  எந்த  ஆணாவது  கள்ளக்காதலியை  தன்  வீட்டுக்கு    அழைத்து  வருவானா? அப்படியே  வர  வைத்தாலும்  லேடீஸ்  செப்பலை  அப்படித்தான்  பெப்பரப்பேனு  வெளில  விட்டுட்டு  இருப்பாங்களா? 


6  நாயகி  மாலை  வீட்டுக்கு  வரும்போது  பெட்ரூமில்  பெட்ஷீட்ஸ்  எல்லாம்  கசங்கி  அலங்கோலமாக  இருக்கு கணவன்  அதைக்கூட  க்ளீன்  பண்ண  மாட்டானா? அட்லீஸ்ட்  கள்ளக்காதலியாவது  அதை  சரி  செய்ய  மாட்டாளா? 


7  புதிதாக  அட்மிட்  ஆன  பேஷண்ட்  தாடி  வெச்சுட்டு  பிச்சைக்காரன்  மாதிரி  இருக்கான். நாயகிக்கு  அவனைப்பார்த்த  இரண்டாவது  முறையே  காதல்  வருவது  நம்பும்படி  இல்லை . கணவ்ன்  அதுக்கு,ம்  மேல  தாடி , குடுமி  வெச்சுக்கிட்டு பைத்தியக்காரன்  மாதிரி இருக்கான். இரு  நாயகர்களில்  ஒருவரையாவது  கொஞ்சம்  டீசண்ட்  ஆக , ஹேண்ட்சம்  ஆகக்காட்டி   இருக்க்கலாம். 


8  நாயகி  அந்த  புது  பேஷண்ட்  எழுதிய  கடிதத்தை  கசக்கி  எறிகிறாள். பின்  மனம்  மாறி  அதை  பத்திரப்படுத்துகிறாள் . என்ன தான் அயர்ன்  பண்ணி  ரெடி  பண்ணினாலும்  கசக்கிய  காகிதம்  மீண்டும்  புதுத்தாள்  மாதிரி  வராதே?  நாயகி  அதை  ஃப்ரேம்  பண்ணி  அவனுக்கே  பரிசாகக்கொடுக்கும்போது  கசங்கிய  காகிதம் எப்படி  நீட்டா  ஆச்சுனு  நீட்  எக்சாம்ல  ஃபெயில்  ஆன  ஆளுக்குக்கூடத்தோணுமே? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஆர்ட்  ஃபிலிம்  போல  ஸ்லோவாக  நகரும்  ஃபீல்  குட்  மூவி , பெண்களுக்கும், 50+  நபர்களுக்கும் பிடிக்கும்., ரேட்டிங் 3 / 5 


Swathi Mutthina Male Haniye
Directed byRaj B. Shetty
Written byRaj B. Shetty
Screenplay byRaj B. Shetty
Story byRaj B. Shetty
Produced byRamya
Ravi Rai Kalasa
Vachan Shetty
StarringRaj B. Shetty
Siri Ravikumar
CinematographyPraveen Shriyan
Edited byPraveen Shriyan
Music byMidhun Mukundan
Production
companies
Lighter Buddha Films
AppleBox Studios
Distributed byKRG Studios
Release date
  • 24 November 2023
Running time
101 minutes
CountryIndia
LanguageKannada

0 comments: