Sunday, February 26, 2023

HUNT (2023) தெலுங்கு - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @அமேசான் பிரைம்


சுதீர்  பாபு    
ரசிகர்களை  க்ளைமாக்சில்  அதிர்ச்சியில் ஆழ்த்தப்போகும் படம்.  டைட்டில் , போஸ்டர்  டிசைன்  எல்லாம் பார்த்து  இதுவும் வழக்கம்  போல  சிங்கம்  போலவோ , சாமி போலவோ  ஒரு போலீஸ்  ஆக்சன்  ஸ்டோரியாத்தான் இருக்கும்னு அசால்ட்டா   இருக்க  வேண்டாம் . இது  சைக்கோ  க்ரைம் த்ரில்லர்  படம் 

 

ஹீரோ சுதீர் பாபு ,  பரத்   இருவரும்  செம  க்ளோஸ்  ஃபிரண்ட்ஸ் . இருவருமே  அசிஸ்டெண்ட்  கமிஷனர்   கேட்டகிரி  தான். ஸ்ரீ காந்த்  கமிஷனர் . இவங்க  3  பேருமே  பதவியைத்தாண்டிய ஒரு நட்பு வட்டத்தில் இருக்காங்க

 

ஒரு தருணத்துல  கப்பல்  படையைச்சேர்ந்த  ஒரு  உயர்  அதிகாரியை  ட்ரங்க்கன்  டிரைவிங் கேஸ்ல  பரத்  பிடிச்சுடறார். அவர்  தன்னோட  செல்வாக்கைப்பயன்படுத்தி  என்ன என்னமோ செஞ்சு  பார்க்கறார். ஆனா  மீடியாவில்  அவர்  பேர்  ரிப்பேர் ஆகிடுது . இதனால  அந்த  ஆஃபீசருக்கு    பரத்  மேல செம காண்டு

 

பரத்தால் பாதிக்கப்பட்ட  இன்னொரு  ரவுடி  ஒருத்தன் இருக்கான். போலீஸ்  ஆஃபீசருக்குப்பகையாதான் ஏகப்பட்ட  பேர்  இருப்பாங்களே? இது மாதிரி  அவருக்குப்பைகையான  சில நபர்களின் சம்பவக்கோர்வைகளா  திரைக்கதை  நகருது

 

 ஒரு கட்டத்துல  பரத்துக்கு  ஒரு விருது  தரப்படும் விழாவில்  அவர்  மேடைல பேசிக்கொண்டு இருக்கும்போது  யாரோ  துப்பாக்கியால்  ஷூட்  பண்ணி  கொலை பண்ணிடறாங்க / ஸ்பாட்ல  இருந்த  சுதீர் பாபுவும்  , ஸ்ரீ  காந்த்தும்   எவ்வளவோ  முயற்சித்தும்  கொலையாளியைப்பிடிக்க  முடியல

 

 மீடியாக்கள்  இதைப்பெரிய  இஷ்யூ ஆக்குது . கேசை  க்ளோஸ்  பண்ணவேண்டிய  நெருக்கடி . சுதீர்  பாபு  ஒரு கட்டத்துல  ஸ்ரீ  காந்த்க்கு  ஃபோன்  பண்ணி  கொலையாளியை  கண்டு பிடித்து விட்டேன்னு  சொல்லும்போது எதிர்பாராத விதமா  ஒரு கார் ஆக்சிடெண்ட்ல மாட்டிக்கொள்கிறார்

 

 ஆஸ்பத்திரில  அவருக்கு  பழைய  நினைவுகள்  எல்லாம்  அழிந்து  விடுகிறது . அதாவது  அவர் போலீஸ்  ஆஃபீசர்  என்பதும்  மற்ற  சில  விபரங்கள்  எல்லாம் நினைவு   இருக்கிறது , ஆனால்  இந்த  கொலைக்கேஸ்  விபரங்கள்  மற்றும் இவரது  நண்பர்கள்  பற்றிய  விபரங்கள்  மறந்து  விடுகிறது

 

 

 இந்த  கேசை  மீண்டும்  நீயே டீல்  பண்ணுனு  ஸ்ரீ  காந்த்  சுதீர் பாபு  கிட்டே   ஒப்படைக்கறார்.அதுக்குப்பின்  அவர்  கொலையாளீயை  கண்டுபிடிச்சாரா? என்பதுதான் கதை 


சுதீர்பாபு   நடிப்பை  நான்  முதன் முதலாக AA AMMAYI KURINCHI MEEKU CHEPALI (2022) தெலுங்குப்படத்தில்தான்  பார்த்தேன் , சிறப்பான  நடிப்பு .. இதிலும்  அவரது   நடிப்பு பக்கா . குறிப்பாக  க்ளைமாக்ஸ்  காட்சியில் பின்னிப்பெடல்  எடுத்து விட்டார்


ஹிந்தியில்  வந்த  தல்வார்  படத்தில் வருவ்து  போல  ஹீரோவான  போலீஸ்  ஆஃபீசரை   சிலர்  குறை  சொல்லும்  காட்சிகள்  உண்டு. அதில் தயங்காமல்  நடித்தது  சபாஷ் . குறிப்பாக  அவருக்குக்கீழே  வேலை  செய்யும்  3  போலீஸ்  ஆஃபீசர்களும்  டீம் லீடரை  மாத்தனும்  என அவர்  முன்னாலயே  கமிஷனரிடம்  முறையிடும்  இடத்தில் சுதீர்பாபு  நடிப்பு  கலக்கல் 


பரத் நடிப்பில்  குறை  வைக்கவில்லை . மேடையில்  என்ன  பேசப்போகிறோம்  என்பதை  மனைவியிடம்  ஒத்திகை  பார்க்கும்  சீன்  ஒரு உதாரணம் . நண்பனை  விட்டுக்கொடுக்காத  நடிப்பும்   அருமை 


ஸ்ரீகாந்த்   ஹையர்  ஆஃபீசராக , கமிஷனராக  இருந்தாலும்  அலட்டிக்கொள்ளாத நடிப்பு 


ஜிப்ரானின்  இசையில்  ஒரே  ஒரு  பாடலுடன்  நிறுத்திக்கொண்டது  மகிழ்ச்சி, இது  போல  த்ரில்லர் படங்களுக்கு  பாடல்கள் , காமெடி  டிராக்  , டூயட்  எல்லாம்  ஸ்பீடு  பிரேக்கர்கள் , பின்னணி  இசையில்  பிரித்து  மேய்ந்து  இருக்கிறார்


அருள்  வின்செண்ட்டின் ஒளிப்பதிவு  கச்சிதம் பிரவீன் புடியின்  எடிட்டிங்கில் காட்சிகள்  விறுவிறுப்பாக  ட்ரிம்  செய்யப்பட்டு  இருக்கின்றன.

2013ஆம்  ஆண்டு  பிருத்விராஜ்  நடித்த  மும்பை  போலீஸ்  படத்தின்  அஃபிஷியல்  ரீமேக்  இது / 

சபாஷ்  டைரக்டர் 


1   முறைப்படி  படத்தின்  கதை  மொத்தமே  40 நிமிடங்கள்  தான். அதை  2 மணி நேரப்படமாக  இழுக்க  இயக்குநர்  கண்டு  பிடித்த  வெற்றி விழா  கமல்  ஞாபக மறதி உத்தி  அருமை 


2  கொலை  நடக்கும்  ஸ்டேடியம்   அருகில்  இருக்கும்  பில்டிங்  டீட்டெய்லிங்  எல்லாம் பக்கா 3  திரைக்கதையின்  திருப்புமுனைக்காட்சியாக  வரும் GAY  காட்சி  கையளப்பட்ட   விதம்  குட் 


நச்   டயலாக்


 சில  கேஸ்களில்  சிலர்  பேசற  சாதாரண  விஷயங்கள்  கூட  க்ளூவாக  மாறும் லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள்


1   ஒரு  கமிஷனர்  தன் செல் ஃபோனில்  வந்த  வாய்ஸ்  மெசேஜைக்கூட  கவனிக்காமல்  இருப்பாரா?


2  முக்கியமான  கொலைக்கேஸ்  பற்றிய  விபரத்தை  அவருக்குக்கீழ்  பணி ஆற்றும்  போலீஸ்  ஆஃபீசர்  அனுப்பிய  மெசேஜை  அவர்  கவனிக்காமல்  இருப்பது  நம்பும்படி  இல்லை . அதை  சில  மாதஙக்ள்  கழித்து  அவர்  சொன்னதும்  டக்னு  ஃபோனில்  எடுத்து  உடனே  ஓப்பன்  பண்ணுவதும்  நம்பற  மாதிரி  இல்லை 


சி.பி ஃபைனல்  கமெண்ட்  -   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  பிரமாதம்  ,அந்த  ஒரு  ப்ளஸ்  பாய்ண்ட்டை  வைத்தே  குறும்படமாக  எடுக்க வேண்டிய  படத்தை  முழு நீளப்படமாக  எடுத்த  இயக்குநரின் திறமைக்கு  ஒரு ஷொட்டு . ரேட்டிங்  3 / 5 Hunt
Directed byMahesh Surapaneni
Based onMumbai Police
Produced byV. Ananda Prasad
StarringSudheer Babu
Srikanth
Bharath
CinematographyArul Vincent
Edited byPraveen Pudi
Music byGhibran
Production
company
Release date
  • 26 January 2023
CountryIndia
LanguageTelugu

1 comments:

sam said...

it is an remake of malayalam movie mumbai police