Tuesday, February 07, 2023

GANGUBAI KATHIYAWADI (2022)ஹிந்தி - சினிமா விமர்சனம் (பையோகிராஃபிக்க்ல் க்ரைம் மெலோ டிராமா) @ நெட் ஃபிளிக்ஸ்


160  கோடி  செலவில்  எடுக்கப்பட்டு பாக்ஸ்  ஆஃபீசில் 210 கோடி  வசூல் செய்த படம், எஸ் ஹூசைன் ஜைதி  எழுதிய  மாஃபியா  க்யூன்ஸ்  ஆஃப்  மும்பை  எனும் புத்தகத்தை  அடிப்படையாகக்கொண்டு  திரைக்கதை  எழுதப்பட்டது. இது  மும்பையில்  வாழ்ந்த  கங்குபாய்  எனும்  பெண்ணின்  உண்மைக்கதை


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  மிகப்பெரும்  செல்வந்தக்குடும்பத்தில்  பிறந்தவர். அவருக்கு  டீன்  ஏஜ்  நடக்கும்போது ஒரு  காதலன  அவன்  கூட  ஊரை  விட்டு  ஓடிப்போக  கிளம்புகிறார்.  அம்மா  நகைகளுடன்  காதலடனுன்  பஸ்  ஏறிய  நாயகி காதலனால்  ஏமாற்றப்படுகிறாள்.  அவன்  நகைகளை  அவளிடமிருந்து  வாங்கிக்கொண்டு  மும்பையில்  ஒரு  ரெட்  லைட்   ஏரியாவில்  விற்று  விடுகிறான். நாயகி  கடுமையாகபோராடியும், எதிர்த்தும்  பலன்  இல்லை .இப்போது  நாயகி  மும்பை  கத்தியவாடி பகுதியில்  ஒரு  விலைம்கள்  ஆகி விட்டாள் 


கஸ்டமர்களுடன்  அனுசரித்துப்போக  ஆரம்பித்த  நாய்கி  ஒரு கட்டத்தில்  ஒரு   தாதாவால்  துன்புறுத்தப்படுகிறாள் , மிக  கொடூரமான  சித்ரவதைக்கு  ஆளானவள்  அந்த  தாதாவின்  பாஸ்  இருக்கும்  இடம் தேடிப்போய்  அவனைப்பற்றி  புகார்  செய்கிறார். அந்த  பாஸ்  நாயகிக்கு  உதவுகிறார். இருவருக்கும்  அண்ணன்  தங்கை  உறவு போல  ஒரு  பந்தம்  உருவாகிறது


நாளடைவில்  நாயகி அந்த  ஏரியாவின்  தலைவி  ஆகிறாள். ஆல்ரெடி  அங்கே  இருந்த  தலைவி  நோய்வாய்ப்பட்டு இறந்ததால்  செல்வாக்கு  மிக்க  நாயகி  தலைவி  ஆகி விட்டாள் 


பிறகு  தேர்தலில்  போட்டி  இட்டு  கவுன்சிலர்  அகிறாள் 


ஒரு  டெய்லர்  நாயகியை  விட  வயதில்  குறைந்தவன் நாயகியைக்காதலிப்பதாகக்கூறுகிறான், நாயகிக்கும்  அவன்  மேல்  இஷ்டம், ஆனால்  அந்த  ஏரியாவில்  இருக்கும்  இன்னொரு  விலைமகளின்  டீன்  ஏஜ் பெண்ணுக்கு  அவனை  மணம்  முடிக்கிறாள்


  ஒரு பிரபல  பத்திரிக்கை  நாயகியைப்பேட்டி  எடுக்கிறது/ நாயகி  அவள்  பக்க  நியாயத்தை  சொல்லி  பேட்டி  தருகிறார்.   மிகப்புகழ்  பெறுகிறார், ஒரு கட்டத்தில்  பிரதமரை  சந்தித்து  உரையாடும்  அளவுக்கு  செல்வாக்கு  பெறுகிறார். பிரதமரை  சந்தித்தபோது நடந்தது  என்ன    என்பதே  க்ளைமாக்ஸ்


நாயகியாக  அலியாபட் .  குருவி  தலையில்  பனங்காய் வைத்த  கதைதான்.  மிகவும்  பவர்  ஃபுல்லான  ரோல்.  மிகச்சின்ன  வயதுப்பெண்ணிடம்  இந்த  ரோலை  தந்து  விட்டார்களோ  என்ற  எண்ணம்  தோன்றுகிறது. ஒரு  விஜய்சாந்தி  அல்லது  ரம்யா  கிருஷ்ணன்  மாதிரி  ஆஜானுபாவகமான  ஆள்  செய்ய  வேண்டிய  ரோல்.  ஆனாலும்  சமாளித்து  நடித்து    இருக்கிறார்


ஏரியா தாதாக்களின்  பாஸ்  ஆக  அஜய்தேவ்கான்  கச்சிதமான  நடிப்பு 


படத்தின்  மிகப்பெரிய  பலம்  ஒளிப்பதிவு.  ரவிவர்மா  வரைந்த  ஓவியம்  போல்  ஒவ்வொரு  காட்சியும்  வுஷூவல்  ட்ரீட்  தான்


ஒரிஜினல்  புத்தகத்தில்  இருக்கும்  முக்கியமான  விஷயங்களை  விட்டு  விட்டார்கள் , மேம்போக்கான  காட்சி  அமைப்புகள்  தான்  படம்  முழுக்க  வருகின்றன


சஞ்சய்  லீலா  பன்சாலி  தான்  திரைக்கதை , இயக்கம்  எடிட்டிங்  எல்லாம். கச்சிதமான  பணி .


சஞ்சித் பல்ஹாராவின்  இசையில்  6  பாடல்கள்  அதில்  3  பாடல்கள்  செம  ஹிட்  ஆனவை சுதீப்  சேட்டர்ஜிதான்  ஒளிப்பதிவு .  மிகப்பெரிய  பலமே  இவர்தான் 


154   நிமிடங்கள்  ஓடும்  அளவு  ட்ரிம் செய்யப்பட்ட இந்தப்படம்  நெட்  ஃபிளிக்ஸ்  ஓ டி டி  தளத்தில்  காணக்கிடைக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1   நாயகியின்  ஓப்பனிங்  சாங்கில்  ஆடை  வடிவமைப்பு ,  டான்ஸ்  மூவ்மெண்ட்டஸ்  அனைத்தும்  பிரமாதம்


2   ஆர்ட்  டைரக்சன்  அந்தக்கால  மும்பை  சிவப்பு  விளக்குப்பகுதியை  கண்  முன்  நிறுத்துகிறது 


3  நாயகி  க்கும்  இரண்டாவது  காதலனுக்குமான  காட்சிகள்  கண்ணியமாக  கவிதை  மாதிரி  படைக்கப்பட்டுள்ளன


4  பிரபல  பத்திரிக்கையின்  அட்டைப்படத்தில்  நாயகியின்  புகைப்படம்  வந்த  போது  நாயகி முகத்தில்  காட்டும்  வெட்கம்  கலந்த  பெருமிதம்  பிரமாதம்



  ரசித்த  வசனங்கள் 


1  இங்கே  வர்ற  எல்லாப்பெண்களுக்கும்  ஒரே  கதைதான். நெருங்கிய  சொந்தங்களால்தான்  ஏமாற்றப்பட்டிருப்பாங்க 


2  ஒவ்வொரு  இரவும்  முதல்  இரவு  தான், ஆனா  ஒவ்வொரு  முறையும்  புது  புருசன்


3  உன்  க்ளையண்ட்ஸ்க்கு  உன்  உடம்புதான்  பிரதானம்  , முகத்துக்கு  மேக்கப்  எதுக்கு ? அதை  யார்  பார்க்கப்போறா? 


4  போரில்   வீரர்கள்  எப்படி  சில  கொடுமைகளை  சந்திக்கறாங்களோ  அந்த  மாதிரி  இந்தத்தொழிலிலும்  சில  சமயம்  சில  சைக்கோக்கள்  வந்து  நம்மைக்கொடுமைப்படுத்துவது  சகஜம்


5  தேர்தலில்  ஜெயிக்க  உண்மை  போதாது , நேர்மை  தேவைப்படாது , பணம்  தான்  பேசும்


6  நான்  தான்  குளிக்கிறேன், ஆனால்  நீ தான்  வியர்வையில்  நனைகிறாய்


7   நீ  போலீஸ் மேன்  தானே? ஏன்  போஸ்ட்மேன்  வேலையை  செய்யறே? 


8  நான்  நினைச்சா  பகல்லயே  நட்சத்திரத்தைக்காட்ட  முடியும்


9  இவ்ளோ  நகை , பணம்  கொடுக்கறீங்களே? இது  என்னை  வாங்கவா? அவளை  விற்கவா?


10   ஒரு  பெண்  பதவிக்கோ  , அதிகாரத்துக்கோ  வரும்போது  ஆணின்  சுப்பீரியாரிட்டி  காம்ப்ளெக்ஸ்  என்ன  ஆகும்?


11  ரெட்  லைட்  ஏரியா  பெண்களுக்கு  பேங்க்  அக்கவுண்ட்  ஓப்பன்  பண்ண  பேங்க்  அதிகாரிகள் யாரும்  தயாரா  இல்லை 


 ஆனா  அந்தப்பொண்ணுங்க  டிரசை  ஓப்பன்  பண்ண  மட்டும் தயாரா  இருக்காங்க ?


12   ஸ்கூலுக்குப்பக்கத்தில்  பிராத்தல்  செண்ட்டர்  இருக்கே?னு  ஏன்  நெகடிவ்வாப்பார்க்கறீங்க? பிராத்தல்  செண்ட்டர்  இருக்கற  ஏரியாவில்   ஸ்கூல்    இருக்குனு  ;பாசிட்டிவ்வா  பார்க்கலாமே?


13  நான்  ஒரு  ஜர்னலிஸ்ட்,  சாரி , உங்க  கிட்டே  இன்ஃபார்ம்  பண்ணாம  வந்துட்டேன்


 இங்கே  வர்றவங்க  யார்  அப்பாய்ண்ட்மெண்ட்  வாங்கிட்டு  வர்றாங்க ?


14   இறந்து விட்ட  இவ்ளின் கால்களை  இறுக்கி கட்டி  விடுங்கள், புதைக்கும்  முன் . ஆண்களை  நம்ப்  முடியாது , செத்த  பிணம்  என்றும்  பார்க்க  மாட்டார்கள் 


15  நீங்க  இப்போ  புகழ்  பெற்ற  நபர்  ஆகிவிட்டீர்கள்., இந்த்  புகழை  பயன்படுத்திக்குங்க. மக்கள் புகழ்  பெற்றவர்களை  தேடி  வருவார்கள் 


16  மேடைல  உங்களை  அட்ரஸ்  பண்றப்போ  மிஸ்  என  அழைப்பதா?  மிசஸ்  என  அழைப்பதா?


  நான்  மிஸ்  பட்டத்தை  மிஸ்  பண்ணி  ரொம்ப  நாட்கள் ஆகிடுச்சு , என்னை மிசஸ்  ஆக்க ( ஆக்கிக்க) யாருமே  விரும்ப  மாட்டாங்க 


17  உலகிலேயே  மிக  பழமை  வாய்ந்த , ,மிக  புராதனமான  தொழில்  எது  தெரியுமா?  விபச்சாரம்தான். நாங்க  இல்லாம  சொர்க்கமே  பூர்த்தி  அடையாது 


18   உங்களை  விட  நாங்க  தான்  தூய்மை மிக்கவர்கள் , எப்படி ? தெரியுமா? நீங்க  வாழ்க்கைல  ஒரே  ஒரு  முறை தான்  உங்க  தூய்மையை  ( கன்னித்தன்மை/கண்ணன் தன்மை )  இழக்கறீங்க, நாங்க  ஒவ்வொரு  நாள்  இரவும் இழக்கறோம்


19  ஆண்களுடைய  காமம்  எங்களால் தான் தீர்க்கப்படுகிறது, இன்னும்  சொல்லப்போனா  பெண்கள்  பாதுகப்பா  நடமாட  நாங்க  உதவறோம் 


20  சிவப்பு  விளக்குப்பகுதி  மட்டும்  இல்லைன்னா  நாடு  நகரம்  எல்லாம்  நரகம் ஆகிடும், வனம்  போல்  ஆகிடும், ;பெண்களுக்கு  பாதுகாப்பு  இருக்காது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகி  வசதியான  குடும்பத்தைச்சேர்ந்தவர். அவரது  நகைகளை  அபேஸ்  செய்து  எடுத்துக்கொள்ளும்  காதலன்  அவரை  ரெட்  லைட்  ஏரியாவில்  1000  ரூபாய்க்கு  விற்பது  நம்பும்படி  இல்லை . அவரை  வைத்து  அவர்  அப்பாவிடமோ  அம்மாவிடமோ  இதை  விட  பல  மடங்கு  பணம்  சம்பாதித்திருக்க  முடியுமே?ஒரு  ஏழைப்பெண்ணை  இப்படி  விற்பது   வேண்டுமானால்  லாஜிக் படி  சரி 


2  நாயகி  ரெட்  லைட்  ஏரியாவில்  தலைவி  ஆனதும்  அங்கே  இருக்கும்  பெண்களை  அவரவர்  வீட்டுக்கோ  எங்கேயோ  சுதந்திரமாக  ஏன்  அனுப்பவில்லை ? எல்லாரின்  வலி  உணர்ந்தவர்  என  போற்றப்படுபவர்  பழைய  தலைவி  செய்யும்  அதே  காரியத்தை  செய்யத்தூண்டினால்  இருவருக்கும்  என்ன  வித்தியாசம்?


3  தன்னை  சேடிஸ்ட்டாக  துன்புறுத்திய  ஒரு  கஸ்டமர்  பற்றி  அந்த  ஏஇரியா  தாதாவிடம்  புகார்  கொடுத்து  அவனை  அடிக்க  வைத்த  நாயகி  தன்னை  இந்நிலைக்கு ஆளாக்கிய  முன்னாள்  காதலனைப்பழி  வாங்க  எந்த  நட வடிக்கையும்  எடுக்க வில்லையே? 


4  தேர்தலில்  ஜெயிச்சா  பாதிக்கப்பட்ட  ரெட்  லைட்  ஏரியா  பொண்ணுங்களுக்காகப்பாடுபடுவேன்னு  நாயகி  சொல்றப்போ  ஏம்மா, அவங்களை   ரிலீஸ்  பண்ணி  அனுப்பும்  அதிகாரம்  உன்  கிட்டே தானே  இருக்கு ? அதை  ஏன்  செய்யலை?னு  கேட்கத்தோணுது


5  நாயகி  அழைத்ததும்  நாயகன்  கடையைப்பூட்டாமல்  கிளம்பறாரு அட்லீஸ்ட்  கடையைப்பார்த்துக்குங்கனு  பக்கத்து  கடை  ஆள்  கிட்டே  கூட  சொல்லலை .


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-  கதைக்கரு  விலைமக்ள்  பற்றிய  கதை  என்றாலும்   முகம்  சுளிக்கும்படியான    காட்சி  ஏதும்  இல்லை 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நாயகி  அலியாபட்  அழகு, இளமை யை  ரசிப்பவர்கள் ,  ஒளிப்பதிவை  சிலாகிபவர்கள் , சஞ்சய்  பன்சாலியின்  ரசிகர்கள்  பார்க்கலாம்  . ரேட்டிங்  2.5 / 5 


Gangubai Kathiawadi
Gangubai Kathiawadi film poster.jpg
Theatrical release poster
Directed bySanjay Leela Bhansali
Screenplay bySanjay Leela Bhansali
Utkarshini Vashishtha
Story byHussain Zaidi
Produced byJayantilal Gada
Sanjay Leela Bhansali
Starring
CinematographySudeep Chatterjee
Edited bySanjay Leela Bhansali
Music bySanchit Balhara
Production
companies
Bhansali Productions
Pen India Limited
Distributed byPen Marudhar Entertainment
Release dates
  • 16 February 2022 (Berlinale)
  • 25 February 2022 (India)
Running time
154 minutes[1]
CountryIndia

0 comments: