Tuesday, February 21, 2023

கண்ணாடி பூக்கள் (2005) - தமிழ் - ENTE VEEDU APPUVINTEYUM (2003) மலையாளம் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா) @ ஜெ மூவிஸ் & யூ ட்யூப்


 மலையாள  நடிகர் ஜெயராமின்  மகன்  காளி  தாஸ்  ஜெயராம்  குழந்தை  நட்சத்திரமாக  அறிமுகமாகி  2003 ஆம்  ஆண்டின்  சிறந்த  குழந்தை  நட்சத்திரத்துக்கான தேசிய  விருது  பெற்ற ENTE VEEDU APPUVINTEYUM  என்ற  மலையாளப்படத்தின்  அஃபிஷியல்  ரீ  மேக்  தான்  இந்த கண்ணாடி பூக்கள்

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகனுக்கு  ஏற்கனவே  மணம்  ஆகி  ஒரு  குழந்தை  உண்டு, மனைவி  இறந்து  விட்டதால்  நாயகியை  இரண்டாம்  தாரமாக  மணம்  முடிக்கிறார்.  நாயகி  சித்தி  முறை  ஆனாலும்  நாயகனின்  குழந்தையை  தன்  குழந்தையாக  பார்த்துக்கொள்கிறார். மகனுக்கும்  நம்  அம்மா இவர்  அல்ல , சித்தி  முறைதான்  என்பது  தெரியும்


 இப்படி  இருக்கும்போது  நாயகி  கர்ப்பம்  ஆகி  ஒரு குழந்தைக்கு  தாய்  ஆகிறார். இதற்குப்பின்  நாயகன், நாயகி இருவரும்  புதுக்குழந்தை  மேல்  தான்  அதிக  பாசமாக  இருக்கிறார்கள் , நம்மைக்கவனிப்பதே  இல்லை , நம் மேல்  பாசம் இல்லை  என  தவறாக  நினைக்கிறான். இதுவும்  ஒருவகை  பொசசிவ்னெஸ் தான்


ஒரு  நாள்  ஸ்கூலுக்குக்கிளம்பும்போது  ஸ்கூல்  வேன்  வாசலில்  நிற்கிறது. பையன்  இன்னும்  ரெடி  ஆகவில்லை . அவனுக்கு  தலை  சீவி விட  அம்மா  வராமல்  புதிய  குழந்தை  பசியில்;   அழுது  என  பால்  காய்ச்சிக்கொண்டிருக்கிறாள்.இதனால்  குழந்தை  மீது  கோபம்  கொண்ட  9  வயது  சிறுவன்  ஒரு  சூழ்நிலையில்  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  பம்ப்  எடுத்து குழந்தையை  அடித்து  விடுகிறான் , இதனால்  குழந்தை  இறந்து  விடுகிறது


 நாயகனுக்கும், நாயகிக்கும்  இந்த  விஷயம்  தெரியாது ,ஆனால்  நாயகியின்  அப்பா  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  வேண்டும்  என  அதற்கான  ஏற்பாடு  செய்ய   போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்டில்  அது  இயற்கை  மரணம்  அல்ல  என  தெரிகிறது , போலீஸ்  விசாரணையில்   9  வயது  சிறுவன்  தான் குழந்தை  மரணத்துக்குக்காரணம்  என  தெரிகிறது 


 இதற்குப்பின்  கேஸ்  கோர்ட்டில்  நடக்கிறது . இந்த  கேசில்  அந்த  சிறுவன்  தப்பினானா? தண்டனை  பெற்றானா? என்பது  மீதி  திரைக்கதை


நாயகனாக  இரா  பார்த்திபன்  பொறுப்பான  அப்பாவாக  கச்சிதமாக  நடித்திருக்கிறார், வழக்கமாக  அவர்  பேசும்  நையாண்டி  வசனங்களோ , அதிகபிரசிங்கித்தனமோ  இல்லாமல்  எளிமையான  மனிதனாக  வருவதே  பெரிய  ஆறுதல் . இந்த  மாதிரி  கேரக்டரில்  நடிக்க  ஒத்துக்கொண்டதே  பெரிய  விஷயம்  தான் 


 நாயகியாக  காவேரி . இப்படி  எல்லாம்  ஒரு  சித்தி  இருப்பாரா? என  முந்தானை  முடிச்சு கே  பாக்யராஜே  வியக்கும்  வண்ணம்  மாற்றாந்தாய்  மகன்  மாதிரி  அளவு  கடந்த  பாசம்  வைத்திருக்கிறார், இவரது  கேரக்டர்  டிசைன் தான்  படத்தின்  பலமும், பலவீனமும். 


பொதுவாக  சித்தியின்  கொடுமை பற்றியே  பார்த்துப்பழகிய  நமக்கு  இந்த  நம்ப  முடியாத  கேரக்டர்  டிசைன்   செட்  ஆகவில்லை 


 குழந்தை  நட்சத்திரம்  ஆக  வரும்  மாஸ்டர்  அஸ்வின்  படம்  முழுக்க  வருகிறான். உருக்க  வைக்கும்  நடிப்பு , ஆனால்  பல  காட்சிகளில்  கனெக்ட்  ஆகவில்லை 


சரத்பாபு , ஆனந்த்ராஜ் , பொன்னம்பலம், ராஜ்குமார்   என  சப்போர்ட்டிங்  ஆக்டர்ஸ்  அனைவரும்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 


எஸ்  ஏ  ராஜ்குமாரின்  இசையில் பாடல்கள்  சுமார்  ரகம்  தான். பிஜிஎம்  மில்  ஆந்த  பழைய  லல்லல்லா  லால்லா  வை  விடவே  மாட்டார்  போல 


புன்னகை  தேசம்  எனும்  படத்தை  இயக்கிய  ஷாஜகான்  தான்  இந்தப்படத்தையும்  இயக்கி  இருக்கிறார்

சபாஷ்  டைரக்டர்


1 குழந்தை நட்சத்திரத்துக்கு  அதிக  வாய்ப்புள்ள  படத்தில்  ஸ்டார்  வேல்யூ    இருக்க  வேண்டும்  என்பதற்காக இரா  பார்த்திபனை  புக்  பண்ணியதும்   அவருக்கு  அதிக  முக்கியத்துவம்  இல்லை என்பது  தெரிந்தும்  அவரை  ஒத்துக்கொள்ள  வைத்தது 


ரசித்த  வசனங்கள் 


1   இந்த காலத்துல  யூ  சர்ட்டிஃபிகேட்  படம்னா யூஸ்லெஸ் படம்னு  பேசிக்கறாங்க, ஏ சர்ட்டிஃபிகேட் படம்னாதான்  ஏ ஒன்  படம்னு  சொல்றாங்க , அதனால  தயவு  செஞ்சு  என் படத்துக்கு  ஏ  சர்ட்டிகேட்  கொடுங்க 


2  வாழ்க்கைல  எனக்கு  ரெண்டு  ஆசை , முதல் ஆசை  உன்  கிட்டே  ஏகப்பட்ட  முத்தங்கள்  வாங்கனும், ரெண்டாவது  ஆசை  உன்  கிட்டே  வாங்குன  முத்தங்களை  உன்  அம்மாவுக்கு கொடுத்துடனும், ஃபிக்சட்  டெபாசிட்  மாதிரி , அப்றம்  வட்டி  போட்டு  திருப்பி  வாங்கிக்கலாம்


3  கம்சனோட  டிராமா  வசனத்தை  சொல்லி  முடிச்சுட்டு  கடைசில  மூணு  ஹ  அப்டினு  சொல்றியே? புரியல 


 அப்டிதான்  ஸ்க்ரிப்ட்ல  போட்டிருந்தது 

இரு  பார்க்கறேன், டேய்.. அது  மூணு  ஹா இல்லை , ஹா ஹா  ஹா  , சிரிக்கும்  சிச்சுவேஷன்


4  பெற்றதால  மட்டும்  ஒருத்தி  தாய்  ஆகிடவும்  முடியாது ,  பெறாததாலயே  ஒருத்தி  தாய்  இல்லைனும்  ஆகிடாது


5  குற்றவாளி  வேற  யாராவதா  இருந்தா  போலீஸ்  தன் கடமையைச்செய்யனும்னு  எதிர்பார்க்கும்  ஆட்கள்  அதே  குற்றத்தை  செய்தது  தனக்கு  வேண்டிய  ஆள்  எனில்  வேற  மாதிரி  நினைப்பது  ஏனோ ?


6  நான்  மனோதத்துவ  டாக்டர், ஒரு  குழந்தை  கூட  இந்த  உலகத்துல  வீணாப்போயிடக்கூடாதுனு  நினைக்கிறவன்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   நாயகன்  , நாயகி  இருவரும்  மகனை  தூங்க  வைத்து  விட்டு  ( அவன்  தூங்கியதாக  நினைத்து )  அவன்  அருகிலேயே  ஒரு  செண்ட்டிமெண்ட்  டயலாக்  பேசறாங்க. அது  அவனுக்கு  தெரியக்கூடாதுன்னா  வாசல்ல  வந்தோ  மொட்டை  மாடிலயோ  தனிமையில்  இருக்கும்போதே  பேசி  இருக்கலாமே?


2 அம்மா  மாசமாக  இருக்கும்போதே  பிறக்கப்போகும்  குழந்தைக்கு  டிரஸ்  எடுக்க  சின்னப்பையன் ஜவுளிக்கடைக்குப்போகிறான். அவனுக்குத்தான்  விபரம்  தெரியாது , கடைக்காரருக்குக்கூடவா  தெரியாது ? நியூ பார்ன்  பேபிஸ்  கிஃப்ட்  பேக்கிங்  என  ஒரு  அயிட்டம்  இருக்கே? அதைத்தராம  வேற  என்ன  என்னவோ  எடுத்துக்காட்டிட்டு  இருக்காரு ( பிறக்கப்போவது  மகனா? மகளா?  அந்த  டயலாக்  எல்லாம்  தேவையே  இல்லை )


3   கொலை  நடந்த  பின்  விசாரிக்க  வரும்  போலீஸ்  ஆஃபீசர் பூச்சிக்கொல்லி  மருந்து  மூலம்தான்  இறப்பு  என  போஸ்ட்  மார்ட்டம்  ரிப்போர்ட்  சொல்லுது, அதனால தோட்டத்தில்  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  தோட்டக்காரனைத்தான்  முதலில்  சந்தேகப்படறேன்  என  சொல்வது  மடத்தனம்..., அப்போ  பால்ல  விஷம்  கலந்திருந்தா  பால்காரனை  சந்தேகப்படுவாரா? 


4  பூச்சிக்கொல்லி  மருந்து  அடிக்கும்  பம்ப்பில்  கை  ரேகை  இருக்கும், அதை  பார்த்த  பின்  போலீஸ்  அடுத்த  நடவடிக்கை  எடுக்கலாமே?  ஏன்  அவசரப்பட்டு  அப்படி  ஒரு  முடிவு  எடுக்க  வேண்டும் ?


5  சின்னச்சின்ன  விஷயத்துக்கு  எல்லாம்  தன்    மகன்  மேல்  கோபப்படும்  பெற்றோர்  தங்கள்  குழந்தையைக்கொலை  செய்தது    மகன் )அல்லது  குழந்தையின்  சாவுக்குக்காரணம்  அவன் தான்  என  தெரிந்தும் ) ஒரு  சதவீதம்  கூட  கோபமே  படாமல்  அவனைக்காப்பாற்ற  நினைப்பது  நம்பவே  முடியலை 


6  தங்கள்   மகனை  விசாரிக்கும்  போலீஸ்  ஆஃபீசரிடம்  நாயகன்  “ இப்போ நீங்க  வீட்டை  விட்டு  வெளில  போகலைன்னா  நடப்பதே  வேற  “ என   மிரட்டும்  தொனியில்  பேசுவது  ஓவர்


7  ஒரிஜினல் மலையாளப்படத்தில்  நடித்த  அதே  சிறுவனை  நடிக்க  வைத்திருக்கலாம். இந்தப்படத்தில்  மாஸ்டர்  அஸ்வின்  மலையாளம்  கலந்த  தமிழில்  பேசுவது  ஒட்டவில்லை . பெற்றோர்  தமிழர்கள், மகன்  மட்டும்  மலையாள  வாடை 


8  பெண்  வேடத்தில்  நாயகன்  ஒரு  குத்துப்பாட்டுக்கு  டான்ஸ்  ஆடி  இருப்பது  ஒட்டவே  இல்லை , மெயின்  கதைக்கு  சம்பந்தமே  இல்லாதது


9  படம்  பார்க்கும்  ஆடியன்சுக்கு  அந்த  சிறுவன்  மேல்  பரிதாபமே  வரவில்லை , மாறாக  அவனுக்கு  உரிய  தண்டனை  கிடைக்கவில்லை  என்ற  எண்ணம்தான்  தோன்றுகிறது, அதுதான்  படத்தின் பலவீனம், அல்லது  கேரக்டர்  டிசைனில்  நிகழ்ந்த  குழப்பம் 


10  சிறுவர்  சீர்  திருத்தப்பள்ளியில்  திரைக்கதையின்  பின்  பாதி  நகரும்போது  போர்  அடிக்கிறது , சுவராஸ்யம்  இல்லை , சீக்கிரம்  படத்தை  முடிங்கப்பா  என  சொல்லத்தோன்றுகிறது 


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  இரண்டு  குழந்தைகள்  உள்ள  வீட்டில்  பெற்றோர்  கவனத்துடன்  குழந்தைகளை  வளர்க்க  வேண்டும்  என்ற  நல்ல  கதைக்கருதான், ஆனால்  அதை  மக்களுக்கு  சரியாகப்போய்ச்சேரும்  விதத்தில்  சொல்லவில்லை , ரேட்டிங் 2 / 5 


Kannadi Pookal
Directed byK. Shajahan
Story byBobby-Sanjay
Based onEnte Veedu Appuvinteyum (Malayalam)
Produced byHowly P.,
Joy C.,
Joy N.
StarringParthiban
Kaveri
Sarath Babu
Anand Raj
Nizhalgal Ravi
CinematographyArthur Wilson
Edited byV. Jaishankar
Music byS. A. Rajkumar
Production
company
Teamwork Productions
Release date
28 January 2005
CountryIndia
LanguageTamil

0 comments: