Friday, February 03, 2023

ரன் பேபி ரன் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர்)

 


1998 ல் ரன் லோலா ரன்  எனும்  ஜெர்மானிய  த்ரில்லர்  படம்  ரிலீஸ்  ஆனது. வெறும் 2  மில்லியன்  டாலர்  செலவில்  எடுக்கப்பட்டு  23  மில்லியன்  டாலர்  வசூல் செய்த  சூப்பர்  ஹிட்  படம். டைட்டிலைப்பார்த்ததும்  இந்தப்படத்தின்  கதையாக  இருக்குமோ  என்ற  சந்தேகம்  வந்தது, ஆனால்  இரண்டும்  மாறுபட்ட  வெவ்வேறு  கதை. டைட்டிலில்  மட்டுமே  ஒற்றுமை .அதே  போல  2012 ஆம்  ஆண்டு  ஜோஷி  இயக்கத்தில்  இதே  டைட்டிலில்  ஒரு  மலையாளப்படம்  ரிலீஸ்  ஆகி  உள்ளது. அந்தக்கதையும்  வேறு 

ரேடியோ  ஜாக்கியாக  இருந்து  காமெடியனாக  மாறிய ஆர் ஜே  பாலாஜி  பின் பிரமோஷன் கிடைத்து  நாயகனாக மூக்குத்தி  அம்மன் , எல் கே ஜி  , வீட்ல  விசேஷம்    ஆகிய  படங்களில்  நடித்து  நல்ல  பெயர்  எடுத்தார். இந்தப்படத்தில்  முதன்  முதலாக  த்ரில்லர்  சப்ஜெக்டில்  நடித்துள்ளார். 2  மணி  நேரப்படத்தில்  ஒரு  இடத்தில்  கூட  அவரது  வழக்கமான  ஒன்  லைனர்  கமெண்ட்டோ  காமெடியோ  இல்லாத  மாறுபட்ட  கேரக்டர்  டிசைன் 

ஸ்பாய்லர் அலர்ட்

மர்மமான  முறையில்  ஒரு  பெண்  இறந்து  விடுகிறார். அந்த  இறப்பு  சம்பந்தமாக  போலீஸ்  இறந்து  போன  பெண்ணின்  தோழியைத்தேடி  வருகிறது. போலீசிடமிருந்து  தப்பிக்க  மறைந்து  , ஒளிந்து  ஓடும்  அந்தப்பெண்  நாயகனின்  உதவியை  நாடுகிறாள் . நாயகனுக்கு  அப்போதுதான்  திருமணம்  நிச்சயம்  ஆகி  இருக்கிறது. நிச்சயக்கப்பட்ட  பெண்ணுடன்  ஷாப்பிங்  வந்த  இடத்தில்  தான்  அந்தப்பெண்  நாயகன்  காரின்  பின்  சீட்டில்  ஒளிந்து  கொண்டு  உதவி  கேட்கிறாள் . நாயகன்  அந்தப்பெண்ணுக்கு  உதவ  முன்  வருகிறான். ஒரு  கட்டத்தில்  அந்தபெண்ணும்  மர்மமான  முறையில்  இறந்து கிடக்கிறாள்


இப்போது  சிக்கலில்  மாட்டிக்கொண்ட  நாயகன்  அதில்  இருந்து  எப்படி  தப்பிக்கிறார் ? உண்மையான  கொலையாளியை  எப்படிக்கண்டுபிடிக்கிறார்? இரண்டு  கொலைகளுக்கும்  காரணம்  என்ன? என்பதை  ஒரு  பொலிடிக்கல்  த்ரில்லராக  திரைக்கதை  விளக்குகிறது 


முதல்  பாதியில்  அந்தப்பிணத்தை  மறைக்க  , போலீசிடம்  இருந்து  தப்ப  நாயகன்  என்ன  செய்கிறார்  என்பது  விறுவிறுப்பாகவும்,  இடைவேளைக்குப்பின்  உண்மையான  கொலையாளியை  அவர்  எப்படிக்கண்டுபிடிக்கிறார்  என்பதை  கொஞ்சம்  விறுவிறுப்பு  குறைவாகவும்  சொல்லப்பட்டிருக்கு 


ஏழைகளாப்பிறந்தாலும்  நன்றாகப்படித்து  நல்ல  மதிப்பெண்களுடன்  கல்லூரியில்  உயர் கல்வி  பயிலும்  ஏழை  மாணவிகளை  அகற்றி  அங்கே  பண  பலத்தின்  மூலம்  பணக்காரர்கள்  எப்படி  ஆக்ரமிப்பு  செய்கிறார்கள்  எனற  கதைக்கருவைத்தான்  படைத்திருக்கிறார்கள் 


கதையின்  நாயகனாக  ஆர்  ஜே  பாலாஜி.  வழக்கமான  காமெடியனாக  இல்லாமல்  டாக்டர்  படத்தில்  சிவகார்த்திகேயன்  படம்  முழுக்க  உம்மென்று  வருவது  போல  சீரியஸ்  ரோலில்  நடித்திருக்கிறார். மாறுபட்ட  நடிப்பு 


 அவரிடம்  உதவி  கேட்கும்  பெண்னாக  ஐஸ்வர்யா  ராஜேஷ்  வருகிறார். சிறிது  நேரமே  வந்தாலும்  நல்ல  நடிப்பு . இஷா  தல்வார் வந்தவரை  ஓக்கே  தான். ராதிகா  சரத்குமார், ஸ்ம்ருதி  வெங்கட், பகவதி பெருமாள் , ஹரீஷ் பெராடி , விவேக்  பிரசன்னா   போன்றவர்கள்  கொடுத்த  பாத்திரத்தை  கச்சித்கமாக  செய்திருக்கிறார்கள் 


ஒரு  த்ரில்லர்  படத்துக்கு  முக்கியமான  தேவையான  பரபரப்பான  த்ரில்லர்  இசையை  சாம்  சிஎஸ்  வழங்கி  இருக்கிறார்.திரைக்கதை  இயக்கம்  ஜெயன்  கிருஷ்ணகுமார்


 முதல்  பாதி  திரைக்கதை  மிக  வேகமாக  விறுவிறுப்பாக  செல்கிறது.  ஏகப்பட்ட  கதாபாத்திரங்கள் . கொலையாளி  இவராக  இருக்குமோ  அவராக  இருக்குமோ  என  ஒவ்வொருவராக  சந்தேகப்பட  வைத்து  பின்  முடிச்சை  அவிழ்க்கும்  டெம்ப்ளேட்  கதைதான், ஆனால்  பின் பாதியில்  விறுவிறுப்பு    குறைவு 


ஆர்  ஜே  பாலாஜியின்  வித்தியாசமான  நடிப்பைப்பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் 


1 நாயகி  நாயகனிடம்  தனக்கு  என்ன  பிரச்ச்னை  என்பதை  சொல்லாமல்  ஏன்  இழுத்தடிக்கிறார்? என்பதற்கு  தெளிவான  பதில்  இல்லை 


2  நாயகனுக்கும் , நாயகிக்கும்  எந்த  வித  தொடர்பும்  இல்லை , பின்  ஏன்  நாயகன்  தன் வருங்கால மனைவியிடம்  அந்த  விஷயத்தை  மறைக்க  நினைக்கிறார் ?


3   போலீசுக்கே  கிடைக்காத  தடயங்கள் , விபரங்கள்  நாயகனுக்கு  எப்படி  கிடைக்கின்றன ?


 சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரில்லர்  ரசிகர்கள்  பார்க்கலாம் , ஆனந்த  விகடன் அளிக்க  இருக்கும்  மார்க்  ( என்  யூகம் - 41 .  ரேட்டிங் 2.5 / 5 0 comments: