Sunday, February 19, 2023

47 நாட்கள் (1981) -தமிழ்/தெலுங்கு - சினிமா விமர்சனம் ( சிவசங்கரியின் நாவல்) @ யூ ட்யூப் அண்ட் மெகா டி வி


 சிவசங்கரி  எழுதிய நாவலை மையமாக  வைத்து  கே  பாலச்சந்தர்  தமிழ் , தெலுங்கு  ஆகிய  இரு  மொழிகளில் எடுத்த  படம்  இது ஆந்திர  சூப்பர்  ஸ்டார் சிரஞ்சீவி  கதாநாயகனாக  அறிமுகம்  ஆன  முதல்  படம்  இது. ஆனால்  கம்ர்ஷியலாக  இது அந்தக்காலத்தில்  பெரிய வெற்றி  பெறவில்லை. ஆனால் எழுத்துலகில்  நாவல்  செம  ஹிட். அப்போ  இயக்குநர்  சிகரம்  எதில்  எந்த  இடத்தில்  சறுக்கினார்  என  பார்க்க  ஆவல்  வந்தது. + இதயம்  பேசுகிறது  என்னும்  வார  இதழில்  தொடர் கதையாக  வந்த  போது  ரசிகைகள்  , வாசகிகள்  இடையே  மாபெரும்  வரவேற்பைப்பெற்ற  கதை  என்பதால் வசனம்  எழுதும்  பொறுப்பும்  சிவசங்கரியிடம்  தரப்பட்டது, திரைக்கதை  , இயக்கம்  - கே  பாலச்சந்தர்  , கதை , வசனம்  சிவசங்கரி 

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  ஒரு  கிராமத்துப்பெண். கல்வி  அறிவு  இல்லை . நான்காம்  வகுப்பு வரை  கூட  படிக்காதவர் , அவருக்கு  ஆங்கில மொழி  தெரியாது . ஒரு  ஃபாரீன்   மாப்பிள்ளை  அவரை  தானாக  முன் வந்து  கல்யாணம்  செய்து  கொண்டு  பாரீஸ்  அழைத்து  செல்கிறார்


ஆனால்  அவருக்கு  ஏற்கனவே  திருமணம்  ஆகி  இருக்கிறது , மாடியில்  முதல்  மனைவி , கீழே  நாயகி . நாயகியை  அவரது  தங்கை  என    நாயகன்  சொல்லிக்கொள்கிறான்  மற்றவர்களிடம் 


 இந்த  உண்மை  நாயகிக்குத்தெரிய  வரும்போது  நான்  அம்மாவைப்பார்க்கனும், எங்க  ஊருக்கே  என்னை  திருப்பி  அனுப்புங்க  என்கிறாள்


இதற்குப்பின்  நாயகி  எப்படி  அந்த  ஆபத்தில்  இருந்து  தப்பிக்கிறாள்  என்பதே  மீதி  திரைக்கதை 


 நாயகனாக  புதுமுகமாக  சிரஞ்சீவி . வில்லத்தனம்  மிக்க   நடிப்பு , கனகச்சிதம்


நாயகியாக  ஜெயப்பிரதா.. செண்ட்டிமெண்ட்  சீன்களில்  உணர்ச்சி  பொங்கும்  நடிப்பு 


சரத்பாபு  கெஸ்ட்  ரோலில்  வழக்கம்  போல ஜெண்ட்டில்  மேன்  ஆக  வருகிறார்


எம் எஸ்  வி  இசையில்  3  பாடல்கள்  மற்றும்  பிஜிஎம்  குட் ,லோக்நாத்தின் ஒளிப்பதிவில்  ஃபாரீன்  லொக்கேஷன்கள்  அழகு . எடிட்டிங்  கச்சிதம் சபாஷ்  டைரக்டர்


1  ஒரு  டைரக்டர்  தன்  படத்தில்  தன்  முந்தைய  படத்தின்  ரெஃப்ரன்ஸ்  வைப்பது வழக்கமானதுதான், இதுல  அபூர்வ   ராகங்கள்  படத்தை  பிரமோட்  பண்ணி  இருக்கார் . அது  கச்சிதமா  கதையோட  ஒட்டி  வருது 


2  உள்ளூரில்  இருக்கின்ற  ஏழை  மாப்பிள்ளையே  பெட்டர். ஃபாரீன்  மாப்பிள்ளை  என  நம்பி  ஏமாந்து    பெண்  வீட்டார்   படும்  கஷ்டங்களை  சொல்லும்  கதை  என்பதால்  தனிப்பட்ட  முறையில்  இந்த  கதைக்கரு  எனக்குப்பிடிச்சிருக்கு 


3   ஒரு  இந்தியப்பெண்ணுக்கு  பண  உதவி  செய்யும்  சரத்பாபு “  இந்த  உதவியை  உன்  புத்திசாலித்தனத்துக்காக  செய்யலை, இன்னொரு  இடத்துல  இதே  மாதிரி  பிச்சை  எடுத்து  இந்தியாவோட  மானத்தை  வாங்கிடக்கூடாது  என்பதற்காக  தந்தேன்  எனும்  காட்சி  டைரக்சன்  டச்


4   உயிரே  போனாலும்  இனி  உன்  கூட  படுக்க  மாட்டேன்  என  சபதம்  போடும்  நாயகியை  நாயகன்  மடக்கி  அதற்கு  சம்மதிக்க  வைக்க கையாளும்  யுக்தியும்   அந்த  காட்சியில்  டைரக்சன்  டச்சும் 


5  ஹோட்டலில்  தமிழ்  தெரிந்த  பெண்ணை  நாயகி  பாத்ரூமில்  சந்திக்கும்  காட்சியும், அதற்கு  நாயகி  போடும்  பிளானும்6  ஹோட்டலில்  நாயகி  தங்கி  இருக்கும்போது  தமிழ்  பாட்டு  கேட்க  ஒவ்வொரு  ரூமாக  செக்  செய்து  சரத்  பாபு  ரூமைக்கண்டுபிடித்து  அவரிடம்  பேச  முற்படும்போது  நாயகன்  அங்கே  வந்து  அவரை  இழுத்துச்செல்லும்  காட்சி 


7  க்ளைமாக்சில்  நாயகி  சரிதாவிடம்  சினிமாவிலாவது  என்  கேரக்டர்க்கு  கல்யாணம்  பண்ணி  வை  என  சொல்லும்  காட்சி 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1    மான்  கண்ட  சொர்க்கங்கள் .. காலம்  போகப்போக  யாவும்  வெட்கங்களே!ஏன்  இரண்டு  பக்கங்கள் ?


2  தொட்டுக்கட்டிய  மாப்பிள்ளை , நம்பி  வந்தது  பெண்  பிள்ளை


3  இவள்  உனை  நினைத்தபோதே  மடக்குவாளய்யா


  ரசித்த  வசனங்கள் (  சிவசங்கரி)


1   என்னது ? கல்யாணப்பொண்ணு  வெள்ளை  டிரஸ்  போட்டிருக்கா?


 கிறிஸ்டியன்ஸ் ல  வெள்ளை  டிரஸ்  போட்டாதான்  கல்யாணல்ப்பொண்ணுனு அர்த்தம் 


2  அதிர்ஷ்டம்   அனவுன்ஸ்  பண்ணிட்டா  வரும் ?  திடீர்னு வந்துதான்  கதவைத்தட்டும் 

3  நீ  படிக்கலை  என்பதுதான்  உன்னோட  மிகப்பெரிய  குவாலிஃபிகேஷன்., உனக்கு  இங்க்லீஷ்  கொஞ்சம்  கூடத்தெரியாது  என்பதுதான்  என்னோட  பெரிய  சந்தோஷம் 


4   இப்போ  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  போகப்போறோம்


 அப்டின்னா?


 இங்கே  உலகத்துல  உள்ள  எல்லாப்பொருட்களும்  கிடைக்கும், அம்மா, அப்பா  தவிர


5  நம்ம  ஊர்ல  ஒருத்தரை  ஒருத்தர்  பார்க்கும்போது  நமஸ்காரம்  பண்ணிக்கற  மாதிரிதான் இங்கே  ஃபாரீன்ல  ஒருவருக்கொருவர்  முத்தம் தருவதும்

6  அளவுக்கு  அதிகமா  கோபம்  வருதுன்னா உங்க  மனசுல  உள்ள  குற்ற  உணர்வை  மறைக்க ... 


7  சந்தோஷம்கறது  பணத்துல  இல்ல , மனசுல 


8  இந்தாங்க  சாக்லெட்  கிஃப்ட்


 நான்  ஒண்ணும்  குழந்தை  இல்லையே?


 நான்  சாக்லெட்  குடுக்கற  நேரம்  உங்களுக்கு குழந்தை  பிறக்கலாம், யார்  கண்டது ?


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஃபோர்ஜரி  மாப்பிள்ளை  கல்யாண  ஆல்ப  ஃபோட்டோ  ஃபிலிமை  வெளிச்சத்தில்  காட்டி  அதை  எரேஸ்  பண்ணுவது  ஓக்கே, அதை  ஆடியன்சுக்கு  புரிய  வைக்க  தனி  ரூமில்  செய்வது  போல்  காட்டி  இருக்கலாம், முதல்  இரவு  அறையில்  அதை  செய்து  ஒரு  பாக்சில்  வைப்பது  ஆபத்தாச்சே?  மணப்பெண்  அதைப்பார்த்து  உஷார்  ஆகிட்டா? டவுட்  வந்துட்டா?


2  நாயகன்  தன்  மனைவியை   தங்கை  என  பொய்  சொல்லி  பாஸ்போர்ட்  ரெடி  பண்ண   சில  வேலைகள்  செய்கிறான், அதுல  இனிஷியல்  காட்டிக்கொடுத்துடுமே? அண்னன்  , தங்கை  எனில்  ஒரே  அப்பா  ஒரே  இனிஷியல்  தானே  வரனும்? அதை  வெச்சு  மடக்கலாமே? ஏன்  சிக்கலை ?நாயகிக்கு  படிக்கத்தெரியாது  அதனால்  அவள்  அந்த  இனிஷியல்  மேட்டரை  பார்க்க  வழி  இல்லை , ஆனால்  பாஸ்போர்ட்  ஆஃபீசில்  அதை  கவனிப்பார்களே?


3  நாயகன்  தான்  வில்லன்  என்பது  படத்தின்  ஓப்பனிங்  சீனிலேயே ஆடியன்சுக்கு  தெரிந்து  விடுகிறது . முதல்  காட்சியிலேயே  என்  கல்யாண  வாழ்க்கை  வெறும்  47ன் நாட்கள்  தான்  என  நாயகி  சொல்லி  விடுகிறாள். இந்த  சீனும்  , டைட்டிலும் சஸ்பென்சை  உடைத்து  விட்டது .


4  நாயகியின்  கேரக்டர்  டிசைன்  நான்காவது  கூடப்படிக்காத  பட்டிக்காட்டுப்பெண், ஆனால்  ஜெயப்பிரதாவின்  லுக்  அப்படி  இல்லை , மாடர்ன்  கேர்ள்  போல  மேக்கப்  போட்டிருக்கறதை  த விர்த்திருக்கலாம்,  வழக்கமாக  கே  பி  படங்களில்  சரிதா  மேக்கப்  இல்லாமல்  வருவதைப்போல  ஜெயப்பிரதாவை  ரெடி  பண்ணி  இருக்கலாம் , அல்லது  சுலக்சனா, அர்ச்சனா  மாதிரி  கிராமிய  முகக்களை  உள்ளவரை நாயகி  ஆக்கி  இருக்கலாம்


5   நாயகனை  சந்திக்க  வரும்  வெள்:ளைக்காரி  அவருக்கு  முத்தம்  தருவது  ஏன்? என  நாயகி  சந்தேகப்பட்டு  கேட்கும்போது  நாயகன்  ஒரு  சமாளிஃபிகேசன்  பதில்  தருகிறான் ,  நம்ம  ஊர்ல  ஒருத்தரை  ஒருத்தர்  பார்க்கும்போது  நமஸ்காரம்  பண்ணிக்கற  மாதிரிதான் இங்கே  ஃபாரீன்ல  ஒருவருக்கொருவர்  முத்தம் தருவதும்.. அப்போ  நாயகி  ஏன்  அவனை  மடக்க  வில்லை? நாயகியை  சந்திக்க  வந்த  ஆண்  யாரும்  முத்தம்  தரவில்லையே? 


6  நாயகனின்  முதல்  மனைவியிடம்  தான்  உண்மையைக்கூறப்போவதாக  நாயகனிடம்  மிரட்டும்  நாயகி  அதை  சொல்லில்  சொல்லாமல்  செயலில்  காட்டி  இருக்கலாமே? 


7  அம்மா , அப்பாவின்  வற்புறுத்தலுக்காக  நாயகியைக்கல்யாணம்  செய்து  கொண்டதாக  நாயகன்  கூறுகிறான், தனது  விருப்பத்துக்காக  அந்த  வெள்ளைக்காரியைக்கட்டிக்கொண்டதாக  கூறுகிறான். இருவரையும்  ஒரே  வீட்டில்  வைத்துக்குடித்தனம்  செய்பவன்   அவனது  பெற்றோர்  வந்தால்  என்ன  சொல்லி  சமாளிப்பான்?


8  நாயகனின்  முதல்  மனைவியின்  டாக்டர்  நண்பர்  நாயகனின்  வீட்டுக்கு  வரும்போது சாக்லெட்  பரிசு  கொண்டு  வருகிறார், அதை  ஒரு  தமிழ்  நியூஸ்  பேப்பரில்  சுற்றித்தருகிறார். அதை  அப்படியே  நாயகியிடம்  கொடுத்தால்   உண்மையை  நாயகி  உணர்ந்து  விடுவார், டாக்டர்  தமிழர்  என்பது  தெரிந்து  விடும் , தனக்கு  ஆபத்து  என்பதை  நாயகன்  ஏன்  உணரவில்லை ? அந்த  நியூஸ்  பேப்பரை  எடுத்துட்டு  தந்திருக்கலாமே?


9  நாயகன்  நாயகியிடம்  ரூமை  விட்டு  வெளில  வரக்கூடாது  என  கண்டிசன்  போடுகிறான், அதற்குப்பதில்  ரூமை  வெளியில்  பூட்டி  விட்டுச்சென்றிருக்கலாமே?


10  நாற்பது  நாட்கள்  கர்ப்பம்  ஆக  இருக்கும்  நாயகியின்  கர்ப்பத்தைக்கலைக்க  ஏகபப்ட்ட  சுலபமான  வழிகள்  இருக்கும்போது  நாயகன்  அபார்ஷன்  பண்ண  டாக்டருக்கு  ஃபோன்  பண்ணி  அப்பாயிண்ட் மெண்ட்  கேட்பது  ரிஸ்க்  ஆச்சே? அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  இது  யூ  சர்ட்டிஃபைடு  ஃபிலிம்  தான், குடும்பத்துடன்  பார்க்கலாம், கண்ணியமான  காட்சி  அமைப்புகள் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - பெண்  பிள்ளைகளைப்பெற்றவர்களுக்கான  விழிப்புணர்வுப்படம்,  மசாலா

  அம்சங்களான  டூயட் , காமெடி  டிராக், ஃபைட்ஸ்  எல்லாம்  இல்லை, பெண்களுக்குப்பிடிக்கும். ரேட்டிங்  2.75 / 5 


டிஸ்கி - இந்தப்படம்  பற்றிய  ஒரு  விவாதம்  ஒரு  வாட்சப்  க்ரூப்பில்  நிகழ்ந்த  போது கருத்து  தெரிவித்த  எழுத்தாளர்கள்  தேவிகா  குலசேகரன் , வி ஜி  ஜெயஸ்ரீ  இருவரும்  தெரிவித்த  கருத்துகள் 


வி.ஜி . ஜெ =வெளிநாட்டில் இருக்கும் மணமகனுக்கு,  படிக்காத, அழகான orthodox family girl  யை திருமணம் முடிப்பார்கள். அவன் ஒரு fraud. Already married. மிக கொடுமைகளை அனுபவிக்கும் அந்தப் பெண் எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் கதை. சிவசங்கரி பிறந்த சமூகத்தை பற்றிய கதை என்பதால், write up ல புகுந்து விளையாடியிருப்பாங்க.  ஒரு காலத்தில், வெளிநாட்டு மணமகன்களை விரும்பி மணம் முடித்து வைத்த பெற்றோர்கள், இந்த கதை வந்தப் பின் ரொம்ப யோசித்து, விசாரித்து, பிறகே மணப்பேச்சை தொடங்குவர் என்பது செவி வழி செய்தி.ஆமாம்! அப்போது நான் மயிலாப்பூரில் இருந்தேன். நிறைய பேருக்கு புத்தி வந்தது. எப்படியோ தள்ளிவிட்டால் போதும் என்று நினைத்தவர்களுக்கு!

எப்படியோ தள்ளி விடுவது என்று இல்லை. வெளி நாட்டு மாப்பிள்ளைகள் மேல் ஒரு மோகம். அப்படி திருமணம் செய்துக் கொடுத்து அதையும் ஒரு status symbol ஆக காண்பித்துக் கொண்டனர் சிலர்.
47 Natkal
47 Natkal.jpg
Poster of the Tamil version
Directed byK. Balachander
Screenplay byK. Balachander
Based on47 Natkal
by Sivasankari
Produced byR. Venkataraman
StarringChiranjeevi
Jaya Prada
Anne Patricia
CinematographyB. S. Lokanath
Edited byN. R. Kittu
Music byM. S. Viswanathan
Production
company
Premalaya Pictures
Release dates
  • 17 July 1981 (Tamil)
  • 3 September 1981 (Telugu)
CountryIndia
Languages
  • Tamil
  • Telugu

1 comments:

Rameshbabu.M. said...

படத்தைவிட நாவலாக படிக்கும்போது நன்றாக இருந்தது.