Saturday, February 11, 2023

ENNALUM ENTE ALIYA (2023) மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா) @ அமேசான் பிரைம்


2015ல்  ரிலீஸ்  ஆன   லுகா  சுப்பி (LUKKA CHUPPI)  எனும்  மலையாளப்படம்  செம ஹிட்  ஆனது . காமெடி மெலோ டிராமா, டைட்டிலுக்கு அர்த்தம் - ஒளிந்து  விளையாடு .  நம்ம  ஊரில்  ரிலீஸ்  ஆன  பறவைகள்  பலவிதம், 96   படங்கள்  போல ஸ்கூல்  ரீ யூனியன்  மீட்டப்பில்  நடக்கும்  கதை. அந்தப்படத்தின்  இயக்குநர்  பாஸ் மொகமது  இயக்கிய  படம்  தான்  இது, இதற்கு  முதலில்  வைக்கப்ப்ட்ட  டைட்டில்  லவ்  ஜிகாத் ,  பின் சென்சாரில்  பிரச்சனை  வரும்  என  அறிவுறுத்தப்பட்டதால் டைட்டிலை  மாற்றி  விட்டார்கள் 

என்னதான் இருந்தாலும்  அவன் என்  மச்சான்  -இதுதான்  டைட்டிலுக்கு  அர்த்தம். நாயகன்  தன்  மனைவியின்  தம்பியால்  படும்  இன்னல்கள்  தான்  காமெடியாக  சொல்லப்பட்டிருக்கும்  கதை 


  ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  துபாயில்  வசிக்கும்  ஒரு  இன்சூரன்ஸ்  ஏஜெண்ட். இவர்  ஒரு  அபார்ட்மெண்ட்டில்  தன்  மனைவியுடன்  வசித்து  வருகிறார். திருமணம்  ஆகி  எட்டு  ஆண்டுகள்  ஆகியும்  குழந்தை   இல்லாத  இந்த  தம்பதிக்கு  இப்போதுதான்  நல்ல  செய்தி  கிடைத்தது.  மனைவி  கர்ப்பமாக  இருப்பதை  உறுதி  செய்த  டாக்டர்  ஒரு  மூன்று  நாட்கள்  இரண்டாவது  தேன்  நிலவு  போல  வெளில  எங்காவது  போய்ட்டு  வாங்க , ரிலாக்ஸா  இருக்கும்  என  சொல்கிறார்


 நாயகனுக்கு  அடிக்கடி  ஃபோன்  கால்ஸ்  வந்து  கொண்டே  இருக்கும். ஒர்க்  பிரஷர் . இதனால்  தனக்கு  நேரம்  ஒதுக்காமல்  எப்போது  பார்த்தாலும்  ஃபோனிலேயே  பேசிக்கொண்டிருக்கும்  கணவன்  மேல்  மனைவிக்கு  கோபம். திடீர்  என  மனைவியின்  தம்பி  அவர்கள் இருக்கும்  அபார்ட்மெண்ட்க்கு  வருகிறான். சில  நாட்கள்  அங்கே  தங்கி  இருக்க  திட்டம்.அவனுக்கு  வேலை  வெட்டி  எதுவும்  கிடையாது


அதே  அபார்ட்மெண்ட்டில்  ஒரு  முஸ்லீம்  பெற்றோர்  இருக்கிறார்கள். அவர்  ஒரு  பில்டிங்  காண்ட்ராக்டர். அவர்களூக்கு  வயது  வந்த  மகள்  இருக்கிறாள். அவள்  எப்போதும்  ஃபோனும்  கையுமாகவே  இருப்பாள் , சில  நாட்களாக  அவள்  யாரோ  ஒரு  இளைஞன்  கூட  அதிக  நெருக்கம்  காட்டி  பழகுவதாக  அம்மாவுக்கு  சந்தேகம். அடிக்கடி  மெசேஜ்  வருவது , மிஸ்டு  கால்ஸ்  வருவது  கண்டு  டவுட் 


 நாயகனின் மச்சினன்  மேல்  தான்  சந்தேகம். இதைப்பற்றி  விசாரிக்க  அந்த  முஸ்லீம்  தம்பதி  நாயகனின்  வீட்டுக்கு  வருகிறார்கள் . விசாரிக்கிறார்கள் . இரு  குடும்பத்துக்கும்  இடையே  நடக்கும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்   கதை 

1998ல்  சூர்யா  நடிப்பில்  காதலே  நிம்மதி  என்ற  படம்  வந்தது. அதில்  காதலிக்காத  ஒரு  ஜோடி  மீது  சந்தேகம்  வரும் . காதலிக்காமலேயே  இப்படி  ஒரு  கெட்ட  பெயர் , இனி  காதலிப்போம்  என  க்ளைமாக்சில்  முடிவெடுப்பார்கள்  . அது  போல  இந்தக்கதையிலும்  சாதாரண  நண்பர்களான  இருவரை  இரு  குடும்பத்தாரும்  சந்தேகப்படுகிறார்கள் . இருவருக்கும்  இடையே  காதல்  இல்லை , நட்பு  மட்டும்  தான் ஆனால்  காதலே  நிம்மதி  பட  க்ளைமாக்ஸ்  போல  இதில்  இல்லை , வேறு  ஒரு  திருப்பம்  இருக்கிறது 


 நாயகனாக  சுராஜ்  வெஞ்சாரமூட். பாத்திரத்தை  உணர்ந்து  நடித்திருக்கிறார். மனைவியுடன்  காட்டும்  நெருக்கம் , மச்சினன்  மேல்  காட்டும்  கோபம் , பக்கத்து  வீட்டுக்காரரிடம்  எரிந்து  விழும்  குணம் , ஒரு  இக்கட்டான  சூழலிலும்  இன்சூரன்ஸ்க்கு  ஆள்  பிடிக்கும்  சாமார்த்தியம்  என   இவர்  கேரக்டர்  டிசைன்  பிரமாதமாக  வடிவமைக்கப்ப்ட்டிருக்கு. 


 நாயகியாக காயத்ரி  அருண்  கச்சிதமான  நடிப்பு 


முஸ்லீம்  தம்பதிகளாக  வரும்  சித்திக் - லீனா  ஜோடியின்  நடிப்பு  தான்  படத்தின்  ஹை  லைட்ஸ் . சதி  லீலாவதி  படத்தில்  வரும்  கோவை  சரளா  - கமல்  ஜோடி   போல  படம்  பூரா  இவர்கள்  செய்யும்  காமெடி  கலக்கல்  செம  ரகளை . கணவன்  - மனைவிக்கு  இடையே  ஆன  பாண்டிங்  ஆகட்டும், மகள்  மீது  சந்தேகம்  கொள்ளும்  அம்மா, அலட்டிக்கொள்ளாத  அப்பா  என  அட்டகாசம்  பண்ணி  இருக்கிறார்கள் 


 

சபாஷ்  டைரக்டர்


 1  ஊடலில்  இருக்கும்  மனைவியை  சமாதானப்படுத்த  நாயகன்  லிஃப்டில்  வரும்போது  செய்யும்  ரொமாண்டிக்  முயற்சிகளை  எதேச்சையாக  கண்ட  பக்கத்து  வீட்டு  தம்பதிகள்  பாருய்யா , அந்த  ஆளைப்பார்த்துக்கத்துக்கோ  என  சொல்லும்  சீன்  


2  பட்ஜெட்  ரேலியில்  ஷேர்  மார்க்கெட்  காளையின்  ஆதிக்கத்தில்  மேலே  உயரும்  என  எதிர்பார்த்த  பொது  அதானி  ஷேர்களின்  வீழ்ச்சி  கரடியின்  பிடியில்  கொண்டு  போனது  மாதிரி   தம்பதிகள்  ஹனிமூன்  ட்ரிப்  பிளான்  பண்ணி  இருக்கையில்  சிவபூஜையில் கரடி  மாதிரி  மச்சினன் வர  நாயகன்  நாயகியை  முறைக்கும்  தருணம் 


3   கோபமாகப்பேசும்  சித்திக்    சரக்கு  அடித்து  விட்டு  செய்யும்  அலப்பறைகள் 


4  சித்திக்  - லீனா தம்பதிகளுக்கு  இடையேயான  புருசந்  பொண்டாட்டி  சண்டை  அதகளம்.    மனைவி  சொல்வதெற்கெல்லாம்  ஆமாம்  சாமி  போடும்  கேரக்டர்  ஃபோனில்    மட்டும்  எதிராளியிடம் கெத்து  காட்டுவது  செம  காமெடி 


 5   இத்தனை  களேபரங்கள்  நடந்த  பின்பி  இவர்கள்  நினைத்தது  போல இவர்கள்  காதலர்கள்  இல்லை  , நண்பர்கள்  தான்  என  தெரிந்த  பின்  விடும்  பெரும்  மூச்சு  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டில்  காணாமல்  போவது   ரகளை

ரசித்த  வசனங்கள் 

1     உன்  கை  எங்கேம்மா  போச்சு?


 முறிச்சுட்டேன் 


 வாட்?


 ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட்  ஆக்கிட்டேன்மா


2  ஆஃபீஸ்ல ஒரு  திடீர் மீட்டிங். ஒரு  ஸ்பீச்  கொடுக்கனும், போய்ட்டு  வந்துடறேன்


என்ன  டாப்பிக்?

தாம்பத்ய  வாழ்க்கையை  இனிமையாக  கழிப்பது  எப்படி ?

 சூப்பர், ஆனா  அது  நம்ம  வீட்ல  ஒர்க்  அவுட்  ஆகறது  இல்லையே? 


3  உன்  வீட்டு  சொந்தத்தில்  மட்டும்  நம்ம  பொண்ணுக்கு  மாப்ளை  வேண்டாம்


 ஏன்  அப்படி?


  எனக்கு  ஆன  சம்பவம்  என்  பொண்ணுக்கும்  ஆகனுமா?


4  இப்போ  எல்லாரும்  எழுந்து  நில்லுங்க ,  ஒரு  30  நொடி  அவங்கவங்க  மனைவியை  கட்டிப்பிடிச்ச படி   இருங்க் \


\  ஏம்ப்பா , அவனவன்  சொந்த  சம்சாரத்தைக்கட்டிப்பிடிக்கவா  காசு  கொடுத்து  இந்த  கோர்ஸ்ல  சேர்ந்தோம் ? அட  போப்பா  . இது  ஆகறது  இல்ல 


5  பெண்ணின்  மனசு  அவளுக்கும், அவளைப்படைத்த  கடவுளுக்கு  மட்டும் தான்  தெரியும் 


6 ஆமா, சாம்பார்ல  தயிர்;கலந்திருக்கியா?


 யாராவது  சாம்பார்ல  தயிர்   சேர்ப்பாங்களா?


பின்னே? சாம்பர்  ஜில்லுனு  இருக்கே ?

 பத்து  பதினைஞ்சு  நாட்கள்  ஃபிரிட்ஜ்ல  இருந்தா  எப்பேர்ப்ப்ட்ட  குழம்பும்  ஜ்ல்னுதான்  இருக்கும் 7   அந்த  ஆண்டவனாப்பார்த்துதான்  நமக்காக  அந்த  லிஃப்ட்டை  ரிப்பெர்  ஆக்கி  இருக்கான்


 பார்த்தியா, கொஞ்சம்  விட்டா  இந்த  லேடீஸ்  ஆண்டவனைக்கூட  அவங்க  வீட்டு  வேலைக்காரன்  ஆக்கிடறாங்க 


8    உங்களுக்கு  அவங்களைக்கண்டா  பயமா?

 எனக்கா? பயமா? கட்டின  பொண்டாட்டியைத்தவிர  வேற  யாரைக்கண்டும்  எனக்கு  பயம்  இல்லை 

9  முழங்கால்  மூட்டு  மாற்று  அறூவை  சிகிச்சை  இருக்கு , டொனேஷன்  குடுங்க 


 எவ்ளோ  மொத்த  செலவு 


 ஒண்ணே  முக்கால்  கோடி 

‘ தங்கத்துலயா  கால்  நடறீங்க ?உங்களுக்கு  டவுட்டா  இருந்தா  உங்க  ரெண்டு  காலில்  ஒரு  கால்  முட்டியை  மாத்தி  ஆபரேஷ்ன்  செஞ்சு  பாருங்க 


10  இப்போ  இந்த  நிமிசமே  அவனுக்கு  ஃபோன்  பண்ணி  இங்கே  வரச்சொல்


 அவன்  ஃபோன்  ஸ்விட்ச்  ஆஃப்

‘ அவன்  ஃபோனை  இங்கே  கொண்டு  வா, நான்  ஆன்  பண்ணித்தர்றேன்


11   அய்யய்ய்யொ , உங்க சம்சாரம்  மயக்கம்  போட்டு  விழுந்துட்டாங்க , தண்ணீர்  தெளிச்சு  தெளிவிக்கனும்


 கொஞ்ச  நேரம்  அவ    வாயை  மூடித்தான்  இருக்கட்டுமே? இம்சை  லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மெடிட்டேஷன் ,  பிராணயாமம்  எனும்  மூச்சுப்பயிற்சி  எல்லாம்  தரையில்  அமர்ந்துதானே  செய்வார்கள் ? நாயகன்  ஸ்டூல்    மேல்  அமர்ந்து  கொண்டு  செய்கிறார்


2   மேரேஜ்  ஃபங்க்சனுக்குபோன முஸ்லீம்  ஜோடி  அங்கே  இருந்து  தன்  மகளுக்கு  ஃபோன்  போட்ட  போது  நெம்பர்  பிசி  என  சில  டைமும், ஸ்விட்ச்  ஆஃப்  என  சில  டைமும்  வருவதால்   மகள்  வீட்டை  விட்டு  ஓடிப்போய்  இருப்பாளோ  என  சந்தேகப்பட்டு  வீட்டுக்கு  ரிட்டர்ன்  வருவது  அபத்தம். பக்கத்து வீட்டுக்காரர்  ஃபோனுக்கு  தொட்ர்பு  கொள்ளலாம், செக்யூரிட்டிக்கு  ஃபோன்  போட்டு  விசாரிக்கலாம் 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -  அப்படி  எதுவும்  இல்லை , க்ளீன்  யூ  சர்ட்டிஃபிகேட்  படம் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வழக்க்கமான  மசாலா  படம்  பார்ப்பவர்கள் , ஃபைட்  சீன்ஸ் , டுயட்  சீன்ஸ் , மொக்கை  காமெடி  டிராக்  என  பார்ப்பவர்கள்  இந்தப்படத்தை  தவிர்க்கவும். இது  மாறுபட்ட  ஃபேமிலி  காமெடி  மெலோ  டிராமா.,  ஆறே  ஆறு  கேரக்டர்களை  வைத்து   அதகள  காமெடி  பண்ணும்   ஃபீல்  குட்  மூவி  ரகம்,  ரேட்டிங்  3 /.5 

0 comments: