Wednesday, December 11, 2013

Miss Lekha Tharoor Kaanunnathu (2013) (Malayalam)- சினிமா விமர்சனம்

ஹீரோயின் ஒரு டி வி தொகுப்பாளினி கம் கேம் ஷோ நடத்துபவர் .  . பல திறமைகள் உள்ளவர். ஆனா விழி ஒளி இழந்தவர் . இவருக்கு கண் ஆபரேஷன் பண்ணி  பார்வை கிடைச்சிடுது . அதுக்குப்பின் தான் அனர்த்தமே ஆரம்பிக்குது . அவர் பார்வைக்கு சில அபூர்வமான அரிதான காட்சிகள் காணக்கிடைக்குது . அதாவது மரண தேவன் யாரை வந்து அழைச்சுட்டு போறாரோ அந்த சாவு முன் கூட்டியே அவருக்குத்தெரிஞ்சுடுது . 

 பலரிடம் சொல்லியும் அதை யாரும் நம்பலை .டாக்டர் கிட்டே காட்டியும்  நோ யூஸ் .  பேராநார்மல் ஆக்ட்விட்டி  , அதீத கற்பனை அப்டின்னு ஏதேதோ சொல்லி அவரை தட்டிக்கழிச்சிடறாங்க  அதுக்குப்பின் தான் தனக்கு கண் தானம் கொடுத்த பொண்ணு யார்? அவர் வாழ்க்கைல நடந்த சம்பவங்கள்  தான் இதுக்குக்காரணம்னுயூகிச்சு  அதைப்பற்றிய தேடலில் இறங்கறாங்க .


அந்தப்பொண்ணு யார்?  அந்தப்பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குச்சு ? அல்லது அது கொலையா?  என்பதெல்லாம்  மீதித்திரைக்கதையில் காண்க. 

 சும்மா சொல்லக்கூடாது . திரைக்கதையில் கன கச்சிதமான பொறுமையுடன்  அழகா சொல்ல வந்த விஷயத்தை க்கோர்வையா சொல்வதில் இயக்குநருக்கு வெற்றி


மீரா ஜாஸ்மின் தான் மெயின் ஹீரோயின்  . ரன் படத்தில் துடிப்பான , இளமையான அழகிய நடிப்பை வழங்கிய இவர் இந்த கேரக்டரில் மிக அழகாகப்பொருந்தியதில் ஆச்சரியமே இல்லை . ஆனால் திகில் காட்சிகளில்  இவரது அழகு முகத்தில் நளினி , ஜீவிதா அளவுக்கு  பய ரேகைகளை ஓட விட்ச முடியாமல் போனது அவர் தவறல்ல . பிரம்மனின் தவறு . 


டாக்டராக வருபவர்  நடிப்பு கச்சிதம் . இடைவேளைக்குப்பின் வரும் அந்த லேடி கேரக்டருக்கு யாராவது அனுபவ நடிகையை போட்டிருக்கலாம் . ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆட்கள் மிரட்டி இருப்பார்கள் . 


ஒளிப்பதிவும் , இசையும் இந்த மாதிரி  த்ரில்லர் படத்துக்கு முக்கிய வேர்கள் . ஒளிப்பதிவு ஓக்கே , ஆனா இசை , பின்னணி இசை  ரொம்ப சாதாரணமாக இருப்பது அதிர்ச்சி .  டெம்ப்ளேட்டாக இருக்கிறது .  


 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள் 


1.  போஸ்டர் டிசைன் பக்கா . த மோஸ்ட் வாண்ட்டட் & எக்ஸ்பெக்டட் சைக்கோ த்ரில்லர் ஆஃப் த இயர் 2013 என பிரம்மாண்டமாக கேரளா பூரா ஒட்டி கவனம் கவர்ந்து விட்டார்கள் .  மம்முட்டி , மோகன் லால் படங்களுக்கு இணையான விளம்பரங்கள் , முக்கியத்தியேட்டர்களை வளைத்துப்போட்ட லாவகம்  சபாஷ் 


2.  ஹாஸ்பிடலில்  வயசான லேடி எமனுடன் போகும் காட்சி ,  சின்னப்பையன் இறந்த பின்னும்  பந்து விளையாடும் காட்சி  , என பல காட்சிகள் காட்சி அமைப்பு , எடிட்டிங்க் , ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக மிரட்டும் லாவகம்   அருமை 

இடைவேளைக்குப்பின் வரும் காட்சியில்  மீரா ஜாஸ்மின் கண்ணாடியில் தன் முகத்தைப்பார்த்து விட்டு இது நான் இல்லை, இது யார்? என அலறும் காட்சி ரத்தத்தை உறைய வைக்கும் அபாரமான காட்சி .சஸ்பென்ஸ் காட்சியை எப்படி பிரசண்ட் பண்னனும் என்பதற்கு அதைத்தொடர்ந்து வரும் காட்சிகள் நல்ல உதாரணம் 


4 மீரா ஜாஸ்மினுக்கு கண் மங்கலாகத்தெரியுது என்பது காட்சியால் இயக்குநரும் , ஹீரோயினும் உணர்ந்திய விதம் அருமை  


 இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள் 

 1. ஊமை விழிகள் , நீ வருவாய் என முதற்கொண்டு பல தமிழ்ப்படங்களில் இயக்குநர்கள் செய்த அதே தவறை இந்தப்பட இயக்குநரும்  செய்கிறார் . அதாவது  விழி ஒளி இழந்தவர்க்கு இரு கண்களும் தானம் வழங்கப்படும்போது ஒரே நபரின் இரு கண்கள் பொருத்த மாட்டார்கள் . வேறு வேறு இரு நபரின் தலா ஒரு கண் தான் பொருத்தப்படும் . அந்த விதியை படத்தில்  மீறி இருக்காங்க 

2 . அதே போல் கண் தானம் செய்தவர் முழு விபரம் எக்காரணம் கொண்டும்  சம்பந்தப்பட்ட ஆபரேஷன் செய்து கொண்ட நபருக்கு தெரிவிக்கப்படக்கூடாது . 


3 ஓப்பனிங்க் சீன் ல  மீரா ஜாஸ்மின்  கால் மேல கால் போட்டு தெனாவெட்டா  செய்யும் கேம் ஷோ எடுபடலை . இயற்கையில் உயரம் குறைந்த அவர் ஜைஜாண்டிக் பர்சன் போல் ஆக்ட் கொடுப்பது தேவை இல்லாதது .  அதே போல் படத்தின் கதைக்கு அந்த கேம் ஷோ சீன் அநாவசியமே

4  டாக்டராக வருபவர்  ஹீரோயினுடன் சும்மா வாக் போவது , அவர் தடுக்கும்போது தாங்கிப்பிடிப்பது , இருவருக்கும் காதல் வருமா? என ஆடியன்சை எதிர்பார்க்க வைப்பது இந்த சீன்களும் ட்ரிம் செய்யப்பட வேண்டிய தேவை இல்லாத காட்சிகளே! 

5 போஸ்டர் டிசைனில் ஹீரோயின் விழி ஒளி இழந்தவர் என்பதை உணர்த்த கூலிங்க் கிளாஸ்  உடன் கையில்  ஸ்டிக்குடன் நடக்கும் காட்சியை காட்டி இருந்தால் இன்னும் டெம்போ எகிறி இருக்கும். நார்மல் மீரா ஜாஸ்மினையே காட்டி இருக்கிறார்கள்   

நச் வசனங்கள் 


1.  ஒருவர் அனுபவிக்கும் வேதனையை இன்னொருத்தருக்கு சும்மா வாய் வார்த்தையா சொன்னா 100% அவருக்குப்புரியாது . அவரும் அந்த கஷ்டத்தை அனுபவிச்சாத்தான்  புரியும் 
 
 
எனக்குப்பார்வை இல்லாத போது என்ன நிம்மதி கிடச்சதோ அது இப்போ பார்வை கிடைச்ச பின் இல்லை 

3 நாளைக்கு நடக்க இருக்கும் மரணத்தை இப்போ சொன்னா சூன்யக்காரி, பிசாசுன்னு சொல்றாங்க மதி கெட்ட ஜனங்க . இதே ஒரு ஆண் சொல்லி இருந்தா கொண்டாடி இருப்பாங்க , அவன் சம்பாதிச்சு இருப்பான் 


சி பி கமெண்ட் - மிக கண்ணியமாக அனைவரும் பார்க்கும் தரத்தில் எடுக்கப்பட்ட நல்ல த்ரில்லர் இது . ஏதோ ஹாலிவுட் படத்தில் இருந்து சுட்டிருக்கிறார்கள் என்றாலும் இது கவனிக்கத்தக்கப்படைப்பே 


 ரேட்டிங்க் = 2.75 /5 


 கேரளா - கொல்லம் பிரனவம் தியேட்டரில் படம் பார்த்தேன் . பால்கனியே 75 ரூபா தான் , ஏ சி , டி டி எஸ் எல்லாம் அருமை , சீட்கள் கூட சூப்பர் 


Released on December 06 2013
Director: Shajiyem
Producer: K.K.Suresh Chandran
Music Director: Ramesh Narayanan
Cast: Meera Jasmine, Basil, Suraj Venjaramoodu, Nandu, Geetha Vijayan



Tuesday, December 10, 2013

விடியும் முன்.-சினிமா விமர்சனம்

 

கதையில் நல்ல கதை நொள்ள கதை என்று எதுவும் கிடையாது. கதை சொல்பவன் சொல்லும் விதத்தில்தான் அது தீர்மானிக்கப்படுகிறது - ரேடியோ மிர்ச்சியில் இயக்குனர் பாலாஜி கே.குமார் கூறியது இது. 


பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களில் தோன்றி, அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு, நடுநிசி நாய்கள், பொம்மலாட்டம் இப்படி பல படங்களில் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் பற்றிய கதைக்களம் கையாளப்பட்டுள்ளது. 


விடியும் முன்... தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கதை என்று இப்படத்தை சித்தரிப்பது தவறு, ஆனால் தமிழ் சினிமாவில் கண்டிராத ஒரு 'விவரிப்பு' இப்படத்தில் அமைந்திருந்தது. 


பாலியல் வன்கொடுமை பற்றி ஒரு கதைக்களம் அமைக்கப்படும்போது, இயக்குனர்க்கு பல கடமைகள் எழுகின்றது குறிப்பாக ஒரு சிறுமிக்கு நடந்தவற்றை திரையில் சித்தரிக்கும்போது உணர்ச்சியையும் தெரிவிக்க வேண்டும், அதே சமயம் ஆபாசமாக காட்சியை தோன்ற வைக்கக் கூடாது. இப்படத்தில் அந்த நூல்வெளியை சிதறாமல் அமைத்ததற்கு இயக்குனர் பாராட்டு பெறுகிறார். 


'விடியும் முன்'னை பொறுத்தவரை, அற்புதமாக அமைந்திருந்தது சிவகுமாரின் ஒளிப்பதிவு. க்ளோஸ் அப் லாங் ஷாட் அமைத்திருந்த விதம், காட்சிகளுக்கான கலர் டோன், லொகேஷன் எல்லாம் சபாஷ் போட வைத்தது. 


படத்தின் பெரிய பலமும், பலகீனமும் ஒரே விஷயம்தான் என்றால் நம்ப முடியுமா? காட்சிக்கு கொடுக்கப்பட்ட டீடைலிங் தான் படத்தின் பலம். ஆனால், அதுவே சில இடங்களில் மிகையாக தோன்ற வைத்துள்ளது. 


'நான் மகான் அல்ல' வினோத் முதலில் தோன்றுகையில் silhoutte ஷாட்டில் பில்ட் அப் விடுகின்றனர். முதல் காட்சிக்கு பில்ட்அப் ஒகே அதுக்காக காட்சிக்கு காட்சி பில்ட்அப் விடுவது ஷ்ஷப்பா என்ற சலிப்பை தருகிறது. பூஜா பேசும் வசனங்கள் ஐந்து நிமிட காட்சிக்கு மேலும் ஐந்து நிமிடத்தை கூட்டுகிறது. படத்திலுள்ள அனைத்து நட்சத்திரங்களும் இழுத்து இழுத்து வசனம் பேசுவதையும், ஜான் விஜய் ஓவராக உடல்மொழி காட்டுவதையும் கொஞ்சம் டிங்கரிங் செய்திருக்கலாம். 


ஆனால், நான் முன்பு கூறியது போல் இதுதான் படத்தின் பலமும் கூட, தேவையற்ற காட்சிகள் என்று கூறும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் ஒரு சரியான முடிவு அமைந்திருந்தது. இன்கம்ப்ளீட் ஷாட் என்று கூறும் அளவுக்கு படத்தில் எதுவும் இல்லை. 


மீண்டும் மீண்டும் முன்னுக்கும் பின்னுக்குமாக பயணிக்கும் திரைக்கதையில் எதிர்ப்பார்க்க வைக்கும் தூண்டில்கள் கொஞ்சம் வளைந்தே காணப்பட்டது. பாலியல் தொழிலாளியாக பூஜா, மாடர்ன் புரோக்காராக அமரேந்திரன், சின்னய்யாவாக வினோத், குறிப்பாக ஜான் விஜய் கதாப்பாத்திரங்களின் நடிப்பும் தோற்றமும் படத்திற்கு ஈர்ப்புத் தன்மையை சேர்த்துள்ளது. 


இந்த வருடத்தில் வெளிவந்த படங்கள் பலவற்றில் சாதாரண ரகத்தில் அமைந்த அம்சம் 'பின்னணி' இசை. இப்படத்தை பொறுத்தவரை 'கிரீஷ்' பின்னணியில் ஓர் ஆழம் அமைந்திருந்தது. 


நந்தினியாக நடித்திருக்கும் சிறுமி கொஞ்சம் ஓவர் மெச்சூர் பெண்ணாக நடித்துள்ளது, கிட்டத்தட்ட உலக படங்களில் வரும் சிறுமியை போல் இவர் கதாப்பாத்திர நிறம் அமைந்திருந்தது. இன்றைய காலகட்டத்தில் பாட்டி போல் குழைத்து குழைத்து கேள்வி கேட்கும் சிறுமிகளை நாம் பார்ப்பத்தில்லையா என்ன? முகபாவங்களிலும், டயலாக் டெலிவரியிலும் பட்டையை கிளப்புகிறார். 
 

படத்தை த்ரில்லர் என்று கூறுவதை விட 'டார்க் டிராமா' என்று கூறுவது சரியாக இருக்கும். த்ரில்லர் படத்திற்கு தேவைப்படுகிற எங்கேஜிங் திரைக்கதை இல்லை, ஆனால் டிராமாவிற்கு தேவைப்படுகிற டீட்டெய்லிங் அமைந்திருந்தது. வசனங்களில் கொஞ்சம் செல்வராகவனின் கேங்ஸ்டர் பட சாயல்கள் வீசியது. 


படம் பார்க்கையில் சினிமாவை நன்கு தெரிந்த இயக்குனர் இயக்கிய படம் போலத்தான் தோன்றியது. இந்த வருடத்தின் முக்கிய அறிமுகத்தில் இயக்குனராக பாலாஜி குமார் அடையாளப்படுத்தப்படுவார். 


'விடியும்முன்' சில சில இடங்களில் சலிப்பை தருகிறது, சில இடங்களில் சிலிர்க்கவும் வைக்கிறது. கிளைமாக்ஸ்ஸில் நாம் எதிர்ப்பார்த்த ஒரு விஷயமும் நடக்கிறது, எதிர்ப்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டும் அமைகிறது, கடைசியில் வருகின்ற பின்னணியுடன் கிளைமாக்ஸ் மனதில் ஒட்டிக் கொள்கிறது. படம் முடிக்கையில் ஒரு நல்ல படம் பார்த்த அனுபவம் தான் மனதில் பதிகிறது. 



16 வயதினிலே, ஆரண்ய காண்டத்தை போல் path breaking சினிமா, மைல் கல், தமிழ் சினிமாவின் விடியல் என்று இப்படத்தை கூறுவது டூ மச், ஆனால் கண்டிப்பாக ஒரு நல்ல சினிமாவை பார்த்த அனுபவம். 


a


thanx -the hindu

மன்மோகன் சிங் vs நமீதா

1. கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு”"-செய்தி # டைமிங் அவார்டு


==================


2 மு க ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ் - ரிட்டையர் ஆனா பாரத ரத்னா விருது கிடைக்கும்னு ஆசையைத்தூண்டி அப்பா கிட்டே பிட்டைப்போட்டுப்பார்ப்போம்



=================


3 யாருக்கும் அடிபணிந்து போகமாட்டோம்! - தா.பாண்டியன் #  சுருக்கமா போயஸ் பக்கம் போக மாட்டோம்னு சொல்லி இருக்கலாம்




=============




4 அரசு பொது மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்  # இதுல தாராளமா இரட்டை இலையை வரையலாம், கேட்டா இலைல தானே பரிமாறனும்னு சமாளிக்கலாம்






======================




5  வீடுகளில் அதிமுக., கொடியை பறக்க விட உத்தரவு: ஏற்காடு மலைகிராமங்களில் அத்துமீறல் # இப்படி எல்லாம் செஞ்சா வெறுப்புதான் வரும் , ஓட்டு வராது




====================




6   சீனா-மணமகளுக்கு பெட்டி, பெட்டியாக 90 கோடி பணம் சீதனமாக அனுப்பிய மணமகன் # ஒரே ஒரு செக் குடுத்திருக்கலாம், மேட்டர் ஓவர்






=====================

7  திருடர்கள் கட்சி': ராகுல் விமர்சனத்தை எதிர்த்து தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க. புகார் # கொள்ளை அடிக்கும் கட்சிக்கு போட்டிக்கு வந்தா பயம் போல



==========================


8 காங்கிரஸ் ஆட்சியில் அபார வளர்ச்சி - மன்மோகன் சிங் # பாராட்டுக்கு மிக்க நன்றி - நமீதா


===========================


9  பிரதமர் வந்திருந்தால் இலங்கை தமிழ் மக்களை சந்தித்திருப்பார்-சல்மான் குர்ஷித்# நல்ல வேளை.சந்திச்சுப்பேசி இருப்பாருன்னு பொய் சொல்லலை



=====================


10 புகை-போதை பாக்கு விவகாரம்: ராஜஸ்தான் அரசை தமிழக அரசு பின்பற்றலாமே- ராமதாஸ்.# ராணிக்கு யாரையும் பாலோ பண்ணி பழக்கம் இல்லை



=========================


11 காங்கிரஸ் ஆட்சியில் அபார வளர்ச்சி - மன்மோகன் சிங் # 1 விலைவாசி உயர்வு 2 ஊழல் 3 கோஷ்டி சண்டை இந்த 3 ம் தானே?



========================


12 மோடிதான் பிரதமர் வேட்பாளர், அதில் மாற்றமே இல்லை... ராஜ்நாத் சிங் # ஆட்சி மாற்றம் வேணும்னா PM வேட்பாளரையும் மாத்தக்கூடாது



===================


13 இனி அம்மா தான் எங்க பாஸ் (BOSS) - இயக்குநர் அமீர் # எந்த எக்சாமும் எழுதாமயே நீங்க பாஸ் (PASS) -ஜெ



=======================


14 தமிழகத்தில் இப்போது எமர்ஜென்சி ஆட்சி நடக்குது - மு க ஸ்டாலின் #அந்த எமர்ஜென்சி ல கூட ஜெ இருக்கார் பாருங்க.



=======================


15  பெருமை சேர்த்த பிறகுதான் ஓய்வு பெற்றுள்ளார் சச்சின்- கருணாநிதி # 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்தும் சிலர் ஓய்வெடுக்காம அடம் பிடிக்கறாங்க


====================


16  அமெரிக்காவில் முதலீடு செய்ததற்காக அதிபர் மிட்டலுக்கு நன்றி: ஒபாமா # தலைவா! கேட்டீங்களாசேதிய்.நம்ம சொத்துல இருந்து 1% எடுத்துவிடுங்க



===================


17  ஈழதமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவது மாண்புபுமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள்தான்-சரத்குமார் # ஒரு ரயிலே தரலாம் இவருக்கு




=======================



18 அரசியல்வாதிகள் முட்டாள்கள்-பாரத ரத்னா விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்#சத்தமா சொல்லாதீங்கண்ணா.கொடுத்த விருதை பிடுங்கிக்குவாங்க



=====================


19 கட்சிக்கு அதிகம் செலவு செய்யாதீர்' : வைகோ யோசனை # குடும்பத்துக்கே செலவு செய்ய கையிருப்பு பத்த் மாட்டேங்குதுங்ணா


==================


20 மகாத்மா காந்திக்கு பிறகு சிறந்த தலைவர் ராமதாஸ்தான்- அன்புமணி # ராம்தாஸ்க்குப்பின் சிறந்த தலைவர் அன்புமணி ?



==================


21 மக்கள் விரும்பும்போது சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வரும்-சரத்குமார்# பட் உங்க நம்பிக்கை எனக்குப்பிடிச்சிருக்கு


==================


22 மோடியை எதிர்கொள்ள "சைபர் ராணுவ"த்தை களமிறக்குகிறதாம் காங்கிரஸ்! # கிடைக்கப்போகும் பலன் பூஜ்யம் தான்


=================


23 மாமா வீட்டு பணமா: மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் # கேஸ் போட்டா பல மாமாங்கமா நடந்துட்டே இருக்கும்


================


24 இலங்கை பிரச்சனையை வைத்து தமிழக கட்சிகள் அரசியல்-நாராயணசாமி!!!! # ஆமாங்க்ணா.எல்லாம் கை யாலாகாத ஆட்கள்



===============


25 மோடிக்கு ஹிஸ்டரி, ஜாக்ரஃபி டியூஷன் தேவை: அமைச்சர் ராஜிவ் சுக்லா # பொறுங்க.அவரே தனி சரித்திரம் படைப்பார்




========================



Monday, December 09, 2013

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

Kalayana Samayal Saadham Release Date Poster 

ஒரு ஹை க்ளாஸ் பிராமண குடும்பத்தில் நடக்கும் ஏ க்ளாஸ் கதை . ஹீரோ , ஹீரோயின் இருவருக்கும் பெற்றோரால் நிச்சயம் நடந்துடுது. நம்மாளுங்க பட  பூஜை போட்ட அடுத்த நாளே படத்தோட  டீசர் ரிலீஸ் ஆகனும்னு எதிர்பார்க்கறவங்க . நிச்சயதார்த்தம் நடந்துட்டா சும்மா இருப்பாங்களா? 2 பேரும் ட்ரெய்லர் ஓட்டலாம் , ரிகர்சல் பார்க்கலாம்னு முடிவு பண்றாங்க  கலாச்சாரக்காவலர்கள் குய்யோ , முறையோன்னு குதிக்கக்கூடாது அப்டிங்கறதுக்காக குடி போதைல அதை செய்வதா ஒரு சால்ஜாப்பு .


 ஆனா பாருங்க ஹீரோவால “டெம்ப்”ரவரியா முடியல . அவனுக்கு அதிர்ச்சி. ஆனா ஹீரோயின் அதைக்கண்டுக்கலை . பஜ்ஜிக்கு உப்பு கம்மியா இருக்கு அப்டிங்கற மாதிரி ரொம்ப  சாதாரண்மா அதை எடுத்துக்கறா ( அதை = அந்த பிரச்சனையை ) .


ஹீரோ டென்ஷன் ஆகி என்னால தான் முடியல , நீ வேற யாரையாவது மேரேஜ் பண்ணிக்கோ அப்டிங்கறார். என்ன தான் ஃபுல் மீல்ஸ் சாப்பிடலைன்னாலும் மெயின் மேட்டர் தவிர மத்ததெல்லாம் முடிஞ்சிடுச்சே அப்டிங்கறதால ஹீரோயின் பிரேக்கப்க்கு ஒத்துக்கலை . முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார், ட்ரை த ட்ரை அப்டிங்கறா


 அதுக்குப்பின் என்ன நடந்தது ?என்ன என்பதே  பின் பாதி திரைக்கதை 




1982 ல் ரிலீஸ் ஆன பி சி செண்ட்டர் ரசிகர்களுக்கான வாலிபமே வா வா படம், 1992 ல் ரிலீஸ்
ஆன சி செண்ட்டர்களில் செம ஹிட் ஆன முதல் இரவே வா வா தெலுங்கு டப்பிங்க் படம் இரண்டின் கண்ணியமான தழுவல் தான் இது .

ஹீரோ பிரசன்னா. சினேகாவை மேரேஜ் பண்ணி கொஞ்ச நாள் ல யே இப்படி ஒரு கேரக்டர் செய்ய அபார துணிச்சல் வேணும்.சபாஷ் கேரக்டர். பல காட்சிகளில் இவர் மிக கச்சிதமான நடிப்பு .கண்ணியமான தோற்றம் , அழகிய டிரஸ்சிங்க் சென்ஸ் அசத்தல் .


ஹீரோயின் லேகா வாஷிங்க்டன். ஒரு டன் சர்ஃப் எக்செல்லில் வாஷிங்க் செய்தாலும் பளிச் சிடாத சராசரி டல் முகம் .கல்யாணக்காட்சிகளில் மட்டும் களை கட்டுகிறது . சிரத்தையுடன் நடித்திருக்கிறார். நமக்குத்தான் அசிரத்தை. 


டெல்லி கணேஷ், உமா பத்மநாபன் உட்பட படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் நிஜ வாழ்வில் கூட பிராமணர்கள் என்பதால் காட்சி அமைப்பில் ரொம்பவும் இயல்புத்தன்மை வந்து விடுகிறது 
 

பலே பரிமளா  

1. படத்தின் சப்ஜெக்ட்டுக்குத்தக்கப்படி அதே சமயம் கண்ணியம் மாறாமல் முடிந்தவரை புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட வசனங்கள் . பெண்களை மிக வசீகரமாக சிரிக்க வைக்கும் , ஆண்களை சங்கடத்தில் நெளிய வைக்கும் அஜால் குஜால் காமெடி காட்சிகள் பல இடங்களில் பிளஸ் 
\

2. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கல்யாண மண்டபத்தில் நடப்பது போல் வருவதால்  ஒரு கல்யாண  விழாவுக்குச்சென்று வந்த திருப்தி .
3  ஃபேஸ் புக்கில் ஷேர் செய்வது , கமெண்ட்டுவது இரண்டையும் முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட  வித்தியாசமான பாடல் காட்சி அழகு கவிதை 


4 பல காட்சிகளில் கே பாலச்சந்தர் டைப்பில் டைரக்சன் டச் செய்வது. முத்திரை பதிக்கும் இயக்கம் 


5. மேரேஜ் ஆனதும் புருஷன் ஓவரா வாய் பேசுனா எப்படி வாயை அடைப்பே? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் மெது வடையை வாயில்  வைக்கும் காட்சி ஏதாவது கில்மா குறியீடா? 


6 பல்லுப்போன ராஜாவுக்கு பருப்பு திங்க முடியலையா? கிளு கிளு பாடல் வரிகள் அபாரம்


7 டாக்டர் , பவுலிங்க் தான் போட்டேன் , பேட்டிங்க் நான் இல்லை என ஹீரோ ட்விஸ்ட் செய்யும் காமெடி காட்சி அபாரம் 


சொதப்பிட்டியே சொப்னா 


1. பிராமண இனத்தைச்சேர்ந்த சைவம் சாப்பிடும் கண்ணியமான குடும்பப்பெண் சர்வ்சாதாரணமாக சரக்கு சாப்பிடும் அதிர்ச்சிக்காட்சி தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பும் . விதிவிலக்குகள் இருக்கலாம், ஆனால் சினிமாவில் காட்டப்படும் காட்சி ஒரு சமூகத்தை பிரதிபலிக்கும் அபாயம் இருக்குது 
2  மேரேஜ்க்கு முன்னால என்ன வேணா பண்ணிக்கோ , ஆனா மெயின் மேட்டர்க்கு மட்டும் இடம் கொடுத்துடாதே என பெத்த அம்மாவே பொண்ணிடம் சொல்லும் காட்சி கை தட்டலுக்கு  உபயோகமா இருக்கலாம்., ஆனால் விரசம் 


3 மேரேஜ் பண்ணிக்கப்போகும் பொண்ணிடம் வருங்கால கணவன் “ காலேஜ் படிக்கும்போதே உனக்கு கில்மாவில் அனுபவம் இருக்கா? “ என சர்வ சாதாரணமாக கேட்பானா? ரகுவரன் , பிரகாஷ்ராஜ் மாதிரி சைக்கோ கேரக்ட் கேட்டா அது வேற  . ஒரு ஹீரோ அப்டி கேட்டா பொண்ணுக்கு க்கோபம் வராதா? அதை சர்வ சாதாரணமாக எடுத்துக்கிட்டு அசால்ட்டா நோ சொல்லும்  ஹீரோயினும் அதிர்ச்சி அடைய வைக்கறாங்க 


4 படத்தின் முன் பாதி சுவராஸ்ய முடிச்சு ஓக்கே , பின் பாதியில் எப்படிக்கதையை கொண்டு போவது என தெரியாமல் குஷி , போடா போடி என திரைக்கதை கண்ட மேனிக்கு பயணிக்கிறது 


5 படத்தின் பல காட்சிகள் , வசனங்கள் குடும்பத்துடன் பார்க்க விடாமல் நெளிய வைக்கிறது ,. ஆண்மையைக்குறை சொல்லும் காமெடியை பெண்கள் உள்ளூர விரும்பினாலும் அருகில் அமர்ந்திருக்கும் கணவன்  தன்னை தப்பா நினைச்சுக்கக்கூடாது என பெண்கள் அடக்கி வைக்கும் சிரிப்பை அவர்க்ள் முகத்தில் காண முடிந்தது . ஆண்களும் சில காட்சிகளில் சைக்காலஜிக்கலாய் பாதிக்கப்படிவதை காண முடிந்தது . இந்த இரு பாயிண்ட்சும் படத்தின் வெற்றிக்குப்பெரிய தடைக்கல் 


6  அந்த மேட்டர் மட்டும் தான் வாழ்க்கையா? என கேட்கும் ஹீரோயின் அதே காட்சியில்  பின்  “ அது இல்லாம என்னால் இருக்க முடியாது “ என சொல்வதும் அதீதம் தான் . அது எப்படி ? அனுபவ்ம் இல்லாமலேயே அப்படி ஒரு பெண்ணால் சொல்ல முடியும் ? 

7  படத்தின்  மெயின் மேட்டரே ஹீரோவால முதல் முயற்சியில் மேட்டர் பண்ண முடியல என்பதால் தான் . பின் ஏன் அவர் 2 வது , 3 வது முயற்சியே செய்யலை ? நம்மாளுங்க அரியரில் தான் அட்டெம்ட்க்கு யோசிப்பாங்க ,. இதுல யோசிக்கவே மாட்டாங்க 


8 க்ளைமாக்ஸ் மகா சொதப்பல் . மாப்ளை பொண்ணு  2  பேரும் ஓடிட்டாங்க என்ற பதை பதைப்பு கொண்டு வர ட்ரை பணி இருக்காங்க எடுபடலை . ரொம்ப செயற்கையான முடிவு 


9  இந்தப்படத்துக்கு பின்னணி இசை ரொம்பவே சுமார் தான் . பாடல்காட்சிக்கான இசை ஓக்கே , ஆனால் ஒரு காமெடி சப்ஜெக்ட்க்கு இந்த இசை போதாது  


10 மண்டப அட்வான்ஸுக்கு  கொடுக்கப்படும் செக் ஓரத்தில்  லைட்டாக கட் ஆகி இருப்பதால் செக் பவுன்ஸ் ஆவது , மண்டபம் கேன்சல் ஆவது அபத்தம்  பேங்க் மேனேஜர் தன் ரெகுலர் கஸ்டமர் ஒரு வி ஐ பி எனில் அவருக்கு ஃபோன் பண்ணி தகவல் சொல்லித்தான் பவுன்ஸ் பண்ணுவார் . மேலும் மேனேஜர்க்கு அந்த செக்கை பாஸ் பண்ணும் அதிகாரமும் இருக்கு . செக் ரிட்டர்ன் ஆனதும் மண்டப மேனேஜர் அவருக்கு ஏன் தகவல் சொல்லலை? சொல்லி பதில் செக் தராமல் போனால் தான் மண்டபம் கேன்சல் ஆகும்


a


நச் டயலாக்ஸ் 


1. நானும் தான் டெய்லி உக்கார்றேன் . எனக்கு எதும் இல்லையா? ஒரு பொண்ணு உக்காந்துட்டா என்றா மட்டும் ஏன் கொண்டாடறீங்க?



2  பேரண்ட்சே மாப்ளை பார்க்கறாங்க , நமக்கு  நோ ரிஸ்க் . நம்ம வேலை ஒன்லி ரிஜக்‌ஷன் தான் 


3 நீங்க எங்கே ஒர்க் பண்றீங்க? 


 எனக்கு சம்பளம் தரும் ஆஃபீஸில் 


4  டேய் , பசங்களா! அம்மா , அப்பா பக்கத்தில் இல்லைன்னா எதை வேணாலும் தொடலாம்னு நினைக்கறீங்களா? 

 இந்த டயலாக் அவனுங்களுக்கா? எனக்கா? 

 ஏன் கேட்டீங்க> 


 சும்மா 



5  எனக்கு குழந்தை பிடிக்காது , ஆனா குழந்தையை பிடிக்கும்கற பொண்ணுங்க பிடிக்கும் 


6  ஆரம்பத்துலயே பொண்ணு பிடிச்சுடுச்சுன்னு சொல்லிடக்கூடாது , நமக்கான நெகோசியேஷன் பவர்  போயிடும்


நாம என்ன பிஸ்னெஸா பண்றோம் ?


7  ஒரு பொண்ணுக்கு மாப்ளை ஆவது  ஈசி . அவங்க பேரண்ட்ஸ் வெச்சு கவர் பண்ணிடலாம் , ஆனா ஒரு பொண்ணு க்கு ஃபிரண்ட் ஆவது கடினம் 



8  சார்  காபி ல ஈ 

 அடடா, சரி  எப்போ மேரேஜ் டேட் ?

 நாங்க போய் ஈ மெயில் அனுப்பறோம் 


9  இந்தக்காலத்துல மாப்ளை பார்க்கும் முன்பே மண்டபம் பார்த்துடுடறாங்க


10 ஸ்டேண்ட் அப் 

 வாட்? 


 இல்லை . ஸ்ட்ரெஸ் ஆகாத . படிச்சிருக்கேன் , சரி ஆகிடும் 


11 சிஸ்டம் டவுன் ஆகிடுச்சு 

 சிஸ்டமுமா? 



12 பப்ளிக் ப்ளேஸ் ல இப்படி செல் ஃபோன் ல கில்மாப்படம் பார்க்கலாமா/ 

 சரி  வா அப்படி ஓரமா போய் கார்ல உக்காந்து பார்க்கறோம்


13 தப்பு செய்ய நினைச்சா சாமி குத்திடும்பாங்களே? அதனாலயோ? 

 கண்ணைத்தானே குத்தனும் >? 


14  பிரச்சனையை தைரியமா ஒத்துக்குவதே  முதல் சிகிச்சை 



15  அடியேய் , இண்ட்டர் கோர்ஸுக்கு மட்டும் மேரேஜ்க்ல்கு முன்னே ஒத்துக்காதேடி 

 ஹ்ஹுக்கும் ,.  அது மட்டும் ந்டக்காதும்மா 



16 உன் பிராப்ளத்துக்கு ஜீன்ஸ் காரணமோ?

 அப்டி இருந்தா என் அப்பாவுக்கு நான் எப்படி பிறந்திருப்பேன்?

 நான் சொன்னது ஜீன்ஸ் பேண்ட் 


17  மாப்ளை ஆகிட்டா யார் கூட வேணாலும் பக்கத்துல உக்காரலாம், ஆனா பொண்ணு பக்கம்  மட்டும் போக விடமாட்டாங்க 



18  பொண்ணு விரும்புவது  யு எஸ் மாப்ளை , ஆனா கிடைச்சது இந்தியன் மாப்ளை , அப்போ பொண்ணு என்ன செய்வா? 

 அடிக்கடி யு எஸ் வெக்கேசனுக்கு  போவா 



19  ஒரு பையனுக்கு ஏதாவது பிராப்ளம்னா பொண்ணுக்கு ஏன் பரிகாரம் பண்றீங்க? 


20  என்ன செஞ்சான் அந்த மடையன் ? 

 ஒண்ணுமே செய்யலை , அதான் பிராப்ள,ம் \
\





 சி பி கமெண்ட் - ஏ செண்ட்டர் ரசிகர்கள் மட்டும் தான் ரசிச்சுப்பார்ப்பாங்க  . பிரசன்னா என்ற பெயரை டைரக்டர் லிஸ்ட்டில் பார்த்து பலரும் ஹீரோ பிரசன்னா தான் டைரக்டர்னு நினைச்சுட்டாங்க . அவர் ஒரு மலையாள டைரக்டர் . மலையாளத்துல இது ஹிட் ஆகலாம் . இங்கே எடுபடாது , மீடியாக்கள் பாராட்டும் . செலவே இல்லாத படம் என்பதால் நட்டம் வராது . ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் . 7 கள்ளக்காதல்  ஜோடி , 6 தெய்வீகக்காதல் ஜோடிகள் மட்டும் தான் தியேட்டர்ல .கூட்டமே இல்லை . இசை  யாரோ அரோரா வாம் . படமும் அரோகராதான்

ரிவியூல ஜனனி ஐய்யர் ஃபோட்டோ இருக்குது.. ஏன் என கேட்பவர்களுக்கு -பொண்ணு வைக்கற இடத்துல பூ வைப்பது மாதிரி பட ஹீரோயின் மொக்கை ஃபிகர் எனில் பட ஆடியோ ரிலீஸ்க்கு வந்த ஃபிகரை அப்டேட்டுவது தமிழர் பண்பாடு



எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 

 குமுதம் = ஓக்கே 


 ரேட்டிங்க்  =  2.75 / 5

படுத்ததும் சமத்தா தூங்காம சமந்தாவை நினைச்சுட்டு இருந்தா......

1. பஸ் ல 2 பொண்ணுங்க நீண்ட இடைவெளிக்குப்பின் சந்திச்சுக்கறாங்க போல.அட்ரஸ் ,போன் நெம்பர் பப்ளிக்கா ஷேரிங்.எத்தனை பேர் நோட் பண்ணாங்க்ளோ?



====================


2 எளிமையான கணவரைப்பெற்ற பாக்கியசாலி(னி) க்கு பிறந்த நாள் வாழ்த்து


====================


3 வேலைக்குப்போற பொண்டாட்டிங்க எல்லாம் அவங்க ஏ டி எம் கார்டை அவங்கம்மா வீட்டு பீரோ ல வெச்சுட்டு வந்துடறாங்க :-(


=================



4 கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருந்த விஜய் ( யோகன் அத்தியாயம் 1) .சூர்யா ( துப்பறியும் ஆனந்த்) இருவரும் அதை தவிர்த்தது பெரிய இழப்பு



==================


5 பாரீன் லேடி ( BUYER) கம்பெனிக்கு வந்திருக்கு.அவங்களை ரயில்வே ஸ்டேஷன் ல் டிராப் பண்ண 18 பேரும் அடிதடி.விட்டா சீட்டு குலுக்கி பார்ப்பாங்கபோல



===================


6 மணிரத்னத்தின் அழகியல் நேர்த்தி ,ஷங்கரின் கமர்ஷியல் கலந்த கலவையாக கவுதம் மேனனை சொல்லலாம்



=====================


7 தொட்டுக்க என்ன கொண்டு வந்திருக்கே னு டேமேஜர் ரிசப்ஷனிஸ்ட் கிட்டே கேட்டாராம்.டபுள் மீனிங்கா இருக்குமோ?


================


8 சிம்புவின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நம்ம முன்னாள் காதலி எந்நாளும் மீண்டும் இந்நாள் காதலி ஆக வாய்ப்பு உண்டு



==================


9  FB ல பொண்ணுங்க சிலர் " வீட்ல யாரும் இல்லை " னு அப்டேட் போடறாங்க.அதை 1790 பேர் லைக் பண்றாங்க # அடேய் ;-))



=================


10 அஜித் ன் ஷாலினி அதிர்ஷ்ட சாலி நீ!


================


11 எங்களுக்கேல்லாம் தொப்பையே வர்றதில்லை னு ஒரு லேடி ஸ்டாf பெருமையா பேசுச்சு.மாசமா இருக்கும்போது தொப்பை வருதே?னு மடக்கிட்டேன் # யாரு கிட்டே



====================


12 சங்கீதா விஜய் ,ஷாலினி அஜித் இருவரில் யார் கொடுத்து வெச்ச மகராசி ? னு யாரும் இன்னும் சண்டை போட்டுக்கலையா? ;-))


===================


13  ஈரோடு பார்க்் ஏர்செல் ஆபிசில் போன மாசம் பில் கட்ரப்ப இருந்த டக்கர் பிகர் இப்போ இல்ல.தகவல் அறியும் உரிமைச்சட்டப்படிகண்டுபிடிக்கமுடியுமா?



==================


14 விஜய் - நான் சைலன்ட் சூப்பர் ஸ்டார்னு செலக்ட் ஆகி இருக்கேன்.எப்பூடி?



அஜித் -.,.....( ஸைலன்ட்) # நீதி - யோசிச்சா புரியும் ;-))



================


15 நடப்பது அம்மாவின் ஆட்சி ! கொடுப்பது சைலன்ட் சூப்பர் ஸ்டார் பட்டம் டூ ரஜினி ,விஜய் # வாவ்! வாட் எ டைமிங்


====================


16  2014 பொங்கல் சேல்ஸ் ராமராஜ் வேட்டி சட்டை ,கதர் கடையில் வெள்ளை வேட்டி சட்டை செம சேல்ஸ் ஆகும்



====================


17 நான் சின்னப்பையனா இருக்கும்போது சேலையை ரெண்டா கிழிச்சா வர்றது தான் 2 தாவணி னு நினைச்சேன் ( HALF SAREE)



==================


18 டீசரை வெச்சு ஒரு படத்தை,வெற்றியை கணிக்க முடியுமா? ஒரு முழுப்படத்துக்கு ஒரு டீசர் பதம்



================


19 வஞ்சி நீ என்னைக்கொஞ்சி மகிழ்வதில் கஞ்சி ( கஞ்சி = கஞ்சப்பிசினாரி)



================


20 ஆல் இன் ஆல் அழகு ராஜா வின் பாதையில் ஜில்லா வும் எல்லோரையும் முந்திக்கொண்டு நல்ல நல்ல தியேட்டர்களை புக் பண்ணிவிட்டன.வாழ்த்து ;-)))



====================



21  ஜில்லா ,வீரம் இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் விமர்சகர்களுக்கு சிரமம்.மினிமம் 2 நாள் கேப் இருந்தா தேவலை


================


22 சமத்தா படுத்ததும் தூங்கிட்டா நீ நல்ல பையன்.படுத்திருக்கும்போதும் சமந்தா நினைவு வந்தா கெட்ட பையன் # மீ ஆல்சோ எ பேடு பாய்




=================


23 கமல் காட்டிய வழியில் விஜய் இன்னும் ஜெ வை சந்திக்காமல் இருப்பது ,ஜெயா டி வி யில் வராமல் இருப்பது அவரது தைரியத்தை காட்டுகிறது. # ஜில்லா



==================



Sunday, December 08, 2013

ஈகோ - சினிமா விமர்சனம் ( தினமலர்) - கேபிள் சங்கர்-ன் வசனம்

தினமலர் விமர்சனம்

ஈஸ்வர் - கோமதி எனும் நாயகன், நாயகி பாத்திரங்களின் நாம கரண(பெயர்) சுருக்கம் தான் ஈகோ. இருவருக்குமிடையேயான ஈகோ தான் மொத்த படமும் கூட!

கதைப்படி புதுமுக ஹீரோ வேலு - ஈஸ்வரும், காமெடியன் பாலாவும், திருட்டு பசங்க. இருவரும் தங்கள் கூட்டாளி திருடர்கள் இருவர் கண்ணிலும் மண்மை தூவிட்டு கொள்ளை அடிச்ச பணம் கொஞ்சத்தோட திருட்டு ரயிலில் ஏறுறாங்க. அதே ரயிலில் நாயகி அனஸ்வரா எனும் கோமதியும், அவரோட கல்லூரி தோழியும் பயணிக்கின்றனர். நாயகியின் கைப்பையில் கல்யாணத்தை நிச்சயிக்க இருக்கும் காஸ்ட்லீ மோதிரம் இருக்கிறது! 
அதை திருடி செல்லும் திருடனை துரத்தி, மோதிரத்தை பறித்து வரும் நாயகர் ஈஸ்வரும், நண்பர் பாலாவும் அந்த மோதிரத்தை நாயகியிடம் தருவதற்குள் வண்டி புறப்பட்டு விடுகிறது! அந்த வைர மோதிரத்தின் மதிப்பு தெரியாத இருவரும் அதை நாயகி கோமதியிடம் கொடுத்துவிட்டு, தங்கள் பணப்பையை அவரிடமிருந்து வாங்கி வரலாமென கோமதியின் ஊருக்கு போகின்றனர்.


மோதிரத்தை எடுத்து வருபவன் தான் தன் காதலன், அவனை ஓ.கே. செய்தால் தான், நான் ஊர் திரும்புவேன், வீட்டுக்கு வருவேன்... என நாயகி கடுதாசி எழுதியிருக்கும் விவரம் தெரியாமலே நாயகரும், நண்பரும், கோமதி வீட்டிற்கு மோதிரத்துடன் போய்சேர, கோமதியின் பெரிய கூட்டுக்குடும்பம் மொத்தமும் சேர்ந்து ஈஸ்வரை, கோமதியின் காதலராக கருதி இவர்களை கொன்று புதைக்க பாய்கிறது.
 அந்த பெரிய குடும்பத்தின் கொலவெறியில் இருந்து ஈஸ்வரும், பாலாவும் தப்பி எஸ்கேப் ஆக, படம் பார்க்கும் நாம் சிக்குகிறோம்! அப்பப்பா காமெடி என்ற பெயரில் கடித்து, குதறி, கொன்று புதைத்து விடுகின்றனர். இறுதியில் ஈஸ்வரும், கோமதியும் எப்படி காதலர்கள் ஆனார்கள்?, குடும்பத்தாரின் சம்மதத்துடன் இருவரும் கைகோர்த்தார்களா...? இல்லையா...?, கோமதியின் கரண்ட் காதலர் என்ன ஆனார்.?! என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு லாஜிக் பார்க்காது மேஜிக்காக பதில் அளிக்கிறது ஈகோ படத்தின் மீதிக்கதை!


ஈஸ்வராக நடித்திருக்கும் அறிமுக நாயகர் வேலும், அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நன்றாகவே நடித்திருக்கிறார்.

கோமதி அலைஸ் அனஸ்வராகவும், முயற்சித்தால் ஹோம்லி நாயகியாக கொடிகட்டப்போவது நிச்சயம்!

வாய் ஓயாமல் பேசும் பாலா, பேசுவதை எல்லாம் காமெடி என கருதி கடிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது.

லூசு குடும்பமாக வர்ணிக்கப்படும் நாயகியின் தந்தை ரத்னவேலு எனும் வெள்ளை பாண்டி, அண்ணன்கள் சண்முகபாண்டி(ஜாக் பிரபு), சந்தனபாண்டி(லிங்கேஷ்), பாட்டி-ரேவதி, நாயகியின் தங்கை பத்மா (நிகிதா), பெரியப்பா தங்கவேலு (கே.எஸ்.மணியன், இவருக்கும் தங்கபாண்டின்னு பெயர் சூட்டியிருக்கலாமே), அண்ணி தேவி (தேவிகா) உள்ளிட்ட மொத்த குடும்பமும் நிஜமாகவே லூசு குடும்ப எஃபக்ட்டை தருவது ஈகோ படத்தின் பலமா, பலவீனமா என்பதை இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் தான் சொல்ல வேண்டும்!

ஏ.வி.வசந்தின் ஒளிப்பதிவு, ஏ.எஸ்.அன்பு செல்வனின் இசை, கேபிள் சங்கரின் வசனம் உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் மட்டுமே ஈகோவை தூக்கி நிறுத்துமா தெரியவில்லை! இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி-இயக்கி இருக்கும் கந்தக்கோட்டை இயக்குநர் சக்திவேலின் எழுத்தில் இருக்கும் புதுமை, காட்சிப்படுத்தலிலும் இருந்திருந்தென்றால் ஈகோ - எவர் கிரீனாக இருந்திருக்கும்! அவ்வாறு இல்லாததால்,
 ஈகோ - ரொம்ப எக்கச்சக்கமுங்கோ! கொஞ்சம் எரிச்சலுங்கோ!!
நன்றி - தினமலர் 
  • நடிகர் : வேலு
  • நடிகை : அனஸ்வரா
  • இயக்குனர் :சக்திவேல் எஸ்.

அலைகள் ஓய்வதில்லை ராதா வா? சுந்தரா ட்ராவல்ஸ் ராதாவா ?

1. எம் சசிகுமாரை ராமராஜன் கெட்டப் ல நினைச்சுப்பார்த்தேன்.பாலா வுக்கு சில்வர் தட்டு கூட மிச்சம் இருக்காது ;-)


================


2 பனி ,குளிர் ல பஸ் பயணம்னா பிரம்மச்சாரி கையை கட்டிக்குவான்.சம்சாரி சம்சாரத்தை கட்டிக்குவான் (விருந்தா பிருந்தா பக்கத்தில் இருந்தா)



==================



3  பாலா - 10 நாள் பட்டினி போடுங்க .



எம் சசிகுமார் - நீங்க படம் எடுத்தா புரொடியூசர் முதற்கொண்டு எல்லாம் பட்டினிதான்



===================



4 பாலா படம் னா முதல்ல ஹீரோ உடல் இளைக்க பட்டினியா இருப்பார்.படம் ரிலீஸ் ஆகிட்டா கடனைக்கட்ட புரொடியூசர் பட்டினி இருப்பார்



===================



5 சகிப்புத்தன்மை கம்மியா இருக்கறவங்க மேரேஜ் பண்ணிக்கிட்டா சரி ஆகிடும் # சகியே சகியே சகித்தால் என்ன?


===================


6  அனுஷ்கா க்கு லவ் லெட்டர் எழுதும்போது அனு ப்புனர் னு ஆரம்பிக்கனுமோ? ;-))



=================


7 ஜியார்ஜியா இவங்க சுத்திப்பாக்க நான் ஏன் 60 கோடி தரனும்? ;-)))



==================


8 மிஷ்கின் டூ செல்வராகவன் - கடவுள் படைச்சதுலயே ரொம்ப புத்திசாலிங்க ரெண்டே பேரு தான்.ஒண்ணு நான் ,இன்னொண்ணு நீ # எந்திரன் ரீமிக்ஸ்



===================


9 நம்ம எதிரி யார்னு மனசுல குறிச்சு வெச்சுக்கனும்.அது எதிரிக்குக்கூடத்தெரிஞ்சுடக்கூடாது



=================


10 2ம் உலகம் பட முடிவில் செல்வராகவன் வந்து கதையை விளக்கும் காட்சி இணைக்கப்படுகிறது # சும்மா



===================


11  விடிய விடிய கில்மாப்புகார் கேட்ட எஸ் ஐ விடிஞ்சதும் நீங்க அலைகள் ஓய்வதில்லை ராதா வா? சுந்தரா ட்ராவல்ஸ் ராதாவா ? னு கேட்டாராம்



=================



12  ஒரு முத்தம் தான் தருவேன் என்று நீ அடம் பிடிப்பது அநியாயம்.இரு உதடுகளுக்குள் மனஸ்தாபம் வந்து விடாதா?்



=====================



13 ஈரப்படுத்தத்தான் முத்தம் என்பது தெரிந்தும் தன் பங்குக்கு நாவால் ஈரப்படுத்திக்கொள்கிறது உதடு



====================



14 நீ ஒரே ஒரு முறை தான் முத்தமிட்டாய்.என் உதட்டுக்குள் சேமித்தேன் பல ் முத்த மிட்டாய்



==================



15 ட்விட்டர் ,பேஸ்புக் களில் ஆண்களை கண்டுக்காமல் பெண்களிடம் மட்டுமே கடலை போடுபசர்களுக்கு 25% வருமானத்தில் வரி விதிப்பு,ப சிதம்பரம் அறிவிப்பு



======================


16 கடவுள்களுக்கு பெண் குழந்தைகள் ஏதும் இல்லை என்பதன் உள்ளர்த்தம் கடவுளால கூட பொண்ணுங்களைக்கண்காணிக்க முடியாது என்பதே



========================



17 ராம் - லீலா ஓடினாலும் ,ராவணன் ஓடலைன்னாலும் எனக்கொரு கவலை இல்லை ;-)


=========================


18 இந்தக்காலத்துல மாடர்ன் பிகருங்க சுடிதாருக்கு துப்பட்டா போடுவாங்க என நாம் எதிர்பார்ப்பதும் ஒரு வித மூட நம்பிக்கை ( மூடா தன்னம்பிக்கை)



=========================



19 காத்லி தானா பஸ் பிடிச்சு வந்து நமக்கு முத்தம் கொடுப்பான்னு எதிர்பார்த்துட்டு இருக்கக்கூடாது.காலைல வாக்கிங் போகும்போதே வீட்டுப்பக்கமா போய்



=======================


20 செல்வராகவன் மைன்ட் வாய்ஸ் - சைக்கிள் ல லைட் சரியா எரியலைனு சொல்றாங்க.பின்னால ஒருத்தர் சைக்கிளே இல்லாம வந்துட்டிருக்கார் .# கோச்



==========================

Saturday, December 07, 2013

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்




ஒரு சில வருடங்களுக்கு முன் நடிகை சினேகாவை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரசன்னா, அதுசமயம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் தர முடியாத கல்யாண சமையல் சாதத்தை... இந்த வெற்றிப்படத்தில் நடித்திருப்பதன் மூலம் ஒரு பெரும் விருந்தாகவே படைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல!


கதைப்படி இந்த "அல்ட்ரா மார்டன் உலகத்திலும் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்ததுமே அவளது கல்யாணத்தைப் பற்றியும் அவளை ஒரு நல்லவன் கையில் பிடித்து தரவேண்டுமே.. என்றும் கவலை கொள்ளும் பெற்றோர் தான் நாயகி லேகா வாஷிங்டனின் பெற்றோரும்! கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிக்க விரும்பிய லேகா, கிடுகிடுவென வளர்ந்து மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்ததும், அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கின்றனர்.


பேப்பரிலும், நெட்டிலும் எக்கச்சக்க மாப்பிள்ளைகளை பார்த்து சிலரை லேகாவின் பெற்றோரும், பலரை லேகாவும் கழிச்சுக்கட்டி ஒருவழியாக "ஹேண்ட்சம் பிரசன்னாவை "டிக் அடித்து பெண் பார்க்க வரச்சொல்கின்றனர். சுற்றமும், நட்பும் புடைசூழ பெண் பார்க்க வரும் பிரசன்னாவிற்கு லேகாவை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்து, அப்பா, அம்மாவிடம் கூட ஆலோசனை பெறாமல் அங்கேயே சம்மதமும் தெரிவித்து விடுகிறார். லோகாவும் அவரது வீட்டினரும் ஒரு சில நாட்களில் ஓ.கே. சொல்லிவிட, கல்யாண வேலைகள் தடபுடலாகிறது.


பிரசன்னா - லேகாவின் கல்யாணத்திற்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது என்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வோம், பேஸ்புக்கில், ட்விட்டரில் நண்பராவோம்.. என்றெல்லாம் நெருங்கி, திருமணத்திற்கு சில வாரங்களுக்கு முன் ஒருநாள் தனிமையில் இருக்கும் இருவரும் திருமணம் தான் நிச்சயிக்கப்பட்டு விட்டதே என அத்துமீற நினைக்கையில்... பிரசன்னாவிற்கு ஏதோ பிரச்சனை என்பது தெரிகிறது. அதனால் அந்த அத்துமீறலில் "அந்தமீறல் நடக்கவே இல்லை! அப்புறம்? அப்புறமென்ன...?


பிரசன்னா அதற்கு லாயக்கானவரோ? லாயக்கில்லாதவரோ? எப்படி இருந்தாலும் அவர் தான் தன் புருஷன் என்பதில் உறுதியாக இருக்கிறார் லேகா. பிரசன்னா கை மருத்துவம் முதல் கண்ட, கண்ட கண்றாவி மருத்துவங்கள் வரை நண்பர்களின் ஆலோசனைப்படி செய்து பார்க்கிறார். ஆனாலும் ஏதோ பிரச்னையால் அவரை ஆண்மை அரவணைத்துக்கொள்ள மறுக்கிறது.


ஒருகட்டத்தில் பிரசன்னாவின் மாமனாராகப்போகும் டெல்லி கணேஷூக்கும் விஷயம் தெரிந்து, அவர் மூலம் அவரது மருத்துவ நண்பரான கிரேஸி மோகனை பார்க்கப்போகிறார் பிரசன்னா! டாக்டர் கிரேஸி மோகனோ எல்லா டெஸ்டும் எடுத்துப்பார்த்து விட்டு எல்லாவற்றுக்கும் காரணம் மனம் தான் என்கிறார். திருமண நாளும் நெருங்குகிறது. பிரசன்னா தெளிவடைந்தாரா? திட்டமிட்டபடி திருமணம் நடந்ததா? முத்தாய்ப்பாக முதலிரவும் நடந்தேறியதா...? என்பது கல்யாண சமையல் சாதத்தின் காமெடியும், காம நெடியுமான மீதிக்கதை!


ரகுவான பிரசன்னா... பிரமாதமண்ணா... தனது பிரச்னையை வெளியில் சொல்ல முடியாமலும், சொல்லாமல் இருக்க முடியாமலும் அவர் படும்பாடு தியேட்டரில் விசில் சத்தங்களையும், கமென்டுகளையும் தூள் பறக்க விடுகிறது. நிஜத்தில் திருமணமான கொஞ்ச காலத்திலேயே இப்படி ஒரு கதையில் நடித்திருக்கும் பிரசன்னாவிற்கு ரொம்பவே துணிச்சல்! அந்த துணிச்சலுக்காகவே அவரை பாராட்டலாம்.


மீராவாக வரும் லேகா வாஷிங்டன் சோக்கா நடித்திருக்கிறார். கண்களாலேயே அவர் பேசும் காதல் மொழிகள் கலர் புல்! இவர்களை மாதிரியே ஹூரோ பிரசன்னாவின் தாத்தாவாக வரும் காத்தாடி ராமமூர்த்தி, அம்மா கீதா ரவிசங்கர், ஹூரோயின் லேகாவின் அப்பா டில்லி கணேஷ், அம்மா உமா ஐயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளீச்சிட்டிருக்கிறார்கள். பலே! பலே!!


"உங்க பீட்சா ஜெனரேஷனை விட எங்க கேழ்வரகு ஜெனரேஷனுக்கு சக்தி ஜாஸ்திடா "சின்ன விஷயத்தை பெரிசு படுத்துறே... "சாமி எல்லாம் இருக்கு... தப்பு பண்ணிணா கண்ணை குத்திடும்னு பெரியவங்க சொல்வாங்க.. அது அப்படி கண்ணை குத்தியிருந்தா கூட பரவாயில்லையே... என பளிச்... பளிச்.. என அர்த்தம் பொதிந்து மின்னும் வசனங்களும், இதுவரை எந்தப்படத்திலும் காட்டப்படாத அளவிற்கு பிரமாதமாக காட்டப்படும் பிரமாண்ட பிராமண வகுப்பு திருமண வைபோகமும் கல்யாண சமையல் சாதத்தை, கலர் புல் சாதமாக்கி இருக்கிறதென்றால் மிகையல்ல!


அரோராவின் அதிரும் இசை, கிருஷ்ணன் வசந்த்தின் ஓவிய ஒளிப்பதிவு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் ஆர்.எஸ். பிரசன்னாவின் எழுத்து, இயக்கத்தில் மது பழக்கம், மனப்பிரச்னைகள், டைட் ஜீன்ஸ் பேண்ட் உள்ளிட்ட சமாச்சாரங்கள் கூட ஆண்மைக்கு சவால் விடும் விஷயங்கள்.. என மெஸேஜூம் சொல்லியிருக்கிறது கல்யாண சமையல் சாதம்! அதனால் அதன் ருசியோ பிரமாதம்!!.

நன்றி- தினமலர்

உதய நிதி பிறந்த நாளில் பழநியில் நயன் தாரா வுடன் !!??

1. தமிழகத்தில் 8 மணி நேரமாக உயர்ந்தது மின்வெட்டு - செய்தி # ஜெ ஆட்சியில் விலைவாசி உயர்வும் , மின்வெட்டு நேரமும் ஒசக்க இன்னும் ஒசக்க



======================


2 தமிழ்நாட்டில் ஒரே நாளில் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு - மெகா லோக் அதாலத் வெற்றி # வருமானம் பாதிச்சிடுச்சுன்னு லாயர்ஸ் குதிக்கலை?



====================



3 இலங்கையிடம் பக்குவமாக நடக்க வேண்டும்: ஞானதேசிகன் # அதென்ன தாலி கட்டின பொண்டாட்டியா?



=====================


4 இதுக்குப் பெயர் தான் மின் மிகை மாநிலமா ? கருணாநிதி காட்டமான கேள்வி # மின் நகை மாநிலம், நாடே சிரிப்பா சிரிக்கும் நகை(ச்சுவை)


=======================


5 தொகுதி பக்கமே தலைகாட்ட முடியல: முதல்வரை சந்தித்த தேமுதிக எம்எல்ஏ ஆதங்கம் # ரிசைன் பண்ணிட்டு சுயேச்சையா நில்லுங்க


===================


6 2 மாதங்களில் 142 புதிய கட்சிகள்;அரசியல் போர்வையில் நிதி மோசடி : தேர்தல் கமிஷன்!,# புதுக்கட்சி தொடங்குனா வரி விதிக்கனும்"




========================


7 வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாதது ஏன்?: பாஜக: # கல்யாணமே பண்ணாம ,கஷ்டமே அனுபவிக்காம இருந்தா விருது கிடையாதாம் பாஸ்



====================


8 மோடி என்னுடன் போட்டி போட தயாரா?-திருமா # நஸ்ரியா என்னுடன் ஜோடி சேர்ந்து டூயட் ஆடத்தயாரா? னு குண்டுகல்யாணம் கேட்கற மாதிரி இருக்கு



==================


9  வளர்ச்சிக்கு தடையாகவுள்ள வறுமை சுவரை காங். உடைக்கும்-ராகுல் #அழிக்கறதைப்பத்தியே சிந்தனை.ஆக்க பூர்வமா எதும் செய்ய மாட்டாங்களோ?



==================


10. இனி சிறு பட்ஜெட் படங்கள் தான் இயக்குவேன் -செல்வராகவன்..# அப்போ ஹீரோ மினி சைக்கோவா?


=================


11  டைம்ஸ்' சிறந்த நபருக்கான இறுதிப்பட்டியலில் மோடிக்கு இடம் # எதுல? பெண்ணை வேவு பார்ப்பதிலா? கலவரத்தை தூண்டி விடுவதிலா?


==================


12  டெஹல்கா விவகாரம்: விசாரணை கமிஷன் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு # ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி



=============


13  க்ரிஷ்3 யை கலக்ஷனில் பின்னுக்கு தள்ளியது ராம்லீலா. # 2 ஹீரோயின் கள் காட்டிய கிளாமரை ஒரே ஆளா பீட் பண்ணிய தீபிகா படுகோனே


==================


14  பசுக்கள் இறப்பது அரசுக்கு நல்லதல்ல - ராமகோபாலன் # கோ மாதா வைக்காக்குமா நம் குலமாதா?


=================


15  கோடிகளில் லஞ்சம் வாங்குபவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?: கருணாநிதி # தலைவரைத்தவிர யார் சம்பாதிச்சாலும் தலைவருக்குப்பொறுக்காதே



=================


16   மகாபலி க்காக அனுஷ்கா போட்ட மெகா சண்டை! # டைட்டில் அபசகுனமா இருந்தாலும் ,அபஸ்வரத்தையே சுபஸ்வரம் ஆக்கும் தேவ வரம் அனுஷ்கா நாயகி என்பதால்



===================



17 இரண்டாம் உலகம் மாதிரி படங்களை எடுத்து சினிமாவை சீரழிக்க வேண்டாம்! - கேயார்ி # சீரமைப்புக்கும் ,சீரழிவுக்கும் வித்யாசம் தெரியாதவர் போல



=================


18  பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை # நாங்க பத்திரமா வீட்டுக்குள்ளேயே இருந்துக்கனுமா?



===================


19  பெங்களூர் ஏ.டி.எம். கொள்ளையன் ஒரு சைக்கோ: மக்களே உஷார்- போலீசார் எச்சரிக்கை # செல்வராகவன் அடுத்து எடுக்கப்போகும் லோ பட்ஜெட்க்கு தீம் ரெடி



======================


20  பழனி கோயிலில் சாமி கும்பிட்ட நயன்தாரா - உதயநிதி... பார்க்கத் திரண்ட 'பக்தர்கள்'! # பாதுகாப்பு இல்லைன்னா பஞ்சாமிர்தம் ஆக்கி இருப்பாங்க



===================