Sunday, November 10, 2013

LOOSIYA - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை - கன்னட சினிமா)


ரசிகர்களுக்காக எடுக்கப்படுகின்ற படம் ஒரு ரகம் என்றால், ரசனைக்காக எடுக்கப்படுகின்ற படம் மற்றொரு ரகம். ரசனைக்காக ரசிகரின் நிதியால் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் ரசிக்க வைக்கத் தவறுமோ!



கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் நம் ஊரில் பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது. என்னதான் கிரீஷ் காசரவள்ளி போன்ற இயக்குனர்கள் நல்ல நல்ல படங்களை இயக்கினாலும், ஆர்ட் ஹவுசின் பிள்ளைகளாகிய அப்படங்கள் இத்தலைமுறையினரை பெரிதும் ஈர்காமலே போனது. 'சத்யஜித்ரே' துவக்கிய டிராமா வடிவ சாயலிலே அமையப்பட்ட கதைக்களமே இதற்கு ஒரு காரணமாக அமைந்தது.


ஆர்ட் ஹவுஸ் சினிமாவை சாமானியனுக்கும் கொண்டுசேர்த்து, சர்வதேச மேடைக்கும் கொண்டுசேர்த்து, கன்னட சினிமாவை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது சமீபத்தில் வெளியாகியுள்ள 'லூசியா'.


படத்தலைப்பு போடும்பொழுதே 'சர்க்கரையால் இனிப்பு இருக்கிறதா? இல்லை இனிப்பால் சக்கரை இருக்கிறதா? இல்லை இவ்விரண்டும் நாவினால் இருக்கிறதா?', 'பூவினால் நறுமணம் இருக்கிறதா? நறுமணத்தால் பூ இருக்கிறதா? இல்லை இவ்விரண்டும் சுவாசத்தால் இருக்கிறதா?' இப்படி நறுக் நறுக்கென கொட்டும் பல கேள்விகள். படம் தொடங்கும் முன்னரே கவனமாக பாருங்கள் என்று ரசிகர்களை மறைமுகமாக எச்சரிக்கிறார் இயக்குநர். இல்லை, இல்லை இந்த சப்தத்திலிருந்தே படமும் துவங்குகிறது.


'லூசியா' - பெயரைக் கேட்டவுடன் ஏதோ ஒரு பிரெஞ்சு பெண் பற்றிய படமோ என்றால் அதெல்லாம் கிடையாது. 'லூசியா' என்பது ஒரு மருந்து. ஒரு மனிதனை தன் நிலையை மறக்க வைத்து, உறங்க வைக்கும் மாத்திரை. சரி இதில் என்ன விசேஷம்? மனிதனை உறங்க வைக்கின்ற தூக்க மாத்திரையை வைத்து ஒரு கதையா? இது தூக்க மாத்திரை அல்ல ஒருவனை தூக்கும் போதை மாத்திரை! மனிதனைக் கனவில்தான் நினைத்த வாழ்கையை வாழ வைக்கும் லாகிரிவஸ்து.

லூசியா படத்தின் இயக்குனர் பவன் குமார் (படம்: கே.முரளி குமார்)
லூசியா படத்தின் இயக்குனர் பவன் குமார் (படம்: கே.முரளி குமார்)

உரக்கமின்றி தவிக்கும் நாயகன், 'லூசியா'வை எடுத்துக் கொள்கிறான். நிகழ்காலத்தில் தான்விழைந்த வாழ்க்கை கனவில் அவனுக்கு அமைகிறது. நிகழ் காலத்தில் தான் சந்தித்த மனிதர்களும் கனவுலகில் வெவ்வேறு தோற்றத்தில் அமைகின்றனர். நிகழ் காலத்தில் தான் விரும்பிய பெண் கனவில் காதலியாகிறாள்... தனது சாமானிய ஆசை ஜனிக்கும் தருணங்கள்... இப்படி பல ஆசைகள் கனவில் ஈடேருகிறது.


கனவில் தான் நாயகன் வாழ்கிறானா? இல்லை இவன் வாழ்கையே ஓர் கனவா? இப்படி பல கோணங்களில் செல்கிறது திரைக்கதை. இந்த முடிச்சுகளை வைத்து சாதுர்யமாக தொகுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.


இதற்கு மேலும் இக்கதையை விவரித்தால், படத்தின் முக்கிய சுவாரஸ்ய அம்சங்கள் கூறப்பட வேண்டும். அப்படிக் கூறினால் படம் பார்க்கையில் விறுவிறுப்பு குறையும் வாய்ப்புள்ளது. எனவே இங்கே இத்துடன் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.


குழப்பமான கதையை கூடத் தெளிவாக நகர்த்திச் செல்கிறது திரைக்கதை. கவனமாக பார்க்காவிட்டால், தெளிவாக இருப்பவர்கள் கூட இறுதியில் குழம்ப வாய்ப்புள்ளது. கவனச் சிதைவின்றி பார்த்தால் திரைக்கதை எத்தனை சாதுர்யமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை உணர முடியும்.



டார்க் டிராமா ஜானரில் முக்கியப் படமாகிய Darren Aronofsky இயக்கிய Requiem For A Dream படத்தின் சாயலில் இப்படம் அமைந்துள்ளது. இயக்குனர் பவன் குமார், தன்னை ஈர்த்த அப்படத்திற்கு மறைமுகமாக கிரெடிட்ஸ் தரும் வகையில் அப்படத்தின் காட்சி ஒன்றை 'லூசியா'வில் இணைத்த்திருப்பார்.
தொழில் நுட்பரீதியாக ' லூசியா ' மைல் கல்லாக விளங்குகிறது - குறிப்பாக படத்தொகுப்பில்.


எல்லாவற்றையும் விட முக்கியமானது, இப்படம் பொதுமக்களிடமிருந்து பணம் பெறப்பட்டு (Crowd Funding) தயாரிக்கப்பட்டது. அதாவது, படத்தின் தயாரிப்பாளர்களே மக்கள் தான்.


இதற்கு முன் இந்தியில் ஜுஹி சாவ்லா, மனிஷா கொய்ராலா, அப்தாப் ஷிவ்தசனி நடித்த 'ஐ ஏம்' என்கிற படம் ரசிகரின் நிதியால் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை பொருத்தவரை பல பெரிய நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் நடித்த நடிகர்களே கூட தயாரிப்பாளர்கள் ஆகினர். ஆனால், 'லூசியா' படத்தை பொருத்தவரை இதில் நடித்தவர்கள், பெயர் வாங்கிய பெரிய நடிகர்கள் எல்லாம் கிடையாது. இயக்குநருக்கும் இது இரண்டாவது படம்தான்.


ஒரு படத்திற்கு ஒரு தயாரிப்பாளரை பிடிப்பதே சவாலாக இருக்கும் இக்காலத்தில் முகம்தெரியாத ஒரு நபரிடம் தன் படைப்பை எடுத்துச் சென்று, படைப்பாளி மீது நம்பிக்கை வரவழைத்து நிதி திரட்டவது சாதாரண காரியமா? அதுவும் ஒருவர், இருவரல்ல.. 1300 பேரிடமிருந்து நிதி திரட்டி, ரசிகனை தயாரிப்பாளராய் மாற்றி, பொது ஜனங்களை வைத்து விநியோகம் செய்யப்பட்ட 'லூசியா' இந்திய சினிமாவின் மிக முக்கியப் படம் தானே!


படம் பார்க்கையில் Darren Aronofsk இயக்கத்தில் David Lynch திரைக்கதை அமைத்தது போல் தோன்றியது. David Lynch இயக்கிய 'Muloholand Dr', Giuseppe Tornatore இயக்கிய ' Cinema Paradiso' படங்களிலிருந்து சில காட்சிகள் 'லூசியா' திரைக்கதைக்கு உதவியுள்ளது.


படைப்பிற்கும், படைப்பாளிக்கும் தோள் கொடுக்கும் ஒவ்வொரு ரசிகனும் பார்க்க வேண்டிய படம் இது. கன்னட சினிமாவிற்கு மணி மகுடம் அமைத்துத் தந்துள்ளது இந்த 'லூசியா'.


இப்படம் இந்தி, தமிழில் விரைவில் ரீமேக் ஆவது மனதிற்கு நிறைவை தருகின்ற ஒரு செய்தி.


இத்தகைய நல்ல படங்களை வரவேற்போம்.

நன்றி -த தமிழ் ஹிந்து,சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan

'லூசியா' படக் காட்சி.


மக்கள் கருத்து 

1. கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் நம் ஊரில் பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது" என்ற உங்கள் கருத்து தவறு. காரணம், கடந்த பத்து வருடங்களில் கன்னட திரைப்படங்கள் கர்நாடாகவிலேயே பெரிதாக ரீச் ஆகாமலே இருந்தது. இதற்குக் காரணம், அங்கு நல்ல படங்கள் எடுக்க திறமையான இயக்குனர்கள் இல்லை; கிரீஷ் காசரவள்ளி, கிரீஷ் கர்னாட் போன்ற ஒரு சில இயக்குனர்கள் தவிர, பெரிய அளவில் யாரும் தரமான படங்களை இயக்க முன்வரவில்லை. நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கிய ஒன்றிரண்டு படங்களும் முழுக்க, முழுக்க வணிக ரீதியானவை. பெரும்பாலான கன்னடப் படங்கள் பிறமொழிப் படங்களின் ரீ-மேக் படங்களாகவே அமைந்தன. இயக்குனர்களோ, நடிகர்களோ ரிஸ்க் எடுக்க தயங்கினர்.இந்த சமயத்தில் லூசியாவும், இயக்குனர் பவன் குமாரும் நல்ல வரவுதான்.


2  கன்னட மொழியில் சிறந்த படம் என்றாலும் தமிழகத்தில் நாம் பார்க்க முடியாது. பெங்களூர் சென்றால்தான் பார்க்கமுடியும். பெங்களூரில் நாம் தமிழ் படங்களை பார்ப்பதுபோல சென்னையில் நாம் கன்னட மொழி படங்களை பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தமான விஷயம்.


இப்பவவுது கன்னட சினிமா பக்கம் கவனம் செலுத்துவதற்கு நன்றி, இந்திய மொழிகளில் அதிகமாக ஞானபிடம் விருந்து வாங்கிய மொழி கன்னட மொழி. புட்டண்ணா, கிரீஸ் காசரவள்ளி, கிரீஸ் கரன்ட், நகாபாறன இவர்களுடைய சினிமா பாருங்கள்.


அனுஷ்கா வுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதற்கு முக்கியமான காரணம் என்ன?

1. அனுஷ்கா ,கமல் இருவரும் இந்த வருசமாவது ஜோடி சேர்ந்து தங்கள் உதடுகளை புதுப்பிக்கவும்


====================

2 லிப் கிஸ் சீனில் நடிக்க முடியாது என்று கண்டிஷன் போட்டதால் நதியா வை ஜோடி சேர்க்காமல் தவிர்த்த கொள்கை வீரர் தான் எங்கள் உலக நாயகன்


==================

3 எல்லா ஹீரோக்களும் ஜோடிப்பொருத்தம் பார்த்து பழம் பஞ்சாங்கமாய் இருந்தபோது எங்கள் கமல் தான் உதட்டுப்பொருத்தம் பார்த்து ஜோடி சேர்த்தவர்


=====================

4 காதல் பரிசு படம் மூலம் அக்கா தங்கை என இருவரையும் ஒரே படத்தில் கரெக்ட் பண்ணிய காதல் இளவரசர் கமல் போல் வேறு யார்?


==================


5  ஒரு தங்கச்செயினை வித்து 10 கிடார் கூட வாங்கலாம்.ஆனா 10 கிடார் வித்தாலும் ஒரு பவுன் தங்கச்செயின் கூட வாங்க முடியாது


======================


6 சட்டம் என் கையில் படத்தில் தான் தன் முதல் முத்தச்சேவையைத்தொடங்கினார் எங்கள் கமல் # முத்த அகராதியின் மொத்த குத்தகைக்காரர்


=====================


7  கமலின் ஆக்ரோச முத்தம் ஹே ராம் ,குருதிப்புனல்.மென் முத்தம் சத்யா


====================


8  அதிகமான பெண் ரசிகைகள் கொண்ட தமிழ் ஹீரோக்கள் 3 பேர் தான்


 1 காதல் இளவரசன் கமல் ஹாசன் 

2 இளைய தள தள பதி விஜய் 

3 சூர்யா 


=========================


9 ரஜினி பட ஷூட்டிங் என்றால் வினாயகர் முன் தேங்காய் உடைக்கும் காட்சியை சென்ட்டிமென்ட்டாய் எடுப்பாங்க முதல் சீனில்.கமல் எனில் டூயட் ,கிஸ்


========================


10  இந்திய சினிமா உலகில் அதிக படங்களில் டாப்லெஸ் சில் நடித்த டாப் ஹீரோ எங்கள் கலை வித்தகர் கமல் மட்டுமே


======================


11 எந்த விரதம் இருந்தாலும் குழந்தை எல்லாம் பிறக்காது.பசி தான் பிறக்கும்


=====================


12  ஈடு " இணை" இல்லா நாயகன் என புகழும்போது கவனம்.கமல் க்கு மட்டும் அது பொருந்தாது


=====================


13  திரைக்கதை பற்றிய அறிவு கமல் போல் காண்பது அரிது


===================


14  அனுஷ்கா வுக்கு இத்தனை ரசிகர்கள் இருப்பதற்கு முக்கியமான காரணம் அவரை இன்னும் யாரும் ( அதிகாரப்பூர்வமாக) கரெக்ட் பண்ணாததால் தான்


=================


15  2116 FOLLOWERS இருந்தாலும் பொண்ணுங்களா தேடிப்பிடிச்சு வணக்கம் வைப்பவரே ட்விட்டர் தமிழன்


===================


16  என் ஆளு எப்டிடா? னு தன் முதல் காதலியை இன்ட்ரோ பண்ணின நண்பன் கிட்டே காதலி முன்னாலயே " போன மாசம் காட்ன பொணணுக்கு இது தேவலை" னு சொல்லிட்டேன்


===================


17  தறுதலையா இருந்தப்ப நாம இதுவரைக்கும் ஒருதலையா செஞ்ச காதலில் காதலிகள் பேரை எல்லாம் மேடை ல சொல்வதும் பேருரை தான்


===================


18 காதலிக்கு ஸ்பூன் மூலம் ஊட்டுவதுதான் ஸ்பூனரிசமா?


================


19  மவுனராகத்தை சாமார்த்தியமா ராஜாராணி ஆக்கிய அட்லீ முறைப்படி விஜய் படம் தான் பண்ணனும்.ஆனா அஜித் படம் பண்றார்


===================


20  வடலூர் சபை ல 28 வருசமா அணையா விளக்கு எரியுதுன்னு ஆச்சரியப்பட்டாீ ஆத்திகவாதி.எத்தனை லிட்டர் எண்ணெய் வீண் ஆச்சோனு கவலைப்பட்டா எதார்த்தவாதி


===================


21  கமலோட நுட்ப அறிவு மதனகாமராஜன் க்கு முன்னால மைக்கேலை சேர்த்ததில் இருக்கிறது


==================


22  வெள்ளிக்கிழமை ராமசாமி 12 வருசத்துக்குப்பிறகு வேற வழி இல்லாம இன்னைக்கு ஆபீஸ் போறான் # படம் எதும் ரிலீஸ் இல்லீங்கோ


===============

23  இரண்டாம் உலகம் மகதீரா வின் ரீமேக்காக இருந்தாலும் சரி ,புதுக்கதையாக இருந்தாலும் சரி செல்வா டச் ,அனுஷ்கா நச் , ஆர்யா வின் இச் , தயாரிப்பாளரின் ரிச்  இருக்கும்


=======================


24  இந்த மாததில் வரும் வில்லா ( பீட்சா 2 ) , இரண்டாம் உலகம் 2 ம் ரசிகர்களுக்கு மாறுபட்ட அனுபவமாக ,வெற்றிப்படமாக இருக்கும்


=======================


25  அனுஷ்கா தான் என் உலகம்னு சொல்லும் ரசிகர்களுக்கு அவர் 2 வேடங்களில் வருவது தான் அவர்களின் இரண்டாம் உலகம்


===================


26  செல்வராகவன் ,கமல் படங்களுக்கு யூ ஸர்ட்டிபிகேட் கிடைச்சாலே ரசிகர்கள் அதிர்ச்சி அடைஞ்சுடறாங்க ;-)


================


27  ஆர்யா க்கு வரிசையா படம் ஹிட் ஆகுது.அனுஷ்கா ஆல்ரெடி அதிர்ஷ்டக்கட்டை ( தாண்டவம் தவிர),ஜாதகப்பொருத்தம் ஓக்கே # 2ம் உலகம்


==================


28  ரோஹித் சர்மா = ரோ HIT SURE மா


==================


29 அஜித் ரசிகர்கள் அன்பு மிரட்டல்.வீரம் டீசர் பார்த்துட்டு தீம் இசைக்கு நான் அர்த்தம் சொல்லனுமாம்.நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லீங்க்ணா ;-)


===================


30 

Saturday, November 09, 2013

வேலையில் ஜெயிக்க வெற்றிச் சூத்திரங்கள்! டாப் 10

வேலை பார்க்கும் இடத்தில் நீங்கள் சிறப்பானவராகத் திகழவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தானே தவிக்கிறோம்; தெரிந்தால் ஜமாய்த்துவிடுவோமே என்றுதானே நினைக்கிறீர்கள்! கேரியர் வார்ஃபேர் என்கிற இந்தப் புத்தகத்தைப் படித்தால், உங்கள் பாஸை உங்களை நோக்கி நிச்சயம் திரும்பிப்பார்க்க வைப்பீர்கள்.  


வெற்றிச் செருக்கு எதுவுமில்லாமல், அலங்காரமற்ற, அனுபவப்பூர்வமான யோசனைகளுடன் பிராக்டிக்கலாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் உங்களுக்கு சொல்லும் முதல் விஷயம், நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் உங்களை மதிப்பீடு செய்பவர்களின் பார்வையிலேயே நீங்கள் பார்த்துச் செய்ய வேண்டும் என்பதுதான். உங்கள் பிராண்டை நீங்கள் வளர்த்துக்கொள்வதன் மூலம் ஆபீஸ் வேலையில் ஜெயிக்க, நீங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் விலாவாரியாகப் பட்டியல்போட்டுச் சொல்லி இருக்கிறார்.    


'ஸாரி’ சொல்லாதீர்கள்!
அலுவலகப் பணியில் வெற்றி பெற 'ஸாரி’ சொல்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள். 'ஸாரி சார், நாளைக்குத் தருகிறேன்’, 'ஸாரி சார், இன்றைக்கும் முடியவில்லை’, 'ஸாரி சார், அடுத்தமுறை சரி பண்றேன்’ என்று நீங்கள் சொல்லும் ஒவ்வொரு 'ஸாரி’யும் நீங்கள் என்ன மாதிரியான நபர் என்பதை உங்கள் அலுவலகம் முடிவு செய்ய தோதுவானதாக இருக்கிறது. அதனால் குறைந்த அளவு 'ஸாரி’ சொல்லுங்கள்.
மாத்தி யோசியுங்க!
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் பணிகள் சிறப்பாக நடக்க ஏதாவது ஒன்று குறையும். அது என்ன என்று ஆராய்ந்து கண்டுபிடித்து அதை நீங்கள் செய்யுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், அது மேலிடம் மதிக்கக்கூடிய விஷயமாகவும் இருக்கவேண்டும் என்கிறார். அப்படி ஒரு விஷயம் ரொம்ப கஷ்டமான செயலாகவல்லவா இருக்கும் என்பீர்கள். அது இல்லவேயில்லை என்று சொல்லும் ஆசிரியர், அலுவலகத்தில் பெயரெடுக்க மிகவும் சவாலான மற்றும் பாப்புலரான வேலைகளைச் செய்ய நிறையபேர் போட்டி போடுவார்கள். நீங்கள் இதற்கு மாற்று யோசனையாக யாருமே சிந்திக்காத, ஆனால் மிகவும் எளிமையான கட்டாயம் தேவையானது எது என்று பாருங்கள். பல விஷயங்கள் உங்கள் கண்ணுக்கு முன்னால் வரும். அவற்றை வரிந்துகட்டிக்கொண்டு எடுத்துப்போட்டு சிரத்தையுடன் செய்யுங்கள். வளர்ச்சி எப்படி வருகிறது என்று பாருங்கள்.


மாங்குமாங்கென்று உழையுங்கள்!
சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கப்போவது அலுவலகத்தில் பவர்ஃபுல்லான மனிதர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதுதான் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளையும் சொல்லியுள்ளார். பவர்ஃபுல்லான மனிதர்கள் கண்ணில்படுவதற்கு நிறைய பணம் சம்பாதித்துத் தரும் ஏரியாவிற்கு வேலையை மாற்றிக்கொண்டு (சேலஞ்ச் தான்!) மாங்குமாங்கென்று உழைப்பதும் ஓர் உத்திதான் என்கிறார் ஆசிரியர். இதுபோன்ற வாய்ப்புகள் கிடைத்தால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிச்சலான வாக்குறுதிகளைச் செய்து அவற்றை நிறைவேற்றியும் காண்பி யுங்கள். உங்கள் பிராண்ட் வேல்யூ எப்படி எகிறுகிறதென்று பாருங்கள் என்கிறார்.
தலைவனாகுங்கள்!
ஒத்தை ஆளாக என்னதான் தலைகீழாக நின்றாலும் ஓர் அளவுக்கு மேல் சாதனை ஏதும் செய்ய முடியாது. அதனால் நல்லதொரு லீடராக மாறுவதற்கான முயற்சிகளை ஆரம்பத் திலிருந்தே எடுங்கள். அப்போதுதான், நீங்கள் நாளடைவில் மற்றவர்களிடமிருந்து வெற்றிகரமாக வேலைவாங்கி உங்கள் புகழை நிலைநாட்ட முடியும் என்கிறார் ஆசிரியர்.
அது எப்படிங்க லீடராகிறது என்கின்றீர்களா? மூன்றே விஷயம்தான் முக்கியம் என்கிறார் ஆசிரியர். தியரியை விட்டுவிட்டு பிராக்டிக் கலாக நடந்துகொள்ளுங்கள் (ஆபீஸ் பத்து மணிக்கு என்றால், முதல் நாள் இரவு 11 மணிக்கு வீட்டுக்குச் சென்றவரை அடுத்தநாள் காலை 9.59-க்கே சீட்டில் இருக்கவேண்டும் என்று கட்டாயம் செய்யாதீர்கள்). உங்களுக்கு எது தெரியாது என்று தெரிந்துகொள்ளுங்கள். சுற்றி இருப்பவர்களிடம் நியாயமாக நடந்து கொள்ளுங்கள். இந்த மூன்றும் உங்களை நிச்சயமாக லீடராக்கும் என்கிறார்.  
பாஸைப் புரிந்துகொள்ளுங்கள்!
அடுத்தபடியாக, இளம்வயதில் நீங்கள் கம்பெனிக்காக உழைத்துக் கொட்டுவீர்கள். உங்கள் உயரதிகாரி ஏசி-ரூமில் உட்கார்ந்துகொண்டு இன்சென்டிவ் வாங்குவார். அவரும் உங்களைப் போல் எங்காவது உழைத்துக் கொட்டி விட்டுதான் இப்போது மேலே உட்கார்ந்திருக்கிறார் என்ற நிதர்சன உண்மையைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். இந்த நிலை குறித்து புலம்பாதீர்கள் என்று சொல்லும் ஆசிரியர், உங்களுடைய பாஸ் ஒரு முட்டாளாக இருந்தா லும் உங்கள் வேலை எப்படி சிறப்பாக இருக்கிறது என்பதை டாப்-மேனேஜ்மென்ட் பார்க்க அவரைத்தான் உபயோகிக்கும். அவர் முட்டாளாக இருந்தாலும் அவரிடத்தில் இருக்கும் பவர் நிஜமானது. எனவே, அவரை கவனமாகக் கையாளுங்கள் என்கிறார் ஆசிரியர்.
பாஸுக்கு வேண்டிய மூன்று!
பாஸின் அன்பைப் பெற என்னசெய்ய வேண்டும் என்று கேட்டீர்கள் என்றால், ஓர் அலுவலகத்தில் வேலை ரீதியாக உங்களிடமிருந்து பாஸிற்கு என்னென்ன விஷயங்கள் வேண்டும் என்று மூன்று விஷயங்களைப் பட்டியலிடுகிறார். ஒன்று, உங்களுடைய நன்றி விசுவாசம். இரண்டு, நீங்கள் தரும் உருப்படியான அட்வைஸ். மூன்று, அவருடைய மதிப்பை நீங்கள் கூட்டும் வகையில் நடப்பது. இந்த மூன்றையும் சரிவரச் செய்யத் தவறினால் தேறுவது கடினம் என்று சொல்லும் ஆசிரியர், இந்த மூன்றாவது காரணத்தால்தான் ஒரு முட்டாள் பாஸைக்கூட நீங்கள் மற்றவரிடத்தில் முட்டாள் என்று விமர்சிக்கக்கூடாது என்கிறார்.
பாஸ் பற்றி புகார் வேண்டாமே!
முட்டாள்களிடம் நிஜமான அதிகார ஆயுதம் இருக்கிறதே! எனவே பாஸைப் பற்றி அவரின் பாஸிடம் புகார் சொல்லாதீர் கள் (அவராகக் கேட்டால் தவிர - அப்போதும் ரொம்பவும் யோசனைக்கப்புறம் சொல்வதைப்போல் சொல்லவேண்டும்) என்று சொல்லும் ஆசிரியர், அது நீங்கள் நன்றி விசுவாசம் இல்லாத ஆளென்ற தோற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்று சொல்கிறார். மிக மிக முக்கியமாக பாஸின் திறமைக்கு மெருகேற்றுவது உங்களுடைய கடமை என்பதை மனதில் வையுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், பாஸை மட்டம் தட்டி உங்கள் திறமையை வெளிக்காண்பிக்கும் நிகழ்வுகள் எதையுமே தப்பித்தவறிக்கூட நடத்திவிடாதீர்கள் என்கிறார்.

மூன்றுவிதமான மனிதர்கள்!
அண்டிப்பிழைப்பவர்கள், எப்போதும் எதிர்க்கருத்து சொல்பவர்கள், நடுநிலை யாளர்கள் என்ற மூன்றே விதமான மனிதர்களே அலுவலகத்தில் இருப்பார்கள் என்று சொல்லும் ஆசிரியர், அண்டிப்பிழைக்கின்றவனை ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் பாஸிற்கு பிடிக்காமல் போகும் என்று சொல்கிறார். எதிர்க்கருத்து பாஸிற்கு அவ்வப்போது தேவைப்பட்டாலும் அவரால் பெரிதும் ரசிக்கப்பட்டாலும்கூட எதிர்க்கருத்து நபர் என்ற கவர்ச்சிகரமான பாதாளத்தில் விழுந்து விடாதீர்கள் என்று எச்சரிக்கிறார். நல்ல சமயோசிதமான யோசனைகளைச் சொல்லும் நடுநிலையாளர் என்ற நிலைப்பாட்டை நீங்கள் எடுப்பது மட்டுமே உங்களை எப்போதும் சமமான மற்றும் சரியான பாதையில் எடுத்துச் செல்லும் என்கிறார் ஆசிரியர்.
பலனை எதிர்பாருங்கள்!
எல்லா பாஸும் உங்களை உபயோகித்து ஆதாயம் தேடவே முயல்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனாலும், வெளிப்படையாகத் தெரியாமல் உங்கள் பாஸை உபயோகித்து நீங்கள் முன்னேறிக்கொள்வதில்தான் உங்களுடைய திறமையே இருக்கிறது என்கிறார் ஆசிரியர். உங்கள் பாஸிடம் நீங்கள் இரண்டே விஷயங் களை எதிர்பார்க்க வேண்டும். ஒன்று, உங்கள் மீது அவர் வைக்கும் நம்பிக்கை. இரண்டு, உங்கள் வேலைக்கு அவர் தரும் மரியாதை மற்றும் பலன் இந்த இரண்டையும் தாண்டி அவருக்கும் உங்களுக்கும் வேறு எந்த இணைப்புப்பாலமும் இருக்க வாய்ப்பே இல்லை என்று அட்வைஸ் செய்கிறார்.
பாஸை மட்டும் நம்பாதீர்கள்!
பாஸ் உங்கள் மீது வைக்கும் நம்பிக்கையே உங்களை அட, இவன் கொஞ்சம் வேலை பார்ப்பான்போல என டாப்-மேனேஜ்மென்ட் கண்ணில் படவைக்கும் என்று சொல்லும் ஆசிரியர், ஆரம்பகால வேலையில் பணத்தை விட அனுபவம் பெறுவதே முக்கியம் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள் என நறுக்கென்ற உண்மையைச் சொல்கிறார். 'பாஸ், எனக்கு தகப்பன் மாதிரி’ என்கிற உடான்ஸெல்லாம் வேண்டாம். ஏனென்றால் உங்கள் பெற்றோர்கள் உங்கள் வளர்ச்சிக்காக தியாகம் பலவற்றைச் செய்வார்கள். உங்கள் பாஸ் நிச்சயம் அதில் ஒரு துளிகூடச் செய்ய மாட்டார் என்கிறார். உங்கள் பாஸ் உங்களுக்குச் செய்யும் நல்லது எல்லாமே அவருடைய பிராண்டை வளர்க்கக் கொஞ்சமாவது உதவுவதாக இருக்குமே தவிர, தன்னலமற்ற தியாகமாக இருக்க வாய்ப்பேயில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்கிறார் ஆசிரியர்.

கடைசியாக..!
இருக்கும் வேலையில் உங்களால் புதிதாய் ஒன்றும் கற்றுக்கொள்ளவும் முடியவில்லை, அலுவலகத்தில் உங்கள் பிராண்டை பில்ட் செய்யவும் முடியவில்லை என்றால் உடனடி யாக அந்த வேலையிலிருந்து கிளம்பவும் என்று அலாரம் அடிக்கின்றார் ஆசிரியர்.
நம்மில் பெரும்பாலானோருக்கு வேலையில் வெற்றியே வாழ்வின் வெற்றி. அதனால் அனைவருமே படிக்கவேண்டிய சரியான புத்தகம் இது.
- நாணயம் டீம்.

(குறிப்பு: இந்தப் புத்தகம் ஆன்லைன் ஷாப்பிங் 

வெப்சைட்களில் விற்பனைக்கு கிடைக்கக்கூடும்)

thanx - vikatan

பாலா இயக்கத்தில் விஜய் ....!!!!!

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
இனிய காலை வணக்கம் நண்பர்களே....
Like ·  ·  · 53 minutes ago · 
1. ஆனந்த்-கார்ல்ஸென் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் ஜெ #செஸ் போர்டு ல கறுப்பு வெள்ளைக்கு பதிலா பச்சை மெரூன் ?



==================


2 ஈழத் தமிழர்கள் மீது அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை: வைகோ குற்றச்சாட்டு:# இங்கே இருக்கும் தமிழன் மேலேயே அக்கறை இல்லை


=================


3 கருத்து கணிப்புகள் கேலிக்கூத்து: காங்கிரஸ்:# அசால்ட்டா விட்ரவேண்டியதுதானே? ஏன் அடிச்சு பிடிச்சு தடை கேட்டு பயத்தை வெளிப்படுத்திக்கறீங்க?



====================


4 மோடி அலை வீசுவதாகக் கூறுவது மிகைப்படுத்தப்பட்ட கருத்து: ஒமர் அப்துல்லா: # அலை இல்லை கண்ணா பேரலை


====================


5 சரவண பவன் உணவகத்தை விலைக்கு வாங்கிய சன் குழுமம் #விலை இல்லா அய்யா உணவகம் னு யாரும் மனப்பால் குடிச்சுடாதீங்க..:/"



===================





6 காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிர்ப்பு: ஜெ.வுக்கு பிரிட்டன் X் அமைச்சர் நன்றி! # எந்த நாடா இருந்தாலும் அமைச்சர்னா அம்மாவுக்கு பாராட்டு தான்்



=================


7 கடன் பிரச்சினை: கோவா ஆடம்பர மாளிகையை இழக்கிறார் விஜய் மல்லையா # உங்களுக்கும் கடன் தொல்லையா?



==================


8 நான் இன்னும் தனியாத்தான் இருக்கேன்… நயன்தாரா # ஹோட்டல் ரூம் ல இருந்து அறைகூவல் ?!!



================


9 அஜித் ன் வீரம் கிராமத்தில் " நடக்கும்" அண்ணன் - தம்பி பாசக்கதை # அழகிரி -ஸ்டாலின் மாதிரியா? செல்வராகவன் - தனுஷ் மாதிரியா?


===================


10 விண்வெளி ஆராய்ச்சி மூலம் மக்களுக்கு மூட நம்பிக்கை ஒழியும் - பிசிக்ஸ் புரொபசர் இன் புதியதலைமுறை # வறுமை ஒழிக்க வழி பாருங்கய்யான்னா.



=================


11 சானல்4 இயக்குனருக்கு இந்திய விசா மறுப்பு# ராஜபட்சே க்கு வாழைத்தோரணம். தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தா அலட்சிய ரணம்


=================


12 தினத்தந்தி யில் அழகுராஜா விளம்பரம் - காமெடி கதகளி # ஆனா கதை மட்டும் காலி


=================


13 ஸ்வேதாமேனன் ‘செக்ஸ்’ புகாரால் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை: காங்கிரஸ் எம்.பி. பரபரப்பு..பேட்டி # கொலை செய்யாம இருந்தா போதாதா?


==================


14 நாட்டுக்கு தலைவர் யார்? அரசியல்வாதிகளுடன் விவாதம் நடத்த தயார் - கமல்ஹாசன் ி"# விஸ்வரூபம் 2 ரிலீஸ் பரபரப்புக்காக ஏது வேணாலும் செய்யலாம்



==================


15 நாட்டில் அதிகரிக்கும்் மதக்கலவரங்கள் வருத்தம் அளிக்கின்றன-பிரணாப் # அதை வெச்சுத்தானே பல அரசியல்வாதிங்க பொழப்பை ஓட்டிட்டு இருக்காங்க?


===================


16 "பாலா, அமீர் படங்களில் நடிக்க ஆசை!" : விஜய் # வேணாம் சார்.இளைய தளபதி யை பாலா இளைச்ச தளபதி ஆக்கிடுவாரு


==================


17  ஜம்முகாஷ்மீர் செல்கிறார் ராகுல்காந்தி: # எங்கே போனாலும் ஜம் முனு cash இருக்கும் ஏரியாவுக்குப்போயிடறாரு


===================


18 கொளத்தூர்மணி கைதுக்கு திருமாவளவன் கண்டனம் # அவர் தனியா இருக்காராம்.துணைக்கு போறீங்களா?


=================


19 சன் டிவியில் சாம்பியன்! நடுவர்களாக பாக்கியராஜ், ரேவதி!! # டி ஆர் ,கே பா ஜோடின்னா செமயா இருந்திருக்கும்


=================


20 செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பியது வரலாற்று சாதனை! - நாரயணசாமி # 15 நாட்களில் ராக்கெட் திரும்பி வந்துடும்னு சொல்லலை.நல்ல வேளை"


=======================

Friday, November 08, 2013

முள்ளும் மலரும் -உமாச்சந்திரனின் நாவல்ன் ஜெராக்ஸ் காப்பியா? -மகேந்திரன்

நாவலில் இருந்து உருவாகும் சினிமா என்பதற்கும், ஒரு இயக்குநர் தானாகவே உருவாக்கும் கதைப் படத்திற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கிறது. சினிமா, நாவல் எல்லாமே படைப்புகள்தான். நாவல் என்பது எழுத்து வடிவிலான ஒரு படைப்பு. சினிமா என்பது காட்சிகளாலான படைப்பு.
நாவலை வாசிக்கும்போது ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளும் பிம்பங்கள் முற்றிலும் அவனது கற்பனை உலகத்துக்கு சொந்தமானது. ஒவ்வொரு வாசகரும் ஒரு நாவலில் சொல்லப்பட்டுள்ள காட்சிகளை அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்கிறார்கள். நாவலை வாசிக்கும்போது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காட்சிப் படிமங்கள், அதை வேறொருவர் படமாக்கும்போது, நாம் உருவாக்கி வைத்திருந்த காட்சிப் படிமங்களில் இருந்து மாறுபடும்போது நாம் “நாவலின் திருப்தி படத்தில் இல்லை” என்கிறோம்.



நாவலை வாசிக்கும்போது, ஒன்றை காட்சிப்படுத்திக் கொள்ள நமக்கு எந்தவித தடைகளும் இல்லை. தவிர, ஒரு நாவலை நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. நாம் நமது வசதிக்கேற்ப ஒரு நாவலை வாசிக்க முடியும். ஆனால் ஒரு திரைப்படம் நிச்சயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையை பார்வையாளனுக்கு அதன் மொழியில் சொல்லியாக வேண்டிய அவசியத்தில் உள்ளது. நாவலில் நாம் கட்டற்ற சுதந்திர வெளியில், நாம் நினைத்தவற்றை கட்டமைத்துக் கொள்ளும் சுதந்திரம் பெற்றுள்ளோம். மேலும் நாம் அத்தகைய தடைகளை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக நாம் நமது கற்பனைத் திறனை இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டே நாவலை வாசிக்க தொடங்குகிறோம்.



உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவல் நமக்குள் தோற்றுவிக்கும் காட்சிப் படிமங்களை ஒருபோதும் படமாக பார்க்கும்போது நம்மால் பெற முடியாது. நாவலை வாசித்தவர்கள் கட்டற்ற வெளியில் தங்கள் சிந்தனைகளை, கற்பனை வெளிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நாவலை வாசிக்காதவர்களுக்கு அதுவே படமாக வரும்போது மிகப் பெரிய பிரம்மிப்பை உண்டுபண்ணலாம்.



நாவலை படமாக்க முயற்சிக்கும் இயக்குநர், அந்த நாவலைப் படிக்கும்போது தன்னுள் எழுந்த காட்சிப் படிமங்களை பொருத்திப் பார்த்தே அதை சினிமாவாக கொண்டு வருகிறார். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுடைய உச்சபட்ச சிந்தனையை, கற்பனைத் திறனை அதில் விதித்தாலும், அதைப் பார்க்கும் பார்வையாளன், நாவலில் இருந்து ஏதோ ஒன்று குறைகிறதே என்று வினவுகிறான். காரணம், நாவலைப் படிக்கும்போது வாசகன் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சிகள் மிக பிரம்மாண்டமானவை. அதை அவரவர் வாசிப்புத் திறனுக்கேற்ப, கற்பனைத் திறனுக்கேற்ப வசதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் படமாக்க முயலும்போது அதில் அந்த இயக்குநருக்கு, தன்னுடைய கற்பனை வெளியை விஸ்தரிக்க பல தடைகள் காத்திருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவர் அந்த நாவலை வாசகனின் காட்சிப் படிமங்களோடு குறைந்தபட்சம் ஒத்துப் போய் படமாக எடுத்திருந்தாலே அது பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.



ஒரு நாவலை எல்லா வாசகர்களும் ஒரே மாதிரியாகத்தான் புரிந்துக் கொண்டிருப்பார்களா என்பதும், எல்லா வாசகர்களும் ஒரே மாதிரிதான் ஒரு காட்சியை தங்கள் மனதில் படம்பிடித்து பார்த்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். அதற்கான வாய்ப்பும் இல்லை. கற்பனை வெளி வேறு.. நிஜத்தில் கதாபாத்திரங்களாக உலவ விடுவது வேறு. எந்த இடத்திலும், நாவலையும், அதன் காட்சிப்படிமங்களாக வெளிவரும் படங்களையும் நாம் ஒப்பிட்டு பேசுவது கூடாது.


ஒரு நாவலின் ஆத்மா சிதையாமல், அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியலை தனக்கேற்றவாறு, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளாமல், கருத்தியலை சிதைக்காமல் படமாக்க, ஒரு இயக்குநர் முயன்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாறாக, நாவலில் அவளும், அவனும் வாழ்ந்தார்கள், ஆனால் திரைப்படத்தில் அவர்களின் வாழ்வே சரியாக படமாக்கப்படவில்லை என்கிற கூற்றெல்லாம் எத்தனை தூரம் சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதெல்லாம் 'நான் ஒரு படிப்பாளி, தொடர் வாசிப்பாளன், எழுத்தாளன்' என்கிற கட்டுக்குள் தன்னை வைத்திருப்பவர்கள், சினிமாவைப் பார்க்கும்போது எழுப்புகிற விவாதமாகவே இருக்கும்.



மேலும் நாவல் என்பது உடனடியாக பல நூற்றாண்டுகளை ஒற்றை வரியில் தாண்டிவிடும் வல்லமை கொண்டது. ஆனால் அதை காட்சிப்படுத்தும்போது அதே மாதிரி ஒற்றை காட்சியில் தாண்டுவதற்கு ஒரு இயக்குநர் உழைக்க வேண்டியதன் அளவு மிகப் பெரியது. அது மிகப் பெரிய கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் ஆகும். மேலும், நாவலை வாசிக்கும்போது அதில் நமக்கு பல காட்சிகள், பல கதாபாத்திரங்களை மிக ஆழமாக விளக்கும் காட்சிகளை அதன் ஆசிரியர் எழுதிவிடலாம். ஆனால் அதை இரண்டு மணி நேரம் படமாக்க முயற்சிக்கும் ஒரு இயக்குநருக்கும் அத்தகைய பெரிய சுதந்திரம் திரைப்படத்தில் இல்லை. அதனால்தான் நாவலின் ஆத்மாவை ஒழுங்காக சிதைக்காமல், திரையில் காட்சிகளாக கொண்டு வந்தாலே போதும் என்று சொன்னேன்.



மகேந்திரன் படமாக்கிய நாவல்களையும், அவரது திரைப்படங்களையும் ஒப்பிட்டே இதனை என்னால் நிறுவ முடியும். ஆனால் மகேந்திரன் எந்த நாவலை எல்லாம் படமாக்கியுள்ளார் என்பது கூட தெரியாமல், அந்த நாவல்களைப் படிக்காமல், மகேந்திரன் மாதிரி இப்போது யாரும் நாவல்களை படமாக்குவதில் தேர்ச்சி பெறவில்லை என்று போகிற போக்கில் சொல்லி செல்பவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஒரு நாவலை குறைந்தபட்ச நேர்மையோடு படமாக்கும் திறன் பெற்ற இயக்குநர்கள் வரும்போது, நாம் நாவல் அளவிற்கு படமில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் நாவலைப் படமாக்க யாரும் முன்வரமாட்டார்கள். 


கி.ராஜநாராயணன் சொல்வது போல் சிறுகதை, நாவல் என்பதெல்லாம் அதனதன் தளத்தில், அதனதன் புனிதத்தை, வீரியத்தை, அழகியலை, அது எழுத்து வடிவத்திலேயே பதிவு செய்துவிட்ட பின்னர், அதை மாற்றி தங்கள் வசதிக்கேற்ப ஒரு இயக்குநர் படமாக்க முயற்சிக்கும்போது, அந்த படைப்பு, எழுத்தின் வடிவத்தில் அது பதிவு செய்த காட்சிகளை, அழகியலை, ஒருபோதும் மறுதளிக்கப்போவதில்லை. எழுத்து வடிவிலான அந்த படைப்பு மறு விசாரணைக்கு உட்படுத்தப் போவதுமில்லை.



எழுத்தும், காட்சியும் இரண்டு வெவ்வேறு வடிவிலான படைப்புகள். ஒரே மாதிரி (காட்சி ரீதியாக) இரண்டும் இருந்துவிட்டால், பிறகு எதற்கு அது இன்னொரு வகையிலான படைப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.? வாசகனை, அவனது வாசிப்புத் திறனைத் தாண்டியும், வாசிக்கும்போது அவனது கற்பனை வெளியில் தெரிந்த காட்சிகளைத் தாண்டியும், வேறுமாதிரி காட்சிப் படிமங்களோடு, திரை அழகியலோடு சொல்லி புரிய வைத்தாலே, அது அந்த நாவலுக்கு இயக்குநர் செய்யும் மரியாதையாக இருக்கும்.



உமாச்சந்திரனின் நாவல் ஒன்றும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றல்ல, மிக சுமாரான நாவல்தான் அது. ஆனால் அதுவே 'முள்ளும் மலரும்' என்று மிகப் பெரிய காட்சிப் படைப்பாக வெளிவந்துள்ளது. நாவல் கொடுத்த அதே அனுபவத்தை படமும் கொடுத்திருந்தால் இன்று வரை அதை யாரும் கொண்டாடப் போவதில்லை.



எழுத்தாளர்களிடம் இருக்கும் இன்னொரு பிரச்சினை, திரைப்படத்திற்காக சில காட்சிகளையோ, சம்பவங்களையோ மாற்றும்போது கதையில் அப்படி இல்லையே என்ற அவர்களின் வாதம். ஒரு சிறுகதை, நாவல், சம்பவம் நமக்கு பிடித்திருந்தால் அதை அப்படியே கருவாக வைத்துக் கொண்டு நாமே அதற்கு திரைக்கதை அமைப்பதுதான் சிறந்த வழி. தவிர, சிறுகதை, நாவலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை, சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. கொண்டு வருவதற்கான வாய்ப்புமில்லை.



 ஆயிரம் பக்க நாவலை இரண்டரை மணி நேர படமாக சுருக்கும்போது நாம் நிறைய விஷயங்களை விட்டுவிட வேண்டும். எதை விட வேண்டும் என்பது இயக்குநரின் அல்லது திரைக்கதையாசிரியரின் விருப்பமாகவே இருக்க வேண்டும். ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும்போது, மாற்ற விரும்புபவரின் விருப்பத்திற்கு நாம் அதை விட்டு விட வேண்டும்.



இது சிறுகதை ஆசிரியர் அல்லது நாவல் ஆசிரியருக்கு நாம் செய்யும் அவமரியாதை இல்லையா என்றால், இல்லை என்றே சொல்வேன். அவர் எழுதியது சிறுகதையைதான். நாம் அதில் ஒரு மாற்றத்தையும் செய்துவிடப்போவதில்லை. அப்படி செய்யவும் முடியாது. மேலும் அச்சு வடிவில் அது நிலைபெற்றுவிட்ட ஒன்று.


 ஆனால் சிறுகதையில் இருந்து காட்சி எனும் வடிவத்திற்கும் மாறும்போது முழுக்க முழுக்க அது இயக்குநரின் படைப்பு. எப்படி இயக்குனர் சிறுகதை என்கிற வடிவத்தை மாற்ற முடியாதோ, அதே போல், சிறுகதை ஆசிரியரும், காட்சிப் படைப்பை மாற்ற கூடாது. மாற்ற முடியாது. மிக நுட்பமான இந்த வேறுபாடு புரியாமல்தான், இங்கே இலக்கியங்கள் சினிமாவாவதில் நிறைய சிக்கல்களை இரண்டு தரப்பினரும் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.



முன்னமே சொன்னதுபோல், எழுத்தை வாசிக்கும் வாசகன், நிறைய லாஜிக்கான அல்லது கற்பனைக்குட்பட்ட சில விஷயங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அதே நடிப்பு, ஒளிப்பதிவு, சம்பவக் கோர்ப்பு என்று வரும்போது, மிக சுருக்கமாக காட்சி படைப்பாக வெளிவரும்போது, நாம் வாசகனை இங்கே பார்வையாளனாக மாற்ற வேண்டிய மிக நுட்பமான வேலையை செய்ய வேண்டும். வாசகன் பார்வையாளனாக மாறும்போது கேள்விகள் கேட்க பழகிக் கொள்கிறான். அதற்கான வசதிகளும், காட்சி ஊடகத்தில் இருக்கும்போது, நாம் அதை பயன்படுத்திதான் ஆக வேண்டும். மேலும், வாசிக்கும்போது இருக்கும் கற்பனை வெளி அவரவர் கற்பனைத் திறனுக்கேற்றது. ஆனால் காட்சியாக மாறும்போது, எல்லோரையும் ஒரே விளிம்பில் நிறுத்த வேண்டிய கடமை இயக்குநருக்கு உள்ளது.



மூன்று முறை ஆஸ்கர் விருதை வென்றிருக்கும் வால்ட்டர் முர்ச் (Walter Murch) நாவலில் இருந்து எடுக்கப்படும் சினிமா அதே அனுபவத்தை தரவேண்டுமா என்பது குறித்து அளித்த பதில் இங்கே முக்கியமானது.


ஒரு புத்தகம், வாசிப்பவனுக்கு அளிக்கும் சுதந்திரத்தை, பங்கேற்பை ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு அளிக்கமுடியுமா?



புத்தகம் வாசிப்பவனை ஒரு விதமான மோன நிலைக்கு ஆட்படுத்துகிறது. ஏனெனில் அது காலத்தால் கட்டுப்படுத்தபடுவதில்லை.


சினிமா மிக பெரிய ஊடகம், என்ற போதிலும் பார்வையாளருடன் தனித்தனியே உரையாடலை நிகழ்த்துகிறது. இதன் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் பார்வையாளர்கள் சொந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையின் பிம்பங்களோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது? சினிமா அதனளவில் பிரித்தறிய முடியாத பன்முகத் தன்மை உடையது. மேலும், பார்வையாளர்களின் சொந்த அனுபவங்களை வெளிக்கொணர்கிறது. எல்லாரும் நினைத்துக் கொள்கிறார்கள், இந்தப் படம் எனக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்று.



ஒரு நல்ல திரைப்படம், பார்வையாளனின் ஐம்புலன்களில் இரண்டை மட்டுமே அனுமதிக்கிறது. பார்ப்பதும், கேட்பதும். மேலும் அது காலத்தால் குறுக்கப்பட்ட ஒன்று. புத்தகத்தைப் போல் அல்லாமல். புத்தகத்தின் ஒருபத்தி புரியவில்லையெனில் அதை திரும்ப வாசிக்க முடியும். நீங்கள் உள்வாங்கி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகரும் திரைப்படத்தில் அது சாத்தியமில்லை.


ஒரு திரைப்படம் என்பது பிம்பம், வார்த்தைகள் மற்றும் ஒலிகள் இவற்றுக்கிடையேயான நடனம். ஒரு திரைப்படம் பார்வையாளனின் பங்கேற்பைத் தூண்டுகிறது. ஒரு திரைப்படம் குறிப்பிடத் தகுந்த தகவல்களை அளிக்கிறது. அதே வேளையில், பார்வையாளன் படைப்பு சார்ந்து பங்கேற்கும்போது மட்டுமே முழுமையடைகிறது. ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்கள் சார்ந்து பிம்பங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு திரைப்படம் மேஜிக்காக மாறுகிறது.


திரைப்படத்தின் ஒவ்வொரு கணமும் முழுமையடைவது தனித்தனியேயான பார்வையாளர்களைப் பொருத்தது. எனவே சினிமா, புரவயத்தில் (கட்டமைப்பில்) பிம்பங்கள் மற்றும் ஒலிகளால் ஆனது என்றபோதிலும், அதன் பார்வையாளர்களை வெவ்வேறு விதத்தில் வித்தியாசமான எதிர்வினைப் புரியத் தூண்டுகிறது.

thanx 

the hindu


அருண்.மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு [email protected]


வலைத்தளம் www.thamizhstudio.com

ரஜினியா? அஜித்தா? - யார் கலெக்சன் ஸ்டார் ?ஆராய்ச்சி முடிவு

1. கவர்ச்சிக்கு மாறினா சார்மி .-செய்தி # இதுக்கு முன்னால அவர் குணச்சித்திரத்துல குடி இருந்தாராமா?



================


2 ரீமா கல்லிங்கல் திருமணம் இன்று கொச்சியில்  நடந்தது -செய்தி #  ஆகா! தலை தீபாவளியை ரொம்ப நெருக்கத்துல கொண்டாடுறது ஷாலினிக்குப்பின் இவர்


====================

3 தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதியுங்கள்: - காங்கிரஸ் ் # தடை விதிச்சுட்டா் இந்தியாவோட தலை எழுத்தையே மாத்தி எழுதிடுவீங்களா?


===================


4 இறப்பதற்குள் தனி ஈழம் வாங்கித் தருவேன் -முக # பதவியில் இருக்கும்போது டியூட்டிக்குப்போகாம இப்போ போய் என்ன பயன்?


=================



5 கேரளாவில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி - முஸ்லீம் லீக் # நல்ல வேளை.2க்கும் மேல் எப்போதும் வேண்டாம்னு கவர்மென்ட் சொல்லுச்சு



====================


6 திருப்பூரில் சாக்கு குடோனில் தீ விபத்து...# எதனால் விபத்து னு கேட்டா ஏதாவது சாக்கு சொல்வாங்க


===================


7 நான் சிகப்பு மனிதன்’ படத்தில் மீண்டும் இணையும் விஷால்–லட்சுமி மேனன்# ரீ மேக் மனிதன்? புது மனிதன்



===================


8 உளவு துறை எச்சரிக்கை; "ஆபரேஷன் அம்லா" துவங்கியது :பயங்கரவாதிகள் போர்வையில் 47 பேர் சிக்கினர் # நாகார்ஜூன் கிட்டே அனுமதி வாங்கியாச்சா?






====================




9  ஐ' படத்துக்கு எமி ஜாக்சனை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் விளக்கம் # பொதுவாவே அண்ணன் தமிழ்ப்பொண்ணை ஹீரோயின் ஆக்கமாட்டாரு,இதுல என்ன விளக்கம்?




===================




10  முத்தக்காட்சியில் நடிக்க ஜி.வி.பிரகாஷ்க்கு அவர் மனைவி  தடை # “மத்த” காட்சில நடிக்க தடை இல்லையே?




===================




11 திருமணத்துக்குப் பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன்.- ரீமா கல்லிங்கல் #  இன்னும் எங்களை கொல்வீங்கள் ?






=====================




12 மோசடி செய்து வரிவிலக்கு பெற்றுள்ளது: அழகுராஜாவை எதிர்த்து வழக்கு! # கதைல தான் மோசடின்னா டைட்டில் லயும் மோசடியா? 18 கோடி போச்சா?




=====================




13 சேனல் 4 வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கண்ணீர் வருகிறது-கருணாநிதி #  உங்க உருக்கத்தைப்பார்த்து எங்களுக்கு ரத்தக்கண்ணீரே வருது தலைவா




=====================




14 ஒரு ராத்திரி என்கூட தங்கினா, பிறவிப் பயனை அடைவாய்! ''திருவள்ளுரில் இருக்கும் ஒரு போலி சாமியார் வலை # திருட்டு லொள்ளு சாமியார்


===================


15 ஸ்வேதா மேனனை உரசியதாக புகாருக்குள்ளான 73 வயது எம்.பி மீது வழக்கு # சொர்க்கத்துக்குப்போக வேண்டிய வயசுல பெருசு ஜெயிலுக்குப்போக தலை எழுத்து


===================


14 வாட்சனைத் திட்டுவதா.. ரவீந்திர ஜடேஜாவுக்கு 10 பர்சன்ட் சம்பளம் அபராதம் # பாராட்டிப்பேசினா 20% சம்பளத்தில் சேர்த்துக்கொடுத்துடுவாங்களோ?



=================


15 தீபாவளி -3 தினங்களில் டாஸ்மாக் விற்பனை 370 கோடி - செய்தி # கலெக்ஷன் ஸ்டார் ரஜினியோ அஜித்தோ இல்லை போல.டாஸ்மாக் தான் நெம்பர் ஒன் கலெக்சன்


=================


16 தமிழ் மக்களின் உணர்வுகளை அறிந்து பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்- ஜெயந்தி நடராஜன் #ஒரு தமிழராலயே தமிழனோட உணர்வை புரிஞ்சுக்க முடியாதப்ப )....


================


17 குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களில் 300பெண்களும் அடங்குவர்-செய்தி# என்னது? பொண்ணுங்க அடங்குவாங்களா? வாட் எ மெடிக்கல் மிராக்கிள்


====================


 18 காங் எம் பி சில்மிஷ புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதாமேனன் - செய்தி # அதுக்குள்ளே என்ன கல்மிஷம் நடந்தது மேடம்?



===================


19 பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது:உயர்நீதிமன்றம் # நல்ல வேளை.போயஸ் தோட்டம் பத்தி சொல்லி இருந்தா "



==================


20 நரேந்திர மோடிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: மத்திய அரசு முடிவு: # சோனியா,ராகுல் ,ப்ரியங்கா 3 பேரும் சேர்ந்து எடுத்த முடிவு போல


========================

Thursday, November 07, 2013

ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்

தமிழர்களின் இதயம் கவர்ந்த ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்தமிழர்களின் இதயம் கவர்ந்த ஈழத்து இசைப்பிரியாவின் கடைசி நேர கதறல்

கனவில் கூட இப்படி ஒரு சம்பவம் எந்த பெண்ணுக்கும் ஏற்பட கூடாது.....
சேனல்–4 வெளியிட்ட அந்த காட்சியை பார்த்ததும் உலகம் முழுவதிலும் மனிதாபிமானம் உள்ளவர்கள் இப்படித்தான் நினைத்து இருப்பார்கள்.
இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இசைப் பிரியாவை ராணுவ உடையில் இருந்த மனித மிருகங்கள் சிதைத்து உயிரை பறித்த அந்த கொடூர காட்சி தான் இன்று உலகத்தையே உலுக்கி இருக்கிறது.
27 வயதே நிரம்பிய இளங்குயில். தேனொழுகும் தனது தமிழ் பேச்சால் தமிழர்களின் இதய சிம்மாசனத்தில் நிரந்தரமாக குடியேறியவர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த தர்மராஜா – வேதரஞ்சனி தம்பதியரின் 4–வது மகளாக பிறந்தவர். அவருக்கு பெற்றோர் ஷோபனா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
பிறக்கும் போதே இதயத்தில் சிறு ஓட்டையுடன் பிறந்ததால் இசைப்பிரியாவின் எதிர் காலம் எப்படி இருக்குமோ? என்று பெற்றோர்கள் கலங்கினார்கள். ஆனால் மருத்துவர்கள், இது சாதாரண குறைபாடுதான். எதிர் காலத்தில் எந்த பிரச்சினையும் வராது என்று நம்பிக்கை ஊட்டினார்கள்.
பள்ளிப்படிப்பை முடித்து யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து தமிழில் புலமை பெற்றார். 1995–ல் சிங்கள ராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது வன்னிக்கு குடிபெயர்ந்ததமிழ் குடும்பங்களில் ஷோபனாவின் குடும்பமும் ஒன்று. வன்னியில் தனது மேல் படிப்பை தொடர்ந்தார் ஷோபனா.
அப்போது தமிழர்களின் உரிமைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் பிரச்சார வகுப்புகளுக்கு ஷோபனா செல்ல தொடங்கினார். புலிகளின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஷோபனா 1999–ல் விடு தலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.
அரவியாய் கொட்டிய தமிழும், பார்த்தவர் மனதில் ஒட்டிக் கொள்ளும் அவரது குழந்தை முகமும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பலரையும் ஈர்த்தது. எனவே அவரை இசை அருவி என்று அழைக்க தொடங்கினார்கள்.
அவரது தமிழ் புலமையை அறிந்த பிரபாகரன் விடுதலைப்புலிகளின் ஊடகத் துறையில் பணியமர்த்த உத்தரவிட்டார்.
புலிகளின் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பிய நிதர்சனம் பகுதியின் செய்தி வாசிப்பாளராக பணியில் சேர்ந்தார். தமிழீழம் தொடர்பான சில குறும் படங்களிலும் நடித்தார். அவரின் இனிய குரலும், தெளிவான உச்சரிப்பும், காட்சிகளில் வெளிப்படுத்திய முக பாவனைகளும் எல்லோரையும் ஈர்த்தது. அப்போது தான் ஷோபனாவாக பிறந்து, இசைஅருவி என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் இசைப்பிரியா என்று அழைக்கப்பட்டார். அந்த பெயரே அவருக்கு நிரந்தரமாகி விட்டது.
தனது 25–வது வயதில் 2007–ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்க தளபதிகளில் ஒருவரான ஸ்ரீராமை திருமணம் செய்து கொண்டார். மறு ஆண்டே இசைப்பிரியாவுக்கு ஒரு குட்டி இசைப்பிரியா பிறந்தார். அந்த குழந்தைக்கு அகல்யா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். இசைப் பிரியாவும், ஸ்ரீராமும் மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருந்த அவர்கள் இல்லற வாழ்வில் 2009–ம் ஆண்டு பேரிடி விழுந்தது. சிங்கள ராணுவத்துடன் நடந்த போரில் கணவரையும், குழந்தையையும் பறிகொடுத்து துடித்து போனார்.
அடுத்தடுத்து உக்கிரமாக நடந்த போரில் மரணமா? அல்லது சுதந்திர தமிழீழத்தில் சுகமாக வாழ்வோமா? என்று ஒவ்வொருவரும் பதட்டத்துடன் வாழ்ந்தனர். இலங்கை அரசு அறிவித்த பாதுகாப்பான பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தஞ்சம் அடைந்தனர். அவர்களோடு இசைப் பிரியாவின் பெற்றோரும் தஞ்சம் புகுந்தனர்.
மகளை காணாமல் தர்மராஜாவும், வேதரஞ்சனியும் பதறி கொண்டிருந்த நேரத்தில் சிங்கள ராணுவத்தின் பிடியில் சிக்கி கொண்டாள் இசைப்பிரியா என்ற தகவலை அறிந்து அதிர்ந்து போனார்கள்.
கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட தமிழர்களில் இசைப்பிரியாவும் கொல்லப்பட்டு விட்டார். அவரது உடல் அலங்கோலமாக கிடந்தது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக 2010–ல் சேனல்–4 இசைப் பிரியாவின் உடலை காட்டியது.
அப்போது அதை மறுத்த இலங்கை அரசு, போரில் இசைப்பிரியா சுட்டுக் கொல்லப்பட்டார் என்று முழு பொய்யை உலக நாடுகளை நம்ப வைத்தது.
ஆனால் சிங்கள வெறி பிடித்த ராணுவ மிருகங்களிடம் பிடிபட்ட இசைப் பிரியா சிதைக்கப்பட்ட காட்சியை சேனல்–4 இப் போது வெளியிட்டு தோலுரித்துள்ளது.
சகதி காட்டில் மேலாடை இல்லாமல் இசைப்பிரியா அமர்ந்திருக்க 5 சிங்கள ராணுவ வீரர்கள் அவரது கையை பிடித்து இழுக்கிறார்கள். துணி வேண்டும் என்று கெஞ்சிய இசைப் பிரியாவுக்கு ஒருவன் வெள்ளை துணியை கொடுத்து இழுத்து வருகிறார்கள்.
என்னை எதுவும் செய்து விடாதீர்கள் என்று கதறிய இசைப்பிரியாவின் குரலை கேட்டு எக்காள சிரிப்புடன் ராணுவத்தினர் இழுத்து செல்கிறார்கள்.
அப்போது ஒருவன் ‘இவள் பிரபாகரனின் மகள்’ என்று கூறுகிறான். ‘அய்யோ, நான் அவர் இல்லை’ என்று கூறுகிறாள் இசைப்பிரியா. அடுத்து இசைப்பிரியா கொல்லப்பட்டு ஆடையின்றி வெள்ளை துணி உடலில் போடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கிறார்.
இந்த காட்சிகள்தான் உலகையே உலுக்கி உள்ளது. இசைப்பிரியாவுக்கு நேர்ந்த கொடூரம் வெளியாகி இருக்கிறது. ஆனால் பல அப்பாவி இசைப்பிரியாக்கள் சிங்கள வெறி பிடித்த ராணுவத்தால் சூறையாடப்பட்டுள்ளனர்.
தவறுதலாக கொடுக்கப்பட்ட தண்டனைக்கே கற்புக்கரசி கண்ணகியின் கோபத்தால் மதுரை அழிந்தது.
திட்டமிட்டு கற்பை சூறையாடி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை பறித்த இலங்கைக்கு என்ன தண்டனை....?
காலம்தான் பதில் சொல்லும்.


thanx - malaimalar