Thursday, November 07, 2013

ஆனந்த விகடன் - தீபாவளிப்படங்கள் - விமர்சனம்

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம் -

'மதுர’ சினிமா! அண்ணனைக் கொன்றவனைப் பழிவாங்கும், 'பதுங்கும் எலி... பின், பாயும் புலி’ கதை. அதை நேர்த்தியான பேக்கேஜில் ரசிக்கும் படி தந்திருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன். விஷாலும் வில்லனும் நேருக்குநேர் மோதிக்கொள்வது, க்ளைமாக்ஸ் சண்டையில் மட்டும்தான். ஆனால், அதுவரையுமே 'திக்... திடுக்...’ டெம்போவை ஏற்றிக்கொண்டே சென்ற விதத்தில்... சபாஷ்!
அட, விஷாலா இது!? கோபத்தில் முறுக்கிக் கொள்ளாத அந்த 'ஷோல்டரை’ கட்டியணைத்துப் பாராட்டலாம். வெளியூருக்கு பஸ் ஏறாமல், மிரட்டல் வில்லன்களுக்கு சவால் விடாமல், பயமும் பதட்டமுமாக ஆயுதத்தைக் கையில் எடுக்கும் அண்டர்ப்ளே நடிப்பில் வெரைட்டி விருந்து படைக்கிறார். நண்பன் அடிவாங்குவதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு, 'அடிடா அவனை’ என்று உதார் சவுண்ட் கொடுக்கும் அந்த இடத்தில், 'வின்னிங் ஃபார்முலா’வைப் பிடித்துவிட்டீர்கள் விஷால்!
அடக்கஒடுக்க அழகு லட்சுமிமேனன். ஸ்கூல் மிஸ் கெட்டப்பில் பாந்த உலா வருபவர், 'ஃபை ஃபை ஃபை’ பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். இப்படியான 'அப்பா’ கேரக்டர்களை நிறையப் பார்த்திருந்தாலும், தன் குரல், உடல் மொழியில் பரிதவிக்கவைக்கிறார் பாரதிராஜா. அதிலும் க்ளைமாக்ஸில், உண்மை தெரிந்து விஷாலை கம்பீரமும் நன்றியுமாகப் பார்த்து கண்கலங்கும் இடத்தில், க்ளாஸ்! ஆட்கள் சுற்றிவளைத்த பின்னரும் அசராமல் வேட்டியை மடித்துக்கட்டி வில்லன் ஷரத் லோஹிதஸ்வா தெனாவட்டாக விளையாடும் இடம்... மிரட்டல்!
'பிரதருக்கு புதருக்குள்ள என்னடா வேலை?’ என்று லந்து நண்பனாக வந்தாலும், கதையை நகர்த்தவும் உதவுகிறார் சூரி.
அறிந்த கதை, தெரிந்த திருப்பங்கள் என்று பயணிக்கும் திரைக்கதையை அலுப்பு இல்லாமல் நகர்த்த உதவுகிறது சுசீந்திரன்-பாஸ்கர் சக்தியின் இயல்பான வசனங்கள். 'நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்துட்டீங்களே.. யார் கூப்பிட்டாலும் இப்படிப் போய்டுவீங்களா?’ 'ஒரு பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே டிராப் பண்ற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்? இன்னைக்கு டிராப் பண்ற இடத்துல வந்து நாளைக்கு பிக்கப் பண்ணிக்கவா?’ - பளிச் சாம்பிள்கள்.
'டையரே...’ பாடல் அத்தனை கலர்ஃபுல்லாக இருந்தாலும், படத்தை அந்த இழவுப் பாடலில் ஓப்பன் செய்திருக்கும் தைரியம்... ஆச்சர்யம். வைரமுத்து - மதன் கார்க்கி காம்பினேஷனில் 'டையரே...’, 'ஒத்தக்கடை மச்சான்...’, 'ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை...’ பாடல்களில் தாளம் போட வைக்கும் இமான், ஆக்ஷன் காட்சிகளின் பின்னணியில் மிரளவைக்கிறார். இருளும் ஒளியுமான மதுரையை இயல்பு மாறாமல் படம் பிடித்திருக்கிறது மதியின் ஒளிப்பதிவு.
அவ்வளவு பரந்த நெட்வொர்க் வைத்திருக்கும் வில்லன் குரூப், சூரி கொடுத்த செல்போனை நம்பிப் பயன்படுத்துவதும், அத்தனை ஷார்ப்பான வில்லன் ஆட்கள் ஒரு வருடமாக விஷாலை சந்தேகிக்காமலே இருப்பதும், 'எட்டு மணி மாட்டுத்தாவணி சந்திப்பு’ என்று பிரமாத பில்ட்-அப் வைத்த இடத்தில் 'ஃபை ஃபை ஃபை கலாய்ச்சி ஃபை’ பாடலைத் திணித்திருப்பதும்... வொய் கலாய்ச்சிஃபை?
'மதுரை என்றாலே ரத்தம் சத்தம் யுத்தம்’ என பழகிய ஃபார்முலாவானாலும், பளிச் கதாபாத்திரங்களுக்காகவும், 'குவாரி மோசடி’ என்று டாபிக்கல் சுவாரஸ்யம் சேர்த்ததற்காகவும், இந்தப் பாண்டிய நாட்டுக்கு ஒரு டிரிப் அடிக்கலாம்!

 ஆரம்பம் - சினிமா விமர்சனம்

அரசின் ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாடும் போலீஸ் அஜித். அப்புறமென்ன அடி தூள் ஆரம்பம்தானே!



தரமற்ற புல்லட் புரூஃப் உடை காரணமாக உயிரிழக்கிறார் அஜித்தின் போலீஸ் நண்பன் ராணா. அந்த பேரத்தை முடித்த அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் பழிவாங்கக் கிளம்புகிறார் அஜித். ஆனால், அவர் மீதே கொலைப் பழி சுமத்தி, கொலை செய்கிறார்கள் வில்லன்கள். ஃபீனிக்ஸ் பறவையாக 'தல’யெடுத்து அஜித் வில்லன்களை துவம்சம் செய்யும் கதை!
மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதிகள் தாக்குதலில், தரமற்ற புல்லட் புரூஃப் ஆடை அணிந்திருந்ததால் உயிரிழந்த போலீஸ் அதிகாரி ஹேமந்த் கார்கரேவின் கதையை அஜித் ரசிகர்களுக்கு ஏற்ப சஸ்பென்ஸ் த்ரில்லராகப் பின்னியதில் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் செம ஸ்டைல். 'பில்லா’ பாணியில் நடக்கிறார், கூலர்ஸ் அணிகிறார்; நடக்கிறார்... கூலர்ஸ் அணிகிறார். இது அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தினாலும், வில்லனை மிரட்ட குழந்தையின் மீது சூடான அயர்ன் பாக்ஸை வைத்துவிடுவதாக மிரட்டும் இடத்திலும், நயன்தாராவுடன் எந்தக் 'கசமுசா’வும் நிகழ்த்தாமல், கடமையே கண்ணாக அஜித் செயல்படுவதும்... குட் ஷோ!
ஆர்யா அதிசயமாக மெனக்கெட்டு மேக்கப்புடன் 'குண்டு பையனாக’ நடிக்கவும் செய்திருக்கிறார். கேங்ஸ்டர் கேர்ளாக 'பில்லா’வில் செய்ததை இதிலும் டிட்டோ அடித்திருக்கிறார் நயன். அச்சுபிச்சு கேரக்டராக இருந்தாலும், 'ஹவ் ஸ்வீட்ட்ட்ட்’ டாப்ஸி! ஊழல் அமைச்சர் மகேஷ் மஞ்ச்ரேக்கர், 'டே போலீஸ் ஆபீஸர்... என் மூஞ்சியை எதுக்குடா பார்க்குறே..? வயரை பார்த்து கட் பண்றா!’ என்று சலம்பித்தள்ளும் க்ளைமாக்ஸில் பட்டாசு கொளுத்துகிறார்.
'மேக் இட் சிம்பிள்’ என்று பன்ச் பிடித்தது முதல் சிம்பிள் வசனங்களாலேயே காட்சிகளை நகர்த்துகிறது சுபாவின் திரைக்கதை ப்ளஸ் வசனம்.
'அஜித் யார்?, ஏன் இவ்வளவு கலாட்டா செய்கிறார்?’ என்று யோசிக்கவைக்கும் முன்பாதி ஜிவ்வென்று டேக்-ஆஃப் ஆகிறது. ஆனால், நீள ஃப்ளாஷ்பேக் 'சொய்ய்ய்ங்’ என்று அந்த டெம்போவை தரை இறக்கிவிடுகிறது. அஜித் போலீஸுடன் மல்லுக்கட்டுவதைவிட ஆர்யாவுடன்தான் அதிகம் மல்லுக்கட்டுகிறார். நேர்மை ப்ளஸ் திறமையான போலீஸ் கிஷோருக்கு, அஜித்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரிந்திருக்காதா? அத்தனை பாதுகாப்பு அம்சங்கள்கொண்ட வங்கியில் அஜித் அண்ட் கோ திருவிழாவில் குருவி ரொட்டி வாங்குவது கணக்காக லூட்டி அடிப்பதெல்லாம், உல்லுல்லாயி!
'ஆரம்பித்த’ ஜோரில் முடிக்காமல், ஜவ்வாக இழுத்திருக்கிறார்கள். ஆனால், அஜித் ரசிகர்களையும் திருப்திபடுத்தி, ஓர் ஆக்ஷன் த்ரில்லராகவும் பேலன்ஸ் செய்த வகையில் இயக்குநருக்கு இந்த ஆபரேஷன் சக்சஸ்தான்!


 ஆல் இன் ஆல் அழகுராஜா - சினிமா விமர்சனம்


'வெட்டி பந்தா’ வேலையில் ஹீரோ, கல்யாண மண்டபத்தில் ஹீரோ-ஹீரோயின் சந்திப்பு, ஹீரோ அல்லது ஹீரோயினின் பெற்றோர்களுக்கு ஒரு பிரச்னை ஃப்ளாஷ்பேக், இந்த சம்பவங்களுக்கு நடுநடுவே சந்தானத்தை வைத்து 'மானே தேனே’ போட்டு கலாய் காமெடி... இதுதானே ராஜேஷ் படங்களின் ஃபார்முலா. அதேதான் 'அழகுராஜா’விலும். ஆனால், இந்த ஆட்டம் 'ஆல் இன் ஆல்’ போங்கு ராஜேஷ்!



ஒரு லோக்கல் சேனலை செம லோக்கலாக நடத்தி வருகிறார்கள் கார்த்தியும் சந்தானமும். அந்தச் சேனலை 'நம்பர் 1’ ஆக்கிவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்ற கார்த்தியின் லட்சியத்தில் இடி இறக்குகிறது காஜலின் அழகு. ஆனால், கார்த்தியின் அப்பா பிரபுவுக்கு, காஜல் குடும்பத்துடன் ஒரு முட்டல் ஃப்ளாஷ்பேக். காதல், மோதல், குடும்பப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு என்ன நடக்கவேண்டுமோ, அதுவே நடக்கிறது!
அறிமுக நாயகனை வைத்து சரவெடி ஹிட் அடித்த ராஜேஷ், கார்த்தி-சந்தானத்தை வைத்து இப்படி ஒரு ஷோ காட்டுவாரா? நம்ம்ம்ப முடியவில்லை! ஃப்ளாஷ்பேக்கில் கார்த்தியை பிரபுவாக நடிக்க வைத்தது, சீனியர் சந்தானத்தின் பாடிலாங்வேஜ், எம்.எஸ்.பாஸ்கரின் நடன வகுப்பு என ஒரு சில ஐடியாக்கள் மட்டுமே அழகு ராஜா.
ஒரு ஃப்ரேம்கூட மிச்சம் வைக்காமல் துறுதுறுவென நடிக்கிறார், காதல் ரசம் பொங்க பார்க்கிறார், அந்தக் கால பிரபுவின் உடல், குரல்மொழி என படத்தில் கார்த்தி எல்லாம் செய்கிறார். ஆனாலும், என்ன செய்வார் பாவம்..? 'ஓஹோன்னனான்’ என்று காலரைத் தூக்கிவிட்டு காற்று ஊதும் இன்றைய கல்யாணம், வாய் நிறையக் குதப்பிக்கொண்டு 'டம்பி முட்டு’ என்று பேசும் அன்றைய காளியண்ணன் என இரண்டு கேரக்டர்களுக்கும் ஏக வித்தியாசம் காட்டுகிறார் சந்தானம். ஆனால், வெற்று வசனங்கள் கிச்சுகிச்சு மூட்டுவேனா என்கிறது!
கலைத் தாகத்துடன் சாதிக்கத் துடிக்கும் கேரக்டரில் காஜலுக்கு நடிக்க ஸ்கோப் கொஞ்சம் அதிகம்தான். அழகி, நடிக்கவும் செய்திருக்கிறார். ஆனாலும், 'இத்தனை லூஸுப் பெண்ணாக ஒரு ஹீரோயினா?’ என்ற நினைப்பு காஜலின் சேட்டைகளை ரசிக்கவிடாமல் நந்தியாக நிற்கிறது!
இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக சோதித்த பிறகு, கார்த்தி, நரேன் சொல்லும் அடாசு கவிதையும், அட்டு ஃப்ளாஷ்பேக்கும் ஆறுதல் அத்தியாயங்கள். ஃப்ளாஷ்பேக் ராதிகா ஆப்தேவுக்கு என்ன ஆச்சு பாஸ்?



த்ரில்லர், சஸ்பென்ஸ் படங்களில் யூகிக்கக் முடிந்த திருப்பங்களைப் பார்த்திருப்போம். அட, காமெடி காட்சிகளில் 'யூகிக்க முடிந்த திருப்பங்களை’ அழகுராஜா காட்டுகிறான். அதிலும் மிகப் பலவீனமான ஜோக்குகளுக்கு அத்தனை நீள பில்ட்-அப் ஏன்?


ரெட்ரோ பாடலாக ஒலிக்கும் 'உன்னைப் பார்த்த நேரம்’ வசீகரம். அந்தப் பாடலுக்கான மேக்கிங் மெனக்கெடலை படம் முழுக்கவே காட்டியிருக்கலாம்.
ஹிட் இயக்குநர்கள் தங்கள் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு அப்டேட் செய்துகொள்ள, ஓர் இடைவெளி தேவைப்படும். இயக்குநர் ராஜேஷ§க்கு இப்போது தேவை அந்த பிரேக்!


விகடன் விமர்சனக் குழு

 நன்றி - விகடன்

முதல் இரவில் மணப்பெண்ணின் கன்னத்தில் மஞ்சள் பூசும் பழக்கம் ஏன் ?


பின்விளைவுகள் என்னவென்று தெரிந்தும் சிலநேரத்தில் அத்துமீறுகிறேன்....ஹாஹாஹாஹா
#அன்புதான் காரணம்!
பின்விளைவுகள் என்னவென்று தெரிந்தும் சிலநேரத்தில் அத்துமீறுகிறேன்....ஹாஹாஹாஹா 
#அன்புதான் காரணம்!
இனிய இரவு வணக்கம்
 1. மங்கையே மணாளனின் துர்ப்பாக்கியம்


==================


2 கவுன்ட்டர் டிக்கெட் ரேட் ல தான் படம் பார்ப்போம் என ஒவ்வொரு ரசிகனும் உறுதியாக இருந்தால் பிளாக் டிக்கெட்டின் அநியாய விலை உயர்வைத்தடுக்கலாம்


=======================

3 பம்பரம் என்றவுடன் வைகோவை நினைத்தால் நீ அரசியல்ப்ரியன்.் சின்னக்கவுண்டரை நினைத்தால் சினிமா ரசிகன்.சுழன்று வேலை செயய நினைச்சா உழைப்பாளி


===================


4 முதல் இரவில் மணப்பெண்ணின் கன்னத்தில் மஞ்சள் பூசும் பழக்கம் ஏன் தமிழனிடம் இல்லை என யோசிக்கிறேன்.# புதுத்துணி உடுத்தும் தருணத்தில் உதித்தது்


=============================


5 இந்த வருசம் 2 11 13 ,3 11 13 னு 2 நாள் தீபாவளி வருது.இது ஒரு விசேசம்.இன்னொரு விசேசம் தீபாவளிக்கு 2 நாள் முன்பு இன்னொரு தீபாவளி வருவது


==================



சும்மா சும்மா இன்பாக்ஸ் ல லொள்ளு பண்ணா
் இப்படி தான் சொல்லிபுட்டேன் ஆமா ...
சும்மா சும்மா இன்பாக்ஸ் ல லொள்ளு பண்ணா
் இப்படி தான் சொல்லிபுட்டேன் ஆமா ...



6 உன்னை என் முதுகில் வைத்து உப்பு மூட்டை தூக்குவதே நீ எனக்களிக்கும் சிறந்த பரிசு + வாய்ப்பு


======================


7 நடிகையை திருமணம் செய்துகொள்ளும் தொழில்அதிபர்் சொந்த வாழ்வில் ஏமாளி ஆவான்.பொது வாழ்வில் கோமாளி ஆவான்


==================


8 உதய சூரியன் என்றால் ஜெ வுக்குப்பிடிக்காது என்பதால் தான் ஆரம்பம் சூரிய உதயத்துக்கும் முன்பே திரையிடப்படுகிறதோ? # பத்த வைடா பரட்டை



=======================


9  நம் ச மையல் அறையில் நீ கெடுபுடி.நான் எடுபுடி



=====================


10 வாக்கிங் போறப்ப எதிர்ல பைக்ல ஒரு கள்ளக்காதல் ஜோடி ஆள்நடமாட்டம் இல்லாத ஏரியா இந்தப்பக்கம் எங்கே இருக்கு?னு விசாரிக்குது அடேய்



==============


Photo: GOD N8 ... NATPE ... !!!



11 காலைல வெறும் வயித்துல காரம் சாப்பிடக்கூடாதுங்கற மாதிரி வெறும் வாய்ல முத்தம் தரக்கூடாது என சாக்கு சொன்னாள்.உதட்டில் தேன் தடவினேன்



=====================


12  குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை எனில் தம்பதிகளுக்கு பள்ளியறை விடுமுறை



===================


13  பள்ளியறைக்கு செல்லும் வயதில் பல்லி மிட்டாய் சாப்பிடும் லொள்ளி லில்லி நீ!



=======================


14 சயன அறை ன்னா தூங்கும் அறை னு அர்த்தம்.ஆனா ஒரு பயலும் தூங்கறது இல்லை.ராஸ்கல்ஸ் ;-))


===========================



15  கார்த்தி ரசிகர்களுக்குப்பிடிக்காத விஜய் பஞ்ச் - ஆல் ஈஸ் வெல் # டீப்பா யோசி



====================

Photo: Wow .. beautiful ..




16 அதர்மத்தை தலை காக்கும் # கவுதம் மேனன் அஜித் வாய்ப்பு


===================


17  இந்த பொண்டாட்டிங்களுக்கு சேலை எடுத்துக்குடுக்கவே புருசன் ஓ டி பார்த்து சம்பாதிக்கனும் போல


=================


18 சார்.குண்டு வெடிப்புல உங்களுக்கு எந்த காயமும் ஆகலையே எப்டி?



குழந்தே! கோ படம் போய் பாரு # மோடி வித்தைகள்



=======================



19 டாக்டர்.வாழைப்பழத்தோல் சாப்பிட்டா நல்லதா?



 யோவ்.நான் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் தான்.அதுக்காக இந்தத்தோல் டவுட் கேட்டா எப்டி?



=====================


20 ஆண்கள் பெண்களை சந்தோஷப்படுத்துவார்கள்.பெண்கள் சிக்கனம்.படுத்துவார்கள்



======================= 

Photo: For a visit :-)


Wednesday, November 06, 2013

60கோடி பட்ஜெட் படம் ஆரம்பம் 6 நாளில் 50 கோடி வசூல் தாண்டியது

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.

அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால், அந்த திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.

‘ஆரம்பம்’ படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.10.20 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளிலும் ரிலீசான 3 நாட்களில் சுமார் 1.34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே.பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய். ஆனால் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையிலேயே இந்த தொகையை நெருங்கிவிட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், ‘ஆரம்பம்’ படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.  


நன்றி- மாலை மலர் 


Pandiyanadu theatre increased
பட்டத்துயானை படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. மிகவும் எதிர்பார்த்த மதகஜராஜாவும் ரிலீசாகவில்லை. இதனால் மனம் நொந்து இருந்த விஷாலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பாண்டியநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக பி மற்றும் சி செண்டர்களில் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை முதல் 15 தியேட்டர்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தியேட்டர் அதிபர் ஒருவர் கூறுகையில் "பாண்டியநாடு கதை பழசாக இருந்தாலும் படம் விறுவிறுப்பாக செல்வது எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. அதனால் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் வருகிறார்கள். காட்சிகளையும் அதிகப்படுத்தி இருக்கிறோம்" என்றார்.

நன்றி - தினமலர் 

பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் திட்டம்-'சந்தனக்காடு' தொடர் இயக்குனர் வா.கௌதமன்.

பிரபாகரன் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார், 'சந்தனக்காடு' தொடர் இயக்குனர் வா.கௌதமன். “இந்த வரலாற்றை படமாக்கும் திட்டம் தோன்றியபோது, கடந்த 10 ஆண்டுகளாக இதுசார்ந்து ஈடுபட்ட களப்பணிகள்தான் நினைவுக்கு வந்தன. அந்த மண்ணில் களத்தில் நின்ற போராளிகள், ஈழத்திற்கு போய்விட்டுத் திரும்பிய நம் கவிஞர்கள், தலைவர்கள், இங்கு முகாம்களில் வசிக்கிற ஈழத் தமிழர்கள் இப்படி எல்லோரையும் நேரில் சந்தித்து நிறைய நிகழ்வுகளை சேகரித்த செய்திகளும், கருத்துகளும், விவாதங்களும் கண்முன் விரிந்தன. அந்த அனுபவங்கள்தான் இப்படி ஒரு படைப்பை எடுக்கும் சூழலை உருவாக்கியது” என்றபடியே பேசத் தொடங்கினார். 



கிட்டத்தட்ட 30 ஆண்டுகால போராட்ட நிகழ்வுகளைப் படமாக்க, இந்த 10 ஆண்டு கால அனுபவம் மட்டும் போதும்னு நினைக்கிறீங்களா?


 
“நெடுமாறன் எழுதிய பிரபாகரன் - தமிழர் எழுச்சி வடிவம் நூல், ஈழம் தொடர்பான பல தகவல்களை உள்ளடக்கியது. இது கிட்டத்தட்ட 1400 பக்கங்கள் கொண்டது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான சூழ்ச்சிகளை, உலக நாடுகளின் வஞ்சத்தை, எதிரிகள் போட்ட திட்டத்தை இப்படி பல விஷயங்களை உள்ளடக்கிய நூல்.இதெல்லாம்தான் என் படைப்பிற்கான கூடுதல் களப்பணி. இன்னமும் இந்த கள ஆய்வு முடியவில்லை. தொடரும்.” 



பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்திருக்கிறதா?


 
“சந்தனக்காடு தொடரை, கவிஞர் புதுவை ரத்தினத்துரை மூலம் கேள்விப்பட்டு பிரபாகரன், பார்த்திருக்கிறார். சீமான் சந்திக்க சென்றபோது, “ஆட்டோ சங்கர் பண்ணின கௌதமனா அவர்!” என்றும் நலம் விசாரித்திருக்கிறார். இதற்கு பிறகு, சந்தனக்காடு தொடரின் 36 மணி நேர பதிவையும் அவருக்கு அனுப்பினேன். தொடரைப் பார்த்தவர், “வீரப்பன் மேல் என்ன நம்பிக்கை வச்சிருக்கோமோ, அதை அழகா பதிவு செய்திருக்கார். அவரை நம்ம மண்ணுக்கு வரவழைத்து நம் வரலாற்றை எடுக்கணும்”னு சொன்னதாக அறிந்தேன். இதைக் கேள்விப்பட்டபோது, அந்த வார்த்தை என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் மகிழ்ச்சியாக அதை எண்ணினேன். 



அந்த சமயத்தில்தான் அங்கு செல்வதாகக் கடிதம் எழுதினேன். அப்போது மீண்டும் யுத்தம் தொடங்கியிருந்த நேரம். “நீங்கள் எல்லாம் விதை நெல்லைப்போல. இங்கு வந்து ஏதாவது ஒன்று நடந்தால்.... இழப்பு உங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல. எங்களுக்கும்தான்” என்றார். அதனால் போக முடியவில்லை. 



பிரபாகரன் மீது நிறைய எதிர்மறை வாதங்களும் முன்வைக்கப்படுகிறதே? அதை எப்படி படைப்பில் கொண்டு வருவீர்கள்?

 
“எதிர்மறை கருத்துகளுக்கு பதில் சொல்லும் வேலைகளை எல்லாம் என்னுடைய இந்தப் படைப்பு உக்கிரமாகச் சொல்லும். நடந்த சம்பவங்களை இந்த படைப்பில் நடுநிலையாக துளியும் சொல்ல மாட்டேன். எந்த ஒரு விஷயத்திலும் உண்மை இல்லையேல் பொய் பக்கம்தான் சாய வேண்டும். உண்மை பக்கம்தான் நான் இருக்கப் போகிறேன். சமரசம் என்கிற பெயருக்கு இந்தப் படைப்பில் இடமில்லை! 



தணிக்கைத்துறையை எப்படி எதிர்கொள்வீங்க ?


 
“இதே தணிக்கைத் துறை சட்டம், இதே தணிக்கை சமீபத்துல வந்த ‘மெட்ராஸ் கஃபே’ படத்தையும் விட்டுச்சே. அதே படத்துலதான் பிரபாகரனையும் சித்தரிச்சிருந்தாங்க. எல்லாத்துக்கும்மேல தமிழர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. பெரும் நம்பிக்கை உண்டு!” 


படத்தில் பிரபாகரனின் குடும்பம் பற்றி?


 
“கதையில் அவரது குடும்ப வாழ்க்கையை அழகாக கோக்கப்போகிறோம். மதிவதனியின் காதல். அந்த அற்புதமான குடும்பத்தை, அந்த வாழ்க்கையை தோளோடு தோள் நின்று பகிர்ந்துகொண்ட பெண் அவர். அந்த நிகழ்வில் இந்த உலகம் இன்னும் முழுமையாக அறிந்திராத விஷயங்கள் நிறைய இருக்கு. அதை கண்டிப்பாக, படைப்பில் இணைப்போம். 



பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு என்று நீங்கள் சொல்லும் இந்த திரைப் படைப்பு எங்கு தொடங்கி, எதில் முடியும்?


 
“பிரபாகரன் பார்வதி அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போது தொடங்குறேன். கடைசியாக முள்ளிவாய்க்கால் பகுதியில் தன் மக்களோட மக்களாக நின்று எப்படி எதிர்கொண்டார். அறத்தோடு நின்று சண்டை போட்ட அந்த வியூகத்தின் முடிவாக, அவர் எடுத்த முடிவு என்ன என்பது வரைக்கும் இந்த படைப்பு சொல்லும்!” 



பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார்?

 
“பிரபாகரன் மீது உணர்வும், தனி கம்பீரமும் கொண்ட ஒரு தமிழனைத்தான் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் திட்டம். அதற்கான தேர்வு வேலைகளில்தான் இப்போது இருக்கிறோம்.” 



தலைமுறை நாவலை மகிழ்ச்சி என்ற பெயரில் படமாக எடுத்தபோது, அந்த படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த படைப்பில் அதை தவிர்க்க, எந்த வகையில் முயன்றுள்ளீர்கள்?


 
“ஒவ்வொரு படைப்பை கையாளும்போதும் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். விமர்சனத்தை எதிர்கொள்ளும் படைப்புதான் நல்ல படைப்பாக இருக்கும்னு நினைக்கிறேன். அதுதான் ஒரு படைப்பாளியோடவேலை. இந்த படைப்பை எடுக்கும்போது முந்தையை விமர்சனங்களை எல்லாம் வைத்து கவனமாக செய்ய முயற்சிப்பேன். நிச்சயம் சரியான படைப்பா இது அமையும்.” 


பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

 
அவர் இருக்கிறாரா? இல்லையா என்பதை இந்த படைப்பு உண்மையான இடத்தில் நின்று சொல்லும். அதை உக்கிரமாகவே சொல்லும். இப்படி இன்னும் இந்த உலகம் எதிர்பார்க்கிற எத்தனையோ, மர்மமான கேள்விகளுக்கு இந்தபடம் விளக்கமும் தரும், சாட்சியாகவும் இருக்கும். 


thanx - the tamil hindu


காவல் கோட்டம் - சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர் சு. வெங்கடேசன்

எழுத்தாளர் சு.வெங்கடேசன்சு. வெங்கடேசன். சாகித்ய அகாதெமி விருது பெற்ற நாவலாசிரியர், த.மு.எ.க.ச.வின் பொதுச் செயலாளர், கவிஞர், செயற்பாட்டாளர், பேச்சாளர். அவரது முதல் நாவலான காவல் கோட்டம் சாகித்ய அகாதெமியின் முயற்சியில் ஆங்கில வடிவம் பெறுகிறது. பிற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. காவல் கோட்டம் பிரதியின் அடிப்படையில் ஒரு நூலை எழுதும் முயற்சியில் இருக்கும் வெங்கடேசனுடன் ஒரு நேர்காணல். 


காவல் கோட்டம் எழுதும் முன்பும் பின்பும் ஏன் இவ்வளவு இடைவெளி?

 
காவல் கோட்டம் எழுதும் முன் கவிதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்பு எனச் சுமார் எட்டு நூல்கள் வந்திருந்தன. காவல் கோட்டத்திற்காகச் சுமார் பத்தாண்டுக் காலம் உழைத்திருந்தேன். இவ்வளவு ஆண்டுக் கால உழைப்பை இது கோரும் எனத் தெரிந்திருந்தால் பேனாவைத் திறக்கும் தைரியம்கூட அந்தக் கட்டத்தில் எனக்கு வந்திருக்காது. நாவலின் தேவை என்னை இழுத்துக்கொண்டு போனது. மீண்டு வெளியேறத் தெரியாதவன் முயன்று கடப்பதைப் போலத்தான் அது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட வரலாறு, வாய்மொழி வரலாறு இரண்டுக்குமிடையில் நான் தொடர்ச்சியாகப் பயணிக்க வேண்டியிருந்தது. அந்தப் பயணத்திற்கு அதைவிடக் குறைந்த உழைப்பைச் செலுத்தியிருக்க முடியாது. தற்போது நான் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் மெய்யியல் தொடர்பான நாவலும் கடும் உழைப்பைக் கோரக்கூடியது. தமிழர் தத்துவ மரபு சார்ந்த வரலாறாகவும் மற்றும் கதைவழியாகவும் உரையாடலாகவும் அந்நாவல் விரியும். நாவல் பணி தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்திருக்கின்றனு. எப்போது நிறைவடையும் என்று தெரியவில்லை. தவிர, காவல் கோட்டத்திற்காகச் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் ஒரு அபுனைவை (புனைவற்ற எழுத்து) எழுதிக்கொண்டிருக்கிறேன். 


குற்றவியல் பரம்பரைச் சட்டத்தின் வரலாற்றைப் பேசுவதன் மூலம் சுமார் 600 ஆண்டுக் கால மதுரை வரலாற்றையும் காவல் கோட்டத்தில் பதிவு செய்திருந்தீர்கள். அபுனைவில் சொல்ல என்ன இருக்கிறது?

 
காவல் கோட்டத்தின் கதைக்களம் 1910ஆம் வருடத்தோடு நிறைவடைகிறது. அபுனைவு அதன் பிறகு தொடங்கி 1948வரையிலான காலகட்டத்தின் அடிப்படையில் இருக்கும். குற்றவியல் பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான அம்மக்களின் போராட்டத்தை ஆவணப்படுத்தும். குற்றவியல் பரம்பரைச் சட்டம் குறித்த ஒரு முழுமையான வரலாறாக இந்நூல் இருக்கும். தவிர, காவல் கோட்டத்தில் எல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்களே. இந்த நூலில் ஜார்ஜ் ஜோசப், முத்துராமலிங்கத் தேவர், ராஜாஜி, பி.ராமமூர்த்தி என அந்தக் காலகட்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் ஆற்றிய பங்கு குறித்தும் எழுதுகிறேன். சுமார் ஐம்பது சதவிகிதப் பணி முடிந்திருக்கிறது. இது தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வெளிவரவிருக்கிறது. 



குறிப்பிடத்தக்க மாற்றுக் கலாச்சார இயக்கமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்கள்.

 
த.மு.எ.க.ச.வின் முக்கியப் பண்பாட்டு பங்களிப்பாகக் கலை இரவுகளைச் சொல்வேன். வருடத்திற்குச் சுமார் 100 கலை இரவுகளை நடத்துகிறோம். இந்தக் கலையிரவு மேடையின் மூலம் சுமார் பத்து லட்சம் மக்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தவிர மாவட்டத் தலைநகரங்களில் மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவண, குறும்படங்களை எங்களது திரை இயக்கம் மூலம் திரையிடுகிறோம். அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீபத்தில் தூத்துக்குடியில் த.மு.எ.க.ச சார்பில் நடந்த தமிழகப் பண்பாட்டுச் சூழல் குறித்த மாநாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, தாய்மொழிக் கல்வி, சாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமை களும், ஊடகங்களின் அரசியல் உள்ளிட்ட ஏழு தலைப்புகளில் விரிவாக விவாதங்களை நெறிப்படுத்தினோம். குறிப்பாகச் சொன்னால் பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பேசும்போது அதன் புறக்காரணிகள் பற்றி மட்டும் பேசாமல் அகநிலை கட்டமைப்பில் ஊடகங்களுக்கு, திரைப்படங்களுக்கு, பண்பாட்டு அமைப்புகளுக்கு, இலக்கியங்களுக்கு உள்ள பங்கு குறித்து அதில் விவாதிக்கப்பட்டது. அகமண முறைக்கு எதிராக ஒரு வலிமையான கருத்துப் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அகமண முறை என்பது விஞ்ஞானப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கிறது. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் குழந்தைகளைச் சாதியற்றவர்களாக அடையாளப்படுத்தி அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஒதுக்கீடு தர வேண்டும் எனவும் த.மு.எ.க.ச ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கவிருக்கிறது. அதுதான் சாதியற்ற சமூக உருவாக்கத்திற்கான துவக்கப் புள்ளியாக இருக்கும். தவிரக் குடும்பத்தை ஜனநாயகப்படுத்துதல் பற்றியும் விவாதங்களை எழுப்ப வேண்டும் என்று மாநாட்டில் கருத்து முன்வைக்கப்பட்டது. இந்த உடைப்பைக்கூட நிகழ்த்தாமல் வேறு எந்த உடைப்பை நிகழ்த்தப்போகிறோம் என்று தெரியவில்லை. 


முற்போக்கு பேசும் பண்பாட்டு, அரசியல் இயக்கங்களுக்குத் தமிழகத்தில் பாரம்பரியமான வரலாறு இருந்தபோதிலும் இன்றைய தமிழகத்தில் அவற்றின் தாக்கம் பெரிதாக இருப்பதுபோலத் தெரியவில்லை.

 
உண்மைதான். திருமணத்திற்கு எதிராகப் பேசினார் பெரியார். ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலையில்லை என்றார். ஆனால் இன்று நாம் அகமண முறைக்கு எதிராகப் பேசத் துவங்கும் சூழலில்தான் இருக்கிறோம். உலகமயமாதல், அடிப்படைவாத சக்திகள், ஆணாதிக்கம் போன்றவை பெருகும் இன்றைய பின்புலத்தில் முற்போக்கு பேசும் குரல்கள் பலவீனமடைந்திருப்பதாகவே தோன்றுகிறது. 



பெரியார் போன்றவர்களின் தீவிரமான உழைப்பையும் மீறி ஏன் இப்படி நடந்தது?

 
நவீன தமிழகத்தைப் பொறுத்தவரையில் நமது சமூக முற்போக்குப் பாரம்பரியத்திற்கு 200 ஆண்டு கால வரலாறு இருக்கிறது. வைகுண்ட சாமிகள் தொடங்கி, வள்ளலார், அயோதிதாசர், பெரியார், சிங்காரவேலர் என்று நமது தலைவர்கள் ஒருவர் கொடுத்து ஒருவர் வாங்கி இங்குப் பகுத்தறிவை வளர்த்தார்கள். ஒருவர் தோற்ற இடத்தில் தொடங்கி மற்றொருவர் ஜெயித்தார். கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்றார் வள்ளலார். கடைவிரித்துத் தமிழகத்தையே கொள்ள வைத்தவர் பெரியார். பெரியார், சிங்காரவேலர், ஜீவா இணைந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிவிட்டுப் பின்னர் பிரிந்தார்கள். அப்போதே சரிவு தொடங்கிவிட்டது என்று சொல்ல வேண்டும். பெரியாரின் அடிப்படை அரசியலிலிருந்து திராவிடக் கட்சிகள் விலகியது முக்கியமான காரணம். முற்போக்கு சக்திகள் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான விஷயங்களை வலிமையோடு முன்னெடுக்கவில்லை. 


மார்க்ஸியப் பின்புலத்திலித்திலிருந்து வரும் இலக்கியவாதிகள் குறித்து இங்குப் பொதுவாகச் சில விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு. 


 
மார்க்சியத் தத்துவம் தரும் ஞானத்தையும் தமிழக வரலாற்றில் இருக்கும் முற்போக்குப் பாரம்பரியத்தையும் பின்னணியாகக் கொண்டுவருவதே ஒரு எழுத்தாளனுக்கு பெரிய பலம். தமிழ், பல்லாயிரம் வருடங்களாகவே ஜனநாயகத்தன்மையும், சமயச்சார்பற்ற தன்மையும் கொண்ட ஒரு மொழி. சங்கப் பாடல்கள் போல ஒரு சமயச்சார்பற்ற இலக்கியப் பிரதியை வேறு எங்கும் காண முடியாது. சரஸ்வதியைக் கல்வியின் கடவுளாகக் கொண்டாடும் சமஸ்கிருதத்தின் ஆதி பாரம்பரியத்தில் ஒரு பெண் எழுத்தாளர்கூட இல்லை. கிறிஸ்துவிற்கு முன்னர் கிரேக்க மொழியில் வெறும் ஆறு பெண் எழுத்தாளர்களே இருந்தார்கள். தமிழில் அந்தக் காலகட்டத்தில் 43 பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள். குண்டலகேசி, மணிமேகலை போன்ற முற்போக்குப் பெண் கதாபாத்திரங்களைத் தமிழ் மொழியில்தான் பார்க்க முடியும். அந்தக் பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை இடதுசாரிப் பின்புலத்திலிருந்து வரும் இலக்கியவாதிகளுக்கு இருக்கிறது. 

 thanx - the hindu
a
a
எழுத்தாளர் சு.வெங்கடேசன்

ஜில்லா - காமெடி கும்மி

1. ஜில்லா ஃபர்ஸ்ட் லுக் ல இளைய தளபதி தமிழ் நாட்டின் சி எம் மாதிரியே இருக்காரு # கொளுத்திப்போடேய் ;-)


==================


2 ஜில்லா ஸ்டில்லில் விஜய் போட்டிருக்கும் மாலையில் இலைகள் எல்லாம் சிதறிக்கிடக்கு . அது இரட்டை இலைக்கான குறியீடா? ஜெ அதிர்ச்சி # சும்மா


===================


3 ஜில்லா ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில் வெளியானதைத்தொடர்ந்துவிஜய் வீட்டில் இன்கம் டாக்ஸ் ரெய்டு வரலாம் # அவதானிப்பு


==================


4 தன்னை விட சீனியர் கூட போஸ் குடுக்கறதுல அழகா இருப்பதைவிட தன்னை விட ஜூனியர் கூட போஸ் குடுக்கும்போது அழகா இருப்பதே அழகு


===================


5 ரூபாய் நோட்டு மாலையையாரும் அணியக்கூடாது - ரிசர்வ் பேங்க் மேனேஜர் அறிவிப்பு , ஜெ மகிழ்ச்சி, விஜய் கொதிப்பு # சும்மா



=================


6 மோகன்லால் - நான் உங்க அப்பா கேரக்டர்ல நடிப்பதால் உங்கப்பாவை சந்திக்கனும் .



விஜய் - வேணாங்க, அப்புறம் அவரே அந்த கேரக்டர் பண்றேன்பார்


===================


7 ஜில்லா என்பதற்கு நெல்லை ஏரியாவில் தெனாவெட்டானவன்னு அர்த்தம் -டைரக்டர் # அப்போ டைட்டிலை தெனாவெட்டன் அப்டினே வெச்சிருக்கலாமே?



===================


8 விஜய்க்கு ஜோடி காஜல் அகர்வால்னாங்க , மோகன் லால் பக்கத்துல நிக்கறாரு , கி கி கி


===================


9 மோகன் லால் கூட போஸ் குடுக்க ஒரு தகுதி வேணும், அது விஜய்க்கு இருக்கு - விஜய் ரசிகர் # ஷகீலா கூட மோகன்லால் கூட போஸ் குடுத்துச்சுங்க்ணா



==================


10 விஜய் கூட ஜோடியா நடிக்கும் காஜல் கலர் , ஆனா விஜய் போட்டிருக்கும் சட்டை தான் செம கலரு


===================


11 ஜில்லா இயக்குநரின் முதல் படம் “ ”முருகா” - செய்தி # அரோகரா அரோகரா


===================


12 நோட்டு மாலை அணிந்து ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில் வெளியிட்ட முதல் ஹீரோ இளைய தளபதி தான்


===================


13 புரட்சித்தலைவிக்கு அடக்க ஒடுக்கமா இல்லாம நிமிர்ந்து நின்னாலே பிடிக்காது , இதுல இவரு தெனாவெட்டா , ரோஜா மாலை , பண மாலை போட்டு கலக்கறாரு


===================


14 ஜெயா டிவி வெப்சைட்  ஹேக்  செய்யப்பட்டது - செய்தி # ஜில்லா முழுக்க நல்லா தெரியும் வெளியே சொல்லாதே ! ;-)




===================




15 உங்க படம் முன் பாதி நல்லாருக்கு ,பின் பாதி சுமார் னு எந்த ஹீரோயின் கிட்டேயும் சொல்லிட முடியாது


=====================



16 28 வயசான ராதிகா ஆப் தே வின் டீன் ஏஜ் பெயர் ரா தி கா குவாட்டர் தே வா இருக்குமோ?



======================


17 காதல் டூயட் னா பப்ளிக் பார்க்கில் .கள்ளக்காதல் டூயட் னா யாரும் பார்க் காத தூரத்தில்



====================


18 சம்சாரத்துக்குபயந்தவன் தினம் தினம் பம்முவான்.சம்சாரமே கட்டாதவன் பொண்ணு கிடைக்காமயே வாழ்க்கை வீணாப்போயிடுமோனு விம்முவான்்


===================


19  அல்லா -முஸ்லீம்களுக்கே மட்டுமே உரிமை என்பது மாதிரி ஜில்லா - விஜய் ரசிகர்களுக்கு மட்டுமே உரிய வார்த்தைனு யாரும் இன்னும் கிளம்பலை?


=========================


20 ஜில்லா என்பது தூய தமிழ் வார்த்தை இல்லை , வரி விலக்கு கிடைக்கலைன்னா 18 லட்சம் ரூபா அனாமத்தா போகுமே? சில்லா அப்டினு சமாளிப்பாங்களோ? 



=============================

Tuesday, November 05, 2013

டிவிட்டருக்கு வர விரும்பும் பெண்கள் கவனத்தில் கொள்ளக்கொடிய சில விஷயங்கள்

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் தமிழ் மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசவும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன. தமிழ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள் பலரும் கூட தமிழில் பெரிதாக ஆர்வம் காட்டாத இவ்வேளையில் வலைப்பூ,முகநூல் டிவிட்டர் பயனீட்டாளர்கள் தமிழில் ஆர்வத்துடன் எழுதி வருகிறார்கள். 


உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழில் எழுதவும் வாசிக்கவும் உரையாடவும் இந்த சமூக ஊடங்கங்களை பயன்படுத்துகிறார்கள்.இந்த சமூக ஊடகங்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தமிழை ஒருபுறம் வளர்த்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது.தமிழ் என்ற ஒற்றை சொல்லில் நாடு தாண்டி மக்கள் இணைந்து நிற்க முடிகிறது இங்கு.இளைஞர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் டாக்டர்கள் நடிகர் நடிகைகள் எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் என அனைவரும் தங்கள் கருத்துக்களை துடிப்புடன் 


சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.



சமூக ஊடகம்:





முகநூல் ,வலைப்பூ போன்றதொரு சமூக ஊடகம் தான் டிவிட்டர். சொல்ல வேண்டிய கருத்தினை 140 எழுத்துக்களுக்குள் மட்டுமே சுருக்கமாக பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சுவாரஸ்யமான சமூக ஊடகம் தான் இது.வலைப்பூ மற்றும் முகநூல் போல பக்கம் பக்கமாக எழுத வேண்டிய, வாசிக்க வேண்டிய அவசியம் இதில் இருப்பதில்லை.குறளைப் போல இரண்டடியில் நாம் கூற விரும்பும் கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து கொள்ள முடியும்.டிவிட்டரில் கருத்துக்களை எழுத பெரிய இலக்கிய அறிவோ அரசியல் அறிவோ எழுத்து நடையோ வேண்டியதில்லை.பிடித்த எந்த ஒரு விஷயத்தையும் சுருங்க பகிர்ந்து கொள்ள முடியும்.



குறுகிய மனப்பான்மை:





டிவிட்டரில் மொத்தம் பத்தாயிரத்திற்கும் மேல் தமிழ் டிவிட்டர்கள் இருக்கிறார்கள்.அதாவது தமிழில் மட்டுமே அதிகம் எழுதுபவர்கள். தமிழ் டிவிட்டர் உலகில் ஆயிரம் ஆண்களுக்கு ஒரு பெண் தொடர்ந்து எழுதுவதே குதிரைக்கொம்பாக உள்ளது.பெரும்பாலான தமிழ் பெண்களும் ஆங்கிலத்தில் எழுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலும் இணையம் வரும் பெண்கள் சற்று வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள் எனபதும் ஒரு காரணம் இவர்கள் ஆங்கிலத்தில் எழுத. மேலும் பெரும்பாலான தமிழ் டிவிட்டர்கள் மத்தியில் காணப்படும் குறுகிய மனப்பான்மையும் பெண்கள் தமிழ் டிவிட்டருக்கு வருவதை தடுக்கின்றது. பெண் இதைத்தான் செய்யவேண்டும் என்ற குறுகிய மனப்பான்மை சமூகத்தில் உலவுவது போல் இங்கும் இருக்கிறது..குறிப்பிட்ட சிலர் செய்யும் விஷயங்களால் ஒட்டு மொத்த சமூக ஊடகங்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது.




ட்விட்டர் உதவி:





முகநூல் கணக்கை வைத்துக்கொள்வதையோ டிவிட்டர் கணக்கை வைத்துக்கொள்வதையோ பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டிலோ, உறவினர்கள் மத்தியிலோ வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடிவதில்லை காரணம் இங்கு பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் தான்.ட்விட்டர் என்றில்லை எல்லா விதமான சமூக ஊடகங்களிலும் இதே நிலை தான் காரணம் பாதுகாப்பின்மை மற்றும் பல்வேறு எதிர்ப்புகள். இவற்றையும் மீறி பல பெண்கள் கவிதை,தத்துவம் ,அழகு குறிப்புகள்,சமையல் குறிப்புகள்,குழந்தை வளர்ப்பு,சினிமா, அரசியல்,புகைப்படங்கள் என பகிர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான ஒரு பொழுது போக்கு ஊடகம் டிவிட்டர். தொலைக்காட்சிகளை பார்த்து தெரிந்துக்கொள்வதை விட அன்றாட செய்திகள் இங்கு உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள முடிகிறது.அறிவு சார்ந்த பல விஷயங்களை கற்க டிவிட்டர் மிகவும் உதவுகிறது.



கவனத்தில் கொள்ள வேண்டியவை:






டிவிட்டருக்கு வர விரும்பும் பெண்கள் கவனத்தில் கொள்ளக்கொடிய சில விஷயங்கள் :


*மன தைரியம் மிக மிக முக்கியம். கட்டற்ற சுதந்திரம் இருப்பதன் பேரில் எவ்விதமான தாக்குதல்களையும், எல்லைதாண்டிய சீண்டல்களையும் சந்திக்க நேரிடும். இங்கும் எங்கும்


பாதுகாப்பு பற்றிய சஞ்சலம் இருக்கும் பட்சத்தில் புனைப்பெயரில், சொந்த அடையாளங்களை வெளிப்படுத்தாமலும் எழுதலாம். ஏனெனில் கருத்துப் பரிமாற்றம் மட்டுமே இங்கு பிரதானம்.


*இங்கு நாமும் பலரையும் தொடரலாம் நம்மையும் பிறர் தொடருவார்கள்.அக்கவுண்ட்டை பூட்டிக் கொண்டால் உங்கள் அனுமதியுடன் மட்டுமே உங்களை ஒருவர் தொடரவோ, உங்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யவோ இயலும்.நீங்க தொடர்பவர்களை தேர்வு செய்தல் தான் பல பிரச்சனைகளை குறைக்கும். பெண்கள் பெண்களை அதிகம் தொடர்ந்துக்கொள்ளலாம். பிரபலம் அல்லாத அல்லது தங்களுக்கு நேரிடையாக தெரியாத ஆண்களை தொடரும் முன் ஆலோசித்து தொடருதல் நலம்.


*சொந்த புகைப்படங்களை பகிருதல் அவ்வளவு நல்லதில்லை.ஏனெனில் பிறர் உங்கள் அனுமதி இல்லாமல் அவற்றை உபயோகித்துக்கொள்ளவோ சேமித்து வைத்துக்கொள்ளவோ முடியும். ஆனாலும் தைரியமான பல பெண்கள் சொந்த படங்களை வைக்கிறார்கள் உலகளவிலேயே. எந்த பிரச்சனை வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தன்நம்பிக்கையுடைய பெண்கள் இந்த மாதிரியான விஷயங்களுக்கு பயப்படுவதில்லை.


*எழுதும் தலைப்புகள் தேர்ந்தெடுப்பதிலும் சிறிது கவனம் செலுத்தலாம்.சட்டத்திற்கு எதிரான கருத்துக்களை பகிராமல் தவிர்க்கலாம்.மற்றபடி சக கீச்சர்களுக்கு பயந்துக்கொண்டு எழுதாமல் இருக்கவேண்டிய அவசியம் இல்லை.


*யாரோடும் நட்பாகாமல் இருக்கும் வரை மட்டுமே டிவிட்டரில் உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கிடைக்கும்.இங்கே பிறர் நண்பர்களானால் அதை எழுதாதே இதை எழுதாதே என அறிவுரைகள் சரமாரியாக குவியும்.


*தொடர்ந்து ஒருவர் உங்களுக்கு மென்ஷனில் தொல்லை கொடுத்தால் இருக்கவே இருக்கிறது block & report spam options.பிடிக்கவில்லையெனில் block செய்துவிட்டு எப்போதும் போல் உங்கள் வேலையை பார்க்கலாம்.நீங்கள் block செய்த நபர் உங்களுக்ககு mentionனிட்டாலும் உங்கள் mention tabல் அவை தெரியாது.


*அலைபேசி எண் உள்ளிட்ட அந்தரங்க விசயங்களை யாருடனும் பகிர்ந்துக் கொள்ளாமல் இருப்பது நலம்.


*சமூகத்தில் பிரபலமாக இருக்கும் பெண் எழுத்தாளர்கள் கூட இணைய ஆண்களால் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.இருப்பினும் அவர்கள் தைரியத்துடன் இவற்றை எதிர் கொண்டு கடந்துச் செல்கிறார்கள். 


*எல்லை மீறிய சீண்டல்களுக்கு cyber crime -ஐ நாடலாம்.அரசு இயந்திரங்கள் முழு மூச்சுடன் இந்த சைபர் க்ரைம்களை விசாரிக்க துவங்கினாலொழிய தவறு செய்ய ஆண்கள் யோசிக்கப்போவதில்லை. சட்டம் பெரிதாக தலையிட்டு விட முடியாது என்ற நம்பிக்கையிலேயே பல ஆண்கள் பல்வேறு விதமாக பெண்களுக்கு தொல்லைகளைக் கொடுத்து வருகிறார்கள்.எனவே அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க துவங்க வேண்டும்.


*வீடு முதற்கொண்டு எங்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாதுகாப்பு என்ற பெயரிலோ, சமூக நிற்பந்தத்திற்காகவோ தங்களை ஒரு வட்டத்திற்குள் முடக்கிக் கொள்வது எந்த முன்னேற்றத்தையும் அளிக்காது. பொது இடங்கள் மற்றும் பேருந்துகளில் பெண்களை சீண்டும் வக்கிர எண்ணங்கள் கொண்ட அதே சிலரை இங்கும் எதிர்க்கொள்ள வேண்டிய நிலை இருக்கவே செய்கிறது.எல்லாவற்றிற்கும் பயந்துக் கொண்டிருந்தால் எங்கும் எதையும் செய்ய முடியாத நிலை ஏற்படும்.ஆகவே பிடித்தவற்றை தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் செய்வதே முன்னேற்றத்திற்கு சிறந்த வழி.இந்த சமூகம் ஆண் பெண் இருபாலருக்கும் சமம் என்பதை பெண்கள் கிட்டத்தட்ட மறந்தே பல காலமாகிவிட்டது.மாற்றங்களை நமக்குள்ளிருந்து துவங்காமல் வெளியில் எந்த மாற்றங்களையும் எதிர்பார்ப்பது வீண்.


thanx - dinamalar



சோனியா அருண்குமார்

முன்னோட்டம் 2014: ஐந்து மாநிலத் தேர்தல் அலசல்-ஞாநி

கோப்புப் படம்திரைப்படங்களுக்கு முன்னோட்டம்போல, அடுத்த மே மாதம் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னோட்டமாக நடக்கவிருக்கின்றன ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்கள். 11 கோடி வாக்காளர்களில் 60 முதல் 70 சதவீதம் பேர் வரை 1.3 லட்சம் வாக்குச்சாவடிகளுக்குப் போய் 630 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். 


இதே மாநிலங்களிலிருந்து அடுத்து தேர்ந்தெடுக்கப்படும் 48 மக்களவை உறுப்பினர்கள் எந்தக் கட்சிகளுக்குக் கிடைப்பார்கள் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்திவிடும். தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் மூன்றிலும் காங்கிரஸும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் இரண்டிலும் பாரதிய ஜனதா கட்சியும் ஆளுங்கட்சிகள். தேர்தலுக்குப் பின் இந்த நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 


பாட்டியம்மா கோட்டை - டெல்லி

 
ஷீலா தீட்சித் 1998-லிருந்து முதல்வராக இருக்கும் மாநிலம். முதல்வராக மீண்டும் வர விரும்புகிறாரோ இல்லையோ, இப்போது 78 வயதாகும் ஷீலாவுக்கு மக்களிடையே செல்வாக்கு இன்னும் கணிசமாகவே இருக்கிறது. அன்பான பாட்டியம்மா இமேஜ் அதிகம் அடிவாங்கவில்லை. 


ஷீலா முதலில் முதல்வராகப் பதவியேற்றபோது டெல்லியில் மெட்ரோ கிடையாது. மிகச் சில மேம்பாலங்களே இருந்தன. இப்போது அவையெல்லாம் பெருகியதைப் போல, ஊழல் குற்றச்சாட்டுகளும் பெருகியிருக்கின்றன. டெல்லியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற கூக்குரல், பேருந்தில் மாணவி பாலியல் வன்முறைக்குள்ளான சம்பவத்தையொட்டி பலமாக எழுந்தது. ஆனாலும் இவையெல்லாம் ஷீலாவின் செல்வாக்கைப் பெரிதாக பாதிக்கவில்லை. காமன்வெல்த் விளையாட்டு ஊழல்கள் கல்மாடியை பாதித்தது. 


“சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைக்கு டெல்லி மாநில அரசு பொறுப்பல்ல. காரணம், டெல்லி காவல் துறை மாநில அரசின் வசம் இல்லை; தலைநகர் என்பதால் மத்திய அரசின் வசம் இருக்கிறது” என்று சொல்லித் தப்பிக்கிறார் ஷீலா. 


இதெல்லாம் ஷீலாவுக்குச் சாதகமான அம்சங்களானதால், அண்ணா ஹசாரேவோ அரவிந்த் கெஜ்ரிவாலோ செய்த போராட்டங்களெல்லாம் மத்திய அரசுக்கு எதிரானதாகக் கருதப்பட்டனவே ஒழிய, ஷீலாவை அதிகம் பாதிக்கவில்லை. இன்னமும் கருத்துக் கணிப்புகளின்படி மக்கள் விரும்பும் முதலமைச்சர் யார் என்ற பட்டியலில் ஷீலாவுக்கு 42 சதவீத ஆதரவு இருக்கிறது. ஷீலாவுக்கு இருக்கும் இன்னொரு சாதகமான அம்சம், எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்குள் இருக்கும் கோஷ்டித் தகராறுகள். யாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற இழுபறி இப்போதைக்குத் தீர்க்கப்பட்டு, 40 வருட கால ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவிக்கப்பட்டுவிட்டபோதும் கோயல் கோஷ்டிக் குமுறல்கள் உள்ளுக்குள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. 



ஷீலாவின் இமேஜுக்கு ஈடுகொடுக்க ஹர்ஷ் வரதனால்தான் முடியும் என்று பா.ஜ.க. தலைமையும் ஆர்.எஸ்.எஸ்ஸும் கருதுகின்றன. ஆனால், ஹர்ஷ் வரதனைவிட பலமான இமேஜ் உள்ள இன்னொருவர் களத்தில் இருப்பதுதான் இப்போது பா.ஜ.க-வுக்குச் சிக்கல். அவர்தான் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கி, இப்போது ஆம் ஆத்மி கட்சியை நிறுவியிருக்கும் முன்னாள் அரசு அதிகாரி அரவிந்த் கெஜ்ரிவால். 



அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அவர் கட்சிக்கும் இதுவே முதல் தேர்தல். கெஜ்ரிவாலின் கட்சிக்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என்றும் புதிய இளம் வாக்காளர்கள் ஆதரவு அவருக்கே செல்லும் என்றும் கருதப்படுகிறது. அப்படி நடந்தால், கெஜ்ரிவாலுக்குச் செல்லும் வாக்குகள் எல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பு வாக்குகள் சிதறவே பயன்படும் என்பதால், காங்கிரஸ் ஜெயிப்பது எளிதாகிவிடலாம். எனவே, டெல்லியில் பா.ஜ.க-வுக்கு உள்ள சவால், கெஜ்ரிவாலுக்குச் செல்லக் கூடிய ஓட்டுகளை பா.ஜ.க-வுக்குத் திருப்புவது எப்படி என்பதுதான். 


நரேந்திர மோடியால் அங்கே அதைச் செய்ய முடியுமா என்பதே பா.ஜ.க-வின் முன் உள்ள கேள்வி. மொத்த 70 இடங்களில் கெஜ்ரிவாலின் கட்சி 9 முதல் 18 இடங்கள் வரை வெல்லக் கூடும் என்ற அச்சம் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இருக்கிறது. ஆனால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினர் கெஜ்ரிவாலை ஒரு சக்தியாகக் கருதவில்லை. தாங்களே ஏற்கெனவே சுமார் 14 சதவீத வாக்குகளை டெல்லியில் வைத்திருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். 



சுமார் 20 சீட்டுகளில் மற்ற கட்சிகளின் வெற்றிவாய்ப்பைச் சிதைக்கும் வலிமை அவர்களுக்கு இருக்கிறது. சென்ற முறை இரண்டு இடங்களை வென்றிருக்கிறார்கள். எனவே, காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் சூழலில், காங்கிரஸ் மறுபடியும் ஆட்சியைப் பிடித்துவிட முடியும். அப்படி இல்லாமல் ஒரு தொங்கு சட்டமன்றம்கூட அமையலாம். இரண்டாவதைச் சாதித்தால்கூட பா.ஜ.க-வுக்கு லாபம்தான். 

 கோப்புப் படம்

அடிவாங்கும் இளவரசர் - மத்தியப் பிரதேசம்

 
எட்டாண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் சிவராஜ் சிங் சௌஹானை மட்டும் பா.ஜ.க. தன் பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், பிகாரின் நிதிஷ் குமார் உள்ளிட்ட பல கூட்டணிக் கட்சிகளை இழக்கும் நிலை அதற்கு வந்திராது. நரேந்திர மோடிக்குக் கிடைக்கும் கவனம், விளம்பரம் எல்லாம் சௌஹானுக்குக் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அவர் வாஜ்பாயிபோல பா.ஜ.க-வுக்கு சாந்தமான ஒரு முகமூடியை நிச்சயம் வழங்கியிருக்கக் கூடியவர். 


ஆர்.எஸ்.எஸ்ஸுக்குப் பிடித்தமான இந்துத்துவச் சட்டங்களான மதமாற்றத் தடைச் சட்டம், பசுவதைத் தடைச் சட்டம் இரண்டையும் கடுமையாகத் தன் மாநிலத்தில் வைத்திருக்கும் சௌஹான், அதே சமயம் மாநில முஸ்லிம்களின் நண்பன் பிம்பத்தையும் உருவாக்கியிருக்கிறார். மோடியைப் போலத் தலையில் முஸ்லிம் குல்லாய் போட மறுப்பவர் அல்ல. அதை அணிந்துகொண்டு இஃப்தார் விருந்துகளில் கலந்துகொள்பவர். 



அரசு சார்பில் நடத்தப்படும் இலவசக் கூட்டுத் திருமணங்களை இந்துக்களுக்கு மட்டுமல்லாமல், முஸ்லிம்களுக்கும் ஏற்பாடு செய்பவர். உண்மையில் சௌஹான் பா.ஜ.க-வை நம்பி இருப்பவர் என்பதைவிட, அவரை நம்பி பா.ஜ.க. அங்கே இருக்கிறது என்பதே நிஜம். கட்சி, மத, ஜாதி வேறுபாடுகளுக்கு அப்பால் சௌஹானுக்கு செல்வாக்கான ஒரு பிம்பம் மக்களிடையே இருக்கிறது. வேளாண் துறையில் அதிக கோதுமை விளைவித்த சாதனை அவர் மாநிலத்துக்குரியது. 


எப்படி ஊழல் பிரச்சினைகள் ஷீலா தீட்சித்தை நேரடியாக பாதிக்கவில்லையோ அதே போல சௌஹானின் ஆட்சி பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகளும் அவரது தனிப்பட்ட செல்வாக்கை பாதிக்கவில்லை. காங்கிரஸ் இங்கே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு குறைவுதான். முக்கியக் காரணம் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிப் பூசல்கள். திக்விஜய் சிங் ஒரு பக்கம், உள்ளூர்த் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பக்கம், முதல்வர் வேட்பாளராகக் கருதப்படும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இன்னொரு பக்கம். இத்தனைக்கும் சிந்தியாவுக்கு இளம் தலைவர், திறமையானவர், அரச குடும்ப வாரிசு என்கிற இமேஜ் எல்லாம் இருந்தாலும், கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு முதல் எல்லாவற்றிலும் (தமிழ்நாடு காங்கிரஸ் மாதிரி) கோஷ்டி அடிப்படை மட்டுமே இருப்பது இங்கே காங்கிரஸின் மிகப் பெரிய பலவீனம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இங்கேயும் ஒன்பது சதவீத வாக்கு பலத்துடன் இருக்கிறது. 


சென்ற தேர்தலில் ஏழு இடங்களை வென்றது. பல தொகுதிகளில் அது யார் ஓட்டைப் பிரிக்கிறது என்பது மாறுபடக் கூடும். எப்படியும் சிவராஜ் சிங் சௌஹானும் பா.ஜ.க-வும் மீண்டும் இங்கே ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பே அதிகம். மத்தியப் பிரதேசம். 


ராஜஸ்தான் - கையை ஒடுக்கும் ராணி 

 
இங்கே சட்டமன்றத்தை யார் பிடிக்கிறார்களோ அவர்களுக்கே மக்களவைத் தொகுதிகள் எல்லாம் அடுத்துக் கிடைத்துவிடும் என்று சொல்லலாம். சட்டப்பேரவையில் மொத்தம் 200 இடங்கள். மக்களவையில் 25. கடந்த 2008-ல் காங்கிரஸ் இந்தச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த அடுத்த ஆறு மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் 25-ல் 21 மக்களவைத் தொகுதிகளை வென்றது. தவிர, இந்த மாநிலம் தமிழ்நாடு மாதிரி. ஒவ்வொரு ஐந்தாண்டுகளிலும் ஆட்சியை மாற்றிக்கொண்டே இருக்கும். 


இங்கே தி.மு.க., அதி.மு.க. மாறி மாறி ஆட்சிக்கு வருவதுபோல, ராஜஸ்தானில் காங்கிரஸும் பா.ஜ.க-வும் வந்துகொண்டிருக்கின்றன. அப்படிப் பார்த்தால், இது பா.ஜ.க-வுக்கான வாய்ப்பு. முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸுக்குள் வேறு எவரும் எதிர்க்க முடியாத நிலையில் தன்னை வைத்துக்கொண்டிருந்தாலும், அண்மைக் கால நிகழ்வுகள் அவருக்குச் சிக்கலாக உள்ளன. 



விலைவாசி உயர்வு, ஓய்வூதிய வெட்டு போன்றவை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியவை. முந்தைய பா.ஜ.க. ஆட்சியைவிட இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரித்திருப்பது, தொடர்ந்து காங்கிரஸையே ஆதரித்துவரும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. பா.ஜ.க. சார்பில் களத்தில் இருப்பவர் முன்னாள் முதல்வரும் அரச குடும்ப செல்வாக்குள்ளவருமான வசுந்தரராஜ சிந்தியா. இவரும் சௌஹான் மாதிரிதான். இவருடைய தனிப்பட்ட செல்வாக்கை நம்பி பா.ஜ.க. இருக்கிறதே தவிர, பா.ஜ.க-வை நம்பி இவர் இருப்பதாகச் சொல்ல முடியாது. தவிர, சௌஹான்போலவே முற்றிலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வேண்டப்பட்டவராகவும் வசுந்தரா கருதப்படுவதில்லை. 



அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் வசுந்தராவுக்குச் செல்வாக்கு இருக்கிறது. ஒரு முக்கியக் காரணம், அவர்தான் வாரத்தில் ஐந்து நாள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜ.க. இரு கட்சிகளும் மிகவும் இழுபறிப் போட்டியில் இருப்பவை. வாக்கு வித்தியாசம்கூடக் குறைவுதான். ( 36.8%; 34.3%). அடுத்த இடத்தில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 7.6% ஓட்டுகள் இருக்கின்றன. இந்த இழுபறி ஆட்டத்தில், டெல்லியில் ஷீலா தீட்சித் தப்பிக்கும் வாய்ப்பு இருப்பதுபோல இங்கே அசோக் கெலாட் தப்பிக்கும் வாய்ப்பு இல்லை. மீறி திரும்ப ஜெயித்தால் அது சாதனைதான். ராஜஸ்தான


.
மிசோரம் - மிளிரும் கை 

 
காங்கிரஸின் லால்தன்ஹாலா இப்போது இங்கே முதலமைச்சர். 10 ஆண்டுகள் கழித்து 2008-ல்தான் காங்கிரஸ் இங்கே ஆட்சிக்கு வந்தது. மிசோரமில் பிரதானப் பிரச்சினை எப்போதுமே நிலம் சம்பந்தப்பட்டதுதான். 


ஏழை மக்களுக்கான நிலம் வழங்கல், நில உபயோகம்பற்றியெல்லாம் சட்டம் போட்டபோதும் நடைமுறையில் அவை செயல்படுத்தப்படும் விதம் மக்களின் முடிவுகளைத் தேர்தலுக்கு தேர்தல் மாற்றக் கூடியவை. மொத்த மக்கள்தொகையில் 85% பேர் கிறிஸ்தவர்கள். வாக்காளர்களில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம். 



ஆனால், கடந்த 41 வருடங்களில் இங்கே இதுவரை மொத்தம் ஆறே ஆறு பெண்கள்தான் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்திருக்கிறார்கள். அதிலும் மூவர் நியமிக்கப்பட்டவர்கள். இன்னொரு பக்கம், மிசோரம் மாநிலம்தான் புரட்சிகரமாக முதன்முதலில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஆரம்பித்த மாநிலம்! 


இங்கே இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். மிசோ மக்கள் மாநாட்டுக் கட்சி, மாராலாந்த் ஜனநாயகக் கட்சி என இதர கட்சிகள் எல்லாம் இங்குள்ள வெவேறு பழங்குடிப் பிரிவினரின் தனிக்கட்சிகள். இரட்டை இலக்க எண்ணிக்கையில்கூட சீட்டுகளை வெல்வது அரிது. மிசோரம் 


சத்தீஸ்கர் - மிதக்கும் தாமரை

 
சத்தீஸ்கர் இப்போது முதல்வராக இருக்கும் பா.ஜ.க-வின் ரமண் சிங் தொடர்ந்து இரு முறை முதல்வரானவர். மூன்றாம் முறையும் வெல்வாரா என்பதே இப்போதைய சவால். ஏனென்றால், இங்கேயும் பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஓட்டு வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான்.
மக்கள் கொஞ்சம் மாற்றி ஓட்டு போட்டாலும் ஆட்சிகள் மாற முடியும். பஸ்தார் பகுதி முற்றிலும் பழங்குடிகள் வாழும் பகுதி. இங்கே 1998-ல் மொத்தம் 12 இடங்களில் 11-ஐ காங்கிரஸ் வென்றது. 2008-ல் அடுத்த தேர்தலில் 12-ல் 11 பா.ஜ.க-வுக்கு! ரமண் சிங் இப்போதைக்கு பா.ஜ.க-வின் ஒரே முக்கியத் தலைவராக இங்கே இருக்கிறார். 



காங்கிரஸில் அப்படி இல்லை. அஜீத் ஜோகி காங்கிரஸை முழுக்க முழுக்கத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும், பழைய சுக்லா விசுவாசிகள் முதல் பல்வேறு கோஷ்டிகள் கட்சியில் உள்ளன. ஆனால், அஜீத் ஜோகி தனக்குக் குறிப்பிட்ட பழங்குடியினரிடம் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில், தன்னை மிஞ்சி யாரும் வரக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர். அவர்தான் இங்கே காங்கிரஸின் பலம், பலவீனம் இரண்டுமே. 


ரமண் சிங்கின் ஆட்சியில் ஏழைகளுக்கான ரேஷன் அரிசித் திட்டம் பெரும் வெற்றிபெற்ற திட்டமாகக் கருதப்படுகிறது. நக்சல் போராட்டங்கள் அவர் ஆட்சிக்குத் தலைவலியானாலும், அண்மையில் பல காங்கிரஸ் தலைவர்களை நக்சல்கள் கொன்ற விவகாரத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலிருந்து அவர் தப்பிவிட்டார். கொலைகளில் உட்கட்சிச் சதிகூட இருக்கலாம் என்ற கருத்து பரவியதும் ரமண் சிங் சிக்கலிலிருந்து தப்பித்துக்கொண்டார். 


இந்தத் தேர்தலில் சாகு ஜாதியினரின் போராட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறும் என்பது பிரதானமான கேள்வியாகும். இடஒதுக்கீட்டில் தங்களுக்கு 14 சதவீதத்தை 27 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் எழுப்பிப் போராடுகின்றனர். மாநிலத்தின் மொத்த 90 சட்டப்பேரவை உறுப்பினர்களில் சாகு ஜாதியினர் மட்டும் 24 பேர் உள்ளனர். இப்போதைய சூழலில் ரமண் சிங்கும் பா.ஜ.க-வும் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பே அதிகம். 
 thanx - the hindu

ஒரு டிஸ்கோ சாந்தி விஜயசாந்தி ஆகிறதே !அடடே!

1, ஜெ வை பாதுகாக்க,ADMK தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர் - அமைச்சர் முனுசாமி # எங்களால நம்பு முடியல.ஒரு முன் உதாரணமா இருந்து டெமோ காட்டுங்க


=================


2 தாது மணல் கொள்ளையைத் தடுக்க கொள்கை முடிவு: ஜெ # எனக்கு நம்பிக்கை இருக்கு.இனி வெளி ஆட்கள்் யாரும் கொள்ளை அடிக்க முடியாது


==================


3 காந்தி வழியை பின்பற்ற வேண்டும்: மன்மோகன் சிங்"# 13 வயசுல பொண்ணு கட்டுனா அது மைனர் க்ரைம்


====================


4 ராகுல் காந்தியை இளவரசர் என்று அழைக்க கூடாது என்றால் பேரரசர் என்றா அழைப்பது?: பா.ஜ.க. கிண்டல் # பேரரசு னு அழைக்கலாம்.பஞ்ச் டயலாக் பேசறாரே?



=====================


5 தில்லி காங்கிரஸ் அரசை "வெங்காயம்' வெளியேற்றும்: சுஷ்மா ஸ்வராஜ் # காங்கிரசின் சனியன் ஆனியன்?



======================


6 எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா?- குத்து ரம்யா # உங்களால் முடியும் மேடம் , முயற்சி பண்ணுங்க



=================


7 சந்திரபாபுநாயுடு மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் பேசுகிறார்:-நடிகை ரோஜா கடும் தாக்கு # செம்பருத்தி பார்த்திருப்பரோ?



====================


8 தங்கபுதையல் தோண்டிய இடத்தில் பத்து கிலோ ஆணிகள் கிடைத்தன-செய்தி # நீங்க தோண்டி எடுத்த எல்லாமே தேவை இல்லாத ஆணிகள் தான்



====================



9 நடிகை கஜோல் வீட்டில் ரூ. 5 லட்சம் தங்க நகை திருட்டு: வேலைக்காரி - வேலைக்காரன் கைது.# க”jewell" போச்சே



====================


10 குட்டை பாவாடை போட்டு டூயட் ஆட முடியாது - குத்து ரம்யா # GOOD DYE பாவாடை வேணாம்னா BAD DYE பாவாடை ஓக்கே வா? மேடம்



==================


11 சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெ நேரில் ஆஜராக நாளை ஒரு நாள் விலக்கு:- கோர்ட்# அவரும் ஆரம்பம் FDFS பார்க்கறாரோ?



====================


12  100 பொண்ணுங்களை கரெக்ட் பண்றது ஈசி.ஆனா ஒரு பெண்ணை மெயின்ட்டெய்ன் பண்றது கஷ்டம் - சிம்பு # ஆமாங்ணா.கை மாறிடுது.



====================


13 கல்வியில் அமெரிக்காவை முந்துகிறது இந்தியா: ஒபாமா அதிர்ச்சி # இதுக்கே ஜெர்க்கா? கலவிலயும் முந்தீட்டா தீட்டா?



====================


14 தேவர் சிலைக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை # தாமரை மலர் தானே?


================


15 அடிக்கடி IAS அதிகாரிகள் மாற்றப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் # ் ஜட்ஜை எல்லாம் ட்ரான்ஸ்பர் பண்ண நம்மகிட்டே பவர் இல்ல?-ஜெ



====================


16 அரசியலில் இருக்கிறேன் என்று காட்டவே கருணாநிதி அறிக்கை விடுகிறார்:EVKS இளங்கோவன்# பாப்கார்ன் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுது



=======================


17  நன்னடத்தை விதிகளை மீறியதாக BJP புகார்: ராகுலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் # எப்படி ஸ்டைலா நடப்பதுன்னு அஜித் படம் பார்த்து கத்துக்குங்க






========================




18 நடிகர் சந்தானம்  வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை # வந்தவங்களை எப்படி கவுண்ட்டர் கொடுத்து வரவேற்றிருப்பாருன்னு நினைச்சேன், சிரிச்சேன்






======================




19 நான் அடுத்த விஜயசாந்தி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை - நமீதா # ஒரு டிஸ்கோ சாந்தி விஜயசாந்தி ஆகிறதே !அடடே!



==================




20  ஜெயாடிவி தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்துல கமலஹாசன்தான் நடுவர் # ஆஹா! அப்போ தொடுவர் திவ்யதர்ஷினியா?



========================