Friday, October 11, 2013

நய்யாண்டி- சினிமா விமர்சனம்

 

ஒரு  ஊர்ல  ஒரு  குடும்பம் , அந்த குடும்பத்துல 3 பசங்க , முறையே   40,38 ,25  வயசுல   3 பசங்க . 3 பேருக்கும்  மேரேஜே ஆகலை .3 வது பையன் தான் நம்ம ஹீரோ . அவர் ஊர்த்திருவிழாவுல  ஒரு பொண்ணைப்பார்த்து தமிழ் சினிமா வழக்கப்படி பார்த்ததும் காதல் ல விழுந்துடறாரு. ஆரம்பத்துல  பிகு பண்ணினாலும் பின் ஓக்கே சொல்லிடுது, அண்ணன்க 2 பேருக்கும்  மேரேஜ் ஆகாம எப்படி தம்பிக்கு மேரேஜ் ஆகும், ? அதனால தாலியை (மட்டும் )கட்டி தன்  வீட்டுக்கே  கூட்டிட்டுப்போய் கணக்குபிள்ளையா சேர்த்து  விட்டுடறாரு  ஹீரோ . 

காஞ்ச மாடுங்க 2 வீட்ல  இருக்கே  அதுங்க 2 ம்  தம்பி மனைவின்னு தெரியாம காதல் , ஜொள்ளுன்னு அலையுதுங்க. அவங்க கிட்டே மாட்டி யும் , மாட்டாமயும்  ஹீரோயின் எப்படி அவஸ்தைப்படறார்? என்பதை காமெடி(ன்னு நினைச்சு)ப்படமாக்கி இருக்காங்க . உஷ் அப்பா  முடியல .


மேலப்பரம்பில் யான்  வீடு என்ற ஜெயராம் - ஷோபனா நடிச்ச மலையாளப்படத்தை  உல்டா பண்ணி ஆல்ரெடி  ஆர் பாண்டிய ராஜன் சத்தமே இல்லாம தாய்க்குலமே தாய்க்குலமே என ஒரு டப்பாப்படம்  கொடுத்தாரு , பின்  கிட்டத்தட்ட இதே சாயலில் தென் காசிப்பட்டணம் வந்தது . இப்போ  இது . டைட்டில் ல யே அண்ணன் சற்குணம் சரண்டர் ஆகிடறார். இது ஒரு ரீ மேக் ஸ்டோரின்னு .. இருந்தாலும்  களவாணி , வாகை சூடவா போன்ற பிரமாதமான படம்  கொடுத்தவர்ட்ட இப்படி ஒரு லோ கிளாஸ் படத்தை எதிர்பார்க்கலை . யூ  டூ சார் ? 



தனுஷ்  தான்  ஹீரோ .  கமலுக்கு இணையான  நடிகர் என்று இணையத்திலே பாராட்டுப்பெறும்  ஹீரோ .  தன் அண்ணன் செல்வராகவன் படங்களில் மட்டும் பட்டாசுக்கிளப்பும்  இவர் ஆடுகளம்  தேசிய விருது  வாங்கிய பின் செலக்டிவ்வாக படங்களை ஒத்துக்கொள்பவர் ஏனோ  இம்முறை சறுக்கி விட்டார் . இவர் நடிப்புக்கு ஸ்கோப் எங்குமே இல்லை, படம்  நெடுக நாயகியைச்சுற்றியே  கதை  நகர்கிறது.

 நஸ்ரியா தான் நாயகி . துறு துறு நடிப்பு , அழகிய முகம்  என மனதைக்கொள்ளை  கொள்ளும்  பர்சனாலிட்டி . இவரிடம் ஒரு வியக்கத்தக்க  குணம்  பானுமதி ,நதியா , ரேவதி , சுஹாசினி வரிசையில்   தன் உடல் அழகு வெளிப்படுவதை விரும்பாத அபூர்வ நடிகை . ஒரு சீனில்  கூட  கண்ணியக்குறைவாக ஆடை  விலகவில்லை, பெரும்பாலான காட்சிகளில் முழுக்க  மூடிய சுடிதார் , சேலை கட்டிய காட்சிகள் 6 லும்  இழுத்துப்போர்த்திய பாங்கு அபாரம் .   ஆனால் நெருக்கமாக நடிக்கிறார் , என்ன கொள்கையோ? 


சிங்கம்புலி , புரோட்டா சூரி , ஸ்ரீ மன் , சத்யன்  என காமெடிப்பட்டாளங்கள் உண்டு .மனதில் பெரிதாக ஒட்டவில்லை 




 

 மேலே உள்ளது கிராஃபிக்ஸ் லோ ஹிப்

இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  அய்யய்யோ  போச்சு என நஸ்ரியாவை அலற விட்டு பப்ளிசிட்டி செய்தது . இது 10 பைசா  செலவில்லாமல் கிட்டத்தட்ட  கோடி ரூபாய் செலவு செய்தால் என்ன விளம்பரம் கிடைக்குமோ அதைப்பெற்றது , வெரி குட்  ஐடியா 


2  இது  குடும்பப்படம் , காமெடிப்படம் என்றெல்லாம் தனுஷ் , நஸ்ரியாவை நம்ப வைத்து   ஒரு லோ கிளாஸ் மலையாள  கில்மாப்படத்தில் நடிக்க வைத்தது 


3  சர்ச்சைக்குள்ளான  “இனிக்க இனிக்க “ ரொமாண்டில் பாட்டு செம  கிக் . இதில் துளி  கூட  சீன் இல்லை , ஆனால் செம கிக் உண்டு . நெருக்கமான காட்சிகள் , உரசல்கள்  ஆஹா! 


4 , ஸ்ரீ மன் - சத்யன்  இருவரின் காம்பினேஷன் காமெடி காட்சிகள் 


5  அந்த  ராப் சாங்க் மாதிரி வரும் “குமரிப்பொண்ணுங்க பார்த்தா” செம  டான்ஸ். ஆர்ட் டைரக்‌ஷனும் , நடன இயக்குநரும்  செம உழைப்பு , சபாஷ் 




இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1.  வீட்டில் ஆல்ரெடி மேரேஜ் ஆகாத அண்ணன்கள் இருக்காங்கன்னு தெரியாதா? கன்னிப்பொண்ணை எந்த தைரியத்துல  கூட்டிட்டு வர்றாரு ? மேரேஜ் ஆன ஆனால் கணவனைப்பிரிந்த பெண் என்றாவது  பொய்  சொல்லி இருக்கலாமே? 


2  வில்லன் ஆட்டோ டிரைவரிடம் வாய்ச்சண்டை போடும்போது  நஸ்ரியா  ஏன் எட்டிப்பார்க்கிறார்? தலையை மறைச்சு  அமர்ந்தவர் அப்படியே  இருப்பதுதானே? 


3  ஸ்ரீ மன், அம்மா , நஸ்ரியா மூவரும்  கோயில் போறாங்க . ஆனா   ரிட்டர்ன் வரும்போது  அம்மாவை ஆட்டோவில் காணோம் . ஸ்ரீமன் , நஸ்ரியா மட்டும் பக்கம் பக்கமா இருப்பாங்க . அடுத்த ஷாட்டில் நடுவில் அம்மா எப்படி வந்தார் ? கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க் ? 


4  என்ன தான் காமெடி என்றாலும்  சிங்கம்புலி வாயில் உள்ள தங்கப்பல்லை சூரி  பிடுங்கி ஓடுவது எல்லாம் உவ்வே ரக காமெடி . இதில் ஒரு பல் டாக்டரிடம் விவாதித்தேன். தங்கப்பல் , வெள்ளிப்பல் கட்டுபவர்கள்  நிலையாக வாயில்  இருப்பது போல் தான் கட்டுவார்களாம். சாதா பல் தான் தினமும் இரவு  கழட்டி  வெளியே எடுத்து வைத்து காலையில்  மீண்டும் எடுத்துப்பொருத்துவது போல்  இருக்குமாம் . அப்படி  இருக்கும்போது தங்கப்பல்லை அவ்வளவு  எளிதாக என்னமோ பாக்கெட்டில்  இருந்து பேனாவை அடிப்பது போல் எடுப்பது எப்படி ? 

மேலே உள்ளது  ஒரிஜினல்

5  புரோட்டா  சூரி பேசும் வசனங்களில்  ஒரு சீனில்  கூட சிரிப்பே வரவில்லை . சிச்சுவேஷன் காமெடி  ஸ்ரீமன் , சத்யன் காமெடியில் தான் . ஆனால் தம்பி மனைவி என தெரியாமல் அண்ணன்கள் ஆசைப்படும் கலாச்சாரத்தை மீறிய சிச்சுவேஷன் என்பதால் அதையும் ரசிக்க முடியவில்லை. இந்தப்படத்தை எப்படி  குடும்பத்தோடு மக்கள் உக்காந்து பார்ப்பாங்கன்னு நினைச்சீங்க ? இது போன்ற  உறவுகளைச்சீரழிக்கும் , கூட்டுக்குடும்பத்தை கேலி செய்யும் படங்களுக்குத்தடை விதிக்க வேண்டும் 


6 நஸ்ரியா  தன் கணவர் தனுஷிடம் அடிக்கடி “ நம்ம 2  பேருக்கும் இடையே  எதுவும் கூடாதுன்னு அன்னைக்கே சொன்னேனே?”ன்னு சொல்லுது . அதுக்கு என்ன காரணம்னு சொல்லவே  இல்லை 


7 ஸ்ரீமன்க்கு  பார்த்த பொண்ணை சில காலம் கழித்து அவர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு ஃபோன் பண்ண பொண்ணோட  போட்டோ பின்னால பார்க்கறார் , ஃபோன்  நெம்பர்  இருக்கு , பண்ணுனா பொண்ணே எடுக்குது . பொண்ணோட நெம்பரை   டைரக்டா எப்பவும்  புரோக்கர்ங்க தர மாட்டாங்க .அதே போல் மேரேஜ் ஆகிடுச்சு என சொல்லும்  அந்தப்பெண் குழந்தையுடன் இருக்கு . இப்போ இருப்பது புருஷன் வீடு . ஃபோட்டோவில்  இருப்பது பழைய  அம்மா வீட்டு ஃபோன்  நெம்பர் .

8  நஸ்ரியா கழுத்தில்  தாலி  இருப்பது ஆண்கள் கண்ணுக்கு வேணா தெரியாம  இருக்கலாம் , ஹீரோவோட அம்மா கண்ணுக்குக்கூடவா  தெரியல 






மனம் கவர்ந்த வசனங்கள்


1. பொண்ணுங்களுக்கு எப்பவும் " வீரம்" தான் பிடிக்கும்



நாங்க எல்லாம் கரண்ட் கம்பிலயே கபடி விளையாடுவோம் # புரோட்டா சூரி மரண மொக்கை பஞ்ச்



3   நாம போய் பொண்ணுங்க முன்னால நிக்கறதை விட நம்மைப்பத்தின நியூஸ் தான் முதல்ல போய் நிக்கனும் # தனுஷ் பஞ்ச்



  ஏன்  ஓல்டு லேடி , எங்க தாத்தா  வீரியம் மேட்டர் உனக்கு எப்படித்தெரியும் ?  அப்பவே  வில்லங்கமா விளையாடி  இருக்கே? 


5  புறா  உனக்கு  , பொண்ணு எனக்கு 


6  நீ என்ன பிளான் பண்னாலும்  என்னை மாட்டி விடாம பிளான் பண்ண மாட்டே  போல 


7  , மணி  இருக்கு , 


அடிக்குமா? 


8   என்ன பண்றே? 


 கணக்கு பண்றேன் 


 அதை என் கிட்டே கேளு 


 உனக்குத்தான் கணக்கு வராதே ? \



9  பொண்ணுக்கு மை வெச்சா கரெக்ட் ஆகிடும்னு மலையாள ஜோசியர் சொன்னார் , ஆனா கர்ப்பம் ஆகிடும்னு சொல்லலையே?




படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1. நய்யாண்டி அப்டேட் - படத்தில் முதல் 40 நிமிடங்கள் இளைய தளபதி விஜய் போலவே தனுஷ் கிளப்பிட்டாராம் .சூப்பர் இல்ல?



2 நய்யாண்டி = வாகை சூட வா ய்ப்பே இல்லை # பாரீன் ட்வீட்டர் அப்டேட் ரிசல்ட் படி


3 தனுஷ் ன் அட்டர் பிளாப் லேட்டஸ்ட் தர வரிசை .3 ,மயக்கம் என்ன ,மரியான் ,நய்யாண்டி




=================


4 நச்ரியா - சார்.இவ்ளவ் மார்க்கெட்டிங் பண்ணியும் படம் ஊத்திக்கிச்சாமே?


 சற்குணம் - டிராமாவை அவசரப்பட்டு முடிச்சிருக்கக்கூடாதோ? 


===================

5 சுள்ளான் க்குப்பின் இதில் தான்யா தனுஷ் ஆக்சன் அவதாரம் எடுத்திருக்காரு.ஓப்பனிங் சீன்ல 6 மீட்டர் விட்டம் உள்ள வட்டக்கிணத்தையே தாண்டிட்டாரு


=================


6 படத்தோட ரிசல்ட்டை தனுஷே சொல்றாரு - அரோகரா


===================


7 சார்.நஸ்ரியா சார்.ஸ்லோமோஷன் ல ஓடி வருது சார்


===================


8 ஏம்மா என்னமோ கற்புக்கரசி மாதிரி பேசுனே? முத கனவுப்பாட்டிலயே இந்தத்தடவு தடவறாரு.கம்முன்னே இருக்கே?


=================



தனுஷ் கமல் மாதிரியே ஆக்டிங்.அடேங்கப்பா.அபூர்வ சகோதரர்கள் அப்பு மாதிரி மாஸ்க் போட்டு நடிப்பு.செம செம


=======================

10  பின்னால நிக்குற பாட்டு கான்செப்ட் விஜய் ன் ஏ பாப்பா நீ கொஞ்சம் நில்லு எதுக்கு உனக்கு இத்தனை லொள்ளு பாட்டின் உல்டா




===============

11 தென்னக புரூஸ்லீ இப்போ ஜெட்லீ ஆகி மரத்துக்கு மரம் தாவறார்.அமேசிங் பர்பார்மென்ஸ்


====================


12 நய்யாண்டிக்கு முதல்ல வெச்ச டைட்டில் சொட்ட வாழக்குட்டி .ஆனா வெச்சிருக்க வேண்டிய டைட்டில் வனரோஜா


================


13 அபாரமான குடும்பக்கதை.தம்பியோட சம்சாரம்னு தெரியாம 2 அண்ணண் க்ளும் அதுக்கு ரூட்டு விடறாங்க # நய்யாண்டி இடைவேளை


===============

14  சார்.டைட்டிலுக்கு விளக்கம் சொல்லுங்க.



அவார்டு பட டைரக்டர் ,ஹீரோ னு நம்பி வந்து ஏமாந்து போகப்போறாங்களே ஆடியன்ஸ்.ஸெம நையாண்டி இல்ல? 


===============

15  நஸ்ரியா ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி.நஸ்ரியா ரொம்ப "சின்ன"ப்பொண்ணு ..இப்போ தான் +2 முடிச்சுதாம் ;-)# க்ளூ


=============

16 உலகப்புகழ் பெற்ற, சர்ச்சைக்கு ஆளான்  இனிக்க இனிக்க பாடல் ஓடுது.இமைக்காம பார்க்கனும்


---------------


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-38


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2  / 5


சி பி கமெண்ட்  -நய்யாண்டி - சி செண்ட்டர் ஆடியன்ஸ்களுக்கான லோ கிளாஸ் (சீன் இல்லாத)கில்மா காமெடிப்படம் - விகடன் மார்க் -38 , ரேட்டிங்க் - 2 / 5

டிஸ்கி -

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்-http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

 

டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம்

 

 ஹீரோ  கிராமத்தில் இருந்து சென்னை போறார். ஹீரோயின் ஃபாரீன்ல இருந்து  சென்னை  வர்றார். 2 பேரும்  ஒரே அபார்ட்மெண்ட்ல  ஒரே வீட்டில் தங்கவேண்டிய சூழல்.  பஞ்சும்  நெருப்பும்  பக்கத்தில் இருந்தா என்ன ஆகும் ? நயன் தாரா  பக்கத்துல யார் போனாலும் என்ன ஆகும் ? பத்திக்குது . ஆனா பாருங்க அந்தப்பொண்ணு ஆல்ரெடி  லண்டன் மாப்ளைக்கு  நிச்சயம் ஆன பொண்ணு . 1999 கதைல நாம பார்க்காத  ட்விஸ்ட்டா ? அந்த மாப்ளையை மீறி எப்படி 2 பேரும் சேர்றாங்க என்பதுதான்  கதை 


ஹீரோவா சிவா. இவருக்கு காமெடி நல்லா வருது , மொக்கை நல்லா போடறார். ஆனா அவர் முகத்துல காதல் உணர்வு  மருந்துக்குக்கூட வர்லை . ரொம்ப சிரமம் . அவர் தன்னை மாத்திக்கனும்  இல்லைன்னா ஆடியன்ஸ்க்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடும் , ஆல்ரெடி  தமிழ்ப்படம் அளவுக்கு  ரசிக்க முடியலைன்னு மவுத் டாக் பரவிட்டு  இருக்கு , டான்ஸ் காட்சிகளில் சமாளிக்கிறார்


ஹீரோயின் ப்ரியா ஆனந்த். இவர்  முகத்தில் ஆயில் எப்போதும் தடவியே இருப்பாரா?என சந்தேகப்பட வைக்கும் சருமம். புன்னகையில் அழகாகத்தெரியும்  இவர்  சோகக்காட்சிகளில்  , கோபக்காட்சிகளில் அந்த அளவு  மிளிர வில்லை , ஆனால் காலேஜ் , டீன்  ஏஜ் பெண்களைக்கவர்வார் . காதல் உனர்வுகள் இவர் முகத்தில்சரளமாகவருகிறது , சபாஷ் 



சந்தானம் இடைவேளைவிடும்போதுதான் எண்ட்ரி ஆகிறார். படத்தில் அவர் அடிக்கும்  டயலாக்ஸ் 24, அதில்  கவுண்ட்டர் டயலாக்ஸ் 7 , உருவகேலி - 5 , டபுள் மீனிங்க் 2 , மொக்கை காமெடி 6 , ஆல்ரெடி வந்த எஸ் விசேகர் காமெடி டிராமாவில்  உருவியது 4 என எப்போதும்  போல்  ஒரு ரேஷியோ  வெச்சு காமெடி டிராக்  அமைப்பார் போல. ஆனா  ஒரு ஆறுதல் என்னான்னா  அவர் இந்தப்படத்தில் அடக்கியே வாசிச்சிருக்கார் , இயக்குநர் சொன்னதை மட்டும் செஞ்சிருக்கார் ( இயக்குநர் யாரு ?  மேலிடம் இல்லை?) 


ஊர்வசி, நாசர் , ரேணுகா , ராகுல் என  நடித்தவர்கள் பட்டியல் இருந்தாலும்  பெரிதாக சொல்லும்படி இல்லை . 



அனிரூத் . ஆண்ட்ரியா அட்டாக்கர் (@ TALKER) ,மவுத் ஆர்கன் அப்பாடக்கர் , ஒல்லி கில்லி ( இசை அமைப்பதில் தான் ) இசை ஆல்ரெடி மரண  ஹிட் . க்ளைமாக்சில் கங்க்ணம் ஸ்டைல் பாட்டுக்கு நடனமும் ஆடுகிறார் .




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1.  உதய நிதி ஸ்டாலின்  மனைவி கிருத்திகா உதயநிதி தான் இயக்குநர் , ஒரு பெண் இயக்குநர் என்ற முறையில் அவருக்கு  ஒரு பூங்கொத்து . குடும்பத்துடன் பார்ப்பது   மாதிரி கண்ணியமான காட்சி அமைப்புகளுடன்  ஒரு சராசரிக்காதல் கதை  ரசிக்கும் படி  தந்ததற்கு


2  சந்தானம்  இருந்தும்  பெண்களை நக்கல் அடிக்கும் காட்சியோ , ஆபாச டபுள்  மீனிங்க் காட்சியோ இல்லாமல்  கண்ட்ரோல் பண்ணியது  குட் 


3  ஓப்பனிங்க்  சீனில்  டாக்சியில்  போகும்  ஹீரோயினை டிரைவர்  கரெக்ட் பண்ண ஆழம் பார்க்க  கமல்-ன் கில்மா பாட்டை  ஓட விட  உடனே  ஹீரோயின்  செல் ஃபோனை எடுத்து அப்பாவிடம் பேசுவது போல்  டிரைவர் பற்றிய  டீட்டெயில் சொல்லி  எச்சரிக்கை செய்வதும்  உடனே டிரைவர்   ரஜினி யின்  சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாட்டை மாற்றுவதும்  கிளாஸ் , இந்த  ஒரு காட்சியில் இயக்குவது ஒரு பெண் என்பதை நிரூபணம் செய்கிறார். அதேபோல்  ராத்திரியில்  தனியாய் பயணம் செய்யும்  பெண் எப்படி  ஜாக்கிரதையாக   இருக்கனும் என்பதற்கான டிப்சும் ஆச்சு 


4  மிலிட்ரி மேன் நாசர்   போலீஸ் ஆஃபீசர்  ஊர்வசியை   தாங்கிப்பிடிக்கும் காட்சியில் அவரது அவதாரம் படப்பாடலான  தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ பாட்டை ஓட விட்டது தியேட்டரில்  செம அப்ளாஸ் . கதையில்  இன்னும்  ரிலாக்ஸ்  தேவைப்படும் பட்சத்தில் இந்த காமெடி  டிராக்கை  இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாம்


5   ஏ பெண்ணே பாடல் காட்சிக்கு  அமோகவரவேற்பு . மரங்களுக்கு  லைட்டிங்க் பண்ணி  இருந்தது  ரசிக்க வெச்சுது . ஆர்ட் டைரக்‌ஷன் அட்டகாசம் , பின்னிட்டாங்க , எல்லாப்பாடல்களுமே நல்லாருக்கு  , 3 பாடல்கள்  செம ஹிட் ஐலேசா, காற்றில்  , ஒசக்க , ஏ பெண்னே , சென்னை என  5 பாட்டு  





இயக்குநரிடம்  சில  கேள்விகள் 


1. மனோபாலாவிடம்  புகார்  கொடுக்கவரும்  சிவா முதல் ஷாட்டில்  திருநீறு ஒரு வரிதான் வெச்சிருக்கார் , அடுத்த ஷாட்டில்  3 வரி இருப்பது போல் பட்டை அடிச்சிருக்கார் . கண்ட்டிநியூட்டி மிஸ்சிங்க்  அது எதுக்கு தேவை இல்லாம ? அந்த ஒரு சீன்  தவிர வேறு எந்தக்காட்சியிலும் அவர் ஒரு பக்தன் எனவோ , ஆன்மீகப்பிரியன் என்பதோ வரவே இல்லை . அபார்ட்மெண்ட்டில் இருவரும் சண்டை போட்டுட்டு  போலீஸ் ஸ்டேஷன் ல புகார்கொடுக்க வ்ர்றவர் எதுக்கு மெனக்கெட்டு திருநீறுப்பட்டை அடிச்சுட்டு வரனும் ? 



2 ஹீரோயின் ஃபோன் நெம்பரை  ஹீரோ கேட்டு வாங்கி தன்  ஃபோன் ல ஸ்டோர் பண்றார் . பின் ஹீரோயின் கால் பண்ணும்போது  ஹீரோவின்  செல் மானிட்டர்ல் +91 944---------  என வருவது எப்படி ?  ஹீரோயின்  மிஸ்டு கால்  கொடுத்தோ அல்லது   ரிசீவ்டு காலோ இருந்து பின் ஹீரோ அதை ஸ்டோர் பண்ணி  இருந்தால் தான் அப்படி +91  என வரும் , இல்லைன்னா 944....  என தானே வரும் ? 


3 ஹீரோயின் ஒருஷாட்டில் ஏரியில்  மீன் பிடித்து தூண்டிலை இழுக்கும் காட்சியில் ஆல்ரெடி பிடிச்சு செத்த மீனை தூண்டிலில் மாட்டியது நல்லாத்தெரியுது 


4 ஹீரோகிராமத்தில்   இருக்கும்  தன்  வீட்டுக்கு ஹீரோயினை அழைத்து வர்றார் . ஒரு தேயிலைத்தோட்டத்தில் இறங்கி இதுக்கு மேல் வண்டி போகாது நாம நடந்து போலாம்னு ஹீரோயினை  நடக்க வெச்சு கூட்டிட்டுப்போறார். பின் ஹீரோயின் கிளம்பும்போது    வீட்டு  வாசலுக்கே  ஜீப் வருவது எப்படி ?


5 லண்டன் மாப்ளை  நிச்சயதார்த்தத்துக்கு  ஹீர்ரோயின்  விரல் ல  எங்கேஜ்மெண்ட் ரிங்க்  போட்டிருக்கார் . அதை ஹீரோ வாங்கிஅடமானம் வெச்சாச்சு . ரிட்டர்ன் வந்த மாப்ள எங்கே நான்  போட்ட மோதிரம்?னு கேட்கவே இல்லை ?  விரலைக்கூடப்பார்க்காத கண்ணியமான மாப்ளையோ ? 


6  நிச்சயிக்கப்பட்ட லண்டன் மாப்ளை சென்னை  வந்து ஹீரோயினைப்பார்த்துப்பின்  அவர் தங்கி  இருப்பது எங்கே?ன்னு கேட்கவே இல்லை , அவர்  வீட்டுக்கும் வர முயற்சிக்கவே  இல்லை 


7 . சந்தானம் லண்டன் மாப்ளையை சந்தித்து  ஹீரோ காதலைச்சொல்லிடறார்.  அதை மாப்ளை ஏன் ஹீரோயினிடம் சொல்லவில்லை? அட்லீஸ்ட்  வெரிஃபிகேஷன்  கூடப்பண்ணலை ? க்ளைமாக்ஸில் மட்டும் எதுக்கு சம்பந்தமே இல்லாம  அதை சொல்றார்? 


8  ஊர்வசி ஹீரோ -ஹீரோயின் அபார்ட்மெண்ட்க்கு நைட் வந்து  ஹாலில் சோபாவில் படுத்து தூங்கிடறார்/. அவர் வந்ததால  கணவன் - மனைவியா நடிக்கும் அவங்க   வேற வழி  இல்லாம   பெட்ரூமில் போய்   படுக்க வேண்டிய  நிர்ப்பந்தம் மாதிரி  சீன்  ஒட்டவே  இல்லை . நான் வீட்டுக்கு விலக்கு , உங்க கூட ஹால் ல யே படுத்துக்கறேன்னு சொல்லலாம் , அல்லது  அதே  வீட்டில்  இன்னும்  2  ரூம்  இருக்கு , அங்கேபோலாம் 


9அனிரூத் பிரமாதமான பாட்டு போட்டுக்குடுத்தும்   இயக்குநர்  அந்த பாடல்களுக்கான லீடு சரியாத்தரலை . சென்னை எக்ஸ்பிரஸ்  லுங்கி டான்ஸ் மாதிரி  கங்க்னம் பாட்டை க்ளைமாக்சில் வெச்சது உட்பட எல்லாப்பாடல்களுமே ஏனோ தானோ என ஓப்பன் ஆகுது 


10  இயக்குநர்  ஒரு பெண்ணாக  இருந்தும்  எதுக்காக   ஹீரோயின் வரும் 90% காட்சிகளில்  லோ கட் ஆங்கிள் ஷாட் வெச்சு கவர்ச்சி காட்டனும் ? 

11  கல்யாண மண்டபத்தில்   ஹீரோ , ஹீரோயின்  இருவரும்  ஒருவரை  ஒருவர்  ரொம்ப நேரமாத்தேடிட்டு இருக்காங்க , 2 பேர் கிட்டேயும் செல் போன் இருக்க , ஒரு கால்  அல்லது மெசேஜ் அனுப்பி  நீ  எங்கே இருக்கே?ன்னு கேட்டாமேட்டர்  ஓவர்  


12  மேரேஜ்க்கு  வரும்,  ஹீரோயின்  கழுத்துல  ஒரு செயின் நகை  நெக்லஸ் கூட  போட்டுக்காமயாவரும் ? கைல வளையல் இருக்கு , காதுல  தோடு  இருக்கு , வெறும் கழுத்தா வரலாமா? இயக்குநர் ஒரு பெண் வேற 


மனம் கவர்ந்த வசனங்கள்

1. பாடுபடாம பலாச்சுளை கிடைக்காது



 பேய்ப்படத்துக்கு தியேட்டர்ல எத்தனை லவ் ஜோடிங்க பார்த்தியா? பேய் வந்தா பயத்துல கட்டிப்பிடிச்சுக்கலாம்.எல்லாரும் பேய்க்காகத்தான் வெயிட்டிங்


3  எவ்ளவ் காஸ்ட்லி கேமராவா இருந்தாலும் லவ் FEELING கை படம் பிடிச்சுட முடியாது


4  நீ சொன்ன மாதிரி அவ 1ம் அவ்ளவ் குண்டு  இல்லையே? 



உன் பொண்டாட்டிக்குப்பக்கத்துல அர்னால்டே நின்னாலும் அனிரூத் மாதிரி தான் தெரியும்


ஒருத்தனைப்பார்த்ததுமே அவன் நல்லவனா? கெட்டவனா?னு பொண்ணுங்க கண்டுபிடிச்சுடுவாங்க.அவங்க அவ்வளவு ஷார்ப் 

எப் ஐ ஆர் = FEMALE INFORMATION REPORT ,அதாவது பொண்ணுங்க சொல்றதைத்தான் போலீஸ் நம்பும்



படம் பார்க்கும்போது போட்ட லைவ் கமெண்ட்ஸ் ட்வீட்ஸ் 


1. ஹீரோயின் க்கு சந்தானம் வெச்ச பட்டப்பேரு டமுக்கு டப்பா # வ செ .ப்ரியா ஆனந்த்


2 சந்தானம் இடைவேளையில் தான் என்ட்ரி.பார்த்தவரை படம் சுமார் தான் # வ செ


வணக்கம் சென்னை இயக்குநர் கிருத்திகா வணக்கம்.உங்க படம் தான் பார்த்திட்டிருக்கேன்


 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் = 2.75   / 5



சி பி கமெண்ட்  -காதலர்கள்  , சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம் , பெண்களை கவரும் .  போர் அடிக்காம  போகுது . ஆண்கள்  டி வி யில் பார்க்கலாம். வணக்கம் சென்னை - சராசரி காதல் கதை .சந்தானம் காமெடி அடக்கி வாசிப்பு - விகடன் மார்க் =40 ,ரேட்டிங் 2,75 / 5..ஈரோடு  ராயல் ல படம் பார்த்தேன் . கூட்டம் கம்மி தான்



a


டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

டிஸ்கி - நய்யாண்டி - சி பி எஸ் விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம்

நைய்யாண்டி"

தனுஷ் நடிப்பின் மேல் உள்ள நம்பிக்கையும்,
நஸ்ரியாவை புடிக்கும்ங்குறதுனாலையும்,
டைரக்டர் சற்குணம் "களவாணி" "வாகை சூடவா" மூலம் ரசிக்க வைத்தவர்,
தேசிய விருது வாங்கியவர் என்பதாலும்,
படம் பார்க்க முதல் நாளே....

கதை??!!

தேடிப்பார்த்தேன் கடைசி வரை புதுசா எதுவும் கிடைக்கவில்லை,
ஏற்கனவே வந்த கதைகளும், காமடிகளும் என்பதனாலையோ?!

டைரக்டர்

டைரக்டர் யாருன்னு குழம்புற மாதிரி இருக்குறதுனால,
அடிக்கடி டைட்டில் கார்டை தேட வேண்டி இருக்கு.

தனுஷ்

சாரி தனுஷ்..!!

"காதல் கொண்டேன்"
"புதுப்பேட்டை"
"மயக்கம் என்ன"
"3"
"மரியான்"
படங்களில் நடித்த தனுஷை,
படம் முடியுற வரைக்கும் தேடி பார்த்தேன் ம்ஹூம்,
எனக்கு தெரிந்தது "வேங்கை" தனுஷ் மட்டும் தான்.

நஸ்ரியா

படம் ஆரம்பிச்சதில இருந்து முடியுற வரைக்கும் வந்த கடுப்புகளுக்கு இருந்த ஒரே ஆறுதல்.
கேரளா தான்
அழகிதான்
ஆனா இந்த புள்ளைக்கு ஸ்லோ மோஷன்ல ஓடி வர்ற ஸீன் கொஞ்சம் ஓவர் தான். (காலியான மனசு)

நஸ்ரியாவுக்கு ஒரே ஒரு கேள்வி; தொப்புள் தெரியுற மாதிரி ஸீன் டூப் (யாருக்கு தெரியும்) போட்டதுக்கு,
எங்க மதத்துல இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்கன்னு சுனாமிய விட ரெண்டு அடி மேலாவே கொதிச்சியே தாயி,(உலக நடிப்புடா சாமி)
அதே மதத்தில கட்டி புடிச்சு உருளுறதுக்கும்,
முத்தம் குடுக்குறதுக்கு மட்டும் எழுதி இருக்காக்கும்?!!
சாக்கடையில இறங்கிட்டு நாறுதுன்னு மூக்க புடிக்குறதுக்கு பதிலா,
சாத்திக்கிட்டு வீட்டுக்குள்ள இருந்திருக்கலாம்.

வில்லன்

வில்லன் இருக்குறது நமக்கு மறக்காம இருக்க,
அப்பப்போ வந்து முகம் காட்டிட்டு போயிடுறாரு.
இதுக்கு பொண்ணோட (நஸ்ரியா) அப்பாவையே வில்லனா காட்டியிருக்கலாம்.
பட்ஜெட் மிச்சம்.

இசை

பாவம் அவருக்கு இசை பஞ்சம் போல
பின்னணி இசைக்கு தேசிய கீதத்தையும் கோவம் வர்ற மாதிரி,
நக்கலா யூஸ் பண்ணி இருக்காரு.
இரண்டு பாடல்கள் மட்டும் ரசிக்கும் ரகம்.


காமடி

சொல்றதுக்கு பெருசா ஒண்ணும் இல்ல,
கடைசியா வந்த படங்களில் பார்த்ததுதான்.
இருந்தாலும் எல்லாரையும் தாண்டி ஸ்ரீமன் மட்டும் கொஞ்சம் அதிகமா ரசிக்க வைக்குறாரு.



மொத்தத்துல "நைய்யாண்டி" திரைப்பட குழுவிற்கு ஆழ்ந்த வாழ்த்துக்கள்....! 



டிஸ்கி - வணக்கம் சென்னை  விமர்சனம் @ 3 pm  

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 11 10 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. நய்யாண்டி - ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை அடுத்து சற்குணம் இயக்கும் நய்யாண்டி. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். இவர்கள் தவிர சரண்யா பொன்வண்ணன், சூரி, சத்யன், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் சற்குனத்தின் நண்பரான ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இவர் ”களவாணி”, ”வாகை சூட வா” ஆகிய படங்களில் சற்குனத்துடன் இணைந்து பணியாற்றியவர்.


இந்தப் படத்துக்கு முதலில் சொட்ட வாளக்குடி என்றுதான் பெயர் வைத்திருந்தனர். படத்தின் பெயரை உச்சரித்த பலரின் நாக்கு சுளுக்கிக் கொண்டதால் பொதுமக்களின் நலன் கருதி பெயர் நய்யாண்டியாக மாற்றப்பட்டது. குத்துவிளக்கு செய்யும் கடை வைத்திருக்கும் ஹீரோவிற்கும், பல் மருத்துவம் படிக்கும் ஹீரோயினுக்கும் இடையில் ஏற்படும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படம்தான் ‘நய்யாண்டி’.  பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.


அக்டோபர் 11-ம் தேதி நய்யாண்டி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகலாம் என்று நடிகர் தனுஷ் தனது இணையதளத் தகவலில் தெரிவித்துள்ளார். படத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு அபிராமி , ஆனூர் , சண்டிகா வில்  ரிலீஸ் 

 

வணக்கம் சென்னை’. ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘வணக்கம் சென்னை’. இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.

இதில் நாயகனாக சிவா, நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கின்றனர். சந்தானம், ஊர்வசி, ரேணுகா, ராகுல் ரவீந்தர் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படம் பற்றி கிருத்திகா உதயநிதி சொல்கிறார்.

லண்டனில் இருந்து வரும் பெண்ணும், தேனியில் இருந்து வரும் இளைஞனும் சென்னையில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் காதல் கலாட்டாக்களே கதை. ஒன்றரை வருடம் இக்கதையை உருவாக்கினேன். அதன் பிறகு தயாரிப்பாளர் தேடினோம். எனது கணவர் கதையை கேட்டார். அவருக்கு பிடித்தது. தானே தயாரிக்க முன் வந்தார். ஐம்பத்தி ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

சந்தானத்துக்கு முக்கிய கேரக்டர். கதையை அவர் தான் நகர்த்தி செல்வார். சென்னையிலும், தேனியிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. சென்னை மற்றும் மூணாறில் பாடல் காட்சி படமாகியுள்ளது.

நானும் சசிகுமார், மிஸ்கினும் இணைந்து லைப், லவ், ஹோப் என்ற குறும்படத்தை எடுத்தோம். அதற்கு பாராட்டுகள் குவிந்தன. அதுவே எனக்கு இப்படத்தை எடுக்க தைரியம் கொடுத்தது. என் கணவரும் பக்கபலமாக இருந்தார்.

இசை: அனிருத், ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம்.நாதன், பாடல்: நா.முத்துக்குமார், மதன்கார்க்கி, விக்னேஷ் சிவா, எடிட்டிங்: பி.எஸ்.சுரேஷ், நடனம்: தினேஷ், ராபர்ட், பாபி. இணை இயக்கம்: திவ்யநாதன். 


‘வணக்கம் சென்னை’ படத்தில் மட்டும் 5 பாடல்களை பாடியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.



கிருத்திகா உதயநிதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘வணக்கம் சென்னை’. இவர் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி ஆவார். மேலும் படத்தையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் தயாரிக்கிறது. இதில் மிர்ச்சி சிவா நாயகனாகவும், பிரியா அனந்த் நாயகியாகவும் நடிக்கின்றனர். சந்தானம் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். காமெடியை பின்னணியாக கொண்டு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.



ஹாரிஸ், யுவன் ஷங்கர் ராஜா, ஏ ஆர் ரஹ்மான் படங்களுக்கு மட்டுமே முன்னிரிமை கொடுக்கும் சோனி நிறுவனம் முதல் முறையாக அனிருத் படத்தின் பாடல் உரிமையை வாங்கி இருக்கிறது. இந்நிலையில் படத்தின் பாடல்கள் குறித்த விவரத்தை சோனி ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அதில் 5 பாடல்களை படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தே பாடியிருக்கிறார். அதிலும் ‘எங்கடி பொறந்த….” என்ற பாடலை அனிருத் மற்றும் ஆன்ட்ரியா இணைந்து பாடியிருப்பதுதான் ஹைலைட்.



இதற்கு முன்பு அனிருத், ஆன்ட்ரியா இருவரின் முத்தக் காட்சி அடங்கிய புகைப்படம் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். அண்மையில் இச்சம்பவம் தொடர்பாக அனிருத், ஆன்ட்ரியாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இருவரும் இந்த படத்தில் இணைந்து பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு  வி எஸ் பி , அன்ன பூரணி யில் ரிலீஸ்


3. என்னாச்சு’ படத்தில் கொடைக்கானல் காட்டில் நடக்கும் திகில் சம்பவங்கள்


இளைஞர்களின் விபரீத விளையாட்டை கருவாக வைத்து, ‘என்னாச்சு’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்துக்கு முதலில், ‘தருணம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. இப்போது அந்த பெயர், ‘என்னாச்சு’ என்று மாற்றப்பட்டுள்ளது.


‘‘இது, ஒரு திகில் படம். பொதுவாக, திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு மாப்பிள்ளையும், பெண்ணும் வெளியூருக்கு போவதை அனுமதிப்பதில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில், கேரளாவில் உள்ள நண்பன் திருமணத்துக்காக நண்பர்களும், தோழிகளும் வருகிறார்கள்.


திருமணம் முடிந்த கையோடு அவர்கள் கொடைக்கானல் காட்டுக்குள் சுற்றுலா போகிறார்கள். அங்கு அவர்களுக்கு ஏற்படும் விபரீத சம்பவத்தை திகிலாக சொல்லியிருக்கிறோம்’’ என்கிறார், படத்தின் டைரக்டர் ஸ்ரீமணி.


இஸ்மாயில், விவிந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக பூஜா கே, மேகா தானி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கூத்துப்பட்டறையை சேர்ந்த நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள்.
ஜெகன் ஒளிப்பதிவு செய்கிறார். பாலாஜி–கார்த்திக்குமார் ஆகிய இருவரும் இசையமைக்கிறார்கள். ஸ்மைல் கிரியேசன்ஸ் சார்பில் முகமது இஸ்மாயில் தயாரிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், ஸ்ரீமணி. இவர், பல குறும்படங்களை டைரக்டு செய்தவர்.


நடிகர்கள்: 
இஸ்மாயில், விவிந்த், பூஜா கே, மேகா தானி
இசை: 
பாலாஜி–கார்த்திக்குமார்
ஒளிப்பதிவு: 
ஜெகன்
இயக்கம்: 
ஸ்ரீமணி
தயாரிப்பு: 
முகமது இஸ்மாயில்

ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை


4 கயவன் - ஸ்கை நெட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கயவன். படத்தின் நாயகனாக மிதுன் குமாரும், நாயகியாக ஆந்திர அழகி டிவிங்கிளும் நடிக்கின்றனர். படத்தின் 2வது நாயகியாக கேரளத்து பெண் நைஸா நடிக்கிறார். இவர்களுடன் ரஞ்சித், சிவா, சைதை குணா, வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கயவர்‌களை‌ கயவனா‌ல் ‌கருவருக்‌கச் ‌செ‌ய்‌யு‌ம் ‌படம் இ‌து. சமுதா‌யத்‌தி‌ற்‌கா‌க செ‌ய்‌யு‌ம் ‌ஒரு தவறா‌ன செ‌யலும் ‌கூட, தர்‌மத்‌தி‌ன் ‌பா‌ர்‌வை‌யி‌ல் ‌சரி‌யா‌ன ஒன்‌றே ‌என்‌ற கா‌ரணத்‌தை ‌மை‌யக்‌கருவா‌க வை‌த்‌து இப்படம் உருவாகிறது. இப்படத்தை கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி. ஜெரோம் முருகன் இசையமைக்க, கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, துரைராஜ் படத்தொகுப்பு வேலையை கவனிக்கிறார்.

இப்‌படத்‌தி‌ன்‌ முதற்‌கட்‌ட படப்‌பி‌டி‌ப்‌பு‌ கி‌ருஷ்‌ணகி‌ரி‌, சி‌ன்‌ன ஊட்‌டி‌ என்‌று சொ‌ல்‌லப்‌படுகி‌ன்‌ற பு‌தூ‌ர் ‌நா‌டு ஆகி‌ய இடங்‌களி‌ல்‌ நடை‌ப்‌பெ‌ற்‌றது. இரண்‌டா‌வது கட்‌டமா‌க ஏலகி‌ரி‌, வே‌லூ‌ர்‌, செ‌ன்‌னை‌ஆகி‌ய இடங்‌களி‌லும் ‌நடை‌பெ‌ற்‌று முடி‌வடை‌யு‌ம்‌ தறுவா‌யி‌லுள்‌ளது. கா‌தல்‌, மோ‌தல்‌, நகை‌ச்‌சுவை‌ கலந்‌து முற்‌றி‌லும் ‌மா‌றுபட்‌ட பு‌தி‌ய கோ‌ணத்‌தி‌ல்‌ உருவா‌கி‌யி‌ருக்‌கும்‌ இப்‌படம் ‌இன்று  ‌தி‌ரை‌க்‌கு வருகி‌றது.

ஈரோட்டில்  ரிலீஸ் இல்லை 



டிஸ்கி-நய்யாண்டி - ஃபாரீன் ட்விட்டர் விமர்சனம் http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன்னும்  இருக்கு , அது  தனிப்பதிவாக நாளை வரும்

டிஸ்கி - நய்யாண்டி - சி பி எஸ் விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_7207.html

வணக்கம் சென்னை - சினிமா விமர்சனம் -http://www.adrasaka.com/2013/10/blog-post_6374.html 

அசராம் பாபுவைப்பார்த்து நித்யானந்தாவே நடுங்கக்காரணம் என்ன?

Indians dressed in traditional attire practice Garba, a form of dance from the west Indian state of Gujarat , to celebrate the upcoming festival of Navratri, in Ahmadabad, India.
Photo: Indians dressed in traditional attire practice Garba, a form of dance from the west Indian state of Gujarat , to celebrate the upcoming festival of Navratri, in Ahmadabad, India.
1. தங்கம் வாங்க வேண்டாம் வரிசையில் சிதம்பரத்தின் அடுத்த அதிரடி திட்டம் - பொருளாதாரத்தை சீராக்க யாரும் ஆபீசில் சம்பளம் வாங்க வேண்டாம் என்பாரோ?



====================


2  செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி #  தமிழன் எப்பவும் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்குவதில் முன்னோடி



========================


3 டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு # 12.12 2013 கூட்டுத்தொகை  3 வருது நாமம் போட்றப்போகுது


=============\


4 கோபப்பட்டிருந்தால் கூட்டணியே அமைந்திருக்காது - விஜயகாந்த்# கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கோ இல்லையோ கூட்டணி இருக்கும் போல


========================


5 அசாராம் பாபு சிறுவர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு; # ஜெயிலர் அய்யா நடுங்கிட்டே காவல் காக்கறாராம்


======================



குடும்பம்னா சண்டை சகஜம் தானே....! சிங்கமா இருந்தாலும் அசிங்கப்பட்டுதான் ஆகணும்.
Photo: குடும்பம்னா சண்டை சகஜம் தானே....! சிங்கமா இருந்தாலும் அசிங்கப்பட்டுதான் ஆகணும்.

6  நரேந்திர மோடி,அரசியல் செய்ய தகுதியற்றவர் -நாராயணசாமி # ஆமா அவருக்கு பாலிடிக்ஸ் பண்ணத்தெரியாது.ஆனா ராகுல் கை நடுங்குது கவனிங்க



========================


7 சோனியா, ராகுல் மாதிரி நானும், என் மகனும் கட்சியை நடத்துவோம்: ராப்ரி தேவி # ராபரி = கொள்ளை ?



=========================


8 கிளார்க்காக இருந்து முதல்வராக உயர்ந்த பால்காரரின் மகன் லாலு பிரசாத் யாதவ் # அதான் முடிஞ்ச வரை கறந்துட்டாரு போல



=========================



9  சிறையில் தூங்க முடியாமல் கொசுக்கடியில் தவித்த லல்லு -செய்தி # இத்தனை நாளா நல்லவர்ங்கற போர்வைல நடமாடிட்டு இருந்தீங்களே அத யூஸ் பண்ணிக்கலாமே?


========================


10  தமிழகத்தில் மக்கள் ஆட்சிதான் நடக்கிறதா? -- அன்புமணி # ஓட்டு போடறதோட மக்கள் வேலை முடிஞ்சுது.என் ஆணைப்படி என் ஆட்சி தான் நடக்கிறது -ஜெ



=============================


சோள மெத்தை.....
Photo: சோள மெத்தை.....


11 சிகிச்சைக்காக சஞ்சய் தத்துக்கு 14 நாட்கள் பரோல்: # ஏன்? டாக்டரை ஜெயிலுக்கு அனுப்பியோ அரசு கண்காணிப்பிலோ ட்ரீட்மென்ட் தந்தா என்ன?



==========================



12 இலங்கையில் குறட்டைவிட்டு தூங்கும் இந்திய தூதரகம்: வைகோ சாடல்# தூங்கியதென்னவோ உண்மைதான்.ஆனால் குறட்டை விடவில்லை - தூதரகம் மறுப்பு



===========================



13  கடைசி மூட நம்பிக்கை ஒழிந்த பிறகுதான் அழிவேன் - கி.வீரமணி# ஆசை இருக்கு 1000 வருசம் வாழ.ஆனா இயற்கை கொடுப்பது 100 வருசம் தான்


========================


14 யாரை கண்டும் காங்கிரஸ் அஞ்சாது: சோனியா# ஜட்ஜைப்பார்த்தாலுமா?


========================


15  பாராளுமன்ற தேர்தலில் 9 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம்: ஞானதேசிகன் # ஒருவர் ஆட்சி ஒன்பதடா.அதில் ஒளிந்த ஊழல் எண்பதடா



=======================


16  மிஷ்கினுடன் கைகோர்க்கும் கமல் # தலைவா.அப்புறம் லிப் கிஸ் அடிக்க முடியாது.பாதத்துக்குத்தான் அடிக்க விடுவாரு.பரவால்லியா?



=======================


17  2014 தேர்தல்; பாமக தனித்து போட்டி! -அன்புமணி ராமதாஸ்! # இது என்னய்யா பிரமாதம்?,செலவு குறையட்டும்னு ஹனிமூன் க்கே தனியா தான் போனேன்


========================


18  பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி உறுதி! - ராம்தேவ் # சுடி சாமியே மோடி தான் னு சொல்லிடுச்சு.அப்புறம் என்ன?




========================


19  செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி # தமிழன் எப்பவும் வாயைக்குடுத்து வாங்கிக்கட்டிக்குவதில் முன்னோடி



=======================


20 டிசம்பர் 12 - ரஜினி பிறந்த நாளில் கோச்சடையான் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு # 12.12 2013 கூட்டுத்தொகை 3 வருது நாமம் போட்றப்போகுது


=========================

தேவை கலைக்கணோட்டம்
Photo: தேவை கலைக்கணோட்டம்


21. தேநீர் விற்றவன் பிரதமர் வேட்பாளரானேன் -மோடி # ஆரம்ப நாட்களில் இருந்தே மக்களின் விழிப்புணர்வுக்காக வேலை பார்த்தேன்னு சொல்லிக்கலாம்



========================







22 அரைவேக்காட்டுத்தனமாக பேசுகிறாரே ராகுல் காந்தி.. வைகோ காட்டம் # கோபப்படாதீங்க ஏட்டய்யா.ஆபாயில் சாப்ட்டுட்டே பேசினாராம்



=====================


23  குஜராத்தில் நல்லாட்சி நடைபெறுவதாக கூறுவது வியப்பாக உள்ளது - நாராயணசாமி # குஜராத்க்கு 15 நாள் டூர் அடிச்சுப்பார்த்துட்டு பேசுங்க



===================


24  பிரதமராகும் தகுதி மோடிக்கு இல்லை: கம்யூனிஸ்ட் # இதை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லைனு மோடி சொன்னா என்ன செய்வீங்க?



=======================


25  அனைவரும் வளர்ச்சி பெறுவதே மத்திய அரசின் நோக்கம்: ப. சிதம்பரம் # காங்கிரஸ் கட்சில இருக்கும் எல்லாருமா?



==========================


கோயம்பத்தூரில் மழை பெய்யும்போது ஊட்டியிலிருந்து எடுக்கப்பட்ட படம்!

Rainfall in coimbatore shot from ooty......! — with Selvin Raj and 47 others.
Photo: கோயம்பத்தூரில் மழை பெய்யும்போது ஊட்டியிலிருந்து எடுக்கப்பட்ட படம்!

Rainfall in coimbatore shot from ooty......!

அசாராம் பாபு சிறுவர், சிறுமியர்கள் மீது பாலியல் இச்சை உடையவர்: ஜாமீன் மறுப்பு! 


ஜெய்ப்பூர்: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல சாமியார் அசாராம் பாபு, சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

72 வயதாகும் அசாராம் பாபு, பள்ளி சிறுமி ஒருவரை ஆசிரமத்திற்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டுள்ள அவர், தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அசாராம் பாபுவை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர்,  சிறுவர் மற்றும் சிறுமிகளிடத்தில் பாலியல் உறவு கொள்ளும் இச்சை உடையவர்  அசாராம் பாபு என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினார்.

விசாரணை முடிவில், அசாராம் பாபுவின் ஜாமீன் மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 நன்றி  - விகடன்

தென்னிந்திய மக்களின் பிரதான உணவு......?
Photo: தென்னிந்திய மக்களின் பிரதான உணவு......?

Thursday, October 10, 2013

சச்சின் டெண்டுல்கர்-200- ஓய்வு - பிசிசிஐ நிர்ப்பந்தம் காரணமா?

பிசிசிஐ நிர்ப்பந்தம் காரணமாகவே சச்சின் ஓய்வை அறிவித்தார்?

மும்பை: இறுதியில் சச்சின் டெண்டுல்கர் தனது டெஸ்ட் கிரிக்கெட் சகாப்தத்திலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டார்.
ஆனால் அவரது இந்த அறிவிப்புக்கு பின்னால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறைமுக அழுத்தங்கள் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

சச்சின் டெண்டுல்கர் இன்று பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனை நேரில் சந்தித்து தனது முடிவை தெரிவித்து, அது தொடர்பான கடிதத்தை வழங்கியுள்ளார். 

மற்ற பேட்ஸ்மேன்களைவிட டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக செஞ்சுரிகளை அடித்த பெருமைக்குரிய 


சச்சின், வருகிற நவம்பர் மாதம் மேற்க்கிந்திய தீவு அணிக்கு எதிராக, தனது சொந்த மண்ணான மும்பையில் ஆட உள்ள தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். 

சச்சின் ஓய்வு பெறவேண்டும் என சமீப காலமாக ஆங்காங்கே குரல்கள் ஒலித்தபோதெல்லாம், அதனை பொருட்படுத்தாமல் அமைதி காத்து வந்தார். ஆனாலும் சச்சினுக்குள் தனது ஓய்வு குறித்து ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன. 


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரும் இதுபோன்று ஓய்வு பெற வேண்டும் என கோரிக்கைகள் மூலம் அழுத்தங்களை எதிர்கொண்டவர்தான் சச்சின். ஆனால் இந்த முறை அந்த பிசிசிஐ-யிடமிருந்து வந்த அழுத்தம்தான் அவரை இந்த முடிவை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிசிசிஐ-யின் உயரதிகாரிகள் சிலர், " இளைய தலைமுறையினருக்கு வழிவிட ஏதுவாக ஓய்வு பெறுமாறு சச்சின் விரைவிலேயே கேட்டுக்கொள்ளப்படுவார்" என்று கூறியதாக மும்பையிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.  

சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான சமீபத்திய போட்டிகளில் சச்சின் சரிவர ஆடாதது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இது சச்சினின் சரிவை உணர்த்தும் அறிகுறி என்று பேசப்பட்டதாகவும் அதில் மேலும் கூறப்பட்டிருந்தது.


இந்நிலையில் இதுகுறித்த தகவலை சச்சினும் உறுதிப்படுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே சச்சின் இன்று தனது ஓய்வு முடிவை அறிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


thanx - vikatan

200-வது டெஸ்டுக்குப் பின் ஓய்வு பெறுவதாக சச்சின் அறிவிப்பு


இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்டுக்குப் பிறகு ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார்.


இதனால், கடந்த சில மாதங்களாக, கிரிக்கெட் உலகில் நிலவி வந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைப் பட்டியல்களை மலைக்க வைத்தவரான 40 வயது சச்சின், சமீப காலமாக முழுமையான ஃபார்மில் இல்லை. இந்தச் சூழலில், தனது ஓய்வு முடிவை, பிசிசிஐ-க்குத் தெரிவித்திருக்கிறார். இதனால், 24 ஆண்டுகால அற்புதமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

ஒரு கார் பந்தய நிகழ்ச்சியின் போது, பிரையன் லாரா ஸ்டீவ் வாவுடன் சச்சின் (கோப்புப் படம்)



சச்சின் உருக்கம்


"இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்பது என் வாழ்க்கையின் கனவு. இந்தக் கனவுடன் 24 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் வாழ்ந்திருக்கிறேன். 11 வயதில் இருந்து விளையாடிவரும் நிலையில், கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து பார்க்கக் கூட கடினமாக இருக்கிறது" என்று சச்சின் டெண்டுல்கர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


"இந்தியாவுக்காக விளையாடியதையும், உலகம் முழுவதும் விளையாடியதையும் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறேன். என் சொந்த மண்ணில் 200-வது டெஸ்ட் போட்டியை விளையாடுவதற்காகக் காத்திருக்கிறேன்.



என் கிரிக்கெட் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருந்த பிசிசிஐ-க்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்கிறேன். என்னைப் புரிந்துகொண்டும் பொறுத்துக்கொண்டும் இருந்த என் குடும்பத்தினரும் நன்றி. எல்லாவற்றையும்விட, தங்களது வாழ்த்துகளாலும் பிரார்த்தனைகளாலும் என்னை மிகச் சிறப்பாக விளையாடும் வகையில் என்னை வலுவாக்கிய என் ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


ragul dravid , sachin


சச்சின் டெண்டுலகரின் இந்தச் செய்திக் குறிப்பை, பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் வெளியிட்டுள்ளார்.


ஏற்கெனவே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின் இப்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.



மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. இந்திய அணிக்கு எதிராக இரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய சாதனை படைப்பார்.



சச்சின் டெண்டுலகரின் கடைசி மற்றும் 200-வது டெஸ்ட் போட்டி, நவம்பர் 14-ல் தொடங்கி, அவரது சொந்த ஆடுகளமான மும்பையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.



2011- ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற உற்சாகத்தில் சச்சின் (கே. ஆர். தீபக்)




சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சச்சின்தான். இதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் வாக் ஆகியோர் உள்ளனர். இருவரும் தலா 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இந்தியாவின் ராகுல் திராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.



முன்னதாக, 200-வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டுமென்று பிசிசிஐ வலியுறுத்தியதாக வெளியான தகவல்களை, அண்மையில் கிரிக்கெட் வாரியம் முழுமையாக மறுத்தது என்று குறிப்பிடத்தக்கது.






அதேநேரத்தில், சச்சின் டெண்டுல்கர் அணியில் நீடிப்பதால், இளம் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்ற சர்ச்சையும் நீடித்து வந்தது கவனத்துக்குரியது.


thanx - the hindu
a

தனது கடைசி டி20 போட்டியை விளையாடும் லிட்டில் மாஸ்டர். (படம்: எஸ். சுப்பிரமணியம்)


a



a