Saturday, July 27, 2013

தேவிபிரியாவின் க்ரியேடிவிட்டி பேங்க் - Devipriya win creativity bank

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ  தன்னோட  ஓனரோட  பணம்  2 லட்சத்த பஸ் ல  கொண்டு போகும் போது  ஹீரோயின் அறிமுகம்  கிடைக்குது .அந்த  குதிரேமுக்  டப்பா  பிகரை  இவரு  லவ்வறாரு .அந்த கேனமும்  இவரை  லவ்வுது .அதே ஹீரோயினை  வில்லனும் லவ்வறாரு.வில்லன்னா லட்சணமா  ஹீரோயினை ரேப்  பண்ணாம பொண்ணு கேட்டு  டார்ச்சர்  பண்றாரு .வில்லன் கிட்டே  இருந்து  ஹிரோயினை  ஹீரோ  எப்படி காப்பாத்தறார்  என்பதே  மீதி  தலைவலி  கதை .


பார்த்து  பார்த்து  புளிச்சுப்போன அரதப்பழசான கதை .விஷால் கழுவாத முகத்தோட  படம் பூரா  வர்றாரு .இதுல என்ன காமெடின்னா  சநதானத்தை விட இவருக்கு வசனங்கள்  3 ல்  1 மடங்கு கூட இல்லை.


இடைவேளை ட்விஸ்ட்க்காக  அவர் மதுரைல ஆல்ரெடி 3 கொலை  பண்ணி இருக்கேன்னு சொல்லும்போது பெரிய  ஷாக் எல்லாம் வரலை .இவர் டான்ஸ் ஆடும்போது  விஜயை இமிடேட் பண்றது பத்தாதுன்னு  கவுண்டமணியும் இமிடேட்டிங் அண்ட் இரிட்டேட்டிங் 





ஹீரோயின் ஆக்ஷன் கிங்க் அர்ஜூன் பொண்ணு  ஐஸ்வர்யா அர்ஜூன் . கார்த்திகா மாதிரி  வரைஞ்சு வெச்ச  பெரிய புருவம் . அது மட்டும் தான் பெருசு . மத்ததெல்லாம் சிறிசு . ஐ மீன் கண்ணு கன்னம் எல்லாம் .ரொம்ப சின்னது . ஓவர் மேக்கப் . பொம்மை மாதிரி இருக்கார் . ரசிக்கவே முடியலை . துப்பட்டாவே தேவைப்படாத  அதிர்ஷ்டசாலி .அது போக  கண்ணுக்கு கீழே  தூக்கம் கேட்ட தடயம் .ம்ஹூம் . தேறாது.


சந்தானம் தான்  நி ஜ ஹீரோ . படம் பூரா இவர் ராஜ்ஜியம் தான் . ஆனா சிரிப்பு கம்மியாதான் வருது ,. ஓவர் டோஸ். ஏதோ அவருக்கு சீன் வெச்சா போதும்னு அதிகமா ஸ்க்ரிப்டுக்கு மெனக்கெடலை போல.


மயில்சாமி ஒரு ஆச்சரிய அப்ளாஸ் . செம காமெடி  வரும்போதேல்லாம் செம சிரிப்பு


வில்லன் காமெடியன். அவர் அடியாள் காமெடியும் ஓக்கே



இயக்குநர்  பாராட்டு பெறும் இடங்கள் 



1. பட ஷூட்டிங்க்க் நடக்கும்போது ஹீரோ  டைரக்டரை பாராட்டினார்னு பீலா விட்டது 



2. இந்தப்படம் பெரிய டர்நிங்க்க் பாயிண்ட்னு  விஷால் ரீல் பேட்டி குடுக்க வெச்சது 



3. வில்லன் அண்ட் கோ அடியாள்கள் காமெடி அலப்பரைகள் , மயில்சாமி காமெடி சீன்கள் 


4. முதலாளி முன் ஹீரோ  அடிக்கடி " எங்க முதலாளி ந ல்ல  முதலாளி  பாட்டு ரிங்க் டோன் போட்டு கலாய்ப்பது 


5.  கண்டிப்பா கடன் கிடையாது பேப்பரை சந்தானம்  சாப்பிட்டு ஹோ ட்டலில் செய்யும் காமெடி காட்சிகள் 

 6. அரங்கை அதிர வைத்த மயில்சாமி பிக் பாக்கெட் அடிக்கும்போது  மெயின் பேன்ட் ஜிப்பில் கை வைக்கும் காமெடி 








இயக்குநரிடம் சில கேள்விகள்  


1. முதல் சீன்ல வில்லன் ஒரு சூட்கெஸ் ல அரிவாளை காட்டி  கத்தி என்பது 


2. விஷால் 20 ரூபா குடுத்து  ஏழைக்கு மல்லிகைப்பூ வாங்கிக்குடு என்றதும்  பூக்காரி 7 முழம் மல்லிகைப்பூ தருவது 


3. பண்பாடு ., கலாச்சாரம் , பாரம்பரியம்  என பேசும் பட்டிமன்ற ராஜா  சாப்பிட்டுப்போங்க என்பதை இடது கையால் சைகை காட்டி சொல்வது , அதே போல் ஹீரோயினும்  இடது கையால் சாப்பிடுவது பற்றி சைகை காட்டுவது 



4. ஸ்கூல் பெண்கள் எல்லாரும் ரோஸ் கலர் தாவணி அநிந்திருக்கும்போது  பேப்பரில் வரும்  போட்டோவில் மட்டும்  மற்ற பெண்கள்  ப்ளூ டிரஸ் , ஹீரோயின்  மட்டும் ரோஸ் எப்படி? 



5. பெட்ரோல் போடப்போகும்  வில்லன் பங்க்கில் டீச்சரைப்பார்த்ததும்  ஆன் த ஸ்பாட் கடத்தி ரேப் பண்ணுவது  செம காமெடி . பாசிபிலிட்டியே இல்லை 






மனம் கவர்ந்த வசனங்கள் 



1. முதலாளி.உங்கப்பா போட்டோவை நாங்க 4 பேரும் ஆளுக்கு 1 காப்பி வெச்சுக்கறோம் 


சந்தானம் - ஆளாளுக்கு வெச்சுக்க அது என்ன நயன் தாரா வா? எங்க நைனா 


2. இன்ஸ்பெக்டர்.நான் ஒரு ஜென்ட்டில்மேன் 


 நெல்லை சிவா -,ஜென்ட்டில்மேனே ஒரு திருடன் தானே? 


3. சந்தானம் - ஹலோ. 


 அடடே.முதலாளி.நானே கூப்டனும்னு நினைச்சுட்டு இருந்தேன். 



ஓஹோ. சரி.கால் கட் பண்றேன்கூப்டு 



4. என்ன சாப்டறீங்க? லைட்டா டிபனா ? புல் மீல்சா?,



 லைட்டா டிபன் சாப்ட்டுட்டு அப்டியே மீல்சும் சாப்ட்ரோம் 


5. டாடி மம்மி வீட்டில் இல்ல #பாட்டு


 முதல்ல இந்தப்பொண்ணோட அட்ரஸ் வாங்குங்கடா.எப்போ பாரு சிக்னல் குடுத்துட்டே இருக்கு



 
ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-  38

 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - 

ரேட்டிங் =  2.25  / 5


சி பி கமெண்ட் - சந்தானம்  , விஷால் ரசிகர்கள் மட்டும் பார்க்கலாம் . பூர் அடிக்கலை , ஆனா  தலை வலிக்குது  . சி சென்ட்டர் ல மட்டும் சுமாரா ஓடும்



  

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 26.7 2013 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1.பட்டத்து யானை - விஷாலின் பட்டத்து யானை படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. 


மலைக்கோட்டை படத்துக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம்தான் பட்டத்து யானை. அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா, இந்தப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இசையமைத்துள்ளார்.


நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹோட்டல் அதிபராக நடிக்க, அவரிடம் வேலை பார்ப்பவராக நடித்திருக்கிறார் விஷால். பட்டத்து யானை திரைப்படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படம் தணிக்கைக் குழு பரிந்துரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான யு சான்றிதழ் கொடுத்துள்ளது.


மலைக்கோட்டை படத்தை தொடர்ந்து ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஷால்-பூபதி பாண்டியன் கூட்டணி மீண்டும் கைகோர்த்திருக்கும் படம் பட்டத்து யானை.


இதில் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமாகியுள்ளார் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை தனது மகளுக்கு இருந்ததால்தான் பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகம் செய்தாராம் அர்ஜூன். அதோடு படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது கூட தன் மகளை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்லவில்லையாம். காரணம் என்னவென்றால் தன்னை பார்த்தால் மகளுக்கு நடிப்பு சரியாக வராது என்பதால்தான்.


இருப்பினும் ஐஸ்வர்யாவின் நடிப்பு குறித்து இயக்குனர் மற்றும் விஷாலிடம் அடிக்கடி கேட்டு தெரிஞ்சிகிடுவாராம். அந்த வகையில் தனது மகள் முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு நடித்திருப்பதாக சொல்கிறார்கள். இந்நிலையில் பட்டத்து யானை படம் வெளியாவதற்குள் மேலும் இரண்டு நிறுவனங்கள் ஐஸ்வர்யாவின் கால்ஷீட் கேட்டுள்ளனர்.


ஆனால் அர்ஜூனோ படம் வெளியான பிறகு புதிய படங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறி அனுப்பி வைத்துவிட்டாராம். இதனிடையே பட்டத்து யானை திரைப்படம் வரும் 26ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ஈரோடு அபிராமி , ஆனூர், வி எஸ் பி ரிலீஸ் 

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்   


http://www.adrasaka.com/2013/07/blog-post_1882.html



2. சொன்னா புரியாது -


கலகலப்பு வெற்றிக்குப் பிறகு மிர்ச்சி சிவாவின் கலக்கல் காமெடியில் உருவாகி வரும் திரைப்படம் "சொன்னா புரியாது'.


இந்தப் படத்தை சி.எஸ். அமுதனின் உதவி இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியுள்ளார். யதீஷ் மஹாதேவ் இசையமைத்துள்ளார்.  சிவாவுக்கு ஜோடியாக வசுந்தரா நடிக்கிறார். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவிட்ட நிலையில் தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. எனவே, இம்மாத இறுதிக்குள் திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.


கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் மிர்ச்சி சிவா காமெடியில் முத்திரை பதிக்க இருக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


சொன்னா புரியாது படத்துக்கு இந்தியில் பாடல் எழுதினார் சிவா. தமிழ்படம் ஹீரோ சிவா நடித்திருக்கும் படம் சொன்னா புரியாது. வசுந்தரா ஹீரோயின். இப்படம் பற்றி இயக்குனர் கிருஷ் ணன் ஜெயராஜ் கூறியதாவது: ஹாலிவுட் படங்களுக்கு தமிழில் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராக நடிக்கிறார் சிவா.


ஜாக்கிசான், ஜெட்லி போன்றவர்களின் படங்களுக்கு தமிழில் பேசும் காட்சிகள் வயிற்றை பதம் பார்த்துவிடும். திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம் போய்விடும் என்ற எண்ணம் கொண்ட சிவாவுக்கு அவரது அம்மா திருமணம் செய்து வைக்க எண்ணுகிறார். இதிலிருந்து நழுவிச் செல்லும் சிவா, அம்மாவின் வற்புறுத்தலுக்காக திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்.


 பெண் பார்க்க வசுந்தரா வீட்டுக்கு செல்கின்றனர். அந்த குடும்பம் மிகுந்த கட்டுப்பாடுடன் வாழ்கிறது. செல்போன் பேசக்கூடாது, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று கண்டிஷன் போடுகின்றனர். வசுந்தராவும் ஒரு கொள்கையுடன் வாழ்கிறார். சிவா, வசுந்தரா சேர்ந்து அடிக்கும் லூட்டி கிளைமாக்ஸ் வரை அமர்க்களப்படுத்தும்.



 இப்படத்துக்காக இந்தியில் ஒரு பாடல் தேவைப்பட்டது. இந்தி எனக்கு தெரியும் என்று சிவாவே அந்த பாடலை எழுதினார். அதில் வரும் வார்த்தைகள் எவ்வளவு சரி என்பது படம் வந்தபிறகுதான் தெரியும். அந்த பாடலை அவரே பாடியும் இருக்கிறார். யதிஷ் மகாதேவ், இசை. ஆர்.சரவணன், ஒளிப்பதிவு.


26ம் தேதி ரிலீஸ்.

 
 3. நஷா -  ஹிந்திப் படத்தில் தாராளமாக நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே.


பிரபல மாடலான பூனம் பாண்டே, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால் நிர்வாணமாக சாலையில் ஓடுகிறேன் என்று அறிக்கை விட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.


இப்போது தனது முதல் படமான நஷா மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.


இதுகுறித்து பூனம் பாண்டே கூறியதாவது: நஷா படத்தில் தாராளமாக நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவுள்ளேன். இதுபோன்ற காட்சிகளில் நடிக்க நான் கூச்சப்படுவதில்லை. ரசிகர்களை திருப்திபடுத்துவதே எனது நோக்கம். மஹாபலேஸ்வரில் இப்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.


தாராளமான காட்சிகள் என்பதால் ஹோட்டல் அறைகளில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது என்கிறார் படத்தின் இயக்குநர் அமித் சக்சேனா. இவர்தான் ஜிஸ்ம் பட புகழ் இயக்குநர் ஆவார்.

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால், அவர்களுக்காக, நிர்வாணமாக நிற்பதற்கு தயார் என, 2011ம் ஆண்டு பூனம் பாண்டே என்ற மாடல் அழகி, ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டார். அதுவரை யாரும், அவரை பெரிய அளவு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை அதோடு  மாறியது. பின் இடைவிடாது, இதைபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். அதோடு, அவரது அரை நிர்வாண படங்களை, அவரே தனது இணைய தளத்திலும், டுவிட்டரிலும் வெளியிட்டுக்கொள்வார்.

இது சம்பந்தமாக, அவருக்கு பெங்களூரூ கோர்ட் ஒன்று "சம்மன் அனுப்பி உள்ளது. இந்த நாடகங்கள் எல்லாம், அவர் பக்கம்  கவனத்தை ஈர்ப்பதற்கும், அதன் மூலம், ஹிந்தி திரைப்படங்களில் வாய்ப்பை  பெறுவதற்கும் என, அனைவருக்கும் தெரிந்ததே. இந்த  முயற்சியில், ஒரு ஆண்டு ”சுய விளம்பரத்திற்கு பின் வெற்றி பெற்று உள்ளார். "நஷா என்ற கவர்ச்சி படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அடுத்து, "இப்போவாவது இவரது நாடகங்கள் ஓயும் என, இந்தி பட வட்டாரங்களில்  பேசப்படுகிறது.

குணச்சித்திரக்குன்று  கண்ணியத்தின் வென்று  ஓப்பன் யுனிவர்சிட்டி சேர்விமன் பூனம் பாண்டே நடித்த (!!!) நஷா ஹிந்திப்படம் ஆடி முதல் வெள்ளிக்கு
















 4.
  வோல்வரின் மிஸ்டீரியஸ் ஆரிஜின்ஸ்

வீர ஜேக்மேன் (மியாமி ஹெரால்டு) "வோல்வரின் நுழைந்து தீ மூச்சுவிடும்" - ஒரு பழிக்கு உடன்! இந்த துடிப்பு-படுவேகமாக நடவடிக்கை திரில்லர் லோகன் / வோல்வரின் மிஸ்டீரியஸ் ஆரிஜின்ஸ் ஒரு ரேஸர்-கூர்மையான அடமண்டியத்தால் நகங்கள் மூழ்கிவிடும்: அவரது epically வன்முறை மற்றும் காதல் கடந்த, விக்டர் கிரீட்டாக / சப்ரிடூத்தின் (இவருடன் லீவ் ஸ்க்ரெய்பர்) தனது சிக்கலான உறவு, மற்றும் அவரது விடுக்கிறது என்று அச்சுறுத்தும் வெப்பன் X நிரலின் நிலையான கோபத்திலிருந்து. வழியில், வால்வரின் மேலும் டெட்பூலாக (ரியான் ரெனால்ட்ஸ்) மற்றும் கேம்பிட் (டெய்லர் கிட்ஸ்ச்) உள்ளிட்ட புகழ்பெற்ற புதிய மரபுபிறழ்ந்தவர்களின், எதிர்கொள்கிறான். இந்த ஆழமான, இருண்ட, இன்னும்-கண்கவர் விட எப்போதும் "berserker" செல்கிறேன் எக்ஸ் மென் வீர காவியத்தின் அத்தியாயம்!

In modern day Japan, Wolverine is out of his depth in an unknown world as he faces his ultimate nemesis in a life-or-death battle that will leave him forever changed. Vulnerable for the first time and pushed to his physical and emotional limits, he confronts not only lethal samurai steel but also his inner struggle against his own immortality, emerging more powerful than we have ever seen him before.



BAJATEY RAHO

There's always a wrong way to do the right thing!

Director:


Writers:

(story), (dialogue)

Stars:

, ,

மொட்டை மாடியில் படுக்கும் வ்ழக்கம் உள்ள இளம் தம்பதியர்களே! ஒரு சொல் கேளீர்

1. ஒரு பொண்ணு லோ கட் கட்டுனா ஜாக்கெட் இறக்கம்னு அர்த்தம், லோ ஹிப் கட்டுனா இ(ற)ரக்க சுபாவம் அதிகம்னு அர்த்தம்



--------------------------


2. கச்சத்தீவை மீட்பேன் என்ற ஜெ 22 ஆண்டுகளாக என்ன செய்தார்? - கருணாநிதி   # 44 வருசமா நீங்க என்ன செஞ்சீங்களோ அதான் அவரும் செஞ்சார்


----------------------------------


3. ஃபிகரிடம் பிச்சை கேட்டாவது இச் -சை பெறுக # ரீ மிக்ஸ்



-----------------------


4. நான் முத்தம் குடுக்க உன் உதடு நெருங்குகையில் நீ சிரித்து விடுகிறாய்! நான் அந்த அழகை ரசிப்பதா? இதழை புசிப்பதா? என்ற குழப்பத்தில்!



----------------------

5. அன்பே! நீ எச்ச பண்ணுனாலும் எனக்குப்பிடிக்கும், எச்சா பண்ணாலும் பிடிக்கும் # கச்சா முச்சா கவுஜ




-------------------------


6. அங்கிள் என அழைத்தால் உங்க அக்காவை சைட் அடிப்போம், அண்ணா என அழைத்தால் உங்க தோழியை சைட் அடிப்போம் # விடாது பொழப்பு



--------------------------


7. கருணாநிதிக்கு செலக்டீவ் அம்னீஷியா நோய் - பரிதி இளம்வழுதி # போயஸ் ல இந்த கொஸ்டின் பேப்பர் ஆல்ரெடி அவுட் ஆகிடுச்சே நைனா




------------------------------

8. காதலி கிட்டே கிஸ் வாங்க ஒரு குறுக்கு வழி # ஏய், என் கன்னத்துல எச்சி பண்ணாதே!



-----------------------



9/ நீ ஒரு இண்ட்டர்நேசனல் ஃபிகர்! நான் ஒரு லோக்கல் பையன் , சமத்துவபுரம் காண்போம் வா!




--------------------------


10. தொட்டாசிணுங்கி தாவரம் நீ! உன்னை தினம் தொட தா வரம் நீ!



---------------------------



11. நானும் ஹன்சிகாவும் நல்ல தம்பதிகளாக வாழ்ந்து காட்டுவோம்-சிம்பு! #சாங்க் டெடிகேட்டட்.நீல நயன ங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது




----------------------------


12.  தம்பதிகளுக்குள் சண்டை வந்தா புருசன் தான் திண்ணைல படுக்கறான்.இந்த பொண்டாட்டிங்க எல்லாம் ஜம்முனு வீட்ல FAN காத்துவாங்கறாங்க ்




-------------------------------

13. மொட்டை மாடியில் படுக்கும் வ்ழக்கம் உள்ள இளம் தம்பதியர் இன்று அதை தவிர்க்கவும்.ஆடி பவுர்ணமி என்பதால் செம வெளிச்சம்.



---------------------------




14 குஷ்புவை கேட்டுதான் திமுக.வின் கொள்கையை தெரிஞ்சுக்கனும்” -பரிதி# விட்டா சுப்ரபாரதத்துக்கு அர்த்தமே சுந்தர் சி சொன்னாதான் புரியும்பாரோ?



-----------------------------


15. WELL SAID = கிணறு சொல்லுச்சு # சபாஷ் துபாஷ்




-------------------------------


16. பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்வில் அடையும் அதிகபட்ச அவமானம் அவன் அதீத அன்பு.வைத்த ஒரு பெண்ணால் தான் நிகழும்




----------------------------------



`17   சேலை கட்டியிருக்கும் குடும்பப்பெண்களுக்கு முந்தானை சரி செய்தல் ஒரு அனிச்சைச்செயல் ஆகி விட்டது



--------------------------



18. கண்டிப்பான ஒரே ஒரு பார்வை மூலம் தன்னைச்சுற்றி பாதுகாப்பு வேலி போட்டுக்கொள்ள ஒரு பெண்ணால் முடியும்


-------------------------


19. அன்பே.நீ ஒரு தோசை துரோகி.ஆனியன் தோசை சுட்டுத்தர்றேன்னு வாக்க்கு குடுத்துட்டு சாதா தோசை சுட்டு டிபன் பாக்சில் போட்டிருக்கியே?




---------------------------


20. ஆபீசில் இருக்கும் 7 கேரளா லேடி ஸ்டாபை ஓணம் பண்டிகைக்கு ஊருக்கு அனுப்பி விட பொறுப்பான ஆள் நான் தானாம்.டேமேஜர் டூ எம் டி .மீ வி புசி;-))




----------------------------

Thursday, July 25, 2013

தேவிப்ரியாவின் இரண்டாவது அத்தியாயம்

அனைவருக்கும் அன்பு வணக்கம்., 



இது என்னோட இரண்டாவது அத்தியாயம், முதல் அத்தியாயத்தில் எனக்கு ஆதரவு தந்த அணைத்து உள்ளங்களும் எனக்கு இந்த முறையும் ஆதரவு தரவேண்டும் , முதல் அத்தியாயத்தை போலவே இதிலும் ஒரு கருப்பொருளை (theme) மையமாக வைத்து ஆரம்பித்திருக்கிறேன். 



முதல் அத்தியாயத்தின் கருப்பொருள் “காப்பி பேஸ்ட்”. “காப்பி பேஸ்ட்” ஏன் செய்கிறார்கள்,எதற்கு செய்கிறார்கள் என்று யோசித்து போது அது அங்கீகாரம் (RT) பெறுவதற்காகவும் பாலோவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொள்ளவும் செயப்படுகிறது என தெரிய வந்தது. 



ஆனால் அவர்களுக்கு தெரியாது இங்கே அனைவரும் ஆரம்பத்தில் ஏதோ தங்களுக்கு தெரிந்ததை எழுதி பின் சிலரின் எழுத்துக்களை படித்து அதிலிருந்து கற்றுக்கொண்டு எழுத ஆரம்பித்தவர்கள் என்று. காப்பி பேஸ்ட் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் கற்பனை திறனும் யோசிக்கும் திறனும் இருக்கும் இல்லையெனில் காப்பி பேஸ்ட் செய்து RT & Followers பெறமுடியும் என யோசித்திருக்க முடியாது. இப்பொழுது அவர்களை குற்றம்சாட்டவில்லை உதாரணமாக சொன்னேன். 



சரி இனி இந்த அத்தியாயத்தின் கருப்பொருளை சொல்கிறேன்., “ட்வீட் செய்ய யோசி” இதுதான் தலைப்பு. ஒரு சில நேரங்களில் டைம் லைனை கவனித்தால் ஏதாவது ஒரு தலைப்பை வைத்தே கீச்சுக்கள் கீச்சப்படுகின்றன அது போல நாமும் ஒரு தலைப்பை கொடுத்து அதற்காக கீச்சப்படும் கீச்சுகளில் சிறந்த கீச்சுக்களை தேர்வு செய்து அன்றைய தினத்தின் சிறந்த கீச்சாக அறிவித்தால் யோசித்து கீச்சும் ஆர்வம் அதிகரிக்கும் எழுதும் ஆர்வமும் அதிகரிக்கும் என்பது என் எண்ணம். 



இதுபோல ஏற்கனவே சிலர் செய்திருந்தாலும் என்னுடைய புதிய முயற்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். சிறந்த கீசுக்களை தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் யார் என்பதை முடிவு செய்து அறிவிக்கபடுவார்கள்.



நன்றி.

பாயுமானவன்

1. அடிக்கடி என் வீதிப்பக்கம் சுத்திட்டுஇருக்கே, எந்த நம்பிக்கைல? நான் உங்களை விரட்ட மாட்டேன்னு நினைச்சீங்க?


மிஸ்! நீங்க எச்சில் கையால காக்காவைக்கூட விரட்ட மாட்டீங்க, என்னை எப்டி? 

 ----------------------------\


2. டியர், உங்களை கண்மூடித்தனமா காதலிக்கிறேன் .



நல்ல வேளை  கண்ணைத்திறந்து பார்க்கலை




------------------------------




3. டியர், உங்க மடிலயே 24 மணி நேரமும் படுத்திருக்கனும் .



ம்க்கும், நான் என்ன உனக்கு பாயுமானவனா?






---------------------------




4. மாப்ளை ,என் பொண்ணு எப்பவும் சிரிச்சுட்டே இருக்கனும் .



சாரி மாமா, நான் ஆஃபீஸ் போகனும் , கிச்சு கிச்சு மூட்டிட்டே எல்லாம் இருக்க முடியாது






----------------------------


5. டியர், என் சொந்த ஊருக்கு போகலியா?ன்னு கேட்கறியே, என் மேல அவ்வளவு அக்கறையா?



 உங்க கைல காசே இல்லை, ஊருக்குப்போயாவது அம்மாட்ட வாங்கிட்டுவாங்க




-----------------------------


6. மிஸ்! உங்க வயசு என்ன?


  30 பிளஸ்.


கரெக்ட்டா சொல்லுங்க , 45வயசுகூட 30பிளஸ் 15கேட்டகிரிலதான் வரும்






-----------------




7. எனக்கு லவ்  எல்லாம் சரிப்”பட்டு” வராது .



அப்புறம் ஏன் என் மேல பட்டுக்கிட்டே இருக்கே? தள்ளி நில்லு






------------------------




8. மிஸ்! ஐ லைக் யூ! ஏன்னா  நீங்க என் ஊர்க்காரர் .



அடப்பாவி , இந்த ஊர்ல 67,500 பொண்ணுங்க இருக்காங்க, அத்தனை பேரையும் லைக்குவியா?






---------------------




9. என்னைப்பிடிச்சிருக்கா?



  ம்ஹூம் .


உனக்கு என்ன தான் பிடிச்சிருக்கு?


  போட்டிருக்கும் ஜாக்கெட் செம டைட் அதுதான் ரொம்ப பிடிச்சிருக்கு




--------------------------

10. டியர், எனக்குக்கோபம் வந்தா அதை உங்க கிட்டே மட்டும் தானே காட்ட முடியும் ? 


எதுவா இருந்தாலும் அப்டியே மெயிண்ட்டெயின் பண்ணிக்க ;-)



------------------------


11.  HM- டீச்சர் சொன்ன அறிவுரைகளை" பின் பற்றி" நடந்தா உனக்கு நல்லது. 




.ஓக்கே சார்.எனக்கு நல்லாதான் இருக்கும்.அவங்க ஏதும் திட்ட மாட்டாங்க்ளா?


-------------------------------


12. டியர்.என்னை தீவிரமா லவ் பண்றீங்க்ளா?,



ச்சே ச்சே அப்டி எல்லாம் இல்லை.ஆனா பிடிக்கும்.மேரேஜ் ஆனா இந்த மடம்.ஆகாட்டி வேற இடம் 


--------------------


13. டியர்.நாம லவ் பண்ணி சுமாரா எத்தனை வருசம் இருக்கும்? 



 ஒரு வருசம் கூட சுமாரா இல்ல 5,வருசமும் சூப்பரா இருந்துச்சு 


--------------------------


14. மிஸ்.உங்க வாய்ஸ் கேட்டேன்.சோ ஸ்வீட். 



 ஆமா.பாடறதுக்கு முன் மைசூர்பாக் சாப்ட்டேன் 



---------------------------


15. மேடம்.உங்களுக்கு ஒரு 36 வயசு இருக்குமா ?



 யா யா வயசும் 36 தான் # இன்ட்டர்வ்யூ 



------------------------



16. டியர்.நீங்க சொன்னபடி எனக்கு கவர்மென்ட் ஜாப் கிடைச்சுடுச்சு.உங்க வாய்க்கு சர்க்கரைதான் போடனும்.


ம் ம் ஏன் ஒரு முத்தத்தைப்போடேன் 



-------------------


17. நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மாஆ 


. பா ரதி கண் ணம்மாஆ - டேய்.லூசு.ரதியும் நான் தான் கண்ணம்மாவும் நான் தான் 



-----------------------


18. சர்ச் வாரன்ட் டோட வந்திருக்கோம்.உங்க வீட்டை சோதனை பண்ணனும், 



சாரி.இன்ஸ்பெக்டர்.நீங்க சர்ச்சைத்தான் சோதனை பண்ண முடியும் 




----------------------------



19. டியர்.என் டி சர்ட் எப்டி ?



 ம் ம் ரி மார் க்கபிள் ;-))) 


---------------------------


20. டியர்.மாசமா இருக்கேன்.தாலி கட்டுங்க.



 சாரி.எக்கனாமிக்கலி நான் ரொம்ப மோசமா இருக்கேன்.உன்னை வேனா கட்றேன் 



--------------------------








Wednesday, July 24, 2013

கர்ப்பக் காலத்தில் எப்படிச் சாப்பிடணும்..?



கர்ப்பக் காலத்தில் எப்படிச் சாப்பிடணும்..?



ஆஃபீசுக்கு நேரமாச்சேன்னு அவசரமா கிளம்பிக்கிட்டு இருக்கிற கர்ப்பிணிப் பெண்ணா நீங்க?

ஒரு நிமிஷம்....
பிரபல நியூட்ரீஷியன் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் என்ன சொல்றார்னு கேளுங்க..
முதல் மாசத்துலே இருந்தே அதிகம் சாப்பிடணுமா டாக்டர்..? என்ன சாப்பிடலாம்..?"
ரெண்டு பேருக்குச் சேர்த்து சாப்பிடணும்னு இல்ல. வழக்கமா உட்கொள்வதை விட 300-500 கலோரிகள் அதிகமா இருந்தால் போதும். மூன்று இட்லி சாப்பிடற வங்க ஒண்ணு கூட சாப்பிடலாம். ஒரு கப் பால் சாப்பிடணும். அதிலே புரோட்டீன், கால்ஷியம் நிறைவா இருக்கு. காலையிலே காஃபி குடிக்கிறப்ப கூட கொஞ்சம் பாலைச் சேர்க்கலாம்."
காலையில ப்ரேக் ஃபாஸ்ட் நிச்சயமா சாப்பிடணும். பதினொரு மணிக்கு கொஞ்சமா பழம், மோர், சுண்டல் இப்படி எடுத்துக்கலாம்."


லஞ்ச் ஹெவியா இருக்கணுமா..?"
வழக்கமா ஒரு கப் சாதம்னா, கர்ப்பமாய் இருக்கறப்ப, கூட அரை கப் சாப்பிடலாம். கண்டிப்பா பருப்பு இருக்கணும். முளைவிட்ட பருப்புகள், சுண்டல், சோயா பனீர் (டோஃபூ) இவற்றில் ஏதாவது அவசியம் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை சாப்பாட்டுல அவசியமா இருந்தே ஆகணும்.."
மதிய உணவுல பச்சை, ஆரஞ்ச், சிவப்புநிற காய்களான கீரை, பீன்ஸ், அவரை, கேரட், தக்காளி போன்றவை கண்டிப்பாக இருக்கணும். சில பெண்களுக்கு நீர் கோத்துக் கொண்டு கால் பாதங்கள் வீங்கி விடும். இவர்கள் பார்லி நீரைத் தொடர்ந்து அருந்திவர நிவாரணம் கிடைக்கும்."
இந்தியாவிலேயே முதல் முறையாகடைஜஸ்ட்என்ற பெயரில் உணவுக்கெனவே ஒரு கம்ப்யூட்டர் மென்பொருளை உருவாக்கியுள்ளார் தாரிணி. அதன் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான உணவு மருத்துவர்களும் மாணவர்களும் பயன்பெற்று வருகிறார்கள்.


நன்றி-மங்கயர்மலர்

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்


இனிய காலை வணக்கம் நண்பர்களே...
இனிய காலை வணக்கம் நண்பர்களே...

---------------------------

1. ஹெட்ஃபோனில் பாட்டு கேட்பவர்களுக்கு காது அவுட்டாகிவிடும்… ஆய்வில் எச்சரிக்கை # அய்யா.சிங்கம் பார்த்தே எதும் ஆகல



-------------------------


2. எப்பவாவது நடந்தா விஜய்.எப்பவும் நடந்துட்டே இருந்தா அஜித்


-------------------------


3. தமிழர் கட்சியில் சேராதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்குப் பிறக்காதவர்கள்-சீமான் # .கட்சி ஆரம்பிக்கறதே கபோதிங்க வேல ஏன் சாக்கடைக்கு என்ட்டரிங்?


-------------------------


4. சிங்கம் 3 எடுக்கும் எண்ணம் உள்ளது-ஹரி# எங்கள் காதுகளை கெடுக்கா வண்ணம் எடுத்தா தேவல



--------------------------


5. என்னை நேசிக்க உன்னால் முடியவில்லையென்றால் முயற்சி செய்! பயிற்சி செய்



--------------------------




6. சம்சாரம் என்ன திட்னாலும் சகி



-------------------------


7. ஆனந்தம் என்பது ஆனந் தம் அடிப்பது.!""



-----------------------


8.  சேலையை அயர்ன் பண்ணிக்குடுத்தா ஆனியன் தோசையாம் # மிரட்டல் நாயகி சம்சாரம் ஒழிக !


------------------------


9.  ஓ உன்னாலே நான் மண்ணாங்கட்டி ஆனேனே !


என் அருகில் நீ இருந்தால் மணிபர்ஸ் காலி ஆவது ஏன்?



--------------------------


10 உன் அன்பு தான் எனக்கு யானை பலம் தருகிறது.உண்மையில் நீயே ஒரு குட்டி யானை தான்.டாடா ஏஸ் வண்டி மாதிரி




-------------------------



 11. தொலைவில் இருக்கையில் நெருக்கம் ஆனாய்! அருகில் வருகையில் விலகிப்போகிறாய்!


-------------------------


12. ஒரே வார்த்தை .ஓர் ஆயிரம் அர்த்தம் # வஞ்சி


-----------------------


13. விடிகாலைல 3 மணிக்கு முழிச்சாலும் ஜப்பான் ரவி கடலை தான் போடறார்.நைட் 8 மணிக்கு வந்தாலும் அதான்.தொழில் பக்தின்னா இப்டித்தான்யா இருக்கனும்



--------------------------


14. காமராஜரின் கனவை மத்திய அரசு நனவாக்கி வருகிறது: ஜி.கே. வாசன்!# இப்டி எல்லாம் கோடிக்கணக்குல ஊழல் பண்ணுவீங்கனு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டார்



-----------------------------


15. செய்தி: // அம்மாவின் உண்மையான நாய்கள் நாங்கள். - அமைச்சர் பழனிசாமி/ /# நன்றி சொல்லவே உமக்கு என் மன்னவா வேறு வார்த்தை இல்லையா?



---------------------------




16 விஜய் சினிமாத்தனம் இல்லாதவர்... தயாரிப்பாளர்களின் நடிகர்' - சந்திரபிரகாஷ் ஜெயின் # விழா மேடைல கூட நல்ல நடிகர்னு பேர் வாங்குவாரே



-------------------------


17. சவுண்ட் நாலெட்ஜ் - இரு எதிர் துருவங்கள் 1 மணிரத்னம் 2 ஹரி


------------------------


18. இந்தியாவின் கடைசி தந்தி ராகுலுக்கு அனுப்ப பட்டது #முடிவு காலம் நெருங்கிடுச்சுனு சிம்பாலிக்கா சொல்றாங்ளோ?



-----------------------------


19. அருள்நிதி நடிக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்! # ஹீரோயின் நயன் தாரா .ஹீரோ சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா?



-------------------------


20. அஜீத்தை சிறிய நடிகர் என தவறாக நினைத்துவிட்டேன். ஷாருக்கான் # ரொட்டி சாப்ட்டா மூளை கெட்டி ஆகிடும்.பழைய சோறு சாப்பிடுங்க


---------------------------


அவ்வப்போது கிடைக்கும் விடுமுறை நேரங்களில்
காதலும் அழையா விருந்தாளியாக
மரக் கிளையில் உட்கார்ந்து கொள்கிறது!