Tuesday, May 21, 2013

பிரபல எழுத்தாளர்கள் 5 பேரின் மனைவிகள் பேட்டி

சாக்ரடீஸை நண்பர் ஒருவர் சந்திக்க வந்திருந்தார். பேசிக்கொண்டிருக்கும்போது உள்ளே கடமுடா என்று பாத்திரங்கள் உருளும் ஓசை. நண்பர் கேள்விக்குறியாகப் பார்க்க சாக்ரடீஸ், ''ஒன்றுமில்லை, உள்ளே இடி இடிக்கிறது'' என்றார். சற்றுநேரம் கழித்து உள்ளே கோபத்தில் இருந்த மனைவி, ஒரு வாளித் தண்ணீரை சாக்ரடீஸ் மீது வீசியடித்தார். அதிர்ந்துபோன நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ், ''இடி இடித்ததல்லவா..? இப்போது மழை பெய்கிறது அவ்வளவுதான்'' என்றார்.

 
எல்லா எழுத்தாளர்களின் மனைவிகளுமே இப்படி, 'என்னத்தையோ வேலைவெட்டி இல்லாம எழுதிக் கிழிக்கிறாரு’ என்று அலுத்துக்கொள்ளும் ரகம்தானோ?


தமிழ் நாவலாசிரியர்களின் திருமதிகளைச் சந்தித்த போது...


1. முதலில் ரா.கி.ரங்கராஜன் வீடு...


''பிரபல எழுத்தாளரான உங்க கணவருக்கு நீங்கள் எப்படி அனுசரணையாக இருக்கிறீர்கள்...?'' என்று கமலா ரங்கராஜனிடம் கேட்டபோது...
''உயிரே போற மாதிரி தலையைப் பிச்சுக்கிட்டு, வீட்டையே ரெண்டு பண்ணிக்கிட்டுக் கதை எழுதற ரகம் இல்லை இவர். யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராம, அவர்பாட்டுக்கு எழுதிக்கிட்டிருப்பாரு. எழுதும்போது லேடீஸ் பத்தி ஏதாவது சந்தேகம் வந்தா, என்னைக் கூப்பிட்டுக் கேட்பாரு... 'கேரக்டருக்கு என்ன டிரெஸ் இருக்கலாம்... காதில் மாட்டறதுல லேட்டஸ்ட்டா வந்திருக்கிற டிசைன் என்ன?’னு கேட்பாரு. நானும் சொல்வேன். சினிமா பார்த்து விமர்சனம் எழுதுவாரே தவிர, நடிச்சிருக்கறவங்களோட பேரு தெரியாது. என் கிட்டதான் கேட்பாரு'' என்றார் கமலா ரங்கராஜன்.


'நான் கிருஷ்ணதேவராயன்’ தொடரை ரா.கி.ரங்கராஜன் விகடனில் எழுதிக்கொண்டு இருந்தபோது, அதற்குத் தேவையான புத்தகங்கள் அனைத்தையும் கன்னிமரா நூலகத்தில் இருந்து எடுத்துவந்து கொடுத்தவர் கமலா. தன் கணவர் எழுதி, வாரப் பத்திரிகைகளில் பிரசுரமான அனைத்துப் படைப்புகளையும் அழகாக பைண்டு செய்து வைத்திருக்கிறார்.


''இலக்கியரீதியான உதவியா இல்லேன்னாலும் கமலா இல்லைன்னா, நான் இவ்வளவு எழுதியிருக்க முடியாது. குடும்பப் பிரச்னையை அவள் என்னிடம் கொண்டுவர்றது இல்லை. புத்தகம், கேஸட்ஸ் எல்லாத்தையும் அவள் தான் அடுக்கிவெச்சிருக்கா. கேட்டதும் சட்டுனு எடுத்துக் கொடுப்பா... இதெல்லாம்தான் ஒரு எழுத்தாளனுக்கு அடிப்படை உதவிகள். அது அத்தனையும் கமலா பார்த்துப்பா...'' என்று நெகிழ்ந்தார் ரா.கி.ரங்கராஜன்.


2. அடுத்து 'சுபா’. அதாவது, சுரேஷ்-பாலகிருஷ்ணன். இந்த எழுத்தாள இரட்டையர் குடியிருப்பது ஒரே பங்களாவுக்குள்!


முதலில் ஜெயந்தி சுரேஷிடம் பேசினோம். சுரேஷைக் கல்யாணம் செய்துகொள்வதற்கு முன்பே அவர் எழுதிய கதைகள் மீது அதீதக் காதல் ஜெயந்திக்கு. ''அப்பவே கதைகளைப் படிச்சுட்டு போன் செய்து பேசுவேன்'' என்று சிரிக்கிறார்.


''எப்பவுமே கண்ணையும் காதையும் திறந்துவெச்சுக்கிட்டே இரு’னு எங்க அக்கா சொல்வாங்க... (ஜெயந்தியின் அக்கா - எழுத்தாளர் அனுராதா ரமணன்). எனக்குத் தெரிஞ்ச, கேள்விப்பட்ட கேரக்டர்ஸை அவரிடம் சொல்வேன். 'புத்திசுவாதீனம் இல்லாத தம்பியின் கிட்னியை எடுத்து அண்ணனுக்கு வெச்சாங்க’ என்ற 'கோழிக்குஞ்சு’ கதைக்கான கருவை நான்தான் சொன்னேன். அதே மாதிரி வித்தியாசமான நியூஸ் எது வந்தாலும், அவர்கிட்ட எடுத்துக் காண்பிப்பேன்'' என்றார் ஜெயந்தி.


''எழுதும்போது அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. அதனால பக்கத்தில் போறதையே தவிர்த்துடுவேன்'' என்ற ஜெயந்தியிடம், 'சுரேஷ் டிக்டேட் செய்து எழுதியிருக்கீங்களா..?’ என்று கேட்டபோது, சுரேஷ் பதில் சொன்னார்:


''உடம்பு சரியில்லாதபோது, ஒரு தடவை டிக்டேட் செய்தேன். அவங்க எழுதினாங்க. ஆனா, அது சரியா வரலை. பொதுவா டிக்டேட் செய்து எழுதுவது திருப்தியா அமையறது இல்ல. எங்களுக்குள்ளேயே (அதாவது, நானும் பாலாவுமே) டிக்டேட் செய்து எழுதிக்கிறதுஇல்லே.''


பாலாவுக்கு வரும் கடிதங்களுக்குப் பதில் போட்டு, அவரின் ரசிகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்புவது எல்லாம் அவர் மனைவி யசோதா பாலகிருஷ்ணன்தான். ''எழுத்தாளரோட வீட்டுக்கு யார் யாரோ தேடி வருவாங்க... அவங்களை எல்லாம் பார்த்து, உட்காரவைத்துப் பேசிக்கிட்டு இருக்க முடியாது. எனவே, நானே ஃபில்டர் பண்ணிக் குறைச்சிடுவேன்...'' என்கிறார் யசோதா.  ''நான் எழுதும்போது ரொம்பக் கோபக்காரன். என் மூஞ்சியைப் பார்க்கவே சகிக்காது...'' என்ற பாலாவைத் தொடர்ந்து யசோதா பேசினார்:
''அதனால பசங்களை மேல் மாடிக்குப் போகாம பார்த்துப்பேன். குடும்ப விஷயங்களைக் கடைசியாத்தான் கொண்டுபோவேன்...'' என்ற யசோதா பாலகிருஷ்ணனுக்கு ஸ்ரீவைஜெயந்தி, ஸ்ரீகமல்குமார் என்ற இரண்டு குழந்தைகள்.


சுரேஷ் - ஜெயந்தி தம்பதிக்கும் கிருத்திகா, சுஜைய் கிருஷ்ணா என இரண்டு குழந்தைகள். ''இதிலும் ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று ஒற்றுமைதானா..?'' என்று கேட்டால், ''அதுவா அமைஞ்சதுதான்...'' என்று சிரிக்கிறார்கள் 'சுபா’!



3. எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் மனைவி கோகிலாவைச் சந்தித்தபோது, ''இவர் எழுதுறதை எல்லாம் நான் கதையாவே நினைக்கல. அதுக்குப் பிறகு நிறையப் பேர் ஆராய்ச்சி பண்றதுக்கு எல்லாம் இவர் கதையைத் தேடி வந்தபோதுதான்... 'சரி, இதுலயும் ஏதோ இருக்குது’னு புரிஞ்சுக்கிட்டேன்...'' என்றார்.


''எழுதுற மாதிரிதான் நடந்துப்பார். ஏழைகளுக்கு உதவுவார். பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாடி தனக்குக் கிடைத்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக இவர் கொடுத்தபோது, எனக்கு வருத்தமாதான் இருந்தது. ஆனா, இப்போ திருநங்கைகளுக்காகப் பத்தாயிரம் ரூபா கொடுத்தப்போ, சரின்னுட்டேன்...'' என்றார் கோகிலா.


''வெளியே எங்கேயாவது போயிட்டு வந்தா திட்டுவாங்க... எழுதும்போது திட்ட மாட்டாங்க. எழுதிக்கிட்டிருக்கும்போது நான் திட்டினாலும் திருப்பித் திட்ட மாட்டாங்க...'' என்று சொல்லிச் சிரிக்கிறார் சமுத்திரம்!


''4.  'இவர் கதை எழுதுவதையே விட்டுவிட்டால் நல்லது’ என்று நான் நினைப்பதும் உண்டு...'' - இது ராஜேஷ்குமாரின் மனைவி தனலட்சுமி நம்மிடம் சொன்னது.


'' 'ஒரு ராஜாளியும் ஒரு புல்புல் பறவையும்’ என்ற கதையில் மில் தொழிலாளிகளின் தவறான செயல் பற்றி எழுதியிருந்தார். அதைச் சில தொழிலாளர்கள் எதிர்த்தார்கள். 'கையை வெட்டுவோம்... காலை வெட்டுவோம்’னு மிரட்டினாங்க. இன்னொரு சமயம், இவர் பற்றி ஒரு பத்திரிகையில் வந்த கிசுகிசுவைப் படித்துவிட்டு உறவினர்கள் துக்கம் விசாரித்தபோது, மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டுவிட்டேன்...'' என்று சோகப்பட்டார் தனலட்சுமி.


ராஜேஷ்குமாருடன் வெளியே போவதென்றால் தனலட்சுமிக்கு அலர்ஜியாம். ''எங்கே போனாலும் ரசிகர்கள் சூழ்ந்துக்கிறாங்க. இவருக்கும் நம்ம ஞாபகம் வர்றதில்லை. பிரபல எழுத்தாளரின் மனைவி என்ற சந்தோஷத்தைவிட, எனக்குச் சங்கடங்களே அதிகம். கொஞ்சம் கொஞ்சமா இதுதான் நம் வாழ்க்கைனு என்னை முழுமையா மாத்திக்கிட்டேன். இப்போது இவரின் முதல் ரசிகை யும் விமர்சகருமாகிவிட்டேன்...'' என்று வேகமாகச் சொன்னார் தனலட்சுமி.


5. கொஞ்சம் உரக்கப் பேசினால் மொத்தக் கிராமமும் வீட்டின் முன் திரண்டுவிடும் அளவுக்குக் குட்டிக் கிராமம் விருதுநகர் மாவட்டத்தின் மூலையில் இருக்கும் மேலாண்மறைநாடு. பேட்டி முடியும் வரை அடுக்களைக்குள் இருந்து பாதி முகம் மட்டும் காட்டிப் பேசிக்கொண்டிருந்தார் மேலாண்மை.பொன்னுச்சாமியின் மனைவி பொன்னுத்தாய்.


''எழுதும்போது யாரும் தொந்தரவு பண்ணக் கூடாது... முணுக்குனு கோவம் வந்துடும் அவருக்கு. நான் பொம்பளை... வீட்டுல வேலை பாக்கையில ஊடமாட ஏதாவது புலம்பிக்கிட்டே இருப்பேன். உடனே பொல்லாக் கோவம் வந்துடும் அவருக்கு. எழுதினதை அப்படியே போட்டுட்டு, எந்திரிச்சு வெளியே போயிடுவாரு. அவரு போனது தெரியாம நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருப்பேன். அப்பால சத்தத்தையே காணோம்னு அடுப்படியில இருந்து எட்டிப்பார்த்தா, இவரு இருக்க மாட்டாரு. கொஞ்ச நேரம் செண்டு திரும்ப வருவாங்க. 'நீ பேசிக்கிட்டே இருந்த... அதான் போயிட்டேன்’னு சொல்லுவாரு. அப்புறம்தான் நம்ம தப்பு புரியும்...'' என்றார் பொன்னுத்தாய்.


''கதை எழுதும்போது அவருக்குத் தெரியாத, எனக்குத் தெரிஞ்ச சங்கதி எதுனா இருந்துச்சுன்னா, கதைக்கு வேணும்னு கேக்காம... சும்மா கேக்கிற மாதிரி கேப்பாங்க. நானும் எதுக்கோ கேக்கிறாருனு சொல்லிடுவேன். பொறங்காட்டி, நான் சொன்னது அவரு எழுதுன கதைல இருக்கிறதைப் பொஸ்தகத்திலேர்ந்து படிச்சுக் காட்டுவாரு. எனக்கு வெட்கமாப்போயிடும்...''


''உங்கள் கணவர் எழுதிய கதைகளைப் படித்திருக்கிறீர்களா..?'' என்றதும் தயங்காமல், ''நான் படிக்காதவ. எனக்கு பொஸ்தகமெல்லாம் வாசிக்கத் தெரியாது. அவரு கதைகளை பாப்பாதான் வாசிச்சுக் காட்டுவா. கேக்குறப்ப பெருமையா இருக்கும்...


வெளியூர் கூட்டங்களுக்குப் போகும் போது டிரெஸ் செய்துகொண்டு (கதர் சட்டை, வேட்டிதான்) மனைவியிடம் 'மேட்சிங்காக இருக்கிறதா?’ என்று கேட்டு விட்டுத்தான் செல்வாராம் பொன்னுச்சாமி. ''அவருகூட நான் அதிகமா கூட்டங்களுக்குப் போனதில்லை. படிக்காதவ நாம எதுக்குனு சள்ளையா இருக்கும். ஆனாலும், 'நானே போறேன்... உனக்கென்ன’னு வற்புறுத்திக் கூப்பிடுவாரு. ஒண்ணு ரெண்டு கூட்டத்துக்குப் போயிருக்கேன். என்னமா பேசுறாருன்னு பிரமிப்பா இருக்கும்.


சின்ன வயசுல அவர் பட்ட அத்தனை சிரமங்களையும்தான் இப்ப கதையா எழுதறாரு. அதனாலதான் அதுல ஒரு நிஜமும் உயிரும் இருக்கு. இன்னும் அவர் வாழ்க்கையை வெச்சு எத்தனையோ கதைகள் எழுதலாம்'' என்கிறார் பொன்னுத்தாய்.


- பாலா, எஸ்.தேவராஜ், ப.திருமாவேலன்


படங்கள்: உசேன், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.கே.முருகேசன்
நன்றி - விகடன்

உங்களுக்கு அமைஞ்ச ஃபிகரு ஒரு ”தீர்த்த தரிசி”யா? அய்யய்யோ ஆபத்து

1. டேமேஜர் - இந்த பிராஜக்ட்டுக்கு உங்க மேக்சிம் கோஆபரேஷன் எதிர்பார்க்கிறேன். 



ஸ்டெனோ ஸ்ருதி - வாட்?


 டேமேஜர் -சாரி.மேக்சிமம்.



-------------------------


2. பிரதமரை மாற்றும் எண்ணமில்லை:காங்கிரஸ்# நயன் தாராவே லவ்வரை மாத்துனாலும் காங்கிரஸ் பிரதமரை மாத்தாது போல




----------------------


3. அன்பே.நீ ஒரு தீர்த்த தரிசி.உன் கண் முன் மாங்கா தேங்கா பட்டாணி எதைப்பார்த்தாலும் வாங்கி சாப்பிட்டு தீர்த்து விடுகிறாயே!



--------------------------


4. திமுக தனித்து நின்றாலே 20 இடங்களில் வெற்றி பெறும்- கே.என்.நேரு # சி எம் முன் நேரு க்கு நேரா சொல்ல திராணி இருக்கா ?


---------------------


5. மேரேஜ் ஆன பொண்ணுங்களின் அறிவிக்கப்படாத யூனிபார்ம் நைட்டி



-----------------------


6. என்னது? லிப்ஸ் லவ் யூ வா? புரியலையே? 



நேத்து ஐ (EYE) லவ் யூ சொன்னேன்.இன்னைக்கு லிப்ஸ் லவ் யூ.நாளை நெக் லவ் யூ ஹி ஹி 



-------------------------


7. டியர், இப்போத்தானே கிஸ் அடிச்சீங்க, மறுபடி எதுக்கு ?



 ஹி ஹி இது மீள் முத்தம் 



-------------------------


8. டியர் , எனக்கு லூஸ் ஹேர் நல்லாருக்கா? ஜடை ஓக்கேவா?



 லூஸ் ஹேரே ஓக்கே தான் , ஜடை நல்லாருக்குன்னா பின்னி விடச்சொல்வே 



-----------------------------


9. டிரைவ் சேஃப்லி = எந்த ஃபிகரை ஓட்டறதா இருந்தாலும் அருகே அப்பா இருக்காரா?னு பார்த்து பின் கமெண்ட் அடி # சபாஷ் துபாஷ்


--------------------------


10. இது வரை எந்தத்தப்புமே செய்யாத நான் உன்னைப்பார்த்ததும் மனம் மாறி விட்டேன் # டெய்லி உப்புமா செஞ்சா தப்புமா


--------------------------


11. நயாகரா அருவி போல பிரம்மாண்டமாய் என்னுள் நீ இறங்குகிறாய் என்றால் அது ஃபால்ஸ் இன்ஃபர்மேஷன் ஆகி விடாது



------------------------


12.  காலையில் எழுந்ததும் உன் முகத்தில் விழித்தேன் # ரிஸ்க் எடுக்கறது நமக்கு ரஸ்க்  சாப்பிடற மாதிரி , ஹி ஹி



-----------------------


13.  போடா, இனி உன் கூட பேச மாட்டேன் என ஊடாடினாள் . அதான் இப்போ பேசிட்டியே? என நகையாடினேன்



---------------------------


14. சின்னச்சின்ன விஷயத்துக்கு எல்லாம் கிள்ளிக் கிள்ளி வைக்கிறாயே? நீ என்ன கிள்ளி வளவன் பரம்பரையா?




---------------------


15. டியர், பக்கத்துல நான் இருக்கும்போது ஏன் தனக்குத்தானே  பேசிட்டு இருக்கீங்க?



உன் கிட்டே பெசினா அது வாங்கிக்குடு இத வாங்கிக்குடுன்னு செலவு வைப்பியே?


----------------------

16. ரொமாண்டிக்காக பேசத்தெரியவில்லை என்று குறைபடுக்கொள்கிறாயே? எப்படிப்பேசுவது என சொல்லிக்காட்டித்தொலையேன் ;-)


------------------------


17. அன்பே! உங்கப்பா ஜெராக்ஸ் கடை ஓனரா? உன் தங்கச்சிங்க எல்லாரும் உன்னை மாதிரியே இருக்காங்களே?



-------------------


18. காதலியை மீன்கள் அதிகம் உள்ள குளக்கரை நீரில் நிற்க வைத்தால் பாதம் கடிக்கும் மீன்கள் கூச்சம் தாங்காமல் காதலி உங்களை கட்டிக்கொள்ள வாய்ப்பு



--------------------------



19. என் மன அழுத்தங்கள் அனைத்தையும் உன் உள்ளங்கையின் ஒரு ஆறுதல் அழுத்தம் மறக்கடித்து விடுகிறது



----------------------

20. செவிச்செல்வம்னா கம்மல் , ஜிமிக்கியா?




---------------------------

Monday, May 20, 2013

நேரம் - சினிமா விமர்சனம்

கே வி ஆனந்த் தின் கனா கண்டேன் படத்தின்  கதை முடிச்சை   சுவராஸ்யமான புது திரைக்கதை  வடிவில் அமைத்தால் அதுதான் மலையாள டப்பிங்க் படமான நேரம் படத்தின் கதை. 2 மணி நேர நறுக் சுருக் படம்.

ஹீரோவுக்கு திடீர்னு வேலை போய்டுது.சந்தர்ப்ப சூழ்நிலையால கந்து வட்டிக்கு பணம் கடன் வாங்க நேரிடுது.கடனை திருப்ப வேண்டிய கெடு நாள் ல  நண்பனிடம் கடன் வாங்கி கொடுக்கப்போகும்போது ஒருத்தன் பிக் பாக்கெட் அடிச்சுடறான். அதே நாள் தங்கையின் கணவர் பெண்டிங் டவுரிக்காக வசூலிக்க வர்றார். போதாத குறைக்கு ஒரு காதலி.வீட்டை விட்டு வெளில வந்துடறா.


 காதலனுக்காக காத்திருக்கும்போது அவ செயினை ஒருத்தன் அடிச்சுடறான். ஹீரோ இத்தனை பிரச்சனைல இருந்தும் எப்படி தப்பிச்சார்? என்பதை  ஒரு த்ரில்லர் படத்துக்கே உண்டான சுவராஸ்யத்துடன் சொல்லி இருக்காங்க .

 



 ஹீரோ புது முகம்  நிவின் ( வெற்றி ) . ஆள் செம ஸ்மார்ட் . பெண்களை வசீகரிக்கும்  முகம் .புது முகத்துக்கே உண்டான தயக்கங்கள் ஏதும் இல்லமால் அநாயசமா நடிச்சிருக்கார் . நல்ல எதிர்காலம் உண்டு . காதல் காட்சிகளில் பட்டும் ரொமான்ஸ் பத்தாது. நம்மளைப்போல கூச்ச சுபாவம் போல


ஹீரோயின் நஸ்ரியா நசீம் செம நைஸ். பிரனீதாவின் முகச்சாயல் ,  ஹன்சிகாவின் மனசு , நமீதாவின் தினுசு ,அக்னிநட்சத்திரம் அமலாவின் ரவுசு ,இதயத்தை திருடாதே( தெலுங்கு கீதாஞ்சலி ) கிரிஜாவின் நகாசு என கலந்து கட்டிய காக்டெயில்  குல்கந்து ஃபிகர் . தாரளமா 75 மார்க் போடலாம்.பளிங்குக்கற்களில் ஊற்றிய பாதரசமாய் அவரது கண்கள் இரண்டும் அலை பாயும்போது நம் மனமும் அலை பாயும்,

 பீட் ரூட் அல்வாவை தேனில் நனைத்து எடுத்தது மாதிரி அவர் உதடுகள் . ஷூட்டிங்க் ஸ்பாட்டில் ஈ மொய்ச்சிருக்கும். அவ்வளவு அழகு . சேலை , சுடிதார் என எந்த வித உடையிலும் கண்ணியமான தோற்றம் காட்டும் குடும்பப்பாங்கான கிளாமர் முகம் . தமிழில் அஞ்சலிக்கு சரியான போட்டியாக வருவார்னு தோணுது .

வில்லனாக  வரும் சிம்ஹா ஆர்ப்பரிக்க வைக்கும் வில்லத்தனமான நடிப்பு .வைதேகி காத்திருந்தாள் படத்தில் வெள்ளிக்கிழமை ராமசாமியாக வரும் ராதா ரவியின் கெட்டப் பில் கழுத்து நிறைய தங்கச்சங்கிலியில் வந்து மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கறார். படத்தின் முதுகெலும்பே இவர் நடிப்பை வழங்கி இருக்கார் . இவரது  பாடி லேங்குவேஜ் பிரமாதம் .


 ஹீரோயின் அப்பாவாக வரும் தம்பி ராமையா நடிப்பும் கன கச்சிதம் . போலீஸ் ஸ்டேஷனில் இவரது நடிப்பு சபாஷ் போட வைக்குது . போலீஸ் ஆஃபீசராக வரும் ஜான் விஜய் வசன உச்சரிப்பில் கலக்கறார் ( வ குவாட்டர் கட்டிங்க்கில் கலக்கியவர் )



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1. காதல் உள்ளே வந்த நேரம் பாடல் காட்சியில் ஒளிப்பதிவு , லொக்கேஷன் அட்டகாசம் .


2. டைட்டில் டிசைன் புதுமை . வித விதமான கடிகாரங்கள்  , கால மானிகள் என டைட்டிலை நினைவு படுத்த  இவர் எடுக்கும் முயற்சிகள் அட போட வைக்குது


3. ஹீரோ , ஹீரோயின் , வில்லன் உட்பட படத்தில் பங்கு பெற்ற அனைத்து நடிகர்களும் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்பை அளித்தது . அவர்களிடம் இயக்குநர் வேலை வாங்கிய விதம்


4. படத்தின் இயக்குநரே எடிட்டர் என்பதால் ஷார்ப்பான எடிட்டிங்க் . ஸ்லோ மோஷன் காட்சிகள் ஒரு படத்துக்கு எந்த அளவு முக்கியம் என்பதை  உணர்ந்து செய்திருக்கிறார்


5. வசனகர்த்தாவின் நக்கலான , நையாண்டித்தனமான் நகைச்சுவை உணர்வு படம் பூரா விளையாடி இருக்கு. கேரக்டர்களுக்கு பெயர் சூட்டுவதில் இருந்து , பழமொழி , சின்னச்சின்ன வசனங்களில் கூட மெருகேற்றப்பட்ட யதார்த்தம் கலக்கல் 

6. ஹீரோயின் அம்மாவாக வரும் ஆண்ட்டி யாரு? செம கட்டை. த்ரிஷாவின் அம்மா மாதிரி இந்த வயசிலும் ஹி ஹி






இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. வில்லனே டாமினேட் செய்து விடுவதால் ஹீரோ - ஹீரோயின் காதல் காட்சிகளில் அதிக ஈடுபாடு செலுத்தாதது மிகப்பெரிய மைனஸ். கைவசம் டக்கர் ஃபிகர் இருந்தும் வெளில பராக்கு பார்க்கும் சராசரித்தமிழனின் இழப்பு மாதிரி


2. படத்தில் வில்லனாக வரும் வட்டிக்கடை ஆளிடம் படத்தின் எல்லா முக்கியக்கேரக்டரும் கடன் வாங்கி இருப்பார்களா? வேற ஆளே ஊர்ல இல்லையா?


3. ஹீரோ வில்லன் வீட்டில் வட்டிக்கு கடன் வாங்க வரும்பொதே அவரது அராஜகத்தை நேரில் பார்த்து விடுகிறார். அப்போதே வேற இடம் பார்ப்போம் என அவர் ஏன் சொல்லவில்லை ?



4.  ஹீரோயின் நல்ல வசதி ..ஹீரோவுக்கு பணக்கஷ்டம் என்றால் அவர் ஏன் உதவவில்லை?அவர் கிட்டே தகவல் கூட சொல்லலையே/ எந்த காதலனும் தன் மனக்கஷ்டத்தை , பணக்கஷ்டத்தை காதலியிடம் சொல்லாமல் இருப்பதில்லை


5. வீட்டை விட்டு வெளியே வர முடிவெடுக்கும் ஹீரோயின் கட்டிய சுடிதாருடன் வருவதெல்லாம் ஓக்கே , ஆனா  அவரது செல் ஃபோனைக்கூட எடுத்துட்டு வராதது ஏன்?


6. நட்ட நடு வீதியில் ஹீரோயின் செயினை ஒருத்தன் அத்துட்டு ஓடறான் . ஹீரோயின் கூக்குரல்க் இடலை , யாரிடமும் உதவி கேட்கலை . சும்மா அழுத்துட்டு இருக்கு. இந்தக்கால ஃபிகருங்க  கொலுசு திருகாணி காணாம போனாலே அழுது ஆர்ப்பாட்டம் பண்னிடமாட்டாங்க ?


7. ஹீரோயின் ஒரு ஆள்ட்ட ஓ சி ஃபோன் வாங்கி கால் பண்றா. அப்போ பேசும்போது பர்சனல் மேட்டரை அவன் முன்னாலயே பேசுவாளா? கொஞ்சம் தள்ளி நின்னு பேச மாட்டாளா? அவன் பின்னாலயே ஃபாலோ பண்ணி தொந்தரவு தரும்போது அவ ஏன் பம்மனும்? ஈசியா அவனை கட் பண்ணலாமே? இந்தக்கால ஃபிகருங்களுக்கு பசங்களை கட் பண்ண சொல்லியா தரனும் ?


 


 மனம் கவர்ந்த வசனங்கள்



1. ஹவுஸ் ஒயிப் எல்லாம் நிறையப்பேசலாம்.ஆனா டெசிஷன் எடுக்கற ஏரியாவுக்கு வரக்கூடாது.புரியுதா ? 



------------------------------


2. ஏய். டோன்ட் மிஸ்டேக்கன் மீ.அந்தப்பொண்ணுக்கு மூஞ்சியே சரி இல்லடி. 



டேய் நீ மூஞ்சியையா பார்த்தே? 


-------------------------

3.என்னை கட்டிக்கப்போற பொண்ணு ரொம்ப கஷ்டப்படுவா-னு என் ஜாதகத்துல இருக்கு.என்ன? கஷ்டப்பட வர்றியா ?




---------------------


4.  ஆமா, உனக்கு ஒயிஃப் இருக்கா?

 இல்லை

 ஏன்?

 ஏன்னா? எனக்கு இன்னும் மேரேஜே ஆகலையே?


-----------------------------------


5. கொடுத்த வாக்கைக்காப்பாத்தறவனைத்தான் பொண்ணுங்களுக்குப்பிடிக்கும்


--------------------


6.  உங்க பொண்ணு கிட்டே நான் வாக்கு குடுத்திருக்கேன் . அவ எனக்கு வாக்கு கொடுத்திருக்கா.  நீங்க இப்படி அடம் பிடிச்சா நாங்க வேற முடிவு எடுக்க வேண்டி வரும்




--------------------


7.  இந்த ஜானி ஜானி எஸ் பாப்பா வேலை எல்லாம் என் கிட்டே வேண்டாம்



--------------------


8.  போலீஸ் ஸ்டேஷன்  வாசலில்

 சார் . உள்ளே  போறது எப்படி?

 அவனைப்போட்டுத்தள்ளிடு , ஆட்டோமேடிக்கா உள்ளே போயிடுவே


----------------------


9. என்னது? உங்க பேரு சரவணர்? எப்டி?



 சின்னப்பையனா இருக்கும்போது அவன் இவன்னாங்க, பெரிய ஆள் ஆனதும் அவர் இவர்ங்களையா?



------------------


10.  தியாகராஜ பாகவதருக்கே  பாட்டு கத்துத்தர்றியா?




---------------





11.  மிஸ் ! ஐ லவ் யூ!

 ஸாரி , நான் ஆல்ரெடி கமிட் ஆகிட்டேன்

 நான் என்ன சரக்கு அடிக்கவா கூப்பிட்டேன், காபி சாப்பிடத்தானே கூப்பிடறேன்?


--------------------


12. மச்சி , நான் புதுசா ஒரு பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன் .




ஆமா, ஆல்ரெடி பண்ணிட்டு இருந்த பிஸ்னெஸ் என்னாச்சு? லாஸ் ஆகிடுச்சு,ஹிஹி


--------------------------



13. அட, புது ஃபோனா?  எவ்ளவ்?



10,000 ரூபா. இந்த நெம்பரை அடி. என்னடா, பட்டனே இல்லை. என்ன ஃபோன் போ .



அண்ணே , இது டச் ஸ்க்ரீன்


-------------------


14. இந்த உலகத்துல முன் அனுபவம் இருக்கா?ன்னு கேட்காத ரெண்டே தொழில் 1. பிச்சை எடுக்கறது  2 திருடறது


----------------------------


15.  இவனை அடிச்சு செல்லுல போடுங்க


 சார், நீங்களே அந்த செல்லுல தான் இருக்கீங்க, நீங்க வெளீல வந்தாத்தான் போட முடியும்



---------------------

16.  எனக்கு குழந்தை பிறந்தப்ப எங்கப்பனுக்குப்பிறந்த பையன் இவன்




------------------


17. நாற வாயன் வீட்டுல பொண்ணு எடுத்தவனும் கெட்டான், நச்சு வாயன் வீட்டுல பொண்ணு கட்டுனவனும் கெட்டான்



-------------------------


18. சாரி டூ சே திஸ் ஹீ ஈஸ் நோ மோர் .



டாக்டர் , மோர் குடிச்சுட்டு அவன் சாகலைங்கறீங்களா? மார்ச்சுவரில இருக்கற டெட் பாடிக்கு நாடி பார்த்த ஆள் நீங்க மட்டும் தான்


-----------------



19 அந்த ஸ்டேஷன் எஸ் ஐ யார் தெரியும் இல்ல? கட்டை


 உருட்டுக்கட்டையா இருந்தாலும் பரவாயில்லை



---------------------


20.நம்ம பொண்ணை அவ ஆசைப்பட்ட பையனுக்கு கட்டி வைக்கலைன்னா என்ன ஆகும் தெரியுமா?


 அந்தப்பையனோட வாழ்க்கை நல்லா இருக்கும்




----------------------

21. டேய் , இப்போ யார்டா தமிழ் நாட்டின் சி எம்?

 நிச்சயமா நான் இல்ல





------------------

 


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43  ( இது ஒரு டப்பிங்க்படம் என்பதால் விகடன் விமர்சனம் வராது )



 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


 ரேட்டிங்க் - 3.25 / 5



சி பி கமெண்ட்  - த்ரில்லர் ரசிகர்கள் , காதலர்கள் , பெண்கள் என அனைத்து தரப்பினரும் படம் பார்க்கலாம் . மிக கண்ணியமான இயக்கம் , நகைச்சுவை இழையோடும் திரைக்கதை . 2013 ஆம் ஆண்டின் முக்கியமான  படம் . ஈரோடு  வி எஸ் பி யில் படம் பார்த்தேன்

கோவை ட்விட்டர்கள் மாநாடு பாகம் 1



விழா நடை பெறும் ஹோட்டல்                             
விழா நடை பெறும் ஹோட்டல்



எக்ஸ்பர்ட் சத்யா 2 மாசம் முன்னால ட்வீட்டப் பற்றி டைம் லைன்ல முத ட்வீட் போட்டதுமே திருப்பூர் ஆகாய மனிதன்   எனும் யுவராஜ் எப்போ போலாம்?  எப்படி போலாம்னு கேட்க ஆரம்பிச்சுட்டார் ( ஆகாய மனிதன் பெயர்க்காரணம் - ஒரு ஃபிகர் எதேச்சையா இவரைப்பார்த்தாலே அப்படியே ஆகாயத்துல பறக்கற மாதிரி ஃபீல் பண்ணி டைரில 3 பக்கம் எழுதுவார் )


என்னால வாக்கு குடுக்க முடியல ( இவரு பெரிய அரசியல்வாதி ) . ஏன்னா ஆஃபீஸ்ல இப்போ அடிக்கடி திருச்சி , புதுக்கோட்டை கேம்ப் அனுப்பிடறாங்க .நயன் தாராவின் காதல் மாதிரி நம்ம ஆஃபீஸ் வாழ்க்கை நிரந்தரம் இல்லாததாவும் , எப்போ எங்கே இருப்போம்னு சொல்ல முடியாத எஸ் வி சேகர் அரசியல் வாழ்வு மாதிரி ஆகிடுச்சு . அதனால மே 12 அன்னைக்கு ட்வீட்டப் நடக்குதுன்னா மே 11 அன்னைக்குத்தான் வர்றேனா? இல்லையா? என முடிவாகும் அப்டினு சொல்லிட்டேன். 


மே 11 ஃஅன்னைக்கு நைட் ஹோம் மினிஸ்டர் , டேமேஜர் ஆகிய இரு பெரும் தலைவலிகளிடம் இருந்து தப்பித்து கோவை மெகா ட்வீட்டப்க்கு போக முடிவானதும் ஆகாய மனிதனுக்கு மெசேஜ் அனுப்பினேன்.. போலாம் ரைட் அப்டினு ரிப்ளை அனுப்புவார்னு பார்த்தா  பீட்சா படம் க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு ட்விஸ்ட் . மூணாறு போய்ட்டாராம் / ( பின்னணில ஒரு ஃபிகர் வாய்ஸ்) ஃபிகர் யாரு , என்ன ஊரு, எந்தா பேரு என்பது எல்லாம் கேட்பது  அநாகரிகம் என்பதாலும் கேட்டாலும் எதுவும் சொல்லாத கல்லுளி மங்கன் அவர் என்பதாலும்  அந்த டீட்டெயில்ஸ் இந்த பதிவுக்கு அவசியம் இல்லாதது என்பதாலும் நாம அடுத்த கட்டத்துக்கு போலாம் / 









ட் விட்டர் பிரபல ரவுடிகள் @vattajileppi @joseph_selva and @Er_Thameem  ( கண்ணாடியில் பிம்பம் தெரியுதே?)              
ட் விட்டர் பிரபல ரவுடிகள் @vattajileppi @joseph_selva and @Er_Thameem ( கண்ணாடியில் பிம்பம் தெரியுதே?)



ட்விட்டரின் ஜெண்டில்மேன் கோவை அறிவுக்கரசு சாருக்கு மெசேஜ் அனுப்பிச்சேன் . சார் காலைல 7 மணி கோவை பாசஞ்சர் ல வர்றேன் . 10 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்துடுவேன் . காலைல ஏதாவது சினிமாவுக்கு போய்ட்டு  மத்தியானம் ட்வீட்டப் போலாம்னேன் . மனிஷன் அதுக்கு  சரி போலாம்னோ, இல்லை போக முடியாதுன்னோ கட் அண்ட் ரைட்டா பதில் சொல்லலை .  கோவை உங்களை வரவேற்கிறதுன்னு பொத்தாம்பொதுவா நெடுஞ்சாலை போர்டு வாசகம் மாதிரி சொன்னார் . அப்பவே நான் உஷார் ஆகி இருக்கனும் .

கோவை வந்தாச்சு என  அவருக்கு மெசேஜ் அனுப்பினதும்   அவர் ஃபோன் பண்ணினார் . அவர் குரல்ல ஒரு சோகம் தெரிஞ்சுது . அவர் மச்சினிக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சாம் .கல்யாண வேலைகள் இருப்பதாகவும் மதியம் ட்வீட்டப்பில் பார்ப்போம் எனவும் சொல்லிட்டார். ( இவர் மச்சினிக்கு மேரேஜ்னா இவர் ஏன் சோகமா இருக்கனும்? ) 

இவரைப்பத்தி ஒரு முக்கியத்தகவல் சொல்லிடறேன் . கோவையில் உள்ள இரு முக்கிய பெண் ட்வீட்டர்களை நேரில் சந்தித்த ஒரே ட்வீட்டர் இவருதான் . இவரு வந்தார்னா அது பற்றி ஒரு பதிவு தேத்தலாம்னு இருந்தேன் . போச்சே, 





பிரபல ரவுடிகள் @prabu_b  .@chinnapulla                 
பிரபல ரவுடிகள்




சரின்னு ரயில்வே ஸ்டேஷன்;ல இருந்து வெளில வந்து  காந்தி புரம் பஸ் ஸ்டேண்டுக்கு எப்படிப்போகனும்? எந்த பஸ் அங்கே போகும்னு கேட்டேன். ஒருத்தர்  இந்த வழியாப்போகும் எல்லா பஸ்சுமே  காந்தி புரம் தான் போகுதுன்னார் . 


 காந்தி புறம் இறங்கி ஒரு ஆட்டோக்காரர்ட்ட விசாரிச்சேன் . மங்களா இண்டர்நேஷனல் ஹோட்டல் எங்கே இருக்கு? 

 உக்காருங்க சார் போலாம் 75 ரூபா தான் ஆகும்னார் 


 யோவ் , ஈரோட்ல இருந்து கோவை வரவே நான் 20 ரூபாதான் செலவு பண்ணேன். இங்கே இருந்து 10 அடி தூரம் இருக்கற இடத்துக்கு எதுக்கு அத்தனை ரூபா? வழி சொல்லு போதும்னேன் .  என்னை படு கேவலமா ஒரு பார்வை பார்த்து வழி சொன்னார் 







2 பேர் தங்கறதா ரூம் போட்டுட்டு 6 பேர் அட்டூழியம் பண்ணிட்டிருக்காங்க                    
2 பேர் தங்கறதா ரூம் போட்டுட்டு 6 பேர் அட்டூழியம் பண்ணிட்டிருக்காங்க  ( எல்லாரும் ட்வீட் போட்டுட்டு இருக்காங்க , எக்சாம் ஹால்க்குள்ளே போகும்போது அப்பதான் படிப்பமே அப்டி )

 நடை பாலம் இருக்கே அதுல போய் அந்த பக்கம் இறங்குனா  நேரா ஒரு ரோடு போகும் . அதுதான் ஹோட்டல் போகும் ரோடுன்னார். 


 ஒரு பர்லாங்க் தூரம்  நடக்கனும். ( ஒரு மைல் = 8 பர்லாங்க் ). 







                  


தேனி பெரிய குளம் @Er_Thameem ,கோவை  மாப்ளே @nanbanai                
தேனி பெரிய குளம் @Er_Thameem ,கோவை மாப்ளே @nanbana



 ஹோட்டல் ரிசப்ஷன்ல 2 ஃபிகருங்க .அப்பாடா ட்வீட்டப் போர் அடிச்சாக்கூட அப்பப்ப கீழே ரிசப்ஷன் வந்து சார்ஜ்  ஏத்திக்கலாம்னு மனசை தேத்திக்கிட்டேன் ( ஃபிகரை தேத்த முடியாதே , அட்லீஸ்ட் மனசையாவாது தேத்துவோம்)


முதன் முதலா கண்ல பட்ட ட்வீட்டர் வட்ட ஜிலேபி . பேசாம இவருக்கு நெட்டை ஜிலேபின்னு பேர் வெச்சிருக்கலாம் . ஆள் ஆறடி 3 அங்குலம் . தமிழ் நாட்டு ட்வீட்டர்களிலேயே  அதிக உயரம் அண்ணன் தான் . அப்புறம் ஜோசப் செல்வா



திருத்தப்பட்ட வடிவில் @chinnapulla   , @prabu_b

 @chinnapulla , @prabu_b 

ஜோசப் செல்வா வைப்பற்றி ஒரு வரில சொல்லிட முடியாது . ஃபிகர் கரெக்ட் பண்றதுல இவர் ஒரு கார்த்திக் , சிம்பு வை தூக்கி சாப்பிடற ஆள் . இவர் லீலைகளைப்பற்றி எழுதுனா 1998 ல மாலை மலர் ல தொடரா வந்த காதல் மன்னன் விக்கிர மாதித்தன் மாதிரி செம ஹிட் ஆகும் . பின்னால டைம் கிடைச்சா பார்ப்போம் . 


சின்னப்புள்ள அப்டினு ஒரு ட்வீட்டரை நான் ஃபாலோ பண்ணி இருந்தேன். அது சின்னதா நல்ல  ஃபிகரா இருக்கும்னு நினைச்சா  அது ஆம்பளை ட்வீட்டராம் , அடங்கோ . கனவே கனவே கலையாதே அப்டினு ஒரு தீம் மியூசிக்


 அண்ணே ஒரு விளம்பரம் அடிப்படைல ஒரு ஓவியர் . இவர் கிட்டே இருக்கும் திறமை என்னான்னா ஆளைப்பார்த்து 12 நிமிஷத்துல  பென்சில் ஓவியமாவோ , வாட்டர் கலர் ஓவியமாவோ வரைவார் . அட்டகாசமா இருக்கும் இவரது சமீபத்திய ஹிட் ஆல் தோட்ட பூபதி யின் வாட்டர் கலர் ஓவியம் , ஆதிரை ஓவியம் 


 விழாவுக்கு வந்த வெளியூர் ட்வீட்டர்கள் எல்லாரும் ஒன் பை ஒன்னா லைன் கட்டி அவர் கிட்டே தங்களை  வரைய வெச்சு வாங்கிட்டாங்க . அதை ஓவியக்கண்காட்சியா வைக்க பிளான் போல .



அண்ணே ஒரு விளம்பரம் அரைகுறைய வரையறாரு@vilambaram  ,@Araikurai                 
அண்ணே ஒரு விளம்பரம் அரைகுறைய வரையறாரு@vilambaram ,@Araikurai

 வட்ட ஜிலேபி  டிஃபன் ஆர்டர் பண்ணினார் . ரோஸ்ட் ,  பொங்கல் எல்லாம் வந்தது . சாப்ட்டுட்டு பேசிட்டு இருந்தோம் . 


 ஹோட்டல்ல ரூம் க்ளீன் பண்ற பொண்னுங்க கூட கோட் சூட் போட்டுட்டு வருதுங்க , அடேங்கப்பா . பில் தீட்டிடுவாங்கன்னு நினைச்சு ரூம் ரெண்ட் எவ்ளவ்னு கேட்டா  2000 ரூபா தானாம் .  2 பேர் தங்கறதா ரூம் போட்டு கிட்டத்தட்ட குட்டி கிராமமே டேரா போட்டிருக்கு ஒரு ரூம்ல . டிவைடு பண்ணினா தலைக்கு 25 ரூபா தான் ஷெரிங்க் அமவுண்ட் வரும்னு நினைக்கறேன் . 


 ஜோசப் செல் ஃபோனில் எடுத்த சில கலக்கல் காமெடி  வீடியோக்கள் காட்டினார் அவர் நண்பர் ஒரு ஜட்ஜாம் , அவர் மப்பில் செஞ்ச அட்டகாசங்கள் , பீச்சில் செல் ஃபோனைத்தொலைத்தது , வட்ட ஜிலேபி , ஜோசப் செய்த அட்டகசங்கள் எல்லாம் அதில் பதிவாகி இருந்தது / 


 ஜாலியா மதியம் வரை  அரட்டை நடந்தது. விழாவுக்கு அரட்டை தான் வர்லையேன்னு கேட்கக்கூடாது யாரும். 




மதுரை ரவுடி @prasanna2903 அம்பா சமுத்திரம் கேடி ,@aidselva                  
மதுரை ரவுடி @prasanna2903 அம்பா சமுத்திரம் கேடி ,@aidselva



- தொடரும்

பிரட்டீ கேர்ள் யார்னு கண்டு பிடிச்சுட்டேன்

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1.நாளைமுதல் கத்திரி வெயில்: அக்னி நட்சத்திர காலம் # ஒண்ணு மே செய்ய முடியா  மே    பகல் ல வெளில போக முடியா    மே    கிடக்க வேண்டியதுதான்்

-------------------------




2. ஏம்மா.ஏன் விசாரனைக்கு கூப்ட்டும் ஸ்டேஷன் வர்ல ? 



சுடர்க்கொடி - தண்டவாளம் ரெடி.ரயில் தான் வரவே இல்லை

----------------------------




3.உன்னை எல்லாம் லேடி போலீஸ் கையால அடிக்க வைக்கனும் அப்போதான் உனக்கு புத்தி வரும். இல்ல சார்.கிளுகிளுப்புத்தான் வரும்

----------------------------




4.யூ ஆர் அன்டர் அரெஸ்ட் . 



அரட்டை கேர்ள் - சரிங்க ;-))

----------------------



5.இன்ஸ்பெக்டர்.எல்லா ட்விட்டரையும் கண்காணிக்கறதை விட கோவை மெகா ட்வீட்டப் வந்தா மொத்தமா பிடிச்சிடலாம்

-----------------------------



Photo




6.என்ன ஒரே ஆம்பளை போலீஸா இருக்கு? லேடி போலீஸ் இல்லையா?

--------------------------------




7.நான் போகிறேன் மேலே மேலே = ஐ ஆம் கோயிங் டூ டாப் அப் # சபாஷ் துபாஷ்

-------------------------------




8.பிரட் மாதிரி மெத் மெத் னும் ,டீ மாதிரி சூடாவும் இருக்கற பிகர் தான் பிரட்டீ ( PRETTY -BREAD TEA) கேர்ளா?

--------------------------------- 



 9. அம்மாவைப்பார்க்கும்போது ஆப்ரஹாம் லிங்கனைப்பார்ப்பது போலவே இருக்கு - சரத் குமார் # அடடா, சமத்து குமார்,கார் 1 பார்சல் 



----------------------------------



10. கட்சியை பலப்படுத்த போராட தயாராகும் தே.மு.தி.க., #  மார்க் கோ போலோ ஸ்ட்ராங்க் பீர் சாப்பிடுவாங்க்ளோ?


--------------------------




Photo: Coffee night



11. துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் அரை மணி நேரம் நடனமாட 8 கோடி வாங்கினார் ஷாரூக்கான் # புல் புல் தாரா! அடுத்த பிரபுதேவா! நோட் இட்


------------------------


12. தூக்கக்கலக்கத்தில் நீ இருந்தாலும் உன் முகம் பார்த்து மயக்கத்தில் நான்



------------------------


13. நான் சினிமாவுக்கு வந்தது நடிப்பதற்காக; கவர்ச்சி காட்டுவதற்கு அல்ல: லட்சுமி மேனன் # நாங்க சினிமாவுக்கு போறதே சீன் பார்க்கத்தான், ஹி ஹி 


----------------------------------

14.இப்போ இருக்கும் 40+ நடிகர்கள் எல்லாருமே அழகில் ,கம்பீரத்தில் ,நேர்மையில் சுமாரு.தனித்து நிற்்பவர் அஜித் குமாரு்



-----------------

15. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது-அன்புமணி #அப்புறம் எப்டிங்ணா நீங்க ஜாமீன்ல வெளில வந்தீங்க?்



----------------




Photo: இனிய மாலை வணக்கம் நண்பர்களே...

16. மேடம்.நீங்க புதுசா யாரையோ லவ் பண்ணிட்டு இருக்கீங்களாமே ? 




யா யா யா யா யா யா ( 6 யா)



---------------------


17.  கதைக்கு அவசியம் என்கிற போது, மிதமான கிளாமரை வெளிப்படுத்துவேன்.-
லட்சுமி மேனன் # கேட்கறதுக்கே மனசுக்கு இதமா இருக்குங்க 


--------------------------



18. பட விழாக்களுக்கு போதையில் வருகிறேனா?நோ, என் முக அமைப்பே அப்படி - விமல் #  அட , இந்த சமாளிஃபிகேஷன் எனக்குத்தோணலையே? - கேப்டன்



--------------------


19. டியர், பெட்ரூம் ல உள் பக்கமா பூட்டு போட்டிருக்கியே?எதுக்கு? 




 நான் தூங்குனதும் நீங்க பாட்டுக்கு வெளில போய்டக்கூடாதே?



-----------------------


20. மதுரை கிராமத்து இளைஞனாக ஜில்லா படத்தில்  விஜய்! #  திருப்பாச்சியை விட பெரிய அரிவாளோட வாங்க்ணா




---------------------------------------------




Photo: இனிய காலை வணக்கம் நண்பர்களே...


 டிவி டுடே


Tv today

Sunday, May 19, 2013

Aurangzeb - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்

அந்த காலத்து உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் தொடங்கி எண்பதில் வெளிவந்த பில்லா, தூங்காதே தம்பி தூங்காதே படங்களின் சாயலில் அமைந்துள்ள படம் ‘ஓளரங்கசீப்‘.  

அண்ணன் தம்பி என இரண்டு அர்ஜுன் கபூர், ரியல் எஸ்டேட்டில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் தந்தை ஜாக்கி ஷெரப்பிடம் தவறான முறையில் வளரும் அஜய்,  தாய் தன்வீ அஸ்மியிடம் நெறியுடன் வளரும் விஷால். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் அவர்களின் தயாரிப்பின் பழைய படங்களான த்ரீஷுல், தீவார் படங்களை நினைவுபடுத்துகிறது. பதவி பணம், பாசம் இவற்றோடு பயணித்துள்ள நீண்ட நாடகம்.
 


வளர்ந்து வரும் குர்கான் நகரத்தின் ஏ.சீ.பி. பிருத்விராஜ் சுகுமாரனிடமிருந்து கதை தொடங்குகிறது.  இவரது தந்தை அனுபம்கேர், சித்தப்பா ரிஷிகபூர், ரிஷிகபூரின் மகன், மருமகன் என குடும்பத்தில் எல்லோரும் காவல்துறை அதிகாரிகள். தவறான என்கவுண்டர் செய்ததற்காக தனது வேலையை ரிஸைன் செய்கிறார் அனுபம் கேர்.  முழுக்க முழுக்க சித்தப்பா ரிஷிகபூரையே பார்த்து வளர்கிறார் பிருத்விராஜ். மரணப் படுக்கையில் அனுபம்கேர் பிருத்விராஜிடம் தனக்கும் நைனிடாலிலுள்ள தன்வீ அஸ்மிக்கும் ஏற்பட்ட பந்தத்தைக் கூறி கண்மூடுகிறார்.


நைனீடால் செல்லும் பிருத்விராஜ் தன் சித்தி குடும்பத்தின் மீது சினம் கொள்ள, அவர்கள் அனுபம்கேர் மீது வைத்துள்ள அன்பைப் பார்த்து தணிகிறார். மாபியாவிலும்,  கடத்தலிலும் மன்னனான ஜாக்கிஷெரோப், மனைவியாக தன்வீ அஸ்மி. ஜாக்கிஷெரோபின் குணங்கள் பிடிக்காமல் அவரைப் பற்றி போலீஸுக்கு தகவல் அளித்து,  பிறகு அனுபம் கேருடன் இணைகிறார்.
 


ஜாக்கிஷெரோபைப் பிடிக்க அண்ணன் அர்ஜுன் கபூரை கடத்தி அவர் இடத்தில் தம்பியை ஆள்மாறாட்டம் செய்யும் ரிஷிகபூர், பிருத்விராஜ்.  ஜாக்கிஷெரோப் தனது இரண்டாவது மனைவி அம்ரீதா சிங் விரித்த மாய வலையில் மாட்டியிருப்பதை உணரும்  அர்ஜுன் கபூர். சட்டத்தை நிலை நாட்டுவதாகக் கூறி பிருத்விராஜை ஏமாற்றி, பணம் சேர்க்க ரிஷிகபூர் போடும் நரித்தந்திரம். இந்த யுத்தத்தில் ஜாக்கிஷெரோப், ரிஷிகபூர், அமிர்தா சிங், கதாநாயகி ஷாஷா அகா என அனைவரும் கொல்லப்பட்டு, கடைசியில் அண்ணன் தம்பி எப்படி இணைந்தார்கள்?? என்பது தான் பரணிலிருந்து தூசி தட்டி எடுக்கப்பட்ட கதையின் க்ளைமாக்ஸ்.

பாடல்களும், பின்னணி இசையும் கொஞ்சமும் மனதில் பதியவில்லை.  மிகவும் பழைய கதை, அதை சுவாரசியமின்றி இழுத்துச் செல்லும் திரைக்கதை.  வளர்ந்துவிட்ட விஞ்ஞான உலகத்திலும் இரட்டையர்கள் ஒருவரை ஒருவர் எதிரில் பார்த்துக் கொள்ளும் அளவுக்குத் தான் கிராபிக்ஸ் அமைந்துள்ளது.  
 


படத்தில் திருப்திதரும் விஷயம் நடிகர்களின் நடிப்புதான். மகாபாரதத்தில் வரும் சகுனி போல் டி.சி.பி. ரவிகாந்தாக வரும் ரிஷிகபூர் அரிமா போல் கர்ஜிக்கிறார்.

மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் கனா கண்டேன், சத்தம் போடாதே, மொழி முதலிய படங்களால் நல்ல நடிகர் என்று முத்திரையைப் பதித்த பிருத்விராஜ், இந்தப் படத்தின் மூலம் இந்தியிலும் வலுவான தடம் பதித்துள்ளார். நீச்சல் உடையில் வலம் வரும் ஷாஷா அகா படத்தில் வருகிறார் இறக்கிறார். இவரது உப்பு சப்பற்ற நடிப்பினால் இறக்கும் காட்சியில் கூட அனுதாபம் ஏற்படவில்லை. இரட்டை வேடத்தில் அர்ஜுன் கபூர் அமர்களம்!!  என்று சொல்ல முடியாது சுமார் ரகம் தான்.


இதை யதார்த்தமான படமென்று கூற முடியாது. மசாலா படத்திற்கான அடிப்படை விறுவிறுப்பும் இல்லை.

மொத்தத்தில் ஓளரங்கசீப் புளித்துப் போன மாங்காய் தொக்கு – அறுவை, இழுவை.
 
 a
 

  • நடிகர் : அர்ஜூன் கபூர்
  • நடிகை : ஷாஷா அகா
  • இயக்குனர் :அதுல் சபர்வால்

நேரம் - சினிமா விமர்சனம் ( தினமலர் )

 
தினமலர் விமர்சனம்


"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்", "பீட்சா", "சூது கவ்வும்" படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் "நேரம்". என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!

அமெரிக்காவில் சின்னதாக ஒரு பாம் வெடிக்க (குண்டு அல்ல...), இந்தியாவில் "நேரம்" ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு கைநிறைய சம்பளத்துடன் கூடிய ஐ.டி. கம்பெனி வேலை பறிபோகிறது. தங்கையின் திருமணத்திற்காக ஊரையே தன் வட்டித் தொழிலால் கட்டி மேய்க்கும் வட்டி ராஜா எனும் சிம்ஹாவிடம் கைநீட்டி கொஞ்சம் பணம் அதிக வட்டிக்கு வாங்குகிறார். 
கூடவே சின்ன வயது முதல் கூட படித்த வேணி எனும் நாயகி நஸ்ரியா நசிம்மை காதலிக்க தொடங்குகிறார். முதலில் இவர்களது காதலை ஏற்றுக்கொள்ளும் வேணியின் அப்பா தம்பிராமையா, நிவினுக்கு வேலை இல்லை என்று தெரிந்ததும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். வேணி, வெற்றியுடன் ஓடிப்போய் வாழ வீட்டை விட்டு கிளம்புகிறார். அதேநாளில் வட்டிராஜாவுக்கு ஐம்பதாயிரம் வட்டி பணத்தை செட்டில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி!


வீட்டில் இருந்து வெளியேறிய வேணி, வெற்றிக்காக வெயிட் பண்ணும்போது பட்டபகலில் தனது தங்க செயினை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறி கொடுக்கிறார். அதே நேரம் வெற்றியும், நண்பரிடம் வட்டிராஜாவுக்கு கொடுக்க வாங்கி வந்த ஐம்பதாயிரம் பணத்தை பிட்பாக்கெட் பேர்வழிகளிடம் பறிகொடுத்துவிட்டு பரிதவித்து போகிறார்.
 இந்நிலையில் ஊரில் இருந்து வெற்றியை தேடி வரும் அவரது தங்கை புருஷன், வரதட்சனை பணத்தின் மீதியை பிஸினஸ் செய்யப்போகிறேன் பேர்வழி... என வாங்கி போக வருகிறார். வேணியின் அப்பா போலீஸ்க்கு போகிறார். காத்திருக்கும் காதலி, தேடும் போலீஸ், டவுரி மீதியை கேட்கும் மச்சான், வட்டி ராஜாவின் கெடு என ஏகப்பட்ட சிக்கலில் தனது கெட்ட நேரத்தால் சிக்கி தவிக்கும் ஹீரோ வெற்றி எனும் நிவினுக்கு நல்ல நேரம் பிறந்ததா?, இழந்ததை எல்லாம் மீட்டாரா? என்பது நேரம் படத்தின் வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

"உன்னை கட்டிக்கப்போறவ ரொம்ப கஷ்டப்படுவா... என எங்கம்மாவும், ப்ரண்ட்ஸூம் சொல்லுவாங்க, கஷ்டப்பட வர்ரியா..." என தன் காதலை நாசுக்காக வெளிப்படுத்தும் வெற்றி எனும் நிவின், வட்டிராஜாவிடம் பணம் வாங்க போன இடத்தில் அவர் பண்ணும் சேட்டைகளால் காட்டு முகபாவனைகள், தேர்ந்த நடிகர்களையே திக்குமுக்காட செய்துவிடும் ரகம்! மனிதர் முதல் படத்திலேயே பர்ஸ்ட்கிளாஸில் பாஸ் செய்து விடுகிறார். கீப்இட் அப் நிவின்!
 


நாயகர் மாதிரியே, நாயகி வேணியாக வரும் நஸ்ரியா நசீமும் நடிப்பிலும் சரி, குடும்பபாங்கிலும் சரி செம சூப்பர்ப்! அம்மணி அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கிளாமர் காட்டினார் என்றால் தமிழ் சினிமாவின் நம்பர்-ஒன் இடத்திற்கு போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...!

வில்லன் வட்டி ராஜாவாக வரும் சிம்ஹா, செம சூப்பர்ப்பா! கழுத்து நிறைய தங்கசங்கிலிகளும், கூட இரண்டு கருப்பு சிவப்பு அடியாட்களுமாக படு பந்தாவாக வட்டி வசூலிக்கும் இவரது பாணியே தனி. டச்போனை ஆப்ரேட் செய்யத்தெரியாமல் "பத்தாயிரம் ரூபாய்க்கு போன் பட்டன் இல்லை... வேஸ்ட்!" என அவர் அலுத்துக் கொள்ளும் ஒரு காட்சி போதும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது!

வேணியின் அப்பா தம்பிராமையா, எஸ்.ஐ., கட்டகுஞ்சாக வரும் ஜான் விஜய், நாசர், அவரது தம்பி மாணிக்கம் அலைஸ் மாணிக் - அனந்த்நாக், லைட்ஹவுஸ் - ரமேஷ் திலக், காளான் - ஆனந்த், ஜான் - சபரீஷ் வர்மா உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பலே சொல்ல வைக்கும் படைப்புகள்!
 


அதேநேரம் ஊரிலேயே ஒரே ஒரு வட்டிக்காரர் இருப்பது மாதிரியும், அவரிடமே ஹீரோ, ஹீரோவிடம் பிக்பாக்கெட் அடிக்கும் ஆசாமிகள், ஹீரோவுக்கு வேலை தரும் நாசரின் தம்பி என எல்லோரும் அநியாய வட்டிக்கு கடன் வாங்கியிருப்பது, எஸ்.ஜான் விஜய்க்கு கட்ட குஞ்சு என வித்தியாசமாக பெயர் சூட்டியிருக்கும் இயக்குனர், நாயகியின் அப்பா தம்பி ராமைய்யாவுக்கு சரவணன் என சாதாரணமாக அவரது வயதுக்கு பொருந்தாத பெயரை சூட்டியிருப்பது உள்ளிட்ட ஒரு சில குறைபாடு இருந்தாலும், டைட்டில் கார்டு போடும் இடத்தில் விதவிதமான கை கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், காலமானிகள் என ஆரம்பத்திலேயே நம்மை வாய்பிளக்க வைக்கும் இயக்குனர், அடுத்தடுத்த காட்சிகளிலும் நமது திறந்த வாயை மூட விடாமல் இறுதிவரை அழைத்து செல்வது சிலிர்ப்பு!

ராஜேஷ் முருகேஷனின் மிரட்டும் பின்னணி இசையும், ஆனந்த் சி.சந்திரனின் அசத்தும் ஒளிப்பதிவும், பிரதீப்பாலாரின் டைமிங் வசனங்களும், அல்போன்ஸ் புத்ரனின் எழுத்து - இயக்கத்தில் "நேரத்தை - நல்ல நேரம்" ஆக்கியுள்ளன என்றால் மிகையல்ல!

மொத்தத்தில், "நேரம்" - ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இப்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் "நல்ல நேரம்!"
thanx -தினமலர்
 
 

பெண்கள் ட்விட்டரில் குப்பை கொட்டுவது எப்படி?

சமூக வலை தள ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. இந்த இணைய ஊடகங்கள் மூலம், ஒருவர், தம் கருத்தை, ஆயிரக்கணக்கான மக்களிடம் எளிதாக எடுத்துச் சொல்ல முடிகிறது.

இவற்றில் எதை பகிர்ந்து கொள்ளலாம், எதை பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற வரைமுறை இல்லாததால், கருத்து சுதந்திரம் கட்டுக்கடங்காமல், போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பெண்கள், தங்கள் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வது, சில நேரங்களில், அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

இப்படி பிரச்னையில் சிக்கித் தவிக்காமல், ட்விட்டரை முறையாக பயன்படுத்த, இதோ சில டிப்ஸ்...

ட்விட்டரில், ஒருவர் பகிர்ந்து கொள்ளும் சீர்த்திருத்தக் கருத்துகளைக் கொண்டு, அவரது குணாதிசயங்களை எடை போட வேண்டாம்; இங்கே பாதி பேருக்கு பொய் முகம்.

ட்விட்டர் டைம் லைனில், சமூகத்தில் நடக்கிற எல்லா விஷயங்களும் அலசப்படும். அவை அனைத்திற்கும், நாமும் நம் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. காரணம், நம் தனிப்பட்ட விஷயத்தைக் குறித்து கூட வாயைப் பிடுங்க, காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ட்விட்டர் பழக்கம், நாளடைவில் நட்பாக மாறுவதைத் தவிர்க்க இயலாது. அந்த நட்பு வளையத்தை உருவாக்க, அவசரப்படக் கூடாது. குறைந்தது, ஓர் ஆண்டாவது எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், எதிராளியின் மனப்பாங்கு, சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் போன்றவற்றை ஓரளவு கணிக்க முடியும்.



இவற்றில், நிஜப் பெயருக்கு பதில், புனைப் பெயர் வெளியிடுவதே நல்லது. நிஜப் பெயரில் இருந்தாலும், அதை மாற்றி விட வேண்டும். இல்லையென்றால், ஏதேனும் கருத்து மோதல் வந்தால், பெயரை குறிப்பிட்டு விமர்சனம் செ#வர். புனைப் பெயரில் விமர்சனம் செய்தால், அவ்வளவாக வலிக்காது.


தனிப்பட்ட முறையில், ஒருவரை அவதூறாக பேசும் போக்கு, ஊடகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; இது, ஏற்கத்தக்கதல்ல. எனவே, பொதுவான கருத்துகளை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டும். தனிப்பட்ட விமர்சனங்களுக்கு, பதில் சொல்ல வேண்டாம்.


இவற்றில், கருத்துக்கு தான் முதலிடம். யார் சொல்கின்றனர் என்பது இரண்டாம் பட்சம் தான். எனவே, தங்களைப் பற்றிய சொந்த விஷயங்களை, பகிர்ந்து கொள்ள வேண்டாம். உதாரணத்துக்கு, நாம் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லாம், இங்கு தேவை இல்லாத ஒன்று.


ஓரளவு நட்பு வளர்ந்து, நம்பிக்கை வந்தால் மட்டுமே, தங்களைப் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அதுவும், தேவைப்பட்டால் மாத்திரமே. பர்சனல் லைப், சோஷியல் லைப் இரண்டிற்கும் இடையே, எப்போதுமே ஓர் எல்லைக் கோடு இருக்க வேண்டும். இல்லையென்றால், அது அனாவசிய குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.


ட்விட்டர் மாதிரி, யாரும் நேரில் அழைத்தால், போக வேண்டாம். இங்கு, எழுத்துக்குத் தான் வலிமை; நேர்முக அறிமுகத்துக்கு இல்லை. நேரில் பார்த்து அளவளாவும் வழக்கம், எழுத்தாளர் உலகத்தில் உண்டு. சின்ன சின்ன கருத்தோ, நகைச்சுவை துணுக்கோ பகிர்ந்து கொள்வதற்கு, நேரில் பார்த்து பழக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவசியம் என்று பட்டால், குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.


முக்கியமாக, இதற்காக ஒதுக்கும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், ட்விட்டர் அடிமையாக்கி விடும். ட்விட்டரே கதி எனக் கிடப்பவர்கள், நமக்கு சொல்கிற செய்தி இது தான்... "நாலு விஷயம் தெரிந்து கொள்கிறோம்; சில ஆலோசனைகளை பெறுகிறோம்...' என்பது தவிர, இந்த ஊடகத்தால், தனிப்பட்ட பாதுகாப்பு குறைகிறது என்பது தான் உண்மை. பல அலுவலகங்களில் இதைத் தடை செய்வதற்குக் காரணமும் அது தான்.



மனதில் உள்ளதை எல்லாம் பேசும் சுதந்திரம், ட்விட்டரில் இருக்கிறது. அது தான் இதில் உள்ள வசதி. அதுவே, அடிமையும்படுத்தும். கட்டற்ற சுதந்திரம், எப்போது வேண்டுமானாலும், ஆபத்தாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. இது குறித்து, அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.



போலி முகவரிகளிடம் (பேக் ஐ.டி.,) கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக, எல்லாரையும், பேக் ஐ.டி.,யாக, இருக்குமோ என்று நினைத்து அணுகுவதே நல்லது. உதாரணமாக, சாலையில் போகும் போது, ஒரு டர்னிங் வருகிறது என்றால், அங்கு வாகனம் ஏதும் வரும் என்று, எதிர்பார்த்து போகச் சொல்வர் இல்லையா... அது போலத் தான். சிறிது நாள் சென்றதும், பேக் ஐ.டி., இல்லை என்று தெரிந்தால், சின்னதாக ஒரு, "சாரி' சொல்லி சமாளித்து விடலாம்.


ஆபாச வார்த்தைகளுக்கு பதில் சொல்லாமல், அவற்றை புறக்கணித்து விட வேண்டும். கைமீறி போகும் பட்சத்தில், ப்ளாக் செய்து விட வேண்டும். ஆண்கள் உபயோகப்படுத்தும், இரட்டை அர்த்தமுள்ள பல, பேச்சு”வழக்கு வார்த்தைகள், பெரும்பாலும், பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. இதுபோன்ற ட்விட்ஸ்க்கு பதிலளித்து, பெண்கள் சிலர், சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, அர்த்தம் புரியவில்லை என்றால், "அது சிங்கிள் மீனிங் தான்' என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.


யாராவது ஆபாசமாகக் கிறுக்கினால், அவர்களை திருத்த முயல வேண்டாம். அது நம் வேலை இல்லை. இதை, எந்த ஊடகத்திலும் தவிர்க்க இயலாது. பிடிக்கவில்லை என்றால், ஒதுங்கிப் போவதே நல்லது.


பேஸ்புக், ஜி-மெயில், ஸ்கைப், வாட்ஸப் போன்றவற்றிற்கு, தகவல் கொடுக்கும் முன், பல முறை யோசிப்பது நல்லது. இல்லையென்றால், அதில் தொடர்பு கொள்கிறவர்களுக்கு பதில் சொல்லி, நம் நேரம் விரயமாகும்.


கடைசியாக, முக்கியமாக ஒன்று... சொந்த வாழ்க்கையில், சிரமம் ஏற்படுத்துமானால், ட்விட்டருக்கு, "குட்-பை' சொல்லுங்கள். இவற்றில் பகிர்ந்து கொள்ளப்படும் கருத்துகளுக்கு, அதீத முக்கியத்துவம் தராமல், "லைட்'டாக எடுத்துக் கொள்ளப் பாருங்கள்.
வலைதள ஊடகங்களால் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும், சில தீமைகள் இருக்கத்தான் செய்கிறது. அன்னபட்சி போன்று நல்லதை மட்டும் எடுத்து கொள்ளலாமே!
***

நன்றி - கட்டதுர ,உமா யசோ, கட்டோரா (
, தினமலர்


ரவிக் பிகர் -புதுசா இருக்கே?

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1. ஆபீஸ் லயே ரிசப்ஷனிஸ்ட்க்கு ஏன் லிப் கிஸ் அடிச்சே? 



அவ்ங்க தான் கோபமா "வாயை மூடு"ன்னாங்க.என் வாயால மூடிட்டேன்.ஹி ஹி



-------------


2. பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரங்களுக்குப் பிறகும் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது -முக.#,மஞ்சள் துண்டு போட்ட தலைவா வாழ்க !்



-----------------


3. அஜீத்தை நான் தான் பெரிய ஸ்டார் ஆக்கினேன்'- இயக்குனர் வசந்த்.# ஆனா பாருங்ணா.உங்க படம் ஊத்திக்குச்சு.அவர் படம் ஹிட் அடிக்குது



=================


4. ஊழல் விசாரணைகள் நேர்மையாக நடைபெற வேண்டும்-முக #ரானா ஹெக்சாடாக்டைளா தன் வாயால் தானே கெடும்



================


5. ஜெயிலில் களி சாப்பிடும் காமெடியர்கள்


 1 பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் 2 வன்னியர் ஸ்டார் டாக்டர் ராம்தாஸ்




---------------




6. பழைமைவாதிகளின் சகாப்தம் முடிந்துவிட்டது- புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் : இம்ரான்கான்.# அண்ணன் யூத்டோய்.சட்டையைப்பார்த்தே இல்ல.பச்சகலரு



---------------


7. அதீத திறமை கொண்டவன் ஜித்தன். அதீத நேர்மை கொண்டவன் அஜித்தன்


-------------


8. முஸ்லீம்களின் கோயில் மஜித். நல்ல மனிதத்தன்மையின் நுழைவாயில் அஜித்்



----------------


9. அல்டிமேட் என்ற வார்த்தை தமிழில் பிரபலம் ஆனதே ஒருவரால்தான்



---------------


10/ சுதந்திர இந்தியாவில் இது தான் (காங்கிரஸ்) மோசமான அரசு: சுஷ்மா சுவராஜ் # சபாஷ்மா.சரியாச்சொன்னீங்க.அடுத்த மோசம் பிஜேபியா?்



------------------


Photo


11. திருமா - பிரமாதம் மேடம். ஒரு தீய சக்தியை சாரி பலவீனத்தை உள்ளே தள்ளீட்டீங்க். 


ஜெ - ரொம்ப துள்ளவேணாம்.அடுத்துநீங்கதான்



----------------


12. டியர்.என் மேல உண்மையான அன்பு இருக்கா ? 


ஹி ஹி உன் மேலயும் இருக்கு



--------------


13. உண்ணா விரதத்தால் ஊழலை ஒழிக்க முடியாது -பிரதமர்#ஊழல்வாதிகளை கட்டாய காலவரையற்ற உண்ணா விரதம் இருக்க வெச்சுடனும்




----------------


14. ஆட்சியை விமர்சிக்க வேண்டாம்: கேப்டன் ு- # சூது கவ்வும் எதிர் நீச்சல் ,3 கட்சி 3 கூட்டணி இப்டி பட விமர்சனம் பண்ணலாமா?



-----------------


15. அன்பே! அழகாய் இருக்கிறாய்.கிளுகிளுப்பாய் இருக்கிறது.ஆனா புருஷன் போலீஸ்.பயமாய் இருக்கிறது



--------------------
 Photo


16. போலீஸ் - யூ ஆர் அண்டர் அரெஸ்ட் 



. ராம்தாஸ் - ஒரு வன்னியர் தான் என்னை கைது பண்ணனும்




----------------


17. திமுக.,வினர் அனைவரும் எனது ஆதரவாளர்கள்: அழகிரி# அது கிடக்குட்டும்ணா.குஷ்பு உங்க சைடா? தம்பி சைடா? ்



-------------


18. அஜித் பிறந்த நாளுக்கு அரசு லீவ் விடுது.விஜய் பிறந்த நாளுக்குலீவ் விடறதில்லை ஏன்? அப்டி னு கேட்டு யாரும் இன்னும் கிளம்பலையா?



-------------


19. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்த பிகரை இனி சுருக்கமாக ரவிக் பிகர் என அழைப்போம் ( ரவிக்கை = ஜாக்கெட் )




------------


20/ கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிக்கிட்டுக் கொடுக்குமாம்!அப்போ தம்பதிகள் முன்னே பின்னே இருந்தா சங்கடப்படமாட்டாங்க?



------------------------


Photo

Friday, May 17, 2013

விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி - ஒரு பார்வை

2012ம் ஆண்டிற்கான விஜய் அவார்ட்ஸ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை இரவு கோலகலமாக நடைபெற்றது. கமல், ஷாருக்கான், விஜய், சமந்தா, சித்தார்த், மாதவன் என பல்வேறு நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.


விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் :

சிறந்த உடை அலங்காரம் - அரவான்

சிறந்த கலை இயக்குனர் - அரவான்
சிறந்த ஒளிப்பதிவாளர் - கோபி அமர்நாத் (பீட்சா)
சிறந்த சண்டைப் பயிற்சி - அனல் அரசு (தடையறத் தாக்க)
சிறப்பு ஜுரி விருது - ஆரோகணம்
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (கண்கள் நீயே - முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த பின்னணிப் பாடகர் - ரம்யா ( சற்று முன் - நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடன இயக்குனர் - ராபாட் (லவ் பண்ணலாமா - போடா போடி)
சிறந்த புதுமுக இயக்குனர் - பாலாஜி தரணீதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்)
சிறந்த உறுதுணை நடிகர் - சத்யராஜ் (நண்பன்)
சிறந்த உறுதுணை நடிகை - அனுபமா குமார் ( முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இசையமைப்பாளர் - இமான் ( கும்கி)
சிறந்த வில்லன் நடிகர் - சுதீப் ( நான் ஈ)
சிறந்த திரைக்கதை - கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா)
சிறந்த வசனம் - ராஜேஷ் ( ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் ( வழக்கு எண் 18/9)
சிறந்த படம் - வழக்கு எண் 18/9
சிறந்த புதுமுக நடிகை - வரலட்சுமி சரத்குமார் ( போடா போடி)
சிறந்த புதுமுக நடிகர் - விக்ரம் பிரபு (கும்கி)
BEST FIND OF THE YEAR - அனிருத்
BEST FACE OF THE YEAR selected by fans  - உதயநிதி ஸ்டாலின்
சிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன்வசந்தம்)
சிறந்த நடிகர் - தனுஷ் (3)
சிறந்த பொழுதுபோக்கு நடிகர் - விஜய் (நண்பன் & துப்பாக்கி)
சிறப்பு ஜுரி விருது - விஜய் சேதுபதி
சிவாஜி கணேசன் விருது - ஷாருக்கான்
சிறந்த படக்குழு - பீட்சா
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல் -  கூகுள் கூகுள் (துப்பாக்கி)
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த இயக்குனர் -  ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படம்  -  துப்பாக்கி
ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நடிகர் - விஜய் (துப்பாக்கி)

சில தகவல்கள் :

* கோபிநாத்துடன் இணைந்து மாதவன்  நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

* சிறந்த புதுமுக இயக்குனருக்கான விருது பாலாஜிக்கு வழங்கப்பட்டது. உடனே தொகுப்பாளர் கோபிநாத் "உங்கள் படத்தின் புகழ்பெற்ற வசனத்தினை நீங்கள் பேச வேண்டும்" என்று வேண்டுகோள் விடுக்க.. பாலாஜியும் பேசினார். அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை பேச சொன்னார்கள். அவரும் பேச பயங்கர கைத்தட்டல்கள் கிடைத்தன.

* அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அருகிலே அமர்ந்து இருந்த நாயகி காயத்ரியை பார்த்து "ப்ப்பா! என்ன பொண்ணுடா இது" என்ற வசனத்தினை பேச சொல்லவே அவரும் பேச, அப்போது கிடைத்த கைத்தட்டல்கள் அடங்க சில நேரம் ஆனது.

* சூது கவ்வும் படத்தின் பாடல்களுக்கு கிளாமராக நடனமாடி அனைவரையும் கவர்ந்தார் வரலட்சுமி சரத்குமார்.

* குறும்படப்  போட்டி ஒன்றை அறிவித்து அதில் வெற்றி பெறுபவர் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் விஜய் டிவி இணைந்து தயாரிக்கும் படத்தின் இயக்குனர் ஆகும் வாய்ப்பு என்று அறிவித்தார்கள். அப்போட்டியில் WARRANT என்ற குறும்படத்தினை இயக்கிய மாமுண்டி வெற்றி பெற்று இயக்குனராக அறிமுகமாகிறார்.

* நடிகர் சித்தார்த் மேடையில் தோன்றி காதல் பாடல்களைப்  பாட, அங்கிருந்த திரையில் சமந்தா காட்டிய போது கூட்டத்தினர் பெரும் கூச்சல் எழுப்பினார்கள். அதைப் போலவே சமந்தா சிறந்த நடிகை விருதினை வாங்கிய போது சித்தார்த்தை திரையில் காட்டினார்கள். சித்தார்த், சமந்தா இருவருமே அருஅருகே அமர்ந்து விழாவை ரசித்துப் பார்த்து தங்களது காதலை உறுதிப்படுத்தினார்கள்.

* "எனக்கு விருது கொடுத்து  மட்டுமே பழக்கம், விஜய் அவார்ட்ஸ் எனக்கு விருது வழங்கி இருக்கிறது " என்று சிறந்த பொழுதுபோக்கு நடிகருக்கான விருதினை பெற்றவுடன் கூறினார் விஜய்.

* மாதவன், த்ரிஷா இருவரும் இணைந்து ஷாருக்கானை அழைத்தார்கள். உள்ளே நுழைந்த ஷாருக்கான் கமல்,  விஜய்யிடம் பேசிக்கொண்டு இருந்தார். த்ரிஷா மேடையில் இருந்து இறங்கி ஷாருக்கான் அருகே போய் உட்கார்ந்து கொண்டார்.

* 'விஸ்வரூபம்' படத்துக்கு  நடனம் அமைத்ததிற்காக தேசிய விருது வென்ற பிர்ஜு மகாராஜிற்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார் கமல்.

* கமல், விஜய், பிரபு, விக்ரம்பிரபு என அனைவரும் இணைந்து ஷாருக்கானுக்கு "செவாலியே சிவாஜி கணேசன் விருது" அளித்தார்கள். அதற்கு முன் ஷாருக்கானை பற்றிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது.

* " ஹேராம்" படத்தில் நடித்ததிற்காக இதுவரை ஷாருக்கான் என்னிடம் ஒரு பைசா கூட சம்பளமாக வாங்கவில்லை என்று நெகிழ்ந்தார் கமல்.

* " எனக்கு தென்னந்திய திரையுலகம் மிகவும் பிடிக்கும். இங்கிருந்து தான் பல்வேறு புதிய சிந்தனைகளுடன் கூடிய படங்கள் வருகின்றன. நான் கமலிடம், அஜித்திடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். கமலை முதன் முதலில் சந்தித்த உடன் இரவு வீட்டிற்கு சென்று " நான் கமலைத் தொட்டுப் பேசினேன். இப்போது நான் செத்தாலும் கவலைப் பட மாட்டேன் " என்றேன். நான் ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்கு உரிமையாளராக இருக்கலாம், ஆனால் ஐ.பி.எல்லில் எனக்கு பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். விஜய் என்னை விட நல்ல டான்ஸர் மட்டுமல்ல நல்ல நடிகரும் கூட" என்றார் ஷாருக்கான்.

* ரசிகர்கள் தேர்ந்தெடுத்த அனைத்து விருதுகளுமே 'துப்பாக்கி' படத்திற்குக் கிடைத்தது. சிறந்த பாடல், சிறந்த இயக்குனர், சிறந்த படம், சிறந்த நடிகர் என 4 விருதுகள் கிடைத்தது. அனைத்து விருதுகளையும் ஷாருக்கான் வழங்கினார்.

* இறுதியாக ஷாருக்கானுடன் இணைந்து விஜய் 'கூகுள் கூகுள்' பாடலுக்கு நடனமாடினார்.

நன்றி - விகடன் 

வலம்புரி ஜான் - புத்தகம் - கட்டுரை @ விகடன் ( 1998)

வேர்கள் 
வலம்புரி ஜான் 
வி.ஐ.பி.சாய்ஸ்
அண்ணன் பெயர் ஆல்பர்ட். 18 வயது மூத்தவன். ஆங்கிலப் பேராசிரியராக இருந்த ஆல்பர்ட், புத்தக வெறியன். மணிக்கணக்காகப் புத்தகம் வாசித்து அவனுக்குக் கழுத்து சுளுக்கிக் கொள்ளும். எண்ணெய் போட்டுச் சுளுக்கெடுத்துவிடுவார் எங்கள் அம்மா. அடுத்த நிமிடமே மறுபடியும் புத்த கத்தைக் கையில் எடுத்துக்கொண்டு விடுவான்.


அவன்தான் என்னைப் படிக்கவைத்தவன். அதற்காகத் தன் திருமணத் தைக்கூடத் தள்ளிவைத்தவன். அண்ணனைப் பார்த்து எனக்கும் புத்தகங்களின் மேல் காதல் வந்தது. அவன் படித்து விட்டுக் கீழே வைக்கும் 'பவான்ஸ் ஜர்னல்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகை யில் துவங்கியது என்னுடைய வாசிப்பு.
நான் படித்த செயின்ட் சேவியர் பள்ளியில் வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வெள்ளிக்கிழமை இரவுகளில் பாதிரிமார்கள் பேச மாட்டார்கள். என்னைக் கூப்பிட்டு நல்ல நல்ல புத்தகங்களை உரக்க வாசிக்கச் சொல்வார்கள். இதற்கு 'ஞானவாசகம்’ என்று பெயர். நாமக்கல் கவிஞரின் 'என் கதை’, சாமிக்கண்ணுப்பிள்ளை என்பவரின் வாழ்க்கை வரலாறு என்று அடடா... எத்தனை எத்தனை புத்தகங்கள். இன்னும் எனக்கு மறக்கவில்லை.


இப்போது தமிழில் வெளியாகும் புத்தகங்களில் ஐந்து சதவிகிதம்தான் தரமான புத்தகங்கள். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்த பிறகு, ஒவ்வொரு புத்தகத்தையும் சலிக்கா மல் பலமுறை வாசிப்பேன்.



எனக்குள் ஏற்கெனவே தோன்றிய ஒரு கருத்தைப் புதிதாகப் படிக்கிற புத்தகங்களில் சந்திக்கும்போது, அதீதக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும். அந்தக் கிளர்ச்சி மேலும் பல கருத்துகள் என்னுள் உருவாகத் தூண்டுகோலாக அமையும். நான் அடிக்கடி ஒரு கருத்தைச் சொல்வது உண்டு. திரௌபதி யைக் காக்க கண்ணன் வந்ததுபோல இப்போது கடவுள் எங்கேயும் வருவதுஇல்லையே.


.. இதற்குக் காரணம், நாம் கடவுளை முழுவதுமாக நம்பாததுதான் என்று சொல்வேன். பின்னாளில் நான் படித்த சுஃபி புத்தகம் ஒன்றில் 'அல்லாவைத் தொழு. ஒட்டகத்தைக் கட்டிப்போடு’ என்கிற பழமொழி தவறு. அல்லாவை முழுமையாக நம்பினால், அவர் உன் ஒட்டகத்தைக் காப்பாற்றுவார்’ என்று எழுதியிருந்தது.


தவிர, புத்தகம் வாசிப்பது என்பதை வேறுவிதமாகவும் சொல்லலாம். ஒரு மகத்தான மனிதனின் அனுபவங்கள்... ஏன், அவரது வாழ்க்கையே நம்முடன் சேருகிறது. படிப்புதான் சரியான ஒரு மனிதனை உருவாக்குகிறது.


பேச்சு


புத்தகங்களை உரக்க வாசிப்பது நல்லது. கண், வாய், காது என்று அநேகப் பொறிகள் ஒரே காரியத்தில் ஈடுபடுகிறபோது கவனம் அபாரமாகக் குவிகிறது. உரக்க வாசிக்கும் பழக்கம்தான் என்னை ஒரு பேச்சாளனாகவும் ஆக்கியது.


அண்ணா, கலைஞர் ஆகியோரின் பேச்சுக்கள் எனக்குப் பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசுவார்கள். ஆனாலும், நான் அவர்களைப் பின்பற்றிப் பேச மாட்டேன். பல நல்ல பேச்சாளர்களின் சிறப்பான அம்சங்களை எல்லாம் சேர்த்துக்கொண்டு என்னுடைய பேச்சுப் பாணியை அமைத்துக்கொண்டேன்.


எனக்கு எப்போதுமே மிமிக்ரி பிடிக்காது. பூனை, பூனை போல இருக்க வேண்டும். புலி போலவும் இருக்கக் கூடாது, எலி போலவும் இருக்கக் கூடாது என்பது என் சித்தாந்தம். சென்னைக்கு வந்த புதிதில் நான் பேசுவதற்கு நிறைய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர் சர்வோதய சங்கத்தில் இருந்த ராதாகிருஷ்ணன்.


மாணவர் தி.மு.க-வில் நான் சேர்ந்த பிறகு பேசியதுதான் திருப்புமுனையாக அமைந்த மேடைப் பேச்சு. நான் பேசியதைக் கலைஞர் மிகவும் பாராட்டிப் பேசினார். அது உற்சாகத் தைக் கொடுத்தாலும் எனக்கென்று சில கணக்கு களையும் நான் வைத்திருந்தேன். பிறர் பாராட்டி னால், அதை நான் நம்ப மாட்டேன். எனக்கே பிடித்தால்தான் ஆயிற்று. பேச்சை நான் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். 'இது கேட்பவர்களை மாற்றாவிட்டாலும் குறைந்த பட்சம் என்னையாவது மாற்றும்’ என்பது என் நம்பிக்கை.


எழுத்து


எந்தவொரு நல்ல புத்தகமும் எனக்கு வேர் தான் என்று சொல்வேன். 'தென்றல்’ என்கிற தி.மு.க. பத்திரிகையில் ஏ.கே.வில்வம் எழுதிய கட்டுரைகளும் 'காஞ்சி’ பத்திரிகையில் அண்ணா எழுதிய விஷயங்களும் என்னை மயக்கின. சி.பி.சிற்றரசு, நாலணா விலையில் சாக்ரடீஸ், டெமாஸ்தனீஸ் என்கிற தலைப்பில் எல்லாம் புத்தகம் போடுவார். அட, உலக விஷயமெல்லாம் எழுதுகிறாரே என்று வியப்பு ஏற்படும். பிறகு, நானே புத்தகம் எழுத ஆரம்பித்தது ஒரு வேடிக்கையான விஷயம்.


தென்னொலி, தினமலர், மறவன்மடல் போன்ற பத்திரிகைகளில் எழுதிய நான் முரசொலியிலும் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன். அப்போது அங்கு இருந்த ஒரு நபர் ஏனோ என் கட்டுரைகள் பிரசுரமாவதைக் தடுத்துக்கொண்டிருந்தார். முரசொலி மாறன் ஊரில் இல்லாதபோது 'இந்தக் கட்டுரை மாறன் பார்வைக்கு’ என்றும், மாறனின் தம்பி செல்வம் இல்லையென்று தெரிந்தால், 'செல்வம் பார்க்க’ என்றும் குறிப்பு எழுதிக் கட்டுரையைக் கிடப்பில் போட்டுவிடுவார்.



அப்போதுதான் விறுவிறுவென்று மூன்று புத்தகங்கள் எழுதி அவற்றை வெளியிடுமாறு கலைஞரைக் கேட்டுக்கொண்டேன். 'புத்தகத்தைப் படிக்கும் அவர் எப்படியும் பாராட்டித்தான் பேசப்போகிறார், பிறகு மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்’ என்பது என் எண்ணம்!


கலைஞர் முரசொலியில் என்னை ஆதரித்த அளவு கவியரசு கண்ணதாசனும் ஆதரித்தார். நான் எழுதிய ஒரு கவிதையைப் படித்துவிட்டு, கண்ணதாசன் 'ஓஹோ’வென்று பாராட்டினார்.


'நவநவமாக அள்ளி
நற்றமிழ்ச் சொற்கள்தம்மை
இவர்தரும் அழகு நாட்டில்
எல்லோர்க்கும் வருவதில்லை.
வலம்புரி ஜானுக்கு இந்த
வற்றாத மொழியைத் தந்து
நலம்புரிந்தாளே அந்த
நற்றமிழ் அன்னை வாழ்க’


என்று கண்ணதாசன் எழுதியது என் வேர்களுக்கு உரமாக இருந்தது.


தாகூர், பாரதி


சின்ன வயதில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியை மனப்பாடமே செய்திருக்கிறேன். வி.ஆர்.எம். செட்டியாரின் மொழிபெயர்ப்பைக் கையிலேயே தூக்கிக்கொண்டு அலைவேன். 'படிக்கும்போதெல்லாம் நெருப்புல குமிஞ்சான் அள்ளிப்போட்டது மாதிரி இருக்கு’ என்று நண்பர்களிடம் சொல்வேன். குமிஞ்சான் என்றால் சாம்பிராணி. தாகூரைப் படிக்கும்போதெல்லாம் சாம்பிராணி போட்டது போன்ற இனம் தெரியாத உணர்வு என் மனதைச் சூழும்.


ஆனால், நான் வளர வளர... தாகூர் குள்ளமாகிவிட்டார். ஒன்பது வயதில் என்னைப் பிடித்துவிட்ட பாரதியோ இன்னும் ஆதர்ச புருஷனாகவே தொடர்கிறான். அவனுடைய ஒவ்வொரு கவிதையையும் படிக்கப் படிக்க அவன் மீதிருக்கும் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது. எந்த எல்லைக்கும் சென்று நான் பாரதிக்கு வணக்கம் செய்வேன். 



'தமிழ்நாட்டில் பாரதியிலிருந்துதான் மனிதன் தொடங்குகிறான்’ என்றுகூடச் சொல்லியிருக்கிறேன்.


உண்மையான ஒரு மனிதனாக வாழ்ந்தவன் பாரதி. பிராமணர் அல்லாத ஐந்தாறு பேருக்குப் பூணூல் போட்டிருக்கிறான். அதில் ஒருவர் நாகலிங்கம். மாரியம்மன் கோயிலில் பூசை செய்யும் அவரை முதல் நாள் 'பண்டாரம்’ என்றும் அடுத்த நாள் 'பூசாரி’ என்றும் மூன்றாம் நாள் 'குருக்களே’ என்றும் அழைத்துப் பெருமைப்படுத்திய துணிச்சல்காரன் பாரதி.


இந்த இடத்தில் என் நண்பர் சொன்ன தகவல் ஒன்றைக் குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். கடலூர் சப்-ஜெயிலில் இருக்கும் பழைய ஆவணம் ஒன்றைப் பார்த்திருக்கிறார் நண்பர். அதில் 'கைதியின் பெயர், சுப்பிரமணிய ஐயர். கைதியின் தகப்பனார் பெயர், சின்னசாமி ஐயர். கைதியின் தொழில்: லோஃபர்’ என்று இருந்திருக்கிறது.


'தொழில் என்ன?’ என்று கேட்டதற்கு பாரதி என்ன பதில் சொன்னானோ... சிப்பந்திக்கு என்ன புரிந்ததோ... 'லோஃபர்’ என்று பதிவுசெய்துவிட்டான். எப்பேர்ப்பட்ட கவிஞனுக்கு எப்படிப்பட்ட ஒரு பட்டம்!


நான் பாரதியைப் போல் ஆக விரும்புகிறேன். அப்படி ஆக முடியாமல்கூடப் போகலாம். ஆனால், அப்படி ஆக விரும்புவதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கிறேன்!''


- ரமேஷ் வைத்யா 


படங்கள்: பாட்ஷா