Wednesday, May 15, 2013

காதலியிடம் கனி வாகப்பேசுவது எப்படி?

பாட்டனி படிச்சவங்க சொல்லுங்க.இது என்ன பூ? புதுசா இருக்கே?
 பாட்டனி படிச்சவங்க சொல்லுங்க.இது என்ன பூ? புதுசா இருக்கே?  



1. கம்முன்னு இருக்கும் பசங்க கூட இன்னைக்கு கும்முன்னு வேலை செய்வாங்க # நமீதாஆஆஆ பிறந்தநாள்



--------------------


2. ஜவுளிக்கடை சேல்ஸ்மேனிடம் சொல்ல முடியாத வாக்கியம் - சேலைய பாக்காத வேலைய பாரு



-----------------------------


3. இளைய ராஜா வின் இசை அம்மாவின் கைப்பக்குவ கிராமத்து மண் பாத்திர சமையல் போல.1000 பைவ் ஸ்டார் ஹோட்டல் வந்தாலும் ஈடாகாது




--------------------------


4.  டியர்.டெய்லி 100 கிஸ் குடுக்கனும் நீ.


 எதுக்கு?

கிஸ்சாலஜில ( யாவது) நான் ஸ்டேட் பர்ஸ்ட் வரனும்


----------------


5. டாக்டர்.நான் பிளஸ் டூ ல 990 மார்க் தான்.கவலையா இருக்கு.



 400 வாங்கி பெயில் ஆன நானே டாக்டர் ஆகிட்டேன்.சியர் அப்



----------------------------


6. உடல் எடையை குறைக்க கரும்பு சாப்பிடுங்க. 



 டாக்டர்.அப்டி சாப்டா டக்னு ஆல்ரெடி சாப்ட்ட மீல்சை ஜீரணம் பண்ணிடும்.நிறைய வாட்டி சாப்பிடுவேன் 



-------------------------


7. படவா ராஸ்கோல் என காதலி திட்டினால் கவலைப்படேல். என் மேல் பட வா என்று கூட உள்ளர்த்தம் இருக்கலாம்


-------------------


8. பல நாள் ( டிமிக்கி குடுத்த ) காதலி ஒரு நாள் ( கிஸ்க்கு) அகப் படு வா



-----------------------


9. க டூ ம - டியர்.பசிக்குது.




பேபி - டாடி.8 மணிக்குத்தானே 7 பூரி அடுக்குனீங்க? அதுக்குள்ளே ஜீரணம் ஆகிடுச்சா? 


---------------------------

10. காதலியிடம் கனி வாகப்பேசுவது - உன் உதடு கொடை ஆரஞ்சுப்பழச்சுளை போல் ,உன் கண்மணி நாவல் பழம் போல ,உன் நாசி நுனி கிளிமூக்கு மாங்கனி போல்்


-----------------------



11. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உன்னுடன் கேனத்தனமாய் எதையாவது பேசிக்கொண்டிருக்க ஏங்குதே மனம்.உனக்கு எப்டி?


------------------


12. ஓடி ஓடி நீ உழைத்தாலும் ,ஊர் எல்லாம் சுற்றினாலும் உன் குடும்பத்துக்கு தினமும் ஒரு மணி நேரம் அளவளாவ வேண்டும்



-----------------------


13. அவளுக்கு காது டமாரம் போல.எந்த சூழலிலும் என் மீது கோபப்படாதே என்றேன். படவே இல்லை



-----------------


14. காதலி போன் பண்ணி பிஸியா? என்றாள்.செம பசியா.என்றேன். வர்றேன் என்னை சாப்டுக்கோ என்கிறாள்



-----------------------


15. புதுக்காதலியின் உதட்டை தொட்டுப்பார்க்க குறுக்கு வழி - 



1,லிப்ஸ்டிக் போட்டிருக்கியா?


 2 அட.அதிர்ஷ்ட ரேகை உன் உதட்டில் ஓடுதே 



--------------------------------


16  அன்பே.உனக்காக எவ்வளவு செலவு செய்யவும் தயார்.உன் ஏடிஎம் கார்டை மட்டும் என்னிடம் கொடு # யாரு கிட்டே



--------------------


17. உன்னைச்சுற்றி வந்து காதலை யாசிப்பது நாய்ப் பிழை ப்பு



----------------------


18. டேமேஜர் லேடி ஸ்டாf கிட்டே பேசும்போது நாம லேடியை கவனிக்கக்கூடாது.ஏன்னா டேமேஜர் நம்மை கவனிச்சுட்டு இருப்பார்



-----------------------


19. அமாவாசைக்கு விரதம் இருந்து படையல் இடுபவர்கள் காகம் உண்ணாவிடில் காத்திருக்கத்தேவை இல்லை.கிணற்றில் குளத்தில் மீனுக்கு இட்டு சாப்பிடலாம்



--------------------------


20.  டெய்லி இந்தப்பக்கமாதான் வாக்கிங் வருவீங்க போல? 



யெஸ் மிஸ்.உங்க வீடு எந்தப்பக்கம்னு சொன்னா அந்தப்பக்கமாவும் வருவேன்.


-------------------------

Tuesday, May 14, 2013

பான் மசாலா அபாயம்... தடைவிதித்த தமிழகம்!

இவர்தான் முகேஷ்..., நுரையீரல் பஞ்சு போன்றது..’- சினிமா ரசிகர்களுக்கு மனப்பாடமாகிப்போன விளம்பரங்கள் இவை. புகையிலை மற்றும் பான் மசாலா போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த விளம்பரங்கள். 


அத்தகைய கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும் சேமித்துவைக்கவும் விநியோகம் செய்யவும் விற்கவும் தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.


2003-ம் ஆண்டு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்து உழைக்கும் மக்களை முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றியதுபோல, இந்த அறிவிப்​பும் சிறப்பானது என்று சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர்.


சுவைக்கும் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை தடைசெய்வதால் ஏற்படும் நன்மை​கள் குறித்து புற்றுநோய்க்கு எதிராக விழிப்பு உணர்வுப் பிரசாரங்களை செய்துவருபவரும், வடபழனி பேட்டர்சன் புற்றுநோய் மருத்துவமனையின் நிர்வாக இயக்கு​நருமான டாக்டர் எஸ்.விஜயராகவனிடம் பேசினோம்.


''தோட்டத்தில் விளையும் புகையிலையை, சுவைக்கும் புகையிலையாகப் பதப்படுத்தி விற்பனைக்குக் கொண்டுவரும் வரை நிறைய கெமிக்​கல்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. புற்றுநோயை உண்டாக்கும் 45 விதமான கெமிக்கல்களில் 22 கெமிக்கல்கள், சுவைக்கும் புகையிலையில் பல்வேறு கட்டங்களில் சேர்க்கப்படுகின்றன. 


புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோயால் 43 சதவிகித அளவுக்கும் உயிரிழப்பு ஏற்படுகிறது. வாய், உதடு, உள் கன்னம், நாக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், குரல்வளை, வயிறு என்று புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை நீண்ட பட்டியலிடலாம்.



பான் மசாலா பொருட்களில் 'பொலோனியம் 6’ என்ற கதிர்வீச்சு பொருள் உள்ளதால், பான் மசாலா போட்டுப் போட்டு நாளடைவில் வாயே திறக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வாய்க்குள் உள்ள மிருதுவான தோல்கள், கடினத்தன்மையை அடைந்துவிடும். பான் மசாலா பழக்கத்துக்கு அடிமையாகிறவர்கள், சில ஆண்டுகள் கழித்து வாய் திறக்க முடியாததால், உதட்டுக்குள் ஒதுக்கும் புகையிலை, பாக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள்.


நன்மை செய்யும் 550 விதமான பூச்சிகள் வாய்க்குள் உள்ளன. நோய் தடுப்பு சக்தியை இழந்த பிறகு தீமைசெய்யும் பூச்சிகள் ஆட்டம் போட ஆரம்பிக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதை மறைக்க வாசனைப் புகையிலை போடுவார்கள். இப்படி, வாய்க்குள் போட்டுள்ள புகையிலைப் பொருட்கள், கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் போகும்.


 இவற்றை செரிமானம் செய்யக்கூடிய கெமிக்கல்கள் வயிற்றுக்குள் இல்லை என்பதால், ஜீரணம் சரியாக நடக்காது. வயிறு உப்பும். பசி எடுக்காது. தண்ணீர் குடிக்க மாட்டார்கள். குடல், வயிறு பகுதிகளில் புண் உருவாகும். வயிற்றுக்குள் போகும் வாசனைப் புகையிலையின் சக்கைகள், ஜீரணம் ஆகாமல் உணவுகளில் உள்ள கால்சியத்துடன் சேர்ந்து, உருண்டையாகி வயிற்றுக்​குள்ளேயே இருக்கும். 



அதை அறுவைசிகிச்சை செய்துதான் அகற்ற வேண்டும். சத்துக்களை உறிஞ்சும் சக்தியைக் குடல் இழந்துவிடுவதால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். உடல் வலு குறைந்து சோம்பேறி ஆகிவிடுவார்கள். கல்யாண ஆசை வராது. நரம்புத் தளர்ச்சி ஏற்படும். ஆண்மைத்தன்மை குறையும். இவர்கள் மது குடித்தால் புற்றுநோய் வர இன்னும் 10 சதவிகித அதிக வாய்ப்பு ஏற்படும். பொறுப்பாக வேலைசெய்ய முடியாத நிலையில்... திருட்டு, வழிப்பறி, கொள்ளை என்று சமூக விரோதச் செயல்படுகளில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்படுவர்.


புகையிலைப் பொருட்களைப் போடும் பலருக்குப் புற்றுநோய் வரவில்லையே என்று சிலர் வியாக்கியானம் பேசலாம். அவர்களுக்குப் புற்றுநோய் பாதிப்பு வராவிட்டாலும் இதயம், கிட்னி பகுதிகளில் பாதிப்பு ஏற்படலாம். இந்தப் பாதிப்புகள் இப்போது வரவில்லை என்றாலும், எப்போதாவது வரலாம். புகையிலைப் பழக்கம் ஏதாவது ஒரு வகையில் மனிதனை நடைபிணமாக்கிவிடும். உழைக்கும் சக்தியை உறிஞ்சிவிடும். இளைய தலைமுறை, எதிர்காலத்தில் சக்கையாகத்தான் இருக்க முடியுமே தவிர, இந்த சமூகத்துக்கு பயனுள்ள மனிதனாக வாழ முடியாது. உறவினர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சுமையாகத்தான் இருக்க முடியும். தமிழக அரசின் அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறோம்'' என்கிறார்.  


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலப் பொதுச் செயலாளர் கே.மோகன், ''வட மாநில உணவுக் கலாசாரச் சீரழிவு, இப்போது தமிழக இளைஞர்களை ஆட்டிப்படைக்கிறது. உழைக்கும் மக்களில் ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி​வருகின்றனர். பான்மசாலா, குட்கா போன்ற வாசனைப் புகையிலைப் பொருட்களை எல்லாம் வட நாட்டில் உற்பத்தி​செய்துதான் இங்கே விற்கிறார்கள். முதல்வரின் அறிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கடைகளில் உள்ள ஸ்டாக்குகளை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு ஒரு மாத கால அவகாசம் தர வேண்டும்.  



இந்த அறிவிப்பின் வெற்றி-தோல்வி முதல்வரின் கையில்தான் உள்ளது. அவரது கரத்தை வலுப்படுத்த முழு ஒத்துழைப்பு கொடுப்போம். அதே நேரத்தில் தடை செய்யப்பட இருக்கும் வாசனைப் புகையிலை குறித்து நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வுசெய்து, எந்தெந்தப் பொருட்கள் தடைசெய்யப்படுகிறது என்பதை அறிவிக்க வேண்டும். 


வாசனைப் புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்களை மீட்டு, புது வாழ்வு அளிக்க மீட்பு மையம் அமைக்க வேண்டும். இதற்கான விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் அரசாங்கத்தோடு பங்கெடுக்கத் தயாராக இருக்கிறோம். எந்த வகையிலும் கள்ளச் சந்தையில் வாசனை புகையிலை விற்பனையாகாமல் இருக்க, முதல்வர் உறுதிபூண வேண்டும்'' என்றார்.


சமூக ஆர்வலரான 'பாடம்’ இதழ் ஆசிரியர் அ.நாராயணன், ''புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்கள் ஏற்படுத்தும் புற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கத்துடன், 2001-ம் ஆண்டே முதல்வர் ஜெயலலிதா அவற்றைத் தடைசெய்தார். மத்திய அரசின் உணவு கலப்படத் தடைச் சட்டம் 1954-ன் கீழ் மெல்லும் வகை புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துவிட்டது. இந்த நிலையில், உணவு கலப்படத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் என்ற புதிய சட்டத்தை 2006-ல் மத்திய அரசு இயற்றியது. இந்தச் சட்டம் 2011 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.


இந்தச் சட்டத்தின்படி எந்த உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருட்கள் இருக்கக் கூடாது என்றும், புகையிலை மற்றும் நிகோடின் ஆகியற்றை உணவுப் பொருட்களில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இப்போது விசாரணையில் உள்ள வழக்கில்... குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு தடை விதிக்க மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்காகப் பாராட்டுகிறோம்.



பான்மசாலா, குட்காவைப் போலவே, 'மாவா’, சர்தா என்ற வாசனைப் புகையிலையும் கேன்சரை உருவாக்கும் வகையைச் சேர்ந்ததுதான். அதன் விற்பனையும் வீதிக்கு வீதி ஜோராக நடக்கிறது. இதற்கும் தடைவிதிக்க வேண்டும். தடை என்பது முதல்வர் அடிக்கடி சொல்வதுபோல, இரும்புக் கரம்கொண்டு அடக்கும் வகையில் இருக்க வேண்டும். 'பள்ளிகள் அருகில் பீடி, சிகரெட் விற்பனைக் கூடாது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் விற்கக் கூடாது’ என்றுள்ள தடையைக் கடுமையாக்க வேண்டும்


. அதே நேரத்தில் பீடி, சிகரெட் பொருட்களைத் தடைசெய்யவும், டாஸ்மாக் மது விற்பனையை முற்றிலுமாக நிறுத்தவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மாற்றுத் தொழில் வாய்ப்புகளை அரசு செய்துதர வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.


சுவைக்கும் புகையிலைக்குத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்த அரசு, அதை எப்போது எந்தத் தேதியில் இருந்து அமலுக்குக் கொண்டுவருகிறது என்றும் விவரமாகத் தெரிவிக்க வேண்டும். விரைந்து அதை செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


- எஸ்.முத்துகிருஷ்ணன்


நன்றி - விகடன் 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் அரசின் கருணையை எதிர்பார்த்துக் காத்திருப்பதைப்போல, அதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும் எதிர்​பார்ப்போடு இருக்கிறார்கள். 


ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் புழல் சிறையிலும், வேலூர் பெண்கள் சிறையில் நளினியும், மதுரை மத்தியச் சிறையில் ரவிச்சந்திரனும் அடைக்கப்​பட்டிருக்கிறார்கள்.  


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் உத்தரவுபெற்று 15 நாள் பரோலில் வெளியே வந்தார் ரவிச்சந்திரன். இப்போது மீண்டும் பரோல் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை​யில் வழக்குத் தொடர்ந்துள்ளார் அவரது தாயார் ராஜேஸ்வரி. இந்தச் சூழலில் வழக்கறிஞர் மூலம் ரவிச்சந்திரனுடன் பேசினோம்.


''பரோல் என்பது சாதாரண நடைமுறைதானே? எதற்காக வழக்குத் தொடுக்கிறீர்கள்?'' 


''உண்மைதான். எல்லா தண்டனைக் கைதி​களுக்கும் சர்வ சாதாரணமாகப் பரோல் வழங்கப்படுகிறது. ஏழெட்டு ஆண்டுகள் தண்ட​னையைக் கழித்த சிறைவாசிகள்கூட மொத்தம் 600 முதல் 1,000 நாட்கள் வரையில் பரோலில் சென்றிருக்கிறார்கள். ஆனால், 22 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நான், மொத்தமே 29 நாட்கள்தான் பரோலில் வந்திருக்கிறேன். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதெல்லாம் சுத்தப் பித்தலாட்டம்.



குடும்பப் பிரச்னைக்காக கடந்த 2010-ம் ஆண்டு பரோல் கேட்டு வழக்குத் தொடர்ந்தேன். மூன்று ஆண்டுகள் சட்டப் போராட்​டத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு 15 நாள் பரோலில் வெளியே வந்தேன். கூடவே, பாதுகாப்பு என்ற பெயரில் 100 போலீஸாரும் வந்தனர். என்ன காரணத்துக்காக நீதிமன்றம் எனக்கு பரோல் வழங்கியதோ, அதை நிறைவேற்றக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. வீட்டையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டனர். 


கடந்த 10 ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத சில குடும்ப விவகாரங்கள், வீட்டில் அனைவரும் உட்கார்ந்து பேசியபோது சுமுகமாகத் தீர்ந்தது. ஆனால், அதை சட்டரீதியில் இறுதிசெய்ய முயன்றபோது பரோல் முடிந்துவிட்டது. சிறைத் துறை, காவல் துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது அவர்களின் இதயம் திறக்க​வில்லை. எனவே, மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்​கிறேன்.''


'' உங்கள் விடுதலைக்கான சாத்தியங்கள் எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?'' 


''கடந்த 13 ஆண்டுகளாக நிறைய மனுக்களை தமிழக முதல்வர்களுக்கு அனுப்பிவிட்டோம். முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் கட்சியைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதிகள் இருவரை விடுதலைசெய்ய வேண்டும் என்பதற்காக, கடந்த 2008-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் ஏழு ஆண்டுகள் மட்டுமே தண்டனையை முடித்த 1,405 கைதிகளை விடுதலைசெய்தார். அப்போது நாங்கள் 17 ஆண்டுகள் தண்டனையை நிறைவுசெய்திருந்தோம். ஆனால், சி.பி.ஐ. வழக்கு என்ற நொண்டிச் சாக்கு சொல்லி எங்கள் நால்வரை மட்டும் விடுதலை செய்யவில்லை.


இப்போதைய முதல்வரைப் பொறுத்தவரையில், அதிகாரிகள் அந்த மனுக்களை முதல்வரின் பார்​வைக்கே கொண்டுசெல்வது இல்லை. எங்கள் நால்வரின் விடுதலை இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையில்தான் இருக்கிறது. கருணாநிதியை நாங்கள் நம்புவதாக இல்லை.''


''சாந்தன், முருகன், பேரறிவாளன் மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்று இப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளாரே?'' 


''முதல்வர் ஜெயலலிதா தன் அமைச்சரவையைக் கூட்டி அப்படியரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது மூன்று தமிழர்களைத் தூக்கிலிடுவது என டெல்லி முடிவு​செய்தது. அவர்கள் அளித்த கருணை மனுக்கள் மீது கருத்துக் கேட்டு, கருணாநிதி தலைமையிலான அரசுக்கு ஆவணங்களை அனுப்பிவைத்தது மத்திய அரசு. ஆனால், அப்போது அமைச்சரவையைக் கூட்டி இதே​போன்ற தீர்மானத்தை ஏன் அவர் நிறை​வேற்றவில்லை?


இதே மூன்று தமிழர்களும் நளினியும் கடந்த 2000, 2001-ம் ஆண்டு​களில் அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதியிடம் கருணை மனு அளித்தனர். சட்டப்படி அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுக்காமல், நேரடியாக கவர்னருக்கு அனுப்பினார் கருணாநிதி. கவர்னரோ நால்வரின் கருணை மனுக்​களையும் நிராகரித்து தூக்குத் தண்டனையை உறுதிசெய்தார். 



இதை எதிர்த்து நால்வரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 'அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு கூறிய நீதிமன்றம், கருணை மனுக்களை மீண்டும் பரிசீலனை செய்யும்படி கவர்னருக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்குப் பின், வேறு வழியின்றி கருணாநிதி தன் அமைச்சரவையைக் கூட்டி, நளினியின் தூக்குத் தண்ட​னையை மட்டும் ரத்துசெய்தார். கருணாநிதி அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று கவர்​னரும் அப்படியே ஆணை பிறப்பித்தார்.


அதிகாரத்தில் இருக்கும்போது, மூன்று தமிழர்களுக்கு ஆதரவாக முடிவெடுக்காத கருணாநிதி, இப்போது இப்படி கோரிக்கை வைப்பதன் நோக்கம், அவர்கள் மீதான அக்கறையில் அல்ல. தான் வாய் திறந்தால் ஜெயலலிதா எதிர்மறையாகத்தான் செய்வார் என்ற கெடு எண்ணத்தில்தான். அதனால், அவர் வாய் திறக்காமல் இருந்தாலே போதும். அந்த மூன்று தமிழர்களுக்கு மட்டுமின்றி, எங்கள் நால்வருக்கும் நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது.''

 நன்றி - விக்டன்

மேக்சிம் - ஸ்ருதி கமல் -அய்யய்யோ




1. ஒரு மனதாக உன் முடிவைச்சொல் என்றார்கள்.உன்னுடையதையும் சேர்த்து இரு மனது என்றேன்


-----------------


2. காதல் போதை அரசால் தடை செய்யப்படும் முன் அவசரமாய் காதலித்து விடுவோம் வா



-----------------


3. சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் உனக்கான என் நிமிடங்கள் சமர்ப்பனம்




-------------------------


4. என் செல்போன் ரிங்டோன் - தினமும் சிரிச்சு மயக்கி என் மனசைக்கெடுத்த சிறுக்கி



--------------------


5. மம்மி.பிரன்ட்ஸ் என்னை மாமா னு கூப்பிடறாங்க.



கண்ணு.அவங்க எப்டியோ கூப்ட்டு போகட்டும்.நீ எல்லாரையும் அண்ணான்னே கூப்டு.அதான் சேப்டி


-----------------

 


6. சங்கடக்காதலி - நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன்.எதுக்குய்யா போன் பண்ணினே?



சந்தேகக்காதலன் - யார் அந்த சிவன்?


-----------------------


7. பொண்ணு பார்க்கப்போறப்போ வைக்கப்படும் பஜ்ஜி சொஜ்ஜியை பெரும்பாலும் பொண்ணோட அம்மாதான் செஞ்சிருக்கும்.அவசரப்பட்டு பொண்ணைப்புகழ்ந்துடாதே



--------------------

8. டாக்டர்.நான் 161 செமீ உயரம்.இன்னும் வளரனும். 1+ 6+ 1=8,



அஷ்டமத்துல சனி.நல்ல ஜோசியரைப்பாருங்க



-------------------------


9. டியர்.நீ + 2 படிச்ச நாள் முதலே உன் மேல ஒரு கண்ணு.



அட அரைகுறையே.இன்னொரு கண் என்னாச்சு?


-------------------------


10 சன்னிலியோன் ,பூனம் பாண்டே - நாம இன்னும் வளரனுமோ?# மேக்சிம் பெருமூச்சுகள்



--------------------


 




11. கேடி குஞ்சுமோன், கேடி பிரதர்ஸ். என்னா வித்தியாசம்..? அவர் ஜென்ட்டில்மேன்.இவங்க பிராடுமென்




------------------


12. சங்க கால த்தமிழ்க்கலாச்சாரத்துல வளர்ந்த பொண்ணு கிடைப்பது அபூர்வம்.சங்கவி காலத்தை தாண்டிட்டோம்

------------------


13. டாக்டர்.மைலோ சாப்ட்டா வெயிட் குறையுமா ?



 மேடம்.நீங்க மயிலை சாப்ட்டாலும் குயிலை சாப்ட்டாலும் வெயிட் ஏறும்.சைவம் சாப்டுங்க



------------------------


14. சித்தார்த் ,தனுஷ் மைன்ட் வாய்ஸ் - படத்தை நாம மட்டும் தான் பார்த்தோம்னு இறுமாப்பா இருந்தோம். இரு மாப்பு க்கும் ஆப்பு .ஊரே பார்த்துடுச்சே



---------------------


15. மேடம்.ஊர் பூரா மேக்சிம் பத்தியே பேச்சு.அது பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?




அந்த போஸ் இந்த அளவு பத்திக்கும்னு நினைக்கலை



--------------------------
 




16. ஏலச்சீட்டு மோசடி வழக்கில் மயிலம் சிட்பண்ட்ஸ் பெண் இயக்குனர்.# 1 தாரம் .2 தாரம் ,3 தாரம்



--------------------


17. மேடம்.உங்க படத்துக்கு மினிமம் கியாரண்டி உண்டா? ஸ்ருதி கமல் - ம் மேக்சி (ம)ம் கேரன்டி உண்டு



--------------------


18. பச்சை உடம்புடன் இருப்பதால் தான் பாகற்காய் பாவைக்காய் ஆகி பின் பாவக்காய் ஆகி இருக்க வேண்டும்



-----------------


19. பகல்லயே அமலாபாலை அடையாளம் தெரியாதவனுக்கு ராத்திரில நந்திதாதாசை தெரிஞ்சிடுமா?


-----------------


20. கோபமா இருக்கும்போது கன்னம் சிவந்து நீ இரட்டிப்பு அழகு என்று சொன்னது சும்மானாச்சுக்கு.அதுக்காக 24 மணி நேரமும் கோபமாவே இருந்தா எப்டி?



----------------------



ஒத்தையில நிக்கற அத்தை மகளே .வந்து மெத்தையிலே வித்தைகளை  புரிந்தால் என்ன?

Monday, May 13, 2013

நண்பர் பட்டாபட்டியின் மரணமும் , அவர் பற்றிய நினைவுகளும்

நெட்டுக்கு வந்த புதிதில் எனக்கு பன்னிக்குட்டி ராமசாமி மூலம் அறிமுகம் ஆனவர் தான் பட்டா பட்டி. இவரை நகைச்சுவைக்காகவும் , காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்புக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.தனக்கு மனதில் சரி என பட்டதை எந்த ,முலாமும் இல்லாமல் அப்படியே வெளீப்படுத்துவது அவரிடம் நான் கண்டு பிரமித்த ஒன்று.

 ஏன்னா பொதுவா நாம மனசுல நினைச்சதை டக்னு வெளில சொல்லிட முடியாது . 4 பேர் என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சு அப்புறமாத்தான் அது பற்றி பேசுவோம். ஆனா நண்பர் பட்டாபட்டி  நேருக்கு நேர் தன் வாதங்களை , கருத்துக்களை முன் வைப்பவர் .

ட்விட்டரில் பல முறை என்னுடன் பேசி இருக்கிறார். காலையில் இருந்து மனசே சரி இல்லை ;((((((

 பிளாக் உலகில் அவரது நெருங்கிய நண்பர்கள் விளங்காதவன் , ராம்சாமி , விக்கி உலகம்  வெங்கட் , வீடு சுரேஷ் , நக்கீரன் , வால் பையன் ,  மங்குனி அமைச்சர் , சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என பட்டியல்கள் நீண்டு கொண்டே போகும் . 

 அவர் சிங்கப்பூரில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த தகவலை எனக்கு சுரேஷ் தான் ஃபோன் பண்ணி இன்று காலை 10 45 க்கு சொன்னார். ஆஃபீஸ் வேலையாக வெளியில் இருந்ததால் என்னால் எதுவும் எழுத முடியவில்லை . ட்விட்டரில் மட்டும் தகவல் சொன்னேன். 




 அவரது உடல் நாளை காலை கோவை வருகிறது . அவர் பிரிவால் வாடும் நண்பர்கள் அனைவருக்கும் இரங்கல்கள் 


கோவை அவரது இல்ல முகவரி தெரிந்தவர்கள் கீழே கமெண்ட்டாகப்போடவும் 

 அவரது பிளாக் முகவரி - http://pattapatti.blogspot.in/

அவரது ட்விட்டர் முகவரி -

அவரது ஃபேஸ்புக் முகவரி -https://www.facebook.com/patta.patti?fref=ts 

 அவரது மரணத்தில் நாம் கற்க வேண்டிய பாடம் 


1.குடிப்பழக்கம் உள்ளவர்கள் அறவே அதை விட்டொழிக்கவும் . குடிப்பதைப்பற்றி பெருமையாகப்பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அது இன்னும் குடிக்க தூண்டும் 

2. குடிப்பது சிறுமை.அதை பெருமையாக யாரும் நினைக்காதீர்கள்.உங்கள் போதைக்கு உங்கள் குடும்பத்தை ஊறுகாய் ஆக்காதீர் ;-((



3. 35 வயது ஆனவர்கள் அடிக்கடி அல்லது 6 மாதத்திற்கு ஒரு முறை மெடிக்கல் செக்கப் செய்து கொள்க 


4. வேலை வேலை என பிரஷருடன் வேலை செய்தல்  தவிர்க்க முயலவும் , குடும்பத்துக்காக தினமும் நேரம் ஒதுக்கவும் 


 நண்பர்களின் நினைவுகள் 


1. வீடு சுரேஷ் - நானும்...வௌங்காதவனும் காந்திபுரத்தில் உள்ள ஒரு பாரில் சரக்கடித்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தோம், பேசிக் கொண்டிருக்கும் போதுதான் தமக்கு நெருங்கிய நண்பர் பட்டாபட்டி என்கின்ற விசயத்தைக் சொன்னார் நான் அவரின் ஒன்றிரண்டு பதிவுகளைப் படித்திருக்கின்றேன், ஆனால் பழக்கமில்லை அவருடைய கமண்டுகள் குபீரென்று சிரிப்பை வரவழைக்கும், கோவை மாவட்டத்திற்கே உரித்தான எள்ளல்,நக்கல் அவரிடம் விரவிக்கிடக்கும். நக்கீரனுக்குப் போனைப்போட்டு பட்டாபட்டி பேசுவதாக மிமிக்ரி செய்தாப்டி வௌங்காதவன், நக்கீரனும் நம்பி ரொம்ப நேரம் பேசினார்....! அப்பொழுது வௌங்காதவன் என்னிடம் சொன்னார் இப்ப விளையாட்டா நக்கீரனை கலாய்ச்சோம், அடுத்த லீவில் நான் வரும் போது பட்டாவும் வருவாப்டி அன்னிக்கு நான், நீ, பட்டாபட்டி, நக்ஸ் நாலு பேரும் இதே பார்ல சரக்கடிப்போம் என்றார்.....வௌங்காதவன் வருகிறான்.....பார் இருக்கு பட்டாபட்டிதான் இல்ல......!


2. விக்கி உலகம் வெங்கட் - கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் “வாய்யா...போய்யா...மாப்ளே...மாமா”ன்னு பேசிட்டு இருந்த மனுசன் இன்னிக்கி இல்ல...ச்சே என்ன உலகம்டா இது...நல்லவிங்கள எல்லாம் இம்புட்டு சீக்கிறம் கொண்டு போயிருது...- சுயம்!  

நான் ஒரு மாங்கா மடையன்னு சொன்னாளா? எவ அவ?


உளவாளி 2m
எப்படியா இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீங்க?


1. யாரிடம் எப்படி பேச வேண்டும் ? அம்மா - அன்பு .அப்பா - பண்பு ,குரு - அடக்கம் .உடன்பிறப்பு - அளவாக .தம்பதி - உண்மை .மழலை - ஆர்வம.உறவு-பரிவு்
---------------



2. வன்முறையால் 500பஸ்கள் நாசம்,பா.ம.க விடம் இழப்பீடு பெற திட்டம்# சாதிக்கட்சிகளுக்கு சம்மட்டி அடி்



----------------



3 டியர்.மேரேஜ்க்குப்பின் என்னை ராணி மாதிரி வெச்சுக்காப்பாத்துவீங்ளா?


 ம் ம் உனக்கு எப்டி ராணி மேட்டர் தெரியும்? யார் சொன்னா?


-------------------

4.நான் வாயைத்திறந்தாலே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுகிறது.அது ஏன்?


-------------------------------

5.அன்பே! என்னைப்பார்த்த முதல் பார்வையிலேயே நான் ஒரு மாங்கா மடையன் என்பதை எப்படிக்கண்டுபிடித்தாய்?


-------------------------------------

6.நான் தொழில் முனைவோர் பட்டியலில்.நீ எழில் நிறைந்தோர் பட்டியலில்.

---------------------------------------


7.நடமாடும் அழகு நிலைய அலங்காரினி நீ! என் கண்ணைப்பார்த்து தடுமாறும் சர்வாதிகாரி நீ!

------------------------------------

8.டாக்டர்.என் பேச்சை வேக வெச்சு டெலிவரி பண்ண முடியுமா ? ஏன் ? நான் பச்சை பச்சையா பேசுறதா என் ஆள் சொல்றா

-------------------------------------

9.புதுசா ஜாயின் பண்ணின லேடி ஸ்டாப்க்கு வேலை சொல்லித்தர்றேஙற போர்வை ல டேமேஜர் சொந்தக்கதையை அள்ளி விட்டுட்டு இருக்காரு ;-)

----------------------------------

10.வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் ஆபீஸ் க்கு வரும் லேடி ஸ்டாf தலைக்கு குளிச்சுட்டு வந்தா அதுக்கு ஒரே அர்த்தம் தான் # பேன் பொடுகு தொந்தரவு

-------------------------------------

11.காதலிக்கும்போது முதல் வசந்தம் ரம்யா மாதிரி இருக்கும் பொண்ணுங்க மேரேஜ் ஆனதும் படையப்பா நீலாம்பரி ஆகிவிடுவதன் மர்மம் என்ன ?்

-------------------------------------

12.தர்பூசனிப்பழ ஜூஸ் ல அலாசி எடுத்த மாதிரி ஒரு பிகர் பஸ் ல ஏறி இருக்கு.கண்டக்டர் கர்ச்சீப் தேடறார்.டிரைவர் இளையராஜா பாட்டு போடறார்்

--------------------------------------

13.கரும்பு கலர் ல சேலை எடுத்துப்போடுங்க னு ஒரு ஆண்ட்டி கேட்குது.சேல்ஸ்மேன் திகைச்சுட்டார் ;-))

---------------------------------

14.தலைவா ஷூட்டிங் முடிஞ்சுதாம்.படம் ரிலீஸ் ஆகறதுக்கு முந்தியே நம்மாளுங்க ஓட்டிடுவாங்களே

---------------------------------

15.யூனிபார்ம் போட்ட பிகரை தனியாப்பார்த்தா நல்லாருக்கும்.கூட்டமாப்பார்த்தா அழகு ஒரு மாற்று குறையும்

--------------------------------------

16.மெல்லிய முட்கள் நம்மை குத்துவதால்தான் வெண்டைக்காய்க்கு லேடீஸ் பிங்கர்னு பேரோ?

---------------------------------------

17.அனுசரித்துப்போவதில் ஆண்களை அடிச்சுக்க முடியாது.தூக்கி எறிந்து பேசுவதில் பெண்களை தொடக்கூட முடியாது

-------------------------------------------

18.ராமசாமி ,ராமராஜன் என பசங்களுக்கு பெயர் சூட்டிய முன்னோர்கள் பொண்ணுங்களுக்கு சீதைசாமி என பரவலா பெயர் சூட்டாததில் ஒரு சூட்சுமம் இருக்கலாம்்

-------------------------------------------

19.தோல்வியே வெற்றியின் முதல் படி., ஆனால் தோல்வியே தொடர்ந்து கொண்டிருந்தால உன் பாதையையோ வழிமுறையையோ மாற்று்

---------------------------------------

20.உன் வெவ்வ்்வ்வேக்களும் அய்யய்யேக்களும் இலக்கிய அந்தஸ்து பெற வேண்டியவை



--------------------


21. நான் வாயைத்திறந்தாலே உனக்கு மூக்குக்கு மேல் கோபம் வந்து விடுகிறது.அது ஏன்?




-----------------


Saturday, May 11, 2013

கோவை மெகா ட்வீட்டப் - 12/ 5 / 2013

 ட்விட்டர்க்கு வந்து 3 வருசம் ஆச்சு . இதனால பெருசா என்ன யூஸ் இருக்குன்னு யாரும் இனி கேட்டுட முடியாது , விஜய் டி வி அவார்டு நிகழ்ச்சிக்கு பிரபல ட்விட்டர்களுக்கு அதாவது ஃபாலோயர்ஸ் 1000 இருந்தா போதும் அவங்களுக்கு இலவச விழா நுழைவுச்சீட்டு தர்றதா சொல்லி இருக்காங்க . நம்ம ஆட்கள் பலரும் போய்ட்டாங்க 


 இது சந்தோஷமான விஷயம் . போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் மெகா ட்வீட்டப் நடக்க இருக்கு .  போன முறை சென்னையில் . இந்த தடவை கோவையில் / 


 கொங்கு மண்டலத்துல ட்வீட்டப் நடத்தறதால  பல யூஸ் இருக்கு . ஏன்னா தமிழ் நாட்டிலேயே அதிக ட்விட்டர்கள் இருப்பது கொங்கு மண்டலத்தில் தான், குறிப்பா கோவையில் தான் . ஈரோடு , கோவை , சேலம் , திருப்பூர் ஆகிய ஏரியாக்களில் பிரபல ரவுடிகள் அதாவது பிரபல ட்வீட்டர்கள் இருக்காங்க 



 இவங்க எல்லாம் சந்திச்சு என்ன ஆகப்போகுது என யாரும் அங்கலாய்க்க வேண்டாம் . இத்தனை நாட்களாய் எழுத்துக்களில் அறிமுகம் ,  இப்போ நேர்ல யார் யார் எப்டினு பார்க்க வாய்ப்பு 


 இந்த சான்சை விட்டா மறுபடி கிடைக்காது .


நேரில் வரத்தயங்கும்  சில பெண் ட்வீட்டர்கள்  மாறு வேடத்தில் வருவதாக உளவுத்துறை தகவல் 


 விழாவை விஜய் டி வி  யும் பிரபல இன்னொரு டி வி யும் ஒளி பரப்ப இருக்குது . உங்களை டி வி ல பார்த்து பன்னாட்டா உங்க ஃபிரண்ட்ஸ் கிட்டே காட்டி பந்தா பண்ணிக்கலாம்( சொல்ல முடியாது , உங்களை டி வி ல பார்க்கும் பக்கத்து வீட்டு ஃபிகர் தானா செட் ஆகலாம்)


1. ட்விட்டர் எம் ஜி ஆர் ரவிக்குமார் மிமிக்ரி நிகழ்ச்சி 


2. சன் டி வி அழகி சீரியலில் 2 பேரை கரெக்ட் பண்ணிய  க்ரேசி கோபால் கலக்கலான மிமிக்ரி நிகழ்ச்சி  ( திரைக்கு பின்னால் எவ்ளவ் என சரியா தெரியலை )


3.  எப்போ பாரு ட்விட்டர்லயே குடி இருக்கும் கருப்பு வின் கவிதை நிகழ்ச்சி  

இவரது உலகப்புகழ் பெற்ற ஹைக்கூ 


 குடை பிடிக்கிறாள் தாய் 

 குடைக்கு வெளியே கை நீட்டி 

 மழை பிடிக்கிறது மழலை 


4.  ஜேசுதாஸ்  போல பாட இருக்கும் கிரி


5. . சினிமாவில் எண்ட்டர் ஆக இருக்கும் ஐ ஆம் கார்க்கி , பரிசல் காரன் , ராஜன்  உட்பட பல பிரபல ட்வீட்டர்கள் ஆஜர் ஆக இருக்காங்க

6. சும்மா ட்வீட் போட்டே ஃபிகர் கரெக்ட் பண்ணுவது எப்படி என இலவசமா விட்டுட்டே இரு மாமா டேவிட் இதுவரை தான் கரெக்ட் பண்ணிய ஃபிகர்களின்  கதையை எப்படி அணுகினார் என்பதை விலா வாரியாக விழாவில் விளக்க இருக்கிறார் 


7. ஃபேக் ஐ டி ஸ்பெஷலிஸ் கனல் தனது 18 ஃபேக் ஐ டிகள் பற்றிய குறிப்பையும்  ட்விட்டர்  ஹேண்டிலையும் வெளியிட இருக்கிறார் , அது போக அவர் பாலக்காட்டு ஆஃபீசில் பணி ஆற்றும் சேர நன்னாட்டிளம் பெண்கள் 8 பேரின் ஆல்பம் ( யோவ் சாதா ஆல்பம் தான் ) கொண்டு வர்றாராம் 





 எல்லாரும் அலை கடலென திரண்டு வாரீர்.


மெகா ட்விட்டப் அழைப்பிதழ் ( எக்ஸ்பர்ட் சத்யா )
----------------------------------------------------------------

சென்னையில் கடந்த வருடம் நடந்த மெகா ட்விட் அப்பில் முடிவு செய்தபடியே 2013ம் ஆண்டின் மெகா ட்விட் அப் கோவையில் வரும் மே 12,2013 அன்று நடைபெற உள்ளது.

போன வருசம், முந்தைய திமுக ஆட்சியின் மின்பகிர்மானக் குறைபாட்டால் தமிழ்நாடெங்கும் கடும் மின் தட்டுப்பாடு நிலவியதை நாம் அறிவோம். அதனால் தான் சென்னையில் டிவிட் அப்பை ஏற்பாடு செய்தோம்.

ஆனால் புரட்சித்தலைவி, தங்கத்தாரகை மாண்புமிகு அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் மின்வெட்டு படிப்படியாக சீர் செய்யப்பட்டு தற்போது மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு ஆகியுள்ளதையடுத்து, மின் மிகை மிகை மாவட்டமான கோவையிலே இரண்டாவது மெகா டிவிட் அப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம் பலத்தை தேசியக் கட்சிகளுக்கு உணர்த்த சென்ற முறை போலவே மக்கள் அனைவரும் பெருந்திரளாய்க் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கோவைக்கு மாநிலம் முழுவதிலிருந்தும் நிறைய பஸ்கள் உள்ளன. மணல் லோடு லாரிகளும், சரக்கு ரயில்களும் கூட இருக்கின்றன. எதிலாவது தொங்கிக்கொண்டு வரப்பாருங்கள்!

டிவிட்டப்பினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்கிறோம். வீட்டில் அடிவாங்கியாவது கிளம்பிவருவதற்குண்டான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்.

தமிழ்நாடெங்கும் தகிக்கும் அனல் வெயிலால் அவதிப்படும் டிவிட்டர் சந்துவாழ் மக்களுக்கு தென்னக சுவிஸர்லாந்தாம் கோவையில்(அவ்வ்வ்வ்வ்!) ஒரு நாள் உல்லாசமாய் உலாத்த ஒரு அரிய வாய்ப்பு. அலைகடலென திரண்டு வாரீர்.

- விழாக்கமிட்டியார்

இடம்: ஹோட்டல் மங்களா இன்டர்நேசனல் , காந்திபுரம் மொபசல் பஸ் நிலையம் பின்புறம். கோவை.

நாள் : 12-5-2013 ஞாயிறு.

நேரம்: மாலை 3 மணி.


இரவு டின்னருடன் விழா நிறைவுபெறும்.

மேலும் தகவல்களுக்கு அழைக்கவேண்டிய எண்கள் : +919944723392

தங்களது மேலான உதவிகள் மற்றும் கருத்துகளை [email protected] க்கு மடலிடவும்.

நன்றி. 


சந்திப்பில் பங்குபெறவிருப்பவர்கள், தங்கும்வசதியோ வேறேதேனும் உதவியோ தேவைப்பட்டால், mail அல்லது Mention செய்யவும்


டிஸ்கி - விழா நடக்கும் ஹோட்டல் பெயரை நினைவில் வைத்துக்கொள்ள குறுக்கு வழி - மங்களம் உண்டாகட்டும் , இண்ட்டர் நேஷனல் ஃபிகர் 

மாமியார் வீட்டில் இருந்து வந்த டாக்டர் ராம்தாஸ் அதிரடி பேட்டி

ராமதாஸ் ஜாமீனில் விடுவிப்பு; ஜெயலலிதா, திருமா மீது சாடல்! ( படங்கள் ) 

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, அவருக்கு வள்ளியூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.


வன்முறைச் சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் கைது நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் ராமதாஸ் கடுமையாக சாடினார். 



மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.


இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.


பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் வன்முறைகள் நடந்திருக்காது: ராமதாஸ்

பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது என திருச்சி சிறையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அவர் மீது மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து, இன்று திருச்சி சிறையிலிருந்து விடுதலையான ராமதாஸ், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது," பா.ம.க.வினரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இந்த வன்முறைகள் எதுவும் நடந்திருக்காது. விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்," வரும் நாடாளுமன்ற தேர்தலில், தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக முதல்வர் ஜெயலலிதா இந்த அடக்குமுறையை எங்கள் மீது ஏவி இருக்கிறார்

மாமல்லபுரத்தில் முறையான அனுமதி பெற்று விழாவை நடத்தினோம். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் குண்டர்கள் ஆதரவோடு திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். விழாவிற்கு வந்த 4 ஆயிரம் வாகனங்களை திருப்பி அனுப்பினர். 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை கல்வீசி தாக்கினர். இதற்கு போலீசும் உடந்தை. பா.ம.க.வினருக்கோ, வன்னியர்களுக்கோ இதில் எந்தவித சம்மந்தமும் இல்லை. இதைகண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்றேன். அங்கு சென்ற பிறகுதான் போலீசார் இங்கு பேசக்கூடாது என்று தடுத்து கைது செய்தனர்.

சிறையில் வசதிகள் இல்லை

டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பும், சோனியா வீட்டு முன்பும், அமைச்சர்கள் வீட்டு முன்பும் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில்தான் இந்த நிலை.

விழுப்புரத்தில் கைது செய்த என்னை, போலீசார் 12 மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு மண்டபத்தில் வைத்து விட்டு அதிகாலை 4 மணிக்கு திருச்சி சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். 108 டிகிரி வெயில் கொளுத்துகிற கந்தக பூமியான திருச்சி மத்திய சிறையில் 12 நாட்கள் என்னையும், பா.ம.க.வினர் நூற்றுக்கணக்கானவர்களையும் அடைத்து கொடுமைப்படுத்தினர். சிறையில் எந்த வசதிகளும் இல்லாமல் ஒரு அறையில் படுத்து கிடந்தேன். பா.ம.க. முக்கிய நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சிறையில் எனக்கு சன்ஸ்ட்ரோக் ஏற்பட்டு நெற்றியிலும் தலையிலும் ஈரத்துணியை வைத்து சமாளித்தேன். எங்கே மாரடைப்பு ஏற்பட்டு பத்திரிக்கையாளர்களையும், மக்களையும் வெளியில் வந்து சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். நாங்கள் ஒருபோதும் எங்கள் கட்சியினரை வன்முறையில் ஈடுபடவோ, தவறான பாதையில் செல்லவோ அனுமதிப்பதில்லை.இதற்காக எங்கள் கட்சியினருக்கு அரசியல் பயிலரங்கமே நடத்துகிறோம்.

இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும்...

கடந்த 6 மாதத்திற்கு முன்பு அ.தி.மு.க.வோடு பா.ம.க. கூட்டணி அமைக்கும் என்று உளவுத்துறை போலீசார் அரசுக்கு `நோட்' அனுப்பினர். அதன் பிறகு நான் இனிமேல் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் திராவிட கட்சிகளோடு பா.ம.க. இனி எக்காலத்திலும் கூட்டணி அமைக்காது என்று கூறினேன். இதனால் அரசு பா.ம.க. மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.

ஏற்கனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு ம.தி.மு.க.வை கூட்டணியில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். கம்யூனிஸ்டும் அங்கு உள்ளது. இந்நிலையில் தலித் ஓட்டுகளையும் சேர்த்தால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என்று நினைத்தவர்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். அதனால்தான் பா.ம.க. தலைவர் மீது வழக்கு, பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி மீது மூன்று வழக்கு, குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை என சட்டத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன்

மாமல்லபுரம் விழாவில் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லாததை சுட்டிக்காட்டி பேசிய நான் அப்போது போலீசாருக்கு நல்ல யோசனைகளைத்தான் கூறினேன். ஆனால் என் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் அந்த 2 வழக்குகளிலும் என்னை கைது செய்தனர். கடைசியாகத்தான் இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. இதுபோன்ற அடக்கு முறைகளை ஏராளமான முறை சந்தித்து உள்ளோம்.

ஒரு ஆட்சி என்றால் உண்மை, நேர்மை, தூய்மை, சத்தியம், ஜனநாயகம், எதிர்கட்சிகளை மதிக்கும் தன்மை இருக்க வேண்டும். ஆனால் இந்த அரசுக்கு இல்லை. தொடர்ந்து தமிழகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. வரலாறு கானாத வறட்சி, குடிநீர் பஞ்சம் இப்படி ஏராளமான பிரச்னைக்ள உள்ளன. கடந்த 2 ஆண்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை, மக்கள் சோர்ந்து போய் உள்ளனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பெரும் தோல்வி அடையும்" என்றார். கருணாநிதிக்கு நன்றி

தொடர்ந்து பேசிய ராமதாஸிடம், தி.மு.க. தலைவர் கருணாநிதி உங்களுக்கு நாவடக்கம் தேவை என்று கூறியுள்ளாரே? எனக் கேட்டபோது,"அவர் நான் சிறையில் இருந்தபோது என்னை விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதற்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதேபோன்று என்னை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிலளித்தார்.

"இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பா.ம.க. பெரிய கூட்டணியில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதே?" என செய்தியாளர்கள் கேட்டபோது,"எந்த சூழ்நிலையிலும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. பா.ம.க. தலைமையில் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணி அமைப்போம். 10 தொகுதிகளில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்" என பதில் அளித்தார் ராமதாஸ். 

நன்றி - ராம் தாஸ்

Friday, May 10, 2013

நாகராஜசோழன் எம் ஏ ,எம் எல் ஏ - சினிமா விமர்சனம்

பெண்பார்க்கும் படலம் நடக்கும்போது தரகர் சில சமயம் பொண்ணோட ஃபோட்டோவைத்தராம பொண்ணோட அக்கா ஃபோட்டோ கொடுத்து பார்த்தீங்களா? ரதி மாதிரி இருக்கு? இதனோட தங்கச்சிதான் நீங்க கட்டப்போற பொண்ணுனு அள்ளி விடுவார். நாமளும் மண்டையை மண்டையை ஆட்டுவோம், அப்புறம் பார்த்தா அந்த சக்க ஃபிகரோட தங்கச்சி மொக்க ஃபிகரா இருக்கும். அந்த மாதிரி தான் ஆரவாரமான வெற்றி பெற்ற அமைதிப்படை முதல் பாகம் படம் மாதிரி 20 வருஷம் கழிச்சு வந்திருக்கும் அமைதிப்படை பாகம் 2 படமும் .

சாதாரண எம் எல் ஏ வா இருக்கும் ஹீரோ  சி எம்மையே மிரட்டி உதவி சி எம் ஆகிடறார். அவருக்கும் அவரோட அல்லக்கைக்கும் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் கொஞ்சம் .ஆதிவாசிகள் நிலத்தை அபகரிக்க பண்ற அட்டூழியங்கள்  , கொலைகள் என இன்னொரு டிராக். எப்படி திரைக்கதை எழுதறதுனு ஒரே குழப்பமாகி சும்மா வசனங்களாலும் , சத்யராஜ் - மணி வண்ணன் காம்பினேஷன் காட்சிகளால் மட்டுமே படத்தைத்தூக்கி நிறுத்திடலாம்கற நப்பாசைல எடுத்த படம் இது.


 சும்மா சொல்லக்கூடாது , இத்தனை வருஷங்கள் ஆகியும் சத்யராஜ் - மணி வண்ணன் பிரமாதப்படுத்தி இருக்காங்க . எகத்தாளம் , எள்ளல் நக்கல் எல்லாம் செம.  ஆனா எல்லாம் பிட்டு பிட்டா இருக்கு. அதான் மைனஸ் . படத்தோட ஒட்டலை. ரொம்ப செயற்கையா இருக்கு .





சத்யராஜ்ன் கெட்டப் கன கச்சிதம். போலீஸ் ஆக வரும் இன்னொரு சத்யராஜ் பாவம் சான்ஸே இல்லாமல் சும்மா வந்துட்டுப்போறார். மணி வண்ணனின் மகனுக்கு வேறு ஒரு கேரக்டர் கொடுத்து விட்டதால் அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் வேறு .


 சீமான் பொது வாழ்க்கைலயும் சரி , சினிமா வாழ்க்கைலயும் சரி எந்த அளவுக்கு இமேஜை வளர்த்து வெச்சிருந்தாரோ அந்த அளவு கெடுத்துக்கிட்டார். முன்பெல்லாம் அவர் வரும் காட்சிகளீல் எல்லாம் அப்ளாஸ் அள்ளும் . இப்போ சிரிப்பா சிரிக்கறாங்க . 


  மலைவாசிகள் டூயட் பாடும்போது இவர் எதுக்கு கூட கையை காலை ஆட்டி எக்சசைஸ் பண்றார் ? அய்யோ பாவம் 


 இது போக மிருதுளா ( ரொம்ப மிருதுவா இருக்குமோ? )  , ஹன்சிபா , கோமல் ஷர்மா என சில பல ஃபிகர்கள் வந்துட்டுப்போகுது. வர்ணிக்கற அளவு பெருசா இல்லை , ஐ மீன் காட்சிகள் , வாய்ப்புகள் அவங்களுக்குப்பெருசா இல்லை . 




 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கலைஞர் , கேப்டன்  இருவரையும் குறி வைத்து செம நக்கல் அடிக்கும் காட்சிகள்  வசனங்கள் அபாரம் , 45 இடங்களில் வசனம் கலக்கல் 



2. எல்லா ஊரிலும் முக்கியமான தியேட்டர்களை பிடித்தது செம . ஈரோட்டிலேயே 3 தியேட்டர் . 3ம் ஏ சி டி டி எஸ் ( ரஜினி , அஜித் , விஜய் படங்களுக்குத்தான் இப்டி அமையும் ) 


3. போஸ்டர் டிசைன் , டி வி யில் வரும் விளம்பர க்ளிப்பிங்குகள் எல்லாம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தது 


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மணிவண்ணன் இயக்கும் படத்தில் டைட்டிலில் அவரே அவர் பேரை இன மான இயக்குநர் என போட்டுக்கறாரே? கூச்சமா இருக்காதா? அடுத்தவங்க படம்னா தேவலை . முரசொலில தமிழ் இனத்தலைவர்னு டாக்டர் கலைஞரே போட்டுக்கற மாதிரி  ( இந்த லட்சனத்துல இவரு அவரை நக்கல் அடிக்கறாரு )


2. ஹீரோ அடிக்கடி மருமகளை ஏழைப்பொண்னு , மலை ஜாதிப்பொண்னு என நக்கல் அடிக்கிறார். ஆனா  8 ஏக்கர் 30 செண்ட் நிலம் அவருக்கு சீரா கொடுத்தாங்கன்னு வசனம் வருது . மிடில் கிளாஸ் ஃபேமிலி கிட்டேயே 5 செண்ட் நிலம் இருக்கறது இல்லை , ஏழைப்பெண்ணுக்கு எபடி 8 ஏக்கர்? 



3. ஹீரோ அடியாட்கள் மூலமா 3 பேரை கொலை பண்ணிடறார். அந்த 3 பிணங்களையும் ஊர்வலமா கொண்டுவரும் காட்சியில் பிணத்தின் கால் கட்டை விரல் பக்கத்து விரலுடன் க்ளோசப் ஷாட்டில் கட்டப்பட்டும் , லாங்க் ஷாட்டில் பிரிந்தும் இருக்கே? எப்டி? எடிட்டிங்க் ஃபால்டா? 



4. ஹீரோவோட சின்ன வீடு ஒண்னு பார்க்க லோக்கல் மாதிரி இருக்கு. 25 ரூபாய்க்கு  மசால் தோசை வாங்கித்தர்ற அளவு கூட ஒர்த் இல்லாத மொக்கை பீசுக்கு அவர்  800 ஏக்கர் கரும்புத்தோட்டம் எழுதி வைப்பதா காட்சி வருவது கொடுமை 



5. போலீஸ் ஆஃபீசர் சத்யராஜ் ஹீரோ சத்யராஜை வந்து மெனக்கெட்டு மிரட்டிட்டு மட்டும் போறாரே? ஏன் கைது பண்ணலை? ஒண்ணா அரெஸ்ட் பண்ணி இருக்கனும் , அல்லது வந்தே இருக்கக்கூடாது  என் புருஷனும் கச்சேரிக்குப்போனான்கற கதையா எதுக்கு தேவை இல்லாம பில்டப் கொடுத்து மொக்கைப்பட்டம் வாங்கனும் ? 


6. மருமக கொலை செய்யப்பட ஆர்டர் வந்தது தெரிஞ்சதும் அவ ஏன் வெளியூர்ல இருக்கும் புருஷனுக்கு தகவல் தெரிவிக்கலை? அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ் கூட பண்ணலை? புருஷன்னா எல்லாருக்கும் அவ்வளவு இளக்காரமா?


7. சீமான் படம் பூரா டம்மியா வர்றவர் திடு திப்னு க்ளைமாக்ஸ்ல சிவப்புக்கலர் ரிப்பன் எடுத்து தலைல ( நெத்தில) கட்டிக்கிட்டு புரட்சி வீரன் ஆவது செம காமெடி . 


8. பிரபாகரன் நல்லவேளை இப்போ  இல்லை. சீமானை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தி டயக்லாக்ஸ் வெச்சது அய்யய்யோ அம்மம்மா . விஜயலட்சுமி கூட ரசிச்சிருக்க மாட்டாரு

 


9 தமிழ் நாட்டின் சி எம் தன் மருமகளை கொலை பண்ண பிளான் பண்றாரு , மருமக தன் புருஷன் கிட்டே சொல்லாம ஏதோ இட்லி மெஸ் வெச்சிருக்கும் லேடி கிட்டே வந்து நீங்க தான் என்னைக்காப்பாத்தனும்னு சொல்வது செம காமெடி


10 அமைதிப்படைல அப்ளாஸ் அள்ளிய காட்சிகள் எல்லாத்துலயும் உயிர் இருந்தது அதுக்காக அப்டியே டிட்டோவா காப்பி அடிக்கனுமா? அண்டர் டிராயரை துவைக்க அடிச்சுக்குவது  போர் 


11. வில்லன் கிட்டே அந்த லேடி “ என்னைத்தொடாதே “ என சொல்வது செம காமெடி . புருஷனே கேட்கமாட்டான் , வில்லன் கேட்பானா?


12. சி பி ஐ ஆஃபீஸ்ல எதுக்கோ அனுமதி வாங்கப்போகும் போலீஸ் சத்யராஜ் எதுக்கு கூலிங்க் கிளாஸ் போட்டிருக்கார்? மெட்ராஸ் ஐ யா? ஐய்யோ பாவம் 


13.  மாமனார் சத்யராஜ் - மருமகள் சமப்ந்தப்பட்ட காட்சிகளில் எங்கே சிந்து நதிப்பூ வாசம் அடிச்சுடுமோன்னு பரிதவிக்க வைப்பது எதுக்கு? சஸ்பென்சா? கண்றாவி 


14. லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட வசதியான வீட்டுப்பையன் ஏன் தனியா வெளியூர் போறான்? பொண்டாட்டியையும் துணைக்குக்கூட்டிட்டுப்போலாமே? 


15. ரத்தம்னா பயந்துக்கற அந்த லேடி கேரக்டருக்கு ஒரு கிளைக்கதை எதுக்கு? இங்கே மெயின் கதையே தடுமாறிட்டு இருக்கு 

16 வகை தொகை இல்லாம தி முக , தே மு திக என எல்லாரையும் விளாசும் மணீவண்ணன் பேனா ஜெ வைக்கண்டு பம்முவது ஏன்? 




 மனம் கவர்ந்த வசனங்கள்


1. ஓட்டு வாங்கற கட்சியை விட ஓட்டை பிரிக்கற கட்சிக்குத்தான் மரியாதை இப்போ


2. நேத்து சாயங்காலம் 6 மணிக்கு கட்சில சேர்ந்தவன் நீ.என் முன்னாலயே கை நீட்டி எதிர்த்துப்பேசற அளவு ஆகிடுச்சு


3. நகரவாசி கிராமம் வந்தா அவன் கண்ணுக்கு மரம் எல்லாம் சேர் டேபிளா தெரியும்.கிராமவாசி நகரம் போனா சேர் டேபிள் எல்லாம் மரமாத்தெரியும்



4. பெட்ரோல் விலை எல்லாம் ஏறிட்டதால என்னோட 15 சின்ன வீடுகளையும் ஒரே அபார்ட்மெண்ட்ல குடி வெச்சுட்டேன்


5.  அரசியல்வாதிகிட்டே எவ்ளவ் சொத்து இருக்குன்னு அவங்களுக்கே தெரியாது.சிபிஐ வந்து ரெய்டு பண்ணும்போதுதான் கணக்கே தெரியும்


6. நான் பேமிலிமேன் அண்ணா .


 அதெப்பிடிடா கூச்சமே இல்லாம உன்னை பேமிலி மேன்னு சொல்லிக்கறே?


7. நல்ல பையனாப்பார்த்து இவளுக்கு கட்டி வைக்கலாம்னு பார்த்தா நல்ல பையனே கிடைக்கலை.சரினு நானே கல்யாணம் கட்டிக்கிட்டேன் ,ஹி ஹி



8. நீங்க தான் சாமி எங்க தெய்வம். 


எங்களைக்க்டவுள் ஆக்கிட்டு ஏழைங்க நீங்க தெருவுலயே கிடங்க 


9. என் ஆளு எந்த் அளவு ஷை டைப்னா குளிக்கும்போது கூட சேலை கட்டி இருப்பான்னா பார்த்துக்குங்க


10. மணி.உன் சின்ன வீட்டை ஒரு நாள் நம்ம வீட்டுப்பக்கம் கூட்டிட்டு வா.


 



 வேணாங்ணா.அவ ரொம்ப ஷை டைப்.வீட்டை விட்டு வெளில வரமாட்டா 



11. விபத்துல காயம் அடைஞ்ச தலைவர் முகத்துல 100 தையலா? சும்மா ரீல் விடாதீங்க.அது என்ன முகமா? ஜாக்கெட் பிட்டா? 


12. நான் யார்னு உங்களுக்குத்தெரியும்.எங்க ஆதரவு இல்லாம நீங்க மத்தில ஆட்சி பண்ண முடியாதுனு உலகத்துக்கே தெரியும்



13. ஏழைங்க கோபப்படக்கூடாது.நக்சலைட்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க 


14. நம்ம நாட்ல ஓட்டுப்போடவும் மிஷின்.ஓட்டு போடற ஜனங்களும் மிஷின் 


15. ஆட்சி மாறும்.ஆனா அல்லக்கைகள் மட்டும் என்னைக்கும் மாறாம இருப்பாங்க 




16. அப்பாவை தீர்த்துகட்டிட்டு மகன் ஆட்சியைப்பிடிப்பது நம்ம மொகலாயப்பேரரசு காலத்துல இருந்தே இருக்கே?


17. ஏய் னு நாக்கை மடிச்சுக்கடிக்கற ஆளை எல்லாம் தலைவர் ஆக்கிடுங்க.நாடு உருப்பட்டுடும்


18. நல்லா இருக்கீங்ளா மாமா ? 


ஜெயில் ல இருக்கறவன் கிட்டே விசாரிக்கற விதம் இதானா?என்னமோ நான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஜெனரேட்டர் வசதியோட இருக்கற மாதிரி கேட்கற? 


19. ஆட்சில இலவசமா மிக்சி குடுத்தீங்க பேன் குடுத்தீங்க.ஆனா இதை எல்லாம் யூஸ் பண்ண கரண்ட் குடுத்தீங்ளா? இலவச ஜெனரேட்டர் தர்றதா வாக்கு தரும் கட்சி தான் அடுத்து ஜெயிக்கும் 


20. அவரு சொந்தமா எப்பவும் டிராக் போடமாட்டாரு.என்னை மாதிரி இளிச்சவாயன் ஆல்ரெடி டிராக் போட்டு வெச்சிருந்தா உஷார் பண்ணிடுவாரு



 



21. பாடிலேங்க்வேஜை பவ்யமா வெச்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டே செருப்பால அடிக்கிறது நீ தான் மணி


22. இது தான் மணியோட 4 வது சின்ன வீட்டோட மகளா ?



 நீங்க வேற.அவரோட 4 வது சின்ன வீடே இதுதாணுங் 



23. ‘வயசானவன் இளைஞரணி த்தலைவரா இருக்கும் போது ஆம்பள மகளிர் அணி தலைவரா இருக்க கூடாதா?’,  ( மு க ஸ்டாலின் )



24.  ‘கட்சிக்கு கட்சி தாவிகொண்டே இருப்பவன் எல்லாம் கட்சி தலைவன்!’,( டாக்டர் ராம்தாஸ் )



25 ‘புருஷன் பொண்டாட்டி எல்லாம் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கராங்கபா! போங்க! போய் தமிழ் நாட்ட பிச்சு தின்னுடுங்க!’  ( கேப்டன் )



26. , ‘தோத்து போனவன்னு நாட்டுக்கே தெரிஞ்சும் உன்னைய ஜெயிக்க வைத்தது சட்டத்தை மீறி தான்’  ( ப சிதம்பரம் )




27 , ‘தமிழ் தமிழ்னு ஊருக்காக வேஷம் போடறவங்க தன் பிள்ளைகளுக்கு மட்டும் ஹிந்தி கற்றுத்தருவது’ ஏன்? ( கலைஞர் ) 


28 வெளிநாட்டுக்காரங்க தங்களோட உரிமைக்காக போராடுவாங்க. நம்ம மக்களுக்கு அதெல்லாம் எங்க இருக்கு? நம்ம அரசியல்வாதிங்க நாட்ட கூறு போட்டு விற்க த்தான் செய்வாங்க! 



29. ‘நாம போராடினா நம்ம அடுத்த தலைமுறை இதை விட வேகமா போராடும்’,



30  நாம இழக்கிறது நம்ம உயிரை மட்டும் தான் போராடறத நிறுத்திட்டா நாளைய தலைமுறையோட உரிமையையும் சேர்த்து  இழப்போம்


 31. பொதுக்குழுவை என்னைக்கு கூட்டி இருக்காங்க? அவங்களா ஒரு முடிவு எடுத்துட்டு அறிவிப்பாங்க?


32. அப்பனும் பையனும் சேர்ந்து அரசியல்ல ஈடுபடுவது அந்தக்காலம்.புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து கட்சி ஆரம்பிப்பது இந்தக்காலம்

 



 சி பி கமெண்ட் - அமைதிப்படை பார்ட் 2 -கதை போறாது ,திரைக்கதை தேறாது - , நாகராஜசோழன் MAMLA -ஆல் பேப்பர்ஸ் அவுட்.  டி வில இன்னும் 20 நாட்கள் ல எப்படியும் போட்டுடுவாங்க பார்த்துக்கலாம் . ஒரு வாரம் தான் தாங்கும் 


எதிர்பார்க்கப்படும் விகடன் மார்க் 35


 குமுதம் ரேங்க் - சுமார் 


 ரேட்டிங்க் - 2 / 5 


 ஈரோடு ஆனூர் தியேட்டரில் படம் பார்த்தேன் 



 டிஸ்கி - மனம் கவர்ந்த வசனங்கள் இன்னும் 20 இருக்கு , இன்னும் அரை மணியில் இதே லிங்க்கில் அப்டேட்டிடறேன் 


 

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 10 5 2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. - விஹவுஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க சுரேஷ் காமாட்சி, எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் அமைதிப்படை 2-ம் பாகம் படத்தை நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ. என்ற பெயரில் தயாரிக்கின்றனர்.

இதில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுவண்ணன், கோமல்ஷர்மா, மிருதுளா, ஹன்ஷிபா, வர்ஷா ஆகியோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி மணிவண்ணன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

அமைதிப்படை 2-ம் பாகம் அரசியல் படம். இதில் எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை. ஆனால் சமீபகால அரசியலை சொல்லும் படமாக இருக்கும். இதில் வரும் வசனங்களும் அப்படித்தான். 

அமைதிப்படை முதல் பாகம் எடுத்து இருபது வருடங்களுக்கு பிறகு இந்த இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளோம். சத்யராஜ் நடிப்பை ‘கட்’ சொல்ல மறந்து ரசித்தேன்.

அரசியலையும் அரசியல்வாதிகளையும் படத்தில் விமர்சிப்பதால் அச்சுறுத்தல்கள் வரலாம். அதற்காக பயப்படவில்லை.

இசை: ஜேம்ஸ்வசந்தன், ஒளிப்பதிவு: டி.சங்கர், எடிட்டிங்: ஆர்.சுதர்சன், பாடல்: நா.முத்துக்குமார், ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், நடனம்: பாபி ஆண்டனி, ராஜ்விமல், நிர்வாக தயாரிப்பு: நெல்லை சிவகுமார், தயாரிப்பு நிர்வாகம்: கே.செந்தில், கே.ஆர்.பாலமுருகன்.
ஈரோடு தேவி அபிராமி , ஆனூர் , வி எஸ் பி  ஆகிய 3 தியேடர்களில் ரிலீஸ் 
 
2.சிபி - சுகுமாறன் வழங்கும் லேகனா பிலிம்ஸ் சார்பில் டி.ராஜேந்திரன் தயாரிக்கும் படம், ‘சிபி’. ராஜ்குமார், நந்திதா, சரத்பாபு, ரேகா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சிரஞ்சீவி. இசை, சத்யா. பாடல்கள், பொன்னியின் செல்வன். கதை, வசனம்: வி.ஜானகிராமன். திரைக்கதை எழுதி ஜே.ஜார்ஜ் பிரசாத் இயக்குகிறார். அவர் கூறும்போது, ‘கல்லூரியில் படிக்கும் இளைஞன் ஒருவனுக்கு எதிர்பாராத கொலைப்பழி வந்து சேர்கிறது. அவனை ஒரு பெண் காதலிக்கிறாள். தன் தந்தை மரணத்துக்கு காதலன்தான் காரணம் என அவளுக்கு தெரிய வருகிறது. முடிவு என்ன என்பது கதை. மே 10ம் தேதி ரிலீசாகிறது’ என்றார்.
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 
 
3. லவ் ஸ்டோரி - தாசரி நாராயணராவ் வழங்க, குரு பிரம்மா ஆர்ட்ஸ் சார்பில் பத்ரகாளி பெத்தபாபு, ஏ.வெங்கட்ராவ் தயாரிக்கும் படம், ‘லவ் ஸ்டோரி’. தெலுங்கில் ‘கிரீக வீருடு’ என்ற பெயரில் உருவாகும் இப்படம், தமிழில் டப் செய்யப்பட்டு, ரிலீசாகிறது. நாகார்ஜூனா, நயன்தாரா, நிலா, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, எஸ்.ரவீந்தர். இசை, தமன். பாடல்கள்: விவேகா, யுகபாரதி, அருண்பாரதி, உவரி க.சுகுமார். இயக்கம், கே.தசரத். இப்படத்தின் வசனம் எழுதி, தமிழாக்கத்துக்கான பொறுப்பு ஏற்றுள்ள ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறுகையில், ‘காதல் மற்றும் ஆக்ஷன், பேமிலி சென்டிமென்டுடன் படம் உருவாகியுள்ளது. பிரம்மானந்தம் ஜோடியாக நிலா நடித்திருக்கிறார்’ என்றார்.
ஈரோடு  கிருஷ்ணா வில் ரிலீஸ் 
 
 4. Go Goa Gone - Saif Ali Khan starrer "Go Goa Gone" is touted as Bollywood's first zombie-comedy film. Co-directed by Raj Nidimoru and Krishna DK, "Go Goa Gone" has Kunal Khemu, Vir Das, Anand Tiwary and Puja Gupta.

Saif Ali Khan appears in a supporting role in the zom-com entertainer. Unlike his stylish look in his previous film "Race 2", the actor will sporting a blonde look and several tattoos as he plays the role of Indo-Russian mafioso Boris - a zombie hunter. 


"I loved Boris from the first time I discovered him. He is tough and cool, but also very funny. He has a good heart and is brave. The dynamics between him and the boys is hysterical. I was very excited to play Boris the zombie hunter and even happier to produce this film," a leading daily quoted Saif as saying earlier.




Hardik (Kunal Khemu) and Luv (Vir Das) join their friend Bunny (Anand Tiwari) on his business trip to Goa. Luv meets the free-spirited Luna (Puja Gupta) who invites him as well as his friends for an exclusive underground rave party on a remote island hosted by Boris. But the island does not seem right and when the friends realise that they are accosted by zombies, then begins their nightmares.


The first look poster and trailer of "Go Goa Gone" have already generated a lot of buzz among moviegoers. But it is yet to be seen if the film would be able to live up to the expectations of the audience.

ஈரோடு சீனிவாசா வில் ரிலீஸ்
 
 5. Gippi" -revolves around the life of a 13-year-old girl and the twists and turns her adolescent life. Delhi-based Riya Vij plays the main character of Gippi.
 Gippi lives in Simla with her mother Pappi and little brother Booboo. The film deals with emotional and social changes in the life of Gippi, who is overweight and is always bullied at school. She also has to deal with living in a broken home. How she manages to emerge at the top of her own world is shown as the film progresses, according to Bollywood Hungama.


Sonam Nair makes debuts as director with "Gippi". The film is produced by Karan Johar under his banner Dharma Productions. This is the first time that a women director has been roped in to direct a film for Karan's production house.


Speaking about the film to Glamsham, Sonam said, "'My first film GIPPI is quite influenced by my own life. Nearly 60-70 % of it is inspired from my life. The plot didn't happen to me but I did come across similar incidents and characters. And I think every teenager will relate with it."


Besides Riya Vij, the film's star cast includes Taaha Shah, Divya Dutta and Jayati Modi.

With two interesting, different genres of films releasing this Friday, it will soon be known if they would be able to sustain the hype and make it big at the box office. 
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 
 

6.Act of Valor -  An unprecedented blend of real-life heroism and original filmmaking, Act of Valor stars a group of active-duty Navy SEALs in a powerful story of contemporary global anti-terrorism. Inspired by true events, the film combines stunning combat sequences, up-to-the minute battlefield technology and heart-pumping emotion for the ultimate action adventure.


 Act of Valor takes audiences deep into the secretive world of the most elite, highly trained group of warriors in the modern world. When the rescue of a kidnapped CIA operative leads to the discovery of a deadly terrorist plot against the U.S., a team of SEALs is dispatched on a worldwide manhunt. 


As the valiant men of Bandito Platoon race to stop a coordinated attack that could kill and wound thousands of American civilians, they must balance their commitment to country, team and their families back home. Each time they accomplish their mission, a new piece of intelligence reveals another shocking twist to the deadly terror plot 

 ஈரோடஸ்ரீலட்சுமியில் ரிலிஸ்