Saturday, April 13, 2013

நயன் தாரா தெரியும் , புல் புல் தாரா ,க்வோரா (3 வது அயிட்டம் இன்னா?)

1. டியர்.இருட்டைக்கண்டா பயம்.




 நோ ஒர்ரி.கூட நான் இருக்கேன்.


என் பயமே அதுதான்



--------------------


2  டியர்.இன்னிக்கு முழுநாள் எனக்கு Lean Office meeting இருக்கு. பீச் வர மாட்டேன்.



லீனா இருக்கறவங்கதானே போகனும்.குண்டா இருக்கும் நீ ஏன் போறே?



----------------------


3 டியர், இந்தா லவ லெட்டர்.



டேய், லூசு நாம தான் தினமும் சந்திக்கறோமே? எதுக்கு லெட்டர்?










----------------------






4. தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்ல முத்தக்காட்சியில் நடிக்கிறேன்: - ஆர்யா # அப்போ எனக்கு என்ன மரியாதை இருக்கு? - கமல்








----------------------






5. நயன் தாரா தெரியும் , புல் புல் தாரா தெரியும் ,யார் யா அது க்வோரா? இடம் சுட்டி பொருள் விளக்கவும்



--------------------------------


6. ஆபீஸ் ல ஒரு பிகரு சம்பங்கிப்பூ 4 முழம் வெச்சுட்டு வந்திருக்கு.அடேங்கப்பா.என்னா வாசம்.ஒரு பய இன்னைக்கு வேலை செய்யமாட்டான்



------------------------


7. இன்று பத்திரிக்கையாளர்களை நேரில் சந்திப்பேன் - அஞ்சலி # சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை ( பேக்கிரவுன்ட் பாட்டு)



-----------------------


8. முத பிரசவம் பொண்ணு வீட்டு செலவு.அடுத்த பிரசவம் மாப்ளை வீட்டு செலவு என்பதாலேயே பெரும்பாலானோர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கறாங்க



-----------------------------


9. எம் ஜி ஆர் சுந்தர் சி படத்தில் நடித்தால் - மத கஜ ராஜா வின் பார்வை ராணியின் பக்கம்


----------------------------


10. ஃபேஸ்புக்கில் பாமக புரட்சி செய்துகொண்டு இருக்கிறது-ராமதாஸ்# அங்கேயும் ஜாதிக்கலவரமா?



--------------------------


11. மேடம்.யார் கூட ஓடிப்போனீங்க ?



அவசரத்துல பேரைக்கேட்கல.இருங்க கேட்டுச்சொல்றேன்.தம்பி.உன் பேரென்னப்பா ?



-------------------------


12. கழக ஆட்சியில் அஞ்சலி எவ்வளவு பாதுகாப்புடன் இருந்தார் என்பதும் அம்மையார் ஆட்சியிலேதான் அவர் காணாமல் போனார் என்பதையும் அறிவீர்்




---------------------


13. கிரவுன்ட்ல ஒரே ஒரு ஆந்த்ரா பிகர்தான் இருக்கு.கை குடுத்து வாழ்த்து சொல்லலாம்னு பார்த்தா கிளவுஸ் போட்டிருக்கு


---------------------------

14. உங்க ஜோக்குக்கு சிரிப்பே வர்லைனு எந்த பிகராவது நம்மை கடுப்பேத்துனா இதுதான் சாக்குனு கிச்சு கிச்சு மூட்டிடனும்



----------------------


15. யுகாதி வாழ்த்து சொல்றேன்கற போர்வை ல அக்கம் பக்கம் இருக்கும் ஆந்த்ரா பிகர்களின் உள்ளங்கையை தடவினால் நீயும் ஒரு தமிழனே!



---------------------------



16. ஒரு ஆணின் உள்ளத்தை திறக்கும் திறவுகோல் - ஏதோ ஒரு நேரத்தில் ஏதோ ஒரு பிகரால் கொடுக்கப்படும் ஏதோ ஒரு பரிசு



-------------------------


17. தமிழ் டீச்சர் - பாரதி சிறுகுறிப்பு வரைக.



முழுப்பேரு பாரதி தேவி.அஞ்சலியோட (கன்னத்துல ஓங்கி ) 1 விட்ட சித்தி.மு களஞ்சியத்துக்குநெருங்க்கியகுடும்பநண்பர்



----------------------



18. ARR போன்ற இசையமைப்பாளர்களுக்கு சுத்தமாக தமிழறிவே இல்லை -ராஜகுமாரன் # இசைக்கு எதுக்குங்ணா மொழி?தேவை இல்லாத பழி!



--------------------------


19. கோச்சடையான் ல் ரஜினி அப்பா மகனாக இரு வேடம் # அப்பா தாத்தா மாதிரி மகன் அப்பா மாதிரி இருப்பார்



---------------------------


20. ரஜினியின் முன்னுதாரணத்தை தனுஷ் போன்றவர்கள் பின்பற்ற வேண்டும்!-அன்புமணி#அதாவது மீனா குழந்தை கூட தனுஷ் ஜோடி சேரனுமா?்




----------------------------------

 


Friday, April 12, 2013

எம் ஜி ஆர் கூப்பிட்டும் ஏன் நான் போகலை ? -உதிரிப்பூக்கள் -இயக்குநர் மகேந்திரன் பேட்டி

பிரார்த்தனையிலும் காமத்திலும்தான் ஐம்புலன்களும் ஐக்கியமாகி ஒரு புள்ளியில் குவியும்னு சொல்வாங்க. நான் அதில் படைப்புத் தொழிலான சினிமாவையும் சேர்த்துக்கிறேன்!'' - கண்களைச் சுருக்கிச் சிரிக்கிறார் மகேந்திரன். 


'முள்ளும் மலரும்’, 'உதிரிப்பூக்கள்’, 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’, 'ஜானி’ உட்பட 12 படங்களில் தமிழ் சினிமாவின் திசையைப் புரட்டிப்போட்ட யதார்த்த இயக்குநர் இப்போது மீண்டும் களத்தில். சத்யராஜ் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் இருந்தவரைச் சந்தித்தோம்...



'' 'முள்ளும் மலரும்’ படம் வெளிவந்து 35 ஆண்டு களுக்குப் பிறகும் அந்தப் படம்குறித்த சிலாகிப்பும் சிலிர்ப்பும் இருக்கிறது. ஆனால், படம் உருவான காலகட்டத்தில் என்ன மாதிரியான அனுபவம் கிடைத்தது?''


''நான் சினிமா டைரக்டர் ஆகணும்னு ஊசிமுனை அளவுகூட விரும்பியது இல்லை. 'முள்ளும் மலரும்’ நாவலில் எனக்குப் பிடிச்ச சின்னச் சின்ன விஷயங்களை எடுத்து விஷ§வலுக்கு ஏத்த மாதிரி திரைக்கதை அமைச்சேன். எந்த சினிமாவிலும் பொதுவா படம் முழுக்கச் சண்டை போடுறவங்க, க்ளைமாக்ஸ்ல 'மன்னிச்சிடு’னு சொல்லி சமரசம் ஆகிடுவாங்க. ஆனா, 'முள்ளும் மலரும்’ படத்தில் நான் அப்படி ஒரு வழக்கமான க்ளைமாக்ஸ் வைக்கலை. காளி கொஞ்சம் மனசைச் சமாதானப்படுத்திக்குவானே தவிர, கடைசி வரை தன் இயல்பில் இருந்து மாற மாட்டான்.


 தங்கச்சி கல்யாணத்துக்குச் சம்மதிச்ச பிறகும்கூட, 'இப்பவும் எனக்கு உங்களைப் பிடிக்கலை சார்’னு சரத்பாபுகிட்ட சொல்வான். மனித சுபாவம் அப்படித்தான்.


ரொம்ப ரசிச்சு ரசிச்சு... இழைச்சு இழைச்சு அந்தப் படத்தை எடுத்தேன். ஆனா, படத்தோட டபிள் பாசிட்டிவ் பார்த்துட்டு, 'அங்கே ஒரு டயலாக்... இங்கே ஒரு டயலாக் இருக்கு. என் தலையில மண்ணை வாரிப் போட்டுட்டியே’னு தயாரிப்பாளர் வேணு செட்டியார் கன்னாபின்னானு திட்டினார். செட்டியார் பையன் என்னை அடிக்கவே வந்தார். ஆனா, படம் வெளியாகி மூணு வாரத்துக்கு அப்புறம் பிளாக்ல டிக்கெட் விக்கிற அளவுக்கு ஹிட் ஆச்சு.


 'இந்தா பிளாங்க் செக். எவ்வளவு பணம் வேணும்னாலும் எடுத்துக்கோ’னு சந்தோஷமாக் கொடுத்தார் வேணு செட்டியார். 'வேணாம்ணே... எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தீங்க. அது எத்தனையோ கோடிக்குச் சமம். அதுவே எனக்குப் போதும்’னு செக்கைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அந்தப் படத்தில் நடிச்சதுக்குத்தான் ரஜினிக்கும் ஸ்டேட் பெஸ்ட் ஆக்டர் விருது கிடைச்சது. ரஜினிக்குக் கிடைச்ச முதல் விருது என் படம் மூலமாக் கிடைச்சதில் எனக்கு டபுள் சந்தோஷம். அந்த 'முள்ளும் மலரும்’ நினைவுகள் இன்னும் எனக்குள் சந்தோஷத்தை விதைச்சிட்டுதான் இருக்கு!''


''அப்போதைய சினிமா சூழல் பிடிக்காமல்தான் நீங்கள் படம் இயக்கியதாக முந்தைய பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தீர்கள். இப்போது தமிழ் சினிமா சூழல் எப்படி இருக்கிறது?''


''காளி சொன்ன அதே வசனம்தான்... 'இப்பவும் எனக்குப் பிடிக்கலை சார்!’ ஆரம்ப கால தமிழ் சினிமாவையே என்னால் ஏத்துக்க முடியலை. அப்போ புராண, இதிகாசக் கதைகளையும், நாடகங்களையும் மட்டுமே படங்களா எடுத்தோம். ஆனா, இப்பவும் டிராமா வடிவத்திலேயேதான் சினிமா இருக்கு. 1955-லேயே 'பதேர் பாஞ்சாலி’ படம் எடுத்துட்டார் சத்யஜித் ரே. 

அந்தக் காலகட்டத்தில்தான் அதீத நடிப்பு, அளவில்லாத பாடல்கள் வெச்சு ஹரிதாஸ், அசோக்குமார் படங்கள் எடுத்துட்டு இருந்தோம். 'பராசக்தி’, 'மனோகரா’ படங்களில் ரசிகர்களுக்கே வாய் வலிக்கிற அளவுக்கு வசனம் பேசுவாங்க. பல படங்கள் அழுவாச்சிக் காவியங்களா இருந்தன. கட்டாயக் கல்யாணமா இருந்தாலும் சேடிஸ்ட் புருஷனா இருக்கக் கூடாது. மனைவியின் உணர்வுகளுக்கு மரியாதை தர்ற நல்ல கணவனா இருக்கணும். இதைத்தான் நான் சினிமாவிலும் எதிர்பார்க்கிறேன்!''


''ஏன் இவ்வளவு விரக்தி. அப்படி தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிக்காத அம்சம் என்ன?''


''ஏங்க... இந்தியாவுல எவ்வளவு ஊழல் நடக்குது. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு நாட்டுல எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், அது எதையுமே கண்டுக் காம, காதலை மட்டுமே படமா எடுத்துத் தள்றோம். வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு, 'ஒவ்வொரு நாட்டுக் கும் ஒரு பிரச்னை இருக்கு. உங்க நாட்டுல 'ஐ லவ் யூ’ சொல்றது மட்டும்தான் சார் பிரச்னையா இருக்கு’னு கேலி பேசும் அளவுக்குத்தான் தமிழ் சினிமா இருக்கு. காதல் சொல்ல மெனக்கெடுறதுதான் சினிமாவா? லாஜிக் இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் எங்கேயும் ரீச் ஆகாது!''


''சரி... நல்ல சினிமாவா இருக்க எது அவசியம்?''


''வழக்கமான பாதையில் இருந்து கொஞ்சம் விலகினாலே அது நல்ல சினிமாதான். நல்ல சினிமாவுக்குப் பெரிய பட்ஜெட், பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவை இல்லை. மனசுதான் தேவை. உதாரணம் சொல்லி விளக்கும் அளவுக்குக்கூட இங்கே சூழல் இல்லை. பல மராட்டிய, இரானிய, கொரியன் படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே வர்றதில்லை. மல்டிஃப்ளெக்ஸ் தியேட்டர்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் படங்களை மட்டும்தான் திரையிடுறாங்க. டி.வி, டி.வி.டி., திரைப்பட விழாக்கள்னு எங்கேயும் அப்படியான யதார்த்த சினிமாக்களைப் பார்க்க வாய்ப்பு இல்லாத சாமான்ய ரசிகனுக்கு, நாம காட்டுவதுதான் சினிமா. 


பாட்டு, டான்ஸ், ஃபைட் இருக்கும் மசாலாப் படம் பார்த்துட்டு, இதுக்கு மேல சினிமானு ஒண்ணு கிடையாதுனு நினைப்பாங்க. இப்படி ஒரே மாதிரி படங்கள் வர்றதால, மக்கள் அதைத்தான் விரும்பிப் பார்க்கிறாங்கபோலனு ஒரு கருத்துப் பிம்பம் உருவாகும். ஆனா, உண்மை என்ன? கேரளாவுல கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடு றாங்க. அதுக்கு மிக முக்கியக் காரணம், அங்கே தரமான இலக்கிய ரசனையின் மேல் சினிமா கட்டமைக் கப்பட்டு இருக்கு. மக்கள் மன நிலையை ஆரோக்கியமான திசை களை நோக்கி மோல்டு பண்ற கலை தான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கும்னு தியேட்டர்ல அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது!''


(மேலும் மேலும் மகேந்திரன் உணர்ச்சிவசப்பட்டதால்,  உரையாடலைத் திசை திருப்பினேன்...)

''எம்.ஜி.ஆருக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கமான அலைவரிசை இருந்ததே?''


''அழகப்பா கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னால் நான் தமிழ் சினிமாவின் அபத்தங்களைப் புட்டுப்புட்டு வெச்சுப் பேசினேன். அப்பவே என்னைக் கவனிச்சிருக்கார் அவர். அப்புறம் சென்னைக்கு வந்து அவரோட அறிமுகமாகி, சினிமா வாய்ப்புகளில் எனக்கு பிரேக் கிடைக்காம மூணு தடவை நான் ஊருக்கே போயிரலாம்னு முடிவெடுத்தப்போ, 'வேண்டாம்’னு தடுத்து நிறுத்தியவர் அவர்தான்.

 'நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படம் மூணு தேசிய விருதுகள் ஜெயிச்சது. விருதுகளைப் பெற்றுக்கொள்ள டெல்லிக்குப் போனோம். அப்போ அங்கே எம்.ஜி.ஆரும் இருந்தார். அவர் கால்ல விருதைவெச்சு, 'இந்த விருதுக்கு நீங்கதான் காரணம்’னு சொன்னேன். 'குடத்துல இருக்குற விளக்கை எடுத்து வெளியேவெச்சேன். பிரகாசமா எரியுறது மகேந்திரன் சாமர்த்தியம். நான் ஏன் சினிமாவுக்கு உங்களை இழுத்துவந்தேன்னு இப்போ தெரிஞ்சுக்கிட்டீங்களா?’னு சிரிச்சார்.


 'நாளைக்கு ராமாபுரம் தோட்டத்துக்கு வாங்க. ஒரு முக்கியமான பொறுப்பை உங்ககிட்ட ஒப்படைக்கப்போறேன்’னு சொன்னார். பெரிய பொறுப்பு எதுவும் கொடுத்துருவாரோங்கிற பயத்துல நான் போகவே இல்லை. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!''


''இப்போதைய தமிழ் சினிமாவில் உங்களை ஈர்த்திருக்கும் இயக்குநர்கள் யார்?''


''முதல் படம் நல்லா பண்ணியிருக்கார்னு ரொம்ப ஆர்வமா சிலருக்கு போன் பண்ணிப் பாராட்டுவேன். ஆனா, அறிமுக வாய்ப்பில் புதுமுகங்களை வெச்சு நல்ல படம் தருபவர், அடுத்த படத்திலேயே பெரிய ஆர்ட்டிஸ்ட், பெரிய பட்ஜெட்னு ரூட் மாறிடுறார். யாரையும் நம்ப முடியலை. உலக சினிமா டிரெண்ட் தெரிஞ்ச சின்சியர் இயக்குநர்களும் இங்கே இருக்காங்க. முதல் படத்துல திரும்பிப் பார்க்க வைத்த ஒரு இயக்குநர், அடுத்த படத்துலயும் சிந்திக்கவெச்சார். ஒரு படம் தோல்வி அடைஞ்சாலும் அலட்டிக்காமத் தன் பாணியைத் தொடர்ந்து சினிமா பண்ணிட்டு இருக்கார் இன்னொருத்தர். இப்படி ரெண்டு, மூணு இயக்குநர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதே சமயம், ஒண்ணு, ரெண்டு படங்கள் மட்டும் நல்லா வர்றது தமிழ் சினிமாவுக்கு நல்லது இல்லையே!''


''உங்களுக்குப் பிறகு ரஜினிக்குள் இருக்கும் நடிகனை வேறு யாரும் கண்டுகொள்ளவே இல்லையே?''


''இன்னைக்கும் ரஜினி மகா நடிகன்தான். அதுல சந்தேகம் வேண்டாம். ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாம் ரஜினி இப்படித்தான் இருக்கணும், நடிக்கணும்னு முடிவுபண்ணிட்டாங்க. ஆக்ஷன் படங்களில் நடிப்பது புலி வாலைப் பிடிச்ச மாதிரி. அதை ரஜினியாலும் விட முடியலை. சாண்டில்யனின் சரித்திர நாவல் ஜலதீபம். அதன் மூன்றாவது பாகத்தில் 'என் வழி தனி வழி’னு கடல் தளபதி கன்னோஜி சொல்வான். அதைத்தான் இப்போ ரஜினி செய்துட்டு இருக் கார். அமிதாப் பச்சன் நடிப்பை ரொம்ப சுலபமா கிராஸ் பண்ற திறமையும் சக்தியும் ரஜினிக்கு இருக்கு. ஆனா, அதுக்கு அவரோட ரசிகர்கள் வழிவிடணும்!''  


''நீங்கள் இயக்கும் பட வேலைகள் எப்படிப் போய்க்கொண்டு இருக்கின்றன?''


''குடும்ப உறவுகளை மையமாவெச்சு சத்யராஜ் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஒரு படம் இயக்குகிறேன். கொடைக்கானல்தான் லொகேஷன். ரெட் ஒன் கேமராவில் ஷூட் பண்ணலாம்னு திட்டம். பழைய உற்சாகத்தை உணர்றேன்!''


நன்றி - விகடன்


 வாசகர் கருத்து 


 1. மகேந்திரனது படங்களை பார்த்திருக்கின்றேன். "லாஜிக்கும் (தர்க்கமும் என்று தமிழில் சொல்லலாம்) இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் ரீச் ஆகாது என்கிறார்". சரி. இவர் அப்படி ஏதாவது படமெடுத்திருக்கின்றாரா? கேள்வி கேட்டால் இல்லையென்று தானே சொல்ல வேண்டியிருக்கும்.

தமிழ் சினிமாவின் அவலங்களை பற்றி பேச எந்த தமிழ் திரைப்பட படைப்பாளிகளுக்கும் அருகதை இல்லை எனவே சொல்லவேண்டும். தனிமனித துதிபாடலின் வெளிப்பாடாகவே தமிழ் சினிமா வளர்ச்சியடைந்திருக்கின்றது. என்ன செய்வது? பார்ப்பது மந்தைகள்ளல்லவா? மீறி எவராவது வித்தியாசமாக படமெடுத்தால் திரையரங்கு பற்றி எறிந்துவிடும். அந்த அளவிற்கு சகிப்பின்மை மற்றும் அறிவின்மை.

ரஜினிகாந்தை மகா நடிகன் என்று இவர் விவரித்ததும் இவர் ஒரு சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை காணாமல் போக செய்துவிட்டார்.



2. மகேந்திரன், பா இயக்குனர்கள் எல்லாரும் ஒரே டைப் தான். தாங்க தான் தமிழ் சினிமாவோட சரித்திரத்தையே மாதிட்டோம்னு சொல்வாங்க. எல்லாருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, யாதார்த்த எடுங்க இல்லேன இரானியன் சினிமா பாருங்க. ரொம்ப சிம்பிள்.




3. தமிழ் சினிமா - இப்படித்தான்

1. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க.

2. சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்.

3. நீங்க எல்லாம் தொண்டை கிழிய பேசி கிளாஸ் எடுத்தாலும் கடைசில இருக்கற Studentsக்கு கேக்குமான்னு சந்தேகம் தான்.. ஆனா ஹீரோ பாடறது நாலு கிலோமீட்டர் சுத்தளவுல எல்லோருக்கும் கேக்கும்.

4. ரேப் சீனை தடுக்கவரும் நம்ம ஹீரோ (படுபாவி பய ) , வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.ஆனா அந்த பொண்ணு ஹீரோயினா இருந்து அதுவே அடுத்த சீன்ல அரைகுறையா ஆடும் போது நம்மாளு கண்டுக்க மாட்டாரு..

5. கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.


6.ஹீரோவிடம் மாட்டிவிடும் தனது கையாளை வில்லன் குறி பார்த்து சுடுவான் ...கையால் அருகிலே ஜென்ம விரோதி ஹீரோவை சுட மாட்டான் ...

7.என்ன சோக காட்சி என்றாலும் ஹீரோயின் புல் மேக்கப்தான் ...

இன்னும் சொல்லி கொண்டே போகலாம் 


4. ஒருவேளை நான் அன்னைக்கு எம்.ஜி.ஆரைச் சந்திச்சிருந்தா என்ன நடந்திருக்கும், இப்போ நான் எங்கே இருப்பேன்னு என்னால் யூகிக்க முடியலை!"
யூகங்கள் :
1. அரசவை இயக்குனர் பதவி
2. Film Institute Chairman
3. தமிழ்நாடு டாக்குமெண்டரி படத் தயாரிப்பு.
4. கலைமாமணி விருது குழுவின் தலைவர்.
5. டாக்டர் பட்டம்.

நல்ல வேளை, மனிதர் பிழைத்தார். 


5. நல்ல எண்ணங்கள் கொண்ட படைப்பாளி தான் கடவுள் ,அந்த வரிசையில் மகேந்திரன் ஒரு கடவுளே .தன் மக்களுக்கு நல்ல ரசனை கொண்ட எண்ணங்களை பகிர்ந்தளித்தார் .மக்கள் ரசனையை உயர்வாகவே மதிப்பிட்டார் .மகேந்திரன்,நீங்கள் தன் படைப்பாளி .இந்த சமூகம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது .


6. நல்ல இயக்குனர் தான் ஆனால் இவர் எடுத்த 12 படங்களில் 3 தானே
ஞாபகம் இருக்கிறது..மீதி? இவர் இயக்கிய மற்ற படங்கள்

ஜானி(சுமார் படம் நல்ல பாடல்கள்)
அழகிய கண்ணே
அன்புள்ள மலரே
கண்ணுக்கு மை எழுது
மெட்டி (இவர் சொதப்பிய நல்ல கதை )
நண்டு (இவர் சொதப்பிய நல்ல கதை)
ஊர் பஞ்சாயத்து
சமஸ்தானம்
கை கொடுக்கும் கை(கன்னட பட ரீமேக்)


7. இடைவெளியில் தமிழ் சினிமா வேறு பரிமாணத்திற்குப் போய் விட்டது. தொழில் நுட்பம், காட்சியமைப்பு, போன்றவை எல்லாம்...

ஆரண்ய காண்டம் போன்ற படங்களும் இதே ஊரில் தான் படமாக்கப் பட்டிருக்கின்றன என்பதையும் இவர் உணர்ந்து கொண்டால் நல்லது. கமர்சியலாக வெற்றி பெற வேண்டும் என்பது தான் இங்குள்ள நெருக்கடி.

ரசிகர்களை அதற்குத் தயார் செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஹன்சிகாவையும், அஞ்சலியையும் தானே இன்னமும் அட்டைப் படத்தில் போட்டு விற்று காசு பார்க்க வேண்டியிருக்கிறது... 



8. நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மின்வெட்டுனு படம் எடுத்தா சென்ஸார் வெட்டுவான் இல்லைன்னா அம்மா வெட்டும் .
அது சரி , நீங்க அப்படி ஏதாவது படம் எடுக்காமல் குடும்ப உறவுகளை மையமாவெச்சு படம் எடுக்க காரணம் ?
ஐயா , நான் உங்கள் படங்களின் தீவிர ரசிகன். உங்கள் கருத்துக்களில் இருந்து மாறுபடுகிறேன் .
'கை கொடுக்கும் கை' முதல் பாதி அப்படியே , உரிமைக்குரல் படம்.
'ஊர்ப் பஞ்சாயத்து' எதில் சேர்த்தி ?
'அழகிய கண்ணே' , ஓமன் படத்தின் உங்கள் பிரதிபலிப்பு. 



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 12 .4.2013 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

1.உனக்கு 20 எனக்கு 40 -  இளம் பெண்ணுக்கும் நடுத்தர வயதை கடந்த ஆணுக்குமான காதலை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. "உனக்கு 20 எனக்கு 40". அக்ஷய் என்பவரே கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்கிறார். நாயகியாக ஷாலினி, அம்ருதா என்ற இருவர் நடிக்கிறார்கள்.
 தன் தோழி வீட்டுக்கு அடிக்கடி வரும் ஹீரோயின் தோழியின் தந்தை மீது காதல் கொள்கிறாராம். தோழியின் சகோதரனும் ஹீரோயினை காதலிக்கிறாராம். ஹீரோயின் அப்பாவுக்கு கிடைத்தாரா, மகனுக்கு கிடைத்தாரா என்பதுதான் கதையாம். பெரும்மான்மையான படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாம். 
 "இது நிறைய இடத்தில் நடக்கிற விஷயம்தான். பள்ளிக்கூட மாணவனை ஆசிரியை காதலிக்க வில்லையா? டியூசனுக்கு வரும் மாணவி ஆசிரியரை காதலிக்கவில்லையா, அதைத்தான் படத்தில் சொல்கிறோம். இப்படி முறைகேடான உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளையும் சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் கே.பி.எஸ்.அக்ஷய்.
 இந்த கேவலமான கதை அம் சம் கொண்ட படம் ஈரோடு அண்ணாவில் ரிலீஸ் 
 
2. அதிரடி வேட்டை - ஆந்திரத்து யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, சமந்தா இணைந்து நடித்த படம் "துக்குடு". தெலுங்கில் ஹிட் அடித்த அதிரடி ஆக்ஷன் படம். அதனை இப்போது தமிழில் டப் செய்து "அதிரடி வேட்டை" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
 சந்தோஷமான  நடுத்தர குடும்பத்திற்குள் நுழைகிறது ஒரு தாதா கும்பல், அம்மா அப்பா, தங்கை என்று அன்பு உலகத்தில் இருந்த ஹீரோ அரிவாள், துப்பாக்கி என்று ஆக்ஷன் அவதாரம் எடுத்து வேட்டையாடும் கதை. சீனு வைத்தலா இயக்கி உள்ளார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரா தமிழ் வசனங்களை எழுதி உள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். தமன் இசை அமைத்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட தமிழ் முகங்களும் உண்டு. 
ஈரோடு சண்டிகா , ஸ்டார் இல் ரிலீஸ்  
 இது தெலுங்கில் ரிலீஸ் ஆன போது எழுதிய விமர்சனம்

http://www.adrasaka.com/2011/09/dookudu.html
 
 3. நினைவுகள் அழிவதில்லை - மக்கள் பிரச்னைகளை சொல்லும் படமாக நினைவுகள் அழிவதில்லை படம் உருவாகி வருகிறது. புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் நிரஞ்சனா எழுதி பரபரப்பை ஏற்படுத்திய திரேஸ் மரண என்ற நாவலை, பி.ஆர்.பரமேஸ்வரன் நினைவுகள் அழிவதில்லை என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்தார். இந்த நாவல்தான் இப்போது அதே பெயரில் திரைப்படமாகி வருகிறது. இதில் புதுமுகங்கள் குகன், அருண், சிவா, சண்முகம் ஆகிய 4 பேரும் கதாநாயகர்களாக நடிக்க, காயத்ரி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஓம் முத்துமாரி, மஞ்சுளா ஆகிய 2 நாடக கலைஞர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டைரக்டர் பகத்சிங் கண்ணன். தனது படம் குறித்து பகத்சிங் கண்ணன் கூறுகையில், 1943-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துணையுடன் நில பிரபுக்கள், ஏழைகளுக்கு சொந்தமான நிலங்களை அபகரிக்கிறார்கள். அதை எதிர்த்து ஒரு கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் மக்களை திரட்டி போராடுகிறார்கள்.
 அந்த நான்கு இளைஞர்களுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் தூக்கு தண்டனை விதிக்கிறது. அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டதா, இல்லையா? என்பதே கதை. `புதுயுகம் நடராஜன் ஒளிப்பதிவு செய்ய, பி.ஆர்.ரஜின் இசையமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு சென்னை, தஞ்சை, பல்லடம், ஊட்டி, திருப்பூர் ஆகிய இடங்களில் நடைபெற்று முடிவடைந்தது. மக்கள் பிரச்னையை மையக்கருவாக கொண்ட படம் என்பதால், எடிட்டர் பி.லெனின் சம்பளமே வாங்காமல், இந்த படத்தில் பணிபுரிந்து இருக்கிறார்.
ஈரோடு சங்கீதாவில் ரிலீஸ் 

4 யாரது - டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு குறைந்த செலவில் பயமுறுத்தும் பேய் படங்களின் தயாரிப்பு அதிகரித்து உள்ளது. அந்த வரிசையில் தயாராகும் படம் யாரது. சூர்யா விஷூவல் கம்யூனிகேஷன் சார்பில் ஏ.சுந்தர்ராஜ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். ஏ.சம்பத்குமார் இயக்குகிறார். வருண், உண்ணி கிருஷ்ணன் ஹீரோவா நடிக்கிறார்கள், சவுந்தர்யா, மீனா என்ற இரண்டு ஹீரோயின்கள்.

ஒரு ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பெண் இமாச்சல பிரதேசத்தில் உள்ள பனிமலைக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு வேறு ஊரிலிருந்து சுற்றுலா வரும் சில இளைஞர்கள் சேர்ந்து அவளை கற்பழித்து கொன்று விடுகிறார்கள். அதன் பிறகு எதுமே நடக்காத மாதிரி தொடர்ந்து சுற்றுலா செல்கிறார்கள். இறந்தவர் ஆவியாக வந்து அவர்கள் செல்லும் இடங்களுக்கு தொடர்ந்து சென்று எப்படி பழிவாங்குகிறாள் என்பதுதான் கதை. கேரளா, ஆந்திரா, அசாம், மனாலி, இமாச்சல பிரதேசம் என்று இந்தியாவின் அழகான பிரதேசங்களில் படம் பிடித்திருக்கிறார்கள்.
 ஈரோடு ஸ்ரீகிருஷ்ணாவில் ரிலீஸ் 
 
5.  சிக்கி முக்கி! -முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரான படம் New movie titled chikky mukkyஎன்னவோ பிடிச்சிருக்கு, எழுதியதாரடி போன்ற படங்களை தயாரித்தவர் வெளிநாட்டில் வாழும் தமிழரான ஸ்ரீகந்தராஜா. இவர் இயக்கி இருக்கும் படம் சிக்கி முக்கி. ஜித்தேஷ் நாயகனாக அறிமுகமாகிறார். தமிழ் படம் திஷா பாண்டே நாயகியாக நடித்துள்ளார். 
"ஒரு நல்ல டாக்டர் ஒரு பெண்ணை இந்தியாவில் திருமணம் செய்து கொண்டு மலேசியாவில் வாழ்கிறார். அந்த பெண்ணின் இந்திய காதலன் அவளை துரத்திக் கொண்டு மலேசியாவுக்கே வருகிறான். அவளை பல வழிகளில் துன்புறுத்துகிறான். ஒரு காலத்தில் காதலித்தவன்தான் என்றாலும் அவன் தவறானவன் என்பதை தெரிந்து கொண்டதால் வெறுக்கும் அவள். மலேசியாவில் அவனது துன்பங்களை பொறுத்துக்கொண்டு அவனை எப்படி சமாளிக்கிறாள். புகழ்பெற்ற தன் டாக்டர் கணவனை அவனிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் கதை. முழுபடத்தையும் மலேசியாவில் எடுத்து முடித்து விட்டோம். வெளிநாடுகளில் கணவனோடு வாழும் பெண்களுக்கு இந்தப் படம் ஒரு பாடமாக இருக்கும்" என்கிறார் 
ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

 
6. COMMANDO -  துப்பாக்கி, பில்லா-2 வில் வில்லனாக வந்து மக்களைக் கவர்ந்தவர் வித்யூத் ஜம்வால். தன்னுடைய 3 வயதிலேயே களரி தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்துள்ளார் வித்யூத். களரி மட்டுமன்றி ஜிம்னாஸ்டிக், குங்பூ, ஆகிய தற்காப்பு கலைகளையும் பயின்றுள்ளார். மேலும் சில ஆண்டுகள் மாடலிங் துறையிலும் அசத்தியிருக்கிறார். அதுமட்டுமின்றி வித்யூத் தேசிய ஜிம்னாஸ்ட் சாம்பியனும் கூட.
 இவர் போர்ஸ் படத்தில் ஜான் ஆபிரஹாமுக்கு வில்லனாக நடித்ததன் மூலம் தமிழ் பட வாய்ப்புகளைப் பெற்றவர். தற்போது தமிழ் படங்கள் மூலம் இந்தியில் கதாநாயகனாகி உள்ளார்!

ஈரோட்டில் ரிலீஸ் இல்லை 

அஞ்சலி - பார்வதிதேவி -களஞ்சியம் -பால திரிபுர சுந்தரி - வெளி வராத மர்மங்கள்

சினிமாவே எடுக்கலாம் போலிருக்கிறது. அந்தளவுக்கு திகில் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது நடிகை அஞ்சலியின் சமீபத்திய நாட்கள். அஞ்சலி எங்கேயோ ரக‌சிய இடத்தில் பதுங்கி விட்டதால் அவரது ரகசியங்கள் ஊர்சுற்றக் கிளம்பிவிட்டன!

இணைய தளங்கள், தினசரிகள், சேனல்கள் எதைத் திருப்பினாலும் அஞ்சலி புராணம் தான் பாடுகின்றன. அஞ்சலி தலை மறைவு, ரகசிய காதலனுடன் ஓட்டம், இயக்குனர் களஞ்சியம் மற்றும் சித்தி பாரதிதேவி மீது சராமாரி புகார் என அஞ்சலியைப பற்றிய செய்திகள் புதிது புதிதாய் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.
 
 
அஞ்சலியின் கடந்த காலமும் க‌ரடுமுரடானதுதான். ஆந்திராவில் உள்ள ஜகன்னபேட்டா என்ற குக்கிராமத்தில் பிறந்த அஞ்சலிக்கு பெற்றோர் வைத்த பெயர் பால திரிபுர சுந்தரி. அம்மா பார்வதி தேவி. இதுமட்டும் தான் இப்போதைக்கு தெரிகிறது. பெரிய பின்னணி எதுவும் இல்லாததால் ஏழ்மையை சுமந்தே இருந்தது அஞ்சலியின் குடும்பம்

பார்வதிதேவிக்கு இரண்டுமே பெண் குழந்தைகள். தங்கையான‌ பாரதிதேவிக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள். பாரதிதேவிக்கோ பெண் குழந்தை என்றால் கொள்ளை பிரியம். அதனால், தனது அக்கா மகள் திரிபுர சுந்தரியை ( முழு பெயரையும் சொன்னா மூச்சு வாங்குதுங்க) முறைப்படி தத்து எடுத்து வளர்த்திருக்கிறார்.

சிறுவயதிலேயே திரிபுர சுந்தரிக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். எப்படியும் சினிமா நடிகை ஆகியே தீருவேன் என்று சொல்லி வாய்ப்புகளை தேடி அலைய ஆரம்பித்தார். ' நீயெல்லாம் நடிக்கப் போறியாக்கும்' என்று ஏளனம் செய்தது சுற்றமும் நட்பும். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் வாய்ப்புக்காக காத்திருந்தார் திரிபுர சுந்தரி. அப்போது தான் டைரக்டர் களஞ்சியத்தின் கலைக் கண்ணில் சிக்கினார். 'மிட்டாமிராசு' படத்தை முடித்திருந்த களஞ்சியம், அடுத்ததாக அரசியல் பின்னணி கொண்ட ஒரு காதல் கதையை  திரைச்சித்திரமாக்கும் முயற்சியில் இறங்கினார்.

புதுப்படத்திற்கு, 'சத்தமின்றி முத்தமிடு' என்று தலைப்பும் வைத்தார். தேவயானியின் மூத்த தம்பி மயூர் தான் கதைக்கு நாயகன். இவருக்கு பொருத்தமான ஜோடியாக  18 வயது இளம் பெண்ணை  தேடினார் களஞ்சியம். எத்தனையோ பேர் வந்தார்கள். அத்தனை பேரையும்  சுட்டுவிரலில் தள்ளிவிட்ட களஞ்சியம், 'தமிழ் பொண்ணு சாயல் இருந்தா நல்லா இருக்குமே" என்று தனது விருப்பத்தை அழுத்தமாக சொன்னார். அதன் பிறகும்  நிறைய பெண்களை வரவழைத்து மேக்கப் டெஸ்ட், ஆடியேச‌ன் என சல்லடை போட்டு அலசினார்கள். அப்போது சிக்கிய மின்மினி தான் திரிபுர சுந்தரி.

பாரதிராஜா தனது படங்களுக்கு கிராமத்து குயில்களை தேடும்போது எல்லாம், அவருக்கு துணையாக இருந்தவர் அவரது ஆஸ்தான போட்டோகிராபர் ஒளிப்பதிவாளர் கே.வி. மணி. பாரதிராஜாவிடம் இருந்தவர் என்பதால், களஞ்சியம் தமது படத்தின் நாயகி தேர்வுகளிலும் கே.வி.மணியை பக்கத்தில் வைத்துக் கொண்டார். கே.வி.மணிதான் 'சத்தமின்றி முத்தமிடு படத்தின் நாயகி தேர்வில் திரிபுர சுந்தரியை களஞ்சியத்திற்கு க்ளிக் செய்து கொடுத்தவர்.'இந்தப் பெண்ணுக்குள் ஒரு சோகம் இருக்கிறது. இந்த மாதிரி ஒரு பெண்ணைத் தான் பாரதிராஜா ரொம்ப காலமா தேடிக்கிட்டு இருக்காரு. இவ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வருவா. இவள மிஸ் பண்ணாதீங்க சார்" என்று அஞ்சலிக்கு இன்ட்ரோ  கொடுத்தவர், 'இவளுக்கு சின்னதா ஒரு குறையும் இருக்கு.. லேசா மாறுகண்ணு. கேமிரா ஆங்கிள் மூலமா அதை சரி பண்ணிக்கலாம் " என்றும் சொன்னார்.

அவர் இப்படிச் சொன்னதால், தான் ஏற்கெனவே செலக்ட் செய்து வைத்திருந்த பெண்ணை ரிஜக்ட் சொல்லிவிட்டு. திரிபுர சுந்தரியை  'சத்தமின்றி முத்தமிடு' படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார் களஞ்சியம். அரை கிலோ மீட்டருக்கு பெயர் வைத்திருந்தால் சினிமாவில் ஜெயிக்க முடியாதே! அதனால், பால திரிபுர சுந்தரியை சுருக்கி, திரிபுரா அல்லது சுந்தரி என பெயரை மாற்றிவிடலாம் என படக்குழு தீர்மானித்தது. இதுபற்றி வளர்ப்புத்தாய் என்று சொல்லப்படும் பாரதி தேவியிடமும் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், ரெண்டு பெயர்களையுமே களஞ்சியம் ரசிக்கவில்லை. 'ஆங்கிலத்தில் முதல் எழுத்தான 'ஏ" யில் பெயரின் முதல் எழுத்து இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்" என்று சொன்னார் களஞ்சியம். அப்படி பிறந்தவர் தான் அஞ்சலி.

பெயர் மாற்றம் திரிபுர சுந்தரிக்கும் பிடித்திருந்தது. உற்சாகமாய் படத்தில் நடித்தார். களஞ்சியத்திற்கு பிடித்த கதாநாயகியாக கலக்கினார். ஆனாலும் , சில சிக்கல்கள் வந்தன. 'சத்தமின்றி முத்தமிடு" படத்திற்காக அஞ்சலி பட்ட கஷ்டங்கள் என்ன... அப்படி கஷ்டப்பட்டும் அந்தப் படம் ஏன் வெளிவரவில்லை?   


த்தாரில் இருக்கும் தனது அம்மாவிடம் அஞ்சலி போனில் பேசினார். அதனால், அவர் பத்திரமாக இருப்பதாக சொல்லி புகாரை வாபஸ் வாங்க முயற்சித்தார் அஞ்சலியின் அண்ணன் ரவிசங்கர். அஞ்சலியை ஆஜர்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார் அவரது சித்தி பாரதி தேவி. ''குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறேன். இன்னும் இரண்டு நாளில் துணிச்சலுடன் வெளியில் வருவேன்" என்று போனில் பேசி இருக்கிறார் அஞ்சலி. மணிக்கு ஒரு தரம் அலாரம் அடித்துக் கொண்டே இருக்கிறது அஞ்சலியை பற்றிய செய்திகள்.
இனி அஞ்சலியின் மறுபக்கம் ...


'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் நாயகியாக அஞ்சலியை தேர்வு செய்தவுடன், படத்திற்கான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் கொடுத்து நடித்துக் காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அஞ்சலியின் முதல் நடிப்பு குறித்து கேட்டதற்கு "தொடக்கத்தில் அந்தப் பொண்ணுக்கு நடிக்கவே தெரியலைன்னு தான் சொல்வேன். ஒரு நடிகைக்கான  நளினத்தோடு நடக்கக் கூட தெரியவில்லை. அதைக் கூட நாங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டி இருந்தது. அவரது நடை, பாவணைகள் எல்லாமே வித்தியாசமாக‌ இருந்தது. சுருக்கமா சொல்லணும்னா, குக்கிராமத்துலருந்து வந்ததால கனவு தொழிற்சா லையின் அங்க அசைவுகள் எதுவுமே தெரியாமல் தான் இருந்தார் அஞ்சலி" என்கிறார்  இயக்குனர் களஞ்சியம்.

இத்தனை குறைகள் இருந்தாலும் அஞ்சலியை ஒதுக்கிவிட மனமில்லாத களஞ்சியம், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் இணை இயக்குனர் பரத்திடம் கதாநாயகன் மயூருக்கும், அஞ்சலிக்கும் நடிப்பை கற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஒப்ப டைத்தார். நடிப்பு வராத போதும் அஞ்சலி மீது அவர் காட்டிய கனிவிற்கு காரணமே அஞ்சலி முகத்தில்  நிரந்தரமாக குடியேறி இருந்த ஒரு சோகம்.


 இருவரும் தினமும் அஞ்சலிக்கு நடிப்பு பயிற்சி தந்தார்கள். காலை 10 முதல் மதியம் 1 மணிவரை டிரெயினிங் கொடுத் துக் கொடுத்து அஞ்சலியை செதுக்கினார்கள். வாரம் ஒரு காட்சியை நடிக்க வைத்து, அதை களஞ்சியத்திற்கு போட்டுக் காட்டினார் இணை இயக்குனர் பரத்.களஞ்சியத்தை மறந்தாலும் ஒளிப்பதிவாளர் கே.வி.மணியையும் இணை இயக் குனர் பரத்தையும் அஞ்சலியால் மறக்கவே முடியாது. இவர்கள் தானே அஞ்சலியை அரிதார மேடை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டவர்கள்.


ஆறு மாத காலம் நடிப்பு பயிற்சி கொடுத்த  பிறகும் கூட அஞ்சலியை கேமரா முன்பாக நிற்க வைக்க தயங்கிய‌ படக் குழு, அவரது நடிப்பில் ஒரு டெலிஃபிலிம் ஒன்றை உருவாக்கியது. அந்த ஒருமணி நேர படம் தான் அஞ்சலிக்கு முதல் படம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரின் தோற்ற சரித்திரத்தை  டெலி ஃபிலிமாக 'ஆதி அருணாச்சலம்' என்ற பெயரில் களஞ்சியத்தின் நண்பர் எல்.சீனிவாசன் உருவாக்கினார். அதில் திலோத்தமை பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை அஞ்சலிக்கு தந்தார்கள்.


 யாரும் எதிர்பாராத விதத்தில், திலோத்தமை பாத்திரத்தில் நேர்த்தியாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இதற்கு பிறகு தான், 'சத்தமின்றி முத்தமிடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஓப்பனிங் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், ஃபினிஷிங் சரியில்லாமல் போனது. அமர்க்களமாய் முத்தமிட கிளம்பி யவர்கள் நிதிப்பற்றாக்குறையால் பாதி வழியில் படுத்துக் கொண்டார்கள். வேறு சில நெருக்கடிகளும் தன்னைச் சுழற்றி அடித்ததால் களஞ்சியத்தால் சத்தமினிறி முத்தமிட முடியவில்லை. பாதி முடிந்த நிலையில் படம் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டது.


ஆனாலும், அஞ்சலிக்கு சினிமாவில் நடித்து தனது குடும்பத்தின் பொருளாதார சூழலை சமாளிக்க வேண்டிய கட் டாயம். அதனால், களஞ்சியத்திற்காக காத்திருக்காமல், சித்தியும் மகளும் நேரடியாகவே களத்தில் இறங்கி சினிமா வாய்ப்புகளை தேட ஆரம்பித்தார்கள். சினிமா வாய்ப்புகள் மட்டுமில்லாமல், மாடலிங் துறை புகைப்படக்காரர்களை வைத்து, கையில் மடியில் இருந்ததை எல்லாம் செலவு செய்து போட்டோ ஷூட் எல்லாம் எடுத்தார்கள். திரைத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் சந்திக்க வேண்டிய இன்னல்களும் இடைஞ்சல்களும் அஞ்சலிக் காகவும் சேர் போட்டு காத்திருந்தது.  அத்தனையும் தாண்டி கலர்ஃபுல் கதாநாயகியாகி ஜொலித்தார் அஞ்சலி.




அது  எப்படி சாத்தியமானது?


- தொடரும் 



அடுத்து ஒரு ஃபிளாஸ் நியூஸ் 

காணாமல் போன நடிகை அஞ்சலியை 15 நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நடிகை அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட கோரி அவரது சித்தி  எஸ்.பாரதிதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில், "அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.

அதிலிருந்து எனது மகளாக அஞ்சலியை கவனித்து வருகிறேன். இந்த நிலையில் சினிமா இயக்குனர் களஞ்சியத்திடம் அஞ்சலியை அறிமுகம் செய்துவைத்தேன். "சத்தமின்றி முத்தமிடு" என்ற படம் அஞ்சலியின் முதல் சினிமாவாகும். இதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அஞ்சலி நடித்து வந்தார். தற்போது "பலுப்பு" என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் மார்ச் 31ஆம் தேதி எனது கணவருடன் ஹைதராபாத் சென்றிருந்தார்.

அங்கு தாஸ்பல்லா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்து தங்கி இருந்தனர். கடந்த 8ஆம் தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

நான் வளசரவாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். சென்னை போலீஸ் கமிஷனரிடமும் 10ஆம் தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார்.


இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை அஞ்சலியை 15 நாளில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, நடிகை அஞ்சலி, ஹைதாபாத்தில் உள்ள காவல்நிலையத்தில் இன்று ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி அஞ்சலி ஆஜராகும் பட்சத்தில் அவரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

 நன்றி - விகடன்

சாந்தி நொறுக்குத்தீனியகம்

1. பொண்ணுங்களுக்கு வாய் நீளம் கற மேட்டர் 2 விதத்தில் தெரியும்.1,புருஷனை எதிர்த்துப்பேசும்போது 2 லிப் கிஸ் அடிக்கும்போது



--------------------------


2. மரவள்ளிக்கிழங்குடன் மதிய உணவு சாப்பிடறாங்க.சாப்பாட்ல கூட பொண்ணு பேரு # வள்ளி்


----------------------------


3. பூவேலி= A walk in the clouds. உல்டா படத்துல கார்த்திக் பதிலா லாஜிக் படி அஜித் தான் நடிச்சிருக்கனும் # நீ நடந்தால் நடை அழகு



----------------------------


4. சன்டே ன்னா 2 .சன் நைட்னா எவ்ளவ்?


-----------------------


5. என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்க ் உன் 2 கண்களும் என் மேல் பட்டாலே போதும். # ஹி ஹி்



------------------------


6. உன் புரப்போசலுக்கு நர்ஸ் ஓக்கே சொல்லிட்டா அதுக்கு நர்ஸரி ன்னு சொல்லக்கூடாது


---------------------------------


7. காதலிக்கப்படுவதை விட ,காதலி நம் மேல் படுவதை விட சுகமானது பஸ்சில் அறிமுகம் இல்லா பிகர் மேல் படுவது


----------------------------


8. எப்போதும் நாலு ஜிகிடிகளுடன் அலைபவனைப் பார்த்து தனியாக அலையும் நாம் பொறாமைப்படாமல் இருக்க முடிவதில்லை



-------------------------------


9. இரு ஜாக்கெட்டுகள் சந்தித்துக்கொண்டால் - ஜாக் கெட் டுகெதர்



------------------------


20. முத்தம் தரத்தயங்கும் காதலியை தண்ணீரே கிடைக்காத வரப்பட்டிக்காட்டுக்கு மத்தியான நேரத்தில் கூட்டிச்செல்லவும்.# தேடி வந்து...



-------------------------


21. கீழ விழுந்த பொருட்களை குனிந்து எடுக்கையில் ஆண்கள் தங்கள் உடையை அட்ஜஸ் செய்யத்தேவை இல்லை # நீதி - ஹி ஹி




-------------------------------


22. நடிகர் சங்கம் ஏப்ரல் 2ம் தேதி உண்ணாவிரதம்# நடிகைகள் எல்லாரும் வெறும் வயித்தோட இருப்பாங்க ( எப்பவும் போல )




---------------------------------


23. சம்சாரம் அன்னன்னைக்கு நம்மை படுத்துற்தை அன்னன்னைக்கு மறந்துடனும் # ஒரு அபாக்யவானின் டைரியிலிருந்து ;-)



------------------------------


24. ரத்ன சுருக்கமா பேசுனா யூத்.ரத்னாவே சுருக்கமா இருந்தா ஏஜ்டு்



----------------------------


25. தஞ்சை ரயில் நிலையகம் அருகே ஒரு ஸ்னேக்ஸ் பார் பெயர் = சாந்தி நொறுக்குத்தீனியகம் # குட் ஐடியா



----------------------------




Thursday, April 11, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்(விகடன் விமர்சனக் குழு)

கில்மா கிளாமர், பிலோ தி பெல்ட் ஹ்யூமர்... இரண்டும் கலந்து 'டீன் மூவி’யாக ஹிட்டான இந்தி 'டெல்லி பெல்லி’யை தமிழ் 'சேட்டை’ ஆக்கியிருக்கிறார்கள்.

வில்லன் கடத்தும் வைரம் இடம் மாறிக் கைமாறுவதால் உண்டாகும் குழப்ப மேளாதான் படம். படத்தின் கிளாமருக்கு ஹன்சிகா - அஞ்சலி... ஹ்யூமருக்கு சந்தானம் இருக்கும் தைரியத்தில் கொஞ்சம் அசந்துவிட்டார்போல இயக்குநர் கண்ணன். ஆனால், இருதரப்புமே அவரைக் கை விட்டுவிட்டது.

துடிப்பும் வெடிப்பும் நிரம்பிய பரபர பத்திரிகையாளனாக இருக்க வேண்டிய ஆர்யா, 'இது யார்யா?’ என்று கேட்கவைக்கிறார். டிஸ்கொதே ஹால் பவுன்ஸர் போல ஆர்ம்ஸ் காட்டிக்கொண்டு, உர்ர்ர்என்று முறைத்துக்கொண்டே இருக்கிறார். அட... ரொமான்ஸின்போதும் அதே முறைப்புதானா?  
படத்தின் எனர்ஜி மீட்டர் சந்தானம்தான். 

ஆனால், 'கக்கா காமெடி’ சமயம் அவரே அந்த ஃபியூஸைப் பிடுங்கிவிடுகிறார். 'பாதாள சாக்கடைக்கு ஜன்னல், கதவு வெச்சா மாதிரி ஒரு வீடு’, 'நக்மாவை கரெக்ட் பண்ண ரஜினி வைரத்தைத் திருப்பிக் கொடுப்பார்’ போன்ற மிகச் சில ஒன் லைனர்களில் கலகலக்கவைக்கிறது சந்தானத்தின் காமெடி வசனம். 

ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார் பிரேம்ஜி. பர்தா அணிந்துகொண்டு முகத்தைக் காட்டாமல் தண்ணீர் குடிப்பது ஒரு கிச்சு கிச்சு சாம்பிள். ஹன்சிகா... வழக்கம்போல பப்ளி பப்பாளி. எந்த ஸ்கோப்பும் இல்லாமல் அஞ்சலி. அவரும் அலட்டிக்கொள்ளவே இல்லை!


புரட்சி ஜர்னலிஸ்ட் ஆக ஆசைப்படும் ஆர்யா, அத்தனை கோக்குமாக்குத் தில்லாலங்கடிகளில் ஈடு படுகிறாராம். ஹன்சிகா அப்பா மேல் இருக்கும் கோபம் காரணமாக, ஹன்சிகாவுடனான காதலையே விட்டுக்கொடுக்கிறாராம் ஆர்யா. 

ஒரு சந்திப்பு, சில பார்வைகளிலேயே ஆர்யாவை அஞ்சலி காதலிக்கத் துவங்கிவிடுகிறாராம்... என்னப்பா நடக்குது நாட்ல?  
தமிழ்ப் படம் என்பதால் தவிர்க்காமல் இடம் பிடித்திருக்கும் பாடல்கள், டெட் ஸ்லோ திரைக்கதையை இன்னும் பின்னால் இழுக்கிறது. அதிலும் வில்லனின் சீரியஸ் விசாரணையின்போது வரும் 'அகலாதே’ ட்ரீம் சாங்.... சேட்டைல்ல உங்களுக்கு!

நியூலைன் சினிமாவாக இளசுகளை ஈர்த்த ஒரிஜினலின் 'சேட்டை’களை நீக்கிய பிறகு, ஜெய்சங்கர் காலத்து 'வைரக் கடத்தல்’ கதைக்கு இத்தனை பில்ட்அப்பா?

அட போங்கப்பா!

நன்றி - ஆனந்த விகடன்

கோச்சடையான் - இயக்குநர் சௌந்தர்யாவின் பேட்டி

'கோச்சடையான்' - இந்த ஒற்றை வார்த்தையைத் தவிர, ரஜினியின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் அதிகாரபூர்வமாக இதுவரை வெளிவரவில்லை. இதோ... ஸ்கூப் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார் 'கோச்சடையான்’ இயக்குநர் சௌந்தர்யா!

''இது 100 பெர்சன்ட் ரஜினி ஃபார்முலா கமர்ஷியல் படம். அப்பாவைவெச்சு ரெண்டு சூப்பர் ஹிட்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் அங்கிள்தான் இந்தப் படத்துக்கு ஸ்க்ரிப்ட். ரஹ்மான் சாரின் மியூஸிக்ல ஆறு பாடல்கள். தீபிகா ஹீரோயின்னு உங்களுக்குத் தெரியும். ஆனா, படத்தில் இன்னொரு மெயின் ஹீரோயின்... ஷோபனா!''

''என்ன சொல்றீங்க... அப்போ டபுள் ஆக்ட் ரஜினியா?''

''ஆஹா... நானே சஸ்பென்ஸ் உடைச்சுட் டேனே! யெஸ்... படத்தில் சீனியர் ரஜினிதான் கோச்சடையான். அவர் ஒரு  தளபதி. நாட்டின் மன்னன் ரஜினியின் பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த நண்பனுக்காக உலகத்தையே ஜெயிச்சு அவர் காலடியில் கொண்டுவந்து கொட்டணும்னு துடிக்கிற வீரர். அதே சமயம், 'கோச்சடையான்’... ஒரு பரதக் கலைஞனும்கூட. போர்க்களத்தில் ஆக்ரோஷமா சண்டை போடும் கோச்சடையான், அடுத்த காட்சியிலேயே அசத்தலா அபிநயம் பிடிச்சு ஆடுவார். அப்படியரு கேரக்டருக்கு யாரை ஜோடியா ஃபிக்ஸ் பண்ணலாம்னு யோசிச்சா, ஷோபனா மேடம் தவிர, யாரும் என் மனசுல தோணவே இல்லை!''


''அப்ப கோச்சடையான் மகனுக்குப் படத்தில் என்ன வேலை?''

''மொத்தக் கதையையும் கேப்பீங்க போல. சரி... இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் தகவலும் சொல்லிடுறேன்... கோச்சடையான் பையன் கேரக்டர்தான் 'ராணா’. ஒரு தலைவனுக்குத் தேவையான அத்தனை தகுதிகளும் திறமைகளும் கோச்சடையானிடம் இருக்கும். என்ன சொல்றோமோ அதன்படி வாழணும்கிற கொள்கையோட இருப்பார் கோச்சடையான். அவர் பையன் ராணா, அவரைவிட நூறு மடங்கு வேகமானவன். ஆனா, இளங்கன்று பயமறியாதுனு சொல்வாங்களே... அப்படிப் பரபரனு இருப்பார் ராணா.  தன் ஜூனியரின் ஆற்றலை விவேகமான பாதையில் திருப்புவார் கோச்சடை யான். அதனால் கோச்சடையான்தான் படத்தின் ஹீரோ. ஒரு ரஜினி ரசிகையா சொல்றேன்... அப்பா இதுவரை பண்ணினதிலேயே கோச்சடை யான்தான் பெஸ்ட் கேரக்டரா இருக்கும். அவர் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை கமர்ஷியல் கலாட்டாக்களும் படத்தில் இருக்கு. க்ளைமாக்ஸ்ல ஒரு பஞ்ச் அடிச்சிட்டு, செம கெத்தா ஒரு நடை நடப்பார் பாருங்க... ஸ்பாட்ல நான் 'கட்’ சொல்ல மறந்து பார்த்துட்டே இருக்க, மொத்த யூனிட்டும் கிளாப்ஸ் அள்ளிட்டோம். இதெல் லாம் போக, அப்பா படத்தில் ஒரு பாட்டும் பாடியிருக்கார். இப்போதைக்கு அவ்வளவுதான்... இதுக்கு மேல எதுவும் கேக்காதீங்க... ப்ளீஸ்!''

''ஒரு ரசிகையா ரஜினியைக் கொண்டாடியிருப்பீங்க. ஒரு இயக்குநரா ரஜினியின் ப்ளஸ், மைனஸ் என்ன?''  

(யோசிக்கிறார்) ''மைனஸ்னு சொல்ற அளவுக்கு எனக்கு எதுவும் தோணலை. மத்தபடி... எல்லாமே ப்ளஸ்தான். அதிலும் முக்கியமா, அவரோட டெடிகேஷன்! பட வேலைகள் ஆரம் பிச்சதுல இருந்து நாங்க ரெண்டு பேரும் எப்போ பேசினாலும் அது 'கோச்சடையான்’ சப்ஜெக்ட்டாதான் இருக்கும். பொறுத்துப் பொறுத்துப் பார்த் துட்டு, தாங்க முடியாம ஒருநாள், 'டைனிங் டேபிள்ல இனி சினிமா பத்திப் பேசாதீங்க’னு அம்மா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. அப்பா... சிம்ப்ளி சூப்பர்ப் ஆக்டர்!''


''ஒரு இயக்குநரா அப்பாகிட்ட பாராட்டு வாங்கினீங்களா?''

''நல்லவேளை இந்தக் கேள்வி கேட்டீங்க!
ஒரு சீன்ல அப்பா கேரக்டரும் தீபிகா கேரக்டரும் உணர்ச்சிபூர்வமாப் பேசிக்கணும். வசனங்கள் கொஞ்சம் தூய தமிழ்ல இருக்கும். அதனால், தீபிகாவுக்கு சிச்சுவே ஷனை விளக்கிட்டு நானே 'இந்தந்த ரியாக்ஷன் இப்படி எல்லாம் வேணும்’னு சின்னதா நடிச்சுக் காமிச்சேன். அப்போ அப்பா என்னைக் கவனிச்சுருக்கார்போல! ராத்திரி வீட்டுக்கு வந்ததும், 'நடிச்செல்லாம் காமிக்கிறீங்க கண்ணா... நல்லா நடிக்கிறீங்க... சூப்பர்... சூப்பர்’னு சொல்லிட்டுப் போயிட்டார். தலைவரே நம்மளைப் பாராட்டிட்டாரேனு எனக்கு சர்ப்ரைஸ் ஷாக். அன்னிக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே பிடிக்கலை!''

 ''ஆல் இஸ் வெல். ஆனா, அனிமேஷன் படங்கள் ஒரு லுக்குக்கு கார்ட்டூன் மாதிரி இருக்கும்னு கமென்ட்ஸ் கிளம்புமே?''

'' 'அவதார்’ என்ன கார்ட்டூன் படமா? நாமளே 'அவதார்’ பண்ற அளவுக்கு டெக்னாலஜி இங்கேயே வந்திருச்சு. பல காலமா நாம தயங்கிட்டு இருக்கிற 'பொன்னியின் செல்வன்’கூட இந்த டெக்னாலஜியில் ஈஸியாப் பண்ண முடியும். 'சுல்தான் த வாரியர்’ வேலைகள் ஆரம்பிச்சப்போ, இந்த அளவுக்கு டெக்னாலஜி இல்லை. அப்ப அந்தப் படம் பண்ணியிருந்தா, கார்ட்டூன் மாதிரிதான் இருந்திருக்கும். அதான் அந்த புராஜெக்ட்டையே கேன்சல் பண்ணினோம். ஆனா, இப்போ 'கோச்சடையான்’ல எந்த இடத் திலும் உங்களுக்கு கார்ட்டூன் ஃபீல் வராது. ரொம்ப சின்ன வயசுல அப்பா எனக்குச் சொன்ன அட்வைஸ் இது... 'உன் பாதையை நீயே உருவாக்கு. மத்தவங்கதான் அதுல வரணுமே தவிர, நீ அடுத்தவங்க பாதையில போகக் கூடாது’. என் வழி... அப்பா சொல்லித் தந்த அதே தனி வழி!''

நன்றி - ஆனந்த விகடன்

எந்த பொண்டாட்டியும் முதல் இரவு அறையை விட்டு வெளிநடப்பு பண்ண மாட்டா, ஏன்?

1. மிகைப்படுத்தப்பட்ட அன்பை விட பெண்கள் அதிகம் விரும்புவது நகைப்படுத்தப்பட்ட அன்பையே # பவுன் விலை 26,000 ரூபா



---------------------------


2.   பசு மாட்டிடம் இருந்து பால் கறப்பது எப்படி என சொல்லித்தரும் விவசாயிக்கான படிப்புதான் பாலியல் கல்வியா?



--------------------------


3.  வாழ்க்கை பூரா மனைவி பண்ற கொடுமைகளை சகிச்சுக்கிட்டு குழந்தையின் நலன் கருதி அடக்கி வாசிக்கும் அனைத்து கணவர்களும் வாழ்நாள் சாதனையாளர்களே


-------------------------


4. இந்து சாமி , முஸ்லீம் சாமி , கிறிஸ்டியன் சாமி என எந்த சாமியை நீ நம்பினாலும் சுப்ரமணியம் சாமியை மட்டும் நம்பி விடாதே !




---------------------------------


5. சிட்டு குருவி , இன்று உலகமே உன்னை கொண்டாடும் நாள் .உன் நினைவாக சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுவார்கள் தமிழர்கள்



------------------


6. பா ஜ க .அதிமுக இரு கட்சிக்கும் இது நல்ல வாய்ப்பு.காங்கிரசை எதிர்க்க.ஆனால் அவர்கள் அதை உணர்ந்ததாகத்தெரியவில்லை.




------------------------


7. பரதேசியில் ஒரே ஹீரோ - ஒட்டுப்பொறுக்கி.இந்திய தேசத்தில் ஏகப்பட்ட வில்லன்கள்.எல்லோரும் ஓட்டுப்பொறுக்கிகள்





----------------------------------


8. தி மு க வின் அடுத்த இலக்கு கட்சிக்கு மாணவர் அணி அமைப்பதாக இருக்கும் # அரண்டுட்டாங்க





----------------------------



9. தமிழ் இனத்தலைவர் மு க சுயநலவாதி என சொல்வதால் நான் அதிமுக அல்ல. ஜெ ஒரு எதேச்சாதிகாரி என்று சொல்வதால் நான் தி மு க அல்ல




-------------------------


10. அழகிரி - அப்பா. நாம எல்லாரும் களி சாப்டற மாதிரி கனா கண்டேன்.பலிச்சிடுமோ?



---------------------------------


11. த இ தலைவர் -மேடம்.என் நாடகம் எப்டி? சோனியா - சி பி ஐ ரெய்டு வரப்போகுது.முடிஞ்ச வரை சொத்தைக்காப்பாத்திக்கப்பாருங்க





-----------------------

12. வாழ்க்கை ஒரு வட்டம்.இன்னைக்கு விலகுனவங்க நாளைக்கு சேர்ந்துக்குவாங்க.



-----------------------


13. திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி# எப்டிப்பார்த்தாலும் தானைத்தலைவரால தமிழ்நாட்டுக்கு நட்டம் தான் வரும் போல




--------------------------


14. அய்யோ ராமா ! எல்லாம் டிராமா!



-----------------------------


15.  உயிருனும் மேலான உடன் பிறப்பே!ஆதாயம் இல்லாம நான் ஆத்தோட போக மாட்டேன்.பொறுத்திரு.எல்லாம் ஒரு ராஜ தந்திரமே!




---------------------------


16. தமிழ் இனத்தலைவர் திடீர் னு தியாகி ஆகிட்டாரே? நிஜமாவே திருந்திட்டாரோ?





------------------------


17. ஏ ஆர் ஆர் ஏன் உண்ணா விரதம் இருக்கலைன்னு ஒரு கூட்டம் கிளம்பும் பாருங்க




----------------------------------


18. தலைவா விஜய் பஞ்ச் - நானே பாஸ்பரஸ் தெளிச்ச ஒரு கற்பூரம் .பத்த வைக்க ்.தீக்குச்சி எதுக்கு?





-------------------------


19. ஆதரவு தொடர கருணாநிதி புது நிபந்தனை # பந்திலயே உக்கார வேணாம்னுட்டாங்களாம்.இலைல ஓட்டைன்னானாம்



---------------------------


20. நடிகை -(money) மணியோசை கேட்டு எழுந்தேன்.நெஞ்சில் ஆசை கோடி (ரூபா சம்பளம்)சுமந்தேன்





-------------------------


21.  பாலா வின் பரதேசியில் நடித்ததால் நாயகி வேதிகா உடல் இளைத்து பாதி கா ஆகிட்டாராம்



--------------------------------


22. மேனேஜர் ன் மீட்டிங் பேச்சு டச்சிங்கா இருந்தது.கடைசி வரை ஸ்டெனோ மேல் வெச்ச கையை எடுக்கவே இல்ல




--------------------------------



23. அடுத்தவர் கருத்தை முன் கூட்டியே கணிப்பதில் விற்றுத்தீர்கின்றன சர்வே எடுத்துத்தள்ளும் பத்திரிக்கைகள்.




---------------------------


24. கோபக்காரியா இருந்தாலும் எந்த பொண்டாட்டியும் முதல் இரவு அறையை விட்டு வெளிநடப்பு பண்ண மாட்டா




---------------------------


25. அரசியல் கணக்குல புலி ன்னு பேர் எடுத்தவங்க ஊழல் பெருச்சாளிகளா இருக்காங்க.





----------------------

Wednesday, April 10, 2013

தமிழருவி மணியனுக்கு டாக்டர் ராமதாஸின் பதில்

கைசால் நண்பர் தமிழருவிமணியன் அவர்களுக்கு, 

வணக்கம். சென்னையில் கடந்த 02.03.2013 அன்று சர்வோதய அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய மது ஒழிப்பு மாநாட்டில், நாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தோம். மதுவிலக்கு என்ற கோரிக்​கையை வலியுறுத்திப் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய போராட்​டங்களை நடத்தியிருக்கிறது என்பது குறித்த எனது நிலைப்பாட்டை உங்களி​டம் விளக்கினேன். நீங்களும் அந்த முயற்சி​களைப் பாராட்டியதுடன் தங்களது உரையிலும் அதைப்பற்றி குறிப்பிட்​டீர்கள். அந்த வகையில் மதுவிலக்கு கொள்கையில் நமக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதே நேரத்தில், பிப்ரவரி 27-ம் தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் 'காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்’ என்ற தலைப்பில் தங்களது தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்​தின் சாதி, மத நல்லிணக்க மாநாடு குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் ''சாதிகள் சாகாத வரை, தமிழ்ச் சாதி மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியைச் சாகடியுங்கள். காதல் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்​தாலும் தூக்கி எறியுங்கள். உடற்கூறு மருத்துவரான ராமதாஸ் எப்போது காதலை ஆய்வுசெய்யும் மருத்துவராக மாறினார் எனத் தெரியவில்லை. நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்றெல்லாம் ஆய்வறிக்கை வாசிக்கிறார். நான் ஊருக்கு உபதேசிப்பவன் அல்ல. என் வீட்டில் எனது மகன் சாதி கலப்புத் திருமணம் செய்தவர். என் மகள் இன்னும் ஒரு படி மேலே போய் மதக் கலப்புத் திருமணம்செய்தவர்'' என்றெல்லாம் பேசியிருக்கிறீர்கள். இந்த விஷயத்​தில் எங்கள் தரப்பு நியாயத்தை உங்களுக்கு விளக்கி கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
நாடகக் காதல் திருமணம் தொடர்​பான எங்களின் நிலைப்பாட்டை, என்னை எதிர்ப்பதற்கான வாய்ப்​பாக சிலர் விமர்சிப்பதைப் புரிந்து​கொள்ள முடிகிறது. ஆனால், நீங்களும் எங்கள் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்​ளாததுதான் எங்களுக்கு வியப்பளிக்கிறது. நீங்கள் பேசியதைப் போல காதலை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்திலும், அதன்பின் மாவட்ட அளவில் நடத்தப்​பட்ட கூட்டங்களிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல் காதல், நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்துக்கு முன்னுரிமை தந்து, 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய காதல்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பல காதல் - கலப்புத் திருமணங்களை நானே முன்னின்று நடத்திவைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
படித்து முடித்து வேலைக்குச் சென்று பெண்​ணுக்கு 21 வயது முடிவடைந்த பின்னர் நடக்கும் காதல் திருமணங்களை அனுமதிக்கலாம் என்ற எங்களின் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பி​னரும் வரவேற்கின்றனர். எங்களுக்கு முன்பே 2011-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இதே கருத்து தெரிவிக்​கப்பட்டிருக்கிறது. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம்செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு சொன்ன கருத்தை நான் நினைவு​படுத்துகிறேன். 'மைனருக்கு 21 வயது நிறை​வடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் - இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்தனர். இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
உங்கள் குழந்தைகள் சாதி கலப்புக் காதல் திருமணம் மற்றும் மதக் கலப்புக் காதல் திருமணம் செய்துகொண்டதைப் பெருமை​யுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி... நீங்கள் கற்றறிந்தவர். உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளும் நன்றாகக் கற்றறிந்து இருப்பார்கள். அவர்களைப் போலவே அவர்கள் தேர்வு செய்துகொண்ட துணைகளும் கற்றறிந்து வாழ்க்கையை வெற்றிகரமாக வாழத் தகுதியான நிலையில் இருப்பவர்கள். இத்தகைய திருமணங்களை நீங்களே எதிர்த்திருந்தாலும்கூட நானே செய்துவைத்திருப்பேன். ஆனால், இப்போது நடக்கும் காதல் நாடகத் திருமணங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
'ஒரு லட்சம் சாதி இந்துப் பெண்களின் வயிற்றி​லாவது தலித்துகளின் கரு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால்தான் சாதி ஒழியும்’ என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா? 14 முதல் 18 வயது வரையுள்ள (டீன் ஏஜ்) அப்பாவிப் பெண்களுக்கு காதல் வலை (காம வலை) விரிப்பதையே சிலர் ஒரு தொழிலாக வைத்​திருப்பதும், அவர்களால் ஏராளமான பெண்கள் வாழ்க்கை இழந்ததும் உங்களுக்குத் தெரியுமா? வாழ்க்கை இழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இளம்பெண்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான பட்டியல்களை நீங்கள் கோரும்பட்சத்தில், அனுப்பிவைக்கத் தயாராக இருக்கிறேன்.
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பொரு​ளாதார அடிப்படையில் வசதியாக இருக்கும் குடும்பத்துப் பெண்களுக்கு வலைவிரிப்பது, அவர்கள் காதல் வலையில் விழுந்த பின் கடத்திச் சென்று பெண்ணை ஒப்படைக்க லட்சம், கோடிகளில் பேரம் பேசுவது, ஏழைப் பெண்களாக இருந்​தால் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில், வாழாவெட்டியாகப் பெண்ணை தாய் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவைப்பது போன்றவை திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடப்​பதை காதல் நாடகங்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இதைச் சொல்ல என்னைப் போன்ற மருத்துவர்களே கூடத் தேவை இல்லை. சாதாரண மனிதர்களே போதும். நீங்கள் சொல்வதைப் போல காதல் ஆய்வு மருத்துவர்தான் வேண்டும் என்று நான் கருதவில்லை. இத்தகைய சூழலில் நீங்கள் பெண்ணைப் பெற்றவராக இருந்தால், இதனால் சாதி ஒழிந்துவிடும் என்ற எண்ணத்தில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வீர்களா?

காதல் - கலப்புத் திருமணங்கள்தான் சாதியை ஒழிக்கும் ஆயுதங்கள் என்று கூறியிருக்கிறீர்கள். சாதிகள் ஒழிய வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைவரையும்விட அதிக அக்கறை கொண்​டவன் நான். எனது கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள் (உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளைக் கேட்கவில்லை. யதார்த்தத்தை உங்களுக்கு உணர்த்த​வேண்டும் என்பதற்காக நட்பின் அடிப்படையில்தான் இதைக் கேட்கிறேன்.)

1. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?

2. காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்​களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்?

3.உங்களது மகனும் மகளும் தங்களின் குழந்தைகளை எத்தகையவர்களாகப் பதிவு​செய்திருக்​கிறார்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்​களே காதல் - கலப்புத் திருமணங்களால் சமுதாயத்​தில் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை தெளிவுபடுத்தும். அதே நேரத்தில் காதல் நாடகத் திருமணங்கள் சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றன. திருக்குறளில் வலி(மை)யறிதல் அதிகாரத்தை நன்கு கற்றறிந்த நீங்கள், காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை அறிந்திருப்பீர்களேயானால், இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்க மாட்டீர்கள்.

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதில், யாருக்கும் நான் இரண்டாமவன் அல்ல. அனைத்து சமுதாய நல்லிணக்க மாநாடு, ஒரு தாய் மக்கள் மாநாடு ஆகியவற்றை நான் நடத்தினேன். இதற்கெல்லாம் மேலாக, 1998-ம் ஆண்டில் 14 மாவட்டங்களில் சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினேன். மாநாடுகளில் மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், காந்தியவாதிகள் ஆகியோரை இந்த மாநாடுகளில் பங்கேற்கச்செய்து சமய, சமுதாய நல்லிணக்கக் கருத்துகளைப் பரப்பச் செய்தேன். தமிழகத்திலேயே அம்பேத்கர் சிலை​களை அதிக அளவில் நான் திறந்து வைத்து இருப்பதையும் அரசியல் அறிந்தவர் என்ற வகையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இவற்றை நீங்கள் அறிந்திராவிட்டால், இவற்றையெல்லாம் அறிய இந்தக் கடிதம் உங்களுக்கு உதவும்.
மாற்றங்கள் ஏற்படுத்தும் மகத்தான எந்திரம் காலம்​தான் என்பதை நான் அறிவேன். காலப்போக்கில் உங்களின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டு யதார்த்தத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்புள்ள
மருத்துவர் ச.ராமதாஸ்

நன்றி - ஜூ.வி.