Sunday, April 07, 2013

பொர்க்கி

இனிய் காலை வணக்கம் நண்பர்களே....vikki
இனிய் காலை வணக்கம் நண்பர்களே....
1. ராகுலை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காது-ராமதேவ்# சுடிதார் அணிந்து ஓடிய சொர்க்கமே! உமக்கும் பிடிக்கலையா?




------------------


2. பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது: அன்னா ஹசாரே..# மேரேஜ் பண்ணிக்காமயே எத்தனை வருஷம்தான் சமாளிப்பது?




--------------------------


3.  ஒவ்வொரு குடிமகனும் பாரத மாதாவுக்கான கடனை திருப்பிச்செலுத்த வேண்டும் : மோடி # லோன் லியா பீல் பண்ண வெச்சுட்டாரே?




---------------------------------


4. கூட்டணி கட்சிகளை கையாள்வது எளிதல்ல : பிரதமர் # இனி இந்தியாவை கை ( காங்க்ரஸ் )ஆள்வதும் எளிதல்ல.



---------------------



5. லேடீஸ் ஒன்லி டீக்கடை காந்திபுரம்ல இருக்கா?



டீ மாஸ்டர் ஆம்பளை, பரவாயில்லையா?



-------------------------




Kadhalil vizhilunthavanuku vazhnal pooravum Savuthan 

♥ Q$A  ♥


6. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்



-----------------------


7.  டியர், நீங்க ஒரு பொர்க்கின்னு சொல்றாங்க்ளே? 


கண்ட நாய்ங்க சொல்றதை எல்லாம் நம்பாதே



--------------------------


8.  காலைல புருஷன் சமையல்ல பொண்டாட்டிக்கு உதவி செஞ்சா சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுவான்னு அர்த்தம்



--------------------------



9. ஆபீஸ் ல லேடி ஸ்டாப்ச் கிட்டே பைல் குடுக்கும் சாக்கில் தொட்டுத்தொட்டுப்ப்பேசும் சுல்தான் கள் அதிகம் ஆகிட்டாங்க




------------------------------


10. ஜட்ஜ் - லேடி ரிப்போர்ட்டர்க்கு கிஸ் குடுத்தியா ? 



கைதி - ஆமாங்க எஜமான்.முத்தச்சந்தாதாரர் 



-------------------------


Thambi Thappu Thappaa Purinjutaan. . .


11.  ஸ்டெனோ கிட்டே " சாப்ட்டாச்சா? இன்னைக்கு என்ன சமையல்? னு லெட்டர் குடுத்திருக்கே.ஏன்?



 சார்.நீங்கதானே பொண்ணுங்க கிட்டே பேசக்கூடாதுன்னீங்க?



-------------------------


12 டவுன் பஸ்ல டிரைவர் சீட்க்கு பின்னால இருக்கும் 4 வது சீட்ல ஜன்னல் ஓரம் உட்காந்தா முன்னால் ஸ்டேண்டிங்கில் நிற்கும் பிகர் முகங்கள் தெரியும்


-------------------------


13. புது ஜாப் எப்டி இருக்கு? வேலை ,இடம் ,கம்பெனி எல்லாம் செட் ஆகிடுச்சா ? 



ஹி ஹி இதுவரை எதுவும் செட் ஆகலை ;-) 


---------------------

14. டியர்.புரோட்டா பார்சல் வாங்கிட்டு வாங்கனு போன் பண்ணேன்.ரிப்ளை நோ.ஒய்? 



ஸாரி.புரோட்டா கால் எரர் 


-----------------------


15. திருவிழாக்கூட்டத்தை சாக்காக வைத்து அத்துமீறும் பக்த கேடிகளுக்கு இந்த பாட்டை டெடிகேட்- டேய் கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய்


---------------------



ROFL :D 

JOIN US ══► @[338506796180091:274:ஒ ! சட்டை மேலே எவ்ளோ  பட்டன்]
▬▬▬▬•http://osmeb.blogspot.in/ •▬▬▬▬


16. சுகமான வாழ்க்கைக்கு இந்திய நகரங்களில் சென்னை முதலிடம்" - # கோபாலபுரத்தையும் போயஸ் கார்டனையும் வெச்சு எல்லாத்தையும் எடை போடக்கூடாது



--------------------------


17. சேட்டை ஹன்சிகா மாதிரி காதலி எல்லாருக்கும் அமைஞ்சா இந்தியா சீனாவை மக்கள் தொகைல முந்திக்கும்




-------------------


18. தலைவா' ஒவ்வொரு காட்சியும் ஆர்.டி.எக்ஸ். போன்று அதிரும்:ஏ.எல். விஜய் # டூயட் சீன்லயுமா?



---------------------


19. பொண்ணுங்க கூந்தல் மாதிரி நம்ம தலையும் வாசமா இருக்க தலயணை மேல் பூ வெச்சு அது மேல தலை வெச்சு தூங்கனும்



------------------------


20. ஆபீஸ் ல ஒரு பிகரு 5 இஞ்ச் அகலத்துல கொலுசு போட்டுட்டு வந்திருக்கு.சலங்கையே 3 இஞ்ச் அகலம் தான் இருக்கும்



----------------------


My dad..my world


21 100 கோடி பேர்களுக்கும் அதிகாரம் தரவேண்டும்: ராகுல் காந்தி # அதி காரம் தந்தா அத்தனை பேருக்கும் அல்சர் வந்துடுமே?்


------------------------


22. பொண்ணு பார்க்கப்போகும்போது முடிஞ்சா பொண்ணோட பாதத்தைப்பாருங்க.உள்ளங்காலை வெச்சே சமையல் வேலை தெரியுமாங்கறது தெரிஞ்சிடும்


------------------------


23. நல்லா நோட் பண்ணிப்பாருங்க.மேரேஜ்க்குப்பிறகு புருஷன் இளைச்சுட்டே போவான்.பொண்டாட்டி குண்டாகிட்டே போவா (அப்பப்ப உண்டாகிட்டும்)



---------------------------


24. மிஸ் தீபா ! தீயா வேலை செய்யனும்.புரிஞ்சுதா ?



 எஸ் சார்.இது பேங்க்கா? பயர் சர்வீசா ? # டேமேஜர் பல்பு வாங்கிய தருணங்கள் 



-------------------------


25. பொண்ணு பார்க்கும் படலத்துல பொண்ணு கூட தனியா பேசனும்னு கூட்டிட்டுப்போறவன் அப்டி என்னத்தைப்பேசிடப்போறாங்க?



---------------------------

உனக்கும் எனக்கும் உள்ள தூரத்தை
இதுவரை நான் கணக்கிட்டதில்லை
ஆதலால்தானோ...
உன்னை நினைத்தவுடன் -சற்றென்று
என் இமைகளில் இடம்பெறுகிறாய்..!

Kannadhasan Thangarasu

Saturday, April 06, 2013

என் வழக்கை இந்த நீதிபதி விசாரிக் கக்கூடாது’ என்று ஒருவரால் கேட்க முடியும்?'


விகடன் மேடை சந்துரு பதில்கள்!


வாசகர் கேள்விகள்

படம்: கே.ராஜசேகரன்நேர்மையாக இருக்க வேண்டும் என்று அழுத்தமாகச் சொல்வதைப் போல், உங்களுடைய பணிகள் அமைந்திருக் கின்றன. அப்படியானால், குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் வாதாடுவது சரிதானா?''

''குற்றவாளியாக ஒருவரை முடிவுசெய்யும் முன், அவரைக் குற்றம் சாட்டப்பட்டவர் என்றே அழைக்க வேண்டும். '100 குற்றவாளிகள் விடுதலை பெற்றாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்பதே சட்ட மரபு. அரசியல் சட்டத்தின் ஷரத்து 22(1)ன் கீழ் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும், தான் விரும்பும் வழக்கறிஞர் ஒருவரைக் கலந்தாலோசிக்கவும், தனக்காக வாதாட ஏற்பாடு செய்துகொள்வதும் அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது. குற்றவாளி சார்பில் வழக்கறிஞர் இல்லாமல் நடத்தப்படும் கிரிமினல் வழக்கு செல்லாததாகிவிடும்.


 அப்படி வழக்கறிஞர் வைத்துக்கொள்ள ஒருவருடைய பொருளாதாரம் இடம் தரவில்லை என்றால், நீதிமன்றமே அவருக்கு வாதாட வக்கீல் ஏற்பாடு செய்துதரும். இதை state brief மற்றும் Amicus curiae என்றும் சொல்வார்கள். மேலும், அரசியல் சட்டத்தின் 39A பிரிவில் ஏழைகளுக்கு சட்ட உதவிக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றவாளி தனக்கு சட்ட உதவி வேண்டும் என்று வக்கீல் ஒருவரிடம் சென்று கேட்கும்போது, அந்தக் கோரிக்கைகளை அவர் தக்க காரணங்கள் இன்றி நிராகரிக்க முடியாது. அப்படி நிராகரித்தால், அது தொழில் தர்மம் ஆகாது.


 இதை இங்கிலாந்தில் cab rank rule என்பார்கள். சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில் காத்துக்கிடக்கும் டாக்ஸிகள் வரிசைப்படி பயணிகளைப் போகும் இடம்பற்றிக் கேட்காமல் ஏற்றிச் செல்வதுபோல, வக்கீல்களும் வழக்குபற்றித் தெரிந்துகொண்டு அதன் பிறகு ஆஜாராவேன் என்று முயற்சிப்பதைத் தடுக்கும் ஏற்பாடு இது. அதே சமயத்தில் ஒரு குற்றவாளிக்காக நாணயமற்ற முறையில் ஆலோசனைகள், ஏற்பாடுகள் செய்வது பார் கவுன்சில் விதிகளில் தடைசெய்யப்பட்டு உள்ளது. 


டெல்லியில் மூத்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் சாட்சிகளைக் கலைப்பதை தெஹல்கா குழுவினர் ரகசியமாகப் படம்பிடித்தனர். அதன் பிறகு அவருடைய வக்கீல் சனத் பறிக்கப்பட்டது. சமீபத்தில் ஸ்பெக்ட்ரம்(2G) வழக்கில் ஆஜரான ஏ.கே.சிங் (சிறப்பு அரசு வழக்கறிஞர்) எதிரிகளுக்கு ஆலோசனை வழங்கியது அவருடைய தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு மூலம் வெளி உலகுக்கு வந்தது. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்!''


ஆ.ராஜன், திருநெல்வேலி.


 ''தூக்குத் தண்டனைகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?''


''உங்கள் கேள்விக்குப் பதிலை என் வார்த்தைகளில் கூறுவதைவிட, சமீபத்தில் 'தென் ஆசியச் செய்தி’ இதழில் பழ.நெடுமாறன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள் காட்டுவது நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.


'ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்கு அன்றைய ஆளுநரிடம் நாங்கள் அளித்த கருணை மனு ஏற்க மறுக்கப்பட்டது. உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் ஆணை செல்லாது என்று வழக்கைத் தொடுத்து, 'அரசியல் சட்டப்படி கருணை மனுக்களின் மீது முடிவு செய்யும் அதிகாரம் ஆளுநர்களுக்கோ, குடியரசுத் தலைவருக்கோ கிடையாது. மாநில அமைச்சரவையும் மத்திய அமைச்சரவையும் கூடி என்ன பரிந்துரையைச் செய்கின்றனவோ, அந்தப் பரிந்துரையை ஏற்றுத்தான் ஆளுநர்களும் குடியரசுத் தலைவரும் செயல்பட வேண்டும்’ என்ற மகத்தான தீர்ப்பினைப் பெற்றுத்தந்து, 


அந்த நால்வ ரின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவருக்கு மட்டுமே சாரும். இந்தியா விடுதலை பெற்ற நாளில் இருந்து 1999-ம் ஆண்டு வரை, ஆளுநர்களும் குடியரசுத் தலைவர்களும் மட்டுமே கருணை மனுக்கள் மீது முடிவு செய்யும் அதிகாரம் பெற்றிருந்ததற்குச் சட்டரீதி யான முற்றுப்புள்ளி வைத்து, இன்று இந்தியா முழுவதிலும் அந்தத் தீர்ப்பின் அடிப்படை யிலேயே எண்ணற்றவர்களின் உயிர்கள் தூக்கு மேடைகளில் இருந்து மீட்கப்பட்டு இருக் கின்றன என்று சொன்னால், அதற்கான பெருமை முழு வதும் நீதிநாயகம் சந்துரு அவர் களையே சாரும்!’ ''


அ.பாஸ்கரன், மதுரவாயல்.
 ''ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டபோது, அவரை நீங்கள் வரவேற்றீர்களாமே? அப்படியானால் நீங்கள் ம.தி.மு.க. அனுதாபியா? நீங்கள் நீதிபதியாக இருந்தபோது வைகோவுக்குச் சாதகமாக நிறைய தீர்ப்புகளை வழங்கி இருப்பீர்கள் அல்லவா?''



 ''அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. வைகோவுக்காக அவர் மீது பொடா சட்டத் தில் போடப்பட்ட வழக்குகளில் ஒரு மூத்த வழக்கறிஞ ராக அவருக்காக ஆஜரானேன். அது மனித உரிமைப் பிரச்னை என்பதால், எனது கொள்கைப்படி அதற்கு நான் கட்டணம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை. நான் நீதிபதி யான பிறகு, அவரை இரண்டு முறை சந்தித்தேன்.


 ஒன்று, நான் மதுரைக்கு அலுவல் பணியாகச் செல்லும்போது அதே விமானத்தில் பயணித் தார். எனக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வேறு இருக்கை யில் சென்று அமர்ந்து கொண்டார். இரண்டாவது, நான் அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது தற்செயலாக அங்கு வந்த அவர், எனது உடல்நிலைபற்றி விசாரித்தார். நலம் பெற வாழ்த்தினார். அவர் கட்சி சார்பாக வந்த வழக்கு ஒன்றைத் தள்ளுபடி செய்த தாகத்தான் எனக்கு நினைவு உள்ளது!''



து.மணி, மதுரை.

' 'வரலாற்றுப் பெருமை மிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணி யாற்றிவிட்டு, அதே  நீதிமன்றத்தில் இருந்து எளிய மனிதராக விடைபெற்ற அனுபவம் எப்படி இருந்தது?''

''கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்ட மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை பின்னாளில் இவ்வாறு எழுதினார்:
'போதும் போதும்

உத்தியோக கனமே
இதில் ஏது சுகம்
நமக்கு மனமே.
அண்டப்புரட்டன் அப்பா
அவன் பிரதிவாதி
சண்டப் பிரசண்டன்
நியாயவாதி-நாளும்  
சாஸ்திரப் புளுகன்
கட்சிக்காரன்
எனும் கியாதி!’


அது அவரது அனுபவம். ஆனால், நான் எனது உத்தியோக பாரத்தை அப்படி எண்ணவில்லை. எனது 6 வருடங்கள் 7 மாதங்கள் 8 நாட்களும் பதவியை முழு நிறைவுடன் செய்தேன். மன நிம்மதியுடன் வீடு திரும்பினேன்!''

சு.அருளாளன், ஆரணி.
'' 'என் வழக்கை  இந்த நீதிபதி விசாரிக் கக்கூடாது’ என்று ஒருவரால்  கேட்க முடியும்  என்றால், என்னென்ன நிபந்தனைகளின்     கீழ்  அவ்வாறு கேட்க முடியும்?''


''ஒரு நீதிபதி வழக்கில் தீர்ப்பளிக்க லஞ்சம் பெற்றிருந்தாலோ அல்லது அவருக்குத் தனிப்பட்ட விருப்பு (bias) அவ்வழக்கின் பால் இருந்தாலோ அல்லது வழக்கில் கட்சிக்காரர்கள் அல்லது வாதாடுபவர்களில் ஒருவர் அவரது நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தாலோ அந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றம் செய்ய அந்த நீதிபதியிடமே கோரி நிவாரணம் (Petition for Recusal) கேட்கலாம். அப்படி அந்த நீதிபதி அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டால், தலைமை நீதிபதியிடமோ (அ) உச்ச நீதிமன்றத்திலோ மனு போட்டு வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்!''

எம்.சங்கர், நல்லாலம்.
''காதல் அனுபவம் உண்டா?''
''எனது திருமணம், காதல் திருமணம்தான். நான் புகுமுக வகுப்பு படிக்கும்போது நெய்வேலியில் இருந்து காதல் ஜோடி ஒன்று ஓடி வந்து என் வீட்டில் சில நாட்கள் தஞ்சமடைந்தது. அப்போது முதல் இன்று வரை பல காதல் திருமணங்களுக்கு உதவியிருக்கிறேன். நானே நடத்தியும் வைத்திருக்கிறேன். நான் வழக்கறிஞராக இருக்கும்போது காதல் திருமணம் செய்ய விழைவோருக்கு வரும் தடைகளை எதிர்த்து வழக்கு நடத்தியுள்ளேன்.

பின்னர், நீதிபதியான பிறகு என் முன்னால் வந்த வழக்குகளில் அப்படிப்பட்ட காதலர்களுக்கு, சட்டரீதியாக என்னவிதமான உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியுமோ... அத்தனையையும் செய்தேன். பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த இரு வாரங்களுக்கு முன்னர் கூட ஒரு வழக்கு வந்தது. காதல் திருமணங்களுக்கு உதவி செய்த ஒருவர் மீது காவல் துறையினர் இ.பி.கோ. 466 பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.

 அதாவது, பெண்ணைக் கடத்தியதற்கு உதவி செய்ததாக. அந்த வழக்கு தள்ளுபடியான பிறகும் அவருக்கு போலீஸ் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். 'காதல் திருமணங்களை ஆதரிக்க வேண்டும், கௌரவக் கொலைகளைத் தடுக்க வேண்டும்’ என்று என் தீர்ப்பில் குறிப்பிட்டு, அந்த இளைஞனுக்கு வேலை கொடுக்கும்படி காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட்டேன்.''

ச.ஐயப்பன், காஞ்சிபுரம்.

''வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்பதுதான் உங்களின் லட்சியமாக இருந்ததா? அல்லது வேறு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சட்டக் கல்லூரியில் சேர்ந்தீர்களா?''


''மருத்துவராக ஆக வேண்டும் என்பது எனது பள்ளிக்கூடக் கனவு. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் மாணவர் இயக்கத்துக்கு வந்தேன். பின்னர், அந்த வேலையையே முழு நேரமாகச் செய்ய சரியான இடம் சட்டக் கல்லூரிதான் என்று அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் ஒருநாளும் வகுப்புகளுக்கு மட்டம் போட்டது இல்லை. வகுப்பிலும் முதல் மாணாவனாகவே இருந்தேன்!''

அடுத்த வாரம்...


''ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் எந்த கமிஷனும், இதுவரைக்கும் பிரயோஜனமாக இந்தியாவில் எதுவுமே செய்தது இல்லையே... என்ன காரணம்?''

''நீதிபதியாகப் பணியாற்றிய காலகட்டத்தில் அதிகாரவர்க்கத்திடம் இருந்து அழுத்தங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பம் அமைந்திருக்கிறதா? அப்படி இருந்தால் அதை எப்படிச் சமாளித்தீர்கள்?''

''தமிழ் சினிமா பார்ப்பது உண்டா? அப்படியெனில் மனம் கவர்ந்த இயக்குநர், நடிகை, நடிகையர் யார்?''


- இன்னும் பேசுவோம்...

thanx - vikatan

அழகன் அழகி - சினிமா விமர்சனம் ( மாற்றான் தோட்டத்து மல்லிகை )

 
தினமலர் விமர்சனம்


"ஒரு கல்லூரியின் கதை", "மாத்தியோசி" என இரண்டு படங்களை இயக்கி பந்தா ஓ... சாரி நந்தா பெரியசாமி, மாத்தி யோசிக்காமல் எடுத்திருக்கும் மற்றும் ஒரு படம் தான் "அழகன் அழகி!"

உங்கள் கையெழுத்தை ஆட்டோகிராப்பாக மாற்றுங்கள் எனும் தாரக மந்திரத்துடன் ஊரில் ஆடு மாடு மேய்ப்பவரில் தொடங்கி அனைத்து தரப்பினரையும் ஆக்டர் (அதாங்க நடிகர்....) ஆக்கிவிடும் உத்தேசத்தில் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி இருப்பார் போலும் நந்தா பெரியசாமி! ஒரு திருட்டுப்பய கூட்டம், ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் ஊர் ஊராக போய் இளம் திறமை சாலிகளை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று பண்ணும் கலாட்டா தான் "அழகன் அழகி" கதை மொத்தமும்!

புதுமுகம் ஜாக், ஆருஷி, குண்டு ஆர்த்தி, ரவி மரியா, ஏ.வெங்கடேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது, வருகிறது, போகிறது! நடிப்பது தான் கம்மி. ஹீ...ஹீ!!
 


கண்ணனின் இசையில் ஏழு பாடல்கள். (அதில் ஒன்றுக்கு கஸ்தூரியின் ஆட்டம் சூப்பர்ப்!) பாடல்கள் தான் படத்தின் ஆறுதல்! இந்தப்படத்தின் படக்காட்சிகளுக்கு சிகரெட் பிடிக்க போகிறவர்கள், பாடல் காட்சிகளுக்கு சீட்டில் கட்டிப் போட்ட மாதிரி அமர்ந்திருக்கின்றனர் என்றால் பாருங்களேன்...! கண்ணனின் இசை மாதிரியே, பிரபு தயாளின் ஒளிப்பதிவும் ப்ளஸ்!

அழகன் அழகி படத்தின் இண்டர்வெல்லிலேயே முதலில் இப்படத்தின் இயக்குனரது கையெழுத்து ஆட்டோகிராப் ஆகட்டும், அப்புறம் நம்ம கையெழுத்து, தலையெழுத்தை பார்க்கலாம்... என எஸ் ஆகும் கூட்டம் எக்கச்சக்கம்!

அதையும் மீறி படம் பார்க்கும் ரசிகர்கள் "அழகன் அழகி" - "அவதி அவதி" என புலம்புவது உங்களுக்கும் கேட்டிருக்குமே...?!

‌மொத்தத்தில், "அழகன் அழகி" - "அவஸ்தை அவதி!!"
thanx - dinamalar
 

சினிமா நடிகர்களின் உண்ணாவிரதம் - ரிப்போர்ட் @ ஜூ வி

உட்டாலங்கடி உண்ணாவிரதம்
ஈழத் தமிழருக்கு ஆதரவாகத் திரண்டனர் தமிழ்த் திரை நட்சத்திரங்கள். ஏப்ரல் 2-ம் தேதி நடிகர்கள் பலரும் கறுப்புச் சட்டையுடன் வந்திருந்தனர். சென்ற தடவை இதே நடிகர் சங்கத்தில் ஈழத் தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தபோது சிலர் மைக்கை பிடித்து மத்திய அரசைக் கடுமையாகத் தாக்கினார்கள். அதுமாதிரியான தர்மசங்கட நிலை இப்போது ஏற்படக் கூடாது என்று நட்சத்திரங்கள் யாரையும் பேசவிடவில்லை. சிலரோ ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் போல தலையைக் காட்டிவிட்டுப் பறந்தனர்.


 உண்ணாவிரதப் பந்தலில் பலரும் கறுப்புச் சட்டையில் அமர்ந்து இருக்க, காலை 11.15-மணிக்கு வெள்ளுடையில் பரபரவென ஆஜரானார் ரஜினி. வந்ததும் சரத், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூர்யா எல்லோரையும் குசலம் விசாரித்தார். 12.45-மணிக்கு தனது இன்னோவா காரில் பறந்துவிட்டார் ரஜினி.


தி.மு.க-வின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடும் குஷ்பு, பொதுப் பிரச்னையான ஈழத் தமிழருக்கு ஆதரவான உண்ணவிரதத்தில் தலையே காட்டவில்லை. 2-ம் தேதி இரவு ஸ்டார் ஹோட்டலில் பிரபுதேவா பிறந்த நாள் கொண்டாடினார். அங்கே நடந்த திருவிழாவில் 'உற்சாகமாக’ பிரபுதேவாவை அரவணைத்தபடி போஸ் கொடுத்தார் குஷ்பு. இருவருமே உண்ணாவிரதத்துக்கு வரவில்லை.  
ஏப்ரல் 1-ம் தேதி 'சிறுத்தை’ சிவா இயக்கும் 'வெற்றிகொண்டான்’ படத்தின் படப்பிடிப்பை வைத்திருந்தனர். உண்ணாவிரதத்தில் அஜித் கலந்துகொண்டதால், படப்பிடிப்பை 8-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். பொது நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் தலையைக் காட்டாத அஜித், கால் வலியுடன் காலில் வளையம் மாட்டிக்கொண்டு உண்ணாவிரதத்தில்  உட்கார்ந்து இருந்தார்.


அன்று காலை உண்ணாவிரதப் பந்தலுக்கு வராமல்  ஐஸ்கிரீம் பார்லர் திறப்பு விழாவில் கலந்துகொண்டார், த்ரிஷா. விஷயம் கேள்விப்பட்டு, த்ரிஷாவுக்கு போன்செய்த ராதாரவி கடுமையாகவே திட்டிவிட்டாராம். அதன் பிறகே மதியம் ஒன்றரை மணிக்கு வந்தார். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு நைஸாக எஸ்கேப் ஆனார். அன்று இரவு நடந்த பிரபுதேவா பார்ட்டியில் த்ரிஷாவும் செம டான்ஸ்.


''சிறுவன் பாலச்சந்திரன் முதுகில் குண்டு பாய்ந்து இறக்கவில்லை. மார்பில் குண்டு வாங்கி, மரணத்தில்கூட தான் ஒரு மாவீரனின் மகன் என்று நிரூபித்து இருக்கிறான்'' என்று கடைசியில் வாகை சந்திரசேகர் பேசியதைக் கேட்டு சிலர் கண் கலங்கினார்கள்.


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார் விஜய். இப்போது ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை. அதைக் கடிதமாக சரத்குமாருக்கு அனுப்ப, உண்ணாவிரதப் பந்தலில் விஜய் கடிதம் படித்துக் காட்டப்பட்டது.


உண்ணாவிரதத்துக்கு வந்தவர்களை வாசல் வரை சென்று ராதாரவியும் வாகை சந்திரசேகரும் அழைத்து வந்தனர். வடிவேலுவை உண்ணாவிரதத்துக்கு அழைத்தார்களாம். ''வேணாம். அங்கே வந்தா, நான் ஏதோ சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுற மாதிரி சிலர் விசாரிப்பாங்க. எனக்கு தர்மசங்கடம் ஆகிடும். ஆளைவிடுங்கப்பா..’ என்று கழண்டுகொண்டாராம் வைகைப் புயல்.


'விஸ்வரூபம்’ விவகாரத்தை உலக மகா பிரச்னை ஆக்கி, 'நான் தமிழ்நாட்டை விட்டுப்போறேன். இந்தியாவை விட்டுப் போகப்போறேன். எனக்கு வாழ்வதற்கு உலகத்தில் இடமே இல்லையா?’ என்றெல்லாம் தழுதழுத்த கமல், உண்ணாவிரதம் முடியும் நேரத்தில் வந்து மற்றவர்கள் பழரசம் குடிப்பதைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.


நல்லாத்தாம்பா நடிக்கிறாங்க!


படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்

thanx - ju vi 

Friday, April 05, 2013

சேட்டை - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஒரு பத்திரிக்கைல பணி ஆற்றுபவர். அவருக்கு எங்கிருந்தோ ஒரு கோடீஸ்வரக்காதலி வலியனா வந்து மாட்டுது. ( நமக்கு டொக்கு ஃபிகர் கூட மாட்றதில்லை) அந்த உத்தமக்காதலி அடிக்கடி ஹீரோவைத்தள்ளிட்டுப்போய் “ கண்ணா லட்டு தின்ன ஆசையா?ன்னு பூடகமா கேட்குது ( இதை விட ஓப்பனா யாரும் கேட்கவே முடியாது ) ஹீரோ கேரக்டர் கேனக்கிறுக்கு கேரக்டர் போல . அதெல்லாம் முடியாதுங்கறார். இது ஒரு டிராக்ல ஓடுது.

ஹீரோவை அதே லைன்ல அதாவது பிரஸ் ரிப்போர்ட்டர் ஃபிகர் தானா ஒன் சைடா லவ் பண்ணுது . அவரோட 2 சைடும் நல்லா இருந்தும் ஹீரோ கண்டுக்கலை. அவ்ளவ் உத்தமனா? அடேங்கப்பா . கேரக்டரை மெயிண்ட்டெயின் பண்றாங்களாம். எம் ஜி ஆர் கூட இவ்ளவ் கண்ணியம் காத்ததில்லை , அப்பப்ப ஹீரோயினைத்தடவிட்டு கடைசில தங்கச்சி மறந்துடும்பாரு  .

மேலே சொன்ன 2 லவ்வும் அப்பப்ப ஊறுகாய் மாதிரி , மெயின் கதை என்னான்னா ஒரு கடத்தல் கும்பல் வைரக்கற்கள் கொண்ட ஒரு பொம்மையைக்கை மாத்துது, அது தவறுதலா ஹீரோயின் கிட்டே மாட்டி ஹீரோ கிட்டே போய் அவரோட 2 நண்பர்கள் கிட்டே போய் ... என்ன தலை சுத்துதா? திரைக்கதையும் அப்டித்தான்... 






ஆர்யா தான் ஹீரோ. நிஜ வாழ்வில் நயன் தாராவும் த்ரிஷாவும் இவருக்காக அடிச்சுக்கிட்டதா காத்து வாக்கில் ஒரு செய்தி உண்டு . கதைல அதை அப்டியே நாசூக்கா சொல்லி இருக்காங்க.. புக் பண்ணூம்போதே இது ஒரு மொக்கைக்காமெடி ஃபிலிம் , ஆல்ரெடி ஹிந்தில ஹிட் ஆன  படத்தின் ரீ மேக் தான், நீங்க சும்மா வந்துட்டுப்போனா போதும்னு சொல்லி இருப்பாங்க போல , மனுஷர் அதிகமா அலட்டிக்கலை . வந்தவரை ஓக்கே 



ஹீரோயின் நெம்பர் ஒன் ஹன்சிகா .கொழுக் மொழுக் கன்னம் ( கன்னம் மட்டுமா ... ) ஹீரோவுக்கே படத்துல வேலை இல்லாதப்போ இவருக்கு மட்டும் என்ன கவர்மெண்ட் ஜாப்பா இருக்கப்போகுது , ஒரு டூயட் , 3 கட்டிப்பிடி சீன் அவ்ளவ் தான் .இவர் அப்பப்ப குஷ்பூ மாதிரி மேனரிசம் காட்டுவது , சிரிப்பது  எல்லாம் ஓவர் , ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சுந்தர் சி வந்து டொக் டொக் -னு கதவை தட்டப்போறார் , கபர்தார் 


 ஹீரோயின் நெம்பர் 2 அஞ்சலி , இவர் கழுத்துக்குக்கீழே நமிதாவுக்கு சவால் விடும் அளவு வளர்ச்சி அடைவது கூடத்தேவலை, கழுத்துக்கு மேலே குறிப்பா கன்னங்கள் 2 ம் கேப்டன் கன்னத்துக்கே சவால் விடும்படி பீர் சாப்பிட்டு வீங்கிப்போய் கிடக்கு , பார்க்க சகிக்கலை . அஞ்சலி ரசிகர்கள் மன்னிக்க 


ஹன்சிகா , அஞ்சலி 2 பேர்ல யார் அதிக திறமையைக்காட்டி இருக்காங்கன்னு பார்த்தா சந்தேகமே இல்லாம ஹன்சிகாதான் . குறிப்பா அவர் பீச் ல குளிச்சுட்டு கும்மாளம் இடும்போது  ஆஹா! பிரமாதமா திறமை காட்டி இருக்கார். இதுக்கு ஏதாவது அவார்டு உண்டா ? தெரில 



 சந்தானம் படத்தின் முதுகெலும்பு . இவரோட பிளஸ் பாயிண்ட்டே அப்பப்ப டைமிங்கா கவுண்ட்டர் டயலாக் அடிப்பதுதான். அவரையும் வயித்தால போற பேஷண்ட் ஆக்கி வடிவேல் ரேஞ்சுக்கு இறக்கி விட்டுட்டா எப்டி? இயக்குநர் அங்கே தான் சந்தானத்தின் கேரக்டரைசேஷன் ல சறுக்கிட்டார்,. அதையும் மீறி சந்தானம் 6 இடத்துல கவுண்ட்டர் டயலாக் அடிச்சு  அது போக 19 மொக்கை ஜோக்ஸ் வழங்கி இருக்கார். 



பிரேம் ஜி.. சப்போர்ட்டிங்க் காமெடி . சொல்றேனேன்னு யாரும் தப்பா நினைக்காதீங்க , இவர் வரும் காட்சிகள் மகா எரிச்சல் . அவருக்கு தனி டூயட் வேற , க்ளோசப் ல அவர் வாயை ஏன் அப்டி காட்றாங்கன்னு தெரியல.. அவர் ஆளும் தலையும் .. முடியல (நடிகர்  செந்தில் கேரக்டர் மாதிரி ட்ரை பண்றாரோ? )

 நாசர் தான் வில்லன் . அங்கங்கே கிச்சு கிச்சு 


இசை தமன் . 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் . ஒளிப்பதிவும் சராசரி 





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்



1. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இந்தப்படத்துக்கு யு சர்ட்டிஃபிகேட் வாங்குனது. சென்சாரே அப்டி கொடுத்தாக்கூட இவங்க ஏ தான் வேணும்னு கேட்டு வாங்கி இருக்கனும், அப்டி இருக்கு பல காட்சிகள்



2. ஹன்சிகா , அஞ்சலி என 2 முன்னணி ஹீரோயின்சை புக் பண்ணி  முடிஞ்சவரை அவங்க திறமையை வெளிக்கொணர பாடுபட்டது 



3. சி செண்ட்டர் ரசிகர்களை சிரிக்க வைக்கும் மொக்கைக்காமெடி டயலாக்ஸ் 


4. ஹீரோயின் ஹன்சிகா குட்டைப்பாவாடை அல்லது மிடி மாதிரி ஏதோ ஒரு கர்ச்சீப்பை அணிந்து வரும் காட்சிகளில் எல்லாம் கேமராமேன் கவுரவம் பார்க்காமல் தரையோடு தரையாக படுத்து ஜூம் செய்தது , குறிப்பா அந்த பீச் காட்சி.. 





இயக்குநரிடம் சில கேள்விகள்



1. ஹீரோயின் கோடீஸ்வரி. அவர் ம் என சொன்னா 100 கோடி கூட கிடைக்கும், ஆனா லூஸ் வில்லன் அவளைக்கடத்தி வெச்சுட்டு கேவலம்  1 3/4 கோடிக்காக வைரத்தை பேசிட்டு இருக்காரு . 


2. ஹீரோ ஹீரோயினை தடவறாரு , கிஸ் பண்றாரு மேட்டர் தவிர எல்லாமே பண்றாரு, ஆனா “ எனக்கு இவ செட் ஆக மாட்டா. சரி வராது என டயலாக் பேசி லவ்வையே கேவலப்படுத்தறாரு


3. ஆர்யா , அஞ்சலி 2 பேரும் வரும்போது சம்பந்தமே இல்லாம ஹன்சிகா முன்னால  “ ஆமா , நான் அவளை கிஸ் பண்ணேன்னு ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்காரே? ஆர்யா, உங்களைக்கேட்டாங்களா முருகேசா? 


4. எம் ஜி ஆர் , சிவாஜி காலத்துல ஆள் மாறாட்ட,ம் நடந்தது ,  வைரம் ஆள் மாறி டெலிவரின்னு சொன்னா அதுல ஒரு நியாயம் இருந்துச்சு , டெக்னாலஜி வளர்ந்த இந்தக்காலத்துல யார் கிட்டே வைரம் தரனும்னு ஒரு ஃபோட்டோக்கூடவா இருக்காது . கன்ஃபர்மேஷன் ஃபோன்ல பண்ணிக்க மாட்டாங்களா? 



5. ஆர்யா , ஹன்சிகா கூட கில்மா பண்ண பிள்ளையார் சுழி போடும்போது ( பிள்ளையார் மன்னிக்க ) அஞ்சலி கிட்டே இருந்து ஃபோன். அவர் சக ஊழியை மட்டுமே , அர்ஜெண்ட் மேட்டர் வா அப்டினு சொன்னதும் இவர் ஏன் கிளம்பனும்? 5 நிமிஷம் தானே ஆகும் ,மேட்டரை முடிச்சுட்டு போய் இருக்கலாம். அந்த சீன்ல ஹன்சிகா சீறுவார்னு பார்த்தா கண்டுக்கவே இல்லை 


6. எதுக்கு அவசரமா வரச்சொன்னேன்னு கேட்டதுக்கு அஞ்சலி கூலா ஜஸ்ட் சரக்கு அடிக்க  அப்டிங்கறார். முடியல 


7. காதலி தன்னை விட வசதின்னு த்தெரிஞ்சு தானே ஹீரோ லவ்வறாரு . சரி வராதுன்னு சொல்றவர் ஹீரோயின் கொடுத்த காரை மட்டும் ஒனத்தியா வாங்கிக்கிட்டது எப்டி? 


8. நெம்பர் டூ போறது யதார்த்தம் தான், எல்லாரும் டெயிலி போறதுதான் , அதுக்காக காமெடிங்கற பேர்ல இப்டி இறங்கி வரனுமா? நாளைக்கே சரி வேணாம், அடுத்த வாரமே இந்தப்படத்தை டி வி ல போடறப்போ சாப்டுட்டே யாராவது படம் பார்த்தா குமட்டாதா? 



9. சந்தானம் கேரக்டர் நாய் நக்ஸ் ( நக்கி ) அப்டினு வெச்சது நாய் நக்ஸ் நக்கீரன் என்ற வலைப்பூ ஓனர் மனசுல வெச்சுத்தான். டைட்டில் கர்டுல அவருக்கு நன்றியே போடலையே? பத்திரிக்கைப்பேட்டில மட்டும் அதை ஒத்துக்கிட்டவர் டைட்டில்ல் ஏன் அங்கீகாரம் தர்லை ?


10. இந்தப்படத்தின் பின்னணி இசை பல இடங்களில் நாடக் எஃபக்ட் . 


11. எக்சாம் ஹால் ல ஃபோன் பேசலாமா? 






மனம் கவர்ந்த வசனங்கள்

1. மல்லிகா அபார்ட்மென்ட்ல பிராத்தல் நடக்குது சார்.


நாடு எங்கேய்யா போய்ட்டு இருக்கு? 


அங்கே தான் போய்ட்டு இருக்கு



2. வீட்டுக்குள்ளே குப்பைத்தொட்டி வெச்சுப்பார்த்திருக்கேன், ஆனா  ஒரு வீடே குப்பைத்தொட்டி ஆகி இப்போதான் பார்க்கறேன் 



3. பாதாளச்சாக்கடைக்கு கதவு , ஜன்னல் வெச்சது மாதிரி ஒரு வீடு ./


4. ட்ரிங்க் ட்ரிங்க் 


 என்ன சத்தம் அது? 


 10 நிமிஷத்துக்கு முன்னே நீ காலிங்க் பெல் அடிச்சியே , அதுதான் , கொஞ்சம் லேட் பிக்கப் , ஹி ஹி 



5. வெங்கட் எனும் பேரை வெங்க்கின்னு கூப்பிடறதில்லை? அது மாதிரி நாய் நக்ஸ்ங்கற பேரை சுருக்கி நக்கி ஆக்கிட்டேன், எப்டி? 



6. டியர் , உங்களுக்காக புது சர்ட் வாங்கி வெச்சிருக்கேன் 


 எப்டியும் கழட்டத்தானே போறோம்? எதுக்கு இது? ( சுத்தம் ) 


7. டேய் , கிசு கிசு எழுதுற எனக்கே கூச்சமா இருக்கு, என்னடா பண்றே அவளை ?


8.  டேய் , உன் ஆளுக்கு தங்கச்சி இருக்கான்னு கேட்டு சொல்லுடா, கரெக்ட் பண்ணிடலாம் 


 ஒரிஜினல் இருக்கும்போது ஜெராக்ஸ்க்கு ஏன் ஆசைப்படறே? அவளையே எடுத்துக்கோ ( உலகத்துல எந்த உண்மைக்காதலனும் இப்டி உளற மாட்டான் )  


 என்னமோ காபித்தூள் எடுத்துக்கோங்கற மாதிரி அசால்ட்டா சொல்றானே? 



9. ஹாய் , மரத்தடி மாலாவா? 


 ஆமா, அன்னைக்கு ஷூட் எடுத்தீங்களே? வரவே  இல்லை?

 தொப்புளைக்காட்டி போஸ் குடுனு சொன்னேன்


 ஏண்டா , சமையல் குறிப்புக்கு எதுக்கு தொப்புளைக்காட்டனும்?

 இப்பவெல்லாம் யார்டா புக் படிக்கறாங்க ? சும்மா பார்க்கறதுக்குத்தானே? ( டைம் பாஸ் விகடனை நக்கலிங்க்? )


10.  ஒண்ணும் இல்லை, இங்க்லீஷ் பேப்பர் கிலோ 8 ரூபாய்க்கு விக்குதுங்கற திமிர்ல பேசறாங்க


11.  என்ன தமிழ் பேசறா? அவளை எல்லாம் தமிழ் கற்பழிப்பு வழக்குல உள்ளே போடனும் 



12. மாமி, என்னாதிது? வாழைப்பழத்தை ஆபரேஷன்  பண்ணிட்டு இருக்கேள்? ( டபுள் மீனிங்க் ) 



13.  தம்பி! என்ன பண்றேள்?

 சாப்டுண்டு இருக்கேன்

 அதான், சாப்பாட்டுக்கு என்ன பண்றேள்னு கேட்டேன்



14.  பக் வீட் ஆண்ட்டி - அவர் என்ன செஞ்சாலும் சூப்பரா இருக்கும் சேட்டா சேட்டாதான் 


இப்டியே போனா அங்கிளுக்கு டாட்டாதான் 




15. ஒட்டுத்துணில தெச்ச தலகாணி மாதிரி  உனக்கு ஒரு உடம்பு .அப்டி இருந்தும் ஜிம் பாடி மாதிரி எதுக்கு பில்டப்?



16.  மனோ பாலா - பரதம் கறது ஒரு கலை. அவங்க என்னதான் குச்சி வெச்சுக்குத்துனாலும் நீங்க நாட்டியத்துல கவனமா இருக்கனும் ( டபுள் மீனிங்க் )


17.  உன் கிட்டே 2 முக்கியமான விஷயம் பேசனும் 

 நானும் காலைல இருந்து  2 விஷயமாத்தான் போய்ட்டு இருக்கேன் 



18.  ஒரு பட்டாம்பூச்சியை ஒரு கரப்பான் பூச்சி  எப்டி கட்டிப்பிடிக்குது பாருங்க 


19.  டேய் , உனக்குக்கிடைச்சா எனக்கு கிடைச்ச மாதிரி டா


 என்னாது ?

சந்தோஷம் தான் . காதலின்னு பயந்துட்டியா?


20. முக்கியமான ஒரு வேலையை பாதிலயே விட்டுட்டு வந்திருக்கேன் ஹி ஹி 



21. ஒர்க்கிங்க் டைம்ல நான் தண்ணி அடிக்கறதில்லைங்க 


இப்போ நாம ஒர்க் பண்றோம்னு யார் சொன்னது? ரிலாக்ஸ் மேன் 



22.  நாசர் அடியாளிடம் - ஏண்டா , கல்யாண வீட்டுக்கா வந்திருக்கோம்? உக்காந்து சாப்டுட்டு இருக்கே? 



23.  என்னங்க ? போஸ்ட்ல என்ன? 


 முருகர் விபூதி தபால் ல வந்திருக்கு 


 அதை எடுத்துட்டு  ஏன் பாத்ரூம் போறீங்க ?

 குளிச்சுட்டு பூசிக்கத்தான் 


 நீங்க தான் ஆல்ரெடி குளிச்சுட்டீங்க்ளே? 


 சோப் போட மறந்துட்டேன் 


24.  லவ்ங்கறது கனவு மாதிரி, மேரேஜ்ங்கறது அலாரம் மாதிரி, அலாரம் அடிச்சதும்  கனவை கலைச்சிடனும்


25. என்னதான் டேஸ்ட்டா இருந்தாலும் பபிள்கம்மை ஒரு கட்டத்துல துப்பித்தான் ஆகனும், அது மாதிரி தான் பழைய லவ்வும் 



26. மனசுக்குப்பிடிச்சவங்க கிட்டே லவ்வைப்பிரப்போஸ் பண்றதை  விடப்பெரிய வேலை இந்த உலகத்துல எதுவும்  இல்லை # சேட்டை


27. இதை ஏன் என் கிட்டே முன்னாலயே சொல்லலை?

 நீங்க கேட்கவே இல்லையே?



28.  அது ஏன் சார் உங்க மண்டையை டேபிள் ஃபேன் மாதிரி ஸ்லோவா திருப்பறீங்க? 



29/ இவர் யாரு? பார்க்க பயங்கரமா இருக்காரே? 


 மூஞ்சி கழுவின பிறகு பாருங்க. இன்னும் பயங்கரமா இருப்பான் 


30. நீ நல்ல வழி ல   செலவு பண்ணு , இல்லை நாகர் கோயில் வழில செலவு பண்ணு  அதைப்பத்தி எனக்குக்கவலை இல்லை 


31. தப்பு பண்றவங்க எல்லாம் நம்ம பேப்பரைப்பார்த்து பயப்படனும்


 அப்போ நாம தான் முதல்ல பயப்படனும் 



32. மேரேஜ்க்கு முன்னால இதெல்லாம் தப்பு , நம்ம தமிழ்க்கலாச்சாரம் ஒத்துக்காது 


 ஹன்சிகா - இச் .. இப்போ?

 ஐ டோண்ட் நோ தமிழ் யா 



33.  நான் என்ன பிராண்ட் ஜட்டி போடனும்கறதைக்கூட உங்கப்பா தான் முடிவு பண்ணுவாரா? 



34. இந்த மாதிரி சோகக்கதைக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்

 சரி வேற ஒரு காமெடிக்கதை இருக்கு, சொல்லவா? 



35. முல்லைக்குத்தேர் கொடுத்தான் பாரி , உங்க வீட்ல நெம்பர் டூ போய்ட்டேன் சாரி 


 36 ஓடி வந்த வேகத்துக்கு களைப்பாற 2 பேரும் ஜூஸ் குடிக்கறிங்க போல ஓ இதான் முத்தமா? 


37 . திடீர்னு கண்ணாடில உன் ஃபேஸ்க்குப்பதிலா வேற ஒரு ஃபேஸ் இருந்தா உனக்கு எப்டி இருக்கும் ? 

 அடடே, அழகா இருக்கே அப்டினு 





எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 40 



 குமுதம் ரேங்க் - ஓக்கே 



 ரேட்டிங்க் 2 / 5 


சி பி கமெண்ட் - ரொம்ப மொக்கை கிடையாது. டைம் பாஸ் ஆகும். எவனாவது இளிச்சவாயன் ஓ சி ல கூட்டிட்டுப்போனா பார்க்கலாம், சொந்தக்காசை செலவு பண்ணிப்போற அளவு படம் ஒர்த் இல்லை .


 

Thursday, April 04, 2013

கிளிநொச்சி - போர் தின்ற நகரம்


செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. 

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன், இப்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர். ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' எனும் தீபச்செல்வன், தன் எழுத்துகள் மூலம் ஈழ மக்களின் இப்போதைய வாழ்க்கைப்பாடுகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்.  


'' 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்ற நூல் எதைப் பற்றியது?''


''போர் முடிந்த பின்னர் கிளிநொச்சிக்கு மீண்டும் திரும்பும்போது என்னுடைய நண்பர்கள், உறவினர்களைத் தேடிச் சென்ற அனுபவங்களைத் தான் இந்த நூலில் எழுதியிருக்கிறேன். நான் படித்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குள் போரில் காலை இழந்த அப்பண்ணா என்ற அண்ணாஒருவரைத் தேடும்போது என்னைப் பாதித்த நிகழ்வுகள்தான், நூலின் முதல் பகுதியை எழுதத் தூண்டின. உண்மையில் கால்களை இழந்த அப்பண்ணாக்களின் நகரமாக கிளிநொச்சி மாறியிருந்தது!''


''ஈழ மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள்?''


''எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாரம்பரிய வாழ்விடங்களில் வாழ்ந்த மக்களை, வனாந்தரங்களில் வீசிச் சென்றிருக்கிறது போர். அவர்கள் வாழ்ந்த பகுதிகளை ராணுவம் எடுத்துக்கொண்டது. எங்கள் மக்களின் பூர்வீக நிலங்களில் தென்னிலங்கைச் சிங்களர்களைக் குடியேற்றுகிறார்கள். பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்பதாகச் சொல்லி, 2007-ல் சம்பூரைக் கைக்கொண்டது இலங்கை ராணுவம்.

 ஆனால், இப்போது போர் முடிந்த பிறகும் வளம் கொழிக்கும் சம்பூரை மக்களுக்குக் கிடையாது என அறிவித்துவிட்டது இலங்கை அரசு. இதுபோல யாழ்ப் பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு போன்ற கிராமங்களின் பகுதிகளையும் மக்களிடம் மீண்டும் ஒப்படைக்கவில்லை. எங்கள் நிலப் பகுதி மீது படையெடுக்கும் இலங்கை அரசு, 'பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கிறோம்’ என்று சொல்லி அந்த நிலங்களைக் கையகப்படுத்தி சிங்களவர்களைக் குடியமர்த்திக் கொள்கிறது. தனது தேவைக்கும் அரசியலுக்கும் ஏற்ப சூழலை மாற்றி மாற்றிப் பேசும் இலங்கை அரசின் பொய்ப் புரட்டுக்களைத்தான் இப்போது உலகமும் கேட்டுக்கொண்டு இருக்கிறது!''

''முகாம்களை மூடிவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறதே?''


''இல்லை. உலகின் கண்களுக்குக் காட்டிய முகாம்களை மூடிவிட்டு, வன்னிப் பெரு நிலப்பரப்பையே பிரமாண்ட திறந்தவெளி முகாமாக மாற்றிவிட்டார்கள். மெனிக்பாம் முகாம் இப்போது இல்லை. ஆனால், கேப்பாப்புலாவு, புதுக்குடியிருப்பு போன்ற இடங்களில் புதிய முகாம்களை உருவாக்கியிருக்கிறார்கள். தவிர, விசாரணை முகாம்கள், ரகசியத் தடுப்பு முகாம்கள் என விதவிதமான முகாம்கள் அங்கு உள்ளன.

 ஈழம்பற்றிப் பேசக்கூடியவர்களைக் கொன்றுவிட்டு, எஞ்சியவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. 50 பேர் வாழக்கூடிய இடங்களில் 150 பேரைக் குடிவைத்துவிட்டு மீள் குடியேற்றம் செய்துவிட்டோம் என்கிறது இலங்கை. கண்ணிவெடியைக் காரணம் காட்டியே ராணுவம் மக்கள் நிலங்களை அபகரித்து அங்கு முகாமிட்டுஇருக்கிறது!''


''ஜெனிவா தீர்மானத்தை அந்த மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?''


''ஜெனிவா தீர்மானத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் போராடுவது போன்று காட்ட யாழ்ப்பாணத்தில் ராணுவத்தினர் போராட்ட நாடகம் ஒன்றை நடத்தியுள்ளனர். வவுனியாவில் அப்பாவி மக்களைப் பலவந்தமாக அழைத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார்கள். மீள்குடியேற்றம், நிலம், அச்சமற்ற வாழ்வு, சுதந்திரமான நடமாட்டம் இதிலேனும் ஒரு முன்னேற்றத்தை ஐ.நா. கொடுக்குமா என்பதுதான் ஈழ மக்களின் எதிர்பார்ப்பு. இந்தப் போரின் மீதும் இனப்படுகொலையின் மீதும் உலகம் ஒரு சிறிய பார்வையைக்கூட செலுத்தத் தவறியிருக்கிறது. போர்க் குற்றம், இனப் படுகொலை தொடர்பான விவகாரங்களில் உறுதி யான நடவடிக்கையை எதிர்பார்க்கிறார்களே அன்றி, அவர்கள் ஐ.நா. தீர்மானத்தை எதிர்க்கவில்லை!''


''இப்போது வன்னிப் பகுதிக்குச் சுற்றுலா வந்து செல்லும் சிங்களர்கள் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை எப்படிப் பார்க்கிறார்கள்?''




''தான் வாழும் பகுதியில் பார்க்கஇயலாத ஒன்றை இன்னோர் இடத்துக்குச் சென்று கண்டுகளிப்பதற்குப் பெயர்தான் சுற்றுலா. அந்த வகையில் வடக்குப் பகுதி தமிழ் மக்கள், சிங்களர்கள் வாழும் தென்னிலங்கைக்குச் சென்றால், அங்கே புத்தர் கோயிலையோ, சிங்களக் கலாசாரங்களையோ காண்பார்கள். ஏனென்றால், தங்கள் பகுதியில் அதைப் பார்க்க முடியாது. ஆனால், இப்போது யாழ், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற வட பகுதிகளிலும் கூட புத்தரை மட்டுமே காண முடிகிறது. போர், அனைத்துப் பிரதேசங்களிலும் இந்து ஆலயங்களை அழித்துவிட்டு புத்தரைக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இது சிங்கள மக்களுக்கு ஓர் இனிய மன எழுச்சியாக அமைந்துள்ளதால், இந்தப் போரைப் பெருமிதமான வெற்றியாக நினைக்கிறார்கள். அப்படித்தான் சிங்கள அரசு சிங்கள மக்களை வைத்திருக்க விரும்புகிறது. அந்தச் சிந்தனையும் பெருமிதமுமே ராஜபக்ஷே வின் வெற்றி!''


''எந்தச் சட்டதிட்டத்துக்கும் அடங்க மறுக்கிற இலங்கை அரசிடம், ஈழத் தமிழர்கள் இழந்த உரிமைகளை மீளப்பெற முடியுமா?''


''உலகின் மௌனமே இலங்கை அரசின் சண்டித்தனங்களுக்குக் காரணம். தன்னுடைய அரசியலுக்காக இலங்கை மீது இந்தியா கொண்டிருக்கும் பெரும் காதலும் ஒரு காரணம். எல்லா அரசுகளும் அதனதன் அளவில் செய்யும் கொலைகளுக்கு ஈடாக, தான் செய்த கொலைகளைக்கொண்டு நியாயம் கேட்கப்பார்க்கிறார் ராஜபக்ஷே. ஆனால், நடந்த இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் இந்த உலகம் நீதியை வழங்க மறுக்கும்போது, எங்கள் அடுத்த தலைமுறையும் போராட வேண்டிய நிர்பந்தத்துக்குள் தள்ளப்படுவார்கள்!''

thanx - vikatan

கேடி பில்லா கில்லாடி ரங்கா - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


கதையை நம்பாமல் காமெடியை மட்டுமே நம்பும் சமீப காலத் தமிழ் சினிமா டிரெண்டின் இந்த வார கோட்டா 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’!


வேலைவெட்டி இல்லாத விமலுக்கும் சிவ கார்த்திகேயனுக்கும் அரசியல்வாதி ஆக ஆசை. அப்பாக்களே பிரிக்க முடியாத இருவரின் நட்பை, காதல் பிரிக்கிறது. அரசியலிலும் காதலிலும் ஜெயிக்க மீண்டும் கைகோக்கும் நண்பர்கள், இரண்டிலும் ஜெயித்தார்களா என்பது... சற்றே நீளமான காமெடிக் கதை!  


'பசங்க’, 'மெரினா’ படங்களின் இயக்குநர் என்ற எதிர்பார்ப்பைப் படத்தின் ஐந்தாவது நிமிடத்தில் வரும் 'ஒரு பொறம்போக்கு’ பாடலே அடித்துக் காலி செய்துவிடுகிறது. கதை, திரைக்கதைக்கெல்லாம் கொஞ்சமும் அலட் டிக்கொள்ளவில்லை இயக்குநர் பாண்டிராஜ். சிவகார்த்திகேயன், விமல், பரோட்டா சூரி மூவரின் ஸ்டாண்ட்-அப், ரைமிங் டைமிங் காமெடி படத்தைக் காப்பாற்றிவிடும் என்று நம்பியிருக்கிறார்.


குறும்பு பாடி- லாங்குவேஜ், கேலி வசன உச்சரிப்பு, அடிக்கடி மிமிக்ரி என 'பட்டை’ முருகனாகப் பட்டை கிளப்புகிறார் சிவகார்த்திகேயன். 'உங்க அப்பா வர்ற நேரம் வந்திருச்சா... அப்போ நான் கிளம்புற நேரம் வந்திருச்சு’, 'கடத்திட்டுப் போய் அடிச்சா பரவாயில்லை... தலையிலேயே கொட்டுனாங்க’ என்று காதலுக்காக மிரளும் இடமெல்லாம் லகலகக்கவைக்கிறார். பிந்து மாதவியிடம் அடி வாங்கும் அம்மாஞ்சி கைப்புள்ளயாக விமல்.



'வெட்டி ஆபீஸர்’களைக் காதலிக்கும் இலக்கணம் மீறாத ஹீரோயின்கள் பிந்து மாதவி, ரெஜினா. திருத்தமான அழகுடன் ஹீரோக்களைத் திருத்த முயற்சிக்கிறார்கள்.


தண்டச்சோறு மருமகனாக சூரி. வில்லன்களிடம் அடிவாங்கும்போது, 'என் பொண்டாட்டியை விடவா நீங்க அடிச்சிரப்போறீங்க?’ என்று கெத்து காட்டுவதும், 'சீரியஸாப் பேசிட்டு இருக்கும்போது நீ மட்டும் குடிக்காதே... நல்லா இல்லை’ என்று நண்பனை வாருவதுமாக இரண்டு ஹீரோக்களுக்கும் ஈடு கொடுத்துக் கலகலக்கிறார்.  

கதைக் களத்தை மீறாமல் திருச்சியின் இயல்பை இயல்பாகப் பதிவுசெய்திருக்கிறது விஜயின் கேமரா. யுவன்ஷங்கர் ராஜா இசையில் 'கொஞ்சும் கிளி...’, 'பொறம்போக்கு...’ பாடல்கள் 'கேட்கலாம்’ ரகம்.



இரண்டரை மணி நேரப் படத்தில் கடைசி 15 நிமிடத்தில் கருத்து சொல்லும் படலம். அப்பாக்களின் வலியை டெல்லி கணேஷ் பிரமாதமாகச் சொன்னாலும், அதற்கு முந்தைய காட்சி வரை அவரை காமெடி பீஸாகக் கலாய்த்திருப்பதால், நெகிழவைக்காமல் நெளியவைக்கின்றன அந்த அறிவுரைகள்!


காமெடிக் கேடி கிச்சுகிச்சுக் கில்லாடியை முன்னிலைப்படுத்தியதில், 'இயக்குநர்’ பாண்டிராஜைத்தான் இதில் காணவில்லை!


thanx- விகடன் விமர்சனக் குழு

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)


சென்னையின் நான்கு முனை சந்திப்பு ஒன்றில் நடக்கும் விபத்து, யார் யாருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போடுகிறது என்பதே... 'சென்னையில் ஒரு நாள்!’

சென்னையில் மூளைச் சாவு அடைந்த ஹிதேந்திரனின் இதயம் சில நிமிடங்களில் தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேருக்கு அசுர வேகத்தில் கொண்டுசெல்லப்பட்டு, சிறுமி அபிராமிக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.


 அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு மலையாளத்தில் வெளியான 'டிராஃபிக்’ படத்தின் தமிழ் ரீமேக், 'சென்னையில் ஒரு நாள்’. பதற்றத்தில் கார் ஓட்டும் அக்ஷரா, முதல் நாள் வேலை உற்சாக சச்சின், துரோகத்தால் பொருமும் பிரசன்னா, பணியிடை நீக்கத்துக்குப் பிறகு மீண்டும் வேலையில் சேரும் சேரன், மகளைப் பார்க்க மருத்துவமனை விரையும் நடிகர் பிரகாஷ்ராஜ், கெடுபிடி கமிஷனர் சரத்குமார் என எக்கச்சக்கப் பாத்திரங்களைக் கச்சிதமாகத் திரைக்கதைக்குள் பின்னிய வகையில் இயக்குநர் ஷஹீத் அசத்துகிறார்.  

சச்சின் (அறிமுகம்) - பார்வதி, பிரசன்னா - இனியா என ஜூனியர் ஜோடிகளுக்கு சின்ன ரோல்தான். ஆனாலும் அசரடிக் கிறார்கள். சீனியர் ஜோடிகள் பிரகாஷ்ராஜ் - ராதிகா, ஜெயப்பிரகாஷ் - லட்சுமி ராமகிருஷ்ணன், சேரன் - மல்லிகா... பாத்திரங்களுக்கு மிகவும் பாந்தமாகப் பொருந்துகிறார்கள்


.

ஒரு பேட்டியில், 'எனக்கு எல்லாமே என் குடும்பம்தான்!’ என்று பந்தா செய்யும் 'ஷைனிங் ஸ்டார்’ பிரகாஷ்ராஜிடம், 'உங்க மகளுக்குப் பிடிச்ச டீச்சர் யார்?’ என்று கேட்கப்பட, 'கட்’ சொல்லி 'டச்-அப்’ என்று நேரம் வாங்கி, மகளிடம் டீச்சர் பெயர் கேட்டுப் பிறகு சமாளிக்கும் இடத்தில்... பிரகாஷ்ராஜ் செம செம. மருத்துவமனையில் இருந்து வந்த அலைபேசி அழைப்பிலேயே செய்தி உணர்ந்து, லஷ்மி ராமகிருஷ்ணனும் ஜெயப்பிரகாஷ§ம் கலங்குமிடம்... கலக்கம்! அதிகம் பேசாமல், முதுகு காட்டி விம்மி அழாமல் ஸ்கோர் செய்கிறார் சேரன்.


'ஒவ்வொரு நாளும் நமக்காக என்ன ஆச்சர்யங்கள் வெச்சிருக்குனு நமக்குத் தெரியாது’, 'என்னால முடியுமா... முடியாதான்னு தெரியாத ஒரு வேலை!’, 'படத்தோட பப்ளிசிட்டிக்கு என் பேர் இருக்கே... போதாதா?’ என எளிமையாக வசீகரிக்கும் அஜயன் பாலாவின் வசனம் படத்தின் பெரும் பலம். சந்துபொந்துகளுக்குள் வளைந்து நெளிந்து சென்று டென்ஷன் கிளப்பும் ஷஹநாத் ஜலாலின் ஒளிப்பதிவு விறுவிறு.


'பருவநிலை சரியில்லை’ என்று ஹெலிகாப்டரில் பயணிக்க முடியாது என்கிறார்கள். ஆனால், மருத்துவமனை வளாகத்துக்கு வெளியே வெயில் வெளுத்துக்கட்டுகிறதே? அதைவிடச் சிறந்த பருவநிலை வேண்டுமா என்ன? அத்தனை நவீன வசதிகள் நிரம்பிய கட்டுப்பாட்டு அறையெல்லாம் வைத்திருப்பவர்கள், சேரன் பயணிக்கும் காரில் சிம்பிளாக ஒரு ஜி.பி.எஸ். கருவியைப் பொருத்தியிருக்க மாட்டார்களா என்ன?



திகுதிகு திரைக்கதையில் ஜிந்தா காலனி, சூர்யா ரசிகர்கள் எல்லாம் செட்டப் டிராமா!


இருந்தாலும், 'உடல் உறுப்புத் தானம்’ என்ற நல்ல விஷயத்தை சுவாரஸ்யமாகச் சொன்னதற்காக, இந்த ஒரு நாளைக் கொண்டாடலாம்!  

thanx - vikatan