Thursday, April 04, 2013

மனைவிக்கும் , மச்சினிக்கும் நடுவில் அமர்ந்து தியேட்டரில் படம் பார்ப்பது ....

1. குடும்ப வாழ்வில் நடு நிலைமை வகிப்பது என்பது மனைவிக்கும் , மச்சினிக்கும் நடுவில்  அமர்ந்து  தியேட்டரில் படம் பார்ப்பது ;-)



----------------------


2.ஜட்ஜ் - இந்த வழக்குல உன் பக்கம் வாதாட வக்கீல் வெச்சுக்கறியா? 



கைதி - நமீதா ஜட்ஜா இருந்தா  ஜட்ஜை யே வெச்சுக்கலாம் , ஹூம்


-----------------------


3. கேரளா ஃபிகரையோ , ஆந்திரா ஃபிகரையோ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டா  பரஸ்பரம் 2 பேர் பேசறதும் 2 பேருக்கும் புரியாது, செம ஜாலியா இருக்கும் லைஃப்



----------------------------


4. மணமான பெண்களில் 2 வகை 1.புருஷன் பேச்சை சட்டை செய்யாதவர்கள் 2புருஷனையே சட்டை செய்யாதவர்கள்




--------------


5. இரண்டு முத்தங்களுக்கு இடையே போதிய இடைவெளி விடலாம், ஆனால் இரண்டு செட் உதடுகளுக்கு இடையே இடைவெளி விடக்கூடாது





--------------------


6. மிஸ்! உங்களை நான் எப்படி கூப்பிட?



 உங்க மேரேஜ்க்கா? பணம் பாக்கு வெத்திலை வெச்சு கூப்பிட்டா போதும்



-------------------------------------


7.  முதல் இரவில் கணவன் - டியர், நான் சந்தோஷமா இருக்கும்போதெல்லாம் கவிதை எழுதுவேன்.



நாசமாப்போச்சு ,கிழிஞ்சுது கிருஷ்ணகிரி



-------------------



8. நாளை முட்டாள்கள் தினம், அதாவது திருமணம் ஆன அப்பாவி ஆண்கள் தினம்



----------------------


9. டி வி பார்க்கும்போது இடைல வர்ற விளம்பரங்களை பார்க்க மாட்டேன் .



.என்னது? ”இடை”ல கூட விளம்பரமா? எங்கே எங்கே?



----------------------------



10 நீயாக ஏதாவது கேட்”பாய்” எனவும் , ஏதாவது சொல்”வாய்” எனவும் காத்திருந்”தேன்” ;-))



---------------------------



11. டியர், நான் எல்லா சப்ஜெக்ட்லயும் தலா 96 மார்க் ,




இது என்ன பிரமாதம்? நான் எல்லா சப்ஜெக்டல்யும் 69 மார்க்


---------------------


12. காலேஜ் ல ரூட்டு தல -ன்னு உதார் விட்டவன் மேரேஜ்க்குப்பின் சம்சாரம் கிட்டே உருட்டு தல ஆகி நொந்திருப்பான்



-------------------


13. நகைக்கடை விளம்பரத்தில், கடை ஓனரை ஏன் காட்டறாங்க? :-)



ஓனர் சம்சாரத்தை காட்டுனா ஆளாளுக்கு சைட் அடிச்சுட்டுப்போயிடுவானுங்களே, அதான்



---------------------


14. அத்தான் , 1 + 1 = 3 எப்டி வரும்?



இப்போ நாம 2 பேரும் மேரேஜ் பண்ணிக்கிட்டோம், தண்டமா உங்கம்மாவும் நம்ம கூட இருக்காங்களே, அதான்



-----------------------


15. நல்ல வாய் ப்பு கிடைக்கும்போது தயங்கிட்டோ யோசிச்சுட்டோ இருக்காதே ;-)) # கிஸ்சாலஜி



----------------------


16. டியர்.கிஸ் வேணும்.கடனாக்குடுத்தா உடனே திருப்பிக்குடுத்துடுவேன்.



சாரி.மாசக்கடைசி.ரொம்ப DRYயா இருக்கு



-------------------------------------


17. மாப்ளை வீட்டுக்கு போட்டோ தரும்போது பொண்ணோட இடது சைடு போஸ் தர மாட்டாங்க ;-)்




---------------------


18, மம்தா மனதை வதைக்கும்! மம்தா பேனர்ஜி நாட்டை சிதைக்கும்



-------------------


19. ஆம்பளை வெச்சிருக்கும் டி பி அழகா இருக்குன்னு ஒரு ஆம்பளை கூட சொல்றதே இல்லை ( என்னையும் சேர்த்து) ;-)



-------------------


20 என்னை வேணாம்னு சொன்ன பொண்ணுங்க லிஸ்ட் எடுத்தா தனியா ஒரு கொயர் நோட்டு வேணும் # பெண் பார்த்த படலம்



------------------------



21. இலங்கையில் நடந்தது போரும் அல்ல, இனப்படுகொலையும் அல்ல -சோ # சோகம்னா என்னன்னே சோ வுக்குத்தெரியாது போல



-----------------------


22. சிவனை பார்ப்பதற்காக விஷத்தை சாப்பிட்ட 5பேர் பலி # பரலோகம் போய் பார்வதி சகிதமா பார்த்திருப்பாங்ளோ?



-----------------------------


23. தசரதருக்கு 60,000 மனைவிகள்னா மச்சினிங்க எப்படியும் லட்சத்தை தாண்டி இருக்கும் ;-)



---------------------


24. ராமன் காட்டுக்குப்போகும்போது விபரமா தன் சம்சாரத்தைக்கூட்டிட்டுப்போய்ட்டாரு.தன் தம்பி கிட்டே சொல்லி ஊர்மிளாவையும் காட்டுக்கு கூட்டிட்டு வா னு ஏன் சொல்லலை?



-------------------


25.  ஊர் வாயை மூடிடலாம்.அணு உலை வாயை மூடிட முடியாது # கூடங்குளம்



------------------------


 கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143



கோயில் பிரசாதத்தை கூச்சப்படாமல் சாப்பிடுவது எப்படி? -அட்ரா சக்க ட்யூசன் சென்ட்டர் ,மேல தாவணி மூல வீதி .ஈரோடு -143

-

Wednesday, April 03, 2013

MBA - மூன்றெழுத்து மந்திரம்

MBA - மூன்றெழுத்து மந்திரம்
சுமையல்ல, சுரங்கம் ! 
எஸ்.எல்.வி.மூர்த்தி, படங்கள்: த.ரூபேந்தர்.
வீட்டில் வேலை பார்க்கும் பெண் லதா. குடிகார அப்பா. ஆஸ்துமா நோயாளி அம்மா. பள்ளிக்கூடம் படிக்கும் இரண்டு தங்கைகள். குடும்ப பாரத்துக்குத் தோள்கொடுக்க, படிப்பை ஒன்பதாம் வகுப்போடு முடித்துவிட்டு லதா வீட்டு வேலைகளுக்கு வந்துவிட்டாள். டி.வி., கேஸ் அடுப்பு என்று அரசாங்கம் கொடுக்கும் அத்தனை இலவச சாமான்களும் வீட்டில் உண்டு. லதா விலை கொடுத்து வாங்கிய ஒரே கருவி - செல்போன்.

மும்பை. ஜூலை மாதம், பேய்மழை பெய்கிறது. டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா காரில் வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். டிராஃபிக் ஊர்கிறது. டாடாவின் காரின் பக்கத்தில் ஒரு ஸ்கூட்டர். கணவன் ஓட்ட, மனைவி, இரண்டு சின்னக் குழந்தைகள். எல்லோரும் மழையில் தொப்பலாக நனைந்து, குழந்தைகள் குளிரில் நடுங்குகிறார்கள்.  


'ஸ்கூட்டருக்குப் பதிலாக இவர்களிடம் கார் இருந்தால், பத்திரமாக வீட்டுக்குப் போவார்களே? ஆனால், இவர்கள் வாங்கும் விலையில் கார் கிடைக்காதே? நடுத்தரத்துக்குக் கீழ் வாழும் மக்களுக்குக் கட்டுப்படியாகும் விலையில், நான்குபேர்கொண்ட சின்னக் குடும்பம் பயணம் செய்ய லாயக்கான கார் டாடா குழுமமே தயாரித்தால் என்ன?’ டாடாவின் சிந்தனை ஓடியது.


சில ஆண்டுகளுக்கு முன்பு வரை லதா வீட்டில் போன் கிடையாது. அவர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் கடையிலிருந்து போன் செய்யமுடியும். அம்மாவுக்குத் திடீரென ஆஸ்துமா பிரச்னை வந்துவிட்டால், உதவிக்கு லதாதான் ஓடிப்போகவேண்டும். பிற்பாடு ஆயிரம் ரூபாய்க்கு செல்போன் வாங்கிவிட்டார் லதா. ப்ரீபெய்டு ப்ளான். இன்கம்மிங் ஃப்ரீ திட்டம்.      


சீனிவாசன் தன் பழைய ஸ்கூட்டரை விற்று நானோ கார் வாங்கிவிட்டார். முழுக் குடும்பமும் விடுமுறை நாட்களில் ஜாலியாக பீச், சினிமா என்று போகிறார்கள். வசதிக்கு வசதி, ஆட்டோவுக்குத் தந்துவந்தப் பணமும் மிச்சம்.


லதா செல்போன் வாங்கக் காரணம்? ஏர்டெல்,. ஏர்செல், ரிலையன்ஸ், வோடஃபோன், ஐடியா ஆகிய எல்லாக் கம்பெனிகளும் தரும் இன்கம்மிங் ஃப்ரீ திட்டம்.


சீனிவாசன் நானோ கார் வாங்கக் காரணம்? கட்டுப்படியாகும் விலையில், குடும்பம் முழுக்கப் பயணம் செய்ய வசதியான நானோ கார்.

உலகம் முழுக்க, கோடிக்கணக்கான லதா-க்களும், சீனிவாசன்களும், இதுவரை நெருங்கியே பார்த்திருக்க முடியாத வசதிகளைப் பல நிறுவனங்கள் இப்போது தருகின்றன. இவர்கள் அத்தனைபேரும் நன்றி சொல்ல வேண்டிய மனிதர் - மேனேஜ்மென்ட் ஆலோசகர் அமரர் சி.கே. பிரகலாத். ஆமாம், அடிப்படைத்  திறமைக் கொள்கை (Core Competence)யை உருவாக்கிய அதே மாமேதைதான்! 


பிரகலாத் படைத்திருக்கும் இந்தக் கொள்கையின் பெயர் பிரமிடின் அடிபாகம் (Bottom of the Pyramid).பிரமிட் ஏழு உலக அதிசயங்களில் ஒன்று; எகிப்து நாட்டில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். பிரமிடுக்கும், மேனேஜ்மென்டுக்கும் என்ன சம்பந்தம் என்று ஆச்சரியப் படுகிறீர்களா?


ஒரு நிமிடம், பிரமிடின் தோற்றத்தை உங்கள் மனக்கண் முன்னால் கொண்டுவாருங்கள். பிரமிட் எப்படி இருக்கும்? அடிபாகம் நீண்ட சதுர வடிவமாக; பிரமிடின் நான்கு சரிவான முக்கோணப் பக்கங் களும் உச்சியில் ஒன்றாகச் சேரும்.            


வருமானத்தையும், மக்கள் தொகை எண்ணிக்கையையும் ஒரு வரைபடமாக்கினால், அந்தப் படம் பிரமிட்போல் இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டிடியூட் (World Resources Institute) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைத் தலைமைச் செயலகமாகக் கொண்டு இயங்கும் உலகளாவிய சமுதாயப் பொருளாதார ஆராய்ச்சி மையம். இவர்கள் உலக மக்களை, வருமான அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரிக்கிறார்கள்:


1.  வருட வருமானம் 3,260 டாலர்கள் வரை சம்பாதிப்பவர்கள் - ஏழைகள்!


2. 3,260 முதல் 20,000 டாலர்கள் வரை சம்பாதிப்பவர்கள் - நடுத்தர வர்க்கத்தினர்!


3. 20,000 டாலர்களுக்கும் அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் - பணக்காரர்கள்!  
ஒவ்வொரு பிரிவிலும் எத்தனைபேர் இருக்கிறார்கள் தெரியுமா?


ஏழைகள் - 400 கோடி
நடுத்தர வர்க்கத்தினர் - 200 கோடி
பணக்காரர்கள் - 50 கோடி


வருமானத்தையும், மக்கள்தொகை எண்ணிக்கையையும் வேர்ல்டு ரிசோர்ஸஸ் இன்ஸ்டிடியூட் வரைபடமாக்கினார்கள்.  


படம் எப்படி இருக்கிறது? பிரமிட் வடிவமாக இருக்கிறதல்லவா? இந்த பிரமிடின் அடிபாகம் என்பது என்ன? 400 கோடி ஏழைகள். அதாவது, Bottom of the pyramid.

ஏழைகளை எல்லா நாடுகளும், பொருளாதாரமும், பிஸினஸும் செலவு வைக்கும் கூட்டமாகத்தான் பார்க்கிறது. ஏனென்றால், இவர்கள் வருமான வரி கட்டுவதில்லை. அரசாங்கங்களும், இவர்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுக்கின்றன.

பிஸினஸ்மேன்களின் பார்வையில் ஏழைகள் படுவதே கிடையாது. தங்கள் பொருட்களைப் பணம் கொடுத்து வாங்க முடியாதவர்களை பிஸினஸ் எப்படி மதிக்கும்? இதற்காக பிஸினஸைத் தப்பு சொல்ல முடியாது. கஸ்டமர்களையும் கஸ்டமர்களாக மாற வாய்ப்பு இருப்பவர்களை பற்றியும் மட்டும்தானே பிஸினஸ் அக்கறை காட்டும்! இதனால்தான் பிஸினஸ்மேன்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களை எப்போதும் உயர்மட்ட, நடுத்தர மக்களை மட்டுமே மனதில் கொண்டு உருவாக்குகிறார்கள்.


நீங்கள் ஐஸ்க்ரீம் கடை தொடங்குகிறீர்கள். வெண்ணிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி, டூட்டி ஃப்ரூட்டி, லிச்சி என்று வகைவகையான ஐட்டங்களை விற்பனை செய்வீர்கள். ஒரு குட்டி கப் 20 ரூபாய். குச்சி ஐஸ் விற்கமாட்டீர்கள். ஏனென்றால், குச்சி ஐஸ் ஏழைகள் மட்டுமே வாங்கும் ஐஸ். அதன் விலை 4 ரூபாய். எத்தனை ஏழைகள் அதை வாங்குவார்கள்? 4 ரூபாய் விற்பனையில் லாபமும் குறைவு.        


நம் எல்லோரையும்போல்தான், பிஸினஸ்மேன்களும் அடித்தட்டு மனிதர்களைக் கண்டுகொள்வதே இல்லை. இவர்கள் சுமை என்பது எல்லோருடைய ஒருமித்த கணக்கீடு. இவர்கள் சுமையல்ல, சுரங்கம்; அதுவும் தங்கச் சுரங்கம் என்னும் புரட்சிகரமான கருத்தை 2004-ல் பிரகலாத் வெளியிட்டார். பிஸினஸ் நிறுவனங்கள் அடிமட்ட, நடுத்தர, உயர்மட்ட வர்க்க மக்களை இலக்காக்கித் தங்கள் பிஸினஸ் வியூகங்களை வகுக்கவேண்டும். அப்போதுதான் நிலைத்த வெற்றி காணமுடியும் என்கிறது இந்தக் கொள்கை. Fortune at the Bottom of the Pyramid என்கிற ஆராய்ச்சிக் கட்டுரையாகப் பிரகலாத் இதை எழுதினார்.    


மேனேஜ்மென்ட் உலகின் டாப் 10 பிஸினஸ் சிந்தனையாளர்களில் (Top 10 Business thinkers of the world) ஒருவர் என்று பிரகலாத்தை உலகம் போற்றிய காலகட்டம் அது. இருந்தபோதிலும், பிரபல பத்திரிகைகள் இந்தக் கட்டுரையை வெளியிட மறுத்தன. இந்த எதிர்ப்புகளையெல்லாம் மீறி, கட்டுரை வெளியானது. எதிர்ப்பு, எதிர்ப்பு, எதிர்ப்பு.

2004-ல் நாமும் பிரகலாத்தின் கொள்கையைக் கேலி செய்திருப்போம். ஆனால், கூர்மையாகக் கவனித்திருந்தால், பிரகலாத் கொள்கையைச் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கும் பிஸினஸ் அனுபவங்கள் இந்தியாவிலேயே  அநேகம் இருந்தன. உதாரணத்துக்கு இரண்டு:
1959-ல் லீவர் கம்பெனியின் ஸர்ஃப் சோப் பவுடர்தான் நம்பர் 1. கிலோ 13 ரூபாய். அப்போதைய விலைவாசியில் பணக்காரர்கள் மட்டுமே வாங்க முடிந்தது. வேலைச் சுமையைக் கணிசமாகக் குறைக்கும் சோப் பவுடரை ஏழை மக்களும் வாங்கவேண்டுமென்று அஹமதாபாத் நகரத்தில் வாழ்ந்த கஸன்பாய் பட்டேல் ஆசைப்பட்டார். கிலோ 3 ரூபாய்க்கு நிர்மா சோப் பவுடரை அறிமுகம் செய்தார். 100 கோடி தாண்டிய நிர்மா குழுமம் உருவானது. கஸன்பாய் பட்டேல் பயன்படுத்தியது Bottom of the Pyramid கொள்கை.



1980 காலகட்டம். லீவர், பாண்ட்ஸ் ஆகிய கம்பெனிகள் ஷாம்பூவை 100 மில்லி, 200 மில்லி பாட்டில்களில் விற்பனை செய்தன. விலை சுமார் 10 ரூபாய், 20 ரூபாய். இதனால், வசதி உள்ளவர்கள் மட்டுமே ஷாம்பூ வாங்கினார்கள். கடலூரைச் சேர்ந்த சின்னி கிருஷ்ணன்,


5 மில்லி சாஷேக்களில் வெல்வெட் ஷாம்பூ விற்பனை செய்யத் தொடங்கினார். லீவர், பாண்ட்ஸ் ஆகிய பன்னாட்டுக் கம்பெனிகளே அவரைப் பின்பற்றி ஷாம்பூவை சாஷேக்களில் விற்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டன. சின்னிகிருஷ்ணன் பயன்படுத்தியது Bottom of the Pyramid கொள்கை.


விரைவிலேயே, பிரகலாத்தின் கொள்கை சரியானது, கடைப்பிடிக்கக்கூடியது, வெற்றி தரக்கூடியது என்பதை மேனேஜ்மென்ட் உலகம் உணர்ந்தது, ஏற்றுக்கொண்டது. ஏராளமான கம்பெனிகளின் யுக்திகளில் முக்கிய அம்சமானது.


பிரகலாதின் Bottom of the Pyramid கொள்கையைப் பின்பற்றிய சில கம்பெனிகளின் வெற்றி அனுபவங்கள் இதோ:


கோத்ரெஜ், 3,250 ரூபாய் விலையில், பாட்டரி யில் இயங்கும் ஃப்ரிட்ஜ் அறிமுகம் செய்தது.


பிலிப்ஸ் கம்பெனியின் சோலார் விளக்குகள்.

பிரிட்டானியா, சன்ஃபீஸ்ட் ஆகியோர் கொண்டுவந்திருக்கும் ஐந்து  ரூபாய்க் கையடக்க பிஸ்கெட் பாக்கெட்கள்.



பிஸினஸ் நடத்துகிறீர்களா? போட்டியாளர் களிடமிருந்துதான் அதிக விற்பனையைப் பிடுங்கவேண்டும் என்பதில்லை. உங்கள் தயாரிப்புப் பொருட்களில் மாற்றம் செய்து, அடித்தட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள். உங்கள் தங்கச் சுரங்கம் Bottom of the Pyramid -ல் இருக்கலாம்.  

thanx - vikatan
 

மக்கள் மனசு - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட் - part 3


மக்கள் மனசு - ஜூ.வி. சர்வே அதிரடி ரிசல்ட்


தொடர் சர்வே நடத்தி வருகிறது ஜூ.வி. 25 கேள்விகள் கொண்ட முதல் கட்ட சர்வே முடிவுகள் கடந்த இரண்டு இதழ்களில் வெளியாகின. அதைத் தொடர்ந்து, 23 கேள்விகள் அடங்கிய இரண்டாம் கட்ட சர்வே பணியை ஜூ.வி. டீம் மின்னல் வேகத்தில் நடத்தி முடித்திருக்கிறது.


 2,701 நபர்களை தமிழகம் முழுவதும் பட்டிதொட்டி எங்கும் சந்தித்தது ஜூ.வி. நிருபர் படை. கிராமம், நகரம் எனப் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்ற சர்வேயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். விகடன் இணையதளமான விகடன் டாட் காம் மூலமும் சர்வே நடத்தப்பட்டது. இதில், 5,055 நபர்கள் பங்கெடுத்தனர். மொத்தமாக 7,756 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த சர்வே முடிவில் அத்தனை சுவாரஸ்யம்.

மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகியது தொடர்பான கேள்விக்கு... தாமதமான முடிவு, எந்தப் பயனும் ஏற்படாது என்ற இரண்டு பதில்களிலும் சரிசமமாக டிக் அடித்திருந்தனர்.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமா என்ற முக்கியமான கேள்விக்கு, 'ஆம்’ என 75 சதவிகித நபர்கள் கருத்து சொல்லியிருக்கின்றனர்.

தமிழக அமைச்சர்கள் செயல்படவே இல்லை என 52 சதவிகிதத்தினர் சொல்லியிருக்கிறார்கள்.

தி.மு.க-வின் அடுத்த தலைவராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு, ஸ்டாலின் என்று 60 சதவிகித நபர்கள் டிக் அடித்துள்ளனர்.  

 
a
thanx - vikatan

ஸ்டெர்லைட் ரகசியம் - வைகோ! @ ஜூனியர் விகடன்


வளைக்கப் பார்த்தார் அந்த ஆலையின் அதிபர்!
ஸ்டெர்லைட் ரகசியம் சொல்லும் வைகோ!


ஆலையைப் பூட்டும் உத்தரவு வந்ததுமே அனைவரும் வாழ்த்து சொன்னது வைகோவுக்குத்தான். 'இது எங்களின் தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி’ என்று, ம.தி.மு.க-வினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அங்கும் சென்று வைகோ வாதாடினார். ஏப்ரல் 2-ம் தேதி, உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லி செல்வதற்கு வழக்கறிஞர் தேவதாஸு​டன் தயாராகிக்கொண்டு இருந்த வைகோவை அவரது அண்ணா நகர் வீட்டில் சந்தித்தோம். 

''ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று, இந்தப் பிரச்னையை நீங்கள் எப்போது கையில் எடுத்தீர்கள்?'


''என்னுடைய வாழ்நாளில் வரலாற்று முக்கியத்​துவம் வாய்ந்த ஒரு சாதனையைப் படைத்த மனநிறைவோடு, உங்களைச் சந்திக்கிறேன். மக்கள் மன்றத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு இன்று ஒரு விடிவு பிறந்துள்ளது. இன்று, சுற்றுச்சூழல் குறித்த விழிப்பு உணர்வு ஓரளவு உருவாகியுள்ளது. ஆனால், இந்த ஆலையை அவர்கள் தொடங்கத் திட்டமிட்டபோது அப்படி இல்லை. 'வளர்ச்சியைத் தடுக்கிறோம்’ என்றுகூட சிலர் பிரசாரம் செய்தனர். எனவே, மக்களிடம் விழிப்பு 
உணர்வை ஏற்படுத்துவதில் இருந்தே தொடங்கினோம்.

1994-ம் ஆண்டு மஹாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கினர். அந்த ஆலையில் இருந்து விஷப் புகை வெளி​யேறினால் விவசாயம் பாதிக்கப்படும் என்று, அந்த மாவட்ட மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் கொந்தளித்துப்போன மக்கள், இரும்புக் கம்பி, சம்மட்டி சகிதமாகச் சென்று அந்த ஆலையை அடித்து நொறுக்கினர். மக்கள் போராட்டமாக அது வெடித்தது. உடனே, அந்த மாநில அரசு ஆலையின் லைசென்ஸை ரத்துசெய்துவிட்டது. கோவாவில் தொடங்க அரசிடம் அனுமதி கேட்டனர். அங்கு அனுமதி கிடைக்கவில்லை. குஜராத் சென்றனர். அங்கேயும் அனுமதிக்கவில்லை. அதன் பிறகுதான், தமிழகத்துக்கு வந்தனர்.
தமிழ்நாட்டில் அனுமதி கிடைத்துவிட்டது. ஆலையைச் சுற்றி 250 மீட்டர் சுற்றளவுக்குப் பசுமை அடர்த்தி இருக்கவேண்டும் என்பது தளர்த்தப்பட முடியாத விதிமுறை. ஆனால், எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் ஆலையை அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினர். தூத்துக்குடி பகுதியில் உள்ள மீனவர்கள் அந்தக் காலகட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கக் கூடாது என்று போராட்டம் நடத்தினர். இந்த ஆலையைத் தொடங்கினால் என்ன மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பதை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தினோம். சரியாகச் சொன்னால் 1996-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி தூத்துக்குடியில் உண்ணாவிரதம் இருந்தது முதல், கடந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இறுதி வாதத்தை எடுத்துவைத்தது வரை இந்த 17 ஆண்டு காலமும் என்னுடைய முக்கியமான வரலாற்றுக் கடமையாக இதைச் செய்தேன்.''


''இந்த ஆலையின் செயல்பாடுகள் காரணமாக எப்படிப்​பட்ட பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறீர்கள்?''


''நிலம், நீர், காற்று ஆகிய மூன்றுமே மாசுபடு​கிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் மாசுபடுகிறது. நச்சுக் காற்றை சுவாசிப்பதால், மக்களுக்குப் புற்றுநோய் ஏற்படும். ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மக்கள் புற்றுநோயால் இறந்துள்ளனர். அவர்கள் மரணத்துக்குக் காரணம் புற்றுநோய் என்பதுகூட தெரியாத அறியாமையில் இருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே வசிக்கும் மக்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் மாசுபட்ட நிலத்தடி நீரைக் குடித்ததால் செத்து மடிந்திருக்கிறது.


 இங்கிருந்து மாதிரி எடுத்து அனுப்பப்பட்ட தண்ணீரை ஆய்வுசெய்த உலகப் புகழ்பெற்ற அமெரிக்கச் சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செரானி, 'இந்தத் தண்ணீரைக் குடித்தால், மனிதர்களுக்கு கேன்சர் ஏற்படும். கால்நடைகள் இறந்துவிடும்’ என்று அறிக்கை கொடுத்துள்ளார். இவை அனைத்தும் இத்தனை ஆண்டு காலம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. மார்ச் 23-ம் தேதி காலை லேசாக நச்சுவாயு வெளியேறியபோது மரங்களில் இருந்த இலைகள் பட்டுப்போயுள்ளன. பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்படியானால் பெரிய பிரச்னை ஏதாவது ஏற்பட்டால், பாதிப்பின் அளவு அதிகரிக்கும். இன்னொரு போபால், தென்தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பதறித்தான் இந்த விஷயத்தைக் கையில் எடுத்தோம்.

'எங்களை, எங்கள் பிள்ளைகளை, பேரப்​பிள்ளைகளை ஆரோக்கியமாக வாழவிடுங்கள். ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்துங்கள்’ இப்படி ஓர் துண்டுப் பிரசுரம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக் கதவிலும் ஒட்டப்பட்டுள்ளது. இதுதான் உண்மை.''


''உங்களது மனதை மாற்றும் காரியத்தில் அந்த நிறுவனம் இறங்கவில்லையா?''


''எனது பொது வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கியமான சோதனை, இந்தப் பிரச்னை. எத்தனையோ முறை, யார் யாரோ என்னை வந்து பார்த்து இந்த விவகாரத்தில் இருந்து என்னை அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று துடித்தனர். ஆனால், யாருக்கும் நான் இடம் கொடுக்கவில்லை. நீதித் துறையில் இருந்த மிக முக்கிய​மான, நான் மதிக்கக்கூடிய மனிதர் ஒருவர்  என்னை போனில் அழைத்து, 'உங்களைப் பார்க்க வரணும்’ என்று நேரம் கேட்டார். நானும் வரச் சொன்னேன். குறிப்பிட்ட நாளில் எங்கள் கட்சி அலுவலகமான தாயகத்தில் நான் காத்திருந்தேன். அவரும் வந்தார். 

'ஸ்டெர்லைட் பற்றி தவறான தகவல்கள் உங்களுக்குச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நீங்கள் நினைக்கும் அளவுக்கு அது சுற்றுச்சூழலைப் பாதிக்காது. ஸ்டெர்லைட் சேர்மன் அனில் அகர்வால் உங்களைச் சந்திக்க ஆசைப்படுகிறார். நீங்கள் நேரம் ஒதுக்கிக் கொடுத்தால், அவர் உங்களை வந்து பார்க்கத் தயாராக இருக்கிறார். அதுக்காகத்தான் நான் டெல்லியில் இருந்து வந்தேன்’ என்றார். 'நீங்க தப்பா நினைக்காதீங்க. எனக்கு அவரைப் பார்க்க விருப்பம் இல்லை’ என்று சொன்னேன். 'அவரைப் பார்க்கிறதுல என்ன தவறு?’ என்று அவர் கேட்டார். 'எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க. நான் அவரை எதற்காகச் சந்தித்தாலும் தவறாகத்தான் பேசப்படும். எனக்கு அகர்வாலைப் பார்க்க விருப்பம் இல்லை. ஸ்டெர்லைட் சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்று சொல்லிட்டேன். அவர் வருத்தத்துடன் திரும்பிச் சென்றுவிட்டார்.


அதன் பிறகு ஒருநாள், டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு தம்பதி வந்தனர். கணவன் என்னிடம், 'தமிழகத்தின் முக்கியமான தலைவர் நீங்கள். உங்களுக்கு முதல்வராகும் தகுதி இருக்கிறது’ என்று புகழ்ந்தார். அவரது விசிட்டிங் கார்டை என்னிடம் கொடுத்தார். அதில் 'அனில் அகர்வால், மேனேஜிங் டைரக்டர் - ஸ்டெர்லைட்’ என்று இருந்தது. 'வைகோ எனக்கு உங்களிடம் பேச பத்து நிமிடம் நேரம் வேண்டும். நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள்’ என்றார்.


 'ஸாரி மிஸ்டர் அகர்வால்.. எனக்கு உங்களிடம் பேச விருப்பம் இல்லை. வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அங்கே பார்த்துக்கொள்ளலாம்’ என்று சொல்லி​விட்டேன். இருபது நாட்களுக்குப் பிறகு, டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்தேன். என்னுடைய பக்கத்து சீட்டில் அதே அகர்வால் உட்கார்ந்து இருந்தார். எனக்கு வணக்கம் சொன்னார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு, ஸ்டெர்லைட் வழக்கு சம்பந்தமான ஃபைலைப் படித்துக்கொண்டே வந்தேன். அவர் ஏதோ புத்தகம் படித்தார். அருகருகே இருந்தும் இரண்டே கால் மணி நேரமும் எதுவும் பேசவில்லை. இப்படி எத்தனையோ முறை அவர்கள் என்னை வளைக்கப் பார்த்தனர். ஆனால், நான் உறுதியாக இருந்தேன். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும், இல்லை என்றால் அது தூத்துக்குடி வட்டாரத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதில், எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.''


''ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகளில் நீங்களே ஆஜராகி வாதாடி வருகிறீர்களே?''


''நான் சட்டம் படித்தபோது, 'தவறான ஆட்களுக்​காகவும் ஆஜராக வேண்டி வருமே?’ என்று என்னுடைய அக்கா கேட்டார். மூன்று தமிழர்களின் தூக்குக்கு எதிராகவும் புலிகள் மீதான தடையைக் கண்டித்தும் இப்போது ஸ்பெக்ட்ரம் ஆலை விவகாரத்திலும் நானே வாதாடியபோது, நியாயமான காரியங்களுக்காக வாதாட இந்த சட்டப் படிப்பு பயன்பட்டது என்ற மனநிறைவை அடைகிறேன்.

 உச்ச நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஆஜராக நான் காத்திருந்தேன். அப்போது, அங்கே வந்த இரண்டு போலீஸார் என்னிடம், 'நீங்கள் இங்கே உட்காரக் கூடாது. வெளியே போங்க’ என்று விரட்டினர். நான் வாதாட வந்திருக்கிறேன். எனக்கு பாஸ் இருக்கிறது என்று சொல்லியும் கேட்கவில்லை. அங்கிருந்த வழக்கறிஞர்கள் எனக்காகப் பேசிய பிறகுதான் அந்தப் போலீஸார் அமைதி அடைந்தனர். நான் வாதாட வேண்டிய நேரத்தில், முன்வரிசையில் காலியாக இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

 பக்கத்​தில் உட்கார்ந்திருந்த ஒரு வழக்கறிஞர், 'இந்த ஸீட்டில் நீங்கள் உட்காரக் கூடாது. வேறு ஒருவர் வருகிறார் எழுந்திருங்கள்’ என்றார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது. தலை குனிந்தபடி எழுந்தேன். ஆனால் நீதிபதி ரவீந்திரன் இதைக் கவனித்திருக்கிறார். அந்த வழக்கறிஞரைப் பார்த்து, 'இவர் மிஸ்டர் வைகோ. வழக்கில் ஆஜராக வந்திருக்கிறார். அவரை எப்படி உட்காரக் கூடாது என்று நீங்கள் சொல்லலாம்? நீங்க உட்காருங்க மிஸ்டர் வைகோ’ என்று சொன்னார். நான் அதிர்ந்துவிட்டேன்.


 உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு நீதிபதி என்னை அறிந்து இப்படிச் சொன்னது, காயம்பட்ட மனசுக்கு மருந்து போட்டதைப் போல இருந்தது. என்னைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டும் வகையில் ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சொன்னபோது, 'ஸ்டெர்லைட் ஆலையை ரத்னகிரியில் சம்மட்டியை வைத்து மக்கள் அடித்து நொறுக்கினர். நாங்கள் அப்படிச் செய்யவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கும் என்றுதான் நீதிமன்றத்துக்கு வந்திருக்கிறோம். இங்கும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நாங்கள் எங்கே போவோம்? இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை இல்லை. எங்கள் மக்களின் பிரச்னை!’ என்று உணர்ச்சிவசப்பட்டு நான் பேசுவதற்கும் நீதிபதிகள் அனுமதித்தனர். நான் மனநிறைவுடன் செய்த வாதம் அது. நீதிமன்றத்தில் எத்தகைய தீர்ப்பு வந்தாலும், ஆலையைப் பூட்டும் வரை எனது போராட்டம் தொடரும்.''


''நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் உடனுக்குடன் ஜெயலலிதா நிறை​வேற்றுகிறாரே... அதன் ரகசியம் என்ன?''


(சிரிக்கிறார்) ''காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரிதான்... எல்லாமே தற்செயலாக நடந்தது. இலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். முதல்வர் அதைச் செய்தபோது, எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. நான் சொன்னதால்தான் அவர்கள் நிறைவேற்றினார் என்று சொல்லவில்லை. சேவல் கூவவில்லை என்றாலும் பொழுது விடியும். நான் கூவியதால்தான் பொழுது விடிந்தது என்று சேவல் நினைத்தால், அது சேவலின் அறியாமை. எங்களுக்குக் காரியம் நடக்கிறது. அது போதும். பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!''  


- கே.ராஜாதிருவேங்கடம்
படம்: ஆ.முத்துக்குமார்

thanx - vikatan

readers views


1. சென்னை உயர் நீதி மன்றம் பாட்டியின் கையில் இருக்கிறது. எனவே உடனே ஒரு மூடுவிழா நாடகம். உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதி மன்றத்துக்கு செக் வைத்து விட்டது. வைகோவுக்கும், இவரின் பாத்திரத்துக்கும் ஆப்பு வைத்துவிட்டதை படிக்கல் வில்லையா?


2. ஆலையை மூடும் பட்சத்தில், பத்தாயிரம் பேர் நேர் முகமாகவும், மறைமுகமாகவும் வேலை இழப்பதை பற்றி வைகோ என்ன நினைக்கிறார், அதற்கு மாற்று வழிகள் எதையும் யோசித்தாரா என்பதையும் கேட்டிருக்கலாமே?
[ பி.கு. இந்த கருத்து வைகோவை அறிந்து கொள்ளவே அன்றி , அவருக்கு எதிராக அல்ல.]


3. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!'' பாத்திரம் ஓட்டை ஒடுசல், கரடு முரடா இருந்தாலும், கை நிறைய காசு கிடைக்குது. பாத்திரத்துக்கு ஓட்டு கிடைக்குது, வைகோவைப்போல வெட்கங்கெட்டவர் கிடைக்க மாட்டார். எத்தனை முறை அவமானபடுத்தினாலும் அதிமுகவை விட்டு வேறு கட்சியுடன் சேரமாட்டார்.


4. அம்மாவிடம் அன்று 49 கோடி வாங்கியதும் மக்கள் நலனுக்குத்தான் என்று நம்புவோம் 
இப்படி எந்த தொழிச்சலை வந்தாலும் எதிர்த்து போராடினால் எப்படி நாடு முன்னேறும்


5. பாத்திரம் எப்படி இருந்தால் நமக்கு என்ன? பணியாரம் கிடைத்தால் சந்தோஷம்தானே!.....வரும் தேர்தலில் அம்மா உங்களுக்கு ஐந்து அல்லது ஆறு பணியாரம் கண்டிப்பாய் தருவார்.......


6. கடைசி பதில்.......... தாங்க முடியலைடா சாமி ............. ம தி மு க வுக்கு 10 நாடாளுமன்ற சீட்டு பார்சல் !!!!!!!!!!!

7. வைகோ இவ்வளவு கஷ்டப்பட்டும் பிரயோஜனமில்லாமல் போய்விட்டது... இவரை வளைக்கபபார்த்தார்கள் முடியவில்லை... ஆனால் தற்பொழுது நீதி துறையையே வளைத்துவிட்டார்களே... அதாங்க 100 கோடி டெபாசிட்... அதுக்கு கமிஷன் எவ்வளவுன்னு நீதிபதிகளுக்கே வெளிச்சம்...

8.எங்க கிராமத்துல, பனமரத்துக்கு கீழே நின்னு பாலைக் குடிச்சாலும் கள்ளுன்னு சொல்லுவாங்க... அப்படியா எந்த கிராமம் அது? எங்க கிராமத்தில பனமரத்துக்கு கீழே நின்னு கள்ளை குடிச்சாலும் பாலுன்னுதான் சொல்லுவாங்க. மனுசங்கள நம்பவே மாட்டாங்களா உங்க கிராமத்தல?


9. ஆலையைப் பாதுகாப்புடன் இயக்குவது என்பதைப் பற்றித்தான் யோசிக்க வேண்டுமே தவிர, மூடுவது என்பது தமிழக நலனுக்கு நல்லதல்ல. 

அதே சமயம், இந்த ஆலையைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்த அம்மையார் தான் தற்போது முதல்வராக இருக்கிறார் என்கிற முக்கியமான தகவலை ஜூ.வி மறைத்திருக்கிறது.

10/ வை.கோ. வாழ்க! வை.கோ. வுக்கு ஆதரவு தராத தமிழர்கள் மடையர்களே!



லஞ்ச்க்கு சம்சாரம் மேங்கோ ரைஸ் குடுத்து விட்டா அதுக்கு அர்த்தம் ?

1. இந்தக்காலப்பொண்ணுங்களுக்கு சமையல்ல (யும்) கைப்பக்குவம் குறைஞ்சுட்டே வருதுனு கேள்விப்படும்போது பக் பக் னு மனசு அடிச்சுக்குது




---------------------



2. இடை யில் ஏற்பட்ட மடங்கலுக்கு வருந்துகிறேன் ;-)))




-------------------------


3. கீர்த்தீ = பாயாசத்தை தீய வெச்சுடுவா



--------------------


4. யாருக்கும் அடங்காத பிகரை நீ மடக்கி விட்டால் உன் வாழ்க்கை எடக்கு மடக்கு தான்




---------------------------


5. மனைவியின் மௌன மொழி சமையல் அறையிலிருந்து பாத்திரங்கள் ணங் சத்தம்




-------------------------------




6. பிசிக்ஸ் படிச்சதுனால உடனே சிக்ஸ் பேக் வந்துடும்னு சூர்யா மாதிரி கனவு காணாதே.பி SICKஸ் ஆகிடுவே



------------------------


7.  ஆண்களுக்கு சரிநிகர் சமமா சரக்கு அடிச்சு சியர்ஸ் சொல்லும் கேர்ள்ஸ் தான் சியர்ஸ் கேர்ள்சா?



--------------------


8. மதியாதார் தலைவாசல் மிதியாதே ன்னு இருந்தா நீ ஒரு பிகரைக்கூட கரெக்ட் பண்ண முடியாது



-----------------------


9. பொண்டாட்டி புருசனை துரத்தறான்னா அவன் மச்சினி வீட்டுக்கு போய்ட்டு வந்துட்டான்னு அர்த்தம்



------------------------


10. சன்டே ஒர்க்கிங் டே டு டே.டேமேஜர் டி சர்ட்டில்.மனசுக்குள்ளே யூத்னு நினைப்பு.நல்ல வேளை.லேடிஸ் யாரும் நைட்டி ல வர்ல



-----------------


11. பிகர் செட் ஆகும்போது கிருஷ்ணர்கள் நினைப்பது 'எனக்கு இதும் வேணும்,இன்னமும் வேணும்!"



----------------


12. தமிழர்களை சினிமா ஆக்ரமித்திருப்பதுகூடப்பரவாயில்லை.சினிமா நட்சத்திரங்களின் ஆதிக்கம் தான் கவலைகொள்ள வைக்கிறது



------------------------



13. அப்ரைசல் சாக்கு வெச்சு டேமேஜர் ஸ்டெனோவை கரெக்ட் பண்ணிடுவார்னு தோணுது



--------------------


14. கூடங்குளம் அணுமின் நிலையம் = நமீதா மாராப்பு # ரெண்டையும் யாராலும் மூடி விட முடியாது



------------------------


15. டேமேஜர் டூ ஸ்டெனோ - இன்னைக்கு லஞ்ச் என்னம்மா கொண்டு வந்திருக்கே?



நான் மனசுக்குள் - சாப்பாடு தாண்டா சப்போட்டாத்தலையா



---------------------------



16. லஞ்ச்க்கு சம்சாரம் மேங்கோ ரைஸ் குடுத்து விட்டா அதுக்கு அர்த்தம் மே பி



1 டேய் மாங்கா மடையா



2 நான் மாசமா இருக்கேன்



-----------------------------------

 17. சீதா ,சீமா ,சீமாட்டி ,இவங்க புருஷன் இவங்களை செல்லமா ச்சீ ன்னு கூப்புடுவாங்ளோ?


-----------------------


18. பேசிக்கலி ஐயம் எ டயட்டிஷியன் னு சொல்ற பொண்ணுங்க மினிமம் 75 கிலோ வெயிட்டாவது இருப்பாங்க



--------------------


19 கல் நெஞ்சம் பெண்களுக்கு அப்டினு சொல்ல அவங்க கிட்டேயே யூ ராக்ஸ் னு சொல்லிடனும்.புரியாம புளகாங்கிதம் அடைஞ்சிடுவாங்க



-------------------


20. சாயாக்கடை சரசுவின் டாடி - உன்னை பாராட்டீ சீராட்டீ வளர்த்ததை ஒரு வாட்டீ கூட நினைக்காம ஒருத்தனை ஓட்டீட்டுப்போய்ட்டீயே



-------------------------



21. இன்னைக்கு புனித வெள்ளி.இன்னைக்காவது எந்தப்பாவமும் செய்யாம புனிதா த்மாவாக இருக்க முயற்சிக்கவும்



-------------------



22. ஒரு காலத்துல பொண்ணுங்க குனிஞ்சு கோலம் போடுவாங்க வாசல்ல அரை மணி நேரம்.ஹூம்.இப்பவெல்லாம் வெளிலயே வர்றதில்ல



-------------------


23. பஸ்ல புதுமணத்தம்பதி.பொண்ணு கைமணிக்கட்டுல இருந்து முழங்கை வரை தலா 13 வளையல் போட்டிருக்கு.வளையலைக்கழட்டவே 20 நிமிஷம் ஆகும் போல



-------------------


24. எல்லாரும் நல்லாருக்கனும்.ஆரோக்யத்தோட என ஆண்டவனிடம் வேண்டும் டாக்டர்கள் மிகக்குறைவு



-------------------


25. என்னமோ இவனுக்கு மட்டும்தான் சம்சாரம் இருக்கற மாதிரி பஸ் ல லூட்டி அடிச்சுட்டு வர்றான்.அடேய்!



--------------------------



Tuesday, April 02, 2013

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி?

வாடகை வீட்டை தேர்ந்தெடுப்பது எப்படி? 
நீரை.மகேந்திரன்,படம்: தே. தீட்ஷித்.
மக்களுக்கு வாடகை வீடுதான் நிரந்தரம் என்றாகிவிட்ட நிலையில்,  பிறப்பு முதல் திருமணம், ஓய்வுக்காலம் என ஆயுட்காலம் வரை வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். ஆனால், தேவைக்கேற்ற வீடு, சரியான வாடகை, நேர்மையான வீட்டு உரிமையாளர், வசதியான ஏரியா என்பது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை என்பதுதான் வாடகை வீட்டில் உள்ள நிலைமை.


ஆறு மாதங்களுக்கு முன்பு வாடகை வீடு மாறிய நண்பர், தற்போது அந்த வீடு சரியில்லை, வேறு வீடு பார்க்கவேண்டும் என அலைந்துகொண்டிருக்கிறார். என்ன ஏது என்று விசாரித்தபோது ''அவசர அவசரமாக வந்ததால் அந்த ஏரியா பற்றி தெரிந்துகொள்ளாமல் வந்துவிட்டேன். ஏரியாவில் கழிவு நீர் தேங்கி கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது. அதுவும் வீட்டுக்கு அருகிலேயே தேங்குவதால் நாற்றமும் தாங்க முடியவில்லை. அந்த வீட்டுக்குப் போனபோது இந்தச் சிக்கல் இல்லை. தற்போது இதை சகித்துக்கொண்டு இருப்பதைவிட ஏரியா மாறலாம் என இருக்கிறேன்'' என்று வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டார்.  


பழைய அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் மழைக்காலத்தில் வீட்டிற்குள் நீர் கசிவு இருக்கிறது என்று வீடு மாறவேண்டிய நிலை வரலாம். இப்படி வாடகை வீட்டினால் எழும் சிக்கல்கள் ஏராளம் இருக்கிறது. இன்னொருபுறம் சின்ன இடம் கிடைத்தாலும்  நான்கு சுவர்களை எழுப்பி வாடகைக்கு விடுவதும் நடக்கிறது. இதுபோன்ற ஏமாற்றங்களைத் தவிர்க்க வீடு பார்க்கத் திட்டமிடும்போதே ஆராய்ந்து அலசி பார்த்துவிட்டால் பிறகு மீண்டும் மீண்டும் வீடு தேடி அலையவேண்டிய வேலையிருக்காது. ''பொதுவாக வாடகை வீடு தேடுகிறோம் என்றால், எந்த தேவைக்காக என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்'' என்கிறார் ரீமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் முரளி.  வீடு பார்க்கும்போதே இந்தத் தெளிவு இருந்தால் நல்ல வீடாகப் பார்க்க முடியும் என்றவர், அதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்கிற செக் லிஸ்ட் கொடுத்தார்.


ஏரியா!
வீடு தேடுவது என்று முடிவாகிவிட்டால் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் முக்கியம். அதாவது, உங்களது தேவையைப் பொறுத்து தீர்மானிக்க வேண்டும். அலுவலகத் திற்கு பக்கமாகவோ, குழந்தைகள் பள்ளிக்கு அருகாமையிலோ என திட்டமிடலாம். அதாவது, போக்குவரத்துக்கு ஆகும் செலவை, அலுவலகத்துக்கு அருகில் வீடு பார்த்தால் அதற்கு ஈடாக வாடகைக்குக் கொடுக்கலாம்.


மேலும், ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் வீடு பார்க்கலாம் என முடிவு செய்துவிட்டால், அந்த ஏரியாவில் பஸ், ரயில் மற்றும் வேறு பொது போக்குவரத்து வசதிகள் எப்படி உள்ளன என தெரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் போக்குவரத்திற்குரிய வாகனங்கள் இருந்தாலும் பொதுபோக்குவரத்து இருக்கும் ஏரியா என்றால் வசதியானது. மேலும், அலுவலக வாகனம், குழந்தைகளின் பள்ளி, கல்லூரி வாகனங்கள் வந்து செல்லும் ஏரியா என்றால் கூடுதல் வசதிதான்.


இடம் அமைந்துள்ள பகுதி!

ஓர் ஏரியாவில் எந்தப் பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம் என்பதுவும் முக்கியமானது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ளதா, கழிவுநீர் தேங்கும் இடங்களா என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப இடங்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் கடைகள், மருத்துவமனை, வழிபாட்டுதலங்கள், பள்ளிக்கூடம் போன்றவை இருக்கும் இடமாக இருந்தால் கூடுதல் வசதியாக இருக்கும்.


குறிப்பிட்ட பகுதி நமக்குத் தோதாக இருக்கும் என்று திட்டமிட்டாலும், அந்த ஏரியாவில் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. ஒதுக்குப்புறமான பகுதியா? மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியா? இரவில் தாமதமாகத் திரும்பினால் ரிஸ்க் இருக்குமா? என பார்ப்பது முக்கியம். இதுபோன்ற புற விஷயங்களைக் கவனத்தில்கொண்டு வீடு தேடவேண்டும்

.
வீட்டு உரிமையாளர்!
வாடகைக்குச் செல்லும் வீட்டின் உண்மையான உரிமையாளர் யார் என்பதில் கவனம்வேண்டும். வீடு தொடர்பான ஆவணங்களை வாங்கிப் பார்ப்பதில் தப்பில்லை. ஏற்கெனவே வாடகைக்கு இருக்கும் நபர் நமக்கு உள்வாடகை விட வாய்ப்பு அதிகம். எனவே, வாடகை போடும்போதே வீட்டின் உண்மை குறித்த ஆவணங்களையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.


வீடு அமைப்பு!
சில வீடுகளில் ஃபேன், ஏ/சி, சோபா மற்றும் அலமாரிகளோடு அப்படியே வாடகைக்குக் கிடைக்கும். அதுபோன்ற நிலைமைகளில் அந்தப் பொருட்கள் நல்ல நிலைமைகளில் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதும், அதற்கு தனியாக எவ்வளவு வாடகை கணக்கிடப்படுகிறது என்பதிலும் தெளிவுவேண்டும். வீட்டு வாடகையோடு ஒப்பிட்டால் அதிகபட்சமாக 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இதற்கு வாடகை இருந்தால் அதிகம்தான். மேலும், பொருட்களுக்கு விலையில் ஏழு வருடத்திற்கு தேய்மானம் கணக்கிட்டு, அதிலிருந்து ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகை கொடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வாடகை வசூலித்தால் அந்தப் பொருட்கள் தேவையில்லை என்று தவிர்த்து விடலாம்.



வாடகை!
புதிய வீடா அல்லது பழைய வீடா என்பதைப் பொறுத்து வாடகை வித்தியாசம் இருக்கும். வீட்டின் வசதிக்கு ஏற்ப வாடகை சொன்னாலும், அந்தப் பகுதியில் நிலவும் வாடகை நிலவரங்களோடு ஒத்துப்போவதாக இருக்கவேண்டும். பொதுவாக, வீட்டின் இன்றைய மதிப்பில் 2.5 - 3 சதவிகிதம் ஆண்டு  வாடகை இருந்தால் சரியான வாடகை என்று சொல்லலாம். பழைய வீட்டிற்கும், புது வீட்டிற்குமான வாடகை வித்தியாசம் 30 சதவிகிதத்திற்கு மேல் இருந்தால் வாடகை தொகை அதிகம்தான். பழைய வீடு எனில், எத்தனை வருடம் பழைமையானது, மழைக்காலங்களில் நீர்க்கசிவு இருக்குமா என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். லீசுக்கு எடுக்கும்போது, அந்தத் தொகைக்கு அதிகபட்சமாக 3 சதவிகிதம் வட்டிக் கணக்கிட்டால் எவ்வளவு வருமோ அந்தத் தொகைக்குள் தகுதியான வீடாக இருக்க வேண்டும்.



இதர வசதிகள்!
மின்சாரம் / குடிநீர் போன்ற இதர வசதிகளையும் பார்ப்பது அவசியம். வாடகை வீட்டிற்கு என்று தனி மின் மீட்டர் இருக்கவேண்டும். மின் வாரியம் குறிப்பிடும் கட்டணத்தை, நாமே நேரடியாகச் செலுத்துவதற்கு ஏற்ப மின் கட்டண அட்டை நம்மிடம் கொடுத்துவிட வேண்டும். மேலும், தனி குடிநீர் தொட்டியா? அல்லது இணைப்பா,  கேபிள் இணைப்பு போன்றவை உள்ளதா, அதற்கான டெபாசிட்கள் ஏதேனும் கட்டவேண்டுமா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும்.  


ஒப்பந்தம்!
வாடகைக்குச் செல்வதாக முடிவெடுத்து விட்டால், வாடகை, முன்பணம், மாதத்தில் எந்த தேதியில் வாடகை கொடுக்கப்படும் என்கிற விவரம், அல்லது லீசுக்குக் கொடுக்கப்படும் தொகை, வாடகைதாரருக்கு உள்ள உரிமைகள், வீட்டை காலி செய்வதற்குரிய நடைமுறை மற்றும் ஒப்பந்தம் எவ்வளவு நாட்களுக்குச் செல்லு படியாகும் என்கிற விவரங்களைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்.
என்னதான் பார்த்து பார்த்து வாடகைவீடு பிடித்தாலும், அக்கம்பக்கம் குடியிருப்பவர்கள், சுற்றுச்சூழல் என எல்லாமே ஒத்துப்போனால்தான் வாடகை வீட்டின் வசதிகளை அனுபவிக்க முடியும். இல்லையென்றால், வாடகை வீடு தேடுவதே பெரிய பணிசுமையாகிவிடும்.



பத்தாண்டுகள் ஒரே வீட்டில்!
சரஸ்வதி,
அண்ணா நகர், திருச்சி.


'' நாங்கள் கடந்த 12 வருடமாக ஒரே வீட்டில்தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில் 300 ரூபாய் வாடகைக் கொடுத்தேன். என் பணி காரணமாகவும், எனது குழந்தையின் கல்விக்காகவும் இந்தப் பகுதியைத் தேர்வு செய்தேன். தற்போது 4,500 ரூபாய் வாடகையைச் செலுத்தி வருகிறேன். சொந்த வீடு வாங்கும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறோம். வாடகையை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தி வருகிறேன். கரன்ட் பில்லை தனியாகக் கட்டி விடுகிறேன். பராமரிப்பு வேலைகளை நாங்களே செய்து விடுகிறோம். உரிமையாளர் சிக்கல் இல்லை, அக்கம்பக்கம் பழகிவிட்டோம், ஏரியாவும் சிக்கல் இல்லை என்பதால் வீடு மாறவேண்டிய வேலையே இல்லை.''

thanx - vikatan

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

 
தினமலர் விமர்சனம்


சில வருடங்களுக்கு முன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்த இ‌தயேந்திரன் எனும் இளைஞனின் இதயத்தை, சிறுமி அபிராமிக்கு பொருத்தி, அச்சிறு‌மியை உயிர் பிழைக்க செய்த சென்னையில் நிஜமான சாதனை கதை தான் "சென்னையில் ஒரு நாள்" மொத்தபடமும்!
 சரத்குமார், ‌பிரசன்னா, பிரகாஷ்ராஜ், சச்சின், ஜெயபிரகாஷ், சந்தானபாரதி, பார்வதி, இனியா, மல்லிகா, லட்சுமி ராமகிருஷ்ணன், அக்ஷ்ரா, காப்பிரில்லா என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பது "சென்னையில் ஒரு நாள்" படத்தின் பெரும் பலம்!

ஜெபி-லட்சுமி ராமகிருஷ்ணன் ஜோடியின் வாரிசு கார்த்திக் எனும் சச்சின். டி.வி.சேனல் நிருபராகி நிறையவே சாதிக்க வேண்டும் எனும் கனவில் இருக்கிறார். அவரது லட்சியப்படியே ஒருநாள் டி.வி. நிருபராகும் சச்சின், முதல்நாளே பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்ஜை லைவ் பேட்டி எடுக்கும் வாய்ப்பை பெறுகிறார். 
 
அதற்காக நிறைய ஹோம் ஒர்க்குகளுடன் நண்பனின் பைக்கில் பேட்டி எடுக்க கிளம்புகிறார். வழியில் விபத்தில் சிக்கும் சச்சினுக்கு, மூளைச்சாவு ஏற்படுகிறது. உயிர் இருந்தும் பிரதேமாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சச்சினின் இதயத்தை, வேலூரில் உயிருக்கு போராடும் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதிகளின் மகளுக்கு பொருத்துவதற்கு திட்டமிடுகின்றனர் மருத்துவர்கள்! முதலில் அதற்கு மறுக்கும் சச்சினின் பெற்றோர் பிறகு ஒருவழியாக மனதை தேற்றிக் கொண்டு சம்மதம் தெரிவிக்கின்றனர்.


சென்னை ஒய்.எம்.ஆரில் இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையில் இருந்து வேலூர் மருத்துவமனைக்கு 170 கிலோ மீட்டர் தூரம். அந்த தூரத்தை ஒன்றரை மணி ‌நேரத்தில் கடந்தாக வேண்டும். அப்பொழுதுதான் சிறுமிக்கு மாற்று இதயத்தை பொருத்தி அவரை உயிர் பிழைக்க செய்ய முடியும் எனும் நிலை! நகரத்திற்குள் நெரிசலான போக்குவத்து, நெடுஞ்சாலைகளில் சீறும் வாகனங்கள்... சிக்னல்கள், சிக்கல்கள் இதையெல்லாம் தாண்டி, சவாலை எதிர்கொள்ளும் போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையிலான டீம் சாதித்து காட்டியதா...? என்பது, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த வித்தியாசமும், விறுவிறுப்புமான மீதிக்கதை!

சென்னை போலீஸ் கமிஷ்னராக சரத்குமார், முதலில் முடியாது முடியாது.... என்று மறுத்தாலும், முடிவில் 170 கி.மீ தூரத்தை ஒன்றரை மணிநேர பிராயாணம் எனும் சவாலுக்கு சம்மதிக்கும் இடத்தில் சபாஷ் போட வைக்கிறார். 
 
தன் மீது விழுந்த 15 ஆயிரம் ரூபாய் லஞ்சப்பழியை சமாளித்து அவப்பெயரை துடைக்க, உயிரை துச்சமென மதித்து அந்த சவாலான காரியத்தில் காரோட்டியாக களம் இறங்கும் டிராபிக் கான்ஸ்டபிள் சேரனை தவிர்த்து, டாக்டராக உடன் வரும் பிரசன்னா, அலட்டல் ஆக்டர் பிரகாஷ்ராஜ், அவரது யதார்த்த மனைவி ராதிகா, கொஞ்ச நேரமே வந்து இறந்து போகும் கார்த்திக்-சச்சின், அவரது காதலி பார்வதி, பிரசன்னாவிற்கு துரோகம் பண்ணும் இனியா, மல்லிகா, கார்த்திக்கின் நண்பர் மித்துன் எனும் அஜ்மல், டாக்டர் விஸ்வநாதன், ஜெயபிரகாஷ், அவரது மனைவி நிர்மலாவாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன், எம்.பி.மணிமாறனாக வரும் சந்தான பாரதி உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

காசு கொடுத்து டிராபிக் கான்ஸ்டபிள் வேலைக்கு வந்தவர் மாதிரி அந்த பாத்திரத்தில் முரண் இயக்குனர் பொருந்தாமல் தெரிவது மைனஸ்! ஆனால் அந்த பலவீனத்தையும் பிரகாஷ்ராஜின் பில்-டப் காட்சிகளும், அவர் யதார்த்தம் புரியாமல் முன்னணி நடிகர் என்ற செல்வாக்கு இருப்பதால் எதையும் சாதிக்க முடியும் என பண்ணும் சேட்டைகளும், முரண் இயக்குனரின் மைனஸ்களை மழுங்கடிக்க செய்து, படத்திற்கு ப்ளஸை கூட்டுகின்றன! அதே மாதிரி நடிகர் எனும் பந்தாவில் மகளின் உயிருக்கு முடியாத உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது அலப்பறை பண்ணும் பிரகாஷ்ராஜ்க்கு யதார்த்தத்தை புரிய வைக்கும் ராதிகாவின் நடிப்பு சூப்பர்ப்!

மெஜோ ஜோசப்பின் இனிய இசை, ஹேஹநாத் ஜே.ஜலாலின் அழகிய ஒளிப்பதிவும், மகேஷ் நாராயணின் படத்தொகுப்பு, அஜயன் பாலாவின், "எல்லா நாளும் போல் இல்லாமல் இந்த நாள் சரித்திரமாகும்..." உள்ளிட்ட வசனங்கள், மேலும் பல ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன், "சென்னையில் ஒரு நாள்", மலையாள "டிராபிக்" படத்தின் ரீ-மேக் என்பதே தெரியாத விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. பலே, பலே!


டாக்டர் பிரசன்னா, சச்சினின் இதயத்திற்கு பாதுகாப்பாக காரில் போகும்போது, அவரது மனைவிக்கு விபத்து என்று கமிஷனர் சரத் கூறுவதும், அதை பிரசன்னா தவறாக புரிந்து கொண்டு போலீஸ்க்கு பயந்து, துடிக்கும் இதயத்துடன் காரை கடத்துவதும், என்னதான் இண்டர்வெல் சஸ்பென்ஸ் பிரேக் என்றாலும் டிராமாவாக தெரிகிறது.
 அதேமாதிரி காருக்கு வழிவிடச் சொல்லி கெஸ்ட் ரோலில் நடிகர் சூர்யா நடிகராகவே வருவது, அதுவரை படத்தில் பிரபல ஸ்டாராகவே வரும் பிரகாஷ்ராஜ் என்ன பவர்ஸ்டாரா...? எனக் ‌கேட்க வைக்கிறது! இதுமாதிரி ஒரு சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் ஷஹித் காதரின் இயக்கத்தில், "சென்னையில் ஒரு நாள்", "சிறப்பான ஒரு நாள்!"
நன்றி - தினமலர்
 

மேரேஜ் ஆகாத பிகர்ட்ட் சொல்ல முடியாத மேட்டர் என்ன?

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. கருணாநிதியின் நாடகங்களால் மக்கள் அலுத்துப் போய் விட்டனர்-ஜெ # அவராவது டிராமா போடுவாரு.நீங்க பிலிம் காட்டுவீங்க்ளே




-------------------------------


2. தல அஜித்தை இயக்கும் அமீர் # அய்யய்யோ.அஜித் முதல்ல ஆதி பகவனை கஷ்டப்பட்டாவது பார்த்துடுங்க




------------------------


3. தமிழகத்தில் ரூ.37 கோடி கறுப்பு பணம் பறிமுதல்: மத்திய அமைச்சர் தகவல்-# வாபஸ்க்கு முன்னா? பின்னா? - மு க கன்னா பின்னா கேள்வி




-----------------------------


4. இனி எந்த திராவிட கட்சிகளோடும் கூட்டணி இல்லை-ஞானதேசிகன்# அது எம்படது.காப்பி அடிக்கப்படாது - டாக்டர் ராம்தாஸ்




---------------------------



5. காங்கிரஸில் இருந்து விலகல்: , இனிப்பு வழங்கி திமுக் கொண்டாட்டம் # அல்வா குடுத்துட்டதா நினப்பு.இனி உங்களுக்கு களி தான் டி - சோனியா





-------------------------





6. ஆட்சிக் காலத்தில் கலைஞர் செய்த சாதனையை இனி யாரும் செய்ய முடியாது_ஸ்டாலின் # அன்பழகனுக்கு கிடைக்காத முக்கியத்துவம் குஷ்பூ வுக்கு.அதானே?்




-----------------------------

7. திமுக வெளியேறுவதால் மத்தியில் எந்த பாதிப்பும் வராது-காங்கிரஸ்#உயிருனும் மேலான உடன் பிறப்பே! நமக்க்த்தேவையா இந்த்ப்பொழப்பே!




-----------------------------------


8. மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்! - கருணாநிதி # விலகுனா பிரஷர் உங்களுக்குத்தான்.எங்களுக்கு பிளஷர் தான்



-----------------------


9.  விஜயகாந்த் தமிழக முதல்-அமைச்சராவது உறுதி: பிரேமலதா # தள்ளாட்டத்துடன் ஒரு முன்னோட்டம்்




----------------------


10. ராகுல்காந்தி பிரதமர் ஆவதையே மக்கள் விரும்புகின்றனர்-காங்கிரஸ் # பிரியங்கா காந்தியோட மக்கள் தானே?




---------------------


Photo



11.  "என்னை பயன்படுத்தாதவர்களுக்கு தான் நஷ்டம்" - இளையராஜா # நல்ல வேளை, சொன்னது ஒரு ஆம்பளை....



---------------------


12. என்னைப் பயன்படுத்தாததால் நஷ்டம் ரஜினி, கமலுக்குத்தான்!- இளையராஜா. # அது போன மாமாங்கம் சுவாமி!



-----------------------


13. விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனுடன் ராதாவின் மகள் துளசி ஜோடியாக நடிக்கவிருக்கிறார் # தவசி காப்பாத்துங்க - துளசி



-----------------------


14. அவர்கள் சமூகவிரோதிகள்: தேசிகன்# ஒரு இனத்துக்கே ஒரு சமூகத்துக்கே துரோகிகள் நீங்க உங்க கட்சித்தலைமை


---------------------


15. ரூ.2000 கோடி வரிஏய்ப்பு: நோக்கியா நிறுவனத்திற்கு வருமான வரித்துறை..நோட்டீஸ் # எவ்ளவ் பெரிய கம்பெனி நோக்கியா.இவ்ளவ் பாக்கியா ?



----------------------


தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

SHARE & Like the page here-->>@[293309174033072:274:World Wide Tamil People]

A very popular British news paper gave priority to our news during the final conflict in mullivaaikal. They decided to publish this news in front page.Almost every British knew what happened in mullivaaikal to this humamans( Tamils). But Indian media brilliantly hide the truth from people (tamils) living just only 30 miles away from the horrible crime scene. No wonder rest of the Indians still asking tamil students " what happened in srilanka....?." They only know " IPL" rather than "EELAM GENOCIDE".
தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்..

SHARE & Like the page here-->>World Wide Tamil People

A very popular British news paper gave priority to our news during the final conflict in mullivaaikal. They decided to publish this news in front page.Almost every British knew what happened in mullivaaikal to this humamans( Tamils). But Indian media brilliantly hide the truth from people (tamils) living just only 30 miles away from the horrible crime scene. No wonder rest of the Indians still asking tamil students " what happened in srilanka....?." They only know " IPL" rather than "EELAM GENOCIDE".



16 ஆபீஸ் ல புதுசா ஒரு பிகர் வேலைக்கு சேர்ந்தா முதல் 10 நாள் கண்டுக்கக்கூடாது # ஆபீஸ் ரூல்ஸ்




------------------------


17. பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த பெயர் "கார்த்திக் # கார் ,திக்



----------------------


18. ஒரு பொண்ணு 'கை வலிக்குது SMS பண்ணமுடியாது'னு சொன்னா (கையை) அமுத்தி விட வா -னு கூப்பிடறான்னு அர்த்தம்


------------------


19. மேரேஜ் ஆகி புக்ககம் வந்த புதுசுல அழுதுட்டு இருக்கும் சம்சாரங்க அப்புறம் புருசனை அழ வைப்பாங்க



-----------------


20. Good morning! Have a nice day!!னு யார்ட்ட வேணாலும் சொல்லிடலாம்.குட்நைட்.ஹேவ் எ நைஸ் நைட்னு மேரேஜ் ஆகாத பிகர்ட்ட் சொல்ல முடியாது.


--------------------


ROMANTIC :-
 Best Moment In LIFE Is .. ♥♥♥
 When you think about your lover with tears in
 your eyes
 and
 He / She is standing just behind you ..
 and says,
 My sweetheart i wont leave you ever please
 stop crying...♥♥♥
ROMANTIC :-
Best Moment In LIFE Is .. ♥♥♥
When you think about your lover with tears in
your eyes
and
He / She is standing just behind you ..
and says,
My sweetheart i wont leave you ever please
stop crying...♥♥♥




21. ஆமா குளிருல அதென்ன அசட்டு குளிர்???அட்டு பிகரோ லட்டு பிகரோ பக்க்ச்த்துல இருந்தா எப்பேர்ப்பட்ட குளிரும் அசட்டுக்குளிர்தான்


----------------------

22. லேடி டேமேஜர் - யூ ஆர் டிஸப்பாய்ண்டட் மீ .



மேடம், நீங்க தான் என்னை அப்பாய்ண்ட் பண்ணீங்க, நான் உங்களை எதுவுமே செய்யலையே?



----------------------


23. இந்து சாமி , முஸ்லீம் சாமி , கிறிஸ்டியன் சாமி என எந்த சாமியை நீ நம்பினாலும் சுப்ரமணியம் சாமியை மட்டும் நம்பி விடாதே !



--------------------



24.  நான் 35 வயதை கடந்து விட்டேன்! வித்யாபாலன் ஓப்பன் ஸ்டேட்மென்ட் # நல்ல வேளை ,35 வயசை கடந்துட்டதா சொன்னாங்க , ஷாக் ஆகி இருப்பேன்



---------------------


25. ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்: சசிதரூர் # ஆங்! கிழம் சொல்லிடுச்சுப்பான்னு யாரும் கிண்டல் பண்ணலை?்



---------------------------


ஆணவத்தில் ஆடுவோரே...தலைவர்ன்னா எப்படி இருக்கோனும்னு தெரிந்து கொள்ளுங்கள்...
தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம். 

https://m.facebook.com/TamilTakavalMaiyam?refid=5

தலைமைச்செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.

பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது. 

வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. 

கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை.

https://m.facebook.com/TamilTakavalMaiyam?refid=5

 மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்லஅனுமதி கிடைக்கிறது.

-
அடுத்தநாள்………. நேற்று தமதுகாரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர். 
 
குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார். சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது. 

குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறுஇடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.

-
இவரும் பயந்துகொண்டே போய்ச்சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன் ? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது. 

அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகைகாட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன். 

கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லிஅவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.
-
நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.
நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக் கொண்டால் நான்பொறுப்பல்ல.


ஒன்று மட்டும் நிச்சயம்.
தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!
Thanks.அமுதவன் .
தலைவரென்றால் இவரன்றோ தலைவர்!

பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த நேரம்.

https://m.facebook.com/TamilTakavalMaiyam?refid=5

தலைமைச்செயலகத்திலிருந்து வெளியில் எங்கோ செல்வதற்காக அவசரமாகப் புறப்படுகின்றார் காமராஜர்.

பிரதான சாலைக்கு வந்த அவருடைய கார் டிராபிக் போலிஸ் ஒருவரால் நிறுத்தப்படுகிறது.

வேறு திசையிலிருந்து வரும் கார்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.

கூட இருக்கும் உதவியாளர்கள் பதறுகிறார்கள். பாதுகாப்பு அதிகாரிகள் அந்த டிராபிக் போலிசிடம் என்னென்னமோ சைகை செய்து காட்டுகிறார்கள். பயனில்லை.

https://m.facebook.com/TamilTakavalMaiyam?refid=5

மற்ற கார்கள் அனைத்தும் போனபின்னர்தான் இந்தக் காருக்கு மேலே செல்லஅனுமதி கிடைக்கிறது.

-
அடுத்தநாள்………. நேற்று தமதுகாரை வழியில் தடுத்து நிறுத்திய போலிஸ்காரரை அழைத்துவரச் சொல்கிறார் காமராஜர்.

குறிப்பிட்ட அந்தக் கான்ஸ்டபிள் அழைத்துவரப்படுகிறார். சரியான திட்டு காத்திருக்கிறது. தண்டனை காத்திருக்கிறது.

குறைந்தபட்சம் பதவிக்குறைப்போ அல்லது வேறுஇடத்திற்கு டிரான்ஸ்பரோ இருக்கப்போகிறது என்று பலவாறாக பயமுறுத்தி அவரை முதல்வரைச் சந்திக்க அனுப்பிவைக்கிறார்கள்.

-
இவரும் பயந்துகொண்டே போய்ச்சந்திக்கிறார். எடுத்த எடுப்பிலேயே “ஐயா சந்தர்ப்பம் அப்படி ஆயிப்போச்சி. தெரியாம செஞ்சுட்டேன். மன்னிச்சுக்கங்க” என்று காமராஜரைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுகிறார்.

“மன்னிப்பெல்லாம் எதுக்குண்ணேன் ? நீ சரியாத்தானே நடந்துகிட்டே? ஒரு போலீஸ்காரன்னா அப்படித்தான் இருக்கணும். பதவியிலிருப்பவனுக்கு ஒரு ரூல் சாதாரண ஜனங்களுக்கு ஒரு ரூல்னெல்லாம் பார்க்கப்படாது.

அவனவன் கடமையை அவனவன் ஒழுங்காச் செய்யணும். நீ அப்படித்தான் உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தே. எனக்குண்ணு நீ சலுகைகாட்டியிருந்தாத்தான் தப்பு. நீ உன்னுடைய கடமையை ஒழுங்காச் செய்தேன்னு பாராட்டறதுக்குத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.

கடமையில் ரொம்பக் கரெக்டா இருந்த இவருக்கு ஒரு பிரமோஷன் போடுங்க” என்று சொல்லிஅவருக்கு ஒரு பதவி உயர்வும் தந்து அனுப்பிவைத்தாராம்.
-
நீண்ட நாட்களுக்கு முன்னர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றில் படித்த இந்தச் செய்தி இப்போது திடீரென்று நினைவு வந்தது.
நீங்கள் வேறு எந்தச் செய்திகளோடும் பொருத்திப்பார்த்துக் கொண்டால் நான்பொறுப்பல்ல.


ஒன்று மட்டும் நிச்சயம்.
தலைவர் என்பவர் இப்படித்தானே இருக்கவேண்டும்!
Thanks.அமுதவன் .