Thursday, March 21, 2013

சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது எது? ஒரு விவாதம்

சினிமாவுக்கு முதுகெலும்பாக இருப்பது...
 
கதையே...

திரைக்கதையே...

வசனமே...

பாடல்களே...

இசையே...

ஒளிப்பதிவே...

எடிட்டிங்கே...

டைரக்ஷனே...
 
- என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவர் இங்கு வாதாடுகிறார்கள்.


கலைமணி:  கதையே..! 


''படம் என்றாலே அது ஒரு கதையைச் சொல்வதுதான். ரெண்டு பேரும் காதலிக்கிறார்கள் என்பதையே படம் முழுக்கச் சொல்ல முடியாது. காதலிக்கும்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்று ஒரு கதை வேண்டும். கதாசிரியன்தான் ஜீவநாடி. டைரக்டர் அந்தக் கதையை அலங்கரிப்பவர்தான். புகழடைந்த ஸ்ரீதர், பாலசந்தர் போன்ற டைரக்டர்கள் கதாசிரியராகவும் இருக்கிறார்கள். டைரக்ஷன் மட்டும் பண்ணிக்கொண்டு யாரும் இங்கே புகழ் பெறவில்லை. அப்படி உள்ளவர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள்கூட அணு அளவு மூலத்தை யாரிடமாவது பெற்று, அதை ஒரு நல்ல கதையாக எழுதிக்கொள்கிறார்கள். பிறகு, அதற்குத் திரைக்கதை அமைக்கிறார்கள்.


காலத்தை வென்று நிற்பவை கதையுள்ள படங்கள்தான். 'காட்சி’யை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் காலப்போக்கில் கரைந்துவிடும். அண்ணன், தங்கை பாசத்துக்கு அழியாத உதாரணம் 'பாசமலர்’. அது கதையுள்ள படம். காதலுக்கு ஒரு கவின்மிகு எடுத்துக்காட்டு 'தேவதாஸ்’. அது கதையுள்ள படம். சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்களின் சிறந்த நடிப்புகூட, கதையில்லாத சில படங்களில் விழலுக்கு இறைத்த நீராகப் போயிருக்கிறதே. சமுதாயப் பிரச்னையைச் சொல்லி, அதற்குத் தீர்வையும் சொல்ல கதையம்சம் நிறைந்த ஒரு படத்தால்தான் முடியும்.''


பார்த்திபன்:  திரைக்கதையே..!


''‘Duel’என்ற ஒரு ஆங்கிலப் படம். மலைப் பாதையில் செல்லும் ஒரு நீண்ட டிரெய்லர் லாரியை, ஒரு ப்ளைமவுத் கார் சைடு வாங்கி ஓவர்டேக் செய்து முன்னே போகிறது. முன்னே போய் கார் மெதுவாகச் செல்ல, லாரிக்காரன் ஓவர்டேக் பண்ண முயற்சிக்கிறான். ஆனால், கார் ஓட்டுபவன் சும்மா ஒரு ஜாலிக்காக வேண்டுமென்றே சைடு கொடுக்காமல் செல்கிறான். கொஞ்சம் எரிச்சலடைந்த அந்த லாரிக்காரன், அந்தக் கார் ஓட்டுபவனை அப்படியே லாரியால் மோதி, ஆக்ஸிடென்ட் மூலம் கொலைசெய்ய முயற்சிக்கிறான். ஆனால், கார் ஓட்டுபவன் ஒரு தந்திரம் செய்து, லாரியை மலையில் இருந்து கவிழ்ந்து விழும்படி செய்கிறான். படம் முழுக்க லாரியும் காரும் மாறி மாறிப் போய்க்கொண்டே இருக்கும். ஆனால், த்ரில்லிங்காக - அருமையாகப் படமாக்கியிருப்பார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதில் என்ன பிரமாதக் கதை?



இனிமேலும், கதை என்ற பெயரால் மக்களை ஏமாற்றவே முடியாது. திரைக்கதையால்தான் வித்தியாசப்படுத்த முடியும். திரைக்கதையை வைத்துதான் புதிய படங்கள் செய்ய முடியும். கதை நன்றாக இல்லாவிட்டாலும், திரைக்கதை நன்றாக உருவாக்கப்பட்டால் படம் சிறப்பாக இருக்கும்.


என்னைப் பொறுத்தவரை நான் கதை என்று எதையும் ஏற்படுத்துவது இல்லை. ஏதாவது வித்தியாசமான ஒரு காட்சியை முதலில் யோசிப்பேன். வீடு தீப்பிடிக்கும். ஒருவன் அந்த நெருப்பில் சிகரெட் பற்றவைக்கிறான் என்று ஒரு காட்சியை யோசித்தேன். பிறகு, அவன் எந்த சூழ்நிலையில் அப்படிச் செய்வான் என்று யோசித்து, காட்சியின் மேல் காட்சியாக அடுக்கினேன். 'புதிய பாதை’ பிறந்தது!''


ஆரூர்தாஸ்:  வசனமே..!


''இயல்பாக நாம் எல்லோரும் பேசுபவர்கள். அந்த இயல்புத்தன்மையை சினிமாவில் கொண்டுவருவது வசனம்தான். கதை என்பது உடம்பு. வசனம்தான் உயிர். சாதாரண ஒரு கதையைச் சிறந்த வசனத்தால் உயர்ந்த திரைப்படமாக்கிட இயலும். இளங்கோவன் வசனம் எழுதிய 'கண்ணகி’, அறிஞர் அண்ணா வசனம் எழுதிய 'வேலைக்காரி’, கலைஞர் எழுதிய 'பராசக்தி’, 'மனோகரா’, 'மந்திரிகுமாரி’ ஆகிய படங்கள் அவர்கள் எழுதிய அரிய வசனங்களாலேயே புகழ்பெற்றன. அவ்வளவு ஏன்? சிவாஜிக்கு ஆரம்பத்தில் கிடைத்த அங்கீகாரமே, அவர் நாக்கில் விளையாடிய நல்ல வசனங்களால்தான்!


பாலாஜி தயாரித்த 'விதி’ படத்தின் வெற்றியில் என் பங்கு கூடுதல் என்று கூறும் அளவுக்கு, என் வசனம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. கோர்ட் ஸீனுக்காகவே பலர் அந்தப் படத்தைப் பார்த்தார்கள். அதன் பின் வந்த 'பூ ஒன்று புயலானது’ படமும் என் வசனத்தால் பெரும் சிறப்படைந்ததே. இப்போது வரும் புதியவர்களின் படங்களில்கூட வசனம் முக்கியப்படுத்தப்படுகிறதே. ஒரு வரிக் கதை, பத்து வரிக் கதை, எழுதாத - வாய்ச்சொல் கதை, ஒரு கரு, ஆங்கிலப் படத்தின் பிரதிபலிப்பு - இந்திப் படப் பாதிப்பு என எப்படி வேண்டுமானாலும் கதை கட்டலாம். ஆனால், வசனம் அப்படியல்ல.


அழவைத்தல் - ஆத்திரப்படவைத்தல் - சிரிக்கவைத்தல் - சிந்திக்கவைத்தல் முதலிய உணர்வு களின் ஊற்றுக் கண்களைத் திறப்பதே வசனம்தான். ஒரு படம் நாலு இடங்களில் வசனத்துக்காகக் கைதட்டல் வாங்கினால் போதும். அந்தப் படத்தின் வெற்றி முடிவுசெய்யப்பட்டதாக அர்த்தம். எனவே, திரைப்படத்துக்கு முதுகெலும்பு வசனமே!''


கவிஞர் முத்துலிங்கம்:  பாடல்களே..!


''ஒரு படத்தில் அனைத்து அம்சங்களும் காலப்போக்கில் ரசிகனுக்கு மறந்துபோகலாம். ஆனால், அவனுக்கு மறக்காமல் இருப்பது பாடல் வரிகள்தான். பாடல் வரிகளை வைத்துதான் பல படங்கள் அடையாளம் கூறப்படுகின்றன. உதாரணமாக, 'வயசுப் பொண்ணு’ என்று ஒரு படம். இந்தப் படத்தைப் பற்றிப் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஆனால், 'காஞ்சிப் பட்டுடுத்தி... கஸ்தூரிப் பொட்டு வைத்து தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்’ என்று நான் எழுதிய பாட்டு பெருமளவில் புகழ் பெற்றது. இப்போதும்கூட இந்தப் பாடல் இந்தப் படத்தில்தான் என்றவுடன், அந்தப் படத்தைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயமே ஏற்படும். ஒருவேளை அது ரொம்ப நல்ல படமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும் (அது மோசமான படம் என்று நான் சொல்லவில்லை. ஓர் உதாரணம் சொன்னேன்!).


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் எழுதிய பாடல்களுக்காகவே பல படங்கள் ஓடியிருக்கின்றன. பாடல்களுக்குப் பணம் தர முடியாமல் உடுமலை நாராயணகவிக்கு ஒரு ஏரியாவையே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மட்டும் என்ன? அடிவாரத்தில் நிற்கும் படங்களை, நல்ல பாடல்கள் மலையுச்சிக்கு இழுத்துச் சென்றுவிடுகின்றன அல்லவா? பாடல் வழியாக ஒரு கருத்து வரும்போது, அது ஏற்படுத்தும் விளைவுகள் மிகமிக முக்கியமானவை. 

நல்ல கருத்துகளை மக்கள் மனத்தில் பதியவைப்பது பாடல்கள்தான். அவ்வளவு ஏன்... எம்.ஜி.ஆரை உருவாக்கியதே பாடல்கள்தானே! இதை யாராவது மறுக்க முடியுமா? 'பாடல்கள் இல்லாத படம் ஒன்று பண்ணலாமா?’ என்று ஒரு இயக்குநர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, 'அப்படி ஒரு படத்தை என்னால் யோசித்துப் பார்க்கவே முடியவில்லை. யோசிக்கவும் நான் விரும்பவில்லை’ என்றாராம் புரட்சித் தலைவர். எம்.ஜி.ஆர். முதலமைச்சரானபோது ஒரு அமெரிக்கப் பத்திரிகை 'இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் நான் அவருக்கு எழுதிய 'அன்புக்கு நான் அடிமை’ என்ற பாடலையும் 'இது நாட்டைக் காக்கும் கை’ பாடலையும் எழுதி, அவற்றின் ஆங்கில அர்த்தத்தையும் குறிப்பிட்டு 'இதுபோன்ற பாடல்களால்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சரானார்’ என்று எழுதியிருந்தார்கள்!''


எஸ்.ஏ.ராஜ்குமார்:  இசையே..!


''ஒரு படத்தில் பாடல்கள் 'ஹிட்’டானால், அந்தப் படமும் கட்டாயமா 'ஹிட்’ ஆயிடும். ஒரு படத்துல ஒரு காட்சியோட உணர்ச்சியை - நடிகரோட உணர்ச்சியை - ரசிகனுக்குக் கொண்டுபோய்க் கொடுப்பதே இசைதான். நல்ல கதை, திரைக்கதை, வசனம், பாடல் இது மாதிரி மற்ற எல்லா அம்சங்களும் உள்ள ஒரு படம். அந்தப் படத்துல ஒரு காட்சி. கதாநாயகனோட அம்மா இறந்ததைக் கதாநாயகன்கிட்ட ஒரு கேரக்டர் சொல்வதுபோல்... அந்த கேரக்டர் செய்தியைச் சொன்னவுடனே பேக்
கிரவுண்டில் சோகமான ஷெனாய் இசையோ அல்லது வயலின் இசையோ வரும். அந்த இசை வந்த பின்னர்தான் ரசிகன், கதாநாயகனோட நிலைக்குப் போய் அந்தச் சோகத்தை உணர்வான். 


ஆனா, படம் பார்க்கிற ஆடியன்ஸுக்கே - இந்த இசையால்தான் நமக்கு அந்த உணர்ச்சி கிடைக்குதுங்கிறது தெரியாது. அந்த மியூஸிக் இல்லைன்னு வெச்சுக்குங்க... 'அம்மா இறந்துட்டாங்க’ன்னு சொன்னவுடனே அந்தக் காட்சியைக் காணும் நமக்குக்கூட, 'அப்படியா சரி, பரவாயில்லே’ன்னு சொல்லத் தோணும்.


சம்பந்தம் இல்லாத மியூஸிக் வந்ததுன்னா, அந்த ஸீன்ல ஆடியன்ஸ் சிரிச்சுடுவான். அப்புறம் குடி முழுகிப்போன மாதிரிதான். ஒரு கேரக்டருக்கு காபி கொண்டுவந்து தர்றாங்க. அந்தக் காபியை அவர் குடிக்கும்போது, நாங்க ஒரு சின்ன மியூஸிக் 'பிட்’டால, அவர் விஷம் கலந்த காபியைக் குடிக்கறாருங்கிற எண்ணத்தை ரசிகர்கள்கிட்ட ஏற்படுத்த முடியும்!''


பி.கண்ணன்:  ஒளிப்பதிவே..!


''கலை என்ற விதத்தில் டைரக்டரின் மீடியா கேமராதான்! அறிமுக டைரக்டர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு நல்ல ஒரு கேமராமேன் கிடைத்தால் போதும்... டைரக்டர் கதையைச் சொல்லச் சொல்ல... இவர் அதைப் படமாக்கிவிடுவார். சாதாரணமாக ஓர் இடத்தில் காட்சியை விளக்குகிறார் டைரக்டர். அதை முதன்முதலில் படமாகப் பார்ப்பது கேமராமேன்தான். படம் எவ்வளவுதான் சிறந்த விஷயங்களோடு எடுக்கப்பட்டாலும், கேமராமேன் அதைக் காட்டவேண்டிய கோணத்திலும், சரியான 'லைட்டிங்’கோடும் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், காட்சியின்போது தெரிவிக்கப்பட வேண்டிய உணர்ச்சி தெரிவிக்கப்படாமல் போய்விடும்.


 சோகக் காட்சியில் நமக்குக் கோபம் வரும். கோபக் காட்சியில் சோகம் வரும். காதல், காதலாக இருக்காது. கஷ்டமாக இருக்கும். அருவருப்பான இடத்தைக்கூட எங்க கேமராவால் அழகாகக் காட்ட முடியும். குப்பைமேட்டுப் பக்கத்தில் ஒரு காதல் காட்சியை எடுத்து, சூப்பர் லொகேஷன் என்று பெயர் வாங்க முடியும்.


சினிமா என்பதே விஷ§வல் மீடியாதான். விஷ§வல் என்பதே கேமரா. அந்த கேமரா எங்கள் கையில். இப்போது சொல்லுங்கள் - சினிமாவுக்கு முதுகெலும்பு கேமராதானே!''


விட்டல்:  எடிட்டிங்கே..!


''ஒரு கதை, திரைக்கதை, வசனம் - நல்ல கதையாக, நல்ல திரைக்கதையாக, சிறந்த வசனமாக... இப்படி எல்லாமே நல்ல விஷயங்களாக மக்களுக்குக் கிடைக்குமா என்பது எங்கள் எடிட்டிங் டேபிளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு படம், நல்ல படமாக வெளியே வருவது எங்கள் அறையில் இருந்துதான். சுமாரான ஒரு திரைக்கதைகூட எடிட்டிங் நன்றாக இருந்தால், நல்ல திரைக்கதை என்று பெயர் வாங்கிவிடும். ஒரு படம் போரடிக்காமல் போகிறது என்றால், அதற்குக் காரணம் நல்ல எடிட்டிங். ஒரு படத்தில் நல்ல விஷயங்களை மட்டுமே தொகுத்து 'ஜூஸ்’ எடுத்து அதை மக்களுக்குப் பருகக் கொடுக்கிற வேலை எங்களுடையதே. இயக்குநர், கேமராமேன், நடிகர் உட்பட படத் துறையைச் சேர்ந்தவர்கள் படத்தில் செய்யும் தவறுகளை மறைப்பது எடிட்டிங்தான்!''


மகேந்திரன்:  டைரக்ஷனே..!


''எனக்குச் சிரிப்பாக இருக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்துவிட்டு ஸ்பெயினுக்கு வந்தபோது, அவரது கடல் பயணத்தைப் பாராட்டி ஸ்பெயின் அரசர் ஒரு விருந்து கொடுத்தார். விருந்தில் சில பிரபுக்கள் 'இது என்ன சாதனை? எங்களுக்குக் கப்பல் கொடுத்தால் நாங்கள்கூடத்தான் போய் வருவோம்’ என்று கிண்டல் செய்தனர். கொலம்பஸ் ஒவ்வொருவர் கையிலும் ஒரு முட்டையைக் கொடுத்து 'இதை எப்படி யாவது செங்குத்தாக நிறுத்துங்கள்’ என்றார். அவர்களால் முடியவில்லை.கொலம்பஸ் முட்டையை வாங்கிச் செங்குத்தாக, அதே சமயம் மெதுவாக அடித்தார்.


 அடிப்பகுதி உடைந்து தட்டையாகி முட்டை அப்படியே நின்றது - உள்ளே உள்ளது வெளியே வராமலேயே! பிரபுக்கள் 'இது என்ன கஷ்டம்? இதை எப்படி ஏற்க முடியும்?’ என்றார்கள். 'நான்தான் எப்படியாவது நிறுத்துங்கள் என்றேனே...’ என்றார் கொலம்பஸ்.


அதுபோல, படத்தைச் சிறப்பாக உருவாக்க வேண்டிய வேலை எல்லோருக்கும் உண்டு. ஆனால், எப்படியாவது நன்றாக உருவாகக் வேண்டும் என்ற கடமை - கட்டாயம் டைரக்டருக்குத்தான் உண்டு. ஒரு படத்தில் ஏனைய துறையைச் சேர்ந்தவர்களின் விஷயங்கள் நன்றாக வந்திருக்கிறது என்றால், டைரக்டர் அவற்றை அனுமதித்திருக்கிறார் என்று அர்த்தம். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவரிடமும் 'நீங்கள் இந்த அளவுக்குப் பணியாற்ற வேண்டும். இப்படி பணியாற்ற வேண்டும்’ என்று வரையறை தருகிறோம். 


அதை விட்டு விலகாமல் 'இம்ப்ரூவ்’ பண்ணிச் செய்வது அவர்கள் திறமை. நல்ல இசையை, நல்ல பாடலை, நல்ல கதையை, நல்ல வசனத்தைக் கேட்டுப் பெறுவது நாங்கள். நல்ல எடிட்டிங்கை, சிறந்த ஒளிப்பதிவை நிர்ணயிப்பது நாங்கள். நல்ல திரைக்கதையைக் கொண்டுவருவது நாங்கள், இப்படி மேற்சொன்ன ஏழு விஷயங்களின் அஸ்திவாரம் - தாய் - எல்லாம் டைரக்ஷன்தான். இப்படியிருக்க டைரக்ஷனை மிஞ்சி யார் என்ன செய்ய முடியும்?''


இந்தக் கட்டுரைக்காக எல்லோரையும் அணுகியபோது, ஒட்டுமொத்தமாக அனைவரும் சொன்ன கருத்து: ''நீங்கள் இப்படிக் கேட்டதால்தான், நாங்கள் எங்கள் துறையின் முக்கியத்துவத்தைக் கூறுகிறோம். மற்றபடி சினிமா என்பது ஒரு டீம் வொர்க்!'' 


- சு.செந்தில்குமரன்

படங்கள்: ஆர்.விஜி


நன்றி - விகடன்

வத்திக்குச்சி - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)

சும்மா போகிறவனை உரசி, அவன் பற்றிக்கொண்டு எரிந்தால்... அதுவே வத்திக்குச்சி!

நகைக்கடை அதிபர் ஜெயப்பிரகாஷ், கூலிக்குக் கொலை செய்யும் சம்பத், சேல்ஸ் ரெப் 'நண்டு’ ஜெகன் என்று மூவரும் தனித்தனியாக திலீபனை (அறிமுகம்) போட்டுத்தள்ள வேண்டும் என்று கொலைவெறியோடு அலைகிறார்கள். அவர்கள் திலீபனை ஏன் தேடுகிறார்கள்... திலீபன் இவர்களிடமிருந்து தப்பினாரா என்பதே கதை.


சாதாரண ஷேர் ஆட்டோ ஓட்டுநரை வெரைட்டியான வில்லன்கள் ஏன் தேடுகிறார்கள் என்பதை ஹீரோ - வில்லன்கள் இருவரின் கோணத்திலிருந்தும் ஃப்ளாஷ்பேக் உத்தியில் சொன்னவிதத்தில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் கின்ஸ்லின். ஆனால், முன்பாதி திரைக்கதையில் தூவப்பட்ட செம பில்ட் அப்கள், பின்பாதியில் நொண்டியடிக்கும் இடத்தில் தாறுமாறாகப் பயணிக்கிறது படம்!


திலீபன் ஷேர் ஆட்டோ ஓட்டுநராகக் கச்சிதம். சண்டைக் காட்சிகளில் அதிரடி காட்டுபவர், ஏமாற்றம், கோபம், குழப்பம், பரிதவிப்பு போன்ற சின்னச் சின்ன ரியாக்ஷன்களுக்கு இன்னும் ஹோம்வொர்க் செய்திருக்க வேண்டாமா? 'அஸ் யூஷ§வல் துறுதுறு... கலகல அஞ்சலி. அச்சுப்பிச்சு இங்கிலீஷ§ம், அலட்டல் பந்தாவுமாகப் பின்னுது பொண்ணு. 'உன்னையெல்லாம் காதலிக்க மாட்டேன்’ என்று சொல்லிச் சொல்லியே திலீபனிடம் காதலில் விழுவது ஜாலி ஹைக்கூ

.
குருதேவின் ஒளிப்பதிவு படத்தின் ஆக்ஷன் டெம்போவுக்கான எரிபொருள். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கவைத்திருக்கிறது ராஜசேகரின் ஆக்ஷன். ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இதம்.


குழந்தையைக் கடத்தத் திட்டமிடும் ஜெகன், அதற்காக திலீபனைக் கொல்லத் திட்டம் போடுவதெல்லாம்... போங்க பாஸ்... போங்கு!


ஒரே மாதத்தில் யாராவது ஜிம்முக்குச் சென்று, உடலைத் தேற்றி, சண்டை கற்றுக்கொண்டு ரவுடிகளைத் துவம்சம் செய்ய முடியுமா? உயிரை எடுக்கும் மர்டர் அசைன்மென்ட் ரகசியங்களை யாராவது டீக்கடை முன் நின்றுகொண்டு சத்தம் போட்டுப் பேசுவார்களா? வில்லன் கும்ப லிடம் சிக்கித் தப்பித்த இடைவெளியில்,  'நான் டயர்டா இருக்கேன்... கொஞ்சம் தூங்கணும்..


. பரோட்டா சாப்பிடணும்... எக்சர்சைஸ் பண்ணணும்!’  என்று யாராவது முடிவெடுப்பார்களா? இப்படிப் படமெங்கும் அலையடிக்கின்றன கேள்விகள்!
கவிழ்த்துவைத்த 20 லிட்டர் தண்ணீர் கேனில் மிக்ஸிங் சரக்கைக் குழாயில் பிடித்துக் குடிப்பது, 'எதிராளி எப்படி யோசிப்பான்னு நாம யோசிக்கணும்’ எனப் போதிப்பது, தாழ்ப்பாள் போட்டிருக்கும் குடியிருப்பின் கதவை ஆள் நடமாட்டத்தின்போது தட்டுவது போன்ற உத்திகள் ரசிக்கவைக்கின்றன.


இப்படியான சுவாரஸ்யங்களைத் திரைக்கதை முழுக்கப் பரவவிட்டிருந்தால், சுரீரென்று பற்றியிருக்கும் இந்த வத்திக்குச்சி!


நன்றி- விகடன் விமர்சனக் குழு

பரதேசி - சினிமா விமர்சனம் (விகடன் விமர்சனக் குழு)

ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் 'பரதேசி’!


 1939-ல் நடக்கிறது கதை. சாலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒட்டுப்பொறுக்கி அதர்வா, தண்டோரா அடிக்கிறவர். அதே ஊரில் வாழும் வேதிகாவோடு காதல். ஊரே பஞ்சத்தால் தவிக்க, அந்த மக்களைத் தேயிலைத் தோட்ட வேலைக்கு அழைக்கிறான் கங்காணி. அவன் பேராசை வார்த்தைகளை நம்பிப் போகிறது ஏழை ஜனம். அங்கம்மாவை ஊரில் விட்டுவிட்டு ஒட்டுப்பொறுக்கியும் போகிறான். அங்கே போன பிறகுதான் அது எவ்வளவு பெரிய நரகக் குழி என்பது தெரிகிறது. 


அடி, உதை, அட்டைக் கடி, சுளீர் குளிர், பாலியல் தொந்தரவு, உழைப்புச் சுரண்டல், நயவஞ்சகம், கொள்ளை நோய் எனக் கொத்தடிமைகளில் ஒருவனாகக் கிடக்கும் ஒட்டுப்பொறுக்கி, அங்கிருந்து தப்பி ஓட நினைக்கிறான். இடையில் அங்கம்மா அவன் குழந்தையை சாலூரில் பெற்றெடுக்கிறாள். தப்பியோட முனைந்து, கெண்டைக் கால் நரம்பு அறுபட்டு முடங்க, அங்கம்மாவை ஒட்டுப்பொறுக்கி சேர்ந்தானா என்பது வலி நிறைந்த வரலாறு!


தேயிலைத் தோட்டத்தின் பச்சை இலைகளுக்குப் பின்னால், உறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான தமிழர்களின் ரத்தத்தை விவரித்த 'ரெட் டீ’ (தமிழில் 'எரியும் பனிக்காடு’) நாவலின் பாதிப்பில், 'பரதேசி’ படைத்திருக்கிறார் பாலா.


 தமிழ் சினிமா வரலாற்றில் இது மிக உண்மையான மைல்கல் சினிமா. கொத்தடிமைச் சமூகத் தின் சரித்திரத்தை இவ்வளவு எளிமையாக, வலிமையாக முன்வைத்ததற்காக பாலாவுக்கு ஒரு ரெட் சல்யூட்.


கடைசி வரை வெள்ளந்தியும் இயலாமையுமாகத் திரியும் நாயகன், காதலில் உயிர் சுமக்கும் ஒருத்தி, ஓடிப்போன புருஷனை நினைவிலும் இடுப்பில் பிள்ளையையும் சுமக்கும் இன்னொருத்தி, உடலை முதலாளி வெறிநாய்க்கும் உயிரைக் கொள்ளை நோய்க்கும் தருகிற மற்றொரு மனுஷி என மனதை நிறைக்கும் நாயகிகள், கண்ணீரில் கரைக்கும் க்ளைமாக்ஸ்... என பாலா படங்களிலேயே இது முற்றிலும் புதிய அனுபவம்!


சாலூரில் வறுமையில் கிடக்கும் அந்த மக்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் கொண்டாட்டங்களும் நகைச்சுவையும் காதலுமாக விரியும் படம், பிழைக்க ஊர் விட்டுப் போகும் வழியில் மயங்கி விழும் ஓர் உயிரிலிருந்து தடதடக்கத் தொடங்குகிறது. தரையிலிருந்து உயர்ந்து அலையும் அந்தக் கை... அதிரவைக்கிறது. அதன் பிறகு தேயிலைத் தோட்டத்தில் நாம் பார்ப்பது... இதுவரை பார்த்திராத துயர உலகம்!  


அதர்வாவுக்கு இது லைஃப் டைம் படம். ஒரு கண்ணில் அப்பாவித்தனமும் இன்னொரு கண்ணில் பரிதாபமும் மிதக்க வெகுளி இளைஞனாக அபாரமாக உழைத்திருக்கிறார். 'நியாயமாரேஏஏஏஎய்ய்...’ எனத் தலையை ஆட்டி ஆட்டித் தமுக்கடித்து, வேதிகா காட்டும் காதல் சாடையில் வெட்கப்பட்டு, தேயிலைத் தோட்டத்தின் துயரத்தில் 'அவக்கு அவக்கு’ எனப் பசியில் சாப்பிட்டு, கால் நரம்பு அறுபட்டுக் கதறுவது வரை... அற்புதம் அதர்வா!


துடிப்பும் துறுதுறுப்புமான அழகுக் கருப்பியாக வேதிகா. திருமணப் பந்தியில் அதர்வாவுக்கு மட்டும் பரிமாறப்படாதபோது கண்களில் காட்டும் சிரிப்பும், குடிசைக்குள் அறைந்துவிட்டு கைப் பிடித்து இழுக்கும் ரியாக்ஷனுமே போதும்!


வேதிகாவைவிடக் கனமான பாத்திரம் தன்ஷிகாவுக்கு. அதர்வாவைத் தன் குடிசைக்குள் சேர்க்காமல் விரட்டுகிற முரட்டுத்தனமாகட்டும் அதர்வாவின் அப்பாவித்தனத்தைப் புரிந்துகொண்டு மௌனமாகப் புன்னகைப்பதாகட்டும், 'பொம்பளையப் பத்தித் தப்பாப் பேசாதே’ என்று ஆத்திரப்படுவதாகட்டும், தைரியமும் துயரமும் அலைக்கழிக்கும் பெண்மைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் தன்ஷிகா!


யாருங்க அந்த ஆத்தா..? அத்தனை அலட்சியமான உடல்மொழி, வசன உச்சரிப்பில் கலங்கடிக்கிறார் அதர்வாவின் பாட்டியாக வரும் கச்சம்மா. ''என் கல்யாணத்தை நானே தமுக்கு அடிக்கிற மாதிரிக் கனவு கண்டேன்' என்று சொல்லும் அதர்வாவிடம், ''ஆமா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கிற மாதிரி நான் கனாக் கண்டேன்' என்று துடுக்குக் காட்டி, பஞ்சாயத்தில் அவசரமாகச் சூடம் அணைத்து, ''அதெல்லாம் சத்தியம் பண்ணியாச்சு, போங்க... போங்க'' என்று விரட்டியடிக்கும்போது ஆச்சர்யப்படுத்துகிறார். 



புதிதாகத் திருமணமாகிக் கல்யாணக் கனவு கலையாமலே பஞ்சம் பிழைக்க எஸ்டேட் நரகத்துக்குப் புலம்பெயர்ந்து வெள்ளைக்காரனின் காம இச்சைக்குப் பலி யாகும் ரித்விகா, தன் மனைவி மானம் இழப்பதை வேறு வழியில்லாமல் பார்த்துச் சகித்து, இரவு நேரத்தில் அழுது புலம்பும் கார்த்திக், ஜாலி மைனராக டான்ஸ் போட்டு பெர்மனென்ட் மட்டையாகும் விக்ரமாதித்யன் என ஒவ்வொரு பாத்திரமும் நுட்பத்துடன் வார்க்கப்பட்டிருக்கின்றன. ''பிளெஸ் மீ மை லார்ட்...'' எனக் கிழிந்த சட்டையோடு நாயைப் போலக் கெஞ்சுவதும் வன்மத்தில் தொழிலாளர்களிடம் குமுறுவதுமாக கங்காணிக் கயவாளித்தனத்தைக் கண்ணில் நிறுத்திய ஜெர்ரி, நல்ல அறிமுகம்.
படத்தின் மிகப் பெரிய பலம் நாஞ்சில் நாடனின் வசனங்கள். அதே சமயம் வசனகர்த்தாவின் புத்திசாலித்தனங்களைக் காட்டாமல், ஒரு பாத்திரத்தின் வார்த்தைகளாகவே ஏற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர். அந்த மக்களின், காலத்தின் இயல்பும் அப்படியே பதிவாகியிருக்கின்றன. ''வேட்டிக்குள்ள இருந்து மந்திரி எட்டிப் பார்க்கிறாரு'' என முதல் பாதியில் குறும்பு கொப்பளிக்கும் வசனங்கள் ''ராசா வண்டியை விட்ருவேன்!'' என ஆங்காங்கே நெகிழவைத்து, ''நீயும் இந்த நரகக் குழியில வந்து விழுந்துட்டியே!'' எனக் கலங்கடிக்கின்றன.



சாலூர் கிராமத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்படும் ஆரம்பக் காட்சி, முதல் மரணம் உறைந்திருக்கும் தேயிலை எஸ்டேட்டின் விஸ்தாரப் பரப்பைச் சுற்றிச் சுழலும் இறுதிக் காட்சி வரை செழியனின் கேமரா, படத்தின் ஆகப் பெரும் பலம்.  ஜி.வி.பிரகாஷின் இசையில் வைரமுத்துவின் வரிகளில், 'அவத்தப் பையா’ காதல் பொங்கவைத்தால், 'செங்காடே சிறுகரடே போய் வரவா’ பாடலும், 'செந்நீர்தானா’ பாடலும் கண்ணீர் பொங்கவைக்கின்றன. பின்னணி இசையில் இன்னும்கூட மெனக்கெட்டு இருக்கலாம் ஜி.வி!


பாலச்சந்தரின் கலையும் கிஷோரின் எடிட்டிங்கும் படத்தில் உயர் தரம். தாஸின் ஒப்பனை, பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பு இரண்டும் பிரமிக்கவைக்கின்றன. கமர்ஷியல் சினிமாவுக் கான சங்கதிகள் இல்லாதபோதும் டாக்குமென்ட்டரி தொனி தவிர்ப்பதில், 'பரதேசி’ குழுவின் உழைப்பு அசரவைத்திருக்கிறது.  


படத்தின் திருஷ்டிக் காட்சிகள் மருத்துவராக வந்து மதப் பிரசாரம் செய்யும் 'பரிசுத்தம்’ பாத்திரக் காட்சிகள். மத மாற்றம் பெருமளவு நிகழ்ந்த காலகட்டம்தான் என்றாலும், அதை ஏதோ காமெடிக் குத்தாட்டம் ஆக்கியது... வெரி ஸாரி.  


இதுவரை பெரிதாகச் சொல்லப்படாத கொத்தடிமைச் சமூகத்தின் துயரச் சரித்திரத்தை அழுத்தமாகச் சொன்னதற்காக 'பரதேசி’யைக் கொண்டாட வேண்டும்.


'சேது’வில் யதார்த்த சினிமாவுக்கான ஓர் அலையை உருவாக்கிய பாலா, 'பரதேசி’யில் பல படிகள் கடந்து அடுத்தகட்டத் தமிழ் சினிமாவை ஆரம்பிக்கிறார்!

thanx - vikatan

diSki -

பரதேசி - சினிமா விமர்சனம்( cps)

http://www.adrasaka.com/2013/03/blog-post_1984.html

Wednesday, March 20, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரோ , இயக்குநர் இமயம் பாரதிராஜாவோ இதுவரை சொல்லத்துணியாத  கதைக்களம் , பிரம்மாண்டத்தின் பிரதி பிம்பம் ஷங்கரோ, தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் மணிரத்னமோ இனிமேலும் சொல்லி விட முடியாத விளிம்பு நிலை மனிதர்களின் துயரக்கதையை  ஏ , பி சி என எல்லா நிலை மக்களையும் மனம் கனக்கும் வகையில் சொல்லி விட பாலாவைத்தவிர தமிழ் சினிமாவில் யாரால் சொல்லி விட முடியும்?  வெல்டன் பாலா .தமிழ் சினிமாவின்  முக்கியமான படைப்பு இது .

இழவு சேதியை வீடு வீடாக தண்டோரா கொட்டி சொல்லும் ஒட்டுபொறுக்கி என்னும் கேரக்டர் ஹீரோவுக்கு.1936 -ல் நடந்த தேயிலைத்தொழிலாளர்கள் பட்ட கஷ்ட நஷ்டங்கள், அவர்கள் வஞ்சிக்கப்பட்டு கொத்தடிமைகளாய் வேலை செய்த கொடூரத்தை எந்த ஒப்பனையோ, சமரசமோ செய்யாமல் ரத்தமும் , சதையுமாய் அழுகையுடன் மனதை கனக்கச்செய்யும் விதத்தில் படைக்கப்பட்டிருக்கும் தமிழ் சினிமா இது. 


அதர்வா தான் ஹீரோ. முரளி உயிருடன் இருந்திருந்தால் ஆனந்தக்கண்ணீர் விட்டிருப்பார். ஏன்னா எத்தனையோ படங்கள் நடிச்சும் அவரால செய்ய முடியாத , செய்ய வாய்ப்புக்கிடைக்காத கேரக்டர் தன் மகனுக்கு கிடைச்சிருக்கே? மூன்றாவது படமே முத்தான கேரக்டர்.கெட்டப்பில் எந்த உறுத்தலும் இன்றி அச்சு அசலாகப்பொருந்தி விடுகிறார். கூனிக்குறுகுவது , அடிமைத்தனத்தை பாடி லேங்குவேஜ்ஜில் காட்டுவது  என பிரமாதப்படுத்தி இருக்கிறார்.


ஹீரோயின் வேதிகா. பாதிகா ஜோதிகா , மீதிகா ஸ்ரீவித்யா.அவர் காட்டும் செயற்கையான சுட்டித்தனங்கள் கதைச்சூழலுக்குள் பொருந்தாமல் தனித்து நிற்குது.ஓவர் ஆக்டிங்க். அவர் மேல் குறை சொல்லிப்பயன் இல்லை. இயக்குநரின் கவனக்குறைவு. மற்றபடி இந்த கேரக்டருக்காக அவர் தன்னை வருத்திக்கொண்டு நடித்திருக்கிறார் என்பது கண்கூடு .


2வது ஹீரோயின்  தன்சிகா பாத்திரப்படைப்பில் , அமைதியான ஒரிஜினாலிட்டி நடிப்பில் மனம் கவர்கிறார்.சர்வசாதாரணமாக வேதிகாவை நடிப்பில் ஓவர் டேக் செய்கிறார்.

 படத்தில் ஹீரோவின் பாட்டியாக வரும் நபர் அனைவர் மனதையும் கவர்கிறார், கூன் போட்டபடியே அவர் வேதிகாவின் அம்மாவிடம் மல்லுக்கட்டும் காட்சியில் அரங்கில் கை தட்டல் ஒலிகள்


கங்காணி கேரக்டர் , டாக்டர், அவர்  ஃபாரீன் மனைவி , வெள்ளைக்காரத்துரை , தன்ஷிகாவின் குழந்தை என நடிப்பில் முத்திரை படைத்தவர்கள் நீளும் பட்டியல்கள்


 



 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஆர்ட் டைரக்‌ஷன் அபார உழைப்பு காட்சிக்கு காட்சி தெரிகிறது . குடிசைகள்  அமைப்பு , சாப்பிடும் இலை,  உட்பட நுணுக்கமான கவனிப்பில் கலை இயக்குநர் வித்தகம் செய்திருக்கிறார்



2. ஆடை வடிவமைப்பு  கனகச்சிதம் ( தேசிய விருது கிடைச்சுருக்கு). அந்தக்கால மனிதர்களின் மாறுபட்ட மேனரிசங்கள் , பாடி லேங்குவேஜ் எல்லாம் ஓக்கே



3. ஓப்பனிங்க் காட்சியில் அந்த ஏரியாவையே சுற்றிக்காட்டி விடும் லாவகம்  அபாரம் ஒளிப்பதிவு கலக்கல் . கிட்டத்தட்ட பிளாக் அண்ட் ஒயிட் மாதிரி தான் படம் பூரா .கச்சிதமான கலரிங். ஒரு பீரியட் ஃபிலிமுக்குத்தேவையான , முக்கியமான 3 சப்போர்ட்டிங்க் 1. ஆர்ட் டைரக்ஷன்  , 2 . ஒளிப்பதிவு  3 ஆடை வடிவமைப்பு . 3ம் பாராட்டு பெறும் விதத்தில்


4. வேதிகா அதர்வாவுக்கு  ஊட்டி விடும் காட்சியும் , அப்போது அதர்வாவின் ரி ஆக்சனும் அப்ளாஸ் வாங்கும் காட்சிகள்


5. கொத்தடிமைகளாய் இருக்கும் மக்கள்  விலங்குகளைப்போல் ஏரியில் கூட்டம் கூட்டமாய் தரையில் முழங்காலிட்டு தண்ணீர் அருந்தும் காட்சி , ஹீரோ தப்பிப்போகும் போது பிடி பட்டு கால் நரம்பை கட் பண்ணும் காட்சி மனதில் வலி தங்கும் இடங்கள்


6. ஓ செங்காத்தே பாடல் வரிகள்  அற்புதம். பஞ்சாயத்து முன் சத்தியம் பண்ண விடாமல் சூடத்தை பாட்டியே அணைக்கும் காட்சி கல கலப்பான ஒரே இடம்


7. டாக்டரும் , அவர் மனைவியும் ஆடிப்பாடும் தெம்மாங்குப்பாட்டின் பி ஜி எம்


8. புதை குழில வந்து சிக்கிட்டியே அங்கம்மா என ஹீரோ கதறும் கலங்கடிக்கும் க்ளைமாக்ஸ் காட்சி






இயக்குநரிடம் சில கேள்விகள்


1. ஹீரோவின் பட்டப்பெயரான ஒட்டுப்பொறுக்கி என்பதை ஹீரோயின் உட்பட பலரும் கிண்டல் செய்யும் காட்சிகள்  தேவை இல்லாதது . அனுதாபத்தை வலிய வர வைப்பதற்கான  உத்தி , கிட்டத்தட்ட கலைஞரின் உண்ணாவிரத நாடகம் போல்


2. தேயிலைத்தோட்டத்தொழிலாளர்கள் படும் அவஸ்தைகள் தான் கதையின் மையம் . அது தொடங்கும்போதே இடை வேளை வந்துடுது . அது வரை வழக்கமான ஹீரோ , ஹீரோயின் ஊடல் , காதல் , சில்மிஷங்கள் , கில்மா என சராசரிப்படமாகத்தான் போகுது . தேவையே இல்லை . பாலா படத்தில் மக்கள் எதிர்பார்ப்பது சராசரிக்காட்சிகள் அல்ல..


3.அங்காடித்தெரு வின் ஓல்டெஸ்ட் வெர்ஷன் தான் இந்தப்படம் அப்டிங்கற எண்ணம் மக்கள் மனதில் தோன்றாமல் இருக்கு இந்தப்படத்தை முன்பே எடுத்திருக்கனும், ஏன்னா இதன் மூல நாவல் ஏற்கனவே எழுதி ரெடியா இருந்தது


4.  இயல்பாகவே பணிவாகவும், அடிமையாகவும் , கூனிக்குறுகி நடந்து கொள்ளும் ஹீரோ ஒரு காட்சியில் கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாகப்படுத்திருக்காரே?


5. இது ஒரு சோகப்படம், மனதை கனக்க வைக்கும் வரலாற்றுப்பதிவு. இதில் தேவையே இல்லாமல் தன்ஷிகா - அதர்வா  ஜோடி கேப் ல கிடா வெட்டுவாங்களா? என்ற தேவையற்ற கில்மா எதிர்பார்ப்பை தோற்றுவிக்கும் காட்சிகள் எதற்கு?


6. கதையில் 48 நாட்களுக்குப்பிறகு என டைட்டில் போட்ட பிறகு ஹீரோ மட்டும் தாடி , தலை முடி வளர்ந்து காட்சி அளிக்கிறார், அனைத்துத்துணை நடிகர்களும் சம்மர் கட்டிங்க் கெட்டப்பில் இருப்பது எப்படி?



7. டாக்டர் , அவரோட ஃபாரீன் சம்சாரம் கொண்டாட்டப்பாட்டு தேவையற்ற திணிப்பு . பிதா மகன் படத்தில் சிம்ரன் பாட்டு வரவேற்பு பெற்றதால் அதே மாதிரி ஒரு பாட்டு இணைச்சுட்டீங்க போல .அந்தப்பாட்டில் ஃபாரீன் லேடி ;லோக்கல் லோகநாயகி போல் செம குத்தாட்ட ஸ்டெப் போடுவது எப்படி? 


8.வில்லன் வெள்ளைத்துரை தான் ஆசைப்பட்ட மேரேஜ் ஆன பெண்ணைப்பார்த்து “ கன்னிப்பெண்ணா?”னு கேட்கறார். டெயிலி டீ குடிக்கற மாதிரி பல களம் கண்ட  கயவாளிப்பையலுக்கு மேரேஜ் ஆன பொண்ணுக்கும் ,  கை படாத ரோஜாவுக்கும் ( ஆர் கே செல்வமணி மன்னிச்சு )  வித்தியாசம் தெரியாதா?


9.  அவ மேரேஜ் ஆனவ் அப்டினு தெரிஞ்சதும் கங்காணி கிட்டே “ அவ புருஷன் கூட சேராம பார்த்துக்க “ என்கிறார். அதை எப்படி பார்த்துக்க முடியும்? அதுக்கு புருஷனை விரட்டிடலாமே?



10. மேரேஜ் நடக்கும்போது ஒரு இழவு விழுவதும் அந்த சேதி ஹீரோவுக்குத்தெரிந்தால் ஊரைக்கூட்டி விடுவார் என்பதும் சுவராஸ்யம், ஆனால் காட்சிப்படுத்துதலில் அலட்சியம், நம்பும்படி இல்லை


11. கல்யாண வீட்டில் சாப்பாடு பொன்னி அரிசி மாதிரி பளிச் என்ப இருப்பது எப்படி? ( அந்தக்காலத்துல அந்த ஜனங்க அப்டியா சாப்பிட்டிருப்பாங்க? )



12. தேயிலைத்தொழிலாளர்களை பார்க்கவே பாவமா பஞ்சத்துல அடிபட்ட மாதிரி இருக்காங்க . அவங்களைப்பார்த்தா அழுகை தான் வரும், காமம் வராது . வில்லன் காமப்பார்வை பார்க்கறான், ஒரு வாதத்துக்கு அதை ஏத்துக்கிட்டாக்கூட  டாக்டரின் ஃபாரீன் மனைவி செம கிளு கிளுவா   70 கிலோ கேரட் மாதிரி தள தளன்னு இருக்கா, அவளைக்கண்டுக்கவே இல்லையே? இக்கரைக்கு அக்கரை பச்சைங்கறது ஃபிகர் விஷயத்துல செல்லாதே...



13. இந்த மாதிரி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம்? , இசை ஞானியை விட்டுட்டு ஜி வி பிரகாசை புக் பண்ணியதில் அவர் சொதப்பிட்டார்.


14. வேதிகா ஹீரோவுக்கு லெட்டர் போடறார், க்ளைமாக்சில் ஏன் இங்கே வந்து மாட்டுனே என புலம்பும் ஹீரோ அதை ஏன் கடிதம் எழுதி முன் கூட்டியே வார்ன் பண்ணி இருக்கக்கூடாது , இங்கே வராதே அப்டின்னு ..



மனம் கவர்ந்த நாஞ்சில் நாடன் -ன் வசனங்கள்


1. பொறந்த இடத்துலயே சாகனும்னு நினைக்கற உன்னை மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இது தாண்டா தலை எழுத்து


2. துணிஞ்சவனுக்குத்தான் அதிர்ஷ்டம் என்னைக்கும் துணை இருக்கும்



3. உள்ளூரில் காக்கா குருவி பசி ஆறுது.மனுஷக்கூட்டம் சம்பாதனைக்காக ஊர் விட்டு ஊர் மாறுதே # பரதேசி பாடல் வரி



4. வேலை ரொம்ப கஷ்டமா இருக்குமா சாமி?


கஷ்டம்னு பார்த்தா மூலவியாதிக்காரனுக்கு நெம்பர் 2 போறது கூட கஷ்டம் தான்

5. கண்ணாலம் ஆகாமயே அங்கம்மா கர்ப்பம் ஆகிட்டா


இவனுக்கு இடுப்புல கயிறு கட்டுறதா? இல்லை புடுக்குல கட்டுறதா?



6. டேய் , உனக்கு பெரியப்பா 1 தான் , பெரியம்மா எத்தனை?


 தெரியலையே? என்னைக்கேட்டா? நீயே சொல்லு

 எனக்கும் தெரியாது , எனக்கு 10 விரலும் பத்தாது ........



7/ரெண்டு பேரும் சேர்ந்து பிச்சை எடுக்கற மாதிரி கனா கண்டீரோ?


8. சாமி , பொண்டாட்டியைக்கூட்டிட்டு வரலாமா?

 உன் பொண்டாட்டிதானே?



9. ஜனங்க பேசக்கூட பயந்து சாகறாங்க


10. ஊருக்குப்போய் பன்னி மேய்ச்சாலும் மேய்ப்பேனே தவிர  திரும்பவும் இங்கே வர மாட்டேன்


 



சி பி கமெண்ட் - பாலா மாதிரியான கலைப்பூர்வமான அபூர்வப்படைப்பாளிகள் வ்ணிக ரீதியிலும் வெற்றி அடையும்போது நாம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பரதேசி -மனதை கனக்க வைக்கும் படம்-தமிழ் சினிமாவின் மைல் கல் - விகடன் மார்க் மே பி 52 ( பாலா ரசிகர்கள் 55 வரும் எனவும் பொது ரசிகர்கள் 48 டூ 50 வரும் எனவும் சொல்றாங்க . படத்தை நான் விழுப்புரம் முருகா தியேட்டர்ல 17 3 2013 சண்டே நைட் பார்த்தேன். மார்ச் இயர் எண்டிங்க் ஒர்க் என்பதால் லேட்

புதிய தமிழ் வருடமான விஜய வருடம் - ராசிபலன்கள்


விஜய வருடம் - ராசிபலன்கள்

 அமோக விளைச்சலைத் தரப்போகும் விஜய வருடம்!
ந்தன வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான விஜய வருடம் பிறக்கிறது. 13.4.13 சனிக்கிழமை நள்ளிரவு 1.24 மணிக்கு சுக்லபட்சம் சதுர்த்தி திதி, கார்த்திகை நட்சத்திரம் 4-ஆம் பாதம், ரிஷப ராசி, மகர லக்னம் 4-ஆம் பாதத்தில், நவாம்சகத்தில் மேஷ லக்னம் மீன ராசியில், 'ஆயுஷ்மான்’ நாம யோகம் 'வனிசை’ நாமகரணத்தில், அமிர்தயோகம், நேத்திரமற்ற- ஜீவனம் நிறைந்த நன்னாளில், பஞ்ச பட்சியில் வல்லூறு இரவு 4-ஆம் சாமத்தில் துயில் கொள்ளும் நேரத்தில், சூரிய தசை- செவ்வாய் புக்தியில், சனி அந்தரத்தில், புதன் ஓரையில் விஜய வருடம் சிறப்பாகப் பிறக்கிறதுஇடைக்காடரின் இந்தப் பாடலின்படி, இந்த வருடம் மழை அதிகம் பெய்யும். கம்பு, சோளம், கேழ்வரகு, பச்சைப் பயறு உள்ளிட்ட சிறு தானியங்கள் மற்றும் புஞ்சை, நஞ்சை தானியங்களும் நன்கு விளையும். எனினும், மக்கள் மனத்தில் ஒருவித அச்சம் இருக்கும்.


விஜய வருடத்தின் ராஜாவாக குரு வருவதால் ஆன்மிகவாதிகள், வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றுபவர்கள், வேத விற்பன்னர்கள், ஸ்தபதிகள் ஆகியோர் கௌரவிக்கப்படுவார்கள். பசுக்கள் நன்கு பால் சுரக்கும். மந்திரியாக சனி பகவான் வருவதால், ஒருசில இடங்களில் மழை குறையும். மக்கள் பாவச் செயல்களில் ஈடுபடுவர்.
பதுக்கல் பொருட்களும் போதைப் பொருட்களும் கண்டறியப்படும். வரி ஏய்ப்புகள் கண்டறியப்பட்டு அரசுக்குப் பலகோடி ரூபாய் வருமானம் கூடும். ஜூன் மாதத்தில் இருந்து மின்சாரத் தட்டுப்பாடு நீங்கும். சேனாதிபதியாக சுக்கிரன் வருவதால் ராணுவம் பலப்படும். மரைன் மற்றும் சிவில் இன்ஜினீயரிங், ஆர்க்கிடெக்ட், மெக்கானிக்கல் ஆகிய துறைகள் சூடுபிடிக்கும். அர்க்காதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் ஆபரண விலை கட்டுக்குள் வரும். தங்கம் இறக்குமதி அதிகரிக்கும். வெள்ளி விலை உயரும். கண்ணாடி, சிமென்ட், மின்னணு சாதனங்கள், செங்கல், மணல் முதலான கட்டுமான பொருட்களின் விலை உயரும்.



மேகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால், விடியற்காலை நேரத்தில் மழை அதிகம் பொழியும். மலைப் பிரதேசங்களில் மண் சரிவால் பாதிப்பு ஏற்படும். மக்களின் ஆரோக்கியம் கூடும். ரசாதிபதியாக குரு வருவதால் மதுபானங்கள், மிளகு, ஏலக்காய், முந்திரி ஆகியவற்றின் விலை உயரும். சர்க்கரை விலை கட்டுக்குள் இருக்கும். ஸஸ்யாதிபதியாக செவ்வாய் வருவதால் பால், நெய் உற்பத்தி அதிகரிக்கும். தான்யாதிபதியாக சூரியன் வருவதால் சிவப்பு, வெள்ளை தானியங்கள் நன்கு விளையும். நீரசாதிபதியாக செவ்வாய் வருவதால் சந்தனம் உள்ளிட்ட மலையகப் பொருட்கள் மற்றும் பவழம்- முத்து ஆகியவற்றின் விலை அதிகரிக்கும்.


லக்னாதிபதி சனி உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால், இந்தியா தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிக்கும். சனியுடன் மாயாஜால கிரகமான ராகு சேர்க்கை பெற்று நிற்கிறார். வெட்டிப்பேச்சு, பொய்யான உறுதிமொழிகள் அதிகரிக்கும். உணவு மற்றும் மருந்துப் பொருட்களில் கலப்படம் அதிகரிக்கும். பூச்சித் தொல்லையால் விவசாயம் பாதிக்கும். உரம் விலை உயரும்.

சிறுபான்மை இனத்தவர்கள் கல்வி மற்றும் அரசு பதவிகளில் முன்னேறுவர். தீவிரவாதிகளின் கை ஓங்கும். வருடம் பிறக்கும்போது சனியும் செவ்வாயும் சமசப்தமமாகப் பார்ப்பதால் பாகிஸ்தான், சீனா, இலங்கை தூண்டுதலால் நம் நாட்டில் கலகமும், கலாசார, பொருளாதார சீரழிவும், குண்டு வெடிப்புகளும் நிகழும். எல்லையில் பதற்றம் நீடிக்கும்.

பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மை கிடைக்காமல் போகும். சட்ட விதிமீறல்கள், பாலியல்  பலாத்காரங்கள், மனிதநேயமற்ற செயல்களால், உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு குறையும். வழக்குகள் அதிகரிக்கும். ஊழல் அதிகரிக்கும். சர்க்கரை நோய், கான்சர், இருதய நோய், நுரையீரலில் தண்ணீர் சேர்தல் மற்றும் தோல் நோய்களால் ஏராளமானோர் பாதிக்கப்படுவர்.

பெண்ணாதிக்க கிரகமான சந்திரன், மற்றொரு பெண்ணாதிக்க கிரகமான சுக்கிரனின் வீட்டில் உச்சமானதால், பெண்களுக்கு ஆதரவான திட்டங்கள் உலகெங்கும் நடைமுறைக்கு வரும். ஆனால், சூரியனின் நட்சத்திரத்தில் சந்திரன் நிற்பதாலும், மற்றொரு பெண்ணாதிக்க கிரகமான சுக்கிரன் செவ்வாய், சூரியன், கேது ஆகிய கிரகங்களுடன் சேர்ந்து சனியின் பார்வை பெறுவதாலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிக்கும்.வாகன விபத்துகளும் அதிகரிக்கும். வருடம் பிறக்கும்போது குரு வலுவாக இருப்பதால் சாதுக்கள், சந்நியாசிகள் கை ஓங்கும். ஜூன் மாதத்திலிருந்து வங்கிகள் நலிவடையும்.

புதன் நீசமாகி இருப்பதால் மாணவர்கள் மத்தியில் பொது அறிவு, நுண்ணறிவு குறையும். செவ்வாய் சனியின் பார்வை பெறுவதால், நிலம் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். அயல்நாட்டு மோகம் குறையும். சேமிக்கும் குணம் குறையும். மகர சங்கராந்தி தேவதையாக மஹோதரி வருவதால், செம்மண் பூமி நன்கு விளையும். சுமங்கலிப் பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கும். புயல், புழுதிக் காற்று அதிகரிக்கும். அயல்நாட்டார் அதிகம் முதலீடு செய்வார்கள்.
  
24.12.13 முதல் 6.2.14 வரை சுக்கிரன் வக்ரம் ஆவதால் இந்த காலகட்டங்களில் பெண்களுக்குக் கெடுதியும், சினிமாத் துறையில் பாதிப்புகளும் உண்டாகும். 13.11.13 முதல் 12.3.14 வரையிலும் குரு வக்ரமாவதால், நாட்டில் நிதி நெருக்கடியும், வங்கிகள் மற்றும் புண்ணிய ஸ்தலங்களுக்கு பாதிப்பும் உண்டாகும். 12.4.13 முதல் 5.7.13 மற்றும் 2.3.14 முதல் விஜய வருடம் முடியும் வரை சனி வக்கரிப்பதால், விபத்துகள் அதிகரிக்கும். சுரங்கங்கள் பாதிப்படையும். பரம்பரைப் பணக்காரர்கள் பாதிப்படைவர்.

30.11.13 முதல் வருடம் முடியும் வரை செவ்வாய் கன்னியிலேயே அமர்வதாலும், 1.3.14 முதல் வக்ரம் அடைவதாலும், கடல் கொந்தளிப்பும், நில நடுக்கமும் உண்டாகும். மின் விபத்துகள் அதிகரிக்கும். சகோதர பாசம் குறையும். நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாகும். பங்காளிப் பிரச்னைகள் கூடும். 7.10.13 முதல் 28.10.13 வரை மற்றும் 28.1.14 முதல் 21.2.14 வரை புதன் வக்ரம் ஆவதால் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.

மொத்தத்தில் இந்த விஜய வருடம், கடந்த வருடத்தைவிட மக்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், அதே நேரம் ஒருவித அச்சத்தையும் சேர்த்துத் தருவதாக அமையும்.


கிரகணம்... கிரகப் பெயர்ச்சி!
குருப்பெயர்ச்சி: விஜய வருடம் வைகாசி மாதம் 14-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (28.5.13) இரவு 9.15 மணிக்கு குருபகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார்.


சந்திர கிரகணம்: விஜய வருடம் சித்திரை மாதம் 12-ஆம் தேதி (25- 26.4.13) வியாழக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் நள்ளிரவு 1.22 மணிக்கு சந்திரனை தென்மேற்கு திசையில் ராகு பிடிக்க ஆரம்பித்து, நள்ளிரவு 1:37 மணிக்கு அதிகமாகி, நள்ளிரவு 1.51 மணிக்கு தென்கிழக்கு திக்கில் விடுகிறது.  

கிரகணப் பலன்: உத்தராயனம் வசந்த ருது, பௌர்ணமி திதியில் சந்திர கிரகணம் நிகழ்வதால் வியாபாரிகள் நஷ்டமடைவார்கள். கால்நடைகள் பாதிக்கும். மக்களுக்குப் பசி அதிகரிக்கும். புது நோய் உருவாகும். திருவாதிரை, சித்திரை, விசாகம், சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

மேலும் சித்திரை மற்றும் ஐப்பசியில் நிகழும் சூரிய கிரகணங்களும், வைகாசியில் நிகழும் சந்திரகிரகணமும் இந்தியாவில் தெரியாது!


சுயமரியாதை மிகுந்தவர் நீங்கள். உங்களுக்கு 2-வது ராசியில் விஜய வருடம் பிறப்பதால், பக்குவமான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் கூடும். உங்களின் பூர்வ புண்யாதிபதியின் சாரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்களின் அந்தஸ்து உயரும். அரசு காரியங்கள் இனிதே நிறைவேறும். மகளுக்கு நல்ல வரனும், மகனுக்கு நல்ல வேலையும் அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

27.5.13 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான குரு பகவான் 2-வது வீட்டில் தொடர்வதால், குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை 3-ஆம் வீட்டுக்கு குரு செல்வதால், காரியத் தடைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். எனினும் தந்தைவழியில் உதவிகளும், சொத்துகளும் கிடைக்கும்.

வருடம் பிறக்கும்போது சுக்கிரனும் செவ்வாயும் வலுவடைந் திருப்பதால் வீடு- மனை வாங்குவது, விற்பது லாபமாகும். இந்த ஆண்டில் சொந்த வீடு அமையும். சகோதரிக்கு திருமணம் கூடி வரும். இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசிக்குள்ளேயே நீடிப்பதால், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மின்சாரம், நெருப்பு ஆகியவற்றைக் கவனமாகக் கையாளவும். இந்த ஆண்டு முழுக்க சனியும் ராகுவும் உங்கள் ராசிக்கு 7-ல் தொடர்வதால், தம்பதிக்கு இடையே கருத்துமோதல்கள் வரும். வெளியாட்களை வீட்டு விஷயங்களில் அனுமதிக்க வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய், தைராய்டு பிரச்னைகள் வரக்கூடும். ஆனி மாதத்தில் தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் அறிமுகமாவர். சிலருக்கு புது வேலை அமையும்.

12.8.13 முதல் 7.9.13 வரை சுக்கிரன் மறைவதால், இந்த காலகட்டத்தில் சிறு விபத்துகள் நிகழலாம். வீடு- வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆபரணங்கள், முக்கிய ஆவணங்கள் களவுபோகாமல் பார்த்துக்கொள்ளவும். 19.8.13 முதல் 10.10.13 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் நீசமாகி, சனியின் பார்வையைப் பெறுகிறார். இந்த காலகட்டத்தில் உடல்நிலை பாதிக்கும். சகோதரர்களுடன் கருத்துமோதல், பண விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும். வி.ஐ.பி-களை பகைக்க வேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் தொடர்வதால், வீடு- மனை வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.

வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. சந்தை நிலவரத்தை அறிந்து புதிய முதலீடுகள் செய்யுங்கள். அதிக வட்டிக்கு வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவதோ, புதிய துறைகளில் ஈடுபடுவதோ வேண்டாம். பங்குதாரர்களால் பிரச்னைகள் எழும். கெமிக்கல், பெட்ரோ- கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயம் உண்டு. ஆனி, ஆவணி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். தை, மாசியில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத் தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளை பகைக்க வேண்டாம். தை மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். கண்டகச் சனி தொடர்வதால், உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இல்லையே எனும் ஆதங்கம் எழும். எனினும், சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு ஆதாயம் உண்டு. சுக்கிரன் சாதகமாகப் பார்ப்பதால், கலைத் துறையினர் யதார்த்த படைப்புகளால் புகழ் பெறுவர்.
கன்னிப் பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்தவும். படித்த துறையில் வேலை கிடைக்காவிட்டாலும், கிடைத்த வேலையில் சேர்வது நல்லது. அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மாணவர்களுக்கு மறதி, தூக்கம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் மிக அவசியம். அரசியல்வாதிகளுக்கு, தலைமையிடம் இருந்து முக்கிய பொறுப்பு கிடைக்கும். ஆதாரம் இல்லாமல் எதிர்க்கட்சியினரை வசைபாட வேண்டாம்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு விடாமுயற்சியால் உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். தினமும் ராம நாமம் சொல்லி தியானிப்பதால், உங்களின் செயல்பாடுகள் சிறக்கும்.

ல்லோரையும் நேசிப்பவர் நீங்கள். ராகுவும் சனியும் 6-ஆம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கும்போது விஜய வருடம் பிறப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வி.ஐ.பி-களின் அறிமுகம் கிடைக்கும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
அயல்நாடு, வேற்று மாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். பிதுர் வழி சொத்துக்களில் பிரச்னைகள் விலகும். வழக்கு சாதகமாகும். கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் கூடும். உங்கள் ராசியிலேயே விஜய வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
27.5.13 வரை ஜென்ம குரு நீடிப்பதால் பழைய பிரச்னைகள் தலைதூக்கும். லாகிரி வஸ்துக்களைத் தவிர்க்கவும். சிலர், உங்களை அவதூறாகப் பேசலாம். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். 28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகி, வருடம் முடியும் வரை 2-ஆம் வீட்டில் அமர்கிறார். வீட்டில் குழப்பங்கள் நீங்கும். தம்பதிக்கு இடையே கலகம் ஏற்படுத்தியவர்களை இனம் கண்டறிந்து விலக்குவீர்கள். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையில் இருந்து விடுபடுவீர்கள். சிலருக்கு நல்ல வேலை அமையும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.
வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாகும். சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் துவங்குவீர்கள். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். பாதியில் நின்ற வீட்டுப் பணியை பூர்த்தி செய்ய, தேவையான வங்கி லோன் தொகை வந்து சேரும்.
விஜய வருடம் முழுவதும் கேது, ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கோயில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். 7.9.13 முதல் 3.10.13 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பலவீனம் அடைவதால் சிறு வாகன விபத்துகள், மனஉளைச்சல், வீண் பழிச்சொல் வந்து நீங்கும். 30.11.13 முதல் வருடம் முடியும் வரையிலும் உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டிலேயே செவ்வாய் நீடிக்கிறார். இந்த காலகட்டத்தில் மனைவியை அனுசரித்து செல்லவும்.
அவருக்கு சிறு சிறு அறுவை சிகிச்சைகள், மாதவிடாய்க் கோளாறுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கண்காணிக்கவும். கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொள்ள வேண்டாம். சொத்து விற்கும் போது ஒரே தவணையில் பணத்தை வாங்குங்கள்.
வியாபாரத்தில், ஆனி, கார்த்திகை, தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபம் உண்டு. புது கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.
28.5.13 முதல் குரு உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரியுடனான மோதல்கள் விலகும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக்கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பளம்- பதவி உயர்வு கிடைக்கும். கலைத் துறையினர் பற்றிய வதந்திகள் விலகும். பாராட்டு கிடைக்கும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கன்னிப்பெண்கள், தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடர்வர். நல்ல வாழ்க்கைத் துணைவர் அமைவார். அரசியல்வாதிகளுக்கு  மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம், உங்களுக்கு வெற்றியை அளிப்பதுடன், வசதி-வாய்ப்புகளை வாரித் தருவதாக அமையும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு துணை நிற்கும். சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று, துளசி சார்த்தி வழிபட்டு வாருங்கள்; இன்னல்கள் காணாமல் போகும்.

யர்வு-தாழ்வு பேதம் பார்க்காதவர் நீங்கள். முக்கிய கிரகங்கள் லாப வீட்டில் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், தன்னம்பிக்கை மிளிரும். தடைப்பட்ட விஷயங்கள் இனிதே பூர்த்தியாகும். புதிய வீடு- மனை வாங்க முயற்சிப்பீர்கள். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். பதவிகளும் பொறுப்புகளும் தேடி வரும்.
அரசால் அனுகூலம் உண்டு. வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். புது வேலைக்கான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆபரணங்கள் சேரும். ஷேர் மூலம் பணம் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.      
உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் விஜய வருடம் பிறப்பதால், சிக்கனம் தேவை. நீண்ட நாட்களாக செல்ல நினைத்த கோயில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வருவீர்கள். 28.5.13 முதல் குரு உங்கள் ராசிக்குள் நுழைவதால் வீண் அலைச்சல் குறையும். முன்கோபம், உணர்ச்சிவயப் படுவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் வாக்குவாதம், தம்பதிக்கு இடையே ஈகோ பிரச்னை வேண்டாம். மனைவிக்கு தைராய்டு, ஹார்மோன் கோளாறுகள் வந்து செல்லும். வேலை அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். எவரை நம்பியும் உறுதிமொழி தரவேண்டாம். வங்கிக் காசோலைகளில் கவனம் தேவை.
வருடம் முடியும் வரை சனியும் ராகுவும் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுவீர்கள். பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகளிடம், குடும்பச் சூழலை அன்புடன் எடுத்துச் சொல்லி புரியவையுங்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிகள் எடைமிகுந்த பொருட்களைச் சுமக்க வேண்டாம். பூர்வீகச் சொத்துக்கான வரியைச் செலுத்தி, முறையாகப் பராமரிக்கவும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். அவருடன் கருத்து மோதல்களும் வந்து செல்லும். தாய்வழி உறவினருடன் விரிசல்கள் எழலாம்.
30.11.13 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் செவ்வாய் தொடர்கிறார். இந்தக் காலகட்டத்தில் அலைச்சல், வீண் பழி, தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். வீடு-வாகனப் பராமரிப்புச் செலவுகளும் உண்டு.
கேது லாப வீட்டில் நிற்பதால், வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். சந்தை நிலவரத்தைக் கவனித்து செயல்படுவது சிறப்பு. கடையை வசதியான வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். சித்திரை, ஆவணி, கார்த்திகை மற்றும் பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி- இறக்குமதி மற்றும் கடல்வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். முக்கிய பொறுப்புகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன் சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. சட்டத்துக்குப் புறம்பாக எவருக்கும் உதவ வேண்டாம். எதிர்பார்த்திருந்த சம்பள பாக்கி கைக்கு வரும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் பதவி- ஊதிய உயர்வு உண்டு. கலைத் துறையினர் கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும்.
மாணவர்கள், சமயோசிதமாகச் செயல்பட்டு வெற்றி காணவேண்டும். அரசியல்வாதிகள், தலைமையிடம் கவனமாகப் பழகவேண்டும். பதவி கிடைக்கும். கன்னிப் பெண்கள், ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் வார்த்தையை புறக்கணிக்க வேண்டாம்.
மொத்தத்தில் இந்த விஜய வருடம் செலவு, அலைச்சலை தந்தாலும் உங்களின் செல்வாக்கை அதிகரிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: துர்கை வழிபாடு துன்பம் அகற்றும். அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று நெய் தீபமேற்றி வழிபட்டு வாருங்கள். சகல வளமும் பெருகும்.

தவி- பணத்துக்கு மயங்காதவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் விஜய வருடம் பிறக்கிறது. அந்தஸ்து உயரும். பிரபலமாவீர்கள். பதவிகள் தேடி வரும். உடல் நிலை சீராகும். செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகியோர் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் விஜய வருடம் பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். தம்பதிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். முன்பணம் கொடுத்திருந்த சொத்துக்கு, பாக்கி தொகையையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டு பயணம் சாதகமாகும். சகோதரர்கள் உதவுவர். வழக்கு சாதகமாகும். மகளுக்கு, எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி அமையும்.
27.5.13 வரை உங்களின் பாக்கியாதிபதியான குரு லாப வீட்டில் தொடர்கிறார். தொட்டது துலங்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு குதூகலம் பெறும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். 28.5.13 முதல் வருடம் முடியும் வரை, 12-ஆம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். செலவுகள் துரத்தும். ஃபைனான்ஸ் தொழில் செய்பவர்கள், தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் பணம் தரவேண்டாம். உயர் கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய நேரிடும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவு முறைகளை அமைக்கவும்.
விஜய வருடம் முழுக்க சனியும் ராகுவும் 4-ஆம் வீட்டில் நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும்போது வில்லங்கச் சான்றிதழ், தாய் பத்திரத் தைச் சரிபார்த்து வாங்கவும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. பழைய வாகனங்கள் வாங்கும்போது, உரிய ஆவணங்களைச் சரிபார்க்கவும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு வரி செலுத்தவேண்டிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். விஜய வருடம் முழுவதும் கேதுவும் 10-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள், வேலைச்சுமை வந்து செல்லும். எவருக்காகவும் வாக்குறுதி தரவேண்டாம். 30.11.13 முதல் வருடம் முடியும் வரை, செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ல் தொடர்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு- மனை சேரும். பணத் தட்டுப்பாடு வந்து நீங்கும். வியாபாரத்தில், புதியவர்களை நம்பி கடன் தர வேண்டாம்.
சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பற்று - வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் பெரிய வாய்ப்புகளும் கிடைக்கும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். வியாபார பிரச்னைகள், நீதிமன்றம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங் கள். புதிய பங்குதாரரை சேர்க்கும்போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுங்கள். துரித உணவு, கணினி உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயம் உண்டு.
உத்தியோகத்தில், பணியின் நிமித்தம் வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரிடும். எனினும், கேது 10-ல் தொடர்வதால் வீண் பயம் நீடிக்கும். அலுவலக ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். விரும்பத்தகாத இடமாற்றங்களும் இருக்கும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பளம் கூடும். மார்கழி, பங்குனி மாதங்களில் புது பொறுப்புகள் வரும்.
கலைத் துறையினர், அரசால் கௌரவிக்கப்படுவர். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பர். பெற்றோர் ஒத்துழைப்புடன் விரும்பிய கோர்ஸில் சேர்வார்கள். அரசியல்வாதிகளின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்றுக் கொள்வர். எனினும், உட்கட்சிப் பூசல் வெடிக்கும். சகாக்களிடம் பெருமை பேச வேண்டாம். கன்னிப் பெண்கள், தாயை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கெட்ட நண்பர்களிடம் இருந்து விடுபடுவீர்கள்.
மொத்தத்தில், இந்த விஜய வருடம் கடின உழைப்பாலும் தொலைநோக்கு சிந்தனையாலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.
பரிகாரம்: சஷ்டி திதி அல்லது ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமையன்று பழநி ஸ்ரீமுருகனை தரிசித்து வாருங்கள். தினமும் சஷ்டி கவசம் படியுங்கள். சங்கடங்கள் நீங்கும்; செல்வம் சேரும்.


thanx - vikatan

balance wait......