Thursday, February 14, 2013

காதல் சினிமாக்களின் காதல் 'கட்’கள்

லவ் ஒன்லி!’ என்று உருகவிருக்கும் காதல் சினிமாக்களின் காதல் 'கட்’கள் இங்கே...

 
 படம்: 'நிமிர்ந்து நில்’
இயக்குநர்: சமுத்திரக்கனி
இடம்: வீடு / மாலை / உட்புறம்
நடிகர்கள்: அரவிந்தன் சிவசாமியாக 'ஜெயம்’ ரவி, பூமாரியாக அமலா பால், ராமாக சூரி.


சூழல்: அரவிந்தன் வீட்டுக்கு பூமாரி வருகிறார். அங்கே அரவிந்தனுடன் நண்பர் ராம் இருக்கிறார். அப்போது தன் காதலை பூமாரி சூசகமாக வெளிப்படுத்தும் காட்சி.

அரவிந்தனைப் பார்த்து பூமாரி பேசுகிறார்.

பூமாரி: இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு நல்லவன் தேவையில்லை. வல்லவன்தான் தேவை. நல்லவனைப் பார்க்கலாம். ரசிக்கலாம். ரோல் மாடலாக்கூட எடுத்துக்கலாம். ஆனா, கூட இருந்து குடும்பம் நடத்த முடியாது.

அரவிந்தனும் ராமும் பூமாரியைப் பார்க்கின்றனர். பூமாரி தொடர்ந்து பேசுகிறார்.

பூமாரி: என்னையே எடுத்துக்குங்க. தினமும் நான் குறைஞ்சது பத்து பொய்யாச்சும் சொல்வேன்.

சூரி: மேக்சிமம்?

பூமாரி: அதைக் கணக்குவெச்சிக்குறது இல்லை
.
ராம்: சூப்பர்... கன்டினியூ!

பூமாரி: நாலு பேர் கிண்டல் பண்ணா, அதுல ஒருத்தனைப் பார்த்து சும்மா சிரிப்பேன். அப்போதான் அடுத்த நாள்ல இருந்து அந்த மூணு பேர்கிட்ட இருந்து அவன் என்னைக் காப்பாத்துவான். நான் சிரிச்சது பொய்தான். ஆனா, சிரிக்கணும்.

ராம்: கரெக்ட். அப்பதான் உன் வண்டி ஓடும்.


பூமாரி: ஒரு பொண்ணு காலையில வீட்டை விட்டுக் கிளம்பிப் போன மாதிரி திரும்ப வீட்டுக்குள்ள வரணும்னா, பார்க்குற எல்லார்கிட்டயும் கொஞ்சம்தான் உண்மையா இருக்கணும். நிறைய நடிக்கணும்.  


ராம்: சுத்தத் தங்கம் வேலைக்கு ஆகாது. கொஞ்சம் செம்பு கலந்துட்டா, நகை நட்டு செஞ்சுப் போட்டுக்கலாம்.


அரவிந்தன் முழிக்கிறார்.

ராம்: கறுத்துரப் போகுது. மேட்டருக்கு வா.

பூமாரி அரவிந்தனிடம்...  

பூமாரி: உன்னை மாதிரி நேர்மையா, உண் மையா வாழ்றது ரொம்பக் கஷ்டம். அட்லீஸ்ட் உன்கூடயாவது வாழலாமேனு நினைக்குறேன்.

அரவிந்தன் இதை எதிர்பார்க்காமல் அதிர்ச்சி யாவது...  


ராம்: தென்னிந்தியாவிலேயே 'நான் உன்னைக் காதலிக்கிறேன்’னு இவ்ளோ ஈஸியா எக்ஸ்போஸ் ஆனது நீதான்.


பூமாரி: சாம்பிராணி போட்டாச்சுன்னா, கிளம்பு.


சூரி: யாரு?

பூமாரி: நீதான் பிரதர்.

ராம்: கண்ணைக் காட்டினாலே கிளம்பி இருப்பேன்ல. ஏன் இப்படி அசிங்கப்படுத்துற?


படம்: 'எதிர் நீச்சல்’
இயக்குநர்: துரை செந்தில்குமார்
இடம்: கார்டன் ஹோட்டல் / பகல் / உள்புறம்
நடிகர்கள்: ஹரிஷாக சிவகார்த்திகேயன், கீதாவாக ப்ரியா ஆனந்த்.
சூழல்: கீதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, மொபைல் நம்பர் கொடுக்கும் வரை வருகிறான் ஹரிஷ். அவளிடம் தன் காதலை எப்படிச் சொல்வது என ஹரிஷ் யோசித்துக்கொண்டு இருந்த வேளையில், கீதாவே ஒரு நாள் இரவு ஹரிஷைத் தொலைபேசியில் அழைத்து, மறுநாள் கார்டன் ஹோட்டலுக்கு வரச் சொல்கிறாள். வந்த இடத்தில் இருவருமே எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என்ற தவிப்போடு இருக் கின்றனர்.


தயக்கத்துடன் கீதா: உங்க வீட்ல மொத்தம் எத்தனை பேரு?


ஹரிஷ்: யாரும் இல்லீங்க. நான் மட்டும்தான்.

கீதா: ஓ... எங்க வேலைனு சொன்னீங்க?

ஹரிஷ்: மார்க்கெட்டிங்ல இருக்கேன். மாசம் 15 ஆயிரம் வாங்குறேன். அடுத்த மாசம் இன்க்ரிமென்ட் வேற இருக்கு. இப்பவே கல்யாணம் பண்ணுனாக்கூட ஃபேமிலியை ரன் பண்ற அளவுக்கு வசதியாதான் இருக்கேன்.


கீதா (லேசான புன்னகையுடன்): குட்... ஒண்ணுமில்ல. நாம மீட் பண்ணி கொஞ்ச நாள் தான் இருக்கும்... அதுக்குள்ள இதைச் சொல்ற துக்கு ஒரு மாதிரி இருக்கு.


ஹரிஷ் தான் சொல்ல வந்த காதலை அவளே சொல்லப்போகிறாள் என்ற சந்தோஷத்தில் வேகமாக...


ஹரிஷ்: ஹைய்யோ... இதுல என்னங்க இருக்கு... என்னைக்கு இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும்.


கீதா: ஆமா... இருந்தாலும் ரொம்ப சீக்கிரமோனு மனசுக்குப் படுது.
ஹரிஷ்: இதுல என்ன இருக்கு... நீங்க சும்மா சொல்லுங்க. நான் எப்படியும் ஓ.கே-ன்னுதான் சொல்லப்போறேன்.


கீதா அப்போதும் தயங்க...

ஹரிஷ்: ஏதாவது உங்க லைஃப் விஷயமா?

கீதா: அதெப்படி கரெக்டா சொல்றீங்க. ஆனா, என் லைஃப் இல்ல. உங்க லைஃப்... என்று கூறி விட்டுத் தன் கைப்பையில் இருந்து எதையோ எடுக்கிறார்.
ஹரிஷ் (தனக்குள்): க்ரீட்டிங் கார்டு, லெட்டர், ரோஸ்...

சில ஃபைல், டாக்குமென்ட்களை எடுத்து டேபிள் மீது வைக்கிறாள் கீதா.

கீதா: ஆக்ச்சுவலி நான் எல்.ஐ.சி-ல ஏஜென்டா இருக்கேன். வேலைக்கு நடுவுல இதை பார்ட் டைமாப் பண்றேன். நீங்க எனக்காக ஒரு பாலிசி எடுக்க முடியுமா?
அந்தத் திகீர் தாக்குதலில் அழுவதா, சிரிப்பதா என்று தெரியாமல் முழிக்கிறான் ஹரிஷ்.

படம்: 'பூலோகம்’
இயக்குநர்: கல்யாண கிருஷ்ணன்
இடம்: டிபன் கடை/ பகல்/ உள்புறம்
நடிகர்கள்: பூலோகமாக 'ஜெயம்’ ரவி, சிந்துவாக த்ரிஷா.
சூழல்: எங்கோ வெளியே சென்றுவிட்டு டிபன் சென்டருக்குத் திரும்பும் சிந்து, 'சாப்பிட வா’ என சைகை மூலம் பூலோகத்தை அழைக் கிறார். பூலோகம் கடைக்கு வருகிறார். வழக்க மான வாடிக்கையாளர்கள் சாப்பிடும் இடத்தில் அமராமல், ஃபேமிலி ரூம் போன்ற இடத்தில் அமர்கிறார். சிந்து பரோட்டா, பாயா பரிமாறு கிறார்.  

பூலோகம்: எதுக்கு இவ்ளோ சீக்கிரம் சாப்பிட வரச் சொன்னே?

சிந்து: இனிமே சீக்கிரமா சாப்பிட வா. உன்னால எனக்கு காலேஜுக்குப் போக லேட் ஆகுது.

பூலோகம்: சரி... சரி... எங்கே போய்ட்டு வர்ற?

சிந்து (குரலில் குழைவு சேர்த்துக்கொண்டு): டாட்டூ வரைஞ்சுட்டு வர்றேன். உன்னோட ஒவ்வொரு பாக்ஸிங் போஸையும் என் உடம்புல டாட்டூவா வரைஞ்சுக்குவேன்.

பூலோகம்: எங்கே டாட்டூ வரைஞ்சிருக்கே?

சிந்து: அதெல்லாம் காட்ட மாட்டேன்பா...

பூலோகம்: சும்மா காட்டு.

சிந்து: எங்கே எல்லாம் இருக்குன்னு கரெக்டா சொன்னா, நானே காட்டுறேன். ஆறேழு இடத் துல உன் படத்தை வரைஞ்சிருக்கேன். எங்கேன்னு சொல்லு பார்ப்போம்?

பூலோகம்: என் படத்தை நான் பார்க்குறதுக்கு உன்கிட்ட ஏன் பெர்மிஷன் கேட்கணும்? நானே பார்த்துக்குறேன்!
சிந்துவை இழுத்துப் பிடித்து டாட்டூக்களைப் பார்க்க முயற்சிக்கிறார். சிந்து கைகளால் தடுக் கிறார்... சிரிக்கிறார். 'வேண்டாம்’ என்றவாறு தள்ளி விலகி நிற்கிறார். பிறகு ஓடுகிறார்.
டூயட் பாடல்....   

படம்: மூன்று பேர் மூன்று காதல்
இயக்குநர்: வஸந்த்
இடம்: உணவகம்/பகல் /உள்புறம்
நடிகர்கள்: வருணாக விமல், ரம்யாவாக லாசினி
சூழல்: ஒரு உணவகத்தில் வைத்து ரம்யாவிடம் தன் காதலை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் வருண்.
ரம்யா தான் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்து அமர்கிறார். அதுவரை ரம்யாவை தூரத்தில் இருந்து ரசித்துக்கொண்டு இருக்கும் வருண், ரம்யா அமர்ந்ததும் அவரிடம் வருகிறார்.

வருண்: ஹாய் ரம்யா...

ரம்யா: ஹலோ...

வருண்: தனியா உக்காந்து சாப்பிடுறதைப் பார்த்தேன்.

ரம்யா: அதனால உங்களுக்கு என்ன பிராப்ளம்?

வருண்: நானும் தனியாதான் சாப்பிடணும்.

ரம்யா: சாப்பிடுங்க. அதனால என்ன?

வருண்: இல்ல. 'அழகான ரெண்டு பேர் எதுக்கு தனித்தனியா சாப்பிடணும்?’ அப்படினு
உங்ககிட்ட கேட்கலாம்னு பார்த்தேன்.
கேட்கட்டுமா?

ரம்யா: கேட்காதீங்க... வேணாம்!

வருண்: நான் கம்பல் பண்ணலீங்க. இது என் ரெக்வெஸ்ட். நீங்க ஆர்டர் பண்ணதை நீங்க சாப்பிடுங்க. நான் ஆர்டர் பண்ணதை நான் சாப்பிடுறேன். ஒரே டேபிளை ஷேர் பண்ணிக்கலாம்.

ரம்யா: ஒரே ரெஸ்டாரன்ட்டை ஷேர் பண்ணிக்குறோம்ல. அது போதும்!

வருண்: கடைசியா நீங்க சிரிச்சுக்கிட்டே பதில் சொல்ற மாதிரி ஒரு கேள்வி கேட்டுட்டுப் போயிடவா?

ரம்யா: சீக்கிரம்... சட்டுபுட்டுனு கேட்டுட்டுக் கிளம்புங்க!

வருண்: ஒரு நாளைக்கு ஒருத்தரையே 86,400 தடவை நினச்சா என்னங்க அர்த்தம்?

ரம்யா: என்ன அர்த்தம்?

வருண்: ஒவ்வொரு செகண்டும் அந்தப் பொண்ணையே நெனச்சுக்கிட்டு இருக்கேன்னு அர்த்தம். என்ஜாய் யுவர் மீல்!
சொல்லிவிட்டு நடந்து செல்லும் வருண், மீண்டும் ரம்யாவிடம் வருகிறார்.

வருண்: ரம்யா ஹெல்த் மேகசின்ல படிச்ச ஒரு டிப்ஸ் சொல்றேன். கேட்டுக்கோ... இப்படி தனியா உக்காந்து சாப்பிட்டா கிட்னில பிராப்ளம் வருமாம்.
உடனே அடக்க முடியாமல் ரம்யா சிரித்து விட, அந்த நேரத்தில் வருண் நைஸாக ரம்யா வுக்கு எதிர் இருக்கையில் அமர முயற்சிக்கிறார். உடனே ரம்யா சிரிப்பை மறைத்துக்கொண்டு கோப ரியாக்ஷன் காட்டிப் பேசுகிறார்.  

ரம்யா: நான் சிரிச்சது ஜோக்குக்கு!

வருண்: ஜோக் என்னுதுதானே!
ரம்யா மறுபடியும் சிரிக்கிறார். வருண் சிரித்துக் கொண்டே அந்த இடத்தில் இருந்து நகர்கிறார்.
கட் செய்தால் ட்ரீம் சாங்... ரம்யா புல்வெளி, மலைப் பகுதியில் தனியே நடக்கிறார். காதலை நினைத்து ரசிக்கிறார்... சிரிக்கிறார்.



thanx - vikatan

இசையமைத்ததில் டாப் 10 பாடல் - எம் எஸ் வி பதில்கள்!

கோபாலன், திருவாரூர். 

 
  ''அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், 'ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?'' 



''ஆமாங்க! 'ஆபீஸ் பையன் அண்ணே’னு கூப்பிடுவேன். சினிமாவில் நான் பார்த்த முதல் வேலையே ஆபீஸ் பையன் வேலைதான். எட்டு வயசுல இருந்து பல கஷ்டங்களைச் சந்திச்சு, முட்டி மோதித்தான் சினிமாவில் எனக்குன்னு ஓர் இடத்தைப் பிடிச்சேன். ஆபீஸ் பையனா வேலை பார்த்தப்ப, எல்லாவிதமான மனிதர்களிடமும் சகஜமாகப் பழகி அவங்களோட சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கிட்டதால், எல்லாரையும் மதிக்கணும்கிற பண்பு எனக்கு இயல்பாவே வந்திருச்சு. எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.எம்.மாரியப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன்கிட்ட எல்லாம் நெருங்கிப் பழகிட்டு, இந்தப் பண்புகூட இல்லைன்னா, அப்புறம் என்ன அர்த்தம்? யாரா இருந்தாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும். அதுதான் முக்கியம்!''


மந்திரியப்பன், கீழ்க்கட்டளை.
 ''இப்போதைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்களைப் பற்றி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?'' 




''எங்க காலம் மாதிரி இல்லை இப்போ.தொழில்நுட்பத்துல தமிழ் சினிமா எங்கேயோ உயரத்துல இருக்கு. நான், இளையராஜா, ரஹ்மான் மட்டும் இல்ல... எங்க பாதையில நிறையப் பேர் தொடர்ந்து வந்திருக்காங்க. வித்யாசாகர், இளையராஜாவோட மகன் யுவன்ஷங்கர் ராஜா, தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், ஜி.வி.பிரகாஷ், டி.இமான், விஜய் ஆண்டனினு எல்லாருமே பிரமாதமா மியூஸிக் போடுறாங்க. சின்னவங்க, பெரியவங்கன்னு இல்லீங்க. இசையைப் பொறுத்தவரை மக்கள் விரும்பிக் கேட்கணும்... அவ்வளவுதான். இளைய தலைமுறை பசங்க மக்கள் விரும்பிக் கேட்கிற மாதிரி இசையமைக்கிறாங்க.''



கி.மனோகரன், பொள்ளாச்சி. 


''நீங்க இசையமைக்க ரொம்பவும் கஷ்டப்பட்ட பாட்டு எது? ஏன்?'' 



'' 'அவன்தான் மனிதன்’ படத்துல ஒரு பாட்டு. பாடலின் சூழ்நிலைக்கு கண்ணதாசன் பிரமாதமாப் பாட்டு வரிகளை எழுதிட்டாரு. கவியரசரோட அந்த வரிகளுக்கு நான் பல டியூன் போடுறேன். எனக்கே திருப்தி இல்லை. ரொம்பக் கவலையாப்போச்சு. கடைசியில எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு டியூன் அமைஞ்சது. அந்தப் பாட்டு... 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா’! அந்த டியூன் ரசிகர்களுக் கும் ரொம்பப் பிடிச்சுப்போனது என்னோட பாக்கியம்.


இந்த இடத்துல கவியரசர் பாட்டு எழுதி ரொம்பவும் குறுகிய நேரத்துல நான் டியூன் போட்ட பாட்டு பத்தியும் சொல்லிடுறேன். 'நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்துல வர்ற 'முத்தான முத்தல்லவோ’ பாட்டுக்கான மெட்டை நான் போடப் போட, ஓடுற காரிலேயே கவிஞர் அந்த மெட்டுக்கான வரிகளைச் சொல்லிக்கொண்டு வர, நாங்க அந்த மெட்டுக்காக எடுத்துக்கிட்டது மொத்தம் மூணே நிமிஷம்தான்!''



ரா.பாலகுமாரன், சென்னை-63. 


''நீங்கள் சில படங்களில் நடித்துள்ளீர்கள். உண்மையில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் திரைத் துறைக்கு வந்தீர்களா?'' 



''சின்ன வயசுல என் குருநாதர் நீலகண்ட பாகவதரிடம் பாட்டுப் பயிற்சிதான் எடுத்துக்கிட்டேன். அவர் நாடகங்களும் எழுதுவார்.


அப்போ கேரளா கண்ணணூர்ல இருந்த சிறைக் கைதிகளின் பொழுதுபோக்குக்காக ஹரிச்சந்திரா நாடகம் போட்டார். அந்த நாடகத்துல அவர் என்னை லோகிதாசனா நடிக்கவெச்சார். அந்த நாடகத்தைப் பார்த்த மாவட்ட கலெக்டர், 'இந்தப் பையன் சினிமாவுல சேர்ந்தா பிரமாதமா வரு வான்’னு என்னைப் பாராட்டினார். அதைக் கேட்ட துல இருந்துதான் எனக்கு சினிமா கிறுக்குப் பிடிச்சுருச்சுனு சொல்லணும். எப்படியாவதுசினிமா வுல சேர்ந்துடணும்னு முடிவுபண்ணிட்டேன். அப்புறம் என் மாமா மூலம் திருப்பூர் ஜூபிடர் பிக்சர்ஸ்ல ஆபீஸ் பையனா வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே அப்போ 'கண்ணகி’ பட வேலைகள் நடந்துட்டு இருந்தது. அந்தப் படத்தில் பாலமுருகன் வேஷத்தில் நடித்தேன். அப்புறம், 'குபேர குசலா’ படத்தில் ஒரு வேஷம் கிடைச்சது.



ஆபீஸ் பையன் வேலை பார்க்கிறப்ப ஸ்டுடியோல இருக்கிற ஆர்மோனியப் பெட்டியைத் துடைக்கிற சாக்குல அதை ஆசையாத் தடவித் தடவிப் பார்ப்பேன். இந்த நேரத்துலதான் டி.எஸ்.பாலையா அண்ணன் பழக்கம் ஏற்பட்டுச்சு. அவர் என்னைத் தன்னோட நாடக ட்ரூப்புல சேர்த்துக்கிட்டார். அவரோட பல நாடகங்கள்ல சின்னச் சின்ன வேஷங்கள்ல நடிச்சேன். பிறகு, சினிமாவுல பாலையா அண்ணன் பிஸியாகிட்டதால், முன்னே மாதிரி அவரால நாடகங்கள் நடத்த முடியலை. நாடகங்கள் இல்லா ததால வறுமையில் ரொம்பக் கஷ்டப்பட்டேன். மறுபடியும் ஜூபிடர் பிக்சர்ஸுக்கே திரும்பினேன். அங்கேதான் என் வாழ்க்கைல ஒளி விளக்கு ஏத்தி வெச்ச இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைச் சந்திச்சேன். அவர் என்னைத் தன்னோட உதவியாளரா சேர்த்துக்கிட்டார். நடிப்பு ஆசையை உதறிட்டு, நான் இசை பக்கம் திரும்பினது அப்போதுதான்.''

 விகடன் மேடை எம் எஸ் வி பதில்கள்!

வி.ஆர்.கிருத்திகா, திருத்தங்கல். 


''நீங்கள் இசையமைத்ததில் டாப் 10 பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்?'' 



'' 1. எங்கே நிம்மதி...  (புதிய பறவை)
   2. யார் அந்த நிலவு...  (சாந்தி)
   3.  தெய்வமே...  தெய்வமே (தெய்வ மகன்)
   4. தேவனே என்னைப் பாருங்கள்...  (ஞானஒளி)
5. தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...  (அவள் ஒரு தொடர்கதை)
6. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்.  (அபூர்வ ராகங்கள்)
7. சிப்பி இருக்குது முத்து இருக்குது... (வறுமையின் நிறம் சிவப்பு)
8. அல்லா... அல்லா... (முகமது பின் துக்ளக்)
9. எதற்கும் ஒரு காலம் உண்டு... (சிவகாமியின் செல்வன்)
10. நிலவு ஒரு பெண்ணாகி...  (உலகம் சுற்றும் வாலிபன்).''
தலத்தெரு பாலு, காரைக்கால். 


 ''எம்.எஸ்.வி. என்கிற உங்கள் பெயரிலேயே ஏதோ சிறப்பு இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறேன். அது என்ன சார்?'' 


'' 'மனையங்கத்து சுப்பிரமணியன் விஸ்வநாதன்’ என்பதுதான் எம்.எஸ்.வி.  
நான் பிறந்த கேரளாவில் ஒரு வழக்கம் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் என்று ஒரு பட்டப் பெயர் இருக்கும். அந்த வழக்கப்படி எங்கள் குடும்பத்துக்கு 'மனையங்கத்து’ என்பது பட்டப் பெயர். ஆக, என் பெயரின் 'எம்’ என்பது 'மனையங்கத்’தையும் 'எஸ்’ என் தந்தை சுப்பிரமணியனையும் குறிக்கும்.



இன்னொரு விஷயமும் உண்டு... 1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்த காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா? MSV 5052 என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் மாற்றாமல் என்னோடு வைத்திருக்கிறேன்!''



யு.ஆதி, முக்கூடல். 


 ''இதுவரை நீங்கள் வெளியில் சொல்லாத ரகசியம் ஒன்று?'' 


''ரகசியம்னு எதுவும் கிடையாதுங்க. என்னோடு சினிமாவில் வேலை பார்த்த எல்லாருக்கும் என்னோட எல்லா உண்மையும் தெரியும். ஆனா, பரவலா பலருக்கு என்னைப் பத்தித் தெரியாத ஒரு செய்தி... எனக்கு டான்ஸ் ஆடத் தெரியும். ஆமாங்க... சினிமாவில் நாம் என்னவாகப் போகிறோம்னே தெரியாம, நாடக நடிகனா, சினிமா கம்பெனி ஆபீஸ் பையனா, பலருக்கு அசிஸ்டென்டா இருந்தப்ப... இதையும்தான் கத்துக்குவோம்னு வழுவூர் ராமையாப்பிள்ளைகிட்ட பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிச்ச 'குபேர குசலா’, 'மகாமாயா’, 'கண்ணகி’ ஆகிய படங்கள்ல பெண் வேஷத்துல நான் குரூப் டான்ஸ் ஆடி இருக்கேன். இதெல்லாம் பலருக்குத் தெரியாது.''  


கு.முத்து, திருவாரூர். 


 ''எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர் என நடிகர்களுக்கு ஏற்ப தன் குரலை மாற்றிப் பாடுவதில் வல்லவர் டி.எம்.எஸ். உங்கள் இசையமைப்பில் நீங்கள் அவரை அப்படிப் பாடச் சொல்லிக் கேட்பீர் களா? அல்லது அவரே  அப்படிப் பாடுவாரா?'' 


''என்னோட எட்டு வயசுல இருந்து டி.எம்.எஸ். எனக்குப் பழக்கம். கோயம்புத்தூர்ல ஜூபிடர் ஸ்டுடியோவுல நான் மாசம் 15 ரூபா சம்பளம் வாங்கினப்ப, அவர் ஒரு பாட்டுக்கு 250 ரூபா வாங்கினவர். பெரிய வித்தைக்காரர். நடிகர்களை மனசுல வெச்சுக் கிட்டுப் பாட மாட்டார். போட்டுக் கொடுக்கிற டியூனுக்கு ஏத்த மாதிரி பிரமாதமாப் பாடுவார். அப்படிப் பாடுறப்ப ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு மாதிரி பாடுறது மாதிரியே இருக்கும். அதுதான் அவரோட ஸ்பெஷல்!''


ரகோத்தமன், தாராபுரம்.
''கவிஞர் வாலியைப் பற்றிச் சொல்லுங்களேன்?'' 


''வாலிப வரிகளின் நிரந்தர ஊற்றாக இருக்கும் அவரைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு? மெட்டு போட்ட அடுத்த நொடியே அருவியாப் பாட்டைக் கொட்டுவார். வார்த்தைகள் அவர்கிட்டே சேவகம் செய்யும். அவர் ஒரு தீர்க்கதரிசி. 'நீ பெரிய ஆளா வராமப் போக மாட்டே விசு’னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவர் வாய் முகூர்த்தம் பலிச்சிடுச்சு. எனக்குத் தெரிஞ்சு நன்றி உணர்ச்சிக் குப் பெரிய உதாரணம் கவிஞர் வாலிதான்!''


வி.ராம்ஜி, பொன்மலை.
''உங்கள் பாணியிலேயே கேட்கிறேன்... மேட்டருக்கு மீட்டரா? மீட்டருக்கு மேட்டரா? இரண்டில் எது சிறந்தது?'' 



''சினிமா இசைங்கிறது ஒரு டீம் வொர்க். ஏற்கெனவே நான் சொல்லியிருக்கேன். எனக்கு ஈகோங்கிறதே கிடையாது. கம்போஸிங்ல உட்கார்ந்து பாட்டெழுதி (மேட்டர்) மெட்டு போடணுமா? இல்ல மெட்டு (மீட்டர்) போட்டுப் பாட்டு எழுதணுமானு டிஸ்கஸ் பண்ணுவோம். பெரும்பாலும் பாடல் வர்ற சிச்சுவேஷனைப் பொறுத்தது இது. பாட்டெழுதறதுக்கு கண்ணதாசன் வர்றப்பயே... 'ஏண்டா விசு... சந்தத்துக்கா? சொந்தத்துக்கா?’னு கேட்டுக்கிட்டேதான் வந்து உட்கார்வார். 'யோவ்! வந்ததுக்கு ஏதாச்சும் எழுதய்யா’னு நான் தமாஷா ஒரு அதட்டல் போடுவேன். அப்புறம் பாட்டு கட்டுவோம்!''



அடுத்த வாரம்...


THANX - VIKATAN

காதலில் ஜெயிக்க 10 டிப்ஸ்!

பெண் நினைத்தால் எந்தப் பையனையும் 'ஜஸ்ட் லைக் தட்’ காதலில் விழவைக்க முடியும்? ஆனால், பசங்க..? 'உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னு நீங்களே சொல்லிடுங்க... ப்ளீஸ்!’ என்று சம்பந்தப்பட்ட பெண்ணிடமே காலில் விழாத குறையாகக் கெஞ்சும் நிலையில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த வருடக் காதலர் தினம் முதல் 'க்ரீன் சிக்னல்’ கிடைப்பதற்கான சக்சஸ் டிப்ஸ் வழங்குகிறார்... தமிழகத்தின் 'லவ்வர் பாய்’ ஆர்யா!



 ''நம்ம பசங்க எல்லாம் பொதுவா ஒரு தப்பு பண்ணுவாங்க... ஒரு மூணு ஃபார்முலா மட்டுமே வெச்சுக்கிட்டு, அது மூலமாவே காதலை சக்சஸ் பண்ணிரலாம்னு நினைப்பாங்க. ஆனா, ஒரே ஃபார்முலா எல்லா நேரமும் வொர்க்-அவுட் ஆகாது. நான் சிம்பிளா பத்து விஷயம் சொல்றேன். அதைக் கெட்டியாப் பிடிச்சுக்கங்க. காதல்ல அரியர் வைக்காம பாஸ் ஆகிடலாம்!''  


நல்லவன்போல நடிப்பது: ''காலங்காலமா நம்ம பசங்க பண்றதுதான். ஆனா, இது ரொம்பத் தப்புங்க. நாம கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும், நம்ம கேரக்டரை நேர்மையா சொல்லிடணும். 'நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிக்கிறவன்’தான் மோசமான ஆளா இருப்பான்னு எல்லாப் பொண்ணுங்களுக்கும் தெரியும்!''  


அழகான பொண்ணாச்சேனு தயக்கம்: ''இது மட்டும் இருக்கவே கூடாது பாஸ். தேவதை மாதிரி ஒரு பொண்ணு இருக்கானு, அவ ரேஞ்சுக்கு சல்மான் கானையும் சிம்புவையுமா தேட முடியும். அந்தப் பொண்ணு படிக்கிற இடத்துல, பழகுற இடத்துல யார் இருக்காங்களோ, அவங்கள்ல ஒருத்தனைத் தான் அந்தப் பொண்ணுக்குப் பிடிக்கும். ஸோ, தயக்கம் தவிர்!''  


பார்த்தவுடனேயே காதல் சொல்வது: ''ஒரு பொண்ணைப் பார்த்ததும் நமக்கு பல்பு எரியலாம். ஆனா, காதலை உடனே சொல்லக் கூடாது. ஏன்னா, லவ்வுங்கிறதே ஒரு லாங் டைம் ப்ராசஸ். அதே சமயம் 'இதயம்’ முரளி ரேஞ்சுக்கு இழுத்துட்டே இருக்கவும் கூடாது. ஒருவேளை அந்தப் பொண்ணு அடுத்த ஃப்ளைட்ல அமெரிக்கா போறானா, அப்ப யோசிக்காம... உடனே லவ் சொல்லிடு!''  


காதலுக்கு ஓ.கே. சொல்லலைனா...: ''அக்செப்ட் பண்ணிட்டா ஓ.கே. இல்லைன்னா, 'நோ பிராப்ளம்’னு விட்டுடணும். கட்டாயப்படுத்தினா காதல் வர்றதைவிட, கண்டுக்காமவிட்டா பின்னாடி காதல் வர்றதுக்கான வாய்ப்புகள் அதிகம்.''


ஈகோவுக்கு வளைந்து கொடுப்பது: ''எந்தப் பொண்ணுகிட்டயும் சின்னதாவோ பெரிசாவோ ஒரு ஈகோ இருக்கும். அந்த ஈகோவை க்ளாஷ் பண்ணிட்டு கரெக்ட் பண்றதுலதான் த்ரில்லே இருக்கு. 'நம்ம ஈகோவையே காலி பண்ணவன் இவன்’னு பொண்ணு மனசுல ஒரு நினைப்பு வந்தால்தான், உங்க மேல காதல் அதிகரிக்கும்.''



வசதியான காதலன்: ''தன் லவ்வர் பைக், கார், ஐபோன் வெச்சிருக்கணும்னு தெளிவான பொண்ணுக யாரும் எதிர்பார்க்க மாட்டாங்க. அப்படி எதிர்பார்த்தா, அந்தப் பொண்ணு நம்ம லைஃபுக்கு வேண்டாம் நண்பா!''



பொசஸிவ்னெஸ்: ''காதல், கல்யாணத்துக்கு அப்புறமும் வாழ்க்கை முழுக்கக் கடைபிடிக்க வேண்டிய லைஃப்லாங் ரூல் இது. நம்ம லவ்வர் கிட்ட இன்னொரு பொண்ணைப் பத்தி பாசிட்டிவோ, நெகட்டிவோ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசக் கூடாது. வேணும்னா, நம்ம அம்மா பத்தி, அவங்க அம்மா பத்திப் பேசிக்கலாம்!''



வெளியே அழைத்துச் செல்வது: ''பெண்களுக்கு பிரைவஸிதான் பிடிக்கும். கூட்டமான இடங்கள் பிடிக்காதுன்னு தப்பா நினைச்சுட்டு இருக்கோம். ஆனா, கூட்டமான இடங்களுக்குப் போறப்போ, அவங்களை நாம எப்படிப் பாதுகாப்பா கூட்டிப் போயிட்டு வர்றோம், பத்திரமாப் பார்த்துக்குறோம்னு அவங்க கவனிப்பாங்க!''


கலகல பேச்சு: ''இதுதாங்க ரொம்ப முக்கியம். இதை மட்டுமே வெச்சுதாங்க என் பொழப்பு ஓடுது. காமெடினு நினைச்சுட்டு நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம். ஆனா, அதை அவங்க ரசிக்கிறது முக்கியம். சிலருக்கு மொக்கை போட்டாக்கூடப் பிடிக்கும். சிலருக்கு ஃபீலிங்ஸாப் பேசினா பிடிக்கும். எது பிடிக்கும்னு தெரிஞ்சுக் கிட்டுப் பேசுங்க!''



அடிக்கடி ஐ லவ் யூ: ''அது கட்டாயம். தினமும் குறைஞ்சது 100 தடவையாச்சும் 'லவ் யூ... லவ் யூ...’ சொல்லிட்டே இருக்கணும். அதுதான் உங்க காதலின் ஹெல்த்துக்கான விட்டமின்!  



கடவுள் எல்லா மனுஷங்களுக்கும் கொடுத்த காஸ்ட்லி பரிசுதான் காதல். அதை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட் பாஸ்!'' 




thanx - vikatan

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும் - சபிதா -சிறுகதை

20 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது மனம்.  
 
 
மார்பிள் தரையின் குளிர்ச்சியைப் பாதம் உணரத் துவங்கி, நரம்புகளின் வழியே தலைக்கு ஏறியது கிறுகிறுப்பாக இருந்தது. தாஜ்மகாலைத் தூரமாக நின்று தரிசிக்க வேண்டும். அப்போதுதான் அதன் அழகு முழுமையாகப் புலப்படும். அதன் அருகில் சென்றாலோ, அது விஸ்வரூபம் எடுக்கும். அதனுள் நுழைந்துவிட்டாலோ... நாம் அதில் மூழ்கிக் காணாமல் போய்விடுவோம். காதலில் கரைந்துவிடுவதைப் போலத்தான்.


தொலைவில் நின்று தாஜ்மகாலைக் கவனிக்கத் தொடங்கினேன். முன்பு இருந்த தூய்மையான அழகை தாஜ்மகால் மெள்ள இழந்துவருவது உண்மைதான். காரணம், அமில மழை என்கிறார்கள். அதன் மேல் ஸ்தூபியில் லேசான மஞ்சள் நிறம் படியத் தொடங்கியுள்ளது, பல தடவை சலவைக்கு உட்படுத்தப்பட்ட வெண்ணிற ஆடையைப் போல. காற்றிலும் நாசி வெறுக்கும் ஒருவிதமான துர்நாற்றம். மனித மனங்களைப் போலவே தாஜ்மகாலும் மெள்ள மெள்ள மாசு அடைந்துவருகிறது.

தாஜ்மகால் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று. என்னைப் பொறுத்தவரையில் தாஜ்மகால் வெறும் கட்டடம் மட்டும் இல்லை. வெறும் காதலின் சின்னமும் இல்லை. வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஏதோ ஒன்று இங்கு இருக்கிறது. இந்தக் காற்றில் சொல்ல முடியாத துக்கமும் காதலும் மிதக்கிறது. இந்தத் தூண்களில் காதல் படிந்து உள்ளது. இந்தப் பெரிய பிரமாண்டமான அமைப்பு என்னைத் துரும்பனாக மாற்றிக் கேலி செய்கிறது.


எப்பேர்பட்ட ஆன்மிக அனுபவம் அது. இமய மலையின் முன் நிகழும் அதே அற்புதம். காதலும்கூட ஆன்மிகத்தின் ஒரு வழிதான். காதல் மட்டும் அல்ல; எந்தத் தீவிரமான உணர்வும் ஆன்மிகத்துக்கான முதல் திறவுதான். ஷாஜகானைப் பற்றி எத்த னைக் கருத்துகள் உலவினா லும், நிரம்பி வழிந்த அவனுடைய காதல்தான் இப்படி ஓர் அற்புதத்தை உருவாக்கி இருக்க முடியும். காதல், வாளைப் பறித்துவிட்டு... பூக்களைத் தருகிறது. காதல், ஒரு வீரனைக் கோழையாக்குகிறது... கோழையை வீரனாக்குகிறது. எப்போதும் காதல் முரணுக்குப் பிறந்த குழந்தைதான்.


தாஜ்மகால் வெறும் ஷாஜகானின் காதலுடன் மட்டும் தொடர்புடையது அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. இங்கு வருகை தரும் எவருமே தங்க ளுடைய மனக் கண்ணில் ஒரு மின்னல் நொடிப்பொழுதே னும் தாங்கள் இழந்த காதலி யையோ, நழுவிப்போன காதலையோ நினைக்காமல் இருக்க முடியாது. பல இதயங்கள் தூவிய காதல் இந்தக் காற்றில் முளைத்து வேர் விட்டிருக்கிறது. கோயிலின் உள்ளே நுழைந்ததும் தன் முயற்சி எதுவும் இன்றி தூண்டப்படும் பக்தியைப் போலவே தாஜ்மகாலின் உள்ளே யும் காதல் மேலெழும்பும்.


வெளிப் பிராகாரத்தில் கால்போன போக்கில் சுற்றி அலைந்துகொண்டு இருந்தேன். ஏனோ, சாலைகளில் பிரக்ஞையற்றுச் சுற்றும் கந்தல் ஆடைக்காரனின் நினைவு வந்தது. அவனுடைய உலகம் முற்றிலும் வேறானது. அவன் இந்த உலகத்தோடு ஒரு நூலிழை அளவே கட்டப்பட்டு இருக்கிறான். அதில் நாம் அறியாத ஒரு மேன்மையான வாழ்வும் இருக்கலாம்தான்.


பரந்து விரிந்த வெண்ணிற மார்பிள் தரை எனக்குச் சற்றும் சொந்தம் இல்லாத, ஆனாலும் நான் சரிய ஏங்கும் மடியைப் போலத் தோன்றியது. வானம் பார்க்க நெடுஞ்சாண்கிடையாகப் படுக்க வேண்டும்போல இருந்தாலும், சுற்றி லும் அங்கொன்றும் இங்கொன்று மாக அலையும் மனித நடமாட்டத்தை மனதில்வைத்துக் குட்டைச் சுவருக்கு முதுகைக் கொடுத்துக் கால்களை நீட்டி அமர்ந்தேன். இப்படித்தான் மனதில் தோன்று வதை எல்லாம் நம்மால் செய்ய முடிவது இல்லை. சத்தமாகப் பாட, சுற்றி உள்ளவர்களைப் பற்றி சட்டை செய்யாமல் குதித்து ஆட... என எத்தனை மனத் தடைகள்?



மனித மனம் காட்டை மறந்து, வீட்டின் சூழலுக்குப் பழக்கப்பட்ட மிருகம்போல எப்போதும் ஒரு நிர்பந்தத்துக்குக் கட்டுப்பட்டது. மிருகம் மிருகமாக இருக்க இயலாமல் தடுப்பது மிருகத்தின் கோணத்தில் பெருந்துக்கம். களைப்பாக இருந்தது. இந்த உலகில் இருந்து முற்றிலும் என்னைத் துண்டித்துக்கொள்ள முயல்பவனைப் போல கண்களை இறுக மூடிக்கொண்டேன். உள் இழுத்து முழுவதுமாக வெளி யிட்ட மூச்சு, புதைந்துபோயிருந்த நினைவுகளை எல்லாம் தூர்வாரி வெளியே இழுத்துப்போட்டது.



முதல்முறையாக தாஜ்மஹால் பார்க்க வந்தது அமுதாவுடன். பலரும் எங்களுடன் இருந்தார்கள் என்றாலும், அன்று இங்கு இருந்தது நான், அமுதா மற்றும் தாஜ்மகால் மட்டுமே.


 அமுதாவுக்கும் எனக்குமான காதல் நீடித்தது ஒரே ஒருநாள் மட்டுமே. சொல்லப்போனால் சில நொடிப் பொழுதுகள் மட்டுமே. ஆனாலும் அந்தக் காதல் வாழ்நாள் முழுவதும் வலி தரக் கூடியதாக, வலிமையானதாக மாறும் என்று நான் நினைக்கவே இல்லை. அமுதாவை நினைத்ததும் அவளுடைய சுருள்சுருளான அடர்ந்த முடிதான் நினைவில் ஆடியது. அவள் என்னை உரசிக்கொண்டு அமரும்போது, ஒன்றாக உறங்கும்போது எல்லாம் என் மூக்கின் துவாரத்தில் அவை கிச்சுகிச்சு மூட்டும். தொடர்ந்த தும்மலின் எரிச்சலில், ''ஏய்... பஞ்சு மிட்டாய் தலை... தள்ளிப் போடி'' என்பேன். பதிலுக்கு அவள் நகங்களால் கிள்ளிய காயங்களின் தழும்புகள்கூட இப்போது என்னிடம் இல்லை.



ஏதேனும் புத்தகத்தில் அவள் மூழ்கியிருக்கும்போது அவள் கையில் உள்ள ஒற்றை முடியை மட்டும் அவள் அறியாமல் மெள்ள இழுப்பது எனக்குப் பிடித்தமான விளையாட்டு. வலியால் துடித்தபடி அலறும் அமுதா, என்னைத் துரத்திப் பிடித்துத் தலைமுடியைப் பற்றி இழுத்து ஓர் அடியேனும் போடாமல் ஓய மாட்டாள்.



உண்மையில் அமுதாவைத் திருமணம் செய்து கொள்ள எங்களுக்குள் எந்தத் தடையும் இல்லை. உறவின் முறையில் அவளை நான் மணந்துகொண்டு இருக்கலாம்தான். அமுதாவின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி மாற்றலாகும்படியான மத்திய அரசு வேலை. அவளுடைய கல்வியின் காரணமாக, பால்யம் தொட்டே அவள் எங்கள் வீட்டில் எங்களுடன் வளர வேண்டியதாயிற்று.


என் வீட்டில் நான், அப்பா, அம்மா, அமுதா மற்றும் அமுதா வயதில் ஒரு தங்கை. அமுதாவை ஆசை தீரக் காதலிப்பதற்கான எல்லாவிதமான சந்தர்ப்பங்களும், சூழ்நிலையும், சுதந்திரமும், உரிமையும் இருந்தது எனக்கு. கண்ணாமூச்சி ஆடும்போது, ஓடிப் பிடித்துப் புரண்டு விளையாடும்போது, குளியல் அறையில் இருந்து ஈரம் சொட்டச் சொட்ட அமுதா வெளியேறும்போது, பைக்கில் ஒன்றாக ஊர் சுற்றும்போது... ஏகாந்தமான எந்தச் சூழலிலும் அந்தப் பாழாய்ப் போன காதல் எங்களுக்குள் மணி அடிக்கவே இல்லை.




ஒருவேளை அந்த வெளிப்படையான சூழல்தான் எங்கள் காதலுக்குப் பெரும் தடையோ? காதலில் கள்ளத்தனமும் தடைகளும்தான் சுவாரஸ்யமோ? என்னவென்று இதுவரையில் விளங்கவே இல்லை. என்னைப் பொறுத்தவரையில் பெண் மனம் மட்டும் அல்ல; மனித மனங்களே ஆழமானவைதான். ரகசியங்களும், மர்மங்களும், அழகும், அபாயமும் நிறைந்த கடல் மாதிரி.



யாரோ தோள் தொடுவதைப் போல உணர்ந்ததும் மெள்ளக் கண் திறந்தேன். ஓர் இளைஞன் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தான். நெடுநேரமாக என்னை அழைத்துக்கொண்டு இருந்திருப்பான்போலும். நான் சுய நினைவு வந்தவனைப் போல மெள்ளத் தலையை உலுக்கிக்கொண்டு, ''யெஸ்...'' என்றேன்.



''யூ டேக் எ போட்டோகிராஃப் ப்ளீஸ்... இஃப் யூ டோன்ட் மைன்ட்...'' என்றான். அவன் பின்னால் மலர்ந்த புன்னகையுடன் ஓர் இளம் பெண் நின்றுகொண்டு இருந்தாள். அவர்கள் இருவருடைய முகங்களும் காதலால் ஜொலித்துக்கொண்டு இருந்தன. அவர்கள் இருவரும்தான் இந்த உலகிலேயே இன்பமயமானவர்களைப் போல இருந்தார்கள். நிச்சயம் உலகம் காதல் வயப்பட்டவர்களின் கைகளில்தான் உள்ளது.



அந்த இளைஞன் தன்னிடம் இருந்த கேமராவை என்னிடம் நீட்டினான். நான் கோணம் பார்க்கத் தயாரானேன். அவர்கள் பசை போட்டதைப் போல ஒட்டிக்கொண்டார் கள். கரங்களைக் கோத்துக்கொண்டார்கள். முத்தமிட்டுக்கொண்டார்கள். ஒரே சால்வைக்குள் குளிர்காய்ந்தார்கள். அவனுடைய ஒவ்வொரு செயலிலும் ஏதேனும் ஒரு வகையில் அவனது காதல் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. மிக இயல்பாகத் தோன்றிய பொறாமையைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை ரசிக்கத் தொடங்கினேன்.



அமுதாவுக்குத் திருமணமான புதிதில் அவள் கணவனுடன் சேர்ந்து எடுத்திருந்த தேனிலவுப் புகைப்படங்களை அனுப்பியிருந்தாள். அந்தப் புகைப்படங்களில் எல்லாம் நெருக்கம் காட்டுவதில் அமுதாவுக்குச் சிறு தயக்கம் இருந்ததைப் போலத் தோன்றியது. அவள் முகத்தில்கூட மென்சோகம் இழையோடியதைப் போல இருந்தது. அல்லது அவ்வாறு எண்ணிக்கொள்வது எனக்குச் சமாதானமாக இருந்தது.



நன்றி சொல்லி கேமராவுக்காகக் கை நீட்டினான் இளைஞன். கைகுலுக்கி விடைபெற்றான். அந்தப் பெண் தூரத்தில் இருந்து கையசைத்துச் சென்றாள்.


அமுதாவின் திருமணத்துக்குப் பிறகு நாங்கள் சில முறை சந்தித்தோம். கிரஹப் பிரவேசம், அறுபதாம் கல்யாணம், திருமண வீடு, துக்க வீடு இப்படிச் சில சந்தர்ப்பங்களில்தான் சந்திக்க முடிந்தது. அமுதா உணவு பரிமாற நேரிட்டால் எனக்குக் கூடுதலாக ஒரு ஸ்வீட் கிடைக்கும். ஒரு பண்டிகையின்போது என் மனைவியும் நானும் அமுதாவுக்கு மிக விருப்பமான நிறத்தில் புடைவை ஒன்றைப் பரிச ளித்தோம். இப்படித்தான் நாங்கள் அன்பை இதுநாள் வரை பரிமாறிக் கொண்டோம்.



வயிறு, 'என்னைக் கொஞ்சம் கவனி’ என்று பசியை அனுப்பியது. ஒரு சிறுவனிடம் பேல்பூரி வாங்கிச் சாப்பிடத் தொடங்கினேன்

.
அம்மா ஊரில் இல்லாத நாட்களில் அமுதாதான் சமைப்பாள். கிச்சனைப் போர்க்களமாக்கிவிடுவாள். அப்பா சத்தம் இல்லாமல் சாப்பிடுவார். நான்தான் அவளைச் சீண்டுவேன். ''ச்சீ... என்னடி சாப்பாடு இது... இதுக்குப் பேர் என்ன? இல்ல... இனிமேதான் வைக்கப்போறியா? உன் பரிசோதனைக்கு நான் என்ன எலியா?'' என்பேன். அமுதாவுக்கு முகம் எல்லாம் சிவந்துவிடும். புருவத்தை நெரித்துக் கண்களை உருட்டுவாள்.


''பாருடா... உனக்கு சமைக்கவே தெரியாத ஒருத்திதான் பொண்டாட்டியா வருவா. நீ அவளுக்கும் சேர்த்துச் சமைக்கிற கோலத்தை நான் பார்க்கத்தான் போறேன். அன்னைக்கு வெச்சுக்கறேன் உன்னை. என் சாபம்டா இது...'' என்பாள். அவள் பேச்சின் தாளத்துக்கு ஏற்ப அவள் சுருள் முடியும் ஆடும். பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்கு அமுதா அவள் பெற்றோருடன் டெல்லிக்குச் சென்றுவிட்டாள். அப்புறம் அமுதாவின் கல்யாணச் செய்தியுடன்தான் அத்தை எங்கள் வீட்டுக்கு வந்தாள். மொட்டை மாடியில் அத்தையும் நானும் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.


அத்தை திடுமென அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள். ''ஏண்டா ஹரி, உனக்கு அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு தோணவே இல்லையா?'' என்றாள்.



நான் அதிர்ந்துபோய் ''ச்சீ... என்ன அத்தை, நான் ஒருநாளும் அமுதாவை அப்படி நினைச்சதே கிடையாது...'' என்று பதறினேன்.


''இதையேதான் அவளும் சொன்னா!'' என்றாள் அத்தை சாதாரணமாக.


பின் மிகவும் ஆர்வமாக, ''அத்தை, இப்போ அமுதாவுக்குப் பார்த்திருக்கிற வரன் யாரு? பையன் என்ன பண்றான்?'' என்றேன்.


''காலேஜ்ல கூட படிச்ச பையனாம். அமுதாவை ரொம்பப் பிடிக்குமாம். அவகிட்டகூடச் சொல்லாம நேரா எங்ககிட்ட வந்தான். எங்களுக்கும் பிடிச்சுஇருந்தது. சரின்னு சொல்லிட்டோம்...'' என்ற அத்தையிடம், ''கழுதை... இவளும் லவ் பண்ணியிருப்பா. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிறாங்க... நீங்களும் நம்பிட்டீங்களாக்கும்'' என்று சிரித்தேன்.


அத்தையும் சிரித்தபடி, ''அது சரி, உனக்கு எப்போ கல்யாணம்... நீயும் யாரையாவது..?'' என்று அடிக் கண்ணால் பார்த்துக் குறும்பாகச் சிரித்தாள். அப்படியே அமுதாவின் வயதான பிம்பம்போல இருந்தது.


''ம்... லவ் பண்ற லிஸ்ட் பெருசு. அதுக்குக் குறைஞ்சது நான் அஞ்சு கல்யாணமாவது பண்ணணும்!'' என்றேன்.


''போடா வாலு...'' என்றபடி அத்தை அடிக்க வந்தாள்.


தாஜ்மகாலைச் சுற்றி உள்ள புல் தரையில் ஆங்காங்கே நாரைகள், சிறகு முளைத்த குட்டிக் குட்டி தாஜ்மகாலைப் போல அலைந்துகொண்டு இருந்தன. அப்பாவுக்கு ஏனோ அமுதா மேல் தனிப் பிரியம். எல்லாவற்றுக்கும் ''அமுதாவைப் பார்... அமுதாவைப் பார்'' என்று ஒப்பிட்டுப் பேசுவார்.


''நீ ஏண்டி இங்க இருக்கே. உன் வீட்டுல போய் இருக்க வேண்டியதுதான. நான் நிம்மதியா இருந்திருப்பேன். உன்னாலதான் இந்தாளு என்னைத் திட்டுறாரு'' என்று சண்டையிட்ட அன்றைக்கு, அமுதா பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி ரகளையே செய்துவிட்டாள். அப்பாவும் அம்மாவும் அவளைச் சமாதானம் செய்யப் பெரும்பாடுபட்டார்கள். பிற்பாடு நான் அவளிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் தனிக் கதை.



அமுதாவின் திருமணத்துக்காக ஒரு வாரம் முன்பே நாங்கள் டெல்லிக்குச் சென்றுவிட்டோம். அந்த ஒரு வாரம் முழுவதும்தான் நான் அமுதாவை மிக அருகில் நன்றாக உணர்ந்தேன். அமுதா முற்றிலும் வேறு யாரோவைப் போலவே இருந்தாள். அவள் தோற்றத்தில், உடல் மொழியில் மெருகேறி இருந்தது. அமுதா எங்கள் வீட்டுப் பெண் என்ற பெருமிதமும் உரிமையும் தோன்றியது. திருமணத் துக்கு முதல் நாள் அமுதாவுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது.



''தாஜ்மகால் போலாமா?''


நான் பதில் சொல்லும் முன், ''ப்ளீஸ்... போலாம்டா. என் கடைசி ஆசை'' என்றாள்.


அத்தை, ''சரி... ஹரி கூடப் போ'' என்று சொன்னாள்.


''ம்ஹும்... நம்ம குடும்பத்துல எல்லாரும் வரணும்'' என்று சிறு குழந்தையைப் போல அடம்பிடித்தாள்.


அமுதா, பூப்போட்ட பச்சை நிற சல்வார் கமீஸில் தயாராகி வந்தாள். ''ஹரி... இந்த சல்வார் கமீஸ் எப்படி இருக்கு?'' என்று கேட்டவள், நான் பதில் சொல்வதற்கு முன், ''அவர் வாங்கித் தந்தது...'' என்றாள்.


அத்தை கேட்ட கேள்வி வட்டமடித்தது. 'ஏன் ஹரி, அமுதாவைக் கல்யாணம் பண்ணிக்க ணும்னு உனக்குத் தோணவே இல்லையா?’


ஐயோ... இவள் என் அமுதாவாச்சே. இவளை எப்படி நான் யாருக்கோ தாரை வார்ப்பேன். அவளுக்கு இருட்டு என்றால் பயமாச்சே. வண்ணதாசனின் எழுத்துகள் என்றால் உயிரை விடுவாளே. குளிர்காலத்தில் மூச்சுவிடச் சிரமப்படுவாளே. புதியவனுக்கு இதெல்லாம் தெரியுமா? அவளை முழுவதுமாகப் பறிகொடுக்கப்போகிறோமோ என்ற பரிதவிப்பு என்னை அலைக்கழித்தது.


ஏன் இத்தனை நாட்களாக இப்படி முட்டா ளாக இருந்தேன். அமுதாவின் தோழிகளை வசீகரிக்கத் தோன்றிய அளவு ஏன் அமுதாவை வசீகரிக்கத் தோன்றவில்லை. அல்லது அவ்வாறு நடந்துகொண்டு அமுதாவை ஆழம் பார்த் தேனோ? இல்லை... இவள் என் அமுதாதானே எங்கே போய்விடப்போகிறாள் என்ற அலட்சியமும் உதாசீனமுமா? பைத்தியம் பிடித்துவிடும்போல இருந்தது.



காரில் அமுதா என் அருகில்தான் அமர்ந்து இருந்தாள். வழக்கத்துக்கு மாறாக இருவரும் வெகு அமைதியாக இருந்தோம். நடுவே ஒரு வார்த்தைகூடப் பேசிக்கொள்ளவே இல்லை. சண்டையிட்டுக்கொள்ளவும் இல்லை. அந்தப் பேரமைதி என்னைக் குலைத்தது. என் பால்யம் தொட்டு என்னுடன் வளர்ந்தவள், இன்று என் அருகில் இருந்தும் அந்நியமாகிப்போனாள். விநோதமான ஏதோ ஓர் உணர்வு தொண்டையை அடைத்தது. நடக்கக் கூடாத ஒன்று நடக்கப்போகிறது என்று உள்ளே மணி அடித்தது.



நீண்ட வரிசையில் காத்திருந்த பின்னர் ஒரு சிறிய மரக் கதவு திறந்தது. அது தாஜ்மகாலின் நுழைவாயில். ஒரு நிமிடம் இந்த வெண்மையான, பிரமாண்ட கட்டடத்தின் முன் நான் கரைந்துபோனேன். என் மூச்சு நின்றது. அறிவு ஸ்தம்பித்தது. தாஜ்மகால் பேரழகியாக மாறி என்னை மயக்கி, கோடானுகோடி உணர்வுகளைத் தூண்டினாள். என் பார்வை தாஜ்மகா லின் மேல் நிலைகுத்தி நிற்க, அமுதாவின் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டேன். அவள் விரல்களோடு எனது விரல்களைக் கோத்துக் கொண்டேன். தொட்டுக்கொள்ளல் எங்களுக் குள் புதிதல்ல என்றாலும், இந்தத் தொடுதல் புதிது. அவள் விரல்களை விடுவித்துக்கொள்வாளோ என்ற பயத் தில் அவளுடைய கரங்களில் என் பிடியை மேலும் இறுக்கினேன். அமுதா என் முகத்தை உற்று நோக்கி னாள். நான் தாஜ்மகாலில் இருந்து கண்களை விலக்கவில்லை.



''ஹரி...'' என்றாள் அமுதா மிக பலவீனமாக. கடைசி மூச்சை வெளியிடும் ஆன்மாவின் குரலாக அது இருந்தது.


''ஷ்...'' என்றபடி அவள் விரல்களை மேலும் இறுகப் பற்றியபடி நடந்துகொண்டு இருந்தேன். நடைப் பூங்காவின் நடுவே இருந்த குளத்தில் தாஜ்மகாலின் பிம்பத்துடன் எங்களுடைய பிம்பமும் பிரதிபலித்தது.


''ஹரி... கல்யாணப் பொண்ணைப் பத்திரமா கூட்டி வா'' என்றவாறே எங்களிடம் இருந்து வெகு தூரமாகச் சென்றுகொண்டு இருந்தார்கள் குடும்பத்தினர்.


அமுதா, ''ஹரி...'' என்றாள் மறுபடியும், மிக சன்னமாக. அவளது குரல் யாரோ ஒருவரின் குரல்போல் ஒலித்தது. இப்போது அவளின் கரங்கள் எனது கரங்களை இறுகப் பற்றியிருந்தது.


தாஜ்மகாலின் வெளிப் பிராகாரத்தில் முதல் அடி எடுத்து உள் நுழைந்ததும் வீசிய காற்றில் அமுதாவின் தலை முடியில் ஒரு கற்றை முன் நெற்றியில் விழுந்தது. எப்போதும் மையிட்டதைப் போல இருக்கும் அமுதாவின் கண்கள் பிரகாசமாக விரிந்திருந்தன. அவை காதலாலும் கண்ணீராலும் பளபளத்தது. விரிந்த அவளுடைய இதழ்களின் நடுவே அவளது பற்கள் தெரிந்தன. நாசி சிவந்து துடித்துக்கொண்டு இருந்தது. அவளது காதோரத்தின் சுருள் முடிக் கற்றை ஒன்று கரிய நாகத்தைப் போலக் கன்னத்தில் வழிந்தோடியது. அதை ஒதுக்கிவிட வேண்டும் என என் கைகள் பரபரத்தன.


''அமுதா... நீ இத்தனை அழகாடி?'' என்றேன் உடைந்து தோற்றுப்போனவனாக... போரில் புறமுதுகுக் காட்டிய கோழையாக.


ரசாயனம் ஊற்றெடுத்தது. காமம் தலைக்கேறியது. முத்தமிடவோ, கட்டியணைக்கவோ இயலாமல் இரு தனித் தனி எரிமலைகளாக நாங்கள் கனன்றுகொண்டு இருந்தோம். தடயமேதும் இன்றி ஒரு களவு நிகழ்ந்தேறியது.



''ஹரி... என்னடா செய்ய நான்?'' என்றாள் அமுதா கண்ணீர் வழிய. அழுத்தப்பட்டு இருந்த மொத்த அன்பின் உச்சபட்ச வெளிப்பாடாக நாங்கள் மௌனித்து இருந்தோம். ஏதோ மந்திர விரலுக்குக் கட்டுப்பட்ட பொம்மைகளா னோம். நான் சுதாரித்து பற்றிய விரல்களை உதறி, திகைத்து விலகினேன். அமுதா என்னை ஊடுருவி வெறித்தாள் வெகுநேரம் வரை.



'குற்றம் செய்தவன் இதனைத் தஞ்சம் அடைந்தால், மன்னிக்கப்பட்டவனைப் போல அவன் தனது பாவங்களில் இருந்து விடுதலை பெறுவான். ஒரு பாவி இந்த மாளிகைக்கு வருவானேயானால், அவன் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். இதனைக் காணும்போது துயரத்துடன் கூடிய பெருமூச்சு உண்டா கும். சூரியனும் சந்திரனும் கண்ணீர் வடிப்பர். படைத்தவனைப் பெருமைப்படுத்தவே இந்தக் கட்டடம் எழுப்பப்பட்டு உள்ளது!’ -  இவை ஷாஜஹானின் வாசகம் எனப் பின்னாளில் அறிந்தேன். 



ஒருவகையில் சரியான தருணத்தில் காதலை உணராத குற்றவாளி நான். அமுதாவுடன் நான் வாழ முடியாத வாழ்வு, என்னை மிகத் தூய்மையானவனாகவே இன்று வரை வைத்திருக்கிறது. அந்த நொடிப்பொழுது காதல் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. காதலிக்கக் காதலி தேவை இல்லையே. வெறும் காதல் மட்டுமே போதும். அவளுக்கும் அப்படித்தான் இருக்க முடியும்.


மீண்டும் ஒரு முறை பார்வையால் தாஜ்மகாலைப் பருகிவிட்டு வெளியேறத் தொடங்கினேன்.


அடுத்த முறை அமுதாவைப் பார்க்கும்போது கேட்க வேண்டும், அவள் மீண்டும் எப்போதாவது தாஜ்மகால் பார்க்க வந்தாளா என்று?


 thanx - vikatan

டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?

1. கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும்





--------------------

2. கமல் - எப்படியோ பில்டப் குடுத்து முதல் பாகத்தை ஓட்டியாச்சு.அடுத்த பாகத்தை பரபரப்பாக்குவது எப்டி?




----------------------


3. கமல் - எனக்கு நஷ்டம் என்றதும் மணிஆர்டர் அனுப்புனவங்களுக்கு திருப்பி அனுப்பிட்டேன்.ஏன்னா நாளை வசூல் 200 கோடி வந்தா எனக்குஅபாயம்.பதில் மொய்





----------------------



4. எனக்கு பயம்னா என்னனு தெரியாது! #குஷ்பு # நீங்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடலைன்னா எதுவுமே தெரியாது




----------------------


5. சார்.படம் குவாலிட்டியா இருக்கு.ஓடுமா?





 கமல்.-ஓடாதுனு சொல்லலை.ஓடுனா நல்லாருக்கும் னு சொல்ல வர்றேன் 





----------------------------



6. துபாய் பொண்ணை லவ் மேரேஜ் பண்ணா சீர் வரிசைல கட்டில் இருக்காது 



ஏன்?


து பாய்லயே பாய் இருக்கே,? அதே போதும்னு சொல்லிட்டா?




-------------------------


7. கடமை இருப்பவர் காதலிப்பதில்லை.!காதலிப்பதையே கடமையாக கொண்டவரிடம் இது பலிப்பதில்லை





-----------------------------



8. டியர்.எங்கப்பா வாங்கித்தந்த வெள்ளிக்கொலுசு.எப்டி இருக்கு? 




அட.நான் கவனிக்கலையே.சேட்டு கடைக்குப்போகாம இன்னும் எப்படி உன் காலில் இருக்கு? 




-------------------------------



9. பொண்ணுங்களை கிண்டல் பண்ணிட்டே இருக்கியே, நாங்க 3 பேரும் சேர்ந்து ஒரு நாள்  உங்கள கழுவி ஊத்தப்போறோம். 




ஐ ஜாலி. 3 பேர் ஒரு குளியல் ) 




----------------------


10. காதலி வீட்டில் தங்க ஒரு குறுக்கு வழி.உன் கனவை நான் அருகில் இருந்து காண ஆசை என ரீல் விடவும்.நம்பி ஏமாந்துடுவா.கி கி



------------------------



11. இன்ஸ்பெக்டர்.என் சம்சாரத்தைக்காணோம்.





 அக்கம் பக்கம் ஜவுளிக்கடைல தேடிப்பார்த்தீங்ளா? கூகுள் ல கூட தேடிட்டேன்




-----------------------------


 12. தரைல பாதரசத்தைக்கொட்டினா அள்ளிடலாம்.சம்சாரம் வெச்ச ரசத்தைக்கொட்டுனா அள்ளமுடியாது # இதுதான் வாழ்க்கை




-------------------------------






13. நீ சொல்வது புரியாதது போல் நடித்து மீண்டும் மீண்டும் உன்னை டார்ச்சர் செய்யவே விருப்பம# டார்ச்சர் டூ டீச்சர்்






--------------------------



14. பசிபிக்  பெருங்கடலை படியால் அளப்பது போன்றது உன்மீதுள்ள என் அன்பு . கால்கிலோ வேர்க்கடலையை ஒரு படியால் அளப்பது போன்றது என்மீதான உன் அன்பு




------------------------------



15. யு ஆர் அப்பாயின்ட்டட் = பணிக்கு தேர்வாகி விட்டாய் .டிஸ் அப்பாயின்ட்டட் = தேர்வாகவில்லை # இங்க்லீஷ் விங்க்லீஷ்





----------------------------



16. காதலி வீட்டுக்குப்போ.ஒரு வாய் சாப்டுட்டுப்போ என ஒரு பேச்சுக்கு சொன்னா இதுதான் சாக்குன்னு லிப் கிஸ் அடிச்சுடு # நல்ல வாய் ப்பு



-------------------------


17. "புத்தன்" ஆக வேண்டும் என்பது ரொம்ப கஷ்டம் இல்லை.பொண்டாட்டி கிட்டே சொல்லாம கொள்ளாம கிளம்பற எல்லாரும் புத்தன் தான்





--------------------------



18. மை வைக்க மறந்தாலும் மொய் வைக்க மறக்காதே - கல்யாண மண்டபத்தில்





-------------------------



19. உன்னோடு பேசாமல் இருக்கிறேன் என்பதை விட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியலை் எனபதுதான் உண்மை





--------------------------


20. மணிரத்னம் சொன்னால் எந்த மாதிரியான வேடத்திலும் நடிப்பேன்_ அர்ஜூன்!:# அதான் ஒரு மாதிரியான பாதிரியாரா நடிச்சீங்ளா?




---------------------------



21. டேய்.கையை வெச்சுக்கிட்டு சும்மா இருடா.




 எத்தனை டைம் சொல்றது? நான் வேலைக்கு எங்கயிம் போறதில்லை.சும்மாதான் இருக்கேன் 




---------------------------



22  டியர்.நீ தேவதை.நான் சாத்தான்.அவ்ளவ் தான் கடல்



----------------------



23.  டேய் லூசு எனக்கு கவிதையே தெரியாதுடா.எப்டி லவ் பண்ண?





 டியர்.அது ரொம்ப சுத்து வழி.நாம ஷார்ட் கட் ரூட்ல போலாம் வா




----------------------



24. அடம்புடிச்சு லவ்வி கட்டின பொண்ணை  பிடிக்கிலைன்னு ஆண்களால மட்டுமே சொல்ல முடியுது.





------------------------


25. நடிகை குஷ்பு, தி.மு.க.வுக்கு நேற்று வந்த அரைவேக்காடு” -நடிகர் சந்திரசேகர்# ஆபாயில் போட்டு சாப்பிடும் முன் சொல்லி இருக்கனும்




---------------------------------

Wednesday, February 13, 2013

ஒரே ஒரு நபர் ஒரு சினிமா எடுக்க முடியுமா? -வெங்காயம் சங்ககிரி ராஜ்குமார் பேட்டி

ஒரே ஒரு நபர் ஒரு சினிமா எடுக்க முடியுமா? ''முடியும்!'' என்கிறார் சங்ககிரி ராச்குமார்.

அப்பாவிகளை மூடநம்பிக்கைகளால் முடக்கிவைத்திருக்கும் கிராமத்துச் சாமியார்களின் நிஜ முகத்தைத் தோலுரித்துக் காட்டிய 'வெங்காயம்’ படம் இயக்கிய ராச்குமாரின் அடுத்த முயற்சி 'ஒன்’!


திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, நடிப்பு ஆகியவற்றை ஒருவரே செய்யும் 'டி.ஆர். ஸ்டைலையும் முறியடிக்கும் வகையில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முதல் எடிட்டிங் வரை, கார் டிரைவர் முதல் கலர் கரெக்ஷன் வரை... 'ஒன்’ படம் தொடர்பான அனைத்து வேலைகளையும் இவர் ஒருவரே செய்திருக்கிறார்.


'ஒரு குறும்பட இயக்கம் என்றாலே, 20 பேர் வரை கும்பலாக நிற்பார்கள். அப்படியிருக்க, ஒருவரே எப்படி மொத்தப் படத்தையும் எடுக்க முடியும்?’ ராச்குமாரே இந்த சந்தேகத்தை எதிர்பார்த்திருப்பார்போல. படத்தின் சில காட்சிகளை நமக்குத் திரையிட்டுக் காட்டினார். ஆச்சர்யம்... தனி நபராக ஒரு சினிமா எடுத்திருக்கிறார்.
''கொஞ்சம் விரிவா சொல்லுங்க... ஏன் இந்த 'ஒன்’ முயற்சி?''


''சினிமா ஆசையோட எட்டு வருஷத்துக்கு முன்னாடி சென்னை வந்தப்ப, என் கையில இருந்த திரைக்கதை இது. இதுக்காக சினிமா வுக்குத் தேவையான ஒவ்வொரு கலையா கத்துக்கிட்டேன்.


அஞ்சு வருஷத்துல 'ஒன்’ எடுக்கும் தகுதி எனக்கு வந்துடும்னு நம்பினேன். ஆனா, 'வெங்காயம்’ படம் இயக்கி, அதன் லாப நஷ்டங்கள் தெரிஞ்ச பிறகுதான், இந்தத் தைரியம் வந்தது.

'ஒன்’ படத்தின் கதைக் கருவில் தொடங்கி, மேக்கிங் வீடியோ வரைக்கும் எல்லாமே என் உழைப்பில் உருவானது. கேனான்-5டி ஆட்டோஃபோகஸ் கேமரா வாங்கினேன். நானே ஒரு கிரேன் தயாரிச்சேன். அதைக் கழட்டினா டிராலியாவும், விளக்குகள் பொருத்தவும் பயன்படும். பெங்களூருல சின்னச் சின்ன ஹெலிகாப்டர்களை வெச்சு ரேஸ் நடத்துவாங்க. அவங்ககிட்ட இருந்து சின்ன ஹெலிகாப்டரை வாங்கி, அதில் கேமராவெச்சு ரிமோட் மூலமா இயக்கி ஏரியல் வியூ காட்சிகளை எடுத்தேன்.



 வீட்லயே ஒரு எடிட் ஷூட் போட்டு, அங்கேயே 'ஆவிட்’ல எடிட் பண்ணினேன். இந்தப் படத்துக்காகவே ஒரு கார் வாங்கினேன். எப்போ பணம் கிடைக்குதோ, எப்போ பருவநிலை செட் ஆகுதோ, அப்போ ஷூட்டிங் கிளம்பிடுவேன். கேமராவை செட் பண்ணிட்டு நான் நடிக்க ஆரம்பிச்சுடுவேன். டிராலியையும் கிரேனையும் மோட்டார் மூலமா இயக்குவேன். எனக்கு நானே 'ஸ்டார்ட், கேமரா, ஆக்ஷன்’ சொல்லிக்குவேன். இப்படித்தான் 80 சதவிகித படத்தை எடுத்து முடிச்சிருக்கேன். படத்துல டான்ஸ், பாட்டு எல்லாம்கூட உண்டு!''



''இவ்வளவு மெனக்கெட்டு ஏன் ஒருத்தரே எல்லா வேலையையும் செய்யணும்?''


''ஏன்னா, இந்தக் கதைக்கு 'நேட்டிவிட்டி’ கிடையாது. உலகத்தில் யார் பார்த்தாலும் புரியும். மொழியே தேவை இல்லை. அதனால, இதை ஒரு ஆங்கிலப் படமாகவே எடுத்திருக்கேன். ஆனா, இந்தப் படத்தை உலகம் முழுக்கக் கொண்டுசேர்க்கும் பொருளாதாரப் பலம் என்கிட்ட இல்லை. 



அப்போ, ஏதாவது வித்தியாசமான முயற்சி செஞ்சாதான் உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். 'காஸ்ட் அவே’, '127 ஹவர்ஸ்’, 'தி பரேட்’ படங்கள் சின்ன பட்ஜெட்டில் மிகக் குறைந்த நபர்களால் எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், உலக அளவில் பேசப்படுது. காரணம், அந்தப் படங்களோட மேக்கிங் வித்தியாசமா இருக்கும். அப்படி ஒரு விஷயம் மூலமா வித்தியா
சப்படுத்திட்டா, என் படத்தையும் உலகம் கவனிக்கும்னு நம்பி இதைச் செஞ்சிருக்கேன்.''


''வித்தியாச முயற்சிக்கான லாஜிக் எல்லாம் ஓ.கே. ஆனா, படம் சுவாரஸ்யமா இருக்குமா?''



''ஏதோ சாதனைக்காக மட்டுமே எடுக்கிற படம் இல்லை இது. ஒரு விறுவிறுப்பான, பரபரப்பான படமா இருக்கும். கதை சொல்றேன். நீங்களே எப்படி இருக்கும்னு தீர்மானிச்சுக்குங்க.  



கனவில்கூட ராஜாவாகவே இருக்க விரும்பும் ஒருத்தன், உண்மையிலேயே உலகத்துக்கு ராஜாவானா எப்படி இருக்கும்? திடீர்னு உலகம் அழிய ஆரம்பிக்குது. கடைசி மனுஷனா அவன் மட்டும் உலகத்துல மிஞ்சி இருக்கான். இப்போ இந்த உலகத்துக்கே அவன்தான் ராஜா. அப்போ அவன் என்ன செய்வான்?



 அதுதான் படம். அதுக்காகப் படம் முழுக்க என் முகம் மட்டுமே வராது. கதைப் படி வேற வேற கேரக்டர்கள் வரும். எல்லாத்தையும் நானே நடிச்சு கிராஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். மலேசியா, தாய்லாந்து காடுகளில் படத்தை எடுத்திருக்கேன். 20 சதவிகிதப் படத்தை எடுக்க அமெரிக்கா போறேன். அப்படியே அமெரிக்காவில் ஆடியோ ரிலீஸ். படத்தை ஆங்கிலத்தில் எடுத்திருந்தாலும் தமிழ்நாட்டிலும் ரிலீஸ் ஆகும்!''


செம தில்லு

நன்றி - விகடன் 

பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது எது?

திருக்கடையூர் கோவில் முகப்பு
திருக்கடையூர் கோவில் முகப்பு
1. கூந்தல் கொட்டிடுச்சே, இப்போ எப்படி இருக்கே? 



“சவுரி”யமா இருக்கேன்




------------------------



2. ஜெமோ - எனக்கு உங்க அடுத்த படத்துல சான்ஸ் உண்டா?



 மணிரத்னம் - முதல்ல எனக்கு சான்ஸ் கிடைக்குமான்னே தெரியல 



------------------------------



3.  நடிகை - என்னுடன் ஜோடியா நடிச்சா உடனே கல்யாணம் ஆகும்



உங்க கூடயே ஆகுமா?அய்யய்யோ



--------------------------



4. கமல் டூ ஜெ - விஸ்வரூபம் பார்ட் 2 எடுக்கறேன், இதுக்கும் அதே மாதிரி தடை விதிச்சா வசூல்ல ஒரு அள்ளு அள்ளிடுவேன்





---------------------------



5. எங்க சொந்தத்தை நீங்க கண்டுக்கறதே இல்லைனு மனைவி நொடிக்கும்போது ஒவ்வொரு புருஷனும் நக்கலா மனசுக்குள்ள சிரிச்சுக்குவான் # மச்சினி






------------------------

 ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்


ஸ்ரீசந்தரசக்ரா @ திருக்கடையூர்




6. மாமியாரை மதர் இன் லானு சொல்றோம்,மச்சினியை ஒயிஃப் இன் லானு சொல்லலாமா?




-----------------------------



7. நான் இப்போ ஸ்ரீதேவி டான்ஸ் டிபார்ட்மென்ட்ல இருக்கேன் 




புரியலையே?


மயிலாடுதுறை ல இருக்கேன் ( மயிலு + ஆடு + துறை )



--------------------------



8. (பல) பெண்களுக்கு ஏனோ திருமணமாகும் வரை சரியான ருசியான சமையல் சமைக்க வருவதில்லை.





-------------------------------



9. ஹிஸ்டரி டீச்சர் - சனி நீராடு 




மிஸ்.நான் ஆட ரெடி.யார் கூட ஆடனும்? 




----------------------------



10. ஹெர்பல் துளசி கூந்தல் வளர்ச்சிக்குப்பேர் போனது.கடல் துளசி தந்தம் போல் பல் வளர்ச்சி.





------------------------

 41 மூலிகைகள் வைத்துப்படையல்

41 மூலிகைகள் வைத்துப்படையல்




11. அடிமேல் அடி வைத்தால் என்ன ஆகும் ?



அம்மியும் நகருமா?


ம்ஹூம்,  2 அடி ஆகும் 




--------------------

12. விஸ்வரூபம் படம் பிடிச்சவங்க கையை தூக்குங்க.பிடிக்காதவங்க தகுதியை உயர்த்திக்குங்க - கிரேசிமோகன் # தியேட்டரை விட்டு படத்தை தூக்கிட்டா ?






------------------------


13. ( அரைகுறையா) சமைக்கத்தெரிந்த அழகே உனக்கு பரிமாறத்தெரியாதா?





--------------------------


14. பெண்களே ஆண்கள் காதலை ஏற்றுக்கொண்ட பின் அடிமை என ் எகத்தாளமாய் எண்ணாதீர்கள்





------------------------



15. மிஸ் உன்னை கட்டாமலே வெச்சிக்கலாமா?




 மாங்குடி மைனர் வெச்சிருந்தாக. லால்குடி மேஜர் வெச்சிருந்தாக.10 த்தோட 11,அத்தோட நீயும் 1




-------------------------------


 60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க
60 வயசு ஆனவங்க திருக்கடையூர் வந்து இப்படி பூஜை பண்றாங்க




16. இந்த ஜென்மத்துக்கு இது போதும்” - விஸ்வரூபம் நாயகி! # பார்ட் டூ ல வேணாம்னுட்டாரா கமல்?





----------------------



17. பிள்ஸ் டூ ஸ்டூடண்ட், காலேஜ் ஸ்டூடண்ட் என்ன வித்தியாசம்?




சேலை கட்டிய ஆண்ட்டியின் ஸ்கூட்டியை மிந்தி செல்பவன் சைட் டில் எல் கே ஜி. பின்னாலயே போனா பிளஸ் டூ.பேரலலா போனா கிராஜுவேட்





-------------------------------




18.  பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது ட்ரான்ஸ்பரன்ட் லைட் கலர் சேலை கட்டி இருக்கும்போது மழைல நனைஞ்சா 1ம் தெரியாது என நினைப்பது




----------------------------



19. : என்னை பார்த்தாலே கலைஞர் நடுங்குகிறார் - ராமதாஸ் # அழகிரிக்கு நான் அப்பா .மைன்ட் இட் - மு க # சும்மா




------------------------



20. ஆணுக்கு ஏதோ ஒரு சக்க பிகரை மடக்க வேண்டும்,பெண்ணுக்கு ஆணை மொட்டை அடிச்சு அலைய விட வேண்டும் !#2013 லவ்





--------------------------


 மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு

மார்கழியில் மாட்டு சாணத்தில் நாம் பிள்ளையார் பிடிச்சு வாசல்ல வைப்போமே அதுபோல் இவங்க விளக்கு


21. பாராட்டுகளைக் குவிக்கும் பாலாவின் பரதேசி! # விருது நிச்சயம். கலெக்சன் லட்சியம்




-----------------------


22. சுந்தர் சி - குஷ்பூ மேட்டரை வெச்சு மதகஜராஜாவுக்கு தடை வருமானு பரபரப்பை கிளப்பி படத்தை பிரமோட் பண்ணிடனும்




-----------------------


23. அழகிரி டூ குஷ்பூ - ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்.கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்





------------------------



24. தலைமுடி வகிடு வைத்தே பிகரு ஆண்ட்ரியாவா? ஆண்ட்டியா? என முடிவு செய்து விடுபவன் தமிழன்



----------------



25.  கண்ணாடி கதவுல எழுதிருக்ற PULL, PUSHல குழம்பிடாம இருக்க புல் = ஜடை = இழுக்கனும். புஷ் = பிகர் = தள்ளிட்டு போகனும் # சிபி கோர்ஸ்




-------------------------------