Thursday, November 22, 2012

கொச்சின் - ஊர் சுற்றும் வாலிபனின் பார்வையில்

நான் கண்ட ஊரு!


நாங்கள் சமீபகாலமாக கேரள மாநிலத்தில் உள்ள கொச்சினில் வசித்து வருகிறோம். அரபிக் கடலோரம் அமைந்த மிகப் பழைமையான துறைமுக நகரம் இது. எர்ணாகுளம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கொச்சியைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கொச்சு-அழிஎன்னும் மலையாள வார்த்தையிலிருந்து மருவிகொச்சிஎன்றானதாகச் சொல்லப்படுகிறது. கொச்சு-அழி என்பதற்குசின்ன ஏரிஎன்று அர்த்தம். ‘கொச்சிஎன்றொரு நதி பாய்ந்து, கடலுடன் கலப்பதாலும் இந்தப் பெயர் வழங்கப் பட்டிருக்கலாம்.
நிக்கோலாடா கோன்ட்டி என்ற இத்தாலிய யாத்ரிகர், சேர மன்னர்களின் ஆளுகையில் இருந்த கொச்சியைப் பற்றிய நிறையத் தகவல்களை ஆவணப் படுத்தியிருக்கிறார். குறிப்பாகபெரும் பாடப்புஎன்ற குறுநில மன்னர்கள் கொச்சியை பல காலம் ஆண்டதாக எழுதியுள்ளார்.
இந்தியக் கடற்படையின் தென்புல ஆளுமைமையமாகவும், இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையின் மாநிலத் தலைமையகமாகவும் கொச்சி விளங்குகிறது.
சிறந்த துறைமுகம் என்பதால் கப்பல் வணிகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. மிளகு, ரப்பர், மீன், தேயிலை என நிறைய ஏற்றுமதியாகிறது. படகு சர்வீஸ் உள்ள ஊர்.
கொச்சினுக்குக் கிழக்குப் பகுதி முழுக்க எர்ணா குளம் என்று அறியப்படுகிறது. எர்ணாகுளம் நவ நாகரிகமான நகரம். இந்துக்கள், சிரியன் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மூவருமே தலா 33% வசிக்கும் ஊர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளதால் ஜூன் முதல் செப்டெம்பர் வரை மழைக்காலம். பொதுவாகவே ஆண்டுதோறும் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது.

மழை எந்த நேரத்தில் பெய்யும் என்றே தெரியாது. அதனால் கையில் குடை இல்லாமல் யாரையும் பார்க்க இயலாது. சின்ன பெட்டிக் கடை முகப்புகளில் கூட மடக்குக் குடைகளை விற்பனைக்குக் காணலாம்.
அழகான தோட்ட வீடுகள், புது மோஸ்தர் பங்களாக்கள் கட்டுவதில் பிரியமுள்ளவர்கள். பல வீடுகளில் பிள்ளைகள் வெளிநாடுகளுக்குப் போய் உழைத்துப் பணம் அனுப்ப, அதில் பளபள பங்களா கட்டி, வயதான பெற்றோர் மட்டுமே வசிப்பார்கள்.
பகவதி அம்மன், கிருஷ்ணர், சிவனைக் கும்பிடுகிறார்கள். சிவன் கோயில்களை மகாதேவ ஸ்வாமி கோயில் என்கிறார்கள். வாழை இலைகளில் இருவாச்சி, நந்தியாவட்டை, செம்பருத்தி போன்ற மலர்களை வைத்து வழிபடுகிறார்கள். எல்லா கோயில்களுமே பித்தளைக் கொடி மரத்துடன், தேக்கு மரம் மற்றும் செந்நிற ஓடுகளால் கட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரே வடிவமைப்பில் பெரிய திறந்தவெளியுடன் சுத்தமாக உள்ளன.
இளம்பெண்கள் சாயங்காலம் தலைக்குக் குளித்து, ஈரக்கூந்தலை நுனியில் பின்னி, வெள்ளை நிறமுண்டுஅணிந்து பயபக்தியுடன் கோயிலுக்கு வரும் அழகே தனி!
கலாசாரம் மற்றும் பாரம்பரிய உணர்வு கொண்டவர்கள். வீடு முதல் ஆடை ஆபரணங்கள் வரை பழைமை போற்றுவார்கள்.

நம்ம ஊர் போல தெருவோரப் பூக்கடைகள் அரிது. பூங்கொத்து, மலர் வளையம் விற்கும் கடைகளில் கொஞ்சமாக மல்லி கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் கொள்ளை விலை.
தமிழர்கள் சேற்றில் காலை வைத்தால்தான், கேரளாக்காரர்கள் சோற்றில் கை வைக்க முடியும்என்று இங்கு சொல்வது, உண்மைதான். காய்கறி முதல் அரிசி வரை எல்லாமே தமிழ்நாட்டில் விளைவதுதான். கடல் மற்றும் கடல்சார்ந்த பூமி என்பதால் பயிர் விளைய அதிக இடமில்லை. அப்படியே இருந்தாலும் அதீத மழையால் பயிர் வளர்வதில்லை.
கம்யூனிஸ உணர்வு அதிகம் உள்ள ஊர். தொழிலாளர் சம்பள விகிதம் மிக உயர்வு. செங்கொடி பிடித்து கோஷமிட்டபடி, ஊர்வலம் போவது சகஜமாக நடக்கும்.
சாப்பாடு விஷயத்தில் அதிக ருசி பார்ப்பதில்லை. ஏழைகள் கொட்டைச் சோற்றைக் கஞ்சியாக்கி, அதற்கு கப்பங்கிழங்கு, கடலைப் பருப்பு சுண்டலைத் தொட்டுச் சாப்பிட்டு பசியாறி விடுவார்கள்.

டீ என்றாலும் அது பால் சேர்க்காதகட்ட சாயாதான்! புட்டு, ஆப்பம், மீன், பழம் பொரி விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஆடைப் பிரியர்கள், நகைப் பிரியர்கள், திருமணத்தின் போது பணக்கார மணப் பெண்கள் கழுத்திலிருந்து வயிறு வரை பொன் நகையாக அணிந்திருப்பார்கள்.
பஸ், ரயில்களில் ஏறும்போது, முண்டியடிக்காமல் வரிசையில் நிற்பார்கள்.
இலக்கியப் பிரியர்கள். எழுத்தாளர்களுக்கு ஸ்டார் வேல்யூ உள்ள ஊர். கிராமப்புற பெருசுகள் கூடமலையாள மனோரமாவையும்மாத்ரு பூமியையும் திண்ணைகளில் அமர்ந்தபடி படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
முன்னொரு காலத்தில் அமைதியும், அழகும் மிக்கதாக இருந்த கொச்சின், இப்போது பெரிய பெரிய மால்களும், விண்ணை முட்டும் கட்டங்களுமாக பரபரப்பான மெட்ரோ நகரமாகி விட்டது.
- தீபா பத்மநாபன், ‘கெனோபிலேடிஸ் கிளப், கொச்சின்

நன்றி - கல்கி

நான் ஓர் எழுத்து வியாபாரி - வைரமுத்து பேட்டி @ விகடன்

விகடன் மேடை - வைரமுத்து

படம் : கே.ராஜசேகரன்
கே.எம்.குணா, உடையார்கோவில்.

 ''சினிமாவில் உங்களுக்கு நட்பு அதிகமா? பகை அதிகமா?''

''இரண்டும் இல்லை. திரையுலகில் 'தண்ணி’யடிக்காதவனுக்கு உயிர் கொடுக்கும் நட்பும் இருக்காது; உயிர் எடுக்கும் பகையும் இருக்காது.''



உமா சொக்கன், பெங்களூரூ-3.


''தலைமைப் பண்பின் முதல் பண்பு என்ன?''


''இழிவு தாங்குதல்.
நாடாளுமன்றம் கேள்விகளால் பற்றி எரியும் நேரம். நிதியமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது 'முந்த்ரா’ ஊழலைச் சுமத்திப் பின்னியெடுக்கிறார் ஃபெரோஸ் காந்தி. தாக்குப்பிடிக்க முடியாத  கிருஷ்ணமாச்சாரி, 'நான் அரசாங்கத்தின் தூண்; நீ நேரு வீட்டு நாய்’ என்று பொறுமை இழக்கிறார். அதைத் தாங்க முடியாத ஃபெரோஸ் காந்தி, 'தூணைக் கண்டதும் நாய் என்ன செய்யுமோ, அதைத்தான் இப்போது செய்யப்போகிறேன்’ என்று எல்லை தாண்டுகிறார்.



தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சம்பவம். 'இது மூன்றாந்தர அரசு’ என்கிறார் அன்றைய எதிர்க் கட்சி உறுப்பினர் எச்.வி.ஹண்டே. ஆளும் கட்சி உறுப்பினர்கள் பாயப்பார்க் கிறார்கள். கையமர்த்துகிறார் அந்நாள் முதலமைச்சர் கலைஞர்.


'இது மூன்றாந்தர அரசல்ல; பிராமண - சத்ரிய - வைசிய - சூத்ர என்ற வரிசையில், நாலாந்தர அரசு’ என்கிறார்.


பொங்கும் பாலில் தண்ணீர் தெளித்ததுபோல் அவை அடங்கிப்போகிறது.
ஃபெரோஸ் காந்தியால் இழிவு தாங்க முடியவில்லை; கலைஞரால் தாங்க முடிந்தது. அதனால்தான் அவர் இன்னும் தலைவராக இருக்கிறார்.''


வி.என்.கிருஷ்ணமூர்த்தி, மதுரை - 4.


''ஊடகங்களில் தமிழின் தரம் எப்படிஇருக்கிறது?''



''நுட்பமான மொழி அறிவு குறைவாக இருக்கிறது. 'பணயக் கைதிகளை மீட்டிக்கொண்டு வந்தார்கள்’ என்று சொல்கிறார்கள்; எழுதுகிறார்கள். 'மீட்டுதல்’ என்பது வாத்தியத்துக்கான தொழில். 'மீட்டல்’ என்பது மீட்சிக்கான தொழில். 'ராவணன் வீணையை மீட்டினான்; ராமன் சீதையை மீட்டான்’ என்பவைதாம் சரியான வினைகள். மீட்டு - மீள் என்பன வேர்ச் சொற்கள். எனவே, 'பணயக் கைதிகளை மீட்டுக்கொண்டு வந்தார்கள்’ என்பதே சரியான சொல்லமைதி.



ஒவ்வோர் ஊடகத்திலும் மொழிக் குழு ஒன்று இயங்க வேண்டும்.''


இரா.பார்த்திபன், தாளந்திருவாசல்.


'''உங்களை ஓர் எழுத்து வியாபாரி’ என்கிறேன்..?''


 ''ஒரு வகையில் சரியென்றே ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு மனிதனும் இந்த பூமிக்கு ஒரு சந்தை தேடியே வந்திருக்கிறான். சிலர் சந்தையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; பல பேரைச் சந்தையே தேர்ந்தெடுக்கிறது.


அரசியல்வாதிக்குத் தலைச் சந்தை;
சாமியாருக்குச் சமயச் சந்தை;
கல்வியாளருக்கு அறிவுச் சந்தை;
விலைமகளுக்கு உடற்சந்தை;
மருத்துவனுக்கு நோய்ச் சந்தை;
வல்லரசுக்கு ஆயுதச் சந்தை;
நீதிமான்களுக்குச் சட்டச் சந்தை;
காவலர்க்குக் குற்றச் சந்தை;
இசையமைப்பாளனுக்கு ஒலிச் சந்தை;
எனக்கு மொழிச் சந்தை.


ஆக எல்லோரும் வியாபாரிகளே. ஆனால், கொடுப்பது மிகுதியாகவும் பெறுவது குறைவாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொண்டாகிறது. கொடுப்பது குறைவாகவும் பெறுவது அதிகமாகவும் இருந்தால், வியாபாரம் அங்கே தொழிலாகிறது. நான் தொண்டு செய்யும் வியாபாரி என்றே என்னைக் கருதுகிறேன்.


அது சரி... உங்களுக்கு என்ன சந்தை?''


சுஜாதா ரெத்தினம், நாகர்கோவில்.




''ஒரு பாடல் வெற்றி பெற என்ன வேண்டும்?''


''இன்பத்தின் சிறகு, துன்பத்தின் வலி இரண்டில் ஏதேனும் ஒன்று தூக்கலாக இருக்க வேண்டும். அறைய வேண்டும் கன்னத்தை அல்லது வருட வேண்டும் நெஞ்சை. பாலாவின் 'பரதேசி’யில் அப்படியரு பாட்டை நெஞ்சைப் பிடித்துக்கொண்டு எழுதியிருக்கிறேன்.


வாழ்வற்றுப்போன ஒரு பஞ்சத்தில் வறண்ட பூமியைவிட்டுப் பஞ்சம் பிழைக்கக் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் இற்றுப்போன ஏழை மக்கள். செழியன் ஒளிப்பதிவில் பாலா எடுத்த படம் பார்த்துக் கண்ணீர் முட்டிவிட்டது எனக்கு. அடிவயிற்றில் இருந்து வலியின் குரலாக வருகிறது ஜி.வி.பிரகாஷின் இசை.


'ஓ செங்காடே சிறு கரடே
போய்வரவா...'

என்று தொடங்குகிறது பாட்டு
'பொத்தக் கள்ளியில் முள்ளுத் தச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துட்டோம்
கண்ணில் இல்லையே நீரு

வாட்டும் பஞ்சத்தில் கொக்குக் காலைப்போல்
வத்திப்போச்சய்யா வாழ்வு...
கூட்டம் கூட்டமா வாழப்போகிறோம்
கூட வருகுதே சாவு...’



எழுதிய வலி தீரவில்லை இதயத்தில் இன்னும்.
நகல் எடுக்க முடியாத கலைஞர்களுள் ஒருவர் பாலா. பாலாவோடு இணைய பெரிய நட்சத்திரங்கள் பயப்படுகிறார்கள்; பெரிய நட்சத்திரங்களோடு இணைய பாலாவும் பயப்படுகிறார். அந்தத் தேவைஅற்ற பயங்களைத் தீர்ப்பதற்குச் சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன். என் முயற்சி மட்டும் பலித்துவிட்டால், வாய்ப்பு இருக்கிறது தமிழில் ஓர் உலகப் படம் உருவாக.''


எம்.அருணாச்சலம், ராஜபாளையம்.


''ஆயகலைகள் அறுபத்து நான்கில் எத்தனை கலைகள் தெரியும் உங்களுக்கு?''



''முதலில் ஆயகலைகள் அறுபத்து நான்கு எவையென்று பார்ப்போம்.



1.ஆடல் 2.இசைக் கருவி மீட்டல் 3.ஒப்பனை செய்தல் 4.சிற்பம் வடித்தல் 5.பூத்தொடுத்தல்  6.சூதாடல் 7.சுரதம் அறிதல் 8.தேனும் கள்ளும் சேகரித்தல் 9.நரம்பு மருத்துவம் 10.சமைத்தல் 11.கனி உற்பத்தி செய்தல் 12.கல்லும் பொன்னும் பிளத்தல் 13.கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல் 14.உலோகங்களில் மூலிகை கலத்தல் 15.கலவை உலோகம் பிரித்தல் 16.உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல் 17.உப்பு உண்டாக்குதல் 18.வாள் எறிதல் 19.மற்போர் புரிதல் 20.அம்பு  தொடுத்தல் 21.படை அணிவகுத்தல் 22.முப்படைகளை முறைப்படுத்தல் 23.தெய்வங்களை மகிழ்வித்தல் 24.தேரோட்டல் 25.மட்கலம் செய்தல் 26.மரக்கலம் செய்தல் 27.பொற்கலம் செய்தல் 28. வெள்ளிக்கலம் செய்தல்  29. ஓவியம் வரைதல் 30. நிலச் சமன் செய்தல் 31.காலக் கருவி செய்தல்  32.ஆடைக்கு நிறமூட்டல் 33.எந்திரம் இயற்றல் 34.தோணி கட்டல் 35.நூல் நூற்றல் 36.ஆடை நெய்தல் 37. சாணை பிடித்தல் 38. பொன்னின் மாற்று அறிதல் 39.செயற்கைப் பொன் செய்தல் 40.பொன்னாபரணம் செய்தல் 41.பொன் முலாமிடுதல் 42.தோல் பதனிடுதல் 43.மிருகத் தோல் உரித்தல் 44.பால் கறந்து நெய்யுருக்கல் 45.தையல் 46.நீச்சல் 47. இல்லத் தூய்மையுறுத்தல் 48.துவைத்தல் 49.மயிர் களைதல் 50.எள்ளில்  இறைச்சியில் நெய்யெடுத்தல் 51.உழுதல் 52.மரம் ஏறுதல் 53.பணிவிடை செய்தல் 54. மூங்கில் முடைதல் 55.பாத்திரம் வார்த்தல் 56.நீர் கொணர்தல் நீர் தெளித்தல் 57.இரும்பாயுதம் செய்தல் 58.மிருக வாகனங்களுக்குத் தவிசு அமைத்தல் 59.குழந்தை வளர்ப்பு 60. தவறினைத் தண்டித் தல் 61.பிறமொழி எழுத்தறிவு பெறுதல் 62.வெற்றிலை பாக்கு சித்தப்படுத்தல் 63.மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு 64.வெளிப்படுத்தும் நிதானம்.


சுக்கிர நீதி சொல்லும் ஆயகலைகள் அறுபத்து நான்கும் இவைதாம்.


இவற்றுள் 7-ஆம் கலை அறிவேன். 49-ஆம் கலையில் பாதிசெய்வேன். 51-ஆம் கலை செய்திருக்கிறேன்.


இதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் என்னைவிடச் சில கலைகள் அதிகம் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன்.''


வி.மருதவாணன், திருவாரூர்.


''இளைய தலைமுறை நடிகர்கள் நடித்த படங்களில் உங்களுக்குப் பிடித்த படங்கள்?''



''அஜித் - 'வாலி ’
விஜய் - 'கில்லி ’
சூர்யா -  'ஏழாம்  அறிவு’
விக்ரம் - 'அந்நியன்’
சிம்பு - 'விண்ணைத் தாண்டி வருவாயா’
தனுஷ் - 'ஆடுகளம்’
கார்த்தி - 'பருத்திவீரன்’
'ஜெயம்’ ரவி - 'பேராண்மை’
ஜீவா - 'கற்றது தமிழ்’
விஷால் -  'அவன் இவன்’.
ஆர்யா - 'நான் கடவுள்’
பரத் - 'காதல்’.''


எம்.சரவணன், சேலம்.


''தி.மு.க-வில் கலைஞரைத் தவிர்த்து உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

 கலைஞரைத் தவிர்த்து தி.மு.க-வில் யாருக்கெல்லாம் என்னைப் பிடிக்குமோ, அவர்களை எல்லாம்


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 



1. பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்து கூட்டணி அமைவது விஷப்பரீட்சை - வைரமுத்து பேட்டி  


http://www.adrasaka.com/2012/11/blog-post_15.html


2.

இலங்கை யில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்? - வைரமுத்து பேட்டி

 http://www.adrasaka.com/2012/12/blog-post_4667.html

 





3. என்னை யார் தாக்கினாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கனும் - வைரமுத்து நக்கல் பேட்டி

 

http://www.adrasaka.com/2012/12/blog-post_13.html

  4.

தமிழ்நாடு முன்னேறியிருக்கிறதா?'' - வைரமுத்து சாட்டையடி பேட்டி

http://www.adrasaka.com/2012/12/blog-post_9476.html





சி எம் ஆக இருந்தபோது எம் ஜி ஆருக்கு என்னால் ஏற்பட்ட சிக்கல் - முக்தா வி சீனிவாசன் பேட்டி

எப்படி இருக்கீங்க?... குட்டுப்பட்டுதான் திருந்த வேண்டும்! - முக்தா சீனிவாசன்


எண்பத்தோரு ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றில் படத்துறையில் பழுத்த அனுபவம் பெற்ற இயக்குநர் முக்தா வி.சீனிவாசன். எண்பத்து மூன்று வயது நிரம்பிய அவரது அனுபவச் சிதறல்கள்.......



.....நீங்கள் திரைப்பட உலகில் நுழைந்த ஆரம்பகால அனுபவங்களைப்பற்றி சொல்லுங்களேன்?




தஞ்சை மாவட்டத்திலுள்ள பாபநாசம்தான் எங்கள் சொந்த ஊர். சிறு வயதில் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து இரண்டு ஆண்டுகள் அந்தக் கட்சிக்காக பணியாற்றினேன். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது சேலம் அனெக்ஸ் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகளில் நானும் இருந்தேன். சிறைச்சாலையில் கம்யூனிஸ்ட்களுக்கும் சிறைக்காவலர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் பதினோரு கம்யூனிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு மரத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டதால் நான் உயிர் தப்பினேன். அந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் எனது அண்ணன் ராமசாமி டைப்பிஸ்ட்டாகப் பணியாற்றி வந்தார். எனது நிலையைப் பார்த்த என் அண்ணன் தன் முதலாளி டி.ஆர்.சுந்தரத்திடம் எங்கள் குடும்ப நிலையைச் சொல்லி என்னை விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். 




டி.ஆர்.சுந்தரம் தன் நண்பரான மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் உதவியுடன் என்னை சிறையிலிருந்து மீட்க வந்தார். என்னை விடுவிக்க நிபந்தனை ஒன்றை விதித்தார் சிறை அதிகாரி. "இனி நான் கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டேன்' என்று எழுதி கையெழுத்திட்டுத் தர வற்புறுத்தினார் அந்த அதிகாரி.இதற்கு நான் மறுக்கவே டி.ஆர்.சுந்தரம் என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். "கஷ்டப்படுகிற பிரமணப் பையன் நீ....ஒழுங்கா இருந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டாமா?' என்று கோபத்துடன் என்னை திட்டிக்கொண்டே கையெழுத்து போட வைத்து, தன்னுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் அழைத்துச் சென்றார்



.1947ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி நான் மாடர்ன் தியேட்டர்ஸில் உதவி இயக்குனராகச் சேர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன். "ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி', "ஆதித்தன் கனவு', "மாயாவதி', "பொன்முடி', "திகம்பர சாமியார்' போன்ற பல படங்களுக்கு தொடர்ந்து உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். இந்த கால கட்டத்தில் டி.ஆர்.சுந்தரம் "சண்டமாருதம்' என்ற மாதமிருமுறை பத்திரிகையையும் நடத்தி வந்தார். இந்தப் பத்திரிகையிலும் உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்து பல்வேறு பணிகளையும் செய்து வந்தேன். "சண்டமாருதம்' பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த சண்முக சுந்தர நயினார் என்பவர் முதுமை காரணமாக ஓய்வு பெறவே அவரது இடத்துக்கு முத்தையா என்ற வாலிபர், மாதம் எழுபத்தைந்து ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.



நானும் என் அண்ணனும் தங்கியிருந்த அறையிலேயே முத்தையாவும் தங்க அனுமதிக்கப்பட்டார். பிற்காலத்தில் கண்ணதாசன் என்று பிரபலமடைந்த கவிஞர்தான் அன்று எங்கள் அறையில் தங்கியிருந்த முத்தையா.டி.ஆர்.சுந்தரம் கண்டிப்புக்கு பேர் போன கறார் ஆசாமி. கருணையே அவருக்குக் கிடையாது. பிரியம் என்றால் என்ன என்பதே அவருக்குத் தெரியாதா என்றே நினைக்கத் தோன்றும். யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்து விடுவார்.மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் பொம்மன் டி. இரானி என்ற இயக்குனரை பணிக்கு அமர்த்தி அவரது இயக்கத்தில் ஒரு படமெடுக்க திட்டமிடப்பட்டது. 



அவருக்கு உதவி இயக்குனராக என்னை நியமித்தார்கள். பொம்மன் டி.இரானி எடுத்த படம் பிடிக்காததால் அவரை வேலை நீக்கம் செய்தார் டி.ஆர்.சுந்தரம். அத்தோடு அவரது உதவி இயக்குனராகப் பணியாற்றிய என்னையும் காரணமே இல்லாமல் பணி நீக்கம் செய்து விட்டார். மாடர்ன் தியேட்டர்ஸிலிருந்து விலக்கப்பட்ட நான் கோயமுத்தூர் சென்றேன். அப்போது கோவையிலிருந்த சென்ட்ரல் ஸ்டுடியோவை ஜூபிடர் பிக்சர்ஸ்காரர்கள் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்கள். நான் அங்கு சென்ற நேரத்தில் ஜூபிடர் பிக்சர்சுக்காக வீணை எஸ்.பாலசந்தர் "கைதி' என்ற படத்தை இயக்கி வந்தார்.




 என்னை அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றும்படி சொன்னார்கள். "கைதி' படம் முடிந்ததும், "அழகி' என்ற படத்தை ஆரம்பித்தார்கள். சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் உருவான் இந்தப் படத்திலும் நான் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோதே சென்ட்ரல் ஸ்டுடியோவின் குத்தகை காலம் முடிவடைந்து விடவே, மீதி படப்பிடிப்பை சென்னை அடையாறில் உள்ள நெப்ட்யூன் ஸ்டுடியோவில் நடத்தினோம். இதன் பிறகு நாங்கள் எல்லோரும் சென்னைவாசிகளானோம்.



நீங்கள் தனித்து இயக்கிய முதல் பட அனுபவத்தைப் பற்றி சொல்லுங்களேன்?



தொடர்ந்து பல்வேறு படக்கம்பெனிகளில் பல இயக்குனர்களிடம் பணியாற்றினேன். 1957ஆம் ஆண்டு எம்.ஏ.வி. பிக்சர்ஸ் அதிபர் வேணு இயக்குநராகும் வாய்ப்பை எனக்கு அளித்தார். அப்போதெல்லாம் படம் எடுக்க ஒரு ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள்வரை ஆகும். ஆனால் நான் "முதலாளி' படத்தை நான்கு மாதங்களில் முடித்தேன். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, எம்,என்.ராஜம் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் இப்படத்தில் நடித்திருந்தனர். அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லோருக்கும் நல்ல லாபம் கிடைத்தது. அது மட்டுமல்ல அந்த ஆண்டின் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான ஜனாதிபதி விருதும் அப்படத்துக்கு கிடைத்தது. 



தாங்கள் சொந்தமாகத் தயாரித்து இயக்கிய படங்களைப்பற்றி.......?



1960ஆம் ஆண்டு முக்தா பிலிம்ஸ் என்ற என்னுடைய சொந்த சினிமா கம்பெனியை ஆரம்பித்தேன். "நாலு வேலி நிலம்', "தாமரைக்குளம்', "பொம்மலாட்டம்' "ஆயிரம் பொய்' என்று சுமார் நாற்பது படங்களை முக்தா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கினேன். "சிவாஜி நடித்த "தவப்புதல்வன்' "அந்தமான் காதலி' ரஜினி நடித்த "பொல்லாதவன்', "சிவப்பு சூரியன்' கமல் நடித்த "அந்தரங்கம்', "சிம்லா ஸ்பெஷல்' போன்ற பல படங்கள் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. முக்தா பிலிம்ஸ் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமாக திகழ எனது தமையனார் ராமசாமியும் முக்கிய காரணம். படத்தயாரிப்பு விநியோகம், பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற விவரங்களை அவர் கவனித்துக் கொள்ளவதென்றும் இயக்கம், கதை வசனம் போன்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்வதென்றும் பணிகளைப் பகிர்ந்து கொண்டதால் எங்களால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது.



உங்கள் மகன் "முக்தா' சுந்தர் இயக்கும் படங்களில் உங்கள் பங்களிப்பு உண்டா?



சுந்தர் அமெரிக்காவிலுள்ள திரைப்படக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் திரைப்படக்கலையை முறைப்படி பயின்றவர். சீராகப் படமெடுக்கும் முறையை அவர் அங்கு கற்றிருந்தாலும் அவரால் இங்கு அப்படியே அவற்றை செயலாற்ற முடியவில்லை. தரமான ஒரு படத்தை எடுத்து வெற்றி பெறுவதற்கு பதிலாக நான்கு சண்டைக் காட்சிகள், ஒரு குத்துப் பாட்டு, கொஞ்சம் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள் என்று மசாலா சமாச்சாரங்கள் தூக்கலாக உள்ள படங்களே வெற்றிப் படங்களாக இங்கு பேசப்படுகின்றன. அவர் இயக்குனராக அறிமுகமான "கோடை மழை' படம் பரவலாக பத்திரிகைகளின் பாராட்டுதல்களைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர் தற்போது "பத்தாயிரம் கோடி' படத்தை இயக்கி வருகிறார். ஸ்க்ரிப்டை உருவாக்குவதற்கும், வியாபார விஷயங்களிலும் எனது கருத்தை கேட்கும்போது கூறுகிறேன் அவ்வளவுதான்.




தங்களின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்....?




முப்பத்தோரு வருடங்களுக்குமுன் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையின் முதல் இதழ் வெளியீட்டு விழா எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.தான் முதல் இதழை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். அந்த விழாவில் பேசிய நான் எம்.ஜி.ஆரைப் பார்த்து, "தூங்காதே தம்பி தூங்காதே....' "திருடாதே பாப்பா திருடாதே' என்று நல்ல நல்ல அறிவுரையெல்லாம் உங்கள் படத்தில் வழங்கினீர்கள், இனி யார் இதுபோல் அறிவுரை எங்களுக்கு வழங்குவார்கள்? என்று கேட்டேன். தான் பேசும்போது இதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்.,"இனி வருடத்துக்கு ஆறு மாதங்கள் நேரம் ஒதுக்கி சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று பேசி விட்டார். விழாவுக்கு வந்திருந்த நாளிழ்களின் நிருபர்கள் ஏதிர்பாராமல் கிடைத்த பரபரப்பான செய்தியுடன் தங்கள் அலுலகங்களுக்கு விரைந்து சென்று எம்.ஜி,ஆரின் உரையை தலைப்புச் செய்தியாக்க ஆரம்பித்து விட்டனர். 



இதற்கிடையில் எம்.ஜி.ஆர்.பேசியது அபோது பிரதம மந்திரியாக இருந்த மொரார்ஜி தேசாயிடம் தெரிவிக்கப்பட, உடனை எம்.ஜி.ஆருக்கு போன் செய்து விட்டார் மொரார்ஜி தேசாய். ""நீங்கள் சினிமாவில் நடிக்க விரும்பினால் நம்பிக்கைக்குரிய ஒரு நபரை தேர்வு செய்து அவரிடம் முதல்வர் பொறுப்பைக் கொடுத்துவிட்டு நடிக்க ஆரம்பியுங்கள். நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் தருகிறோம். ஆனால் நீங்களே முதல்வர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிக்க சட்டம் இடம் தராது' என்று கூறியிருக்கிறார். 



உடனே எம்.ஜி.ஆர். ஆர்.எம்.வீரப்பனை அழைத்து இந்தச் செய்தி பத்திரிகைகளில் வராமல் எப்படியாவது தடுத்து நிறுத்தி விடும்படி சொல்லி விட்டார். உடனடியாக ஆர்.எம்.வீரப்பனும் அனைத்து பத்திரிகை அலுவலகங்களையும் தொடர்பு கொண்டு, "சினிமா எக்ஸ்பிரஸ்' வெளியீட்டு விழாவில் எம்.ஜி.ஆர். நடிக்கப்போவதாக அறிவித்த செய்தியை மட்டும் போடவேண்டாம் என்று கேட்டுக் கொள்ள, அதன்படியே அனைத்து செய்தித்தாள்களிலும் இந்தப் பகுதி மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நாளேட்டில் மட்டும் இந்தச் செய்தி அச்சுக்குச் சென்று விட்டதால் அதை வெளியிடாமல் நிறுத்த முடியவில்லை. அப்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எப்போதும் என்னால் மறக்க முடியாது.




இன்றைய இளைய தலைமுறை கலைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை?




இந்த சினிமா உலகுக்கென்றே ஒரு குணம் உண்டு. எந்த அறிவுரையையும் யாரிடமிருந்தும் ஏற்றுக் கொள்ள விரும்பாத உலகம் இது. இந்தத் தொழில் பாடம் படிப்பது என்பதே நஷ்டத்திலிருந்துதான். மற்றவர்களை காப்பியடிப்பதிலும் சினிமா தொழிலில் மிக சாதாரணமாக நடைபெறும். ஒரு படம் ஒரு குறிப்பிட்ட பார்முலாவில் தயாராகி வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் தயாராகத் தொடங்கிவிடும். ஆக இதன் தனித்தன்மை என்பது எப்போதாவதுதான் வெளிப்படும். 



யார் என்ன சொன்னாலும் கேட்காத சினிமா உலகம் அதுவாக குட்டுப்பட்டு குட்டுப் பட்டுதான் திருந்த வேண்டும்.தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று பல பிரிவுகளைக் கொண்ட இந்த சினிமா உலகில் லாபம் கிடைத்தால் அதை அனைத்து தரப்பினரும் சரியாகப் பிரித்துக்கொண்டதைப்போல் நஷ்டம் வந்தால் அதையும் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தொழில் செய்த காலம் ஒன்று இருந்தது. 
பின்னர் ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த அமைப்பையும், தங்கள் பொருளாதார பாதுகாப்பையும்தான் முக்கியமாகக் கருத ஆரம்பித்த காரணத்தால் லாபத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொண்ட நடைமுறையே போய்விட்டது. இதனால் இந்தத் தொழில் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்து விட்டது. இந்தப் போக்கு மாற்றப்பட்டால்தான் சினிமா உலகம் சீரடையும்.'' என்று சொல்லும் அனுபவஸ்தர் முக்தா சீனிவாசனின் ஆதங்கத்தை நம்மால் உணரமுடிகிறது.



நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

வானத்தைப் போல' விஜய்காந்த்க்குப்பதில் ஜனகராஜ் நடிச்சிருந்தா....இன்னும் ஹிட் ஆகி இருக்கும் - விக்ரமன் பேட்டி

சினிமா மாறி விட்டது! நானும் மாறி விட்டேன்!! - விக்ரமன்



அடர்ந்த தாடி... அன்பான உபசரிப்பு... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த சட்டை... விக்ரமனின் அடையாளம் அப்போதும் இப்போதும் இதுதான். பெரிய தயாரிப்பாளர்கள் தொடங்கி கடலை மிட்டாய் விற்பவர் வரை லாபம் பார்க்க வைத்த இயக்குநர். "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் பரபரப்பான நிமிடங்களுக்குள் வந்திருக்கிறார். ""மக்களில் ஒருவனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அதனால்தான் எப்போதுமே மக்களுக்கு பிடித்த சினிமாவை எடுத்து வந்திருக்கிறேன். ""ஏன் சார் இனிமே படமே பண்ண மாட்டீங்களா?'' என என்னை துரத்தி துரத்தி வந்த ஒரு கூட்டத்துக்கு மியூசிக்கல் கார்டு மாதிரி ஒரு படம் கொடுக்க போகிறேன் அதுதான் "நினைத்தது யாரோ'. குடும்பம், காதல், சென்டிமெண்ட் இதுதான் எப்போதுமே என் பாணி. ஆனால் இதில் அதை மாற்றியிருக்கிறேன். காதல் மட்டுமே பிரதானம். ஆனால் காதல் கதை இல்லை. காதலைப் பற்றிய கதை.








'' ஒரு சில படங்களை தவிர உங்களின் எல்லாப் படங்களுமே ஹிட். "புது வசந்தம்', "பூவே உனக்காக', "வானத்தைப் போல' காலமெல்லாம் தமிழ் சினிமாவில் மீண்டும் வராதா?







என்னிடம் கேட்க வேண்டிய கேள்விதான். இதற்கான பதில் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு படமும் செய்யும் போது இது ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்ற படபடப்பு இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் நிம்மதி. இல்லையென்றால் நம் குறி தவறி விட்டது என்று எடுத்துக் கொள்வேன். உண்மையில் எந்த சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியும். பட ரிலீசுக்கு முன்பு படத்தை போட்டு காட்டி என்னிடம் கருத்து கேட்டுப் பாருங்கள்.






 பளிச்சென ஒடுமா, ஒடாதா என்று சொல்லிடுவேன். அந்தளவுக்கு சினிமாவின் பல்ஸ் தெரியும். என்னை நம்பியவர்களுக்கு உட்சபட்ச உழைப்பை தந்து லாபம் கொடுக்க வேண்டும். அது மட்டுமேதான் என்னுடைய குறைந்தப் பட்ச சினிமா லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தின் பின்னாடிதான் இந்த 21 வருடங்களும் ஓடி வந்திருக்கிறேன்.



 திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். எத்தனை சவால் நிறைந்த பயணம். வித்தியாசமான முயற்சி இது என சொல்லி ஒருபோதும் என் சினிமாவை வியாபாரம் செய்யவில்லை. எனக்கு தெரிந்ததை, நான் வாழ்ந்த, நான் பார்த்த வாழ்க்கையில் கொஞ்சம் சினிமாத்தனம் கலந்தேன். அதுதான் என் வெற்றி. சினிமா முற்றிலும் மாறிவிட்டது. 10 தியேட்டர்களில் நூறு நாள்கள் ஓடிய சினிமா, இன்று நூறு தியேட்டர்களில் 10 நாள்கள் ஓடுகிறது. இந்த சினிமாவின் பின் ஓட கொஞ்சம் நிதானம் வேண்டும். சில சமரசங்கள் வேண்டும். அது எனக்கும் வேண்டும். 







நீங்களே இப்படி சொல்லி விட்டால் எப்படி. அப்ப இனி குடும்ப சென்டிமெண்ட் கதைகளுக்கு தமிழ் சினிமாவில் இடம் இல்லையா?







இப்போது இயக்கி வருகிற "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' இரு படங்களுமே என் பாணி சினிமா இல்லை. முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடுகிற படங்களாக இருக்கும். ஏனென்றால் இளைஞர்கள்தான் இப்போது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். குடும்பத்தோடு வந்து படம் பார்த்த காலம் இப்போது இல்லை. தூங்கி எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரை நிறைய பிரச்னைகள். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் மனதை ஆசுவாசப்படுத்த சினிமா தவிர்த்து இப்போது நிறைய சாதனங்கள் வந்து விட்டது.






அதற்கேற்ப சினிமாவும் மாறி ஆக வேண்டிய கட்டாயம். எனக்கு பிடித்துதான் எல்லாப் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் கொடுக்க நினைத்த சினிமாவை இன்னும் எடுக்கவே இல்லை. இந்த குற்ற உணர்வுதான் என்னை அடுத்தடுத்த பயணத்துக்கு உந்தி தள்ளுகிறது. புதிது புதிதான சேனல்களின் வருகைதான் சினிமாவின் அழிவுக்கு காரணம். சீரியல்கள் சினிமாவுக்கான நேரத்தை மக்களிடமிருந்து எடுத்து கொண்டன. சீரியல் ஓடாத வீடுகளே இல்லை. சினிமாவில் காட்டப்படாத விஷயங்கள் கூட சீரியல்களில் வந்து விட்டது. நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு முன்பு இருந்த காலம் வராதா என்று நினைத்தேன். இப்போது உங்களுக்கு அதே போல்தான் தோன்றுகிறது. அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்பு வர வேண்டிய படங்களை இப்போது எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சினிமா நாளுக்கு நாள் மாறும். என் பாணி படங்களை நானே எடுக்க நினைத்தாலும் இப்போது அது முடியாது.







 ஆனால் உங்கள் அக்மார்க் சினிமாவிலிருந்து நீங்கள் விலகி எடுத்த "சென்னை காதல்' படத்தில் நிறையவே தடுமாற்றம் இருந்ததே?






அது இயல்புதான். இப்போது வேறொரு இடத்துக்கு வந்து விட்டேன். இனி தடுமாற்றங்களை பார்க்க முடியாது.







 நட்பு, காதல், குடும்பம், பாசம் என ஒவ்வொரு படத்திலும் ஒரு ஃபீல் இருக்கும். இது தானாகவே அமைந்ததா? இல்லை அதற்காக கதை தேடுவீர்களா?






வித்தியாசமாக இருக்க வேண்டும் என நான் யோசிப்பதே இல்லை. நிறைய விஷயங்கள் தோன்றும். அதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்போம். அட இது நல்லா இருக்கேன்னு தோன்றினால் அதுதான் அடுத்த படத்துக்கான கதை. அதே மாதிரி படங்கள் முன்பே வந்திருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் யோசனை, என் கதையமைப்பு இரண்டையும் அதில் மாற்றிக் காட்டுவேன். சரியாக வராது என தோன்றினால் அதை தொட்டுப் பார்க்கவே மாட்டேன். என் சில படங்கள் ஒரே மாதிரியாகவும் இருந்திருக்கலாம். 






ஆனால் அதை கொடுக்கிற விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பேன். சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும். அதே சமயம் எங்கேயோ டூரிங் டாக்கீஸீல் இருக்கிற ரசிகனுக்கும் என் படம் பிடிக்க வேண்டும். அது மட்டுமேதான் என் நோக்கம். இத்தனை வருஷம் கழித்தும் "பூவே உனக்காக' பற்றி பேசுகிறார்கள். 'சூர்ய வம்சம்' பற்றி பேசுகிறார்கள். அதை கேட்கும் போது ஆசையாக இருக்கும். சின்னதாக சிலிர்ப்பு வரும். அப்படித்தான் என் ஒவ்வொரு படமும் இருக்க வேண்டும் என்று ஆசை.







உங்களால் முன் வரிசைக்கு வந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் புதுமுகங்களை வைத்து அடுத்தடுத்த படங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்?


 



அப்படியில்லை. அப்படி நினைக்கவும் கூடாது. நான் எல்லோரையும் மரியாதையாக நடத்தியிருக்கிறேன். இருக்கிற இடம் பார்த்து ஒருவரிடமும் பழகும் பழக்கம் என்னிடம் இல்லை. எப்படி சினிமாவுக்கு வந்தேனோ அப்படியே இருக்கிறேன். யாரிடமும் எதையும் கேட்டது இல்லை. இப்போது கூட தயாரிப்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. ""அவரை நடிக்க வைக்கலாம்.'' ""இந்த நடிகரை நடிக்க வைக்கலாம்'' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வருபவர்களை நான் மதிப்பதில்லை. விஜய், அஜித், சூர்யா எல்லோருமே நட்பாகத்தான் இருக்கிறார்கள். சூர்யாவுக்கு மட்டும் அதீத அன்பு இருக்கிறது. அது போதும் எனக்கு. 







கடந்து வந்த இந்த சினிமா பயணம் எப்படியிருக்கிறது. கனவுப் படமென்று உங்களுக்கும் எதாவது ஒன்று இருக்குமே?






சாதிக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த முதல் நாள் வெறி இன்னும் அடங்கவில்லை. வியாபாரத்துக்காக சில சமரசங்களோடு வாழ வேண்டி வந்தது. எத்தனை கதை, எத்தனை இயக்குநர்கள் வந்து போனாலும், "உதிரிப்பூக்கள்' படத்தை பார்த்து இன்றைக்கும் எத்தனை பரவசம் அடைகிறோம். அங்கேதான் மகேந்திரன் என்ற இயக்குநர் நிற்கிறார். 






எத்தனை மதிப்பு மிக்க படைப்பு அது. அந்த இடம்தான் எனக்கும் வேண்டும். "வானத்தைப் போல' அப்படி வந்திருக்க வேண்டிய படம்தான். ஆனால் நினைத்தை செய்ய முடியவில்லை. விஜயகாந்த் இடத்தில் ஜனகராஜ் இருந்திருக்க வேண்டும். விஜயகாந்தும் இருந்திருக்க வேண்டும். எல்லாமே மாறிவிட்டது. தமிழர்களின் வரலாற்றை முழுமைப்படுத்தும் ஒரு கதை இருக்கிறது. அதுதான் என் பயணத்தின் கடைசி எல்லை. அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நிறைய காசும் வேண்டும். இரண்டும் வந்து விட்டால் இறங்கி ஒரு கை பார்த்து விடுவேன். ஒண்ணு மட்டும் நிச்சயம். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும்.



நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்

சைபர் க்ரைம் கேஸ் - காமெடி கற்பனை

ஐயோ முருகா..........................!
ஐயோ முருகா..........................!
1. ஜட்ஜ்  - மேரேஜ் ஆன  லேடிக்கு ஆபாச எஸ் எம் எஸ் அனுப்பினியா? 


கைதி - அய்யய்யோ, யுவர் ஆனர், அது என் சம்சாரம் தான். சமைச்சாச்சா?ன்னு கேட்டு sms  அனுப்பினேன், அவ்ளவ் தான், ஏதோ கோபத்துல அப்படி புகார் பண்ணிட்டா/.



-----------------


2. பூஜ்யத்துக்கு  மதிப்பில்லைன்னு சொன்னாங்க, அதான் அசால்ட்டா இருந்துட்டேன்


ஓஹோ, சைபர் க்ரைம்னா அவ்வளவு எகத்தாளமா? 




-------



3. கவர்மெண்ட் ஆஃபீசரா இருக்கும் நீ இப்படி தப்பு பண்ணலாமா?


 இன்ஸ்பெக்டர் !   ஒரு கவர்மெண்ட் ஆஃபீசரோட கஷ்டம் இன்னொரு கவர்மெண்ட் ஆஃபீசருக்குத்தான் தெரியும்பாங்க.. என்னை விட்டுடுங்க.



----------


4. பிரவுசிங்க் செண்ட்டர் வாசல்ல 2 போலீஸ் நிக்குதே, எதுக்கு? 


 யாராவது  நெட்ல  யாரையாவது  ஆபாசமா டார்ச்சர் பண்ணினா  இம்மீடியட் ஆக்‌ஷன் எடுக்க 



-------------------


5.  சைபர் க்ரைம் கேஸ்ல எதுக்கு என்னை அரெஸ்ட் பண்றீங்க? 



உங்க வீட்டில் ஏகப்பட்ட க்ரைம் நாவல் இருக்கே, இந்த ஒரு மேட்டர் போதாதா?


 --------------------------


உலக அழிவுக்காண அறிகுறியா???????????
உலக அழிவுக்காண அறிகுறியா???????????


6.  யுவர் ஆனர் , ஆபாச எஸ் எம் எஸ் அனுப்பினா  3 வருஷம் தானே தண்டனை? எதுக்காக எனக்கு 36 வருஷ கடுங்காவல் தண்டனை கொடுத்தீங்க? 



நீ ஒரே மெசேஜை  க்ரூப் மெசேஜா 12 பேருக்கு அனுப்பி இருக்கே. 




---------------------



7. மாப்ளே! என்ன சொல்றீங்க?  பொண்ணு சூன்யக்காரியா? 


அட! நீங்க  வேற ,சைபர் க்ரைம்  பிராஞ்ச் ஆஃபீசர் தான். சும்மா கலாட்டா பண்ணேன்



----------------


8. சைபர் க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டருக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு.. 


 ஓஹோ,  இப்போ அவர் ஒன் க்ரைம் பிராஞ்ச் ஆஃபீசரா? 



-----------------------


9.அன்புள்ள என் சம்சாரமே! மனசுக்குள்ளே சைபர் க்ரைம் போலீஸ்னு நினைப்பா?உன்னை கண்டு நான் ஏன் பயப்படனும்?




--------------------


10. அத்தான்.எதுக்கு பெட்ரூம் பூரா சுத்தி சுத்தி பார்க்கறீங்க?



இது "மாய" உலகம்.யாராவது ஸ்க்ரீன் ஷாட் எடுத்துட்டா?



------------------------






11. இப்பவெல்லாம் நான் என் சொந்தப்பொண்டாட்டிக்கு கூட SMS அனுப்பறதில்லை.ஏதோ கோபத்துல ஆபாச SMS அனுப்புனார் னு புகார் கொடுத்துட்டா?்



-------------------------


12. சைபர் க்ரைம் எச்சரிக்கை - பெண்களுடனான உரையாடலில் இந்த ஸ்மைலி ;-)) போட்டால் கண் அடித்ததாக அர்த்தம்.எனவே :-) தான் யூஸ் பண்ணனும்#,சும்மா்



----------------------


13.  பால்தாக்கரே துப்பாக்கி படத்தை பார்த்தாரா? ஏ ஆர் மு விடம் போலீஸ் விசாரணை .கோலிவுட் கலக்கம் # சும்மா




------------------------



14. முற்பகல் ட்வீட்.பிற்பகல் ஜெயில்




-------------------------


15. ண்ணா,பேஸ் புக் ,செக் புக் ,பாட புக் ,ரயில் டிக்கெட் புக் எதும் எனக்கு வேணாங்ணா.இப்படியே விட்டா அப்டியே ஓடிப்போய்டுவேங்ணா ;-))




-------------------------



go my sweet dove and give rose to my sweetheart...love



16. பிகரை லைக் பண்ணா ஆயுள் தண்டனை.பேஸ்புக் ல லைக் பண்ணா 6 மாசம் தண்டனை.அவ்வ்வ்வ்



------------------------------


17. ட்விட்டர் கைது ,பேஸ்புக் கைது இந்த வரிசைப்படி பார்த்தா அடுத்த டார்கெட் வலைப்பூவா? அ வ்வ்வ்வ்வ்வ்வ்



--------------------------



18. வணக்கம். செய்திகள் வாசிப்பது சுமார் பிகர் சுலோச்சனா.இன்றைய ட்விட்டர் ,பேஸ்புக் கைதுகள் பற்றிய விபரம்....்




-------------------------------


19. அத்தான்.பார்த்து ட்வீட் போடுங்க.லூஸ் மாதிரி எதையாவது எழுதி சைபர்க்ரைம்ல மாட்டிக்காதீங்க.அப்புறம் யாரு சமையல் பண்ணுவா,?்



--------------------


20. நாளை முதல் டி எம்மில் கடலை போடுபவர்கள் 40 % பேசிக் பே , டைம்லைனில் கடலை 50 % பேசிக் பே கட்டவேண்டும் -சைபர் க்ரைம் # சும்மா



----------------------------



Photo



21. சைபர் க்ரைம் - யூ ஆர் அண்டர் அரெஸ்ட்.ஒரு பொண்ணுக்கு குட் ”மார்”னிங் சொன்னதுக்கு



. ண்ணா இது ஒவர்ங்னா.பேடு மார் னிங் சொன்னா விட்ருவீங்ளாண்ணா?



-----------------------


22. 


.  மேற்படி கைது, சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்படாமல் இருக்க … ( கோவை ஷேக்கின் படைப்பு)

ஒரு ட்விட்டை அல்லது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை டைப் செய்து போஸ்ட் செய்யும் போது

1) இது 66-a சட்ட விதிகளுக்கு எதிரானது தொடர விருப்பமா??

2) நீங்கள் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது பரவாலையா??

3) மேலும் தொடரும் முன் ஜாமீனுக்கு 15000 ரூபாய் உங்கள் அக்கவுண்ட்டில் உள்ளதா??

என்பது போன்ற முன்னெச்சரிக்கை கேள்விகளை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஒவ்வொரு போஸ்ட்டின் போதும் அதை இடுபவரை கேட்கும் வகையில் டிசைன் செய்யப்பட வேண்டும்…

இதற்கு அரசும் ஆவன செய்ய வேண்டும்…

வரும் முன் காப்போம்…



இன்ஜெக்‌ஷனா.. ஆத்தீய்ய்.............
nadigan da nee